சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 அக்டோபர், 2024
’ரேகை’, நாவலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக “நல்லி திசைஎட்டும் விருது-2024”–ஐப் பெற்றவர்.
மொழியாக்கமும் நானும் :-பேரா. ராம்கோபால்
வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை! மூல நூலின்
ஆன்மாவை, வாசகர் தரிசிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்! அதற்காக, வரம்பிற்கு உட்பட்டு,
மூலத்தின் ஆன்மாவை சிதைக்காமல், சில மாற்றங்களை மொழியாக்கம் செய்பவர், செய்வதில் தவறு
இல்லை என்றே நான் நினைக்கிறேன். மொழியாக்கம் செய்யப்பட்ட நூலைப் படிக்கும் வாசகர், மூல
நூலின் ஆசிரியர்பால் ஈர்க்கப்பட்டு, அவரின் பிற நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் அவரின்
உள்ளத்தில் முளைவிட வேண்டும். அதற்காக, அந்த மொழியைக் கற்க வேண்டும், என்ற பேராவல்
வாசகர் மனதில் கிளைவிட வேண்டும் என்பதைக் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறேன்.
இதற்காக, மூல நூலின் படைப்பாளிக்கும், வாசகருக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க, என்
மொழியாக்கங்களில் என்னால் முடிந்தவரை முயன்றிருக்கிறேன்.
அதற்காக, சில சமயம் ’எதிர் வினை’ களையும் எதிர்கொண்டிருக்கிறேன். அவ்வாறு எதிர்
வினையாற்றுபவர்களுக்கு, என்னுடைய ஒரே பதில்: ’ஒரு படைப்பாளி தன்னுள் இருக்கும் தாகத்தை
தணித்துக் கொள்ளவே ஒரு
படைப்பைப் படைக்கிறான்! ஆனால், ஒரு மொழியாக்கம் அப்படி அல்ல: அது ஒரு பரந்த வாசகர்
வட்டத்தை அடைவதற்காகவே செய்யப்படுகிறது.
அவ்வாறில்லையெனில், ஒரு நூல் மொழியாக்கம் செய்யப்படுவதின் நோக்கம்
தான் என்ன? உப்புசப்பற்ற, வாசகரை காத தூரம் ஓட வைக்கும் விதத்தில், மொழியாக்கம் செய்வதால்
யாருக்கு, என்ன பயன்? பேகன், ஹெமிங்வே, சுஜாதா, போன்ற ’நடைக்’ கென்றே அறியப்பட்ட
எழுத்தாளர்களின் படைப்புகளை மொழியாக்கம் செய்யும் போது, அந்த நடையை மொழியாக்கத்தில்
கொண்டுவர வேண்டியது அவசியம்! மற்றபடி, அங்கங்கே, சில ’அத்துமீறல்களை’ச் செய்வதில் தவறு
இல்லை என்பது என் கருத்து!
என்னுடைய இந்தக் கருத்து ’சரி’யென்று நான் மொழியாக்கம் செய்த நூல்களைப் படித்த வாசகர்கள்
சொல்லியிருக்கிறார்கள்! என்னுடைய மொழியாக்க நூல்களைப் படித்த போது சற்றும் சலிப்பே
வரவில்லை, என்று பல நண்பர்கள்
சொல்லியிருக்கிறார்கள். ஒரு வாசகர், தமிழிலிருந்து, நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த, பவா.
செல்லதுரையின் நூலைப் படித்துவிட்டு, என்னிடம்
கேட்டார், “யார் இந்த பவா செல்லதுரை? He must be a very good writer!” இந்த வாசகர்,
அந்தக் காலத்திலேயே, மும்பை ஐ.ஐ.டி-ல் படித்தவர். கப்பல் கட்டும் துறையில் மிக உயர்ந்த பதவி
வகித்தவர். சங்க இலக்கியம் மற்றும் ஆங்கில
1
இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் உள்ளவர்! ஆனால், கல்கிக்குப் பின்னான தமிழ் படைப்புகளைப் பற்றி
அவ்வளவாகத் அறியாதவர். இவர், என் மொழியக்கத்தைப்
படித்துவிட்டு, பவாவைப் பற்றி விசாரிக்கிறார் என்றால், எனக்கு அதைவிட வேறென்ன வெகுமதி
வேண்டும்?
