சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 அக்டோபர், 2024

சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 16 / முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு400 கூவாகத்து குலமகள்? திருநங்கைகள் பிச்சை எடுக்கிறார்கள். பாலியல் தொழில் செய்கிறார்கள். இவற்றை விட்டு சில பேர் பனியன் கம்பெனி நடத்துகிறார்கள். அதில் ஆண்களும் வேலை செய்கிறார்கள் ஆண்களின் பார்வை வழக்கமாக இருக்கிறது. ஆனால் தாங்கள் மற்றவர்களைப் போல் தான் மனிதாபிமானமும் அன்பும் கொண்டவர்கள் என்று நிரூபிக்க திருநங்கைகளுக்கு சில சந்தர்ப்பங்கள் அமைகின்றன. திருநங்கைகள் வாழ்க்கை எப்படி இருக்கிறது. திருப்பங்கள் வந்ததா. திருமண வாய்ப்புகள், குடும்ப வாழ்க்கை வாய்ப்புகள் வந்ததா? கூவாகத்துக் குலமகள்? சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 15 / முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300 வெள்ளை என்பது தியாகம் திரைக்கதை நர்சுகள் ஆடை வெள்ளை நிறம். தூய்மையானது தியாகத்திற்கான சின்னம். அவர்களின் மருத்துவப் பணி மெச்சக்கூடியது. அதுவும் கொரோனா போன்ற கொடிய நோய்களின் காலத்தில் அவர்களின் தியாகங்கள் போற்றப்படக்கூடியது. நோயாளிகளின் சிகிச்சையிலிருந்து தங்களை காத்துக் கொள்வார்கள். பிறருக்காக தங்களை அர்ப்பணிக்கிறவர்கள் அவர்கள். குறைந்த சம்பளத்தில் சுரண்டப்படுகிறார்கள். பாலியல் ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள் அப்படி சுரண்டப்பட்ட ஒரு பெண் தாங்கள் சுரண்டப்படுவதை தன்னை பலியாக்கி கொண்டு வெளிப்படுத்துகிறாள் எப்படி வெளிப்படுத்துகிறாள்.. என்ன பிரச்சனை..நாயகி சார்ந்த நர்சுகளுக்கு வெள்ளை என்பது தியாகம் வெள்ளை என்பது தியாகம் காதல் குடுகுடுப்பை முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300 காதல் குடுகுடுப்பை அவர்கள் இருவரும் காதலர்கள்.. கணினி துறையில் - ஐடி துறையில் வேலை செய்பவர்கள். காதலால் சேர்ந்து வாழ்கிறார்கள். லிவிங் டுகெதர் . அவன் குடுகுடுப்பைக்காரன் குடும்பத்தைச் சேர்ந்தவன். இது அவளுக்கு தெரிகிறபோது அவள் அவரை பிரிந்து போகிறாள் ஆனால் அவனை சார்ந்து இருக்கிற குடுகுடுப்பைக்கார சமூகம் ஒன்று திரண்டு அவர்களை ஒன்றிணைக்க முடிகிறது.. காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா.. உயிர் பிழைத்தார்களா காதலர்கள்.. சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 13 / அந்நியர்கள் முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300 சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 13 / அந்நியர்கள் முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300 அந்நியர்கள் 0 சுப்ரபாதிமணியனின் அந்நியர்கள் நாவல் ( சென்னை எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான விருது 2021ல் ரூபாய் ஒரு லட்சம் பரிசு பெற்ற நாவல் ) வட இந்திய தொழிலாளிகள் தமிழகத்தின் எல்லா பெருநகரங்களிலும் நிறைந்திருக்கிறார்கள் திருப்பூரின் 10 லட்சம் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் அவர்கள் தான் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றிய கதை இது துளசி என்ற ஓர் இளம் பெண் திருப்பூருக்கு வேலை வாய்ப்புக்காக பீகாரில் இருந்து வருகிறாள். அவளுடன் பல பேர் வந்திருக்கிறார்கள் அவளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இது பனியன் கம்பெனி மற்றும் சிறு சிறு தொழில்களில் அவள் வேலை செய்கிறாள். அவளின் வயதான பெற்றோர்கள் ஒருபுறம். இன்னொரு