சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 அக்டோபர், 2024

இணைய ஆற்றுப்படை / முனைவர் மு. இளங்கோவன் நூல் அறிமுகம் சுப்ரபாரதிமணியன் கற்றான் ஒருவன் அது கற்க விரும்புவானை ஆற்றுப்படுத்துதல் இணைய ஆற்றுப்படையாம். அந்த வகையில் .இணையம் சார்ந்த தொழில்நுட்ப செய்திகளையும் வரலாறுகளையும் தமிழில் பதிவு செய்துள்ளது இந்த நூல். ஆற்றுப்படை என்பது பல்வேறு வகைகளில் அர்த்தம் சொல்லப்படுவது பொருள் பெற்ற ஒருவர் பொருள் பெற செல்வோர் பெயரில் அமைப்பதாக ஆற்றுப்படை கேள்விப்பட்டிருக்கிறோம்.. முருகனை ஆற்றுப்படுத்தாமல் முருகனிடத்து ஆற்றப்படுத்துவதாக அமைந்திருப்பதும் உண்டு.. ஞானியர் ஆற்றுப்படை என்பது ஞானி யாரை ஆற்றுப்படுத்தாமல் ஞானியாரிடம் ஆற்றுப்படுத்துதல் என்ற கருத்திலும் பாடி உள்ளார்கள். . அப்படித்தான் இணைய ஆற்றல் என்பது இங்கே முடிவாக உள்ளது. இணையத்தின் சிறப்புகளை சொல்லி அதனை கற்றும் அறிந்தும் பயன்பெற பல வகைகள் சொல்லப்பட்டுள்ளன.. தமிழகத்தின் நிலம் சார்ந்த விசயங்கள், அதன் சிறப்புகள், வளம், பெருமை யாவும் நினைவு கூறப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் தமிழ் இணையத் தொழில்நுட்பத்தை தமிழில் வழங்க வேண்டும் என்று உழைத்த பெருமக்கள் பற்றிய குறிப்புகள் நிகழ்காலத் தன்மையுடன் வைக்கப்படுகின்றன. சரியான கவுரவம் அவர்களுக்கு. . முன்பே ஆற்றுப்படை நூல்கள் சிலவற்றை எழுதி பயிற்சியை ஆழமாக்கிக் கொண்டவர் முனைவர் மு. இளங்கோவன். உலகப் போக்குகளை உள்வாங்கிக் கொள்ள தமிழ் அறிஞர்கள் தாய்மொழியான தமிழிலும் உலகப் போக்குகளை நிலை பெறச் செய்யும் முயற்சியில் முனைந்தனர். அது பல சாதனைகளை செய்துள்ளது. கணினி, இணையம் இல்லாத உலகம் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை. அந்த உலகத்தில், இணையத் துறையின் செயல்பாடுகளை பற்றி இந்த நூல் சொல்கிறது. இந்த ஆற்றுப்படையை 563 பாடல் அடிகளில் அமைந்திருக்கிறார் தொழில்நுட்ப வரலாறு மரபு வடிவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ் இணையத்துக்கு பங்களித்தோர் என்ற விவரங்களில் முனைவர் அனந்தகிருஷ்ணன், நா கோவிந்தசாமி முதற்கொண்டு காலடி நாகராஜன், தகவல் உழவன் வரைக்கும் சிறப்பானப் பங்களிப்பைச் செய்தவர்கள் பற்றியக் அறிமுகக் குறிப்புகளை இந்த இந்த ஆற்றுப்படை அமைத்திருக்கிறது. தமிழில் இணைய முயற்சிகளின் பல்வேறு பரிமாணங்களில் ஒரு வகையை இது சிறப்பாக சுட்டி காட்டி இருக்கிறது. இந்த 563 அகற்பா வரிகளின் அனுபவங்களை, சொல்லாட்சியை அகற்பா பற்றி தெரிந்தவர்கள் முழுமையாக நன்கு ரசித்து உணரலாம். மற்றவர்களுக்கும் கணினி, இணையம் சார்ந்த விபரங்களுக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்குகிறது. ( பக்கங்கள் 48, விலை ரூ 100, வயல் வெளி பதிப்பகம், இடைக்கட்டு, அரியலுர் 612901 - 944420 29053 ) ( முன்னுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டது, வேறு கருத்துக்கள் இடம் பெறவில்லை )