சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 அக்டோபர், 2024

பாதரசம் எனும் நஞ்சு / சுப்ரபாரதிமணியன் மிகப்பெரிய பாதரச நச்சு ஆலை ஒன்று கொடைக்கானலில் பொதுவான சுற்றுச்சூழலை பாதித்தது. அதை 2000 ஆண்டுகளில் பெரிய விவாத பொருளானது. . அந்த பாதரச தொழிற்சாலை பற்றி ஆர்.பி அமுதன் அவர்கள் இயக்கிய ஒரு ஆவணத்தை படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.. இந்த ஆவண படத்தை ஒட்டி கொடி என்ற தனுஷ் நடித்த படம் கூட வெளியாகி இருக்கிறது ஆனால் இந்த படத்தில் (கொடி) பாதரசம் என்பதுபற்றிய அடிப்படையிலிருந்து சற்று விலகி நிற்க தனுஷ் என்ற அரசியல்வாதி மற்றும் பலியாடுகள், அரசியல் வித்தைகள் பற்றிய விரிவான படமாக அது அமைந்துவிட்டது ஈரோடு பசுமை இயக்கத்தைச் சார்ந்த ஜீவானந்தம், திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்ந்த பால் பாஸ்கர் போன்றோர் கொடைக்கானல் பிரச்சனையில் பல ஆய்வுகள் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கின்ற வகையில் பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டார்கள். வழக்குகளை எல்லாம் பதிவு செய்தார்கள் என்று ஞாபகம் . இது பற்றிய பதிவு இந்நூலில் இல்லை.. கொடைக்கானல் போகிற போது இந்த பாதரச தொழிற்சாலை பற்றிய விஷயங்கள் அவ்வப்போது உறுதி கொண்டே இருக்கும் அது என்ன அல்லது அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள் என்பது நினைவில் வந்து கொண்டே இருக்கும். அந்த பன்னாட்டு நிறுவனத்தின் பாதரச தொழிற்சாலை கொடைக்கானலை எப்படி விஷமாக மாற்றி விட்டது என்பதை பற்றி சாவின் பக்கம் சென்று வந்த பலரின் அனுபவ்ங்கள் இதில் உள்ளன.பேரா. வின்செண்ட் அவர்கள் மொழிபெயர்ப்பில் பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் பாதரசம் எனும் நஞ்சு என்ற நூலை வெளியிட்டு இருக்கிறது இதனுடைய மூலத்தின் ஆசிரியர் அமீர் சாகுல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகள் பத்திரிகையின் புலன் விசாரணையாளராக பணியாற்றியவர் கிரீன் பீஸ் இயக்கத்தினுடைய பரப்பாளராக இருந்தவர் அவர் எழுதிய நூலை இப்போதுதான் அந்த பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த தொழிற்சாலை சார்ந்த பிரச்சினைகள் தமிழ்நாடு அளவில் பெரிய பிரச்சனைகளாக மாறிக் கொண்டிருந்தன.அந்த சூழல் வீரிவாக இந்த நூலில் உள்ளன. கிரீன்பீஸ் என்ற அமைப்பு ஏற்படுத்திய ஆய்வுகள் இன்னும் உலக அளவில் இந்த பிரச்சினையை வெளிப்படுத்தினர். பாதரசிவம் மாசுபட்ட இடங்களில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்டது. அங்கே இருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறுகள், உணவு பொருட்களில் பாதரசம் சேர்ந்திருப்பது போன்றவையெல்லாம் பன்னாட்டு பத்திரிகைகளில் வெளிவந்து பலரின் கவனத்திற்கு உள்ளாகின 1980 களிலேயே இந்த பாதரசம் சார்ந்த உடல் நல குறைபாடும் சாவும் முதலில் நிகழ்ந்தன 1984 இல் முதல் சாவு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள் .