சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 அக்டோபர், 2024

October 2024 மாதம் பேசும் புதிய சக்தி இதழில் .. என் கட்டுரை உலகத் திரைப்படம் : ஜோன் ஆப் இண்ட்ரெஸ்ட் / . சுப்ர பாரதி மணியன் The zone of interest oct issue அந்த ராணுவ அதிகாரி குழந்தைகளுடன் ஆற்றில் குளிக்கப் போகிறார். குளித்துக் கொண்டிருக்கும் போது ஆற்றில் கருப்பாக சில குப்பைகள் போன்ற ஏதோ வருகிறது. குழந்தைகளின் உடம்பிலும் ஒட்டிக் கொள்கிறது. வீட்டிற்கு கூட்டி வந்து குளியல் அறையில் குழந்தைகளை நன்கு குளிப்பாட்டுகிறார் .அந்த குழந்தைகளின் உடலில் ஒட்டி இருக்கும் கருப்பு துகள்கள் யூதருடைய பிணங்களின் சாம்பல்கள் என்பது அவருக்கு தெரியும்.. அந்த யூதர்களின் உடல்கள் என்பதில் குழந்தைகள் கூட இருக்கலாம் என்பதும் அவருக்கு தெரியும். ஆனால் அவரின் அந்த குழந்தைகளுக்கு தெரியாது. அந்த ஆற்றையே ஒட்டி ஒரு பிரம்மாண்டமான மாளிகை இருக்கும். அதுதான் அந்த அதிகாரியின் வசிப்பிடம். அங்கு தான் மனைவியுடன் குழந்தைகளுடன் அவர் வசிக்கிறார். அந்த வசிப்பிடத்திற்கு அருகில் உயரமான சுவர்கள் கொண்டதான ஒரு இடம் இருக்கும். அது சிறைச்சாலை அங்கே யூதர்கள் மீது நாஜிக்கள் நடத்தும் பல கொடுமைகள் நடைபெறும். அவர்கள் எரிக்கப்படுவார்கள். விச வாய்வு கொண்டு கொல்லப்படுவார்கள். ஆனால் அதனுடைய எந்த சாயலும் இல்லாமல் இராணுவ அதிகாரியின் வீட்டில் ஆடம்பர நடவடிக்கைகளும் வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கும். உலகப்போர் பற்றிய படங்கள் யூதர்கள் மீதான வன்முறைகள், அட்டூழியம் ஆகியவற்றைப் பற்றி விலாவாரியாக பல படங்கள் சொல்லி இருக்கின்றன. அந்த படத்தின் தன்மை, அந்த கொடுமையின் விவரிப்பு எதுவும் இல்லாமல் அதே விஷயங்களில் அழுத்தமாக சொல்கிற தன்மையால் இந்த படம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த படத்தில் எந்த காட்சியிலும் அந்த சிறைச்சாலையோ அங்கு எரிக்கப்படும் மனிதர்களோ காட்டப்பட மாட்டார்கள். இது போன்ற முகாம்களில் 20 லட்சத்திற்கு மேற்பட்ட யூதர்களை விச வாயு செலுத்திக் கொண்டிருக்கிறது ஹிட்லரின் நாஜி அரசு. அந்த வேலை செய்கிற ஒரு ராணுவ அதிகாரியின் குடும்பம் பற்றியதுதான் இந்த கதை. இவர்கள் இப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை சொல்வதற்காக பின்னால் வரும் காட்சிகளில் செத்துப் போன யூதர்கள் விட்டு சென்ற செருப்புகளும் உடைமைகளும் குவிந்து கிடப்பதையும் இன்னொரு புறத்தில் அவர்களின் மண்டை ஓடுகளை கிடப்பதையும் சில காட்சிகள் காட்டும். அவ்வளவுதான். போர் சார்ந்த வன்முறையும் நாஜிக்கள் சார்ந்த வன்முறையும் பற்றி அழுத்தமான காட்சிகளை தந்து நிலைகுலைய வைக்காமல் இன்னொரு புறத்தை காட்டுவது இந்த படத்தின் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தின் திரைக்கதை வடிவத்தை பொறுத்த அளவில் வெவ்வேறு அடுக்குகளை கொண்டதாக இருக்கிறது. ராணுவ அதிகாரியின் வீடு, சிறைச்சாலையைச் சுற்றியிருக்கும் இடங்கள் என்றபடி.. சிறைச்சாலை நிர்வகிக்கிற ராணுவ அதிகாரி அந்த ஆடம்பர மாளிகையில சுகமாகவே இருக்கிறார். அந்த சிறைச்சாலையின் ராணியாக அவரின் மனைவி தன்னை பாவித்துக்கொண்டு மற்றவர்களிடம் வேலை வாங்குகிறார். அவரும் தன்னுடைய வேலையில் நல்ல பெயர் வாங்குகிறார். அப்படி சென்று கொண்டிருக்கும்போது தான் தலைநகரில் இருக்கும் ஒரு சிறைச்சாலைக்கு அவர் மாற்றம் செய்யப்படுகிறார். ஆனால் அவர் மனைவி அந்த ஆடம்பர வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார். கணவர் வேண்டுமானாலும் புதிய இடத்திற்கு வேலை சென்று விட்டு முடிகிற போது குடும்பத்திற்கு திரும்பலாம் என்று சொல்கிறார். புதிய நகரத்தில் சிறைச்சாலைகளை எப்படி புதிய முறையில் வடிவமைக்கலாம் எப்படி கொஞ்ச நேரத்தில் அதிகமானவர்களை கொல்லலாம் என்பது பற்றி தான் அந்த ராணுவ அதிகாரியும் தீவிரமாக சிந்தித்து செயல்பட அவருக்கு கட்டளை இடப்படுகிறது. ஐரோப்பிய முழுக்க யூதர்களை தேடித் தேடி கைது செய்து வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்ட இடங்கள், அவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எல்லோரையும் உயிரோடு வைத்திருக்க முடியாது. கொன்று போடும் திட்டத்தை நாஜி அரசு முடிவாக கொண்டு வந்து அந்த ராணுவ அதிகாரி அதை செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 2000 மனிதர்களை கொல்லும் திறனை இன்னும் அதிகமாக வேண்டும் .அவர்கள் சாம்பல்கள் காற்றில் கரைந்து போகும். அவனுடைய மரண ஓலங்கள் காற்றில் கலைந்து போகும். இதற்கான வசதிகளை, தொழில் நுட்பங்களை அவர் செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தப்படுகிறது. அவர் அதை செய்கிறா.ர் படம் முழுக்க இந்த சித்திரவதைகளை காண்பிக்காமல் மரணத்தின் அவலக் குரலை பயன்படுத்தி இருப்பது முக்கியமான உத்தியாக இருக்கிறது மெலிசாக காதுகளில் விழும் மரண ஓலம் என்பதும் எவ்வளவு மோசமாகவது என்பதை இந்த படத்தின் காட்சிகள் காட்டுகின்றன. இந்த படத்தை பற்றி சொல்கிறபோது இந்த படம் சமீபத்திய இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையை முன்வைத்து சொல்ல முயலும் விஷயங்களை ஒப்பிட்டு பலர் பேசுகிறார்கள். அதுதான் இந்த படத்தின் முக்கிய சிறப்பாக இருக்கிறது. போரை தவிர்த்த உலகம் மற்றும் மனித நேயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் எல்லா காலத்திலும் தேவையாக இருக்கிறது என்பதை படம் சொல்கிறது . சுப்ர பாரதி மணியன் 0