சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 அக்டோபர், 2024
திருப்பூர் தமிழ் சங்கம் 1
தமிழக செய்தி துறை அமைச்சர் ரூபாய் இரண்டு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் பள்ளிக்குழந்தைகளுக்கு திருக்குறள் முற்றோதல் திட்டத்திற்கு ஒரே நாளில் வழங்குவதாகச் இந்த தொகையை சொன்னார். பள்ளி குழந்தைகள் திருக்குறள் ஓதுதல் சம்பந்தமான வழங்கப்படுகிற தொகை பெரியது .
இந்த்த் தொகையை கேட்டு பத்திரிகை சன்மானம், ராயல்டி போன்றவை கிடைக்காத நவீன எழுத்தாளர் ஒருவர் மயக்கம் போட்டார்.
அவர் மயக்கம் போட்டது இந்த தொகை காரணமாவா அல்லது ஏசி அரங்க அறையாக இருந்தாலும் மிகவும் கடுமையான மக்கள் நெரிசல் நெருக்கடியில் இருந்ததா என்று தெரியவில்லை
. அவரை அந்த அரங்கத்தை விட்டு வெளியேற்றிய பின்னால் அவர் ஆசுவாசம் பெற்று விட்டார்.
ஆனால் அவர் வாய் ராயல்டி.. ராயல்டி என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
திருப்பூர் தமிழ் சங்கம் 2
திருப்பூர் தமிழ் சங்கம் நேற்று நடத்திய விழாவுக்கு சாதாரண பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்வதற்கான வாகன வசதி இல்லாமல் சிரமமாக இருந்தது. ரொம்ப தூரம். தமிழ்நாடு முழுக்க இருந்து பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்திருந்து சிரமப்பட்டனர். அவர்கள் பெற்ற 15,000 ரூபாய் காசோலையும் சான்றிதழும் ஆசுவாசம் தந்தன.
அந்த அரங்கம் மருத்துவர் முருகானநாதன் பெயரில் இருந்தது. அவர் திருப்பூர் தமிழ் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் இருந்து கொண்டிருக்கிறார்.
திருப்பூர் தமிழ் சங்கத்திற்கு தனியாக கட்ட்டம் என்று உள்ளூரில் எதுவும் இல்லை. சின்ன சின்ன ஊர்களில் தமிழ்ச்சங்கங்கள் என்று தனியாக கட்டடங்களும் அரங்குகளும் இருக்கின்றன ஆனால் திருப்பூர் தமிழ் சங்கத்திற்கு அப்படி கட்டடம் எதுவும் இல்லை. கோடீஸ்வரர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட திருப்பூர் தமிழ்ச்சங்கம் தனியாக கட்டடம் எழுப்ப முயற்சி எடுக்கலாம். இதை பல முறை அவர்களிடம் முணுமுணுத்திருக்கிறேன் அப்படி தமிழ்சங்கக் கட்டடம் அரங்கம் எழுப்புவது அவர்களுக்கு சாதாரண விஷயம். ஜூஜூபி காரியம்.. அதை செய்யலாம்.. பிற இலக்கிய அமைப்புகள் திருப்பூரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்கு இடமில்லாமல் தவிக்கிறார்கள். அதற்கு கூட உதவியாக இருக்கும்
திருப்பூர் தமிழ் சங்கம் 3
திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது பட்டியல் சார்ந்த அதிருப்தியைத் தெரிவித்து இருந்தீர்கள். நீங்கள் அதை ஏன் நிராகரித்து வாங்காமல் விட்டிருக்கலாமே என்று சிலர் கேட்டார்கள்
6 மாதம் முன்னாள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்க ஒன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடந்த போது திருப்பூர் எழுத்தாளர்கள் மனதில் உள்ள குறையை அவரிடம் - திருப்பூர் தமிழ்ச்சங்க தலைவர் மருத்துவர் முருகநாதன் அவர்களிடம் சொன்னேன் திருப்பூர் உள்ளூர் எழுத்தாளர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரத்தையும் திருப்பூர் தமிழ் சங்கம் தரவில்லை என்பது அந்த மனக்குறை
.( எனக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஒரு முறை முன்பே திருப்பூர் இலக்கிய விருதை வழங்கி இருந்தது நாவலாசிரியர் மறைந்த தோப்பில் முகமது மீரான் தலைமையிலான தேர்வு குழு ஒரு ஆண்டு திருப்பூரில் இலக்கிய விருதுகள் புத்தகங்களை தேர்வு செய்த போது எனக்கு திருப்பூர் இலக்கிய விருது கொடுத்தார்கள் )
இந்த குறை அவர்கள் சொன்னபோது விழா நடத்தி திருப்பூர் எழுத்தாளர்களை திருப்தி செய்து விடலாம் என்றார். திருப்பூர் எழுத்தாளர்களின் படைப்பு பற்றிய கருத்தரங்கமும் அவர்கள் படைப்புகள் பற்றிய அனுபவப் பகிர்வு சார்ந்த ஒரு கருத்தரங்க நிகழ்ச்சியாக இருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டேன் அவர்கள் ஒரு பட்டியல் கேட்க நானும் தொலைபேசி எண்கள் உடன் பட்டியல் கொடுத்தேன்.
