சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 அக்டோபர், 2024
SUBRABARATHIMANAIAN’S 3 Novels –based on Hyderabad.
The celebrated Tamil writer Subrabarathimanian was living in Hyderabad
for about eight long years1984-92 . He penned three novels during his stay in
Hyderabad. All these three works have now been made into an anthology
and ready for sale. His first novel ‘’Matrum silar ‘’ (Few more ones) is a
fiction on those migrants settled in Hyderabad, journeyed from the village
Chinnalapatti, Madurai. The story was about a Hindi teacher who had lost
her job in Tamilnadu and deprived of the best source of survival whilst the
non-Hindi agitation was vigilant. It was also about the conflicts of the
Tamils living in Hyderabad as there was a widespread unrest due to the
Telengana struggle. It has been listed in the Tamil classics series and
popular publishers like Marudha, Narmadha and Discovery have all brought
out this work earlier.
Nakaram 90 (the city 90) was another work that deals with the then inner
political turmoil within the congress party, which had witnessed changes in
the posting of the chief minister in the same rule. It was also about a time
that provided grounds for religious intolerance and bigotry ,resulted into
much unrest. This work was given the best novelette Air India–Kumudam award, with a trip to
UK and European countries in the 90s.
Chudu manal(hot sand)was another novel that depicted the violence unleashed on the Tamils
living in Hyderabad ,whenever the water sharing issue between the states arise and politically
debated. This novel is a stark criticism of the national question in sharing natural resources. This
work has found its rendering in Malayalam and English versions with 16 editions in Tamil.
These works stand as archetypes of migrated livings and helpless citizens in a non-native
setting. The lives of the Tamils from the year 1960 to 95 have been recorded here in all his works
with an ambiance and deals with the estrangement of the Tamils in national, political situations.
He has taken a leaf out of the books of Asokamithran ,the Tamil writer who tried to bring out the
predicaments of a non-native in another linguistic state (Hyderabad)through his short fictions
and in his novel 18 –Atchayak kodu (18 th latitude).
( This volume has now been published by Kavya Publications –Chennai –price Rs 480/.—From The Hindu Tamil . Nalkappian )
Awards and recognitions:
Published 110 books including 25 novels
He has won the Katha award for best short fiction –personally received it from the president.
Government of Tamil nadu’s best novelist award and many such awards.And translation award for 2023 with cash Rs 2 lakh
Best novel award from Ezhuthu trust 2020 –awarded with a cash prize of Rs 100,000/
Bookish Award from the Sharjah international Book Fair 2021
S R M Tamil Perayam—Puthumaip Pithan best novel award 2024 –Rs 1,00,000 cash prize.
Of late, his novel “Siluvai ‘—a mega novel with 1000 pages has been published in this year and widely acclaimed for its historical account.
SUBRABHARATHIMANIAN/ R P Subramanian சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB
kanavu subrabharathimanian tirupur
Subrabharathimanian palaniasamy
------------------------------------------------------------------------------------------------------------------------------
Mail:
subrabharathi@gmail.com
rpsubrabharathimanian@gmail.com
0
அரை நூற்றாண்டு இலக்கிய இயக்கம் / சுப்ரபாதிமணியன்
திருப்பூரின் இலக்கிய முகம் சுப்ரபாதிமணியன். அவரது கதைக்களங்கள் தமிழ்நாட்டை தாண்டி விரிந்தவை என்ற போதும் ஒரு செயல்பாட்டாளராக திருப்பூர் அவரது எழுத்து இயக்கமும் மேற்கொண்டது . அவசர காலகட்டத்தை பற்றிய சுதந்திர வீதியில் என்ற சிறுகதையிலிருந்து நவீன இலக்கியத்தில் அவரது பயணம் தொடங்கியது. இதுவரை 110க்கும் மேற்பட்ட நூல்கள், இடைவிடாத கனவு சிற்றிதழ் வெளியீடு என்று தனிநபர் இயக்கமாக வெற்றிகரமாக புலிவால் பிடித்துக் கொண்டிருப்பவர். தமிழ் இலக்கிய சூழலில் நவகால அரசியல் குறித்து தொடர்ந்து உரையாடி வருவோர். கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவரின் நேர்காணல்களை பொன் குமார் தொகுத்துள்ளார். ஒளிவட்டங்களை தவிர்க்கும் சுப்ரபாதி மணியன் தனது கருத்துக்களை இயல்பாக பகிர்ந்து கொண்டு உள்ளார். சமூக பாதுகாப்பு இல்லாத தொழிலாளர் முறையே கொத்தடிமைத்தனம் என்ற நோக்கில் இருந்து திருப்பூரின் வளர்ச்சியைஅவர் பார்க்கிறார். இட ஒதுக்கீடு, தாய் மொழி கல்வி, சூழலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். மனசாட்சியோடும் சமூகப் பொறுப்பணவோடும் இங்குவது தான் எழுத்தாளின் வெற்றி. இலக்கியத்துறையில் பீடாதிபதிகள் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றன சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் நூலை முன் வைத்து .சே இளவேனில் ( புலிவாலை பிடித்த கதைகள் சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் தொகுப்பு நூல் தொகுப்பு பொன் குமார்.Tamil hindu review
அந்த நூலை முன்வைத்து தமிழ் இந்து இதழில் எழுதி இருப்பது
0
ஹைதராபாத் நாவல்கள்
சுப்ரபாரதி மணியன் ஹைதராபாத்தில் 8 ஆண்டுகள் 1984-92 வசித்தவர். .அவர் அந்த அனுபவங்களை அப்போது மூன்று நாவல்களாக வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த மூன்று நாவல்களும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது.
அவரின் முதல் நாவல் “ மற்றும் சிலர் “ மதுரை சின்னாளபட்டியில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த, திமுக ஆட்சி காலத்தில் இந்தி ஆசிரியர் பணியை இழந்த ஒருவரை பற்றியக் கதை. ஐதராபாத் வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் தெலுங்கானா போராட்ட பின்னணியையும் கொண்ட நாவல்..தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் இடம்பெற்றது. முன்பு நர்மதா, மருதா, டிஸ்கவரி ஆகிய பதிப்பகங்கள் இதை வெளியிட்டுள்ளன.
“ நகரம் 90 “ என்ற நாவல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது அங்கு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிரிவுகள் செய்த குழப்பங்கள் அதன் மூலமாக அடிக்கடி முதலமைச்சர் மாறிக்கொண்டிருந்த சூழல்.. அப்படியான சூழலில் மத கலவரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை மாற்றிய மோசமான ஒரு காலம் இருந்தது., மதக்கலவரம் மூலமாக முதலமைச்சர் பதவியை கைப்பற்றி சாதாரண மக்களை பதவிக்காக பலி கொண்ட அரசியல் கலவரச் சூழலை பற்றிய நாவல் இது .. குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கிய போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுப்ரபாரதிமணியன் செல்லும் வாய்ப்பை தந்த நாவல்.
“ சுடுமணல் “ மூன்றாவது நாவல். தேசியம் என்பது மாயம் என்பதை நிரூபிக்கும் வகையில் தண்ணீர் பிரச்சனை வருகிற போதெல்லாம் தமிழர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் வேறு மாநிலச்சுழலில் அந்நியமாக்கப்படுவதும் பற்றிய அனுபவங்களை ஹைதராபாத் பின்னணியில் எழுதியிருந்தார்., இந்த நாவல் பதினாறு பதிப்புகள் வெளியாகி இருப்பதும் மலையாளம்,, ஆங்கிலத்தில் மொழியாகி இருப்பதும் சிறப்பாகும்.
இந்த மூன்று நாவல்கள் மூலமாக சுமார் 1960-95 ஆண்டுகால ஹைதராபாத் தமிழர்களின் வாழ்க்கையை இந்த நாவல்களில் சுப்ரபாரதிமணியன் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. வேற்று மாநிலச் சூழலில் தமிழர்களின் அந்நியமாதல் சூழலை விவரித்துள்ளது.
அசோகமித்திரன் அவர்களின் சிறுகதைகளும் 18 ஆவது அட்சக்கோடு போன்ற நாவல்களும் ஹைதராபாத் தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில் அமைந்தவை.. அவற்றை சுப்ரபாரதிமணியனின் இந்த நாவல்களின் முன்னோடியாகக் கொள்ளலாம்
( ரூபாய் 480 காவ்யா பதிப்பகம் வெளியீடு சென்னை ) -பெரம்பலூர் காப்பியன் Tamil Hindu Daily
0
சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.
இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்:
2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது.
இவரின் 1000 பக்க நாவல் “ சிலுவை “ சமீபத்தில் வெளிவந்துள்ளது NCBH .
சிலுவை நாவல் இவ்வாண்டின் எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்ஹ்டன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது.
திருப்பூர் சிறுகதைகள்/ சுப்ரபாரதிமணீயன்
தொகுப்பாசிரியர்
பொன் குமார் விலை ரூபாய் 300 ( 95787 84322 )
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகளை மாவட்ட வாரியாக தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறார் சேலம் பொன் குமார் அவர்கள். உழைப்பும் பணச் செலவும் கொண்டது. பெருமை கொள்ளத் தக்கது.
இந்த்திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும் சொல்கிற கதை ..
0
அம்பிகா குமரன் கதை திருப்பூர் சென்னை என்று இரண்டு தளங்களில் பயணப்படுகிறது குடும்ப சூழ்நிலையில் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறுவது என்று நுணுக்கமான சில விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார். கடைசியில் அலைகள் வந்து கரைதொட்டு செல்லும். அலைகள் வித்யா மனதிலும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்குகிறது வித்தியா கண்ணீரால் கணவனை திட்டத் தொடங்கியிருந்தாள் என்று முடிகிறது இந்த கதை அப்படித்தான் மனதில் அலையாய் வந்து அடித்துக் கொண்டிருக்கிறது.
0
இத்தொகுப்பில் உள்ள பெண் வலிமையானவள் என்ற கதை எழுதி இருக்கிறார் தீபன். பத்திரிகையாளர் புகைப்பட கலைஞர் கவிதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறார். வழக்கமாக அவருடைய கதைகளில் விளிம்பு நிலை மக்களும் தாழ்த்தப்பட்ட சாதி சார்ந்த மக்களும் இருப்பார்கள். இக்கதையிலும் பெண்களின் வாழ்க்கை பல்வேறு மடங்கு வறுமையும் பாலியல் சீண்டலும் சமூக சூழ்நிலையால் புறக்கணிக்கப்பட்டதும் என்று இருப்பதை பல சம்பவங்கள் மூலமாக காட்டுகிறார். அது அவரின் தனித்துவத்திற்கு இந்த ஒரு கதை.சான்று
0
ரத்தினமூர்த்தி அவர்களின் அப்பாவின் நிழல் கதை திருப்பூர் சூழலில் மையமாகக் கொண்டிருக்கிறது. திருப்பூரின் வேலை சூழலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு இன்மையும் பற்றியும் பேசுகிறது ஆனாலும் எனக்காக இந்த வாசல் எப்போதும் திறந்து இருக்கட்டும் என்ற நம்பிக்கையோடு முடிக்கிறார். அவரின் ஒரு சிறுகதை தொகுப்பு இந்த தலைப்பில் உயிர் மெய் பதிப்பகத்தை கூட வெளியிட்டு இருக்கிறார்கள் உடல் நலக்குறைவு என்ற காலகட்டத்தில் இருந்து விலகி இப்போது தேறிவரும் ரத்தினமூர்த்தி அவர்களுக்கு இந்த தொகுப்பில் இந்த கதை இடம்பெற்று இருப்பதும் அதுவும் நீண்ட ஒரு கதை இடம்பெற்று ஒரு போதும் ஆறுதலான விஷயமாகத்தான் இருக்கும். அவருக்கு ஆறுதலாக இனிமேல் எல்லாம் நடக்கும் வரை எழுதுவார்.
)
0
குழந்தைவேல் அவர்களின் படைப்புகள் தொடர்ந்து கவனத்தில் கொண்டவை என்பது முக்கியம் இவர் சமீபமான சில ஆண்டுகளாக சுயநினைவு இல்லாமல் வாழ்ந்து வருகிறார், 80 வயதிற்கு மேல் இருக்கும். ஆனாலும் அவருடைய நாவல்களில் வருகிற வால்பாறை மின் தொழிலாளர் பற்றிய பிரச்சனைகளும் அவர்களை சிறுவர்கள் என் மதிப்பதும் , பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கைகளும் மிகவும் நம்பிக்கை தருவது.
0
)
இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கோதை மணியன், வெண் புரவி, குணசுந்தரி என்ற எழுத்தாளர்கள் பெயர்கள் கேள்வி படாத இருக்கிறது இதைப் பற்றி தொகுப்பாளர் பொன் குமார் அவர்கள் தகவல் தந்து உதவலாம்.
0
கிணற்றில் குதித்தவர்கள் என்ற என் ஸ்ரீராம் கதை குறிப்பிடத்தக்க கதை. கொங்கு பகுதி சார்ந்த நிலவியலை மிக அழகாக வழக்கமாக அவர் கதைகளில் கொண்டு வந்து விடுபவர் இந்த கதையில் வரும் கிணறு ஒரு படமமாகவே மனதில் பதிந்து விடுகிறது அவரின் முத்திரையை அழுத்தமாக பதிந்திருக்கும் ஒரு கதை
0
இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் வீடு சுகந்திசுப்பிரமணியன் கதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கதை வெளிவந்த சமயத்தில் அசோகமித்திரன் அவர்கள் இந்த கதை பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். வெகுவாகப் பாராட்டினார். பெண்ணின் இருப்பும் பாதுகாப்பின்மையும் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். பெண்ணுக்கு வீடு என்பது ஒரு பாதுகாப்பான இடம் வாடகை வீடு என்பது தவிர்த்து சொந்த வீடு கனவு ஒரு பெண்ணுக்கு இருப்பதை இந்த கதை சொல்கிறது,
0
இராசிந்தன் சிறுகதை சிறப்பானது திருப்பூரில் ஒரு மழை பெய்த நாளில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த பலர் மதுபான கடையின் சுவர் இடிந்து விழுந்து இறந்து விட்டார்கள் அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு அந்த தொழிலாளர்கள் குடும்பங்களைப்பற்றியும் துயர சம்பவத்தையும் சிந்தன் அவர்கள் இந்த கதை விவரித்து இருக்கிறார்.
இந்தத் தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும் சொல்கிற கதை ..
0
சுப்ரபாரதிமணீயன், திருப்பூர் கிருஷண், கே என் செந்தில் உட்பட 28 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
0
திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பாசிரியர்
பொன் குமார் விலை ரூபாய் 300 ( 95787 84322/
வேரல் புக்ஸ் சென்னை வெளியீடு
0
எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.. ஒரு பிரபலமான.. அதிகம் பணத்தை கொண்டு வந்து சேர்த்த ஒரு சிறுகதையை தேடிப்பிடித்து ...
அந்த எழுத்தாளரையும் ஏஜெண்டையும் தேடிப்பிடித்து ..
அனுமதி வாங்கி
அனுமதிக்காகப் பணத்தைக் கட்டி அதை தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறார்.
அந்தி மழை அதை வெளியிட்டு இருக்கிறது முத்துலிங்கம் அவர்களுடைய அபூர்வமான பணியில் இந்த பணியும் சேர்கிறது வாழ்த்துக்கள் ஐயா .சுப்ரபாத்திமணியன்
வெளியீடு
திருப்பூர் சிறுகதைகள் நூல் அறிமுகம்
Pen : சென்ற ஆண்டின் ஆஸ்கர் விருது பெற்ற குறும்படங்களில் இது ஒன்று.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் தற்கொலை உணர்வு அதிகமாய் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள்.. பல மன அழுத்தங்கள் காரணமாக அவர்கள் இந்த நிலைக்கு செல்கிறார்கள். தங்களை இந்த நிலையிலிருந்து தங்களை மாறுபடுத்தி தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பல ஊடகங்கள் உள்ளன. கலை இலக்கியம், ஓவியம் என்ற பல விஷயங்களை மனதில் கொள்ளலாம்.
. இந்த படத்தில் வருகிற சிறுவன் பத்தாவது கிரேட் படிக்கிறவனாக இருக்கிறான். அவன் ஆரம்பக் காட்சியில் ஒரு பெட்டிக்கடையில் ஒரு பழுப்பு நிற பேனா ஒன்றை வாங்குகிறான் அதை வைத்துக்கொண்டு அவன் ஓவியங்கள் வரைகிறான் கணக்கு பாடங்களை எழுதுகிறான். இது தொடர்ந்து காட்டப்படுகிறது.
. அவன் ஆற்றங்கரை ஓரமாக, தனி இடங்களில் உட்கார்ந்து பாடத்தை தவிர ஓவியங்களும் வரைகிறான்.
அவன் முன்பே இரண்டு முறை தேர்வில் தோல்வியடைந்தவன் ஆகவே அவனைப் பார்க்கிற மற்றவர்களும் அவன் இந்த முறை தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறார்கள் அவருக்கு கொஞ்சம் பயமாய் விடுகிறது. மூன்றாவது முறையும் தான் தோல்வியடைந்தால் என்ன ஆகும் என்ற ஒரு பயம்... இந்த பயம் அவனை உலுக்கிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் பேனா அவனுக்கு துணையாக இருக்கிறது. அதன் மூலமாக ஓவியங்களும் வெளிப்பாட்டு முயற்சிகளும் இருந்து கொண்டே இருக்கிறது. கடைசியில் அவன் தோல்வியுற்று வருவான் என்று நம்பி தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். தற்கொலையில் இருந்து தப்பிக்க பக்கத்தில் இருக்கிறவர்கள் உதவுகிறார்கள் .
இதனுடைய அடுத்த நிலையாக படம் ஓராண்டு கழித்துச் செல்கிறது படம். அவன் தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்து விட்டான். இப்போது ஓர் ஓவிய கண்காட்சியில் அவன் ஓவியங்களெல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன பலர் வந்து போகிறார்கள். சிலர் ஓவியங்களை விலைக்குக் கேட்கிறார்கள் சில விற்று விட்டதாகச் சொல்கிறான். தற்கொலை முயற்சி மீறி, தன் படிப்பை மீறி அவன் தனக்கு பிடித்த அந்த ஓவியக்கலையில் வெற்றி பெறுவதை இந்த படம் சொல்கிறது
நதிக்கரை, பூக்கள், பேனா புத்தகத்திலிருந்து நழுவுதல், கைவிடாதே உன் முயற்சியை என்ற குரல்கள் .. சங்கடப்படுத்துகின்றன.
அம்மாவிற்கு அவன் எழுதும் கடிதம்இன்னும் சங்கடப்படுத்துவது. அம்மா என்னை மன்னித்து விடு என்ற உருக்கம்.
அவன் தற்கொலை முயற்சியின் போது சிதறிக்கிடக்கும் பலஓவியங்கள். அதைப் பின்தொடர்ந்து சென்று அவனை அடையும் முதியவள். அவனைக்காப்பாற்றல்.
அவன் நினைவில் தகிக்கும் எழுத்தாளர்கள் சார்லஸ் டிக்கன்ஸ் போல்.. சாதனையாளர்கள் விஜய் தண்டூல்கர் போல்..
அதேபோல இந்த படத்தின் காட்சிகளில் மற்றும் இறுதியில் வருகிற குறிப்புகள் மூலமாக இந்தக் கால இளைஞர்கள் தற்கொலை எண்ணங்களுக்கு சென்று கொண்டிருக்கிற செய்திகளையும் சொல்கிறார்கள். கலை இலக்கியம் சார்ந்த ஈடுபாடு தற்கொலையிலிருந்து மீட்டெடுப்பதை இந்த படம் சொன்னது.
இணைய ஆற்றுப்படை / முனைவர் மு. இளங்கோவன் நூல் அறிமுகம் சுப்ரபாரதிமணியன்
கற்றான் ஒருவன் அது கற்க விரும்புவானை ஆற்றுப்படுத்துதல் இணைய ஆற்றுப்படையாம். அந்த வகையில் .இணையம் சார்ந்த தொழில்நுட்ப செய்திகளையும் வரலாறுகளையும் தமிழில் பதிவு செய்துள்ளது இந்த நூல்.
ஆற்றுப்படை என்பது பல்வேறு வகைகளில் அர்த்தம் சொல்லப்படுவது பொருள் பெற்ற ஒருவர் பொருள் பெற செல்வோர் பெயரில் அமைப்பதாக ஆற்றுப்படை கேள்விப்பட்டிருக்கிறோம்.. முருகனை ஆற்றுப்படுத்தாமல் முருகனிடத்து ஆற்றப்படுத்துவதாக அமைந்திருப்பதும் உண்டு.. ஞானியர் ஆற்றுப்படை என்பது ஞானி யாரை ஆற்றுப்படுத்தாமல் ஞானியாரிடம் ஆற்றுப்படுத்துதல் என்ற கருத்திலும் பாடி உள்ளார்கள்.
. அப்படித்தான் இணைய ஆற்றல் என்பது இங்கே முடிவாக உள்ளது. இணையத்தின் சிறப்புகளை சொல்லி அதனை கற்றும் அறிந்தும் பயன்பெற பல வகைகள் சொல்லப்பட்டுள்ளன.. தமிழகத்தின் நிலம் சார்ந்த விசயங்கள், அதன் சிறப்புகள், வளம், பெருமை யாவும் நினைவு கூறப்பட்டுள்ளன.
