* திருக்குறளில் தாலி பற்றி எதுவும்
சொல்லப்படவில்லை
* மலையாளத்தில் அற நூல்கள் இல்லை
* திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்
=========================================================
கேரளா-
பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம் தலைவர் சிவானந்தர் கலந்து கொண்ட சிறப்பு
நிகழ்ச்சி திருப்பூர் கருவம்பாளையம் அறிவுத்திருக்கோயிலில் 24/3/15 அன்று மாலை
நடந்தது. விழாவிற்கு சன்மார்க்க சங்கத் தலைவர் அவினாசிலிங்கம் தலைமை தாங்கினார்.அருள்நிதி
முரளிதரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.டிட்டோனி முத்துச்சாமி, நீறணிபவளக்குன்றன்,
தொலைபேசி பொறியாளர் பழனிச்சாமி, kavinjar கவிஞர் ஜோதி , வாழ்க வளமுடன்
இயக்கத்தினர் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
உலகத் திருக்குறள் வாழ்வியல் மையம், திருப்பூர்
கிளை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்திருந்தது.
சிலரின் பேச்சிலிருந்து..
கேரளா பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான
மடம் தலைவர் சிவானந்தர்:
திருவள்ளுவரை
குருவாகவும் திருக்குறளை வாழ்க்கை நெறியாகவும் ஏற்று வாழும் 30 ஆயிரம்
குடும்பங்கள் கேரளாவின் 14 மாவட்டங்களில் 50 பஞ்சாயத்துக்களில்
உள்ளன.திருவள்ளுவருக்கு கோவில் கட்டி கும்பிட்டு அவரை 40 ஆண்டுகளாகப்
பின்பற்றுகிறோம்.மலையாளம் ஒரு கூட்டு மொழிதான்.மலையாளத்தில் அற நூலகள் இல்லை.
சுவாரஸ்யமான நாவல்கள், படைபிலக்கியங்கள் உண்டு. மலையாளத்தில் தாய் மொழி தமிழ். ஆதி
மொழி தமிழ். பொதுவான பண்பாட்டைப்பற்றி அறிந்து கொள்ள திருக்குறள் போல் சிறந்த நூல்
எதுவுமில்லை. எனவேதான் திருக்குறள்
வாழ்வியல் மொழியாகிறது. வேத காலம் முதல் உடமைப் பொருளாகவே பெண்கள்
இருந்திருக்கிறார்கள் . அவர்கள் தாய் ஆற்றலை, இறை ஆற்றலை, இயற்கையைக்
கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது
திருக்குறள்.திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். இதை இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
மத்திய அரசை எங்கள் ஞான மடம் வலியுறுத்தி வருகிறது.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்:
எல்லாக் காலத்திற்குமான அற நெறி இலக்கியமாக
திருக்குறள் இருக்கிறது. ஆதி காவியம் என்ற அளவில் அது ஒரு இலக்கிய பொக்கிசம்.
இப்போது தாலி பற்றிய சர்ச்சை தமிழ்ச் சூழலில் விவாதமாகியிருக்கிறது.
திருக்குறளில், பழைய இலக்கியங்களில் தாலி பற்றிய குறிப்புகள் இல்லை.ஆணும்பெண்ணும்
அன்பால் இணைந்து வாழும் அன்புலகம் பற்றி பேசுவது திருக்குறள் . அதில் சடங்குகள்,
சம்பிரதாயங்கள் பற்றிய வலியுறுத்தல்
இல்லை. மொழியின் உட்ச பட்ச தேர்ச்சியோடு எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான அற நெறிக் கருத்துக்களைக்
கொண்டிருக்கிற இலக்கியம்தான் எல்லா காலத்திற்கும் பொருந்தும் அமர நூலாகும்.
உலகத் திருக்குறள் வாழ்வியல் மையம் செயலாளர் மருத்துவர் தன்மானன் நன்றியுரை வழங்கினார்.