ஏப்ரல் மாதம் அந்த நிகழ்ச்சி ஏற்பாடானது ஆனால் சட்டுனு வந்த தேர்தல் தேதி காரணமாக நிகழ்ச்சி ஒத்துழைக்க பட்டது. அதை இப்போதுதான் நடந்திருக்கிறது
ஆகவே உள்ளூர் எழுத்தாளர்களோ வெளியூர் எழுத்தாளர்களோ அவர்களுக்கு சிறிய அங்கீகாரம் கிடைக்கும் இந்த நிகழ்ச்சிகள் என்பதால் நான் அதை புறக்கணிக்க நினைக்கவில்லை
30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் எழுத்தாளர் திலகவதி அவர்களும் திருப்பூர் தமிழ்ச்சங்கத தலைவரைச் சந்தித்து திருப்பூர் தமிழ் சங்கம் எழுத்தாளர்களை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு புத்தகங்களுக்கு பரிசளிக்கலாம் என்ற யோசனையைச் சொன்னோம். பலத்த யோசனைக்கு பிறகு அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அதன் பின்னால் நடந்த திருப்பூர் தமிழ் சங்க இலக்கிய விருதுகளில் தரமான படைப்பாளிகளும் தேர்ந்த நடுவர்களும் இருந்து சிறப்பு சேர்த்தார்கள். கலந்த சில ஆண்டுகளாக அப்படி தேர்வு பெறுகிற நூல்கள் குறிப்பிடத்தக்கதா இல்லை என்று நான் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல அவர்கள் கோபித்துக் கொண்டார்கள்.
அவர்களை கோபம் தொடர்ந்து கொண்டிருக்கிறது
ஆனால் நல்ல சூழலுக்கான அங்கீகாரம் என்பது குறைந்து கொண்டிருக்கிறது என்பது வருத்தம் தான்.
30 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த இந்த பழைய விஷயம்.,
பிறகு ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த புதிய உள்ளூர் விஷயம் நடக்கட்டும் என்று ஒரு ஆறுதல் தான்.. அதனால் தான் இதை நிராகரிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை.
150 மாணவ மாணவிகள் வரிசையாகப் போய் விருது பெற்ற பின்னால் அந்த வரிசையின் தொடர்ச்சியாக எழுத்தாளர்களும் நின்று விருது பெற்றது எழுத்தாளர்களுக்கு பெருமை தருவதாக இல்லை .