நூலின் இறுதியில் தமிழ் இணையத் தொழில்நுட்பத்தை தமிழில் வழங்க வேண்டும் என்று உழைத்த பெருமக்கள் பற்றிய குறிப்புகள் நிகழ்காலத் தன்மையுடன் வைக்கப்படுகின்றன. சரியான கவுரவம் அவர்களுக்கு.
. முன்பே ஆற்றுப்படை நூல்கள் சிலவற்றை எழுதி பயிற்சியை ஆழமாக்கிக் கொண்டவர் முனைவர் மு. இளங்கோவன். உலகப் போக்குகளை உள்வாங்கிக் கொள்ள தமிழ் அறிஞர்கள் தாய்மொழியான தமிழிலும் உலகப் போக்குகளை நிலை பெறச் செய்யும் முயற்சியில் முனைந்தனர். அது பல சாதனைகளை செய்துள்ளது. கணினி, இணையம் இல்லாத உலகம் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை. அந்த உலகத்தில், இணையத் துறையின் செயல்பாடுகளை பற்றி இந்த நூல் சொல்கிறது. இந்த ஆற்றுப்படையை 563 பாடல் அடிகளில் அமைந்திருக்கிறார் தொழில்நுட்ப வரலாறு மரபு வடிவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ் இணையத்துக்கு பங்களித்தோர் என்ற விவரங்களில் முனைவர் அனந்தகிருஷ்ணன், நா கோவிந்தசாமி முதற்கொண்டு காலடி நாகராஜன், தகவல் உழவன் வரைக்கும் சிறப்பானப் பங்களிப்பைச் செய்தவர்கள் பற்றியக் அறிமுகக் குறிப்புகளை இந்த இந்த ஆற்றுப்படை அமைத்திருக்கிறது. தமிழில் இணைய முயற்சிகளின் பல்வேறு பரிமாணங்களில் ஒரு வகையை இது சிறப்பாக சுட்டி காட்டி இருக்கிறது.
இந்த 563 அகற்பா வரிகளின் அனுபவங்களை, சொல்லாட்சியை அகற்பா பற்றி தெரிந்தவர்கள் முழுமையாக நன்கு ரசித்து உணரலாம். மற்றவர்களுக்கும் கணினி, இணையம் சார்ந்த விபரங்களுக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்குகிறது.
( பக்கங்கள் 48, விலை ரூ 100, வயல் வெளி பதிப்பகம், இடைக்கட்டு, அரியலுர் 612901 - 944420 29053 )
( முன்னுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டது, வேறு கருத்துக்கள் இடம் பெறவில்லை )
தாமுவின் சற்றே நீளமானக் குறுங்கதைகள்
மலையாளத்தில் இப்போதெல்லாம் குறுங்கதைகள் நிறைய வருகின்றன. குறுங்கதைத் தொகுப்புகள் நிறைய வருகின்றன என்று நண்பர் வலச சுகுமார் அவர்கள் சமீபத்தில் தெரிவித்தார் அவரின் குறுங்கைகளும் சில தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த தாமு அவர்களின் கதைகளை குறுக்கதைகள் என்று சொல்ல முடியாது ஒரு பக்க கதைகள் தான். ஆனால் இந்த கதைகளில் இருக்க கூடிய சமூக விமர்சனம் ஆழமானது. வழக்கமாக ஒரு பக்கம் கதைகள் அல்ல இவை. விமர்சனம் கதைகளில் வரும் சிறப்பம்சங்களும் இதில் உண்டு. ஆனால் அதை மீறி கிண்டலும் கேலியும் சமூக விமர்சனமும் முக்கியமாக இருக்கிறது. கவிதையை தாஜ்பால் என்ற பெயரில் எழுதுகிற இவர் கதைகளை தாமு என்ற பெயரில் எழுதுகிறார். ஒரு நண்பர் கூட இது என்னமோ இந்து பெயராக இருக்கிறது என்றார் தா. முகமது என்பதை தான் அவர் தாமு என்று போடுகிறார் அவரின் கேலியும் கிண்டலும் நகைச்சுவையும் முக்கியமானவை என்று படுகிறது. சில இடங்களில் வாய் விட்டுச் சிரித்தேன்... சுப்ரபாதி மணியன்
இலக்கிய ஒளிக்கீற்றின் தெளிவைப் பரவலாக்கும் முயற்சிகள்
’வதைபடுதலும், குழம்பிக் கலங்குதலும், முட்டி மோதுதலும், பிழை புரிதலும், தொடங்குதலும், தூக்கியெறிதலும், மறுபடியும் தொடங்குதலும், மறுபடியும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போராடுதலும், இழப்புக்குள்ளாதலும், வாழ்வின் இன்றியமையா பண்புகள். மன நிம்மதி என்பது ஆன்மாவின் இழி நிலைப் பண்பு’’
– லேவ் தல்ஸ்தோய்
0
.ஆன்மாவின் அலைவுறுதலை இலக்கியம் பிரதிபலிக்கிறது. அந்தப் பிரதிபலிப்பு மனித அனுபவங்களிலிருந்தே வாய்க்கிறது.. அந்த அனுபவங்கள் நமக்கு வாய்ப்பவை. நம்மை வந்து சேர்பவை.
இந்த அனுபவங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள் எங்கே இருக்கின்றன என்று அடையாளம் காட்டுபவை திருமதி பவள சங்கரி அவர்களின் படைப்பு ஆய்வுகளும் தொகுப்பு முயற்சிகளும்.
அதை இந்த நூலில் ஒரு கதை மூலமாக இப்படி அவர் விளக்குகிறார்.
0
ஒரு முறை ஒரு
சிறுமியும் ௮வள் தந்தையும் கடல் கரையில் உலாவிக் கொண்டிருந்தனர்.
அழகான சிப்பியொன்றை அச்சிறுமி கண்டு, ஆவலுடன் எடுத்துத் தன்
காதருகில் வைத்துக்கொண்டாள். அப்போது அவள் அதுவரை கேட்டிராத
ஒரு வேறுபட்ட ஒலி அந்தச் சிப்பியிலிருந்து வருவதை உணர்ந்து
வியப்புற்றாள். அவள் முகத்தில் பரவசமும் மகிழ்ச்சியும் நடம்புரிந்தன.
சின்னஞ்சிறு அந்தச் சிப்பியின் ஒலிகள் வியக்க வைத்தன. அந்த ஒலிகள்
மென்மையாய் இனிமையாய் இருந்தன. மற்றொரு நூதன உலகிலிருந்து
அவை வருகின்றன என்று நினைத்தாள் அவள். அந்தச் சிப்பி தான்
வாழ்ந்து வந்த கடல், உலகிலுள்ள மூடு மந்திரங்களை நினைவிற்குக்
கொண்டுவந்து மீண்டும் அவற்றை மெல்ல மிழற்றுவதுபோல் தோன்றியது.
அவற்றின் மாய இன்னிசையிலே அச்சிறுமி பிணைப்புடன் மகிழ்ச்சியுற்றுக்
கேட்டு, தந்தையுடன் செல்வதையும் மறந்து விட்டாள். முன்னே சென்று
கொண்டிருந்த தந்தை திரும்பி வந்து தன் மகளின் செயலைக் கண்டவர்,
சிப்பியினின்று வரும் ஒலியின் ரகசியத்தை விளக்கத் தொடங்கி அதில்
அவ்வாறு ஒலி கேட்பது புதுமையன்று என்றார். காதிற்கு எட்டாத பல
மெல்லொலிகளைச் சிப்பி தனது வெண்மையான வரிகளிலே அகப்படுத்தி,
பளபளக்கும் உட்குழிவுகளிலே கணக்கற்ற எதிரொலிகளின் உள்
அரவத்தை நிறைத்து வைத்திருக்கிறது எனக் கூறினார். சிப்பியின் வழியாக
வந்த ஒலிகள் ஒரு நூதன உலகில் தோன்றி வருவன அல்ல; இந்தப் பழைய
உலகில் உள்ளவையே. ஆனால் அவற்றின் நிரம்பிய இசையினிமையை
ஒருவரும் கவனித்துக் கேட்டதில்லை. இவ்வாறு கேளாதன கேட்ட
காரணத்தாலேயே, சிறுமி வியந்து ௮தில் ஈடுபட்டாள். இவளது அனுபவம்
ஒருவகை; இவளது தந்தையின் அனுபவம் வேறு வகை. இவைபோன்ற
இரண்டு அனுபவங்கள் இலக்கியக் கல்வி நிகழும்பொழுது நமக்கு
ஏற்படுன்றன. சுவை நுகர்ச்சியைப் போலவே தலைசிறந்தது
இலக்கியத்தைப் பகுத்து உணர்ந்து அதனை விளக்கும் முறையை அறிதல்.
ஒவ்வோர் இலக்கியத்தின் அடிப்படையிலும் ௮தன் இயல்பு அறிதலின்
போது அதன் ஆசிரியன் புலப்படுகிறான்.
இலக்கிய வரலாறு என்பது, வாசிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ
அல்லது கவனிப்பவர்களுக்கோ பொழுதுபோக்காக, அறிவூட்டத்தக்கதாக
அல்லது கல்விப் பெறுமானம் கொண்டதாக அமையும் எழுத்தின்
வளர்ச்சியைக் குறிக்கிறது. இது உரை நடை வடிவிலோ கவிதை வடிவிலோ
அமையலாம்.
நம்முடைய வாழ்க்கையை நிலைபேறுடையதாக்கி உறுதிப்படுத்துவது
இலக்கியம். இன்று மொழியும், இலக்கியமும் மாறி வருகின்ற நிலையில் ஒரு
பண்பாட்டின் மொழி வளத்தைக் காண தற்கால இலக்கியங்கள் பற்றிய
வாசிப்பு அவசியம். எனவே இலக்கியம் மட்டுமே இந்த உலகில் அழகு,
அறிவு, ஆற்றல் அனைத்தையும் தெளிவாக்குகிறது
0
இந்தத் தெளிவாக்கலை படிகத்தின் வழியே செல்லும் ஒளிகீற்றின் தன்மை போல் விளக்குகிறார். பவளசங்கரி அவர்கள்.
0
இந்த ஆண்டின் தமிழக அரசின் இரு விருதுகள் : அம்மா விருது, சிறந்த நூலுக்கான விருது என அவரை அடையாளம் காட்டிய வெளிப்பாடுகள் போல் இந்த நூலில் அவர் அடையாளம் காட்டும் படைப்புகள் இலக்கிய ஒளிக்கீற்றின் தெளிவைப் பரவலாக்கும்.
வாழ்த்துக்கள்..
அன்புடன்,
சுப்ரபாராதிமணியன்
திருப்பூர் தமிழ் சங்கம் 1
தமிழக செய்தி துறை அமைச்சர் ரூபாய் இரண்டு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் பள்ளிக்குழந்தைகளுக்கு திருக்குறள் முற்றோதல் திட்டத்திற்கு ஒரே நாளில் வழங்குவதாகச் இந்த தொகையை சொன்னார். பள்ளி குழந்தைகள் திருக்குறள் ஓதுதல் சம்பந்தமான வழங்கப்படுகிற தொகை பெரியது .
இந்த்த் தொகையை கேட்டு பத்திரிகை சன்மானம், ராயல்டி போன்றவை கிடைக்காத நவீன எழுத்தாளர் ஒருவர் மயக்கம் போட்டார்.
அவர் மயக்கம் போட்டது இந்த தொகை காரணமாவா அல்லது ஏசி அரங்க அறையாக இருந்தாலும் மிகவும் கடுமையான மக்கள் நெரிசல் நெருக்கடியில் இருந்ததா என்று தெரியவில்லை
. அவரை அந்த அரங்கத்தை விட்டு வெளியேற்றிய பின்னால் அவர் ஆசுவாசம் பெற்று விட்டார்.
ஆனால் அவர் வாய் ராயல்டி.. ராயல்டி என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
திருப்பூர் தமிழ் சங்கம் 2
திருப்பூர் தமிழ் சங்கம் நேற்று நடத்திய விழாவுக்கு சாதாரண பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்வதற்கான வாகன வசதி இல்லாமல் சிரமமாக இருந்தது. ரொம்ப தூரம். தமிழ்நாடு முழுக்க இருந்து பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்திருந்து சிரமப்பட்டனர். அவர்கள் பெற்ற 15,000 ரூபாய் காசோலையும் சான்றிதழும் ஆசுவாசம் தந்தன.
அந்த அரங்கம் மருத்துவர் முருகானநாதன் பெயரில் இருந்தது. அவர் திருப்பூர் தமிழ் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் இருந்து கொண்டிருக்கிறார்.
திருப்பூர் தமிழ் சங்கத்திற்கு தனியாக கட்ட்டம் என்று உள்ளூரில் எதுவும் இல்லை. சின்ன சின்ன ஊர்களில் தமிழ்ச்சங்கங்கள் என்று தனியாக கட்டடங்களும் அரங்குகளும் இருக்கின்றன ஆனால் திருப்பூர் தமிழ் சங்கத்திற்கு அப்படி கட்டடம் எதுவும் இல்லை. கோடீஸ்வரர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட திருப்பூர் தமிழ்ச்சங்கம் தனியாக கட்டடம் எழுப்ப முயற்சி எடுக்கலாம். இதை பல முறை அவர்களிடம் முணுமுணுத்திருக்கிறேன் அப்படி தமிழ்சங்கக் கட்டடம் அரங்கம் எழுப்புவது அவர்களுக்கு சாதாரண விஷயம். ஜூஜூபி காரியம்.. அதை செய்யலாம்.. பிற இலக்கிய அமைப்புகள் திருப்பூரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்கு இடமில்லாமல் தவிக்கிறார்கள். அதற்கு கூட உதவியாக இருக்கும்
திருப்பூர் தமிழ் சங்கம் 3
திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது பட்டியல் சார்ந்த அதிருப்தியைத் தெரிவித்து இருந்தீர்கள். நீங்கள் அதை ஏன் நிராகரித்து வாங்காமல் விட்டிருக்கலாமே என்று சிலர் கேட்டார்கள்
6 மாதம் முன்னாள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்க ஒன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடந்த போது திருப்பூர் எழுத்தாளர்கள் மனதில் உள்ள குறையை அவரிடம் - திருப்பூர் தமிழ்ச்சங்க தலைவர் மருத்துவர் முருகநாதன் அவர்களிடம் சொன்னேன் திருப்பூர் உள்ளூர் எழுத்தாளர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரத்தையும் திருப்பூர் தமிழ் சங்கம் தரவில்லை என்பது அந்த மனக்குறை
.( எனக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஒரு முறை முன்பே திருப்பூர் இலக்கிய விருதை வழங்கி இருந்தது நாவலாசிரியர் மறைந்த தோப்பில் முகமது மீரான் தலைமையிலான தேர்வு குழு ஒரு ஆண்டு திருப்பூரில் இலக்கிய விருதுகள் புத்தகங்களை தேர்வு செய்த போது எனக்கு திருப்பூர் இலக்கிய விருது கொடுத்தார்கள் )
இந்த குறை அவர்கள் சொன்னபோது விழா நடத்தி திருப்பூர் எழுத்தாளர்களை திருப்தி செய்து விடலாம் என்றார். திருப்பூர் எழுத்தாளர்களின் படைப்பு பற்றிய கருத்தரங்கமும் அவர்கள் படைப்புகள் பற்றிய அனுபவப் பகிர்வு சார்ந்த ஒரு கருத்தரங்க நிகழ்ச்சியாக இருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டேன் அவர்கள் ஒரு பட்டியல் கேட்க நானும் தொலைபேசி எண்கள் உடன் பட்டியல் கொடுத்தேன்.
ஏப்ரல் மாதம் அந்த நிகழ்ச்சி ஏற்பாடானது ஆனால் சட்டுனு வந்த தேர்தல் தேதி காரணமாக நிகழ்ச்சி ஒத்துழைக்க பட்டது. அதை இப்போதுதான் நடந்திருக்கிறது
ஆகவே உள்ளூர் எழுத்தாளர்களோ வெளியூர் எழுத்தாளர்களோ அவர்களுக்கு சிறிய அங்கீகாரம் கிடைக்கும் இந்த நிகழ்ச்சிகள் என்பதால் நான் அதை புறக்கணிக்க நினைக்கவில்லை
30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் எழுத்தாளர் திலகவதி அவர்களும் திருப்பூர் தமிழ்ச்சங்கத தலைவரைச் சந்தித்து திருப்பூர் தமிழ் சங்கம் எழுத்தாளர்களை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு புத்தகங்களுக்கு பரிசளிக்கலாம் என்ற யோசனையைச் சொன்னோம். பலத்த யோசனைக்கு பிறகு அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அதன் பின்னால் நடந்த திருப்பூர் தமிழ் சங்க இலக்கிய விருதுகளில் தரமான படைப்பாளிகளும் தேர்ந்த நடுவர்களும் இருந்து சிறப்பு சேர்த்தார்கள். கலந்த சில ஆண்டுகளாக அப்படி தேர்வு பெறுகிற நூல்கள் குறிப்பிடத்தக்கதா இல்லை என்று நான் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல அவர்கள் கோபித்துக் கொண்டார்கள்.
அவர்களை கோபம் தொடர்ந்து கொண்டிருக்கிறது
ஆனால் நல்ல சூழலுக்கான அங்கீகாரம் என்பது குறைந்து கொண்டிருக்கிறது என்பது வருத்தம் தான்.
30 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த இந்த பழைய விஷயம்.,
பிறகு ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த புதிய உள்ளூர் விஷயம் நடக்கட்டும் என்று ஒரு ஆறுதல் தான்.. அதனால் தான் இதை நிராகரிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை.
150 மாணவ மாணவிகள் வரிசையாகப் போய் விருது பெற்ற பின்னால் அந்த வரிசையின் தொடர்ச்சியாக எழுத்தாளர்களும் நின்று விருது பெற்றது எழுத்தாளர்களுக்கு பெருமை தருவதாக இல்லை .
உங்கள் நூலகத்தின் ஓரவஞ்சனை
உங்கள் நூலகம் செப்டம்பர் இதழ் நேற்று நூலகத்தில் கண்டேன் பல ஆண்டுகளாக எனக்கு பிரதிகள் வந்து கொண்டிருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக பிரதிகள் வருவதில்லை ஆயிரக்கணக்கான பிரதிகளை இலவசமாக அனுப்புகிறார்கள் பிறருக்குத் தருகிறார்கள். அதுவும் புத்தக கண்காட்சி அரங்குகளில் அவை வீணாகி பலர் கையில் எடுத்துச் செல்வதை சாதாரணமாக கண்டிருக்கிறேன். அவையெல்லாம் வியாபார நோக்குடன் தரப்படுகிறது என்று நியாகம் சொல்கிறார்கள். ஆனால் எழுத்தாளர்களுக்கு பிரதி தருவதில் லாப நஷ்ட கணக்கு வந்துவிடுகிறது. இதை ஞாபகப்படுத்தி சில மின்னஞ்சல் அனுப்புகிறேன். பதில் இல்லை. கறாராக இருந்தார்கள். கறார்..
இப்போது விஷயம் அதுவல்ல... சென்ற மாதம் நடந்த எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் விருது விழா பற்றியது . விருது பெற்ற நூல்கள் பற்றி அந்தந்த பதிப்பகம் சார்ந்த இதழ்களில் சிறப்பு கட்டுரைகளும் செய்திகளும் வெளியிட்டு இருக்கிறார்கள் உதாரணத்திற்கு பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தகம் பேசுகிறது இதழில் வீரபாண்டியனின் பரிசு பெற்ற நூலைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையும் புகைப்படங்களும் செய்தியும் வந்திருக்கின்றது.
இதே போல தமிழ் பேராயும் விருது பெற்ற பிற நூல்களைப் பற்றி சம்பந்தப்பட்ட அவர்களின் இதழ்களில் புகழ்ந்தும் விவரம் தெரிவிக்கும் நோக்கிலும் வியாபார நோக்கிலும் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ் பேராயும் விருது பெற்ற என் சி பி எச் வெளியிட்ட சுப்ரபாரதிமணியன் எழுதிய சிலுவை நாவல் பற்றி எந்த குறிப்பும் இந்த இதழில் இல்லை. முன் ஜாக்கிரதையாக நானே அந்த விழா பற்றிய குறிப்புகளையும் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தேன்.எச் சி பி எச் பதிப்பகத்திற்கும் தனியாக பரிசுத்தொகை இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும் தோழர் ரத்தின சபாபதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆனால் இந்த இதழில் அது பற்றிய எந்தவித செய்தியும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. உங்கள் பார்வையில் இருந்து விடுபட்டாலும் ஞாபகப்படுத்தலாம் என்று நான் அந்த செய்தியையும் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தேன். நிராகரித்து விட்டார்கள்.
உங்கள் நூலகம் ஆசிரியர் குழுவினர் இந்த நிராகரிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் படைப்புகளுக்கு உங்கள் நூலகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் அனுப்பிய ஐந்து கட்டுரைகள் எதுவுமே பிரசுரமாகவில்லை. அந்த ஐந்து கட்டுரைகளுமே என் சி பி எச் யின் புதிய வெளியீடுகள் பற்றியவை. ஞாபகப்படுத்தி திரும்பத் திரும்ப அவற்றை அனுப்பினாலும் அவை பிரசுரமாகவில்லை கடுமையான விதிமுறைகள் போல் இருக்கிறது.
