சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 அக்டோபர், 2024

சந்திரகுமாரின் புதிய நாவலை முன் வைத்து.. சுப்ரபாரதிமணியன் அரசியலூடான இலக்கியப் பிரதி நாவலாக.... அரசியல் அற்ற இலக்கியப் பிரதிகள் அல்லது அரசியல் நீக்கம் பெற்ற இலக்கியப் பிரதிகளை சர்வ சாதாரணமாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உணர்வும் அக்கறையும் கொண்ட இலக்கியப் பிரதிகள் அரிதாகிக் கொண்டிருக்கின்றன ஆனால் சந்திரகுமார் அவர்களுடைய இலக்கிய பிரதிகளில் அரசியல் சார்ந்த உணர்வுகளும் எழுச்சிகளும் தவறாமல் இருந்து கொண்டிருக்கும் கொரோனா கால சூழலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலில் அரசியல் சார்ந்த விஷயங்கள் நாவல் முழுக்க ஊடுருவிக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் அரசியல் விஷயங்களுக்கு உள்ளாக ஓடும் மனித உணர்வுகளை சந்திரகுமார் அவர்கள் இந்த நாவலின் மையமாகக் கொண்டிருக்கிறார். அவரின் தன் வரலாற்று நாவலில் .ஒரு பகுதி எனலாம். அவர் தன்னையும் தன்நிலையையும் எப்போதும் மறைத்துக் கொண்ட மனிதர் அல்ல. தன்னை நிர்வாணமாக்கி கொண்டு காட்டிக் கொண்டே இருப்பவர். அவருடனான அரசியல் ஈடுபாடும் அக்கறையும் பிரிக்க முடியாது .இது இந்திய பொதுவுடமைக் கட்சி, அது சார்ந்த தொழிற்சங்கங்கள் , மக்களை செயல்பாடுகள் ஆகியவை இணைந்தது. இந்த வகையில் அவரின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் இந்த இலக்கியப் பிரதியை அணுகுவது சுகமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு உலக அரசியல் பற்றி அறிந்து கொண்டு வாழ்க்கையின் சில அனுபவங்களை பார்ப்பது என்ற கோணம் இதில் கிடைக்கும். தான் சார்ந்த குடும்ப உறவுகள், கட்சி சார்ந்த தொடர்புகள் அனுபவங்கள் ஆகிவற்றை கொரோனா கால சூழல் மையமாகக் கொண்டு இந்த நாவல் இயங்குகிறது. வட மாநில தொழிலாளருக்கான துயரங்கள் குறிப்பாக ஒரு வட மாநில பெண்ணின் பிரசவம் சார்ந்த சிரமங்களோடு இந்த நாவல் ஆரம்பிக்கிறது உயிரியல் போர் துவக்கப்பட்ட பின்னால் மக்கள் எப்படி தங்களை காத்துக் கொள்ளும் போர் வீரர்களாக செயல்பட வேண்டும் என்ற பரிசோதனை வெற்றிகரமான இந்த நாவல் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாவல் இறுதியின் வருகிற சுதந்திர விழா கொண்டாட்டம் கூட வேண்டாம் என்று அந்த கொரோனா சூழலில் அரசாங்கத்தால் வலியுறுத்தப்படுகிறது. அவர் சார்ந்த ஆட்டோ ஓட்டும் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடே இது போன்ற விழாக்கள் சாதாரணம். தங்களின் சுதந்திரம் மற்றும் கருத்துரிமையை சார்ந்து வெளிப்பாட்டுக்கான ஒரு களமாக இது இருக்கிறது. அது கூட கொரோனா சூழ்நிலையில் தவிர்க்க வேண்டியதாயிருக்கிறது. ஓருல அரசின் விசுவாசம் மிக்க பிரதிகளா நாம் அல்லது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அனுபவத்தில் வாழ்ந்தாலும் அந்நியமாக்கப்பட்டவர்களா