உங்கள் நூலகத்தின் ஓரவஞ்சனை
உங்கள் நூலகம் செப்டம்பர் இதழ் நேற்று நூலகத்தில் கண்டேன் பல ஆண்டுகளாக எனக்கு பிரதிகள் வந்து கொண்டிருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக பிரதிகள் வருவதில்லை ஆயிரக்கணக்கான பிரதிகளை இலவசமாக அனுப்புகிறார்கள் பிறருக்குத் தருகிறார்கள். அதுவும் புத்தக கண்காட்சி அரங்குகளில் அவை வீணாகி பலர் கையில் எடுத்துச் செல்வதை சாதாரணமாக கண்டிருக்கிறேன். அவையெல்லாம் வியாபார நோக்குடன் தரப்படுகிறது என்று நியாகம் சொல்கிறார்கள். ஆனால் எழுத்தாளர்களுக்கு பிரதி தருவதில் லாப நஷ்ட கணக்கு வந்துவிடுகிறது. இதை ஞாபகப்படுத்தி சில மின்னஞ்சல் அனுப்புகிறேன். பதில் இல்லை. கறாராக இருந்தார்கள். கறார்..
இப்போது விஷயம் அதுவல்ல... சென்ற மாதம் நடந்த எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் விருது விழா பற்றியது . விருது பெற்ற நூல்கள் பற்றி அந்தந்த பதிப்பகம் சார்ந்த இதழ்களில் சிறப்பு கட்டுரைகளும் செய்திகளும் வெளியிட்டு இருக்கிறார்கள் உதாரணத்திற்கு பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தகம் பேசுகிறது இதழில் வீரபாண்டியனின் பரிசு பெற்ற நூலைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையும் புகைப்படங்களும் செய்தியும் வந்திருக்கின்றது.
இதே போல தமிழ் பேராயும் விருது பெற்ற பிற நூல்களைப் பற்றி சம்பந்தப்பட்ட அவர்களின் இதழ்களில் புகழ்ந்தும் விவரம் தெரிவிக்கும் நோக்கிலும் வியாபார நோக்கிலும் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ் பேராயும் விருது பெற்ற என் சி பி எச் வெளியிட்ட சுப்ரபாரதிமணியன் எழுதிய சிலுவை நாவல் பற்றி எந்த குறிப்பும் இந்த இதழில் இல்லை. முன் ஜாக்கிரதையாக நானே அந்த விழா பற்றிய குறிப்புகளையும் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தேன்.எச் சி பி எச் பதிப்பகத்திற்கும் தனியாக பரிசுத்தொகை இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும் தோழர் ரத்தின சபாபதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆனால் இந்த இதழில் அது பற்றிய எந்தவித செய்தியும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. உங்கள் பார்வையில் இருந்து விடுபட்டாலும் ஞாபகப்படுத்தலாம் என்று நான் அந்த செய்தியையும் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தேன். நிராகரித்து விட்டார்கள்.
உங்கள் நூலகம் ஆசிரியர் குழுவினர் இந்த நிராகரிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் படைப்புகளுக்கு உங்கள் நூலகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் அனுப்பிய ஐந்து கட்டுரைகள் எதுவுமே பிரசுரமாகவில்லை. அந்த ஐந்து கட்டுரைகளுமே என் சி பி எச் யின் புதிய வெளியீடுகள் பற்றியவை. ஞாபகப்படுத்தி திரும்பத் திரும்ப அவற்றை அனுப்பினாலும் அவை பிரசுரமாகவில்லை கடுமையான விதிமுறைகள் போல் இருக்கிறது.
அப்புறம் சமீபத்தில் பேட்டியில் வருகின்றன என்று ஒரு வாசகியை என்னுடைய பேட்டி ஒன்றை எடுத்து அனுப்பியிருந்தார் .அதை போடவில்லை அது பின்னால் பேசும் புதிய சக்தி இதழில் வந்துவிட்டது. அதனால் அதை போட வேண்டாம் என்று நான் கடிதம் எழுதி வடித்து விட்டேன். ஒரு முக்கியமான விருது பற்றிய செய்தியை என் சி பி எச் புத்தகம் விருது பெற்ற செய்தியை சின்ன குறிப்பாக போட ஆசிரியர் குழு விரும்பவில்லை.