பாதரச வெப்பமானங்களை உற்பத்திச் செய்யும் பிரம்மாண்டமாக அது ஓராண்டுக்கு முன்னால் தான் அங்கு தொடங்கியது. அதற்கு பின்னால் விரைவில் மரணம். இது மனிதர்களை மட்டும் பாதிக்கவில்லை குருவிகள் பிற பறவைகளையும் பாதித்த்து. கழிவுகள் எல்லாம் தெரு வழியில் கொட்டப்பட்டன. பாதுகாப்புடன் வந்து பலர் பரிசோதனை நடந்த போது தான் மக்களுக்கு அந்த கழிவு பொருட்கள் கிடப்பதை தெரிந்தது. முன்பு நல்ல வேலையை தரக்கூடிய தொழிற்சாலை என்ற அறிமுகத்தோடு பலருக்கு அங்கு வேலை கிடைத்தது ஆனால் தொடர்ந்து சுவாசக் கோளாறுகளும் உடல் சிரமங்களும் மக்களை சாவை எட்டச் செய்தது. நல்ல எலி பொறி ஒன்று தயாரியுங்கள் உலகம் உங்கள் வீட்டினை நோக்கி வரும் என்று அமெரிக்க கவிஞர் எமர்சன் சொன்னதாக ஒரு கூற்று உண்டு ஆயிரக்கணக்கான எலிப்பொறிகள் அமெரிக்க வரலாற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டன. எலிப்பொறிகளைப் போன்ற்உ மனிதர்கள் சாவுப் பொறியில் மாட்டிக் கொண்டார்கள்.. இந்த எலி பொறிகளில் சாதாரண மக்கள் மட்டும் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழக்கூடிய பழங்குடி மக்களும் பதிக்கப்பட்டதில் இருந்தார்கள். அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தபோது அவருடைய வேட்டையாடும் வாழ்க்கைக்கும் உடல் நலத்திற்கும் ஏதோ கேடு கேட்டு வந்து விட்டதை உணர்ந்தார்கள். குழந்தை போல் எண்ணியது தான் அது பாதரசம் என்பதை அவர்கள் அறிய தாமதம் ஏற்பட்டது ,பழங்குடி இனத்தவர்கள், உணவு சேகரிப்பவர்கள் பல நஞ்சினால் நரம்பு சிறுநீரகம் போன்ற கோளாறுகளால் பாதிக்கப்பட்டார்கள். அந்த பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களை பற்றி ஆய்வுகளும் நடந்தன. பறவைகளை, சிறு விலங்குகளையும் கூடவே பாதித்திருப்பதை பல ஆய்வுகள் சொன்னன. காற்றில் அல்லது நீரில் பாதரசம் பரவி பழங்குடி மக்களையும் சிறு விலங்குகளையும் கூட பாதித்திருந்தன. பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகள் பாதரச உலோகம் தாவர இலைகளில் சேர்க்கப்படுவதும் மனிதர்களை பாதிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே ஒட்டுமொத்த இயற்கை சூழலும் இதனால் பாதிப்பு அடைந்திருப்பது தெரியவந்தது .கொடைக்கானல் ஒட்டிய பல சோலை பகுதிகளில் கரடி சோலை பொதுச் சோலை போன்றவையும் முக்கியமானவை. அவற்றில் கரடிகளும் புலிகளும் அதிக அளவில் நடமாடிக் கொண்டிருக்கும் பகுதி என்பதால் அந்த பெயர் வந்தது. ஆனால் அவற்றின் அளவு குறைந்து போய் உல்லாச பயனுக்காக மக்களின் வருகைகள் அந்த பகுதியில் அதிகமாகின. அந்த பகுதி விலங்குகள் ஊரை விட்டுக்கு பயந்து ஓடிவிட்டன. கொடைக்கானல் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இடமாக அம்மலை மாறுவதற்கு நீண்ட காலம் பிடிக்க வேண்டி இருந்தது கொடைக்கானல் என்று மலைப்பகுதி மக்களுடைய வாழ்வாதாரக்காரர் இடமாக மாற பல ஆண்டுகள் பிடித்தன. இப்போது அந்த பழையப் போக்கை கொண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்க வேண்டி இருக்கும். இந்த காலகட்டத்தில் மக்களுடைய பாதிப்பும் எப்படி இருந்தது அந்த பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி மக்களை நிராகரித்தார்கள், பிற தொழிற்சாலைகள் புறக்கணிக்கப்பட்ட போக்குகளும் மிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதும் மலைப்பகுதி தீங்கு விளைவிப்பதும் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் கொடைக்கானல் பகுதியில் வந்து ஓய்வெடுப்பதற்கான இடமாக இருந்து. பின்னால் அதுவே பாதரசம் வெப்பமானி தயாரிக்கும் இடமாக அவர்கள் மாற்றுவதற்கான ஆதாரங்கள் எப்படி இருந்தன என்பதை இந்த நூல் சொல்கிறது. பாதரசத்திற்காக