அப்புறம் சமீபத்தில் பேட்டியில் வருகின்றன என்று ஒரு வாசகியை என்னுடைய பேட்டி ஒன்றை எடுத்து அனுப்பியிருந்தார் .அதை போடவில்லை அது பின்னால் பேசும் புதிய சக்தி இதழில் வந்துவிட்டது. அதனால் அதை போட வேண்டாம் என்று நான் கடிதம் எழுதி வடித்து விட்டேன். ஒரு முக்கியமான விருது பற்றிய செய்தியை என் சி பி எச் புத்தகம் விருது பெற்ற செய்தியை சின்ன குறிப்பாக போட ஆசிரியர் குழு விரும்பவில்லை.
ஆனால் சீனு ராமசாமியின் கவிதை தொகுப்பு பற்றிய பலபக்கங்கள் கொண்ட கட்டுரையை மீண்டும் பிரசுரம் செய்திருக்கிறார்கள் இந்த இதழில் . அது வேறொரு பத்திரிகையில் வந்தது என்பது இலக்கியவாசகர்களுக்கு நன்கு தெரியும். அப்படியெல்லாம் பக்கங்கள் வீணாகி உள்ளன ஆனால் என் சி பி எச் நூலுக்கு விருது சிறு துணுக்கு செய்தியை போட மனம் வருவதில்லை
இந்த போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு புத்தக கண்காட்சியில் புத்தக வெளியீட்டில் இடம் பெற்ற குறிப்பும் புகைப்படமும் இந்த இதழில் வந்துள்ளது. அதில் நான் போட்டிருக்கிற கலர் கலரான சட்டை பற்றி பல தோழர்கள் விசாரித்து தெரிந்து கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். அந்த புகைப்படத்தில் நான் இருக்கிற பகுதியை கூட வெட்டி இருப்பார்கள். பக்கத்தில் கோவை மேலாளர் ரங்கராஜ் இருப்பதால் அதை தவிர்த்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கோவை மேலாளர் ரங்கராஜன் எப்போதும் இப்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிற போது நெற்றியில் திருநீறும் வெள்ளை சட்டையுமாக போஸ் கொடுப்பார். ஈரோட்டில் வேலை அலைச்சலில் வியர்வை வழிந்து திருநீறு அழிந்து விட்டது.. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் கூட இந்த திருநீரும் வெள்ளை சட்டையும் கண்டிப்பாக இருந்து கொண்டிருக்கும். அவரின் பக்கத்தில் இருந்ததால் அதை வெட்டாமல் விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அவர் நெற்றியில் வெள்ளை திருநீறு அழுத்தமாகப் போடுவார். வெள்ளை சட்டை போடுவார். அமாவாசை, பௌர்ணமி பிரதோஷத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்புவார் ,நான் ஒரு முறை கடுமையாக இந்த பிரதோஷ, அமாவாசை வாழ்த்து செய்திகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவரிடம் பேசினேன். அதன் பின்னால் பிரதோஷ, அமாவாசை வாழ்த்துக்கள் நின்றுவிட்டது மற்றவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. அப்புறம் அவன் நெற்றியில் அழுத்தமான திருநீர் இருக்கும் அதை நான் விமர்சித்திருக்கிறேன். அவரின் வாழ்விடம் காரமடை. என் வீட்டு தெய்வம் குலதெய்வம் பெருமாள் தான். காரமடை பெருமாள் நாமத்தை அவர் போட்டால் கூட அவருடைய நெற்றிக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்.நான் என் வீட்டினர் போடும் சனிக்கிழமை நாமம், பூணூல் இவற்றைப் போடுவதில்லை. கோவிலுக்குச் செல்வதில்லை. ரங்கராஜ் அவர்களுக்கு நாமம் இன்னும் பொருந்தும். இதெல்லாம் பண்ண வேண்டியிருக்கு தோழர் என்பார்.
அவரின் நியாயமான உழைப்பு நெகிழ வைப்பது
அதேபோல அவர் இது போன்ற கலர் சட்டைகளை நான் போடக்கூடாது என்று ஈரோடு புத்தகச் சந்தையில் தடை விதித்தார். உங்கள் வயதிர்குத் தகுந்த மாதிரி வெள்ளை சட்டை போடுங்கள் என்றார். . நான் அப்படித்தான் இந்த வெள்ளை மினிஸ்டர் ஒயிட் சட்டைகளுக்கு எதிராக இப்படி கலர் சட்டை போடுவேன் என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன்.
தோழர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் போட்ட வெள்ளை சட்டைகள் பல கிழிந்து நசிந்து இருந்தன. அவர் வேலை அலைச்சலில் அதை கவனிக்காமல் விட்டிருப்பார். அவருக்கு கூட இந்த கலர் கலரானஅழகான சட்டைகள் நான்கைந்து அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்
திருப்பூர் மாவட்டம் ஆரம்பித்து நாள், , மாதங்கள், வருடங்கள் ஓடிவிட்டன. திருப்பூரில் என் சி பி எச் ஷோரூம் விரைவில் சற்று தாமதமாக தான் தொடங்கப்படுவது பற்றி என் மகிழ்ச்சியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
வணக்கம்
சுப்ர பாரதி மணியன்
“ என்றும் காந்தியம் “ சுப்ரபாரதிமணியன்
இன்றைய கவிதை உலகம் சூரியனுக்கு கீழ் உள்ள சகலத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கிற சாதி அதிகாரம், தொழில்நுட்ப அதிகாரம் பற்றியும் கவிதை உலகம் விமர்சிக்கிறது..
வார்த்தைகளின் கூட்டமாக பல கவிதைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஆனால் கவிதை பற்றிய அரசியலும் அதன் தளங்களும் கொண்டு இயங்குகிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன.. நையாண்டி தனம் என்பது இன்றைய கவிதையின் முக்கியமான விஷயமாக எனக்கு படுகிறது படைப்பாளன் வாசகன் இரண்டு பேர் இணையும் விஷயங்கள் தான் வெற்றி பெற்ற கவிதைகள் ஆகின்றன.
. கவிதைகளில் பலம் தினசரி வாழ்க்கையின் அனுபவங்களை, அதிர்வு கொண்ட விஷயத்தை இணைப்பதுதான்.. கிராமங்களும் அதன் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களும் மெல்ல மெல்ல அழிந்து விட்டன.. பெரும் நகரங்களையும் நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடப்பெயர்வைப் பற்றி இன்று நாம் அதிகமாக எழுதுகிறோம்.. மனித சிந்தனை கொண்டுள்ள நினைவாற்றல் தன்மை அளப்பரியது. இந்த நினைவாற்றல் தன்மையை மனதில் கொண்டு பலர் நினைவுகளை திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். ஆனால் மனித வாழ்வியல் சார்ந்து கைபேசி கொள்ளும் வீட்டு சூழலுக்கும் தனி வாழ்ச்க்கையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.. இந்த முடக்கப்பட்ட தன்மையைக் கூட கவிதையில் சிறப்பாக கொண்டு வருகிறார்கள். உழைப்பாளி தன்னுடைய பெரும்பாலும் நகர வாழ்க்கையோ கிராம் வாழ்க்கையோ தான் இருந்த இடம் இழந்ததின் வேதனையையும் இயங்க வேண்டிய இயக்கத்தையும் கொண்டு செல்கிறார் .அப்படித்தான் பலருக்கு காந்தியும் சார்ந்த இயக்கம் பற்றிய கனவு இருக்கிறது. அதை கவிதை மொழியில் கொண்டு வருகிறார்கள். மண்ணும் நிலமும் அரசியலும் இதற்குள் எல்லாம் வந்திருக்கிறது. இந்த கலவைதான் ஒரு அற்புதமான கவிதை உலகத்தை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது
காந்தியம் என்பது அவருடைய வாழ்வு தொலைநோக்கு பார்வை போன்றவற்றை குறிக்கிற சொல்லாக அமைந்திருக்கிறது. வன்முறை அற்ற உலகம் என்பது அவருடைய கனவாகக் கூட இருக்கிறது. அவருடைய பங்களிப்பு சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதை பற்றி திரும்பத் திரும்ப அலசப்படுகிறது காந்தியின் கருத்துக்கள் மக்களுக்கு என்ன அர்த்தம் தருகின்றன அவை எதிர்காலத்தில் வழிகாட்டுதலுக்கு எப்படி உதவுகின்றன என்பதை பற்றி எல்லாம் நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்கள் காந்தியும் அரசியல் மற்றும் சமூகம் அல்லாத தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை அனுபவங்களும் கூடுகிறது இங்கு கவிதிஅயில் . காந்தியம் என்று எதுவும் இல்லை அதை நான் விட்டுச் செல்லவில்லை அப்படி ஒரு கொள்கையோ கோட்பாடு இல்லை. என் வாழ்க்கையில் உண்மையான அனுபவங்களை சொல்ல முயற்சித்தேன் அவை பழமையானது என்று காந்தியடிகள் கூட சொல்கிறார். இந்த பழமை வாய்ந்த காந்தி சார்ந்த தத்துவ விஷயங்கள் இன்றைக்கு எப்படி பயன்படுகின்றன அவை எப்படி தேவை என்பதை பற்றிய பல சர்ச்சைகள் உள்ளன. அந்த சர்ச்சுகளை நாம் இந்த கவிதைகள் மூலம் தேடிப் பார்க்கலாம் தமிழ் கவிதை பற்றியும் காந்தியும் பற்றியும் சில அபிப்ராயங்களை மனதில் கொண்டுவர இந்த தொகுப்பு உதவும். அதேபோல இந்த கவிதைகளை நீங்கள் படிக்கிற போது கவிதை பற்றியும் காந்தியம் பற்றியும் பல்வேறு அபிப்ராயங்களும் உருவாகும். அவற்றை நீங்களும் யோசிக்கவும் தொகுப்புரை செய்யவும் இது ஒரு வாய்ப்பு
வாழ்த்துக்கள்
சுப்ரபாரதிமணியன் திருப்பூர்
சந்திரகுமாரின் புதிய நாவலை முன் வைத்து.. சுப்ரபாரதிமணியன்
அரசியலூடான இலக்கியப் பிரதி நாவலாக....
அரசியல் அற்ற இலக்கியப் பிரதிகள் அல்லது அரசியல் நீக்கம் பெற்ற இலக்கியப் பிரதிகளை சர்வ சாதாரணமாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உணர்வும் அக்கறையும் கொண்ட இலக்கியப் பிரதிகள் அரிதாகிக் கொண்டிருக்கின்றன ஆனால் சந்திரகுமார் அவர்களுடைய இலக்கிய பிரதிகளில் அரசியல் சார்ந்த உணர்வுகளும் எழுச்சிகளும் தவறாமல் இருந்து கொண்டிருக்கும்
கொரோனா கால சூழலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலில் அரசியல் சார்ந்த விஷயங்கள் நாவல் முழுக்க ஊடுருவிக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் அரசியல் விஷயங்களுக்கு உள்ளாக ஓடும் மனித உணர்வுகளை சந்திரகுமார் அவர்கள் இந்த நாவலின் மையமாகக் கொண்டிருக்கிறார். அவரின் தன் வரலாற்று நாவலில் .ஒரு பகுதி எனலாம்.
அவர் தன்னையும் தன்நிலையையும் எப்போதும் மறைத்துக் கொண்ட மனிதர் அல்ல. தன்னை நிர்வாணமாக்கி கொண்டு காட்டிக் கொண்டே இருப்பவர். அவருடனான அரசியல் ஈடுபாடும் அக்கறையும் பிரிக்க முடியாது .இது இந்திய பொதுவுடமைக் கட்சி, அது சார்ந்த தொழிற்சங்கங்கள் , மக்களை செயல்பாடுகள் ஆகியவை இணைந்தது. இந்த வகையில் அவரின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் இந்த இலக்கியப் பிரதியை அணுகுவது சுகமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு உலக அரசியல் பற்றி அறிந்து கொண்டு வாழ்க்கையின் சில அனுபவங்களை பார்ப்பது என்ற கோணம் இதில் கிடைக்கும்.
தான் சார்ந்த குடும்ப உறவுகள், கட்சி சார்ந்த தொடர்புகள் அனுபவங்கள் ஆகிவற்றை கொரோனா கால சூழல் மையமாகக் கொண்டு இந்த நாவல் இயங்குகிறது. வட மாநில தொழிலாளருக்கான துயரங்கள் குறிப்பாக ஒரு வட மாநில பெண்ணின் பிரசவம் சார்ந்த சிரமங்களோடு இந்த நாவல் ஆரம்பிக்கிறது
உயிரியல் போர் துவக்கப்பட்ட பின்னால் மக்கள் எப்படி தங்களை காத்துக் கொள்ளும் போர் வீரர்களாக செயல்பட
வேண்டும் என்ற பரிசோதனை வெற்றிகரமான இந்த நாவல் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த நாவல் இறுதியின் வருகிற சுதந்திர விழா கொண்டாட்டம் கூட வேண்டாம் என்று அந்த கொரோனா சூழலில் அரசாங்கத்தால் வலியுறுத்தப்படுகிறது. அவர் சார்ந்த ஆட்டோ ஓட்டும் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடே இது போன்ற விழாக்கள் சாதாரணம். தங்களின் சுதந்திரம் மற்றும் கருத்துரிமையை சார்ந்து வெளிப்பாட்டுக்கான ஒரு களமாக இது இருக்கிறது. அது கூட கொரோனா சூழ்நிலையில் தவிர்க்க வேண்டியதாயிருக்கிறது.
ஓருல அரசின் விசுவாசம் மிக்க பிரதிகளா நாம் அல்லது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அனுபவத்தில் வாழ்ந்தாலும் அந்நியமாக்கப்பட்டவர்களா என்ற கேள்வியுடன் இந்த நாவல் முடிகிறது.
தன் வரலாற்றின் ஒரு பகுதியாக கொரோனா கால சித்தரிப்புகள், குடும்பத்தார் சூழலில் எல்லா அனுபவ கூறுகளும் இங்கே முன்வைக்கப்படுகின்றன. இந்த கொரோனா கால சூழ்நிலை பற்றி தோழியர் ஜீவா சத்யமங்கலம், கோவை அரவிந்தன், மும்பாய் புதிய மாதவி போன்ற நண்பர்களின் படைப்புகளை படித்திருக்கிறேன்.. நிறைய இலக்கியப் படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.
முடக்க காலத்தை நினைவில் இருந்து அகற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த நாவலில் அதை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறார்.. அரசியல் வினைகள் தரும் அச்சமும் எதிர்பார்ப்பும் வாழ்க்கையின் பாதுகாப்பின்மையும் இந்த நாவலில் வெளிப்படுகிறது.
. முதல் அத்தியாயத்தில் தென்படும் வடநாட்டுப் பெண்ணின் பிரசவம் மற்றும் அடையாள அட்டைக்காக கேமரா முன் சரியாக நிற்க வேண்டி இருக்கிற சூழல்கள் வேதனைக்குறியவை. வீட்டு வளர்ப்பு கோழியாகட்டும் ஆடாகட்டும் நாய்களாகட்டும் இவை மனித உறவுகளுடன் கொள்ளும் நேசமும் அவற்றிற்கு ஏற்படும் அசவுரியங்களும் ஒன்றோடு ஒன்று இணைத்து கொள்வதும் அவசியமாக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் பார்த்த பிரசவம் என்று பத்திரிகையில் தலைப்படப்பட்டு கவனிக்கப்படுகிற வடநாட்டுப் பெண்ணின் பிரசவம், அந்த குழந்தையின் பிறப்பு சார்ந்த அனுபவங்களும் விவரிப்புகளும் ஒரு புதிய உறவு சார்ந்த மகிழ்ச்சியும் பக்க பக்கமாய் மனித நேயத்துடன் விரிகிறது அரசியல் பிரமுகர்கள், இலக்கிய நண்பர்கள், எழுத்தாளர்கள் சாதாரணமாக கதையில் கதாபாத்திரங்களாக வந்து போகிறார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்க அவளை புதைக்கும் சடங்குகளில் நடைபெறும் சம்பவங்கள் மனதை உருக்குகின்றன. இப்படி புதிதாக குழந்தை பிறப்பு, வேறு கர்ப்பிணியின் சாவு சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது .உலகம் முழுக்க கொரோனா தந்த பாதிப்புகளும் அது சார்ந்த கிருமியின் விபரீதங்களும் பிரேசில் நாடு முதல் சீனா உட்பட பல நாடுகளின் பின்னணியில் எடுத்து சொல்லப்படுகிறது. உலக அரசியல் நடவடிக்கைகளும் அது சார்ந்த இடதுசாரி அரசியல் கோணங்களும் விரிவாக அலசப்படுகின்றன. இலவச உணவுக்காகவும் மக்கள் கையேந்தி நிற்கிறார்கள் பொதுவுடமை இயக்கம் சார்ந்த செயல்பாடுகளில் இலவச உணவு உபயோகிப்பது கூட சாதாரணமாகி விடுகிறது. இந்த ரீதியில் அலையும் நாய் போன்ற விலங்குகளுக்கான உணவுகள் விநியோகமும் தாராளமுமாகச் சொல்லப்படுகிறது.
சந்திரகுமாரின் அரசியல் பணிகள் சாதாரண மக்களோடு இயங்குவது முதற்கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை வரைக்கும் பல வகையில் இருக்கிறது .அவரின் மகள் ஜீவாவின் தொழிற்சாலை நடவடிக்கைகளும் அவருடன் இணைந்து கொள்கின்றன. . கைபேசி கல்வி, தகவல் சந்தை , இணைய சந்திப்பு ஆகியவை எப்படி காலத்தின் கட்டாயமாகிவிட்டன என்பதையும் கொரோனா சூழலில் விளக்குகிறார் இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாய தலைப்புகளும் ஒவ்வொரு விதமான கதை சொல்லும் தன்மையில் இருக்கின்றன. கவித்துவத் தலைப்புகளும் கூட அவை.
ஆட்டோ வேலை இல்லாத சிரமங்களும் , மகளின்
புகைப்பட பணி பாதிப்பும் கட்சி சார்ந்த உதவி நடவடிக்கைகளும் விரிவாக சொல்லப்படுகின்றன. கொரோனா சூழல் முன்வைத்த வைத்திய முறை மட்டுமல்லாமல் பாரம்பரியமாக காப்பாற்றப்படும் சிகிச்சைகள் பற்றிய அக்கறை நாவல் முழுக்க கூட்டணியாக விரவிக் கொண்டிருக்கிறது. வாழ தகுதியற்றதாக வாழ்க்கை மாறிவிடுகிறது.
விளிம்பு நிலை மக்கள் அதிகாரத்துவ சூழலின் வெறும் பொம்மைகளாக வேண்டியிருக்கிறது இந்த சூழலில் அவர் எழுத்தாளர் என்ற வகையில் கோபம் வெளிப்படுகிறது. புத்தக கண்காட்சிக்கு போகும் அனுபவங்களும் அவருக்கு வாய்க்கிற எழுத்தாளர் வாசகர் நிலையும் பல வகையில் சொல்லப்படுகிறது அதுவும் இலக்கிய நண்பர்களும் அரசியல் நண்பர்களும் கதாபாத்திரங்களாக சாதாரண நிகழ்வுகளிலும் வந்து போகிறார்கள். அவற்றில் அறிஞர் ஞானியினுடைய மரணமும் அவர் சார்ந்த நற்பண்புகளும் விரிவாக சொல்லப்படுகிறது இதில் நண்பர்களின் பங்களிப்பு நட்பு சார்ந்த நடவடிக்கைகள் விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. இயக்குனர் தங்கம் போன்றவர்களுடைய நட்பும் ஈடுபாடும் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயமும் அரசியல் சார்ந்த கருத்துரைகளுக்கான முக்கியத்துவத்தை கொண்டு இருக்கின்றது. இது சந்திரகுமாரின் தனித்துவமான குரலாகிறது இது தமிழக சூழலில் மட்டும் இல்லாமல் கேரள சூழ்நிலை முன்வைத்தும் சொல்லப்படுகிறது திரைப்பட உலகம் சார்ந்த அவரின் அலுவல்கள் தமிழ் மனம் சார்ந்த வேதனைகளும் பிற மொழி இயக்கங்களுடன் ஒப்பிட்டுச் சொல்லப்படுகின்றன. கொரோனா காலத்தை கட்டச் சூழலை மையமாக கொண்ட இந்த நாவலின் ஒரு சுமார் மூன்று ஆண்டுகள் அவரின் அனுபவ பகிர்வுகளை தன் குடும்பம் மற்றும் சமூக சூழ்நிலை முன்வைத்து நம் உடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர்களின் அரசியல் நடவடிக்கைகளில் இலக்கியப் பகிர்வும் ஒரு வகை பங்களிப்பு செய்கிறது..
