சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 அக்டோபர், 2024

சௌவுண்டம்மா நாவல் இரா பாரதிநாதன் அறிமுகம் சுப்ர பாரதி மணியன் சேலம் பகுதி நெசவாளர்கள் வாழ்வியல் பற்றி தொடர்ந்து பாரதிநாதன் அவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் பற்றி பல வாழ்வியல் சித்திரங்களை அவர் மூலம் பெற்றுக் கொள்கிறோம். நானும் கொங்கு பகுதி நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து “ தறி நாடா “ ” சப்பரம் “ போன்ற நாவல்களும் நெசவு உட்பட கட்டுரை தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறேன் பாரதிநாதன் அவர் தனது தந்தை வழிபாட்டியான சௌவுண்டம்மாவை மனதை வைத்துக் கொண்டு இந்த புனைவெளியை உருவாக்கியதாக குறிப்புகள் சொல்கின்றன. நெசவளர்கள் வாழ்க்கையில் இருக்கிற சிரமங்கள் அவர்களை வாழ வைக்கிற நம்பிக்கைகள் பண்பாட்டு அசைவுகள் இவற்றை மூலதனமாக்கி இருக்கிறார் பாரதிநாதன். அவர்கள் அந்த தொழில் மற்றும் ஜாதி சார்ந்த சமூகத்தில் இருக்கக்கூடிய திருமணம் முதல் கொண்டு சாவு முறைக்கும் பல சடங்கு முறைகளை விரிவாக சொல்கிறார். பல குடும்ப உறவுகளைப் பற்றி சொன்னாலும் ரங்கசாமி, சௌவுண்டம்மாவின் குடும்பமும் ரங்கநாதன் என்ற அவர்களின் வாரிசு பற்றியும் விரிவானக் குறிப்புகள் உள்ளன. அவர்களின் மூலமாக நெசவாளர் வாழ்க்கை காட்டப்படுகிறது. மாதேஷ் போன்ற நெசவாளிகள் பெண்களை கொடுமைப்படுத்துவதும் அவர்களுக்கு நேரும் சிரமங்களும் இன்னொரு பக்கம் சொல்லப்படுகிறது மனநோயாளியாக இருக்கிற ஒருவனுக்கு அது சரியாகும் என்று திருமணம் வைத்து வைப்பதும் அவன் இறந்து போன பின்னால் அந்தப் பெண் நிற்கதியாக நிற்பதும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.. இவர்கள் மத்தியில் அரசியல் சார்ந்து மணி என்ற ஒரு நக்சல் இயக்கம் சார்ந்த ஒருவர் நெசவாளியாக வருகிறார் அவர் ரகசியமாக வெடிகுண்டு தயாரிப்பதும் அந்த இயக்கத்தில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்ள விரும்பும் தன்மையும் விதவை பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் என்ற தன்னுடைய விருப்பமான போராட்ட களவாழ்க்கையை பாரதிநாதன் இதனுடன் இணைத்திருக்கிறார் நெசவாளர் வாழ்வியல் சார்ந்த அனுபவங்களும் சிரமங்களும் சேலத்தை ஒட்டி இருக்கிற கிராம மனிதர்கள் இயல்புகளும் சரியாக வந்திருக்கிறது. தொடர்ந்து நெசவாளர் வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கும் அவர் இந்த நாவலில் 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெசவாளர் வாழ்க்கையை இப்பொழுது எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். ஊர்மக்களுக்குத் தெரிகிற மாதிரி இறந்தவர் முகத்தைப் பாடையில் வைத்துக் கொண்டு வருவதும் பிறகு முகத்தை மாற்றுவதும் இறந்தவருக்கு திடீரென திசை மாறினால் வீட்டுக்கு வழி தெரியாதாம். அது போல் பல சம்பங்களைத் தருகிறார். பல மனிதர்களின் விசித்திர முகங்களைக் காட்டுகிறார். அவளுக்கு கணவனைப் பிடிக்கவில்லை. ஆனால் அவன் செத்துப் போனபின்பு திதி கொடுப்பதும் சடங்குகளைக் கொண்டாடுவதும் சரியாகச் செய்கிறாள் அவள் என்று ஒரு பாரா அறுபதாம் பக்கம் உள்ளது . அது போல் பல மனிதர்கள் நாவலில் இடம் பெறுகிறார்கள் வாழ்க்கையின் விசித்திரமாக. கன்னி கழியாமல் இருக்கும் பெண்கள். ஆனால் வாழ்க்கையை சரியாக ஏற்றுக்கொள்ளும் பெண்கள் நிறைய பேர் வந்து போகிறார்கள் . . சேலம் பகுதி நெசவாளர்கள் வாழ்வில் இருந்து பெறக்கூடிய அனுபவங்களை கொட்டித் தீர்க்க ஒரு நல்ல வாய்ப்பாக இந்த நாவல் பாரதிநாதன் அவர்களுக்கு அமைந்திருக்கிறது. இவரின் நெசவாளர்கள் காலனி நாவலில் இது போல் நிறைய நெசவாளர்கள் வந்து போகிறார்கள். அதில் சின்னதாய் காதல் கதை உள்ளது . ஒரே சாதிக்குள் இருக்கும் பொருளாதார வேறுபாடுகள் இளசுகளைக் பிரிகிறது. சந்தனக் கடத்தல் வீரப்பனும் பலரைப் பிரிக்கிறான். அவன் பெயரைச் சொல்லி காவல்துறையும் அதிரடிப்படையும் பிரிக்கிறது. இதையெல்லாம் நேர்த்தியாகச் சொல்கிறார் . புரட்சி பாரதி பதிப்பகம் சென்னை வெளியீடு ரூபாய் 160 )