என்ற கேள்வியுடன் இந்த நாவல் முடிகிறது. தன் வரலாற்றின் ஒரு பகுதியாக கொரோனா கால சித்தரிப்புகள், குடும்பத்தார் சூழலில் எல்லா அனுபவ கூறுகளும் இங்கே முன்வைக்கப்படுகின்றன. இந்த கொரோனா கால சூழ்நிலை பற்றி தோழியர் ஜீவா சத்யமங்கலம், கோவை அரவிந்தன், மும்பாய் புதிய மாதவி போன்ற நண்பர்களின் படைப்புகளை படித்திருக்கிறேன்.. நிறைய இலக்கியப் படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. முடக்க காலத்தை நினைவில் இருந்து அகற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த நாவலில் அதை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறார்.. அரசியல் வினைகள் தரும் அச்சமும் எதிர்பார்ப்பும் வாழ்க்கையின் பாதுகாப்பின்மையும் இந்த நாவலில் வெளிப்படுகிறது. . முதல் அத்தியாயத்தில் தென்படும் வடநாட்டுப் பெண்ணின் பிரசவம் மற்றும் அடையாள அட்டைக்காக கேமரா முன் சரியாக நிற்க வேண்டி இருக்கிற சூழல்கள் வேதனைக்குறியவை. வீட்டு வளர்ப்பு கோழியாகட்டும் ஆடாகட்டும் நாய்களாகட்டும் இவை மனித உறவுகளுடன் கொள்ளும் நேசமும் அவற்றிற்கு ஏற்படும் அசவுரியங்களும் ஒன்றோடு ஒன்று இணைத்து கொள்வதும் அவசியமாக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் பார்த்த பிரசவம் என்று பத்திரிகையில் தலைப்படப்பட்டு கவனிக்கப்படுகிற வடநாட்டுப் பெண்ணின் பிரசவம், அந்த குழந்தையின் பிறப்பு சார்ந்த அனுபவங்களும் விவரிப்புகளும் ஒரு புதிய உறவு சார்ந்த மகிழ்ச்சியும் பக்க பக்கமாய் மனித நேயத்துடன் விரிகிறது அரசியல் பிரமுகர்கள், இலக்கிய நண்பர்கள், எழுத்தாளர்கள் சாதாரணமாக கதையில் கதாபாத்திரங்களாக வந்து போகிறார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்க அவளை புதைக்கும் சடங்குகளில் நடைபெறும் சம்பவங்கள் மனதை உருக்குகின்றன. இப்படி புதிதாக குழந்தை பிறப்பு, வேறு கர்ப்பிணியின் சாவு சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது .உலகம் முழுக்க கொரோனா தந்த பாதிப்புகளும் அது சார்ந்த கிருமியின் விபரீதங்களும் பிரேசில் நாடு முதல் சீனா உட்பட பல நாடுகளின் பின்னணியில் எடுத்து சொல்லப்படுகிறது. உலக அரசியல் நடவடிக்கைகளும் அது சார்ந்த இடதுசாரி அரசியல் கோணங்களும் விரிவாக அலசப்படுகின்றன. இலவச உணவுக்காகவும் மக்கள் கையேந்தி நிற்கிறார்கள் பொதுவுடமை இயக்கம் சார்ந்த செயல்பாடுகளில் இலவச உணவு உபயோகிப்பது கூட சாதாரணமாகி விடுகிறது. இந்த ரீதியில் அலையும் நாய் போன்ற விலங்குகளுக்கான உணவுகள் விநியோகமும் தாராளமுமாகச் சொல்லப்படுகிறது. சந்திரகுமாரின் அரசியல் பணிகள் சாதாரண மக்களோடு இயங்குவது முதற்கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை வரைக்கும் பல வகையில் இருக்கிறது .