புறம் அவளின் காதலன் ராம்சந்த். அவன் கொஞ்ச நாளாக அவளிடம் பழகியவன் பிறகு காணாமல் போகிறான். அடிதடி என்று பல விஷயங்களை கற்றுக் கொண்டு விட்டான் என்பது துளசிக்கு பின்னால் தெரிகிறது திருப்பூரில் நடக்கும் வெவ்வேறு தொழிலாளர்களின் நிலை அவருடைய வாழ்க்கை, தற்கொலை, சாவு இவற்றையெல்லாம் கடந்து செல்கிறாள் துளசி. தொழில் ரீதியாக தான் வேலை செய்யும் பனியன் கம்பெனிகள் சிறு தொழிற்சாலை அனுபவங்கள் அவளை மேம்படுத்துகின்றன. பலரின் பாதையில் பார்வையும் சுரண்டலும் உழைப்பு சுரண்டலும் வட இந்தியர்களை கேவலமாக பார்க்கும் பார்வையும் தொடர்கிறது. அந்நியர்கள் அதிகமாகிவிட்ட சூழலில் அங்கு இருக்கிற தமிழர்கள் தாங்கள் தான் அன்னியர்கள் என்று உணர்கிறார்கள் அதற்காக பல சம்பவங்கள் ஏற்படுகின்றன. ராம்சந்த் இடையில் ஒரு வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட அவள் அதிர்ந்து போகிறாள் அங்கிருக்கும் அவரின் உறவினர்கள் அவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். கணவன் ஒரு ஊனமுற்றவன். சகித்துக் கொள்கிறாள் திடீரென ராமச்சந்த் மரணம் அவளை நிலை குலைய வைக்கிறது யார் இங்கு அந்நியர்கள் பிழைப்புக்காக வந்திருப்பவர்களா அல்லது மக்கள் தொகையில் குறைந்து கொண்டே வரும் உள்ளூர் தமிழர்களா என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 12 / செண்பகப்பூ காடு முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300 வன தேவதையின் ஆட்சியில் உள்ள மலைநாடு அது. கனிம வளம் நிரம்பிய மலைநாடு. கார்ப்பரேட்டுகள் அங்குள்ள கனிமவளத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார்கள். அப்போது மக்கள் குழுவாக சேர்ந்து போராடுகிறார்கள். அவர்களுடைய போராட்டக் குழுவில் அங்கு இருக்கிற ஒரு விவசாயி மகன் கண்ணன் இருக்கிறான். அவர்கள் போராட்டத்தால் கார்ப்பரேட்டுகள் தயங்குகிறார்கள். திடீரென்று விவசாயி மகன் அந்த குழுவில் இருந்து வெளியேற விரும்பி தப்பி ஓடுகிறார் விவசாயின் தன் மகன் காணாமல் போனதை பற்றி காவல்துறையில் தகவல் தருகிறார். அவருடைய மகன் கண்ணன் தப்பி ஓடி மயங்கி விழுந்து ஒரு மந்திரியின் உடைய வாகனத்தின் முன் விழ அவனைக் காப்பாற்றுகிறார்கள். அவனைப் பற்றி தெரிந்து அவனை வைத்துக் கொண்டு கனிம வளத்தை எதிர்க்கும் போராட்டக் குழுவை கண்டுபிடித்து அழிக்கும் முயற்சியில் மந்திரி ஈடுபடுகிறார். கார்ப்பரேட்டர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதேசமயம் கதாநாயகனையும் கொல்ல மந்திரியும் கார்ப்பரேட்டுகளும் முடிவு செய்கிறார்கள். மந்திரியின் மகளுக்கு கண்ணன் மீது நட்பு இருக்கிறது. அதனால் அரசு நிர்வாகிகள் சாபத்திற்கு ஆளானவர்கள். காதலர்கள் உயிர் தப்பிக்க முடிவதில்லை என்ன நடந்தது என்பதை இந்த செண்பக பூக்காடு திரைக்கதை சொல்கிறது நைரா 2 ( ஞாபகம் வருதே ) நைரா நாவல் பாகம் 1 நாவலில் கெலிச்சி என்ற நைஜீரிய இளைஞன் திருப்பூர் வந்து பனியன் வியாபாரம் செய்யும் போது அகல்யா என்ற தமிழ் பெண்ணுடன் ஏற்படும் காதலும் அவன் நைஜீரியாவிற்கு திரும்பிச் சென்ற பின்னால் அகல்யா கர்ப்பமடைந்து அவனுக்காக காத்திருப்பதும்.. நைரா 2 இப்போது 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது கெலிச்சி இந்தியா திரும்புகிறான். நைஜீரியாவில் அவன் செய்து கொண்ட திருமண ம் இழந்து போன மனைவி என்ற சோகக் கதை. இங்கு திரும்பி வந்து அகல்யாவை தேடுகிறான். சிரமப்பட்டு கண்டுபிடிக்கிறான். அவனின் மகள் வளர்ந்து பெரியவளாகி இருக்கிறாள். அவளையும் கண்டுபிடிக்கிறான். உணர்ச்சிமயமான குடும்பப் பிணைப்புகள் கொண்ட கதை