ஒரு சரியான அரசியல்வாதி உள்ளார்ந்த இலக்கியவாதியாகவும் இருப்பார் என்பார்கள். அதேபோல் ஒரு சரியான இலக்கியவாதி உள்ளார்ந்த அரசியல் உணர்வு கொண்டவராகவும் இருப்பார் என்பதை சந்திரகுமார் தொடர்ந்து நிருபித்திருக்கிறார் தன் வாழ்க்கைப் பயணத்தில்
அவரின் இலக்கியப் பயணத்தில் அவரின் ” லாக் அப் “ நாவல் ”விசாரணை “ என்ற படமானதும் அதன் நாவல் வடிவம் பல்வேறு மொழிகளில் வெளிவந்திருப்பதும் அவரின் நடிப்பு பலதிரைப்படங்களில் மிளிர்வதும் மகிழ்ச்சியானது. ,.
அவரின் தொடர்ந்த சமூகப் பங்களிப்பை இந்த நாவல் இலக்கியப் பிரதியும் உறுதி செய்கிறது.
சுப்ரபாரதி மணியன். ( 9486101003)
பாதரசம் எனும் நஞ்சு / சுப்ரபாரதிமணியன்
மிகப்பெரிய பாதரச நச்சு ஆலை ஒன்று கொடைக்கானலில் பொதுவான சுற்றுச்சூழலை பாதித்தது. அதை 2000 ஆண்டுகளில் பெரிய விவாத பொருளானது. .
அந்த பாதரச தொழிற்சாலை பற்றி ஆர்.பி அமுதன் அவர்கள் இயக்கிய ஒரு ஆவணத்தை படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.. இந்த ஆவண படத்தை ஒட்டி கொடி என்ற தனுஷ் நடித்த படம் கூட வெளியாகி இருக்கிறது ஆனால் இந்த படத்தில் (கொடி) பாதரசம் என்பதுபற்றிய அடிப்படையிலிருந்து சற்று விலகி நிற்க தனுஷ் என்ற அரசியல்வாதி மற்றும் பலியாடுகள், அரசியல் வித்தைகள் பற்றிய விரிவான படமாக அது அமைந்துவிட்டது
ஈரோடு பசுமை இயக்கத்தைச் சார்ந்த ஜீவானந்தம், திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்ந்த பால் பாஸ்கர் போன்றோர் கொடைக்கானல் பிரச்சனையில் பல ஆய்வுகள் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கின்ற வகையில் பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டார்கள். வழக்குகளை எல்லாம் பதிவு செய்தார்கள் என்று ஞாபகம் . இது பற்றிய பதிவு இந்நூலில் இல்லை..
கொடைக்கானல் போகிற போது இந்த பாதரச தொழிற்சாலை பற்றிய விஷயங்கள் அவ்வப்போது உறுதி கொண்டே இருக்கும் அது என்ன அல்லது அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள் என்பது நினைவில் வந்து கொண்டே இருக்கும். அந்த பன்னாட்டு நிறுவனத்தின் பாதரச தொழிற்சாலை கொடைக்கானலை எப்படி விஷமாக மாற்றி விட்டது என்பதை பற்றி சாவின் பக்கம் சென்று வந்த பலரின் அனுபவ்ங்கள் இதில் உள்ளன.பேரா. வின்செண்ட் அவர்கள் மொழிபெயர்ப்பில் பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் பாதரசம் எனும் நஞ்சு என்ற நூலை வெளியிட்டு இருக்கிறது
இதனுடைய மூலத்தின் ஆசிரியர் அமீர் சாகுல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகள் பத்திரிகையின் புலன் விசாரணையாளராக பணியாற்றியவர் கிரீன் பீஸ் இயக்கத்தினுடைய பரப்பாளராக இருந்தவர் அவர் எழுதிய நூலை இப்போதுதான் அந்த பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த தொழிற்சாலை சார்ந்த பிரச்சினைகள் தமிழ்நாடு அளவில் பெரிய பிரச்சனைகளாக மாறிக் கொண்டிருந்தன.அந்த சூழல் வீரிவாக இந்த நூலில் உள்ளன.
கிரீன்பீஸ் என்ற அமைப்பு ஏற்படுத்திய ஆய்வுகள் இன்னும் உலக அளவில் இந்த பிரச்சினையை வெளிப்படுத்தினர். பாதரசிவம் மாசுபட்ட இடங்களில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்டது. அங்கே இருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறுகள், உணவு பொருட்களில் பாதரசம் சேர்ந்திருப்பது போன்றவையெல்லாம் பன்னாட்டு பத்திரிகைகளில் வெளிவந்து பலரின் கவனத்திற்கு உள்ளாகின
1980 களிலேயே இந்த பாதரசம் சார்ந்த உடல் நல குறைபாடும் சாவும் முதலில் நிகழ்ந்தன 1984 இல் முதல் சாவு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள் .பாதரச வெப்பமானங்களை உற்பத்திச் செய்யும் பிரம்மாண்டமாக அது ஓராண்டுக்கு முன்னால் தான் அங்கு தொடங்கியது. அதற்கு பின்னால் விரைவில் மரணம். இது மனிதர்களை மட்டும் பாதிக்கவில்லை குருவிகள் பிற பறவைகளையும் பாதித்த்து. கழிவுகள் எல்லாம் தெரு வழியில் கொட்டப்பட்டன. பாதுகாப்புடன் வந்து பலர் பரிசோதனை நடந்த போது தான் மக்களுக்கு அந்த கழிவு பொருட்கள் கிடப்பதை தெரிந்தது. முன்பு நல்ல வேலையை தரக்கூடிய தொழிற்சாலை என்ற அறிமுகத்தோடு பலருக்கு அங்கு வேலை கிடைத்தது ஆனால் தொடர்ந்து சுவாசக் கோளாறுகளும் உடல் சிரமங்களும் மக்களை சாவை எட்டச் செய்தது. நல்ல எலி பொறி ஒன்று தயாரியுங்கள் உலகம் உங்கள் வீட்டினை நோக்கி வரும் என்று அமெரிக்க கவிஞர் எமர்சன் சொன்னதாக ஒரு கூற்று உண்டு ஆயிரக்கணக்கான எலிப்பொறிகள் அமெரிக்க வரலாற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டன. எலிப்பொறிகளைப் போன்ற்உ மனிதர்கள் சாவுப் பொறியில் மாட்டிக் கொண்டார்கள்.. இந்த எலி பொறிகளில் சாதாரண மக்கள் மட்டும் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழக்கூடிய பழங்குடி மக்களும் பதிக்கப்பட்டதில் இருந்தார்கள். அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தபோது அவருடைய வேட்டையாடும் வாழ்க்கைக்கும் உடல் நலத்திற்கும் ஏதோ கேடு கேட்டு வந்து விட்டதை உணர்ந்தார்கள். குழந்தை போல் எண்ணியது தான் அது பாதரசம் என்பதை அவர்கள் அறிய தாமதம் ஏற்பட்டது ,பழங்குடி இனத்தவர்கள், உணவு சேகரிப்பவர்கள் பல நஞ்சினால் நரம்பு சிறுநீரகம் போன்ற கோளாறுகளால் பாதிக்கப்பட்டார்கள். அந்த பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களை பற்றி ஆய்வுகளும் நடந்தன. பறவைகளை, சிறு விலங்குகளையும் கூடவே பாதித்திருப்பதை பல ஆய்வுகள் சொன்னன. காற்றில் அல்லது நீரில் பாதரசம் பரவி பழங்குடி மக்களையும் சிறு விலங்குகளையும் கூட பாதித்திருந்தன. பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகள் பாதரச உலோகம் தாவர இலைகளில் சேர்க்கப்படுவதும் மனிதர்களை பாதிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே ஒட்டுமொத்த இயற்கை சூழலும் இதனால் பாதிப்பு அடைந்திருப்பது தெரியவந்தது .கொடைக்கானல் ஒட்டிய பல சோலை பகுதிகளில் கரடி சோலை பொதுச் சோலை போன்றவையும் முக்கியமானவை. அவற்றில் கரடிகளும் புலிகளும் அதிக அளவில் நடமாடிக் கொண்டிருக்கும் பகுதி என்பதால் அந்த பெயர் வந்தது. ஆனால் அவற்றின் அளவு குறைந்து போய் உல்லாச பயனுக்காக மக்களின் வருகைகள் அந்த பகுதியில் அதிகமாகின. அந்த பகுதி விலங்குகள் ஊரை விட்டுக்கு பயந்து ஓடிவிட்டன. கொடைக்கானல் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இடமாக அம்மலை மாறுவதற்கு நீண்ட காலம் பிடிக்க வேண்டி இருந்தது கொடைக்கானல் என்று மலைப்பகுதி மக்களுடைய வாழ்வாதாரக்காரர் இடமாக மாற பல ஆண்டுகள் பிடித்தன. இப்போது அந்த பழையப் போக்கை கொண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்க வேண்டி இருக்கும். இந்த காலகட்டத்தில் மக்களுடைய பாதிப்பும் எப்படி இருந்தது அந்த பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி மக்களை நிராகரித்தார்கள், பிற தொழிற்சாலைகள் புறக்கணிக்கப்பட்ட போக்குகளும் மிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதும் மலைப்பகுதி தீங்கு விளைவிப்பதும் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் கொடைக்கானல் பகுதியில் வந்து ஓய்வெடுப்பதற்கான இடமாக இருந்து. பின்னால் அதுவே பாதரசம் வெப்பமானி தயாரிக்கும் இடமாக அவர்கள் மாற்றுவதற்கான ஆதாரங்கள் எப்படி இருந்தன என்பதை இந்த நூல் சொல்கிறது. பாதரசத்திற்காக இடம் தேடி பல இடங்களில் நிராகரிக்கப்பட்ட பின் அங்கு வந்து அடைக்கலமாகி இருக்கிறது பன்னாட்டு நிறுவனங்கள்.
எம்ஜிஆர் ஒரு காலத்தில் திரைப்பட படப்பிடிப்புக்காக வந்து போயிருக்கிறார். பின்னால் அவரை இந்த தொழிற்சாலை தூங்குவதற்கான ஆயத்தங்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறார். அபூர்வமாக பூக்கக்கூடிய குறிஞ்சிப்பூ போல இங்கு வருகிற தொழிற்சாலைகள் மக்களுக்கு பயன்படும் என்று நினைத்திருக்கிறார்கள். குறிஞ்சித் தலைவன் முருகன் அவர்களையெல்லாம் காப்பாற்றுவான் என்று காலம் காலமாக வழிபடுகிறார்கள். ஆனால் பாதரசம் தந்த பாதிப்புகள் முதலில் சிறுநீர் தொல்லையாக ஆரம்பித்து உடம்பு முழுவதும் இயங்க முடியாமல் செய்திருக்கிறது. இதில் கணிசமான பெண்களும் பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் பெண்களை இந்த தொழிற்சாலை வேலையில் எடுக்காமல் தவித்து இருக்கிறார்கள் என்பதும் முக்கியம்
வெப்பமாணி கழிவுகள் மூட்டைகளாக வெளியே கிடத்தப்பட்ட போதும் அவை பரவிய போதும் மக்களுக்கு அதன் ரகசியம் தெரியவில்லை ஆனால் அவர்களை உடல் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலை வந்த போதுதான் தொழிற்சாலையின் அபாயத்தை உணர்ந்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். மகன் பாதரச மதிப்பால் சாகிறான் தந்தை தன் ஆதாரங்கள் எல்லாம் இழந்து விட்டு கதறுகிற காட்சியொன்று இங்கு விவரிக்கப்பட்ட்தில் மனம் தடுமாறியது பெண்கள் ஆண்களுடைய சாவை பார்த்து திகைத்துப் போகிறார்கள. ஆனால் அவர்களுக்கு காரணம் தெரியவில்லை. காரணம் தெரிகிற போது அவர்களை சிறு சிறு நிவாரணம் கொடுத்தும் மருத்துவ உதவி கொடுத்தும் அந்த பன்னாட்டு நிறுவனம் தவிர்த்து விட்டது ஆனால் உயிரைக் கொடுத்தவர்கள் பலர் . அங்கு வேலை செய்ய வேண்டி இருப்பதை அவர்கள் தவிர்க்க முடியவில்லை உயிரை விட்ட பிறகு தான் அதெல்லாம அவர்களுக்கு தெரிய வருகிறது
இந்த விவரங்களை எல்லாம் இந்த நூலில் பேராசிரியர் வின்சென்ட் அவர்கள் அழகான மொழி பெயர்ப்பால் தந்திருக்கிறார். இந்த பகுதி பற்றிய சில தவறான கருத்துகள், தவறான செய்திகள் பற்றி குறிப்பீடு செய்து இந்த நூலில் எழுதி இருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பவர் வெறுமனே மொழி சார்ந்து மட்டுமல்லாமல் இதுபோல இருக்கிற தவறுகளை சுட்டிக்காட்டியும் அந்த பிரதியை திருத்துவது எவ்வளவு முக்கியமான கடமை என்பதை பேராசிரியர் நிரூபித்திருக்கிறார். அவருடைய எளிமையான மொழிபெயர்ப்பு மனம் கனக்கச் செய்கிற ஒரு பெரிய விஷயத்தை சுலபமாக மனதிற்குள் கொண்டு சென்று விடுகிறது..
ஜீவா, பால் பாஸ்கர் போன்றோர் இந்த பணிகள் குறித்து மேற்கொண்ட முயற்சிகளை இந்த நூல் எதுவும் சொல்லவில்லை அதேபோல ஆர்பி அமுதன் போன்றோர் இயக்கிய ஆவணப் படங்கள் பற்றி கூட எதுவும் சொல்லவில்லை ஆனால் அதை இந்தியன் ஏரின் ப்ரோ பீச் என்று அதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்கள். பல தரவுகளை முன் வைத்து எழுதப்பட்டிருக்கிற இந்த புத்தகம் விரிவாக கொடைக்கானல் மக்கள் பாதரச பாதிப்பால் சிரமப்பட்டு இருப்பதை பற்றி சொல்கிறது ஆனால் தமிழக அளவில் இதற்காக போராடிய மக்கள் பற்றிய அணுகுமுறை போராட்டங்கள் பற்றி குறிப்புகள் இந்த நூலில் இல்லாமல் இருக்கிறது
(
ரூ 450 எதிர் பதிப்பகம், பொள்ளாச்சி வெளியீடு
’ரேகை’, நாவலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக “நல்லி திசைஎட்டும் விருது-2024”–ஐப் பெற்றவர்.
மொழியாக்கமும் நானும் :-பேரா. ராம்கோபால்
வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை! மூல நூலின்
ஆன்மாவை, வாசகர் தரிசிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்! அதற்காக, வரம்பிற்கு உட்பட்டு,
மூலத்தின் ஆன்மாவை சிதைக்காமல், சில மாற்றங்களை மொழியாக்கம் செய்பவர், செய்வதில் தவறு
இல்லை என்றே நான் நினைக்கிறேன். மொழியாக்கம் செய்யப்பட்ட நூலைப் படிக்கும் வாசகர், மூல
நூலின் ஆசிரியர்பால் ஈர்க்கப்பட்டு, அவரின் பிற நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் அவரின்
உள்ளத்தில் முளைவிட வேண்டும். அதற்காக, அந்த மொழியைக் கற்க வேண்டும், என்ற பேராவல்
வாசகர் மனதில் கிளைவிட வேண்டும் என்பதைக் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறேன்.
இதற்காக, மூல நூலின் படைப்பாளிக்கும், வாசகருக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க, என்
மொழியாக்கங்களில் என்னால் முடிந்தவரை முயன்றிருக்கிறேன்.
அதற்காக, சில சமயம் ’எதிர் வினை’ களையும் எதிர்கொண்டிருக்கிறேன். அவ்வாறு எதிர்
வினையாற்றுபவர்களுக்கு, என்னுடைய ஒரே பதில்: ’ஒரு படைப்பாளி தன்னுள் இருக்கும் தாகத்தை
தணித்துக் கொள்ளவே ஒரு
படைப்பைப் படைக்கிறான்! ஆனால், ஒரு மொழியாக்கம் அப்படி அல்ல: அது ஒரு பரந்த வாசகர்
வட்டத்தை அடைவதற்காகவே செய்யப்படுகிறது.
அவ்வாறில்லையெனில், ஒரு நூல் மொழியாக்கம் செய்யப்படுவதின் நோக்கம்
தான் என்ன? உப்புசப்பற்ற, வாசகரை காத தூரம் ஓட வைக்கும் விதத்தில், மொழியாக்கம் செய்வதால்
யாருக்கு, என்ன பயன்? பேகன், ஹெமிங்வே, சுஜாதா, போன்ற ’நடைக்’ கென்றே அறியப்பட்ட
எழுத்தாளர்களின் படைப்புகளை மொழியாக்கம் செய்யும் போது, அந்த நடையை மொழியாக்கத்தில்
கொண்டுவர வேண்டியது அவசியம்! மற்றபடி, அங்கங்கே, சில ’அத்துமீறல்களை’ச் செய்வதில் தவறு
இல்லை என்பது என் கருத்து!
என்னுடைய இந்தக் கருத்து ’சரி’யென்று நான் மொழியாக்கம் செய்த நூல்களைப் படித்த வாசகர்கள்
சொல்லியிருக்கிறார்கள்! என்னுடைய மொழியாக்க நூல்களைப் படித்த போது சற்றும் சலிப்பே
வரவில்லை, என்று பல நண்பர்கள்
சொல்லியிருக்கிறார்கள். ஒரு வாசகர், தமிழிலிருந்து, நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த, பவா.
செல்லதுரையின் நூலைப் படித்துவிட்டு, என்னிடம்
கேட்டார், “யார் இந்த பவா செல்லதுரை? He must be a very good writer!” இந்த வாசகர்,
அந்தக் காலத்திலேயே, மும்பை ஐ.ஐ.டி-ல் படித்தவர். கப்பல் கட்டும் துறையில் மிக உயர்ந்த பதவி
வகித்தவர். சங்க இலக்கியம் மற்றும் ஆங்கில
1
இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் உள்ளவர்! ஆனால், கல்கிக்குப் பின்னான தமிழ் படைப்புகளைப் பற்றி
அவ்வளவாகத் அறியாதவர். இவர், என் மொழியக்கத்தைப்
படித்துவிட்டு, பவாவைப் பற்றி விசாரிக்கிறார் என்றால், எனக்கு அதைவிட வேறென்ன வெகுமதி
வேண்டும்?
“Fidelity to the original can coexist with creativity,” என்று சமீபத்தில் மறைந்த மொழியாக்க
முன்னோடிகளுள் ஒருவரான பேரா.க.செல்லப்பன் குறிப்பிடுகிறார். மொழியாக்கத்தில் மூன்று நிலைகள்
இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். மூலப் படைப்பும், மொழியாக்கமும் ஒன்றுடனொன்று
செம்புலப்பெயல் நீர் போலக் கலந்திருப்பது முதல் நிலை! அமெரிக்கக் கவிஞன் இராபர்ட் ஃப்ராஸ்ட்
சொல்வதைபோல், “less than two but more than one,” என்று மொழியாக்கம் செய்பவர் உணர்வது
இரண்டாம் நிலை!
“நான் பேச நினைத்தையெல்லாம் நீ பேச வேண்டும்!” என்று படைபாளி சொல்வதை மொழியாக்கம்
செய்பவர் உணர்ந்து, உள் வாங்கி, மொழியாக்கத்தில் ஈடுபடுவது இறுதி நிலை!
ஆனால், இது, நெருப்பாற்றின் மேல், கத்திமுனையில் நடனமாடும் காரியம்! அதுவும், மொழியாக்கம்
செய்பவருக்கு, கொஞ்சம் படைப்பாற்றலும் இருந்துவிட்டால், அவன் பாடு பெரும் பாடு! ஒரு புறம்
அவன் கற்பனை கொதிக்கும், மறபுறம் அவன் அறிவு அதை, ‘அடக்கு அடக்கு’ என்று கடிவாளம்
போடும்! இரண்டுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டு அவன், இருதலைக்கொள்ளி எறும்பாகத்
தவிக்க வேண்டும்!
பல சமயங்களில், மூல நூலில், ஆசிரியர் மிகச் சுலபமாக ஒரு சொல்லை எழுதியிருப்பார்.
மொழியாக்கம் செய்யும்போது, அதற்கு நிகரான சொல் கண்ணாமூச்சி காட்டும்! சரியான சொல்
கிடைக்கப் பல நாட்கள் தவமிருக்க வேண்டிய நிலையும் ஏற்படும்! கண்ணாமூச்சி காட்டிய சொல்,
திடீரென்று, கனவில், பிரயாணத்தின் போது, ஏன் கழிவறையில்கூட, காட்சி தரும்! அப்பொழுது,
கிடைக்கும் பேரானந்தத்தில், இறை நம்பிக்கை உள்ளோர் இறைவனைக் காண்பர்; இல்லாதோர்
இறும்பூது எய்துவர்!
நான் மொழியாக்கம் செய்து, எனக்கு ஆதம திருப்தி அளித்த நூல் தீரமிக்க இந்தியர்கள்! ஆங்கில மூல
நூல், INDIA’S MOST FEARLESS எழுதியவர்கள்
SHIV AROOR AND RAHUL SHINGH.
தமிழில் வெளியிட்டோர் எழுத்து பிரசுரம், ஜீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை.