இடம் தேடி பல இடங்களில் நிராகரிக்கப்பட்ட பின் அங்கு வந்து அடைக்கலமாகி இருக்கிறது பன்னாட்டு நிறுவனங்கள். எம்ஜிஆர் ஒரு காலத்தில் திரைப்பட படப்பிடிப்புக்காக வந்து போயிருக்கிறார். பின்னால் அவரை இந்த தொழிற்சாலை தூங்குவதற்கான ஆயத்தங்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறார். அபூர்வமாக பூக்கக்கூடிய குறிஞ்சிப்பூ போல இங்கு வருகிற தொழிற்சாலைகள் மக்களுக்கு பயன்படும் என்று நினைத்திருக்கிறார்கள். குறிஞ்சித் தலைவன் முருகன் அவர்களையெல்லாம் காப்பாற்றுவான் என்று காலம் காலமாக வழிபடுகிறார்கள். ஆனால் பாதரசம் தந்த பாதிப்புகள் முதலில் சிறுநீர் தொல்லையாக ஆரம்பித்து உடம்பு முழுவதும் இயங்க முடியாமல் செய்திருக்கிறது. இதில் கணிசமான பெண்களும் பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் பெண்களை இந்த தொழிற்சாலை வேலையில் எடுக்காமல் தவித்து இருக்கிறார்கள் என்பதும் முக்கியம் வெப்பமாணி கழிவுகள் மூட்டைகளாக வெளியே கிடத்தப்பட்ட போதும் அவை பரவிய போதும் மக்களுக்கு அதன் ரகசியம் தெரியவில்லை ஆனால் அவர்களை உடல் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலை வந்த போதுதான் தொழிற்சாலையின் அபாயத்தை உணர்ந்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். மகன் பாதரச மதிப்பால் சாகிறான் தந்தை தன் ஆதாரங்கள் எல்லாம் இழந்து விட்டு கதறுகிற காட்சியொன்று இங்கு விவரிக்கப்பட்ட்தில் மனம் தடுமாறியது பெண்கள் ஆண்களுடைய சாவை பார்த்து திகைத்துப் போகிறார்கள. ஆனால் அவர்களுக்கு காரணம் தெரியவில்லை. காரணம் தெரிகிற போது அவர்களை சிறு சிறு நிவாரணம் கொடுத்தும் மருத்துவ உதவி கொடுத்தும் அந்த பன்னாட்டு நிறுவனம் தவிர்த்து விட்டது ஆனால் உயிரைக் கொடுத்தவர்கள் பலர் . அங்கு வேலை செய்ய வேண்டி இருப்பதை அவர்கள் தவிர்க்க முடியவில்லை உயிரை விட்ட பிறகு தான் அதெல்லாம அவர்களுக்கு தெரிய வருகிறது இந்த விவரங்களை எல்லாம் இந்த நூலில் பேராசிரியர் வின்சென்ட் அவர்கள் அழகான மொழி பெயர்ப்பால் தந்திருக்கிறார். இந்த பகுதி பற்றிய சில தவறான கருத்துகள், தவறான செய்திகள் பற்றி குறிப்பீடு செய்து இந்த நூலில் எழுதி இருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பவர் வெறுமனே மொழி சார்ந்து மட்டுமல்லாமல் இதுபோல இருக்கிற தவறுகளை சுட்டிக்காட்டியும் அந்த பிரதியை திருத்துவது எவ்வளவு முக்கியமான கடமை என்பதை பேராசிரியர் நிரூபித்திருக்கிறார். அவருடைய எளிமையான மொழிபெயர்ப்பு மனம் கனக்கச் செய்கிற ஒரு பெரிய விஷயத்தை சுலபமாக மனதிற்குள் கொண்டு சென்று விடுகிறது.. ஜீவா, பால் பாஸ்கர் போன்றோர் இந்த பணிகள் குறித்து மேற்கொண்ட முயற்சிகளை இந்த நூல் எதுவும் சொல்லவில்லை அதேபோல ஆர்பி அமுதன் போன்றோர் இயக்கிய ஆவணப் படங்கள் பற்றி கூட எதுவும் சொல்லவில்லை ஆனால் அதை இந்தியன் ஏரின் ப்ரோ பீச் என்று அதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்கள். பல தரவுகளை முன் வைத்து எழுதப்பட்டிருக்கிற இந்த புத்தகம் விரிவாக கொடைக்கானல் மக்கள் பாதரச பாதிப்பால் சிரமப்பட்டு இருப்பதை பற்றி சொல்கிறது ஆனால் தமிழக அளவில் இதற்காக போராடிய மக்கள் பற்றிய அணுகுமுறை போராட்டங்கள் பற்றி குறிப்புகள் இந்த நூலில் இல்லாமல் இருக்கிறது ( ரூ 450 எதிர் பதிப்பகம், பொள்ளாச்சி வெளியீடு