“Fidelity to the original can coexist with creativity,” என்று சமீபத்தில் மறைந்த மொழியாக்க
முன்னோடிகளுள் ஒருவரான பேரா.க.செல்லப்பன் குறிப்பிடுகிறார். மொழியாக்கத்தில் மூன்று நிலைகள்
இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். மூலப் படைப்பும், மொழியாக்கமும் ஒன்றுடனொன்று
செம்புலப்பெயல் நீர் போலக் கலந்திருப்பது முதல் நிலை! அமெரிக்கக் கவிஞன் இராபர்ட் ஃப்ராஸ்ட்
சொல்வதைபோல், “less than two but more than one,” என்று மொழியாக்கம் செய்பவர் உணர்வது
இரண்டாம் நிலை!
“நான் பேச நினைத்தையெல்லாம் நீ பேச வேண்டும்!” என்று படைபாளி சொல்வதை மொழியாக்கம்
செய்பவர் உணர்ந்து, உள் வாங்கி, மொழியாக்கத்தில் ஈடுபடுவது இறுதி நிலை!
ஆனால், இது, நெருப்பாற்றின் மேல், கத்திமுனையில் நடனமாடும் காரியம்! அதுவும், மொழியாக்கம்
செய்பவருக்கு, கொஞ்சம் படைப்பாற்றலும் இருந்துவிட்டால், அவன் பாடு பெரும் பாடு! ஒரு புறம்
அவன் கற்பனை கொதிக்கும், மறபுறம் அவன் அறிவு அதை, ‘அடக்கு அடக்கு’ என்று கடிவாளம்
போடும்! இரண்டுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டு அவன், இருதலைக்கொள்ளி எறும்பாகத்
தவிக்க வேண்டும்!
பல சமயங்களில், மூல நூலில், ஆசிரியர் மிகச் சுலபமாக ஒரு சொல்லை எழுதியிருப்பார்.
மொழியாக்கம் செய்யும்போது, அதற்கு நிகரான சொல் கண்ணாமூச்சி காட்டும்! சரியான சொல்
கிடைக்கப் பல நாட்கள் தவமிருக்க வேண்டிய நிலையும் ஏற்படும்! கண்ணாமூச்சி காட்டிய சொல்,
திடீரென்று, கனவில், பிரயாணத்தின் போது, ஏன் கழிவறையில்கூட, காட்சி தரும்! அப்பொழுது,
கிடைக்கும் பேரானந்தத்தில், இறை நம்பிக்கை உள்ளோர் இறைவனைக் காண்பர்; இல்லாதோர்
இறும்பூது எய்துவர்!
நான் மொழியாக்கம் செய்து, எனக்கு ஆதம திருப்தி அளித்த நூல் தீரமிக்க இந்தியர்கள்! ஆங்கில மூல
நூல், INDIA’S MOST FEARLESS எழுதியவர்கள்
SHIV AROOR AND RAHUL SHINGH.
தமிழில் வெளியிட்டோர் எழுத்து பிரசுரம், ஜீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை.
2
இந்திய வீரர்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பேசும் இந்த நூல்களை மொழிபெயர்த்த
போது, பல இடங்களில், நான் கண்
கலங்கியிருக்கிறேன்! முதல் படியைப் படித்துப் பார்த்த என் மனைவியும் கண்கலங்கினார். படித்துப்
பார்த்தால், நீங்களும் கண் கலங்குவீர்கள்!