அவரின் மகள் ஜீவாவின் தொழிற்சாலை நடவடிக்கைகளும் அவருடன் இணைந்து கொள்கின்றன. . கைபேசி கல்வி, தகவல் சந்தை , இணைய சந்திப்பு ஆகியவை எப்படி காலத்தின் கட்டாயமாகிவிட்டன என்பதையும் கொரோனா சூழலில் விளக்குகிறார் இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாய தலைப்புகளும் ஒவ்வொரு விதமான கதை சொல்லும் தன்மையில் இருக்கின்றன. கவித்துவத் தலைப்புகளும் கூட அவை. ஆட்டோ வேலை இல்லாத சிரமங்களும் , மகளின் புகைப்பட பணி பாதிப்பும் கட்சி சார்ந்த உதவி நடவடிக்கைகளும் விரிவாக சொல்லப்படுகின்றன. கொரோனா சூழல் முன்வைத்த வைத்திய முறை மட்டுமல்லாமல் பாரம்பரியமாக காப்பாற்றப்படும் சிகிச்சைகள் பற்றிய அக்கறை நாவல் முழுக்க கூட்டணியாக விரவிக் கொண்டிருக்கிறது. வாழ தகுதியற்றதாக வாழ்க்கை மாறிவிடுகிறது. விளிம்பு நிலை மக்கள் அதிகாரத்துவ சூழலின் வெறும் பொம்மைகளாக வேண்டியிருக்கிறது இந்த சூழலில் அவர் எழுத்தாளர் என்ற வகையில் கோபம் வெளிப்படுகிறது. புத்தக கண்காட்சிக்கு போகும் அனுபவங்களும் அவருக்கு வாய்க்கிற எழுத்தாளர் வாசகர் நிலையும் பல வகையில் சொல்லப்படுகிறது அதுவும் இலக்கிய நண்பர்களும் அரசியல் நண்பர்களும் கதாபாத்திரங்களாக சாதாரண நிகழ்வுகளிலும் வந்து போகிறார்கள். அவற்றில் அறிஞர் ஞானியினுடைய மரணமும் அவர் சார்ந்த நற்பண்புகளும் விரிவாக சொல்லப்படுகிறது இதில் நண்பர்களின் பங்களிப்பு நட்பு சார்ந்த நடவடிக்கைகள் விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. இயக்குனர் தங்கம் போன்றவர்களுடைய நட்பும் ஈடுபாடும் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் அரசியல் சார்ந்த கருத்துரைகளுக்கான முக்கியத்துவத்தை கொண்டு இருக்கின்றது. இது சந்திரகுமாரின் தனித்துவமான குரலாகிறது இது தமிழக சூழலில் மட்டும் இல்லாமல் கேரள சூழ்நிலை முன்வைத்தும் சொல்லப்படுகிறது திரைப்பட உலகம் சார்ந்த அவரின் அலுவல்கள் தமிழ் மனம் சார்ந்த வேதனைகளும் பிற மொழி இயக்கங்களுடன் ஒப்பிட்டுச் சொல்லப்படுகின்றன. கொரோனா காலத்தை கட்டச் சூழலை மையமாக கொண்ட இந்த நாவலின் ஒரு சுமார் மூன்று ஆண்டுகள் அவரின் அனுபவ பகிர்வுகளை தன் குடும்பம் மற்றும் சமூக சூழ்நிலை முன்வைத்து நம் உடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர்களின் அரசியல் நடவடிக்கைகளில் இலக்கியப் பகிர்வும் ஒரு வகை பங்களிப்பு செய்கிறது.. ஒரு சரியான அரசியல்வாதி உள்ளார்ந்த இலக்கியவாதியாகவும் இருப்பார் என்பார்கள். அதேபோல் ஒரு சரியான இலக்கியவாதி உள்ளார்ந்த அரசியல் உணர்வு கொண்டவராகவும் இருப்பார் என்பதை சந்திரகுமார் தொடர்ந்து நிருபித்திருக்கிறார் தன் வாழ்க்கைப் பயணத்தில் அவரின் இலக்கியப் பயணத்தில் அவரின் ” லாக் அப் “ நாவல் ”விசாரணை “ என்ற படமானதும் அதன் நாவல் வடிவம் பல்வேறு மொழிகளில் வெளிவந்திருப்பதும் அவரின் நடிப்பு பலதிரைப்படங்களில் மிளிர்வதும் மகிழ்ச்சியானது. ,. அவரின் தொடர்ந்த சமூகப் பங்களிப்பை இந்த நாவல் இலக்கியப் பிரதியும் உறுதி செய்கிறது. சுப்ரபாரதி மணியன். ( 9486101003)