சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 அக்டோபர், 2024
இலக்கிய ஒளிக்கீற்றின் தெளிவைப் பரவலாக்கும் முயற்சிகள்
’வதைபடுதலும், குழம்பிக் கலங்குதலும், முட்டி மோதுதலும், பிழை புரிதலும், தொடங்குதலும், தூக்கியெறிதலும், மறுபடியும் தொடங்குதலும், மறுபடியும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போராடுதலும், இழப்புக்குள்ளாதலும், வாழ்வின் இன்றியமையா பண்புகள். மன நிம்மதி என்பது ஆன்மாவின் இழி நிலைப் பண்பு’’
– லேவ் தல்ஸ்தோய்
0
.ஆன்மாவின் அலைவுறுதலை இலக்கியம் பிரதிபலிக்கிறது. அந்தப் பிரதிபலிப்பு மனித அனுபவங்களிலிருந்தே வாய்க்கிறது.. அந்த அனுபவங்கள் நமக்கு வாய்ப்பவை. நம்மை வந்து சேர்பவை.
இந்த அனுபவங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள் எங்கே இருக்கின்றன என்று அடையாளம் காட்டுபவை திருமதி பவள சங்கரி அவர்களின் படைப்பு ஆய்வுகளும் தொகுப்பு முயற்சிகளும்.
அதை இந்த நூலில் ஒரு கதை மூலமாக இப்படி அவர் விளக்குகிறார்.
0
ஒரு முறை ஒரு
சிறுமியும் ௮வள் தந்தையும் கடல் கரையில் உலாவிக் கொண்டிருந்தனர்.
அழகான சிப்பியொன்றை அச்சிறுமி கண்டு, ஆவலுடன் எடுத்துத் தன்
காதருகில் வைத்துக்கொண்டாள். அப்போது அவள் அதுவரை கேட்டிராத
ஒரு வேறுபட்ட ஒலி அந்தச் சிப்பியிலிருந்து வருவதை உணர்ந்து
வியப்புற்றாள். அவள் முகத்தில் பரவசமும் மகிழ்ச்சியும் நடம்புரிந்தன.
சின்னஞ்சிறு அந்தச் சிப்பியின் ஒலிகள் வியக்க வைத்தன. அந்த ஒலிகள்
மென்மையாய் இனிமையாய் இருந்தன. மற்றொரு நூதன உலகிலிருந்து
அவை வருகின்றன என்று நினைத்தாள் அவள். அந்தச் சிப்பி தான்
வாழ்ந்து வந்த கடல், உலகிலுள்ள மூடு மந்திரங்களை நினைவிற்குக்
கொண்டுவந்து மீண்டும் அவற்றை மெல்ல மிழற்றுவதுபோல் தோன்றியது.
அவற்றின் மாய இன்னிசையிலே அச்சிறுமி பிணைப்புடன் மகிழ்ச்சியுற்றுக்
கேட்டு, தந்தையுடன் செல்வதையும் மறந்து விட்டாள். முன்னே சென்று
கொண்டிருந்த தந்தை திரும்பி வந்து தன் மகளின் செயலைக் கண்டவர்,
சிப்பியினின்று வரும் ஒலியின் ரகசியத்தை விளக்கத் தொடங்கி அதில்
அவ்வாறு ஒலி கேட்பது புதுமையன்று என்றார். காதிற்கு எட்டாத பல
மெல்லொலிகளைச் சிப்பி தனது வெண்மையான வரிகளிலே அகப்படுத்தி,
பளபளக்கும் உட்குழிவுகளிலே கணக்கற்ற எதிரொலிகளின் உள்
அரவத்தை நிறைத்து வைத்திருக்கிறது எனக் கூறினார். சிப்பியின் வழியாக
வந்த ஒலிகள் ஒரு நூதன உலகில் தோன்றி வருவன அல்ல; இந்தப் பழைய
உலகில் உள்ளவையே. ஆனால் அவற்றின் நிரம்பிய இசையினிமையை
ஒருவரும் கவனித்துக் கேட்டதில்லை. இவ்வாறு கேளாதன கேட்ட
காரணத்தாலேயே, சிறுமி வியந்து ௮தில் ஈடுபட்டாள். இவளது அனுபவம்
ஒருவகை; இவளது தந்தையின் அனுபவம் வேறு வகை. இவைபோன்ற
இரண்டு அனுபவங்கள் இலக்கியக் கல்வி நிகழும்பொழுது நமக்கு
ஏற்படுன்றன. சுவை நுகர்ச்சியைப் போலவே தலைசிறந்தது
இலக்கியத்தைப் பகுத்து உணர்ந்து அதனை விளக்கும் முறையை அறிதல்.
ஒவ்வோர் இலக்கியத்தின் அடிப்படையிலும் ௮தன் இயல்பு அறிதலின்
போது அதன் ஆசிரியன் புலப்படுகிறான்.
இலக்கிய வரலாறு என்பது, வாசிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ
அல்லது கவனிப்பவர்களுக்கோ பொழுதுபோக்காக, அறிவூட்டத்தக்கதாக
அல்லது கல்விப் பெறுமானம் கொண்டதாக அமையும் எழுத்தின்
வளர்ச்சியைக் குறிக்கிறது. இது உரை நடை வடிவிலோ கவிதை வடிவிலோ
அமையலாம்.
நம்முடைய வாழ்க்கையை நிலைபேறுடையதாக்கி உறுதிப்படுத்துவது
இலக்கியம். இன்று மொழியும், இலக்கியமும் மாறி வருகின்ற நிலையில் ஒரு
பண்பாட்டின் மொழி வளத்தைக் காண தற்கால இலக்கியங்கள் பற்றிய
வாசிப்பு அவசியம். எனவே இலக்கியம் மட்டுமே இந்த உலகில் அழகு,
அறிவு, ஆற்றல் அனைத்தையும் தெளிவாக்குகிறது
0
இந்தத் தெளிவாக்கலை படிகத்தின் வழியே செல்லும் ஒளிகீற்றின் தன்மை போல் விளக்குகிறார். பவளசங்கரி அவர்கள்.
0
இந்த ஆண்டின் தமிழக அரசின் இரு விருதுகள் : அம்மா விருது, சிறந்த நூலுக்கான விருது என அவரை அடையாளம் காட்டிய வெளிப்பாடுகள் போல் இந்த நூலில் அவர் அடையாளம் காட்டும் படைப்புகள் இலக்கிய ஒளிக்கீற்றின் தெளிவைப் பரவலாக்கும்.
வாழ்த்துக்கள்..
அன்புடன்,
சுப்ரபாராதிமணியன்