இந்த நூல்களை வாங்கிப் படியுங்கள்! அவற்றில்லுள்ள வீரர்களின் கதைகளை உங்கள்
குழந்தைகளிடமும், மனைவியிடமும், நண்பர்களிடமும் கூறுங்கள்! திருமண விழாக்களின் போது,
மணமக்களுக்குப் பரிசாக அளியுங்கள்! முடிந்தால், நம் இராணுவ வீரர்களின் உதவி நிதிக்கு நிதியளித்து
உதவுங்கள்! கூகுளில் தோடினால், ‘லிங்க்’ கிடைக்கும்! ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை
நான் இந்த நிதிக்கு அனுப்பி வருகிறேன் என்பதை மகிழ்ச்சியுடனும், மிக்க பணிவுடனும் தெரிவித்துக்
கொள்கிறேன்!
உங்கள் கனிவான கவனத்திற்கு இன்னுமொரு வேண்டுகோளை!
நானும், என் மனைவியும் உடல் தானத்திற்கு சம்மதக் கடிதம் கொடுத்திருக்கிறோம்! நீங்களும்
உடல்தானம் செய்வதைப் பற்றி யோசியுங்கள்! உங்கள் உடல் தானம் அரசு மருத்துவக் கல்லூரிகளில்
படிக்கும் மாணவர்கள் சிறப்பாக மருத்துவம் கற்கப் பேருதவியாக இருக்கும்!
நிற்க, எவ்வளவுதான் சிரமப்பட்டு மொழியாக்கம் செய்தாலும், படைப்பாளிகளும், பதிப்பாளர்களும்
மொழியாக்கம் செய்பவனை மதிப்பதே இல்லை! அவன், என்றும் வாடகைத் தாய்தான்! பல
சமயங்களில், அவன் பெயர்கூட முன் அட்டையில் இடம் பெறாது! அவனைப் பற்றிய குறிப்பும் இடம்
பெறாது! இன்னும் சொல்லப்போனால், சில சமயம், மொழியாக்கம் செய்தவருக்கு
அறிவிக்கப்படாமலேயேகூட, அவன் மொழியாக்கம் செய்த நூல் வெளியிடப்படும் அவலமும்
நடப்பதுண்டு! அந்த வலியை நான் இரண்டு முறை அனுபவித்திருக்கிறேன்! ’ராயல்டி’(?)- –அதைப்பற்றி
பேசாதிருத்தலே நலம்! The less said the better!
திரு. சுப்ரபாரதிமணியன் மட்டும் இதற்கு விதிவிலக்கு! நான் அவருடைய நூல்கள் சிலவற்றை
மொழிபெயர்த்திருக்கிறேன்! ’வேலை’ முடிந்ததும் உடனே சன்மானம் அளித்து விடுவார், நூல் அச்சில்
வருமா, வராதா என்பதைப் பற்றி,
கவலைப்படாமல்! அவர் ஓர் அபூர்வப் பிறவி! (’கையிலே காசு வாயிலே தோசை’!)
மொழியாக்கத்தின் வலிகளையெல்லாம் அனுபவித்து, அவமானங்களால் அங்குமிங்கும் உதைபட்டு,
நான் மனம் வெதும்பி எழுதிய கவிதை:
பிரசவம்
படைப்பாளிக்கு
சில படைப்புகள் சுகப்பிரசவம்!
சில கத்திப் பிரசவம்!
மொழிபெயர்ப்பாளனுக்கோ
எல்லாமே கத்திப் பிரசவம்,
மயக்க மருந்தில்லாமல்!
அவன் வேதனை யாரறிவார்…
தெய்வம் போல் மனைவி மட்டுமே அறிவாள்!
நன்றி! வணக்கம்!
ராம்கோபால் (தொடர்புக்கு: 9965412116)
பி.கு. கட்டுரையாளார், என்னுடைய ’ரேகை’, நாவலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக “நல்லி திசைஎட்டும் விருது-2024”–ஐப் பெற்றவர்.
Thanks subrabharathi. I have heard about you. Thanks for the encouragement.