வீடு தேடி வரும் சினிமா இயக்கம் அறிமுகக் கூட்டம்
------------------------------------------------------------------------
வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தை சென்னை பரிக்ஷா ஞாநி
துவங்கியுள்ளார். இதன் அறிமுகக் கூட்டம் பாண்டியன் நகர் சக்தி பில்டிங்கில் புதன்
அன்று மாலை நடைபெற்றது. சக்தி மகளிர் அறக்கட்டளையின் தலைவர் திருமதி கலாமணி கணேசன்
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வீடு தேடி வரும்
சினிமா இயக்கம் பற்றி அறிமுகப்படுத்திப் பேசினார். அதன் முதல் வெளியீடான ” விசாரணை’ என்ற முழு நீள
நாடகம் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார்.கலாமணி பெற்றுக் கொண்டார்.
இத்திட்டத்தின்
கீழ் இனி தொடர்ந்து திரைப்டங்களும் குறும்படங்களும் குறுந்தகடுகளாக வெளியிட சென்னை பரிக்ஷா ஞாநியின் “ கோலம் அமைப்பு ”
திட்டமிட்டுள்ளது. நம் வாழ்க்கையை அர்த்தமாக்கும் பலகதைகள்
படமாக்கப்பட வேண்டும்.. இது வணிகச் சூழலை மீறி நல்ல படங்கள் வர வழி வகுக்கும்.வணிக
நோக்கில் எடுத்து வெளியிட முடியாமல் இருக்கும் திரைப்படங்கள் இத்திட்டத்தில்
வெளியிடப்படும் . கூட்டத்தில் கவிஞர் ஜோதி, பேச்சாளர் சொக்கலிங்கனார் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.