சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 8 ஜூலை, 2024

Perfect days பர்பெக்ட் டேஸ் / திரைப்படம் ./ சுப்ரபாரதி மணியன் ( இந்த படம் 2023 கான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான நடுவர்களின் விருதைப் பெற்றது ) நம் தினசரி வாழ்க்கையின் சம்பவங்கள் வேலைகள் ஒரே மாதிரியாகத்தான் அமைகின்றன. ஓரிரு புது வேலைகள் வந்து புது மனிதர்கள் வந்து அந்த சம்பவங்களை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றுகிறார்கள். இந்த ஒரே மாதிரியான சம்பவங்களை தொகுத்து திரைப்படம் ஆக்கினால் எப்படி இருக்கும் கேட்கவே அலுப்பாக தான் இருக்கிறதும் வாழ்க்கையின் ஒரே மாதிரியான சம்பவங்கள்ன் நிகழ்வுகள் அவற்றையெல்லாம் திரும்பத் திரும்ப காட்டிக்கொண்டு இருந்தால் என்ன கிடைக்கும் ஆனால் அந்த மையங்களில் இருந்து கொண்டு வரப்படும் வாழ்க்கையின் சாரம் பற்றிய விஷயம் மனதில் நிற்கக் கூடியதாக இருக்கும் என்பதை விம்வெண்ட்டர் அவர்களின் பர்பெக்ட் டேஸ் என்ற திரைப்படம் காட்டுகிறது . இந்த படம் 2023 கான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான நடுவர்களின் விருதைப் பெற்றது. சிறந்த நடிகருக்காக இதில் நடித்திருக்கிற முக்கியமான நடிகருக்கும் பரிசு வாங்கி தந்தது. அவர் கோஜி யகுசோ.முக்கியமான கதாபாத்திரம் ஜப்பானின் பரபரப்பு வாழ்க்கைக்கு நடுவில் அகப்பட்டதாகும். பெரிய பெரிய கட்டிடங்கள். விரைந்து செல்லும் வாகனங்கள் இதிலிருந்து சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார் அவர் .அவர் போட்டிருக்கும் டோக்கியோ டாய்லெட் என்ற சட்டை வாசகம் ஏதோ பேஷன் காரனமாகப் போடப்பட்டதாய் பனியன் வெளிப்படுத்தும் வாசகமாக இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அவர் அங்கு தான் பணி புரிகிறார் என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் நேரமானது. செய்கிற வேலையை சரியாக செய்கிறவர் . ஹிராயாமா. அவர் கழிப்பறையில் சுத்தம் செய்யும் வேலையின் போது எல்லாவற்றையும் ஜாக்கிரையாக செய்கிறா.ர் சின்ன தூசு இருந்தால் கூட ஜாக்கிரதையாக துடைத்து எடுக்கிறார். அப்படி ரசித்து வேலை செய்யும் வேலையின் போது யாராவது கழிப்பறைப்பை பயன்படுத்த வந்துவிட்டால் அவர்களின் அவசரமும் அவருக்கு தெரிந்து விடுகிறது. வெளிவந்து வானத்தைப் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். நேரம் கிடைக்கிற போது அவர் உட்காருவதற்கு தென்படுகிற மரங்களையும் அவற்றை இலைகளையும் படம் பிடிக்கிறார். அவ்வப்போது புத்தக கடைக்கு போய் ஒரு டாலர் விலையில் ஒரு புத்தகம் வாங்குகிறார். பெரும்பாலும் சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் அவை. . அதை படிக்கிறார் படம் பிடிக்கிற கேமராவை சரியாக பாதுகாக்குகிறா.ர் அந்த படத்தை பிரிண்ட் போட்டு எடுத்து வந்து பார்க்கிறார். அது திருப்தியாக இருந்தால் வைத்துக் கொள்கிறார். இல்லாவிட்டால் கிழித்து போட்டு விடுகிறார். சாலையோரம் மரங்களின் அடியில் வளரும் சிறு செடி கூட அவருடைய பார்வையில் முக்கியமாக படுகிறது. எடுத்து வந்து வீட்டில் பாதுகாக்கிறார். இப்படி சின்ன சின்ன விஷயங்களை ஜாக்கிரதையாக செய்கிறார் .இரவில் வழக்கமாய் போய் சாப்பிடும் இடத்தில் சாப்பிடுகிறார் அந்த கடைக்காரர் இவரின் உழைப்பை பார்த்து பாராட்டு விதமாய் தரும் குளிர்பானத்தை அருந்திவிட்டு அறைக்கு வருகிறார். அவர் கழிப்பறையை சுத்தம் செய்யும் இடங்களுக்கு போகும் போது மகிழ்வுந்துவைப் பயன்படுத்திக்கிறார். ஆனால் மற்ற இடங்களுக்கு போய்விட்டு திரும்புவதற்கு அவரிடம் மிதிவண்டி இருக்கிறது .