சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 அக்டோபர், 2024
“ என்றும் காந்தியம் “ சுப்ரபாரதிமணியன்
இன்றைய கவிதை உலகம் சூரியனுக்கு கீழ் உள்ள சகலத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கிற சாதி அதிகாரம், தொழில்நுட்ப அதிகாரம் பற்றியும் கவிதை உலகம் விமர்சிக்கிறது..
வார்த்தைகளின் கூட்டமாக பல கவிதைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஆனால் கவிதை பற்றிய அரசியலும் அதன் தளங்களும் கொண்டு இயங்குகிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன.. நையாண்டி தனம் என்பது இன்றைய கவிதையின் முக்கியமான விஷயமாக எனக்கு படுகிறது படைப்பாளன் வாசகன் இரண்டு பேர் இணையும் விஷயங்கள் தான் வெற்றி பெற்ற கவிதைகள் ஆகின்றன.
. கவிதைகளில் பலம் தினசரி வாழ்க்கையின் அனுபவங்களை, அதிர்வு கொண்ட விஷயத்தை இணைப்பதுதான்.. கிராமங்களும் அதன் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களும் மெல்ல மெல்ல அழிந்து விட்டன.. பெரும் நகரங்களையும் நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடப்பெயர்வைப் பற்றி இன்று நாம் அதிகமாக எழுதுகிறோம்.. மனித சிந்தனை கொண்டுள்ள நினைவாற்றல் தன்மை அளப்பரியது. இந்த நினைவாற்றல் தன்மையை மனதில் கொண்டு பலர் நினைவுகளை திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். ஆனால் மனித வாழ்வியல் சார்ந்து கைபேசி கொள்ளும் வீட்டு சூழலுக்கும் தனி வாழ்ச்க்கையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.. இந்த முடக்கப்பட்ட தன்மையைக் கூட கவிதையில் சிறப்பாக கொண்டு வருகிறார்கள். உழைப்பாளி தன்னுடைய பெரும்பாலும் நகர வாழ்க்கையோ கிராம் வாழ்க்கையோ தான் இருந்த இடம் இழந்ததின் வேதனையையும் இயங்க வேண்டிய இயக்கத்தையும் கொண்டு செல்கிறார் .அப்படித்தான் பலருக்கு காந்தியும் சார்ந்த இயக்கம் பற்றிய கனவு இருக்கிறது. அதை கவிதை மொழியில் கொண்டு வருகிறார்கள். மண்ணும் நிலமும் அரசியலும் இதற்குள் எல்லாம் வந்திருக்கிறது. இந்த கலவைதான் ஒரு அற்புதமான கவிதை உலகத்தை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது
காந்தியம் என்பது அவருடைய வாழ்வு தொலைநோக்கு பார்வை போன்றவற்றை குறிக்கிற சொல்லாக அமைந்திருக்கிறது. வன்முறை அற்ற உலகம் என்பது அவருடைய கனவாகக் கூட இருக்கிறது. அவருடைய பங்களிப்பு சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதை பற்றி திரும்பத் திரும்ப அலசப்படுகிறது காந்தியின் கருத்துக்கள் மக்களுக்கு என்ன அர்த்தம் தருகின்றன அவை எதிர்காலத்தில் வழிகாட்டுதலுக்கு எப்படி உதவுகின்றன என்பதை பற்றி எல்லாம் நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்கள் காந்தியும் அரசியல் மற்றும் சமூகம் அல்லாத தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை அனுபவங்களும் கூடுகிறது இங்கு கவிதிஅயில் . காந்தியம் என்று எதுவும் இல்லை அதை நான் விட்டுச் செல்லவில்லை அப்படி ஒரு கொள்கையோ கோட்பாடு இல்லை. என் வாழ்க்கையில் உண்மையான அனுபவங்களை சொல்ல முயற்சித்தேன் அவை பழமையானது என்று காந்தியடிகள் கூட சொல்கிறார். இந்த பழமை வாய்ந்த காந்தி சார்ந்த தத்துவ விஷயங்கள் இன்றைக்கு எப்படி பயன்படுகின்றன அவை எப்படி தேவை என்பதை பற்றிய பல சர்ச்சைகள் உள்ளன. அந்த சர்ச்சுகளை நாம் இந்த கவிதைகள் மூலம் தேடிப் பார்க்கலாம் தமிழ் கவிதை பற்றியும் காந்தியும் பற்றியும் சில அபிப்ராயங்களை மனதில் கொண்டுவர இந்த தொகுப்பு உதவும். அதேபோல இந்த கவிதைகளை நீங்கள் படிக்கிற போது கவிதை பற்றியும் காந்தியம் பற்றியும் பல்வேறு அபிப்ராயங்களும் உருவாகும். அவற்றை நீங்களும் யோசிக்கவும் தொகுப்புரை செய்யவும் இது ஒரு வாய்ப்பு
வாழ்த்துக்கள்
சுப்ரபாரதிமணியன் திருப்பூர்