ஆனால் சீனு ராமசாமியின் கவிதை தொகுப்பு பற்றிய பலபக்கங்கள் கொண்ட கட்டுரையை மீண்டும் பிரசுரம் செய்திருக்கிறார்கள் இந்த இதழில் . அது வேறொரு பத்திரிகையில் வந்தது என்பது இலக்கியவாசகர்களுக்கு நன்கு தெரியும். அப்படியெல்லாம் பக்கங்கள் வீணாகி உள்ளன ஆனால் என் சி பி எச் நூலுக்கு விருது சிறு துணுக்கு செய்தியை போட மனம் வருவதில்லை
இந்த போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு புத்தக கண்காட்சியில் புத்தக வெளியீட்டில் இடம் பெற்ற குறிப்பும் புகைப்படமும் இந்த இதழில் வந்துள்ளது. அதில் நான் போட்டிருக்கிற கலர் கலரான சட்டை பற்றி பல தோழர்கள் விசாரித்து தெரிந்து கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். அந்த புகைப்படத்தில் நான் இருக்கிற பகுதியை கூட வெட்டி இருப்பார்கள். பக்கத்தில் கோவை மேலாளர் ரங்கராஜ் இருப்பதால் அதை தவிர்த்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கோவை மேலாளர் ரங்கராஜன் எப்போதும் இப்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிற போது நெற்றியில் திருநீறும் வெள்ளை சட்டையுமாக போஸ் கொடுப்பார். ஈரோட்டில் வேலை அலைச்சலில் வியர்வை வழிந்து திருநீறு அழிந்து விட்டது.. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் கூட இந்த திருநீரும் வெள்ளை சட்டையும் கண்டிப்பாக இருந்து கொண்டிருக்கும். அவரின் பக்கத்தில் இருந்ததால் அதை வெட்டாமல் விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அவர் நெற்றியில் வெள்ளை திருநீறு அழுத்தமாகப் போடுவார். வெள்ளை சட்டை போடுவார். அமாவாசை, பௌர்ணமி பிரதோஷத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்புவார் ,நான் ஒரு முறை கடுமையாக இந்த பிரதோஷ, அமாவாசை வாழ்த்து செய்திகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவரிடம் பேசினேன். அதன் பின்னால் பிரதோஷ, அமாவாசை வாழ்த்துக்கள் நின்றுவிட்டது மற்றவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. அப்புறம் அவன் நெற்றியில் அழுத்தமான திருநீர் இருக்கும் அதை நான் விமர்சித்திருக்கிறேன். அவரின் வாழ்விடம் காரமடை. என் வீட்டு தெய்வம் குலதெய்வம் பெருமாள் தான். காரமடை பெருமாள் நாமத்தை அவர் போட்டால் கூட அவருடைய நெற்றிக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்.நான் என் வீட்டினர் போடும் சனிக்கிழமை நாமம், பூணூல் இவற்றைப் போடுவதில்லை. கோவிலுக்குச் செல்வதில்லை. ரங்கராஜ் அவர்களுக்கு நாமம் இன்னும் பொருந்தும். இதெல்லாம் பண்ண வேண்டியிருக்கு தோழர் என்பார்.
அவரின் நியாயமான உழைப்பு நெகிழ வைப்பது
அதேபோல அவர் இது போன்ற கலர் சட்டைகளை நான் போடக்கூடாது என்று ஈரோடு புத்தகச் சந்தையில் தடை விதித்தார். உங்கள் வயதிர்குத் தகுந்த மாதிரி வெள்ளை சட்டை போடுங்கள் என்றார். . நான் அப்படித்தான் இந்த வெள்ளை மினிஸ்டர் ஒயிட் சட்டைகளுக்கு எதிராக இப்படி கலர் சட்டை போடுவேன் என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன்.
தோழர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் போட்ட வெள்ளை சட்டைகள் பல கிழிந்து நசிந்து இருந்தன. அவர் வேலை அலைச்சலில் அதை கவனிக்காமல் விட்டிருப்பார். அவருக்கு கூட இந்த கலர் கலரானஅழகான சட்டைகள் நான்கைந்து அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்
திருப்பூர் மாவட்டம் ஆரம்பித்து நாள், , மாதங்கள், வருடங்கள் ஓடிவிட்டன. திருப்பூரில் என் சி பி எச் ஷோரூம் விரைவில் சற்று தாமதமாக தான் தொடங்கப்படுவது பற்றி என் மகிழ்ச்சியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
வணக்கம்
சுப்ர பாரதி மணியன்