2
இந்திய வீரர்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பேசும் இந்த நூல்களை மொழிபெயர்த்த
போது, பல இடங்களில், நான் கண்
கலங்கியிருக்கிறேன்! முதல் படியைப் படித்துப் பார்த்த என் மனைவியும் கண்கலங்கினார். படித்துப்
பார்த்தால், நீங்களும் கண் கலங்குவீர்கள்!
இந்த நூல்களை வாங்கிப் படியுங்கள்! அவற்றில்லுள்ள வீரர்களின் கதைகளை உங்கள்
குழந்தைகளிடமும், மனைவியிடமும், நண்பர்களிடமும் கூறுங்கள்! திருமண விழாக்களின் போது,
மணமக்களுக்குப் பரிசாக அளியுங்கள்! முடிந்தால், நம் இராணுவ வீரர்களின் உதவி நிதிக்கு நிதியளித்து
உதவுங்கள்! கூகுளில் தோடினால், ‘லிங்க்’ கிடைக்கும்! ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை
நான் இந்த நிதிக்கு அனுப்பி வருகிறேன் என்பதை மகிழ்ச்சியுடனும், மிக்க பணிவுடனும் தெரிவித்துக்
கொள்கிறேன்!
உங்கள் கனிவான கவனத்திற்கு இன்னுமொரு வேண்டுகோளை!
நானும், என் மனைவியும் உடல் தானத்திற்கு சம்மதக் கடிதம் கொடுத்திருக்கிறோம்! நீங்களும்
உடல்தானம் செய்வதைப் பற்றி யோசியுங்கள்! உங்கள் உடல் தானம் அரசு மருத்துவக் கல்லூரிகளில்
படிக்கும் மாணவர்கள் சிறப்பாக மருத்துவம் கற்கப் பேருதவியாக இருக்கும்!
நிற்க, எவ்வளவுதான் சிரமப்பட்டு மொழியாக்கம் செய்தாலும், படைப்பாளிகளும், பதிப்பாளர்களும்
மொழியாக்கம் செய்பவனை மதிப்பதே இல்லை! அவன், என்றும் வாடகைத் தாய்தான்! பல
சமயங்களில், அவன் பெயர்கூட முன் அட்டையில் இடம் பெறாது! அவனைப் பற்றிய குறிப்பும் இடம்
பெறாது! இன்னும் சொல்லப்போனால், சில சமயம், மொழியாக்கம் செய்தவருக்கு
அறிவிக்கப்படாமலேயேகூட, அவன் மொழியாக்கம் செய்த நூல் வெளியிடப்படும் அவலமும்
நடப்பதுண்டு! அந்த வலியை நான் இரண்டு முறை அனுபவித்திருக்கிறேன்! ’ராயல்டி’(?)- –அதைப்பற்றி
பேசாதிருத்தலே நலம்! The less said the better!
திரு. சுப்ரபாரதிமணியன் மட்டும் இதற்கு விதிவிலக்கு! நான் அவருடைய நூல்கள் சிலவற்றை
மொழிபெயர்த்திருக்கிறேன்! ’வேலை’ முடிந்ததும் உடனே சன்மானம் அளித்து விடுவார், நூல் அச்சில்
வருமா, வராதா என்பதைப் பற்றி,
கவலைப்படாமல்! அவர் ஓர் அபூர்வப் பிறவி! (’கையிலே காசு வாயிலே தோசை’!)
மொழியாக்கத்தின் வலிகளையெல்லாம் அனுபவித்து, அவமானங்களால் அங்குமிங்கும் உதைபட்டு,
நான் மனம் வெதும்பி எழுதிய கவிதை:
பிரசவம்
படைப்பாளிக்கு
சில படைப்புகள் சுகப்பிரசவம்!
சில கத்திப் பிரசவம்!
மொழிபெயர்ப்பாளனுக்கோ
எல்லாமே கத்திப் பிரசவம்,
மயக்க மருந்தில்லாமல்!
அவன் வேதனை யாரறிவார்…
தெய்வம் போல் மனைவி மட்டுமே அறிவாள்!
நன்றி! வணக்கம்!
ராம்கோபால் (தொடர்புக்கு: 9965412116)
பி.கு. கட்டுரையாளார், என்னுடைய ’ரேகை’, நாவலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக “நல்லி திசைஎட்டும் விருது-2024”–ஐப் பெற்றவர்.
Thanks subrabharathi. I have heard about you. Thanks for the encouragement.
108 ஓவியங்களுடன் சிறுவர்களின் ஓவிய கண்காட்சி
காந்தி ஜெயந்தி ஒட்டி பள்ளி சிறுவர் சிறுமிகள் வரைந்த பல்வேறு மையங்களைக் கொண்ட 108 ஓவியங்கள் கண்காட்சி பாண்டியன் நகர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் நடைபெற்றது. கனவு மாடி வீட்டு தோட்டம் வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் அந்தப் பகுதி சார்ந்த பல்வேறு குழந்தைகள் பங்கு பெற்றனர்.
தேசிய தலைவர்கள், சுற்றுச்சூழல் போன்ற தலைப்புகளில் அந்த ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன பொதுமக்கள் இந்த ஓவியங்களை கண்டு களித்து சிறுவர்களை பாராட்டினர் அவர்களுக்கு புத்தகப் பரிசளிப்பும் சான்றிதழ் அளிக்கப்பட்டன.
தகவல் : சுப்ரபாரதிமணியன்
எனக்கு மிரட்டல்கள்:
1. ஈசா யோகா மையத்தில் இந்த வார காவல்துறை விசாரணைக்கு மையமாக வந்த வழக்கில்
கனவு ஜீலை இதழில் வெளிவந்த சிறுகதை ( ராமன் முள்ளிப்பள்ளம் எழுதிய மழித்தலும் நீட்டலும் மகளுக்கில்லை என்ற கதையை அவர் அந்த வழக்கு சாட்சியாக சமர்ப்பித்ததை அவர் தெரிவித்ததை ஒட்டி நான் முகநூலில் பதிவு செய்தது )..
2. நான் முக நூலில் பதிவு செய்திருந்த என் திரைக்கதையில் ஒன்றில் வரும் சம்பவங்கள் தன் நணபர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்ததை நான் பயன்படுத்தி இருக்கிறேன் என்றும் இது சரியல்ல என்றும் ஒரு கோவை நண்பர் ஒருவர் .
இவை தீவிரமானால் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். Oct 2024
3. சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 9 / 1098
முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300
சுப்ரபாதிமணியனின் நாவல் 1098
( 1098 என்பது இளம் சிறார்கள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான புகார் எண் )
1098
ஜான்சி என்ற இளம் பெண் தன் சித்தியால் (தகப்பனின் இரண்டாம் மனைவி) விபச்சாரத்துக்கு தள்ளப்படுகிறாள். இது காவல்துறையின் கண்காணிப்பிற்கு சென்று கைது செய்யப்படுகிறார்கள்.
அதன் பின் குழந்தைகள் நல வாரியம் காவல்துறை என்று விசாரிப்பும் , தனிமைப்படுத்தலும் தொடர்கிறது
ஆனால் நீதிமன்றத்தில் விசாரணையின் போது அந்தப் பெண் நீதிமன்ற சூழலில் காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் பெரும்பாலும் மௌனமாக இருந்து விடுகிறாள்.
அதேபோல தன் தகப்பனும் சித்தியும் கூட பிறழ்வு சாட்சியாக மாறி எதுவும் நடக்காத மாதிரி மௌனமாக இருக்கிறார்கள். இது நீதி.மன்றத்திற்கு சிக்கல் ஆகி அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். காரணம் சித்திக்கும், தகப்பனுக்கும் தரப்படுகிற பணத்தின் காரணமாக அவர்கள் அதிலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.
இப்போது ஜான்சியின் உயிருக்கு ஆபத்தாகிறது. அவள் ஒரு மலைப்பிரதேசத்திற்கு சென்று அங்கு கூலி வேலை செய்ய ஆரம்பிக்கிறாள் .
தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறாள் .அதுதான் இந்த நாவலின் மையம் .
Kovai ilaykiya santhippu
தூரிகை சின்னராஜ் உரையில்..
எழுத்தாளர் பொன் குமார் புலிவால் பிடித்த கதை என்கிற புத்தகத்தில் வெளியாகி உள்ள தனது பேட்டியின் முதல் கேள்வியை இப்படி தொடங்குகிறார்.
தாங்கள் நாடறிந்த ஒரு படைப்பாளி பல தளங்களில் இயங்கி வருபவர் இப்பொழுதும் நீங்கள் முதல் படைப்பை எழுதிய மனநிலையை எழுதுகிறீர்களா
ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது என்றும் நான் பழக்கப்பட்ட முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்கள் மத்தியில் இருந்து மக்களுக்காக எழுத வேண்டுமா என்ற குழப்பமும் என்னிடம் இருந்தது ஆனால் நான் என் முதல் சிறுகதையை சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என்பதை இப்பொழுது நினைக்கிற பொழுது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது திருப்பூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த விழிப்பு என்கிற இடதுசாரிகளில் என் முதல் சிறுகதை சுதந்திர வீதிகள் என்று சிறுகதை வெளிவந்தது அது கதை இந்திய நாட்டின் மிக மோசமான ஒரு காலகட்டமான அரசியல் அவசரநிலை காலகட்டத்தில் நடப்பதாக காட்டப்பட்டது இன்றைக்கு கூட அவசரநிலை காலகட்டத்தை நினைவுபடுத்தும் சூழல்களும் சட்டங்களும் தென்படுகின்றன அந்த வகையில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் சாதாரண குடிமக்கள் நிலைமை எப்படி இருந்தது என்பதை ஒரு கால்பந்தாட்ட வீரரை மனதில் வைத்துக் கொண்டு எழுதிய அந்த கதை இப்பொழுது கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றுகிறது
இவ்வாறாக முடிகிறது நமது படைப்பாளரின் பதில்.
சுப்ர பாரதி மணிகண்டன் அவர்களின் எழுத்து ஆரம்பமே இடதுசாரி சார்ந்தும் தொழிலாளர்கள் நலன் சார்ந்தும் சூழல் சார்ந்தும் இன்றளவும் தொடர்வது ஆச்சரியம் இல்லை. தனது படைப்புகளில் சிவப்பை அவர் எப்பொழுதும் கலந்து கொள்ள தவறியதே இல்லை.
ஹைதராபாத்தில் பணி நிமித்தம் காரணமாக வாழ்ந்த காலத்தில் எழுதிய ஐதராபாத் நாவல்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மற்றும் சிலர் நாவலில் பிச்சை என்கிற கதாபாத்திரம் நாவல் முழுவதும் ஒரு போராட்ட கள நாயகனாக வலம் வருகிறார். அதே ஐதராபாத்தில் நானும் சில காலம் பணியாற்றி இருந்தேன் அப்பொழுது பிபிசிங் பிரதமராக ஆட்சி புரிந்த காலத்தில் மண்டல் பரிந்துரைகளை அறிமுகப்படுத்திய காலம் மிகவும் போராட்டம் மிக்க அந்த ஹைதராபாத் வாழ்க்கையை நான் நேரில் பார்த்தவன் என்கிற வகையில் அது எவ்வளவு முக்கியமானது என்பதையும் நான் அறிவேன்.
சுப்ர பாரதி மணியன் அவர்கள் மற்றும் சிலர் என்கிற நாவல் தெலுங்கானா போராட்டத்தில் காலகட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அதிலே வருகின்ற சில போராட்டங்கள் இன்று நடைபெறுகிறதா என்பது கூட அதிகமாக இருக்கிறது காரணம் ஒரு சிறு விடயங்களுக்காக மட்டும் அல்லாமல் மக்களின் போராட்டம் என்றும் சுருக்கி விடாமல் அரசியல் தாண்டியும் அனுதினமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது கே பாலச்சந்தர் அவர்களின் ஜாதிமல்லி படம் கூட அதைத்தான் பிரதிபலித்தது. அந்த காலகட்டத்தில் நான் சந்தித்த ஸ்கர்க் யூ என்ற வார்த்தைகள் தொடர்ச்சியாக நாவலில் குறிப்பிடப்படுகின்றன. மற்றும் சிலரில் ஒரு இளைஞன் நெசவு தொழில் செய்து அந்த துணி வியாபாரத்தை ஹைதராபாத்தில் நடத்துகின்ற வாழ்வியல் போராட்டமும் அந்த காலகட்டத்தில் நடைபெற்ற மொழி போராட்டங்களும் போராட்டமும் அவரை எவ்வாறு தொழில் ரீதியாக பாதித்தது என்பதையும் பின்னர் அவர் அந்த தொழிலில் இருந்து அரசியலுக்கு நுழைவது வரை நாவல் அணுவாக விவரிக்கிறது.
அந்த நாவலை மற்றவர்கள் எழுத்தாகவும் காட்சியாகவும் வாசிக்கிற பொழுது நான் மண்டல் பரிந்துரைகளை அறிமுகப்படுத்திய பொழுது அங்கே வாழ்ந்த சூழலில் அதிகாலையில் வீட்டை விட்டு பழமையில் தூரம் பணி நிமித்தமாக பயணப்படுகின்ற பொழுது பார்த்த மொத்த ஹைதராபாத்தையும் அவர் காட்சிப்படுத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விநாயகர் சிலைகளை பிரம்மாண்டமான உயரங்களில் தெருமுனையில் வைத்து பூஜை செய்வது போன்றவற்றையெல்லாம் நான் நேரில் பார்த்து உணர்ந்ததை சுப்ரபாதி அண்ணன் படைப்புகளில் எவ்வித புனைவுகளும் இல்லாமல் காண முடிந்தது. குறிப்பாக போராட்டம் என்றால் மாணவர்கள் முதல் அரசியல் மற்றும் பொதுமக்கள் வரை கலந்து கொண்டு பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு இடையூறு செய்யும் விதமாக ஊரடங்கு உத்தரவுகளை அடிக்கடி பிறப்பிப்பது உண்டு.
இரட்டை நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களை அவர் பதிவு செய்துள்ள விதம் நான் சற்றும் மிகைப்படுத்தாமல் பார்க்க சம்பவங்களே குறிப்பாக அந்த நகரின் வாழ்வியல் சூழல் போராட்ட களம் எனது ஓவியப் பணிக்கு இடையூறாக இருந்த காலகட்டத்தில் நான் ஊர் திரும்புகிற பொழுது நான் வந்த காக்காச்சியா எக்ஸ்பிரஸ் என்கிற ரயில் வண்டியை தீ வைத்த போது அதிலிருந்து கீழே இறங்கி தப்பித்தவன் என்கிற முறையில் அவருடைய நாவலில் நுண்ணிய அரசியலை மட்டுமல்ல கூர்ந்து கவனித்த போராட்டங்களை தவறாமல் பதிவு செய்திருந்தார் இன்று தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு இரண்டு முதல்வர்கள் ஆட்சி செய்யும் சூழலில் இன்று கூட ஏழுமலையானின் பிரசாத வடிவில் அரசியல் தொடர்கிறது என்றால் அந்தப் போராட்ட களம் எவ்வளவு சிவந்த காலமாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். எனவே அவர் தான் வாழ்ந்த தான் பார்த்த காட்சிகளை தனது படைப்புகளில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்யும் அதே சமயத்தில் தோழர்களின் போராட்டங்களை தவறாமல் இடம் பெறச் செய்திருக்கிறார்.
அண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சௌந்தர கைலாசம் நாவல் பரிசை வென்ற அந்நியர்கள் என்கிற நாவலில் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் வாழும் வாழ்க்கையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். அதில் வரும் துளசி என்கிற கதாபாத்திரத்தை சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகளை நாவலாக்கும் முயற்சியில் வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் இருந்து வந்து பணியாற்றும் பல மனிதர்களின் அவல நிலையை நாவலில் பரவலாக சித்தரிக்கிறார்.
பொதுவாக நாம் வடக்கன்கள் என்று கிண்டல் செய்யும் அந்த வார்த்தையில் இருக்கும் பகடியை விட அந்த மனிதர்கள் அவர்களுக்குள்ள துன்பங்கள் அவர்களது உழைப்பை முதலாளிகள் எவ்வாறு சுரண்டுகிறார்கள் போன்றவற்றையெல்லாம் அழகாக வெளிச்சம் போட்டு காட்டி ஒரு தொழிலாளர் சங்கம் செய்ய வேண்டிய வேலையை இந்த நாவல் செய்கிறது.
இந்தியா என்கிற ஒருங்கிணைந்த ஒரு தேசத்தில் நம் நாட்டு மக்களை அகதிகளாக அந்நியர்களாய் திருப்பூரில் வசிப்பதின் துன்பத்தை இந்த நாவல் சற்று வேதனையுடன் பதிவு செய்கிறது.
மொழிச் சிறையில் குழந்தை தொழிலாளர்களின் வேதனைகளும் சுமங்கலி திட்டத்தின் குறைகளையும் பாத்திரங்கள் மூலம் விளக்கி இருப்பது எழுத்தாளர் வாழும் உள்ளூரின் அன்றாட காட்சி.
சுற்றுச்சூழலை பாதுகாக்காவிடில் தண்டனைகள் தேவையா
சுப்ரபாரதி மணியன்
எங்கள் ஊர் நொய்யல் நதி மாசுபாட்டிற்கு காரணம் சாயப்பட்டறைகள்., சலவைப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவுநீர் மற்றும் சாயநீர் நதி நீரில் கலந்து சிரமப்படுத்துவது என்று தான் பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அதே நேரத்தில் வீட்டு கழிவுகளும், நகராட்சியின் வெவ்வேறு தொழிற்சாலை மற்றும் வீட்டுப் பயன்பாட்டில் இருந்து வெளியாகும் தண்ணீரும் எந்த வித சுத்திகரிப்பும் இல்லாமல் ஆற்றில் கலப்பதும் நொய்யல் மாசுபாட்டிற்கு முக்கியமான காரணம்.
இது மனிதர்களுக்கு பல வித வியாதிகளை கொண்டு வருகிறது வாழும் நல்ல சூழ்நிலை இல்லாமல் செய்து விடுகிறது.. பல நுண்ணுயிர்களை கொன்று விடுகிறது. நுண்ணுயிர்கள் இல்லாமல் செய்து விடுகிறது. இது நொய்யலுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல்வேறு நதிகளுக்கும் பொருந்துவதாகும் அப்படித்தான் பெரும்பான்மையான நதிகள் மாசுபட்டிருக்கிறன.
இந்த மாசுபாட்டை தடுக்க சட்டங்கள் இல்லையா... சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அதை கடைபிடிக்க சொல்லும் அரசு நிர்வாகம் சரியாக இல்லை. ஊழல் மிக்கதாக இருக்கிறது விதி மீறல்கள் என்பது சாதாரணமாகிவிட்டது. இந்த விதி மீறலை ஒரு சாதாரண பனியன் உற்பத்தியாளர் உள்ளூர் உற்பத்திக்காக சாயம் பெற்று அந்த சாய தண்ணீரை தெருவில் விடுவது அல்லது அங்குள்ள கழிவுநீர் போகும் இடத்தில் விடுவது என்பது சாதாரண அங்கு இருந்து இது ஆரம்பிக்கிறது. இது பின்னால் பெரிய சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும், வெளியேற்றும் சாய தண்ணீரில் அடர்த்தி அளவு அது சார்ந்த நடவடிக்கைகளையும் முக்கியமாக அமைதுது விடுகின்றன எனவே சாதாரண மக்களும் அவருடைய வாழ்க்கையும், தொழிலும் சிரமமாகின்றன. இந்த சூழலை எளிதாக்க சுற்றுச்சூழல் சார்ந்த சட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும் அதை கடைபிடிக்காதவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் தண்டனை அச்சம் தருகின்றது. வேறு தேர்வு இல்லை. நீடித்த முன்னேற்றம் சார்ந்த கூறுகளை அது கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரண மக்களின் வாழ்க்கையையும் தொழில் செய்வதற்கான சூழலையையும் கொண்டு வருவது அரசாங்கத்தின் முக்கிய நிர்வாகமாக இருக்கிறது .அதற்கு சற்று சூழல் சார்ந்த சட்டங்கள் உதவும் ஆனால் அந்த சட்டங்களை வெளிநாட்டில் அமல் படுத்துவது போல இங்கே அமல்படுத்துவதில்லை. முன்னால் சொன்ன மாதிரி சின்ன சின்ன விதி மீறல்கள் - வீட்டில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை கால்வாய்களும் வாய்க்கால்களும் நதிகளும் உள்வாங்கிக் கொள்கின்றன. இதில் ஆரம்பிக்கும் இந்த விதி மீறல்கள் பெரிய அளவில் கழிவுகளை அவர்களுக்கும் நிலத்தடி நீர் மாசுபட பூமிக்கும் கொண்டு வந்து விடுகிறது. ஆனால் இந்த சிறை தண்டனை சுற்றுச்சூழல் கெடுதல் செய்பவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று ஒரு குழு இருக்கிறது. அப்படி தண்டனை எல்லாம் வேண்டாம் அதிலும் குறிப்பாக சிறை தண்டனை இருந்தால் அதை எடுத்து விடுவது நல்லது என்று பலர் விரும்புகிறார்கள். எப்படி மரண தண்டனை கூடாது என்று விரும்புகிற வலியுறுத்துகிறவர்கள் இருப்பது போலவே சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் தண்டனை கொடுக்கப்படுவது சரியல்ல என்று சில மனித உரிமை மனிதர்களும் நினைக்கிறார்கள்.
