சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 அக்டோபர், 2024

Kovai ilaykiya santhippu தூரிகை சின்னராஜ் உரையில்.. எழுத்தாளர் பொன் குமார் புலிவால் பிடித்த கதை என்கிற புத்தகத்தில் வெளியாகி உள்ள தனது பேட்டியின் முதல் கேள்வியை இப்படி தொடங்குகிறார். தாங்கள் நாடறிந்த ஒரு படைப்பாளி பல தளங்களில் இயங்கி வருபவர் இப்பொழுதும் நீங்கள் முதல் படைப்பை எழுதிய மனநிலையை எழுதுகிறீர்களா ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது என்றும் நான் பழக்கப்பட்ட முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்கள் மத்தியில் இருந்து மக்களுக்காக எழுத வேண்டுமா என்ற குழப்பமும் என்னிடம் இருந்தது ஆனால் நான் என் முதல் சிறுகதையை சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என்பதை இப்பொழுது நினைக்கிற பொழுது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது திருப்பூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த விழிப்பு என்கிற இடதுசாரிகளில் என் முதல் சிறுகதை சுதந்திர வீதிகள் என்று சிறுகதை வெளிவந்தது அது கதை இந்திய நாட்டின் மிக மோசமான ஒரு காலகட்டமான அரசியல் அவசரநிலை காலகட்டத்தில் நடப்பதாக காட்டப்பட்டது இன்றைக்கு கூட அவசரநிலை காலகட்டத்தை நினைவுபடுத்தும் சூழல்களும் சட்டங்களும் தென்படுகின்றன அந்த வகையில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் சாதாரண குடிமக்கள் நிலைமை எப்படி இருந்தது என்பதை ஒரு கால்பந்தாட்ட வீரரை மனதில் வைத்துக் கொண்டு எழுதிய அந்த கதை இப்பொழுது கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றுகிறது இவ்வாறாக முடிகிறது நமது படைப்பாளரின் பதில். சுப்ர பாரதி மணிகண்டன் அவர்களின் எழுத்து ஆரம்பமே இடதுசாரி சார்ந்தும் தொழிலாளர்கள் நலன் சார்ந்தும் சூழல் சார்ந்தும் இன்றளவும் தொடர்வது ஆச்சரியம் இல்லை. தனது படைப்புகளில் சிவப்பை அவர் எப்பொழுதும் கலந்து கொள்ள தவறியதே இல்லை. ஹைதராபாத்தில் பணி நிமித்தம் காரணமாக வாழ்ந்த காலத்தில் எழுதிய ஐதராபாத் நாவல்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மற்றும் சிலர் நாவலில் பிச்சை என்கிற கதாபாத்திரம் நாவல் முழுவதும் ஒரு போராட்ட கள நாயகனாக வலம் வருகிறார். அதே ஐதராபாத்தில் நானும் சில காலம் பணியாற்றி இருந்தேன் அப்பொழுது பிபிசிங் பிரதமராக ஆட்சி புரிந்த காலத்தில் மண்டல் பரிந்துரைகளை அறிமுகப்படுத்திய காலம் மிகவும் போராட்டம் மிக்க அந்த ஹைதராபாத் வாழ்க்கையை நான் நேரில் பார்த்தவன் என்கிற வகையில் அது எவ்வளவு முக்கியமானது என்பதையும் நான் அறிவேன். சுப்ர பாரதி மணியன் அவர்கள் மற்றும் சிலர் என்கிற நாவல் தெலுங்கானா போராட்டத்தில் காலகட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அதிலே வருகின்ற சில போராட்டங்கள் இன்று நடைபெறுகிறதா என்பது கூட அதிகமாக இருக்கிறது காரணம் ஒரு சிறு விடயங்களுக்காக மட்டும் அல்லாமல் மக்களின் போராட்டம் என்றும் சுருக்கி விடாமல் அரசியல் தாண்டியும் அனுதினமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது கே பாலச்சந்தர் அவர்களின் ஜாதிமல்லி படம் கூட அதைத்தான் பிரதிபலித்தது. அந்த காலகட்டத்தில் நான் சந்தித்த ஸ்கர்க் யூ என்ற வார்த்தைகள் தொடர்ச்சியாக நாவலில் குறிப்பிடப்படுகின்றன. மற்றும் சிலரில் ஒரு இளைஞன் நெசவு தொழில் செய்து அந்த துணி வியாபாரத்தை ஹைதராபாத்தில் நடத்துகின்ற வாழ்வியல் போராட்டமும் அந்த காலகட்டத்தில் நடைபெற்ற மொழி போராட்டங்களும் போராட்டமும் அவரை எவ்வாறு தொழில் ரீதியாக