தினசரி வானத்தை பார்த்து ரசிப்பதும் காலையில் எழுந்ததும் ஒரு குளிர்பானத்தை குடிப்பதும் என்ற அவருடைய வேலையை தொடங்குகிறார். இந்த வேலையின் தினசரி அம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறன. இவற்றை திரும்பத் திரும்ப படத்தில் காட்டப்படும் போது என்ன சொல்ல வருகிறார் என்று பல பேருக்கு அயர்ச்சி செயல்படக்கூடும். ஆனால் அவர் ஏன் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இரவில் படிக்க போது கொஞ்சம் படிக்கிறார். அசந்து தூங்கிவிட்டார் கனவு வருகிறது. கனவின் பொருள் என்ன மனச்சுமையில் எப்போதும் மாட்டித் தவிக்கிறவர் அல்ல ஆனால் மனச்சுவையில் தவித்துப் போகிறார்கள் அவரிடம் வந்து அடைக்கலமாக இருக்கிறார்கள். தாயிடம் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி அவர் அறையில் வந்து தங்கும் சகோதரியின் மகள் கூட சில நாட்கள் கழிப்பறை சுத்தம் செய்யப் போகிறாள். அவளுக்கு வாழ்வின் அர்த்தமும் புரிகிறது. அதை கற்றுக் கொடுக்கிறார் அந்த பெண்ணின் அம்மா வந்து திரும்பக் கூட்டிக்கொண்டு போய்விடுகிறார் மற்றும் அவர் பார்க்கிற ஒரு காட்சி அவரை நடுங்க வைக்கிறது. கழிப்பறையைச் சுத்தம் செய்துவிட்டு அமர்ந்திருப்பவர் எதிரில் உள்ள ஒரு அறையில் அந்த வீட்டுப் பெண் ஒரு ஆணுக்கு கதவை திறந்து வருகை தர கேட்கிறாள். அவர் உள்ளே போகிறார் ஒருவித ஆர்வத்தால் அங்கே என்ன நடக்கிறது என்பதை கதவின் சந்து வழியாக அவர் பார்க்கிறார் அவர்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவருக்கு துணுக்கு வைக்கிறது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சில சமயங்களில் கேட்கப்படுகிறது . மற்றவரின் அந்தரங்க வாழ்க்கையில் வீணாக குறிப்பிட்டு விட்டோமோ என்ற ஒரு குறுகுறுப்பு ஏற்படுகிறது அந்த நீர் பரப்பின் அருகில் வந்து பதற்றத்தைக் குறைக்க மது அருந்தும்போது இவருடன் சேர்ந்து கொள்கிறார் அவர் அந்த பெண்ணின் முன்னாள் கணவர். விவாகரத்து வாங்கியவர். ஆனால் புற்றுநோய் வந்து விட்டது அதற்கான சிகிச்சையில் இருப்பதாக சொல்கிறார். அவரின் வேதனை வெளிப்படாமல் இருக்க தாங்கள் இருவரும் வெளிச்சத்தில் வெளிப்படும் நிழல்களை வைத்துக் கொண்டு சில உரையாடல்களை அவர் பரிமாறிக் கொள்கிறார். இருவருக்கும் பாரம் குறைந்து கொண்டிருக்கிறது. அடுத்த நாளும் சரியான நேரத்தில் கண்சொருக தூங்கிடுவார் வீட்டுக்கு வெளியே வந்து வானத்தை பார்ப்பார். பக்கத்தில் இருக்கும் ஒரு தானியங்கி இயந்திரத்தில் ஒரு குடிபானம் வாங்கி அருந்துவார். கழிப்பறை சுத்தம் செய்யும் வேலைக்கு போக வேண்டும் .அப்படிக்கு போக அந்த நாளில அந்த வேலை ஒப்பந்தம் முடிந்து விட்டதாக தகவல் வருகிறது. அந்த வேலை செய்யும் இடத்திற்கு போனால் இன்னொரு பெண்மணி அந்த வேலை செய்ய காத்துக் கொண்டிருக்கிறாள். ஆகவே அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அவருக்கு சிரமம் இல்லை. அவருக்கு வாழ்க்கையில் ரசிக்கவும் வாழ்க்கை தந்த அனுபவங்களை புரட்டி போட்டு கொள்ளவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.. இஅப்பானின் தலைசிறந்த இயக்குநரானயாசுஜிரோஓசு அவர்களின் பிரபலமான டோக்யோ ஸ்டோரி பட்த்தின் பிரதான் கதாபாத்திரத்தின் பெயர் அது. இதில் சொல்லப்படாத கதாநாயகரின் வாழ்க்கை மர்மமாயமே இருக்கிறது பழுதடைந்த வேன். ஒரு கேசட் பிளேயர். அவருக்கு ஆசுவாசப்படுத்தும் விசயங்கள். இசையின் வாயிலாக பலகாட்சிகளைக்கடந்து செல்கிறோம். இசையும் வாசிப்பும், புகைப்படம் எடுப்பதும் அவருக்கு மூச்சாக அமைந்துவிட்டிருக்கிறது. இந்த தினசரி வாழ்க்கையின் சம்பவங்களை பெரிய வித்தியாசம் இன்றி இதை சொல்லி கொண்டு போவதில் அவர் கலை நயம் மிக்க வாழ்க்கையை தரிசனத்தை கொண்டு வந்து விடுகிறார். இந்த தரிசனம் எல்லோராலும் வழி காட்ட முடியாது . விம் வெண்டர் போன்ற தேர்ந்த திறமையான கலைஞர்களால் முடியும். அதை அவர் திரும்பவும் நிரூபித்திருக்கிறார் இந்த படத்தின் மூலம்.. மக்கள் அனைவரும் சமமானவர்கள் எனும் அடிப்படையில்தான் எனது அனைத்துத் திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன.சமத்துவம் என்பது எனது எல்லாத் திரைப்படங்களிலும் முதன்மைப் பண்பாகச் செயல்படுகிறது.மக்கள் எல்லோரும் மக்கள்தான் என்பதை அவைப் புலப்படுத்துகின்றன. அதில் மேலாண்மையோ கீழிறக்கமோ இல்லை. அவர்கள் முக்கியமானவர்களோ முக்கியமற்றவர்களோஇல்லை என்பதில் நம்பிக்கை கொண்டு அதைத் அவரின் திரைப்படங்களிலும் கதாபாத்திரங்களை வெளிப்படுத்துகிறார். சுப்ரபாரதி மணியன்