ஆனால் இப்படி கழிவுநீர் தொழிற்சாலைகளில் இருந்தும் வீடுகளில் இருந்தும் வந்து நதிகளில் கலப்பது நதி நீரை மாசுபடுத்துவது என்பது பல இடங்களில் பூமி மாசடைந்து போகவும் நிலச் சரிவுகள் ஏற்படவும் காரணங்களாக அமைகிறது இதனால் சில நகரங்களுடைய போக்குவரத்து பாதிக்கப்படுகிற அளவு சாலைகள் பாதிக்கப்படுகின்றன. பனி உருகுதல், மேக வெடிப்பு, பெரிய அளவில் வெள்ளம், நிலச்சரிவு என பாதிப்புகளை பின்னால் இது கொண்டு வரும். இதற்கு உதாரணமாக இமயமலை பகுதியில் 7000 அடி உயரத்தில் இருக்கும் உத்தரகாண்டின் ஜோஷிபா நகரம். அங்கு இது போன்ற வளர்ச்சிப் பணிகள் அதிகமாகி நகரம் சீர்கெட்டு புதைவு பெற தொடங்கியது. அங்கே தேசிய அனல் மின் நிறுவனம் அமைந்து நீரும் மின் உற்பத்தி திட்டத்திற்கு உதவுகிறது. ஆனால் அதே சமயம் அது பேரழிவுக்கு முக்கியமாக காரணமாக இருக்கிறது நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று அங்கு பல தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டு சுரங்கத்தில் சாவது பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன .இமயமலையில் ஏற்படுகிற மாற்றங்கள் இப்படித்தான் மண் பாகங்களும் நகர பாகங்களும் புதையுண்டு போவதை சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
இந்த கழிவுகளை சேர்ப்பது என்பது இப்படித்தான் பூமியின் பாகங்களை புதை உண்டு போக வைக்கும். சாய கழிவுகளை தேக்குவதற்கு என்று ஒரு அணை திருப்பூர் பகுதியில் உள்ளது ஒரத்துவ பாளையம் அணை. ஆனால் இன்றைக்கு அந்த அணையின் கொள்ளளவும் அது தேக்கும் சாய தண்ணீரின் அளவும் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் அந்தப் பகுதி விவசாய மக்கள் அதெல்லாம் இல்லை இன்னும் இப்படியே தான் இருக்கிறது என்கிறார்கள். இவற்றைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் சட்டங்களில் சரியான திருத்தங்கள் தேவை என்று பல விவாதங்கள் எழுதுகின்றன. ஆனால் எந்த தண்டனையும் இல்லாமல் இந்த சட்டங்களும் திருத்தங்களும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பலர் விரும்புவது கூட வினோதமாக தான் இருக்கிறது.
October 2024
மாதம் பேசும் புதிய சக்தி இதழில் .. என் கட்டுரை
உலகத் திரைப்படம் :
ஜோன் ஆப் இண்ட்ரெஸ்ட் / . சுப்ர பாரதி மணியன்
The zone of interest oct issue
அந்த ராணுவ அதிகாரி குழந்தைகளுடன் ஆற்றில் குளிக்கப் போகிறார். குளித்துக் கொண்டிருக்கும் போது ஆற்றில் கருப்பாக சில குப்பைகள் போன்ற ஏதோ வருகிறது. குழந்தைகளின் உடம்பிலும் ஒட்டிக் கொள்கிறது. வீட்டிற்கு கூட்டி வந்து குளியல் அறையில் குழந்தைகளை நன்கு குளிப்பாட்டுகிறார் .அந்த குழந்தைகளின் உடலில் ஒட்டி இருக்கும் கருப்பு துகள்கள் யூதருடைய பிணங்களின் சாம்பல்கள் என்பது அவருக்கு தெரியும்.. அந்த யூதர்களின் உடல்கள் என்பதில் குழந்தைகள் கூட இருக்கலாம் என்பதும் அவருக்கு தெரியும். ஆனால் அவரின் அந்த குழந்தைகளுக்கு தெரியாது.
அந்த ஆற்றையே ஒட்டி ஒரு பிரம்மாண்டமான மாளிகை இருக்கும். அதுதான் அந்த அதிகாரியின் வசிப்பிடம். அங்கு தான் மனைவியுடன் குழந்தைகளுடன் அவர் வசிக்கிறார். அந்த வசிப்பிடத்திற்கு அருகில் உயரமான சுவர்கள் கொண்டதான ஒரு இடம் இருக்கும். அது சிறைச்சாலை அங்கே யூதர்கள் மீது நாஜிக்கள் நடத்தும் பல கொடுமைகள் நடைபெறும். அவர்கள் எரிக்கப்படுவார்கள். விச வாய்வு கொண்டு கொல்லப்படுவார்கள். ஆனால் அதனுடைய எந்த சாயலும் இல்லாமல் இராணுவ அதிகாரியின் வீட்டில் ஆடம்பர நடவடிக்கைகளும் வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கும்.
உலகப்போர் பற்றிய படங்கள் யூதர்கள் மீதான வன்முறைகள், அட்டூழியம் ஆகியவற்றைப் பற்றி விலாவாரியாக பல படங்கள் சொல்லி இருக்கின்றன. அந்த படத்தின் தன்மை, அந்த கொடுமையின் விவரிப்பு எதுவும் இல்லாமல் அதே விஷயங்களில் அழுத்தமாக சொல்கிற தன்மையால் இந்த படம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த படத்தில் எந்த காட்சியிலும் அந்த சிறைச்சாலையோ அங்கு எரிக்கப்படும் மனிதர்களோ காட்டப்பட மாட்டார்கள். இது போன்ற முகாம்களில் 20 லட்சத்திற்கு மேற்பட்ட யூதர்களை விச வாயு செலுத்திக் கொண்டிருக்கிறது ஹிட்லரின் நாஜி அரசு. அந்த வேலை செய்கிற ஒரு ராணுவ அதிகாரியின் குடும்பம் பற்றியதுதான் இந்த கதை.
இவர்கள் இப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை சொல்வதற்காக பின்னால் வரும் காட்சிகளில் செத்துப் போன யூதர்கள் விட்டு சென்ற செருப்புகளும் உடைமைகளும் குவிந்து கிடப்பதையும் இன்னொரு புறத்தில் அவர்களின் மண்டை ஓடுகளை கிடப்பதையும் சில காட்சிகள் காட்டும். அவ்வளவுதான். போர் சார்ந்த வன்முறையும் நாஜிக்கள் சார்ந்த வன்முறையும் பற்றி அழுத்தமான காட்சிகளை தந்து நிலைகுலைய வைக்காமல் இன்னொரு புறத்தை காட்டுவது இந்த படத்தின் சிறப்பாக இருக்கிறது.
இந்த படத்தின் திரைக்கதை வடிவத்தை பொறுத்த அளவில் வெவ்வேறு அடுக்குகளை கொண்டதாக இருக்கிறது. ராணுவ அதிகாரியின் வீடு, சிறைச்சாலையைச் சுற்றியிருக்கும் இடங்கள் என்றபடி.. சிறைச்சாலை நிர்வகிக்கிற ராணுவ அதிகாரி அந்த ஆடம்பர மாளிகையில சுகமாகவே இருக்கிறார். அந்த சிறைச்சாலையின் ராணியாக அவரின் மனைவி தன்னை பாவித்துக்கொண்டு மற்றவர்களிடம் வேலை வாங்குகிறார். அவரும் தன்னுடைய வேலையில் நல்ல பெயர் வாங்குகிறார். அப்படி சென்று கொண்டிருக்கும்போது தான் தலைநகரில் இருக்கும் ஒரு சிறைச்சாலைக்கு அவர் மாற்றம் செய்யப்படுகிறார். ஆனால் அவர் மனைவி அந்த ஆடம்பர வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார். கணவர் வேண்டுமானாலும் புதிய இடத்திற்கு வேலை சென்று விட்டு முடிகிற போது குடும்பத்திற்கு திரும்பலாம் என்று சொல்கிறார். புதிய நகரத்தில் சிறைச்சாலைகளை எப்படி புதிய முறையில் வடிவமைக்கலாம் எப்படி கொஞ்ச நேரத்தில் அதிகமானவர்களை கொல்லலாம் என்பது பற்றி தான் அந்த ராணுவ அதிகாரியும் தீவிரமாக சிந்தித்து செயல்பட அவருக்கு கட்டளை இடப்படுகிறது.
ஐரோப்பிய முழுக்க யூதர்களை தேடித் தேடி கைது செய்து வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்ட இடங்கள், அவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எல்லோரையும் உயிரோடு வைத்திருக்க முடியாது. கொன்று போடும் திட்டத்தை நாஜி அரசு முடிவாக கொண்டு வந்து அந்த ராணுவ அதிகாரி அதை செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 2000 மனிதர்களை கொல்லும் திறனை இன்னும் அதிகமாக வேண்டும் .அவர்கள் சாம்பல்கள் காற்றில் கரைந்து போகும். அவனுடைய மரண ஓலங்கள் காற்றில் கலைந்து போகும். இதற்கான வசதிகளை, தொழில் நுட்பங்களை அவர் செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தப்படுகிறது. அவர் அதை செய்கிறா.ர் படம் முழுக்க இந்த சித்திரவதைகளை காண்பிக்காமல் மரணத்தின் அவலக் குரலை பயன்படுத்தி இருப்பது முக்கியமான உத்தியாக இருக்கிறது மெலிசாக காதுகளில் விழும் மரண ஓலம் என்பதும் எவ்வளவு மோசமாகவது என்பதை இந்த படத்தின் காட்சிகள் காட்டுகின்றன. இந்த படத்தை பற்றி சொல்கிறபோது இந்த படம் சமீபத்திய இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையை முன்வைத்து சொல்ல முயலும் விஷயங்களை ஒப்பிட்டு பலர் பேசுகிறார்கள். அதுதான் இந்த படத்தின் முக்கிய சிறப்பாக இருக்கிறது. போரை தவிர்த்த உலகம் மற்றும் மனித நேயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் எல்லா காலத்திலும் தேவையாக இருக்கிறது என்பதை படம் சொல்கிறது .
சுப்ர பாரதி மணியன்
0
இரு உரைகள் :
1. 11/10/24 திருப்பூர் நற்பவி வாசகர் வட்டம் நடத்திய நூல்கள் அறிமுகக் கூட்டம் : சுப்ர பாரதி மணியன் உரை
பாசத்தின் பரிசு : சிறுகதைத் தொகுப்பு
திருப்பூர் அருணாச்சலம் கவிதைகள் நிறைய எழுதி இருக்கிறார் பொன் குமார் அவர்கள் தொகுத்த அம்பிகா குமரன் அவர்கள் வெளியிட்ட ” திருப்பூர் சிறுகதைகள் “ தொகுப்பில் அவரின் கதை வித்தியாசமானதாக இருந்தது.
திரைப்பட துறையினர் ஒரு கிராமத்தில் முகாம் இடுவது அங்கு வேடிக்க பார்க்க வரும் இளைஞர்கள் இளைஞிகளை மாலை மாற்றிக் சொல்வது ,ஆனால் அந்த கிராமத்தில் இருக்கிற பெரியவர்கள் இதை வேறு வகையில் எடுத்துக் கொண்டு வெவ்வேறு ஜாதியைச் சார்ந்தவர்களுடைய தங்களை முன்வைத்து அந்த இளைஞர்களை கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்க அவர்கள் சிரமப்படுகிறார்கள் திரைப்பட நடிகை அவர்களின் அவலத்தை பார்த்து அவர்கள் தங்கி இருக்க வீடுகள் கட்டிக் கொடுக்கும் ஒரு வித்தியாசமான மையத்தை அந்த சிறுகதையில் அவர் எடுத்து எழுதி இருந்தார்.
இக்கதையைப் பற்றிக்கேட்கையில் திருப்பூர் கொடுவாயில் நடிகை கே ஆர் விஜயா தங்கியிருந்த கால அனுபவங்களை அருணாசலம் நிறைய சொன்னார்.அதில் பல சிறு கதைகள் உள்ளன.
( இதே போல் திருப்பூர் அனுபவங்கள், விளிம்பு நிலை மக்கள், ஜாதிய உறவின் முரண்பாடுகள் பற்றி நாதன் ரகுநாதன் குவியல் குவியலாகக் கதைகளை வைத்துள்ளார் )
இந்த தொகுப்பில் உள்ள பல கதைகள் சாதாரண குடும்பங்களின் மனித உறவுகள் பற்றியும் அவர்களை வசப்படுத்தும் அல்லது பலவீனப்படுத்தும் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றியும் அதிகம் பேசுகின்றன. கிராமங்களில் மற்றும் மனித உறவுகளில் இருக்கிற ஜாதி ரீதியாக உணர்தலும் பணம் சார்ந்து வலியுறுத்தப்படுகிற தத்துவங்கள் சாதாரண மக்களுடைய வாழ்க்கையில் ஏற்படுகிற சம்பவங்களை எல்லாம் தன் வழக்கமான உரத்தக் கவித்துவத்தை மீறிய அனுபவங்களாய் இதில் எழுதி இருக்கிறார்
போலீஸ்காரர் பற்றி ஒரு கதை அப்பட்டமாக சுந்தர ராமசாமியின் கதை ஒன்றை ஞாபகப்படுத்துகிறது.
பல கதைகள் 50 ஆண்களுக்கு முற்பட்ட மனித பாச உணர்வுகளைப் பற்றிச் சொன்னாலும் அவை யதார்த்த நிலையில் இருக்கின்றன இந்த சிறுகதை தொகுப்பு மூலம் கவிதைகளும் கட்டுரையும் எழுதி வந்த அருணாச்சலம் அவர்கள் சிறுகதைகளில் தன் முத்திரை பதித்திருக்கிறார். எளிய மனிதர்களில் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எளிமையான மொழியில் பிரதியாகத் தந்தி ருக்கிறார் இந்த தொகுப்பை அவரே வெளியிட்டு இருக்கிறார் ரூபாய் 150
2 11/10/24 திருப்பூர் நற்பவி வாசகர் வட்டம் நடத்திய நூல்கள் அறிமுகக் கூட்டம்
கவிஞர் மதுராந்தகன் படித்த கட்டுரை
மாயாறு : நெடுங்கவிதைகள் சுப்ரபாரதிமணியன்
நெடுங்கவிதைகள் கூறிய இலக்கணத்தை உடைத்து புதிய இலக்கணத்தை அமைத்துவிட்டார் சுப்ரபாரதிமணியன். நெடுங்கவிதைகள் என்றால் நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா . ஒரே பொருள் குறித்த குறுஞ்கவிதைகளாகக் கூட இருக்கலாமே என்கிறார் ..
இதில் .ஆதிவாசிக் கவிதைகள் என்று பெயரிட்டவர் ஆதிவாசி ஆகவே மாறிவிட்டார். ஆதிவாசிகள் குரலில் அவர்களின் பிரச்சினையைப் பற்றிப்பேசுகிறார். 92 கவிதைகளில் 92 பிரச்சனைகளின் உருவங்களைச் சொல்கிறார். இயற்கையோடு இணைந்து ஆனந்தமாக வாழும் ஆதிவாசிகளை அழிப்பதற்காகவே சிலர் சந்தன மரங்களை வெட்டுவதும் மிருகங்களை வேட்டையாடுவது ஆதிவாசிகளை அச்சம் அடைய வைக்கின்றன .சிங்கம் புலி பூனை எனும் விலங்குகளில் கார்ப்பரேட்டுகள் எந்த இனம் என்பதில் இவருடைய உள்ளத்து உணர்வை வெளிப்படுத்துகிறார் .யானை மிதித்து செத்தாலும் எங்களுக்கு சந்தோஷம் என்பது ஆதிவாசிகளின் ஒட்டுமொத்த உணர்வுகளும் வெள்ளையர்களும் , கொள்ளையர்களும் வேட்டையாடிவிட்டு மிருகங்களை மட்டுமல்ல பொம்மக்கா மாதிரி பெண்கள்சி சீரழித்தது எத்தனை எத்தனையோ பேரை .கார்ப்பரேட்டுகளுக்கு அரசாங்கமும் போலீஸ் முதலான பாதுகாப்பு உள்ளதால் அவர்கள் மரங்களை வெட்டி வளங்களை அழித்து கட்டிடம் கட்டவும் புதிய தொழில் தொடங்கவும் ஆதரவு கிடைத்தது .ஆகவே ஆதிவாசிகள் அவர்களை எதிர்க்கும் சக்தி அற்றவர்களாக வாழ்கிறார்கள் .இந்த விஷயங்களை ஒரு கவிஞராக இல்லாமல் ஆதிவாசியாக மாறி அவர்களின் மன மன ஓட்டங்களின் அடுக்குமுறையில் அழகான குறுங்கவிதைகள் ஆகியிருக்கிறார் .இயற்கை அழிப்பு, கார்ப்ரேட்டுகளின் ஆதிக்கம், சுரண்டல் என பல்வேறு கோணங்களில் காட்டுவாசிகளின் குரல் இதில் பதிவாகியுள்ளது. தொடர்ச்சியானக் குறுங்கவிதைகள் மூலம் அதை நெடுங்கவிதை என்று முத்திரையாக்கும் பாணியைக்கொண்டு வந்துள்ளார்.சுப்ரபாரதிமணியன் இது ஒரு புதுவகை நெடுங்கவிதைகள் வகை; * ரசிக்க சிலது :
*.எட்டுக்குழந்தைக்கு தாய் நான் பொம்மக்கா
எட்டு என்ற எண்ணின் தலைப்பகுதிஉள்ளில் நான்
எட்டு எண்ணின் கால்ப்பகுதி உள்ளில் கணவன்.
எவ்வளவுதான் பார்வை மேய்ந்தாலும்
எட்டாது தூரமே நில்லடா மேஸ்திரி.
* மரத்தை மற்றவர்களுக்காய்
எங்கள் தாத்தாக்கள் வெட்டினர்.
எங்கள் பாட்டன்கள் வெட்டினர்
எங்கள் பூட்டன்கள் தாத்தாக்கள் வெட்டினர்
எங்கள் மகன்களும் வெட்டுகின்றன்ர்.
அரிவாள் கூர்மையடைந்து வருகிறது
எல்லோருக்கும் தெரியும் தானே இது
*உன் குழந்தை அழுகிறது
என் கையில் இருக்கும் அழுக்குத் துணி மூட்டையிலிருந்து
எள்ளுரண்டையை எடுத்துத் தந்ததற்காய் முகம் சுளிக்கிறாய்.
இரண்டு வயது இருக்குமா உன் குழந்தைக்கு.
லேஸ், சிப்ஸ், பாண்டா என்று நீ அரை மணி நேரத்தில் கொடுத்த்தையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
அதில் எதற்கு குறைந்து போய் விட்டது என் எள் உருண்டை.
உன் முகச் சுழிப்பிற்கு காரணம் அழுக்குத் துணியா, எள்ளுரைண்டையா
லேஸ், சிப்ஸ், பாண்டா சாப்பிடும் உன் குழந்தை 30 வயதில் எப்படியிருப்பான்.
கம்யூட்டர் என்சிஜினியர், பணக்காரன் என்றிருப்பான்
ஆரோக்கியமானவனாக இருப்பானா.
உன் முகச்சுளிப்பில் உதட்டு லிப்ஸ்டிக் தேய்ந்து விட்ட்து.
பஸ் வரும் நேரம்தான்.
என்னை சுலபமாகத் தவிர்த்து விடலாம் நீ.
இந்நூலில் அடுத்த பகுதியாய் அமைந்திருப்பது ” வெண்மையும் கருப்பும் –சுற்றுச்சூழல்-- என்பது சுப்ரபாரதிமணியனின் இந்த நெடுங்கவிதையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மேலோட்டமாக தெரிகிறது, இதில் 150 சிறுகவிதைகள் .பல விஷயங்களை கூறி செல்கிறார் அவர் கூற்றுப்படி சுற்றுச்சூழல் அழிவைப்பற்றி அக்கறையோடு எழுதியிருக்கிறார் ,கார்ப்பரேட்டுகளின் சதிவேலைகளை ஒவ்வொரு கவிதையிலும் ஆழமாக ஆழமான கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறார், பல கவிதைகள் பல கருத்துக்கள் ஒரு கவிதையில் கூறுகிறார் மண்புழுவை வாழவிடு பட்டாம்பூச்சியை பறக்கவேண்டும் யானையைப் பாடு.கவிஞனை எழுத விட வேண்டும் அப்போதுதான் புதிய கருத்துக்களை சிறந்த கவிதைகள் கவிதைகள் பிறக்கும் காலம் மாற்றம் நேரும்போது எழுத்தாளர்களின் படைப்பும் மாறும் என்கிற தொனியை வெளிப்படுத்துகிறார்
அந்த வகையில் நெடுங்கவிதைகள் என்ற வகையில் இந்த மாயாறு நூல் படைக்கப்பட்டிருக்கிறது பேச்சுக் கவிதையில் பல விஷயங்களைப் பேசும் சுப்ரபாரதி மணியனுக்கு படிக்கின்ற வாசகர்கள் ஆச்சரியமான முறையில் பார்க்க ஒரு நூலாக இது அமைந்துள்ளது .இரு நெடுங்கவிதைகள் இயற்கை சார்ந்தும் இயற்கை சார்ந்த ஆதி வாசிமனிதர்களின் உணர்வுகள் சார்ந்தும் அமைந்து இன்றைய சுற்றுச்சூழல் சிக்கல் காலத்தில் புதிய எதிர்ப்புக் குரலினைத் தந்துள்ளன.இவரின் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மந்திரச்சிமிழ் என்ற கவிதைத் தொகுதியிலும் இந்த சுற்றுச்சூழல் அம்சங்களைக்காணலாம் .( ரூ 75., கனவு திருப்பூர் வெளியீடு
சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 11 /
முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300
2 11/10/24 திருப்பூர் நற்பவி வாசகர் வட்டம் நடத்திய நூல்கள் அறிமுகக் கூட்டம்
கவிஞர் மதுராந்தகன் படித்த கட்டுரை
மாயாறு : நெடுங்கவிதைகள் சுப்ரபாரதிமணியன்
நெடுங்கவிதைகள் கூறிய இலக்கணத்தை உடைத்து புதிய இலக்கணத்தை அமைத்துவிட்டார் சுப்ரபாரதிமணியன். நெடுங்கவிதைகள் என்றால் நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா . ஒரே பொருள் குறித்த குறுஞ்கவிதைகளாகக் கூட இருக்கலாமே என்கிறார் ..
