சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 அக்டோபர், 2024
சுற்றுச்சூழலை பாதுகாக்காவிடில் தண்டனைகள் தேவையா
சுப்ரபாரதி மணியன்
எங்கள் ஊர் நொய்யல் நதி மாசுபாட்டிற்கு காரணம் சாயப்பட்டறைகள்., சலவைப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவுநீர் மற்றும் சாயநீர் நதி நீரில் கலந்து சிரமப்படுத்துவது என்று தான் பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அதே நேரத்தில் வீட்டு கழிவுகளும், நகராட்சியின் வெவ்வேறு தொழிற்சாலை மற்றும் வீட்டுப் பயன்பாட்டில் இருந்து வெளியாகும் தண்ணீரும் எந்த வித சுத்திகரிப்பும் இல்லாமல் ஆற்றில் கலப்பதும் நொய்யல் மாசுபாட்டிற்கு முக்கியமான காரணம்.
இது மனிதர்களுக்கு பல வித வியாதிகளை கொண்டு வருகிறது வாழும் நல்ல சூழ்நிலை இல்லாமல் செய்து விடுகிறது.. பல நுண்ணுயிர்களை கொன்று விடுகிறது. நுண்ணுயிர்கள் இல்லாமல் செய்து விடுகிறது. இது நொய்யலுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல்வேறு நதிகளுக்கும் பொருந்துவதாகும் அப்படித்தான் பெரும்பான்மையான நதிகள் மாசுபட்டிருக்கிறன.
இந்த மாசுபாட்டை தடுக்க சட்டங்கள் இல்லையா... சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அதை கடைபிடிக்க சொல்லும் அரசு நிர்வாகம் சரியாக இல்லை. ஊழல் மிக்கதாக இருக்கிறது விதி மீறல்கள் என்பது சாதாரணமாகிவிட்டது. இந்த விதி மீறலை ஒரு சாதாரண பனியன் உற்பத்தியாளர் உள்ளூர் உற்பத்திக்காக சாயம் பெற்று அந்த சாய தண்ணீரை தெருவில் விடுவது அல்லது அங்குள்ள கழிவுநீர் போகும் இடத்தில் விடுவது என்பது சாதாரண அங்கு இருந்து இது ஆரம்பிக்கிறது. இது பின்னால் பெரிய சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும், வெளியேற்றும் சாய தண்ணீரில் அடர்த்தி அளவு அது சார்ந்த நடவடிக்கைகளையும் முக்கியமாக அமைதுது விடுகின்றன எனவே சாதாரண மக்களும் அவருடைய வாழ்க்கையும், தொழிலும் சிரமமாகின்றன. இந்த சூழலை எளிதாக்க சுற்றுச்சூழல் சார்ந்த சட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும் அதை கடைபிடிக்காதவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் தண்டனை அச்சம் தருகின்றது. வேறு தேர்வு இல்லை. நீடித்த முன்னேற்றம் சார்ந்த கூறுகளை அது கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரண மக்களின் வாழ்க்கையையும் தொழில் செய்வதற்கான சூழலையையும் கொண்டு வருவது அரசாங்கத்தின் முக்கிய நிர்வாகமாக இருக்கிறது .அதற்கு சற்று சூழல் சார்ந்த சட்டங்கள் உதவும் ஆனால் அந்த சட்டங்களை வெளிநாட்டில் அமல் படுத்துவது போல இங்கே அமல்படுத்துவதில்லை. முன்னால் சொன்ன மாதிரி சின்ன சின்ன விதி மீறல்கள் - வீட்டில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை கால்வாய்களும் வாய்க்கால்களும் நதிகளும் உள்வாங்கிக் கொள்கின்றன. இதில் ஆரம்பிக்கும் இந்த விதி மீறல்கள் பெரிய அளவில் கழிவுகளை அவர்களுக்கும் நிலத்தடி நீர் மாசுபட பூமிக்கும் கொண்டு வந்து விடுகிறது. ஆனால் இந்த சிறை தண்டனை சுற்றுச்சூழல் கெடுதல் செய்பவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று ஒரு குழு இருக்கிறது. அப்படி தண்டனை எல்லாம் வேண்டாம் அதிலும் குறிப்பாக சிறை தண்டனை இருந்தால் அதை எடுத்து விடுவது நல்லது என்று பலர் விரும்புகிறார்கள். எப்படி மரண தண்டனை கூடாது என்று விரும்புகிற வலியுறுத்துகிறவர்கள் இருப்பது போலவே சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் தண்டனை கொடுக்கப்படுவது சரியல்ல என்று சில மனித உரிமை மனிதர்களும் நினைக்கிறார்கள்.
ஆனால் இப்படி கழிவுநீர் தொழிற்சாலைகளில் இருந்தும் வீடுகளில் இருந்தும் வந்து நதிகளில் கலப்பது நதி நீரை மாசுபடுத்துவது என்பது பல இடங்களில் பூமி மாசடைந்து போகவும் நிலச் சரிவுகள் ஏற்படவும் காரணங்களாக அமைகிறது இதனால் சில நகரங்களுடைய போக்குவரத்து பாதிக்கப்படுகிற அளவு சாலைகள் பாதிக்கப்படுகின்றன. பனி உருகுதல், மேக வெடிப்பு, பெரிய அளவில் வெள்ளம், நிலச்சரிவு என பாதிப்புகளை பின்னால் இது கொண்டு வரும். இதற்கு உதாரணமாக இமயமலை பகுதியில் 7000 அடி உயரத்தில் இருக்கும் உத்தரகாண்டின் ஜோஷிபா நகரம். அங்கு இது போன்ற வளர்ச்சிப் பணிகள் அதிகமாகி நகரம் சீர்கெட்டு புதைவு பெற தொடங்கியது. அங்கே தேசிய அனல் மின் நிறுவனம் அமைந்து நீரும் மின் உற்பத்தி திட்டத்திற்கு உதவுகிறது. ஆனால் அதே சமயம் அது பேரழிவுக்கு முக்கியமாக காரணமாக இருக்கிறது நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று அங்கு பல தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டு சுரங்கத்தில் சாவது பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன .இமயமலையில் ஏற்படுகிற மாற்றங்கள் இப்படித்தான் மண் பாகங்களும் நகர பாகங்களும் புதையுண்டு போவதை சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
இந்த கழிவுகளை சேர்ப்பது என்பது இப்படித்தான் பூமியின் பாகங்களை புதை உண்டு போக வைக்கும். சாய கழிவுகளை தேக்குவதற்கு என்று ஒரு அணை திருப்பூர் பகுதியில் உள்ளது ஒரத்துவ பாளையம் அணை. ஆனால் இன்றைக்கு அந்த அணையின் கொள்ளளவும் அது தேக்கும் சாய தண்ணீரின் அளவும் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் அந்தப் பகுதி விவசாய மக்கள் அதெல்லாம் இல்லை இன்னும் இப்படியே தான் இருக்கிறது என்கிறார்கள். இவற்றைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் சட்டங்களில் சரியான திருத்தங்கள் தேவை என்று பல விவாதங்கள் எழுதுகின்றன. ஆனால் எந்த தண்டனையும் இல்லாமல் இந்த சட்டங்களும் திருத்தங்களும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பலர் விரும்புவது கூட வினோதமாக தான் இருக்கிறது.