பாதித்தது என்பதையும் பின்னர் அவர் அந்த தொழிலில் இருந்து அரசியலுக்கு நுழைவது வரை நாவல் அணுவாக விவரிக்கிறது. அந்த நாவலை மற்றவர்கள் எழுத்தாகவும் காட்சியாகவும் வாசிக்கிற பொழுது நான் மண்டல் பரிந்துரைகளை அறிமுகப்படுத்திய பொழுது அங்கே வாழ்ந்த சூழலில் அதிகாலையில் வீட்டை விட்டு பழமையில் தூரம் பணி நிமித்தமாக பயணப்படுகின்ற பொழுது பார்த்த மொத்த ஹைதராபாத்தையும் அவர் காட்சிப்படுத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விநாயகர் சிலைகளை பிரம்மாண்டமான உயரங்களில் தெருமுனையில் வைத்து பூஜை செய்வது போன்றவற்றையெல்லாம் நான் நேரில் பார்த்து உணர்ந்ததை சுப்ரபாதி அண்ணன் படைப்புகளில் எவ்வித புனைவுகளும் இல்லாமல் காண முடிந்தது. குறிப்பாக போராட்டம் என்றால் மாணவர்கள் முதல் அரசியல் மற்றும் பொதுமக்கள் வரை கலந்து கொண்டு பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு இடையூறு செய்யும் விதமாக ஊரடங்கு உத்தரவுகளை அடிக்கடி பிறப்பிப்பது உண்டு. இரட்டை நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களை அவர் பதிவு செய்துள்ள விதம் நான் சற்றும் மிகைப்படுத்தாமல் பார்க்க சம்பவங்களே குறிப்பாக அந்த நகரின் வாழ்வியல் சூழல் போராட்ட களம் எனது ஓவியப் பணிக்கு இடையூறாக இருந்த காலகட்டத்தில் நான் ஊர் திரும்புகிற பொழுது நான் வந்த காக்காச்சியா எக்ஸ்பிரஸ் என்கிற ரயில் வண்டியை தீ வைத்த போது அதிலிருந்து கீழே இறங்கி தப்பித்தவன் என்கிற முறையில் அவருடைய நாவலில் நுண்ணிய அரசியலை மட்டுமல்ல கூர்ந்து கவனித்த போராட்டங்களை தவறாமல் பதிவு செய்திருந்தார் இன்று தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு இரண்டு முதல்வர்கள் ஆட்சி செய்யும் சூழலில் இன்று கூட ஏழுமலையானின் பிரசாத வடிவில் அரசியல் தொடர்கிறது என்றால் அந்தப் போராட்ட களம் எவ்வளவு சிவந்த காலமாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். எனவே அவர் தான் வாழ்ந்த தான் பார்த்த காட்சிகளை தனது படைப்புகளில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்யும் அதே சமயத்தில் தோழர்களின் போராட்டங்களை தவறாமல் இடம் பெறச் செய்திருக்கிறார். அண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சௌந்தர கைலாசம் நாவல் பரிசை வென்ற அந்நியர்கள் என்கிற நாவலில் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் வாழும் வாழ்க்கையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். அதில் வரும் துளசி என்கிற கதாபாத்திரத்தை சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகளை நாவலாக்கும் முயற்சியில் வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் இருந்து வந்து பணியாற்றும் பல மனிதர்களின் அவல நிலையை நாவலில் பரவலாக சித்தரிக்கிறார். பொதுவாக நாம் வடக்கன்கள் என்று கிண்டல் செய்யும் அந்த வார்த்தையில் இருக்கும் பகடியை விட அந்த மனிதர்கள் அவர்களுக்குள்ள துன்பங்கள் அவர்களது உழைப்பை முதலாளிகள் எவ்வாறு சுரண்டுகிறார்கள் போன்றவற்றையெல்லாம் அழகாக வெளிச்சம் போட்டு காட்டி ஒரு தொழிலாளர் சங்கம் செய்ய வேண்டிய வேலையை இந்த நாவல் செய்கிறது. இந்தியா என்கிற ஒருங்கிணைந்த ஒரு தேசத்தில் நம் நாட்டு மக்களை அகதிகளாக அந்நியர்களாய் திருப்பூரில் வசிப்பதின் துன்பத்தை இந்த நாவல் சற்று வேதனையுடன் பதிவு செய்கிறது. மொழிச் சிறையில் குழந்தை தொழிலாளர்களின் வேதனைகளும் சுமங்கலி திட்டத்தின் குறைகளையும் பாத்திரங்கள் மூலம் விளக்கி இருப்பது எழுத்தாளர் வாழும் உள்ளூரின் அன்றாட காட்சி.