இதில் .ஆதிவாசிக் கவிதைகள் என்று பெயரிட்டவர் ஆதிவாசி ஆகவே மாறிவிட்டார். ஆதிவாசிகள் குரலில் அவர்களின் பிரச்சினையைப் பற்றிப்பேசுகிறார். 92 கவிதைகளில் 92 பிரச்சனைகளின் உருவங்களைச் சொல்கிறார். இயற்கையோடு இணைந்து ஆனந்தமாக வாழும் ஆதிவாசிகளை அழிப்பதற்காகவே சிலர் சந்தன மரங்களை வெட்டுவதும் மிருகங்களை வேட்டையாடுவது ஆதிவாசிகளை அச்சம் அடைய வைக்கின்றன .சிங்கம் புலி பூனை எனும் விலங்குகளில் கார்ப்பரேட்டுகள் எந்த இனம் என்பதில் இவருடைய உள்ளத்து உணர்வை வெளிப்படுத்துகிறார் .யானை மிதித்து செத்தாலும் எங்களுக்கு சந்தோஷம் என்பது ஆதிவாசிகளின் ஒட்டுமொத்த உணர்வுகளும் வெள்ளையர்களும் , கொள்ளையர்களும் வேட்டையாடிவிட்டு மிருகங்களை மட்டுமல்ல பொம்மக்கா மாதிரி பெண்கள்சி சீரழித்தது எத்தனை எத்தனையோ பேரை .கார்ப்பரேட்டுகளுக்கு அரசாங்கமும் போலீஸ் முதலான பாதுகாப்பு உள்ளதால் அவர்கள் மரங்களை வெட்டி வளங்களை அழித்து கட்டிடம் கட்டவும் புதிய தொழில் தொடங்கவும் ஆதரவு கிடைத்தது .ஆகவே ஆதிவாசிகள் அவர்களை எதிர்க்கும் சக்தி அற்றவர்களாக வாழ்கிறார்கள் .இந்த விஷயங்களை ஒரு கவிஞராக இல்லாமல் ஆதிவாசியாக மாறி அவர்களின் மன மன ஓட்டங்களின் அடுக்குமுறையில் அழகான குறுங்கவிதைகள் ஆகியிருக்கிறார் .இயற்கை அழிப்பு, கார்ப்ரேட்டுகளின் ஆதிக்கம், சுரண்டல் என பல்வேறு கோணங்களில் காட்டுவாசிகளின் குரல் இதில் பதிவாகியுள்ளது. தொடர்ச்சியானக் குறுங்கவிதைகள் மூலம் அதை நெடுங்கவிதை என்று முத்திரையாக்கும் பாணியைக்கொண்டு வந்துள்ளார்.சுப்ரபாரதிமணியன் இது ஒரு புதுவகை நெடுங்கவிதைகள் வகை; * ரசிக்க சிலது :
*.எட்டுக்குழந்தைக்கு தாய் நான் பொம்மக்கா
எட்டு என்ற எண்ணின் தலைப்பகுதிஉள்ளில் நான்
எட்டு எண்ணின் கால்ப்பகுதி உள்ளில் கணவன்.
எவ்வளவுதான் பார்வை மேய்ந்தாலும்
எட்டாது தூரமே நில்லடா மேஸ்திரி.
* மரத்தை மற்றவர்களுக்காய்
எங்கள் தாத்தாக்கள் வெட்டினர்.
எங்கள் பாட்டன்கள் வெட்டினர்
எங்கள் பூட்டன்கள் தாத்தாக்கள் வெட்டினர்
எங்கள் மகன்களும் வெட்டுகின்றன்ர்.
அரிவாள் கூர்மையடைந்து வருகிறது
எல்லோருக்கும் தெரியும் தானே இது
*உன் குழந்தை அழுகிறது
என் கையில் இருக்கும் அழுக்குத் துணி மூட்டையிலிருந்து
எள்ளுரண்டையை எடுத்துத் தந்ததற்காய் முகம் சுளிக்கிறாய்.
இரண்டு வயது இருக்குமா உன் குழந்தைக்கு.
லேஸ், சிப்ஸ், பாண்டா என்று நீ அரை மணி நேரத்தில் கொடுத்த்தையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
அதில் எதற்கு குறைந்து போய் விட்டது என் எள் உருண்டை.
உன் முகச் சுழிப்பிற்கு காரணம் அழுக்குத் துணியா, எள்ளுரைண்டையா
லேஸ், சிப்ஸ், பாண்டா சாப்பிடும் உன் குழந்தை 30 வயதில் எப்படியிருப்பான்.
கம்யூட்டர் என்சிஜினியர், பணக்காரன் என்றிருப்பான்
ஆரோக்கியமானவனாக இருப்பானா.
உன் முகச்சுளிப்பில் உதட்டு லிப்ஸ்டிக் தேய்ந்து விட்ட்து.
பஸ் வரும் நேரம்தான்.
என்னை சுலபமாகத் தவிர்த்து விடலாம் நீ.
இந்நூலில் அடுத்த பகுதியாய் அமைந்திருப்பது ” வெண்மையும் கருப்பும் –சுற்றுச்சூழல்-- என்பது சுப்ரபாரதிமணியனின் இந்த நெடுங்கவிதையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மேலோட்டமாக தெரிகிறது, இதில் 150 சிறுகவிதைகள் .பல விஷயங்களை கூறி செல்கிறார் அவர் கூற்றுப்படி சுற்றுச்சூழல் அழிவைப்பற்றி அக்கறையோடு எழுதியிருக்கிறார் ,கார்ப்பரேட்டுகளின் சதிவேலைகளை ஒவ்வொரு கவிதையிலும் ஆழமாக ஆழமான கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறார், பல கவிதைகள் பல கருத்துக்கள் ஒரு கவிதையில் கூறுகிறார் மண்புழுவை வாழவிடு பட்டாம்பூச்சியை பறக்கவேண்டும் யானையைப் பாடு.கவிஞனை எழுத விட வேண்டும் அப்போதுதான் புதிய கருத்துக்களை சிறந்த கவிதைகள் கவிதைகள் பிறக்கும் காலம் மாற்றம் நேரும்போது எழுத்தாளர்களின் படைப்பும் மாறும் என்கிற தொனியை வெளிப்படுத்துகிறார்
அந்த வகையில் நெடுங்கவிதைகள் என்ற வகையில் இந்த மாயாறு நூல் படைக்கப்பட்டிருக்கிறது பேச்சுக் கவிதையில் பல விஷயங்களைப் பேசும் சுப்ரபாரதி மணியனுக்கு படிக்கின்ற வாசகர்கள் ஆச்சரியமான முறையில் பார்க்க ஒரு நூலாக இது அமைந்துள்ளது .இரு நெடுங்கவிதைகள் இயற்கை சார்ந்தும் இயற்கை சார்ந்த ஆதி வாசிமனிதர்களின் உணர்வுகள் சார்ந்தும் அமைந்து இன்றைய சுற்றுச்சூழல் சிக்கல் காலத்தில் புதிய எதிர்ப்புக் குரலினைத் தந்துள்ளன.இவரின் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மந்திரச்சிமிழ் என்ற கவிதைத் தொகுதியிலும் இந்த சுற்றுச்சூழல் அம்சங்களைக்காணலாம் .( ரூ 75., கனவு திருப்பூர் வெளியீடு
சௌவுண்டம்மா நாவல் இரா பாரதிநாதன்
அறிமுகம் சுப்ர பாரதி மணியன்
சேலம் பகுதி நெசவாளர்கள் வாழ்வியல் பற்றி தொடர்ந்து பாரதிநாதன் அவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் பற்றி பல வாழ்வியல் சித்திரங்களை அவர் மூலம் பெற்றுக் கொள்கிறோம்.
நானும் கொங்கு பகுதி நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து “ தறி நாடா “ ” சப்பரம் “ போன்ற நாவல்களும் நெசவு உட்பட கட்டுரை தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறேன் பாரதிநாதன் அவர் தனது தந்தை வழிபாட்டியான சௌவுண்டம்மாவை மனதை வைத்துக் கொண்டு இந்த புனைவெளியை உருவாக்கியதாக குறிப்புகள் சொல்கின்றன. நெசவளர்கள் வாழ்க்கையில் இருக்கிற சிரமங்கள் அவர்களை வாழ வைக்கிற நம்பிக்கைகள் பண்பாட்டு அசைவுகள் இவற்றை மூலதனமாக்கி இருக்கிறார் பாரதிநாதன். அவர்கள் அந்த தொழில் மற்றும் ஜாதி சார்ந்த சமூகத்தில் இருக்கக்கூடிய திருமணம் முதல் கொண்டு சாவு முறைக்கும் பல சடங்கு முறைகளை விரிவாக சொல்கிறார். பல குடும்ப உறவுகளைப் பற்றி சொன்னாலும் ரங்கசாமி, சௌவுண்டம்மாவின் குடும்பமும் ரங்கநாதன் என்ற அவர்களின் வாரிசு பற்றியும் விரிவானக் குறிப்புகள் உள்ளன. அவர்களின் மூலமாக நெசவாளர் வாழ்க்கை காட்டப்படுகிறது. மாதேஷ் போன்ற நெசவாளிகள் பெண்களை கொடுமைப்படுத்துவதும் அவர்களுக்கு நேரும் சிரமங்களும் இன்னொரு பக்கம் சொல்லப்படுகிறது மனநோயாளியாக இருக்கிற ஒருவனுக்கு அது சரியாகும் என்று திருமணம் வைத்து வைப்பதும் அவன் இறந்து போன பின்னால் அந்தப் பெண் நிற்கதியாக நிற்பதும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.. இவர்கள் மத்தியில் அரசியல் சார்ந்து மணி என்ற ஒரு நக்சல் இயக்கம் சார்ந்த ஒருவர் நெசவாளியாக வருகிறார் அவர் ரகசியமாக வெடிகுண்டு தயாரிப்பதும் அந்த இயக்கத்தில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்ள விரும்பும் தன்மையும் விதவை பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் என்ற தன்னுடைய விருப்பமான போராட்ட களவாழ்க்கையை பாரதிநாதன் இதனுடன் இணைத்திருக்கிறார் நெசவாளர் வாழ்வியல் சார்ந்த அனுபவங்களும் சிரமங்களும் சேலத்தை ஒட்டி இருக்கிற கிராம மனிதர்கள் இயல்புகளும் சரியாக வந்திருக்கிறது. தொடர்ந்து நெசவாளர் வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கும் அவர் இந்த நாவலில் 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெசவாளர் வாழ்க்கையை இப்பொழுது எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம்.
ஊர்மக்களுக்குத் தெரிகிற மாதிரி இறந்தவர் முகத்தைப் பாடையில் வைத்துக் கொண்டு வருவதும் பிறகு முகத்தை மாற்றுவதும் இறந்தவருக்கு திடீரென திசை மாறினால் வீட்டுக்கு வழி தெரியாதாம். அது போல் பல சம்பங்களைத் தருகிறார். பல மனிதர்களின் விசித்திர முகங்களைக் காட்டுகிறார்.
அவளுக்கு கணவனைப் பிடிக்கவில்லை. ஆனால் அவன் செத்துப் போனபின்பு திதி கொடுப்பதும் சடங்குகளைக் கொண்டாடுவதும் சரியாகச் செய்கிறாள் அவள் என்று ஒரு பாரா அறுபதாம் பக்கம் உள்ளது . அது போல் பல மனிதர்கள் நாவலில் இடம் பெறுகிறார்கள் வாழ்க்கையின் விசித்திரமாக.
கன்னி கழியாமல் இருக்கும் பெண்கள். ஆனால் வாழ்க்கையை சரியாக ஏற்றுக்கொள்ளும் பெண்கள் நிறைய பேர் வந்து போகிறார்கள் .
. சேலம் பகுதி நெசவாளர்கள் வாழ்வில் இருந்து பெறக்கூடிய அனுபவங்களை கொட்டித் தீர்க்க ஒரு நல்ல வாய்ப்பாக இந்த நாவல் பாரதிநாதன் அவர்களுக்கு அமைந்திருக்கிறது.
இவரின் நெசவாளர்கள் காலனி நாவலில் இது போல் நிறைய நெசவாளர்கள் வந்து போகிறார்கள். அதில் சின்னதாய் காதல் கதை உள்ளது . ஒரே சாதிக்குள் இருக்கும் பொருளாதார வேறுபாடுகள் இளசுகளைக் பிரிகிறது. சந்தனக் கடத்தல் வீரப்பனும் பலரைப் பிரிக்கிறான். அவன் பெயரைச் சொல்லி காவல்துறையும் அதிரடிப்படையும் பிரிக்கிறது. இதையெல்லாம் நேர்த்தியாகச் சொல்கிறார் .
புரட்சி பாரதி பதிப்பகம் சென்னை வெளியீடு ரூபாய் 160 )
PALM LINES.. Subrabharathimanians novel
INTRODUCTION
Subrabharathimanian’s Palm Lines, looked from one angle, is linear and from another,
non-linear! The book is a collection of short stories, it may appear! Each and every chapter
can be read separately as a short story! However, the book can be read as a novel also as
some of its characters appear repeatedly in one chapter or another! This unique blend gives
the reader an unimaginable freedom. He may choose at random any chapter he likes and
read! At the same time, the book can be read as a novel without losing the sense of
connectivity! In short, the incidents give it a short story touch whereas the characters give it
the dimensions of a novel! Swinging this way and that way like a pendulum, it also becomes
multi-directional when one considers the number of characters (20+) it introduces, ranging
from school going children through middle aged men and women to those who are well in
their fifties and above! It portrays a number of incidents like the burning of a house, honour
killing, polluting a river, village temple festivals and their accompanying dual of words and
battle of hands, street corner meetings and plays, cleaning of a river, school celebrations
etc.
SYNOPSIS
Palm Lines is about the trials and tribulations of people who live in a village in the foothills
of Palani, the abode of Lord Muruga, a popular deity of the Tamil people.
Most of these people live by reading horoscopes and practising palmistry! There is a
continuous stream of people who visit the village from far off and nearby places to know
their future and to find out a way to resolve their present and future crisis. Thanks to man’s
insatiable hunger to know his future! But the cruel hands of Time thwart the peaceful lives
of the villagers!
The novel opens with picturing a burnt house in the village where casteism runs riot still.
Two young people belonging to different castes love and marry in secret. Thinking that they
are inside the house, the advocates of honour killing burn their house! The couple luckily
escape, as they are on a pilgrimage to Thiruchendur, a famous shrine of Lord Muruga! There
is a picture of Thiruvalluvar lying on the ground half eaten by the fire. Thiruvalluvar is a great
Tamil poet and the author of the world famous Thirkkural, a book of verse in coulpets,
written 2000 years ago! He advocated equality among all castes and to whom all castes are
one! His spoiled picture is a symbol of inter-caste intolerance that has started showing its
ugly teeth of late!
The next chapter brings out another different scenario- an introduction to the main style
of living of the village people-horoscope reading. We meet Ganapahty, a famous horoscope
reader of the village, to consult whom people who had come from a far off place, wait
throughout the whole night- to have their horoscopes interpreted. Ganapahy is neck deep in
1
tradition and upholds the dignity of the age old art of reading horoscopes. Through his
remarks, the reader gets a glimpse of the old art as well as its new form which he never
endorses! He also sarcastically comments on how intolerably people have become
dependent on horoscopes. Through him, the author puts forth his strong views on blind
belief.
Then come Parameswari and Amalam. The former is a woman who lies with men to earn a
living and who, nevertheless, upholds some values in her trade! The latter, has a useless
drunkard for husband! They talk about the Muruga river, an important character, that
makes its impression now and then, throughout the novel. The author painfully describes
the present pathetic state of the river polluted by the irresponsible society! Not only the
river has become a virtual dust bin but the path leading to it also has become a dumping
yard! Here an important element, the author’s concern on environmental issues, is
introduced. It also brings in another important current event in Tamil Nadu, the arrest of a
former Chief Minister- an event that has been skilfully drawn in, which magically shifts the
reader from the plane of fiction to that of reality! A mention of the movie Alavandhan, that
was currently on the screen, further reinforces this effect. The chapter ends with a wordy
dual between Parameswari and Gopal, an astrologer, who leaves no stone unturned to earn
his living. He accepts the norms of his profession forced on him by the changing times. He
opens up branches of his trade and even ventures into cine-field to try his luck in that dream
world! He stands in sharp contrast to Ganapathy!
Subbaiah and Gopinath are introduced in the next chapter. Subbaiah is attached to a
movement that tries hard to bring in social changes through ceaseless propaganda through
stage plays and street corner meetings! Subbaiah is disillusioned and the Progressive Front
to which he belongs does not help him earn a livelihood! Poor fellow, his dreams of
becoming a director vapourises into thin air. He ends up as a vessel cleaner in a small hotel.
Gopinath has returned from Singapore and is in a fervent search for a bride.
Chapter 5 introduces Anbu, a player of the traditional musical instrument, Kombu. Though
humble, Anbu is a man of principles! He will play neither in any political meeting nor in the
rituals of death.
This chapter, opens with Anbu’s body on a pyre and his son, Sivan reminiscing on his
father! It portrays clearly the struggle between the father and the son over the latter not
scoring good marks in school exams. and the mother coming to her son’s rescue! A typical
domestic scene!
As the novel moves on, the reader can have a glimpse of inter-caste brotherhood, when
he witnesses a temple car festival where the pulling of the temple car was shared by both
the people of the west street and the south street. These people once fought over as to who
should have the right to pull the car. Not only the rival factors realized their mistakes but
they also shook their hands in peace! What is more, Rahim, a Muslim, serves panagam, a
2
refreshing drink to the crowd-Unity in Diversity! However, the village has its own woes! One
day, the palm trees were cut down and were set on fire! Samiyappan, a traditional farmer
who worships land as mother and to whom agriculture is still a sacred profession, literally
bleeds. Unable to withstand this cruelty, he leaves his native place! He is a staunch devotee
of Nammaazvar, the father of organic farming in Tamil Nadu! He wants to spend the rest of
his life in helping those who want to practise organic farming!
With the blooming of love between Narmatha and Somasundaram, the novel takes a
lighter turn!
Street plays have their own ugly turn-Subbaiah was stoned when he was staging a street
play!
The importance of one’s social responsibility is stressed through Christopher who takes
care of mad persons wandering in the streets. He tonsures them, washes them, feeds them,
takes them to a church and leaves them in the care of loving hands.
The rich and the powerful threatening the poor and the innocent is not something new!
The village people were threatened by powerful quarry owners to leave their lands in the
banks of the Muruga river! The self-employed priest pleads with the panchayat president in
vain. He was mercilessly told to migrate to the other side of the river! He was shocked to
know that the president is also a party to this inhuman act!
Ours is a democracy. Here anybody can enter into politics and become a leader! The reader
cannot but smile when he reads Sikkandar’s words to Amalam:, “The lady who sold flowers
have become a minister…who knows…one day you too can become a minister!”
People from Bihar, Odisha, Bengal and North India flood the streets of Tirupur- the dollar
city! The migration raises a lot of problems. One such problem is described in chap. 28. A
migrant worker was alleged to have stolen from a grocery shop and he was heavily beaten!
The language problem plays havoc here. The dollar city attracts people from all directions.
People from all walks of life enter into its portals with bags full of money and mint millions!
At the same time, it turns many into paupers! They end up as labourers! Yesterday owner,
today labourer!
The novel also discusses the problems of the victims of honour killing and those who were
caught in the grips of the Sumangali scheme of the spinning mills. The scheme lures young
girls, promising them a good sum, for their marriage! Many girls fall victim and the mills who
devour their physique for years, spit them out as waste after a few years! Soundarya
withstands boldly the cruel aftereffects of honour killing and stays with her in-laws and
becomes an ardent and vociferous advocate of anti-casteism!
The last two chapters focus on cleaning of the Muruga river by Teacher Rathinavel with his
students, overcoming many bureaucratic hurdles. Rathinavel represents the youth with
social consciousness and social responsibility! The novel ends with the celebration of the
erstwhile chief minister Kamaraj’s birth day as Education Day in the school. Kamaraj
3
introduced the mid-day meals scheme in the elementary schools and thereby made
hundreds of young children attend school, who, otherwise would have wasted their
childhood in child labour! His birthday is observed as a mere formality! What a pity! The
novel ends with the following words: “Near Kamaraj’s photo, ‘sat’ the clay statue of
Thiruvalluvar! It was not his usual posture of majestically standing and writing. Instead, he is
sitting with crossed legs, looking at the sky with raised eyebrows!”
Perhaps, Thiruvalluavr, the greatest Tamil poet of all times, was wondering at the changes,
Time has brought in!
-----o0o-----
Pro. Ramgopal
சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 16 /
முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு400
கூவாகத்து குலமகள்?
திருநங்கைகள் பிச்சை எடுக்கிறார்கள். பாலியல் தொழில் செய்கிறார்கள். இவற்றை விட்டு சில பேர் பனியன் கம்பெனி நடத்துகிறார்கள். அதில் ஆண்களும் வேலை செய்கிறார்கள் ஆண்களின் பார்வை வழக்கமாக இருக்கிறது.
ஆனால் தாங்கள் மற்றவர்களைப் போல் தான் மனிதாபிமானமும் அன்பும் கொண்டவர்கள் என்று நிரூபிக்க திருநங்கைகளுக்கு சில சந்தர்ப்பங்கள் அமைகின்றன.
திருநங்கைகள் வாழ்க்கை எப்படி இருக்கிறது. திருப்பங்கள் வந்ததா. திருமண வாய்ப்புகள், குடும்ப வாழ்க்கை வாய்ப்புகள் வந்ததா?
கூவாகத்துக் குலமகள்?
சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 15 /
முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300
வெள்ளை என்பது தியாகம் திரைக்கதை
நர்சுகள் ஆடை வெள்ளை நிறம். தூய்மையானது தியாகத்திற்கான சின்னம். அவர்களின் மருத்துவப் பணி மெச்சக்கூடியது. அதுவும் கொரோனா போன்ற கொடிய நோய்களின் காலத்தில் அவர்களின் தியாகங்கள் போற்றப்படக்கூடியது. நோயாளிகளின் சிகிச்சையிலிருந்து தங்களை காத்துக் கொள்வார்கள். பிறருக்காக தங்களை அர்ப்பணிக்கிறவர்கள் அவர்கள். குறைந்த சம்பளத்தில் சுரண்டப்படுகிறார்கள். பாலியல் ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள் அப்படி சுரண்டப்பட்ட ஒரு பெண் தாங்கள் சுரண்டப்படுவதை தன்னை பலியாக்கி கொண்டு வெளிப்படுத்துகிறாள் எப்படி வெளிப்படுத்துகிறாள்.. என்ன பிரச்சனை..நாயகி சார்ந்த நர்சுகளுக்கு வெள்ளை என்பது தியாகம்
வெள்ளை என்பது தியாகம்
காதல் குடுகுடுப்பை
முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300
காதல் குடுகுடுப்பை
அவர்கள் இருவரும் காதலர்கள்.. கணினி துறையில் - ஐடி துறையில் வேலை செய்பவர்கள். காதலால் சேர்ந்து வாழ்கிறார்கள். லிவிங் டுகெதர் . அவன் குடுகுடுப்பைக்காரன் குடும்பத்தைச் சேர்ந்தவன். இது அவளுக்கு தெரிகிறபோது அவள் அவரை பிரிந்து போகிறாள் ஆனால் அவனை சார்ந்து இருக்கிற குடுகுடுப்பைக்கார சமூகம் ஒன்று திரண்டு அவர்களை ஒன்றிணைக்க முடிகிறது.. காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா.. உயிர் பிழைத்தார்களா காதலர்கள்..
சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 13 / அந்நியர்கள்
முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300
சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 13 / அந்நியர்கள்
முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300
அந்நியர்கள்
0
சுப்ரபாதிமணியனின் அந்நியர்கள் நாவல்
( சென்னை எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான விருது 2021ல் ரூபாய் ஒரு லட்சம் பரிசு பெற்ற நாவல் )
வட இந்திய தொழிலாளிகள் தமிழகத்தின் எல்லா பெருநகரங்களிலும் நிறைந்திருக்கிறார்கள் திருப்பூரின் 10 லட்சம் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் அவர்கள் தான் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றிய கதை இது
துளசி என்ற ஓர் இளம் பெண் திருப்பூருக்கு வேலை வாய்ப்புக்காக பீகாரில் இருந்து வருகிறாள். அவளுடன் பல பேர் வந்திருக்கிறார்கள் அவளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இது பனியன் கம்பெனி மற்றும் சிறு சிறு தொழில்களில் அவள் வேலை செய்கிறாள். அவளின் வயதான பெற்றோர்கள் ஒருபுறம். இன்னொரு புறம் அவளின் காதலன் ராம்சந்த். அவன் கொஞ்ச நாளாக அவளிடம் பழகியவன் பிறகு காணாமல் போகிறான். அடிதடி என்று பல விஷயங்களை கற்றுக் கொண்டு விட்டான் என்பது துளசிக்கு பின்னால் தெரிகிறது
திருப்பூரில் நடக்கும் வெவ்வேறு தொழிலாளர்களின் நிலை அவருடைய வாழ்க்கை, தற்கொலை, சாவு இவற்றையெல்லாம் கடந்து செல்கிறாள் துளசி. தொழில் ரீதியாக தான் வேலை செய்யும் பனியன் கம்பெனிகள் சிறு தொழிற்சாலை அனுபவங்கள் அவளை மேம்படுத்துகின்றன. பலரின் பாதையில் பார்வையும் சுரண்டலும் உழைப்பு சுரண்டலும் வட இந்தியர்களை கேவலமாக பார்க்கும் பார்வையும் தொடர்கிறது. அந்நியர்கள் அதிகமாகிவிட்ட சூழலில் அங்கு இருக்கிற தமிழர்கள் தாங்கள் தான் அன்னியர்கள் என்று உணர்கிறார்கள் அதற்காக பல சம்பவங்கள் ஏற்படுகின்றன. ராம்சந்த் இடையில் ஒரு வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட அவள் அதிர்ந்து போகிறாள் அங்கிருக்கும் அவரின் உறவினர்கள் அவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். கணவன் ஒரு ஊனமுற்றவன். சகித்துக் கொள்கிறாள் திடீரென ராமச்சந்த் மரணம் அவளை நிலை குலைய வைக்கிறது
யார் இங்கு அந்நியர்கள் பிழைப்புக்காக வந்திருப்பவர்களா அல்லது மக்கள் தொகையில் குறைந்து கொண்டே வரும் உள்ளூர் தமிழர்களா என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது
சுப்ரபாரதிமணியன் திரைக்கதைகள் 12 / செண்பகப்பூ காடு
முழுத்திரைக்கதைக்கு ..திரைக்கதை நூல் வரிசை 3 பார்க்கவும் . ரு300
வன தேவதையின் ஆட்சியில் உள்ள மலைநாடு அது. கனிம வளம் நிரம்பிய மலைநாடு. கார்ப்பரேட்டுகள் அங்குள்ள கனிமவளத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார்கள். அப்போது மக்கள் குழுவாக சேர்ந்து போராடுகிறார்கள். அவர்களுடைய போராட்டக் குழுவில் அங்கு இருக்கிற ஒரு விவசாயி மகன் கண்ணன் இருக்கிறான். அவர்கள் போராட்டத்தால் கார்ப்பரேட்டுகள் தயங்குகிறார்கள். திடீரென்று விவசாயி மகன் அந்த குழுவில் இருந்து வெளியேற விரும்பி தப்பி ஓடுகிறார் விவசாயின் தன் மகன் காணாமல் போனதை பற்றி காவல்துறையில் தகவல் தருகிறார். அவருடைய மகன் கண்ணன் தப்பி ஓடி மயங்கி விழுந்து ஒரு மந்திரியின் உடைய வாகனத்தின் முன் விழ அவனைக் காப்பாற்றுகிறார்கள். அவனைப் பற்றி தெரிந்து அவனை வைத்துக் கொண்டு கனிம வளத்தை எதிர்க்கும் போராட்டக் குழுவை கண்டுபிடித்து அழிக்கும் முயற்சியில் மந்திரி ஈடுபடுகிறார். கார்ப்பரேட்டர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதேசமயம் கதாநாயகனையும் கொல்ல மந்திரியும் கார்ப்பரேட்டுகளும் முடிவு செய்கிறார்கள். மந்திரியின் மகளுக்கு கண்ணன் மீது நட்பு இருக்கிறது. அதனால் அரசு நிர்வாகிகள் சாபத்திற்கு ஆளானவர்கள். காதலர்கள் உயிர் தப்பிக்க முடிவதில்லை என்ன நடந்தது என்பதை இந்த செண்பக பூக்காடு திரைக்கதை சொல்கிறது
நைரா 2 ( ஞாபகம் வருதே )
நைரா நாவல் பாகம் 1 நாவலில் கெலிச்சி என்ற நைஜீரிய இளைஞன் திருப்பூர் வந்து பனியன் வியாபாரம் செய்யும் போது அகல்யா என்ற தமிழ் பெண்ணுடன் ஏற்படும் காதலும் அவன் நைஜீரியாவிற்கு திரும்பிச் சென்ற பின்னால் அகல்யா கர்ப்பமடைந்து அவனுக்காக காத்திருப்பதும்..
நைரா 2
இப்போது 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது கெலிச்சி இந்தியா திரும்புகிறான். நைஜீரியாவில் அவன் செய்து கொண்ட திருமண ம் இழந்து போன மனைவி என்ற சோகக் கதை. இங்கு திரும்பி வந்து அகல்யாவை தேடுகிறான். சிரமப்பட்டு கண்டுபிடிக்கிறான். அவனின் மகள் வளர்ந்து பெரியவளாகி இருக்கிறாள். அவளையும் கண்டுபிடிக்கிறான். உணர்ச்சிமயமான குடும்பப் பிணைப்புகள் கொண்ட கதை
திங்கள், 8 ஜூலை, 2024
Perfect days
பர்பெக்ட் டேஸ் / திரைப்படம் ./ சுப்ரபாரதி மணியன்
( இந்த படம் 2023 கான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான நடுவர்களின் விருதைப் பெற்றது )
நம் தினசரி வாழ்க்கையின் சம்பவங்கள் வேலைகள் ஒரே மாதிரியாகத்தான் அமைகின்றன. ஓரிரு புது வேலைகள் வந்து புது மனிதர்கள் வந்து அந்த சம்பவங்களை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றுகிறார்கள். இந்த ஒரே மாதிரியான சம்பவங்களை தொகுத்து திரைப்படம் ஆக்கினால் எப்படி இருக்கும் கேட்கவே அலுப்பாக தான் இருக்கிறதும் வாழ்க்கையின் ஒரே மாதிரியான சம்பவங்கள்ன் நிகழ்வுகள் அவற்றையெல்லாம் திரும்பத் திரும்ப காட்டிக்கொண்டு இருந்தால் என்ன கிடைக்கும் ஆனால் அந்த மையங்களில் இருந்து கொண்டு வரப்படும் வாழ்க்கையின் சாரம் பற்றிய விஷயம் மனதில் நிற்கக் கூடியதாக இருக்கும் என்பதை விம்வெண்ட்டர் அவர்களின் பர்பெக்ட் டேஸ் என்ற திரைப்படம் காட்டுகிறது .
இந்த படம் 2023 கான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான நடுவர்களின் விருதைப் பெற்றது. சிறந்த நடிகருக்காக இதில் நடித்திருக்கிற முக்கியமான நடிகருக்கும் பரிசு வாங்கி தந்தது. அவர் கோஜி யகுசோ.முக்கியமான கதாபாத்திரம் ஜப்பானின் பரபரப்பு வாழ்க்கைக்கு நடுவில் அகப்பட்டதாகும். பெரிய பெரிய கட்டிடங்கள். விரைந்து செல்லும் வாகனங்கள் இதிலிருந்து சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார் அவர் .அவர் போட்டிருக்கும் டோக்கியோ டாய்லெட் என்ற சட்டை வாசகம் ஏதோ பேஷன் காரனமாகப் போடப்பட்டதாய் பனியன் வெளிப்படுத்தும் வாசகமாக இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அவர் அங்கு தான் பணி புரிகிறார் என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் நேரமானது. செய்கிற வேலையை சரியாக செய்கிறவர் . ஹிராயாமா. அவர் கழிப்பறையில் சுத்தம் செய்யும் வேலையின் போது எல்லாவற்றையும் ஜாக்கிரையாக செய்கிறா.ர் சின்ன தூசு இருந்தால் கூட ஜாக்கிரதையாக துடைத்து எடுக்கிறார். அப்படி ரசித்து வேலை செய்யும் வேலையின் போது யாராவது கழிப்பறைப்பை பயன்படுத்த வந்துவிட்டால் அவர்களின் அவசரமும் அவருக்கு தெரிந்து விடுகிறது. வெளிவந்து வானத்தைப் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். நேரம் கிடைக்கிற போது அவர் உட்காருவதற்கு தென்படுகிற மரங்களையும் அவற்றை இலைகளையும் படம் பிடிக்கிறார். அவ்வப்போது புத்தக கடைக்கு போய் ஒரு டாலர் விலையில் ஒரு புத்தகம் வாங்குகிறார். பெரும்பாலும் சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் அவை. . அதை படிக்கிறார் படம் பிடிக்கிற கேமராவை சரியாக பாதுகாக்குகிறா.ர் அந்த படத்தை பிரிண்ட் போட்டு எடுத்து வந்து பார்க்கிறார். அது திருப்தியாக இருந்தால் வைத்துக் கொள்கிறார். இல்லாவிட்டால் கிழித்து போட்டு விடுகிறார். சாலையோரம் மரங்களின் அடியில் வளரும் சிறு செடி கூட அவருடைய பார்வையில் முக்கியமாக படுகிறது. எடுத்து வந்து வீட்டில் பாதுகாக்கிறார். இப்படி சின்ன சின்ன விஷயங்களை ஜாக்கிரதையாக செய்கிறார் .இரவில் வழக்கமாய் போய் சாப்பிடும் இடத்தில் சாப்பிடுகிறார் அந்த கடைக்காரர் இவரின் உழைப்பை பார்த்து பாராட்டு விதமாய் தரும் குளிர்பானத்தை அருந்திவிட்டு அறைக்கு வருகிறார். அவர் கழிப்பறையை சுத்தம் செய்யும் இடங்களுக்கு போகும் போது மகிழ்வுந்துவைப் பயன்படுத்திக்கிறார். ஆனால் மற்ற இடங்களுக்கு போய்விட்டு திரும்புவதற்கு அவரிடம் மிதிவண்டி இருக்கிறது .தினசரி வானத்தை பார்த்து ரசிப்பதும் காலையில் எழுந்ததும் ஒரு குளிர்பானத்தை குடிப்பதும் என்ற அவருடைய வேலையை தொடங்குகிறார். இந்த வேலையின் தினசரி அம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறன. இவற்றை திரும்பத் திரும்ப படத்தில் காட்டப்படும் போது என்ன சொல்ல வருகிறார் என்று பல பேருக்கு அயர்ச்சி செயல்படக்கூடும். ஆனால் அவர் ஏன் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இரவில் படிக்க போது கொஞ்சம் படிக்கிறார். அசந்து தூங்கிவிட்டார் கனவு வருகிறது. கனவின் பொருள் என்ன மனச்சுமையில் எப்போதும் மாட்டித் தவிக்கிறவர் அல்ல ஆனால் மனச்சுவையில் தவித்துப் போகிறார்கள் அவரிடம் வந்து அடைக்கலமாக இருக்கிறார்கள். தாயிடம் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி அவர் அறையில் வந்து தங்கும் சகோதரியின் மகள் கூட சில நாட்கள் கழிப்பறை சுத்தம் செய்யப் போகிறாள். அவளுக்கு வாழ்வின் அர்த்தமும் புரிகிறது. அதை கற்றுக் கொடுக்கிறார் அந்த பெண்ணின் அம்மா வந்து திரும்பக் கூட்டிக்கொண்டு போய்விடுகிறார் மற்றும் அவர் பார்க்கிற ஒரு காட்சி அவரை நடுங்க வைக்கிறது. கழிப்பறையைச் சுத்தம் செய்துவிட்டு அமர்ந்திருப்பவர் எதிரில் உள்ள ஒரு அறையில் அந்த வீட்டுப் பெண் ஒரு ஆணுக்கு கதவை திறந்து வருகை தர கேட்கிறாள். அவர் உள்ளே போகிறார் ஒருவித ஆர்வத்தால் அங்கே என்ன நடக்கிறது என்பதை கதவின் சந்து வழியாக அவர் பார்க்கிறார் அவர்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவருக்கு துணுக்கு வைக்கிறது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சில சமயங்களில் கேட்கப்படுகிறது . மற்றவரின் அந்தரங்க வாழ்க்கையில் வீணாக குறிப்பிட்டு விட்டோமோ என்ற ஒரு குறுகுறுப்பு ஏற்படுகிறது அந்த நீர் பரப்பின் அருகில் வந்து பதற்றத்தைக் குறைக்க மது அருந்தும்போது இவருடன் சேர்ந்து கொள்கிறார் அவர் அந்த பெண்ணின் முன்னாள் கணவர். விவாகரத்து வாங்கியவர். ஆனால் புற்றுநோய் வந்து விட்டது அதற்கான சிகிச்சையில் இருப்பதாக சொல்கிறார். அவரின் வேதனை வெளிப்படாமல் இருக்க தாங்கள் இருவரும் வெளிச்சத்தில் வெளிப்படும் நிழல்களை வைத்துக் கொண்டு சில உரையாடல்களை அவர் பரிமாறிக் கொள்கிறார். இருவருக்கும் பாரம் குறைந்து கொண்டிருக்கிறது. அடுத்த நாளும் சரியான நேரத்தில் கண்சொருக தூங்கிடுவார் வீட்டுக்கு வெளியே வந்து வானத்தை பார்ப்பார். பக்கத்தில் இருக்கும் ஒரு தானியங்கி இயந்திரத்தில் ஒரு குடிபானம் வாங்கி அருந்துவார். கழிப்பறை சுத்தம் செய்யும் வேலைக்கு போக வேண்டும் .அப்படிக்கு போக அந்த நாளில அந்த வேலை ஒப்பந்தம் முடிந்து விட்டதாக தகவல் வருகிறது. அந்த வேலை செய்யும் இடத்திற்கு போனால் இன்னொரு பெண்மணி அந்த வேலை செய்ய காத்துக் கொண்டிருக்கிறாள். ஆகவே அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அவருக்கு சிரமம் இல்லை. அவருக்கு வாழ்க்கையில் ரசிக்கவும் வாழ்க்கை தந்த அனுபவங்களை புரட்டி போட்டு கொள்ளவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்..
இஅப்பானின் தலைசிறந்த இயக்குநரானயாசுஜிரோஓசு அவர்களின் பிரபலமான டோக்யோ ஸ்டோரி பட்த்தின் பிரதான் கதாபாத்திரத்தின் பெயர் அது.
இதில் சொல்லப்படாத கதாநாயகரின் வாழ்க்கை மர்மமாயமே இருக்கிறது
பழுதடைந்த வேன். ஒரு கேசட் பிளேயர். அவருக்கு ஆசுவாசப்படுத்தும் விசயங்கள். இசையின் வாயிலாக பலகாட்சிகளைக்கடந்து செல்கிறோம். இசையும் வாசிப்பும், புகைப்படம் எடுப்பதும் அவருக்கு மூச்சாக அமைந்துவிட்டிருக்கிறது.
இந்த தினசரி வாழ்க்கையின் சம்பவங்களை பெரிய வித்தியாசம் இன்றி இதை சொல்லி கொண்டு போவதில் அவர் கலை நயம் மிக்க வாழ்க்கையை தரிசனத்தை கொண்டு வந்து விடுகிறார். இந்த தரிசனம் எல்லோராலும் வழி காட்ட முடியாது . விம் வெண்டர் போன்ற தேர்ந்த திறமையான கலைஞர்களால் முடியும். அதை அவர் திரும்பவும் நிரூபித்திருக்கிறார் இந்த படத்தின் மூலம்..
மக்கள் அனைவரும் சமமானவர்கள் எனும் அடிப்படையில்தான் எனது அனைத்துத் திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன.சமத்துவம் என்பது எனது எல்லாத் திரைப்படங்களிலும் முதன்மைப் பண்பாகச் செயல்படுகிறது.மக்கள் எல்லோரும் மக்கள்தான் என்பதை அவைப் புலப்படுத்துகின்றன. அதில் மேலாண்மையோ கீழிறக்கமோ இல்லை. அவர்கள் முக்கியமானவர்களோ முக்கியமற்றவர்களோஇல்லை என்பதில் நம்பிக்கை கொண்டு அதைத் அவரின் திரைப்படங்களிலும் கதாபாத்திரங்களை வெளிப்படுத்துகிறார்.
சுப்ரபாரதி மணியன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)