சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 18 டிசம்பர், 2023
–maanudam issue
சூழலியல் பாதுகாப்பு நுகர்வோருக்கென ஒரு வலை
சுப்ரபாரதிமணியன்
சூழலைப்பாதுகாக்கிற நுகர்வோராக நட்சத்திர அந்தஸ்துடன் இருப்பவர்களுக்கு வலை காத்திருக்கிறது.
அப்படியொரு அனுபவம் எனக்கு வாய்த்தது . சந்தை விரித்த வலைகளுள் அதுவும் ஒன்று
*
சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் இயற்கை வேளாண்மைப்பொருட்களுக்கு நுகர்வோர் மத்தியில் பெரும் வியாபாரச் சந்தை வேறு எந்த காலத்தையும் விட கொரானா பாதிப்பு காலத்தில் உருவாகியுள்ளது.
நுகர்வோர் விழிப்புணர்வு என்பது இதில் முத்திரையாகக் கொள்ளப்பட்டுள்ளது.
• நுகர்வோர் சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்களை வாங்குவது தாங்கள் ஆரோக்யமாக இருக்க உதவுகிறது தங்களின் ஆயுளைகூட்டுகிறது. மகிழ்ச்சியாக வாழ வழிவகைச் செய்கிறது என்ற ரீதியில் அவற்றை வாங்குவதில் அக்கறை கொள்கிறார்கள்.இவை விலை கூடுதலாக இருந்தாலோ அல்லது இன்னொருபுறம் அதிகமானதாக இருந்தாலோ கூட வாங்க நுகர்வோர் தயாரகிவிட்டனர் . இவர்களைப்பயன்படுத்தி பெருமளவில் விளம்பரங்கள் செய்து லாபம் சம்பாதிக்கிற முத்திரை குத்திக்கொண்ட நிறைய நிறுவனங்கள் சந்தையில் காணப்படுகின்றன
திருப்பூர் பனியன் உற்பத்தியில் இது போன்ற சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட “ எக்கோ பிரண்ட்லி “ பொருட்களுக்கு பல வெளிநாடுகள் முன்னுரிமை தருகின்றன. இந்த முன்னுரிமையை பலர் விளம்பரப்படுத்தி தங்களை மேன்மையானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். இந்த விளம்பரங்கள் உண்மையானதா என்ற கேள்வியும் தொடர்ந்து சந்தேகங்களாய் கிளம்பி வருவதுண்டு.
இது போன்று பல உணவுப்பொருட்களுக்கு விளம்பரங்கள் சாதாரணமாகிவிட்டன .இவை வாங்கும் நுகர்வோருக்கு மலைப்பிரதேசங்களில் தங்கி மகிழ்ச்சியாய் இருக்க இடம் வசதி போன்றவை காட்டப்பட்டு வலையில் விழ வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு தரம் ஒரு வலையில் மாட்டிக்கொண்ட அனுபவம் எனக்குமுண்டு.
தொடர்ந்து இயற்கை விளைபொருட்களை வாங்கினால் மூணாறில் மூன்று நாட்கள் தங்கும் வசதி இலவசம் என்ற அறிவிப்பும் எனக்கும் வந்தன. நான் ஒரு கடையில் வாங்கும் இவ்வகைப்பொருட்களுக்கான அங்கீகாரமாக நானும் எடுத்துக்கொண்டேன்.
இப்படி ஆறு மாத குறுஞ்செய்திகளுக்குப் பின் நான் தேர்வானதாகத் தகவல் வந்து நான் தங்க ஆசைப்படும் இடத்தின் முகவரி , கைபேசி எண் தரப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு நான் வாடிக்கையாளராக இருக்கிறேன் என்பதற்கான ஊக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
மூணாறு நகரத்திலிருந்து 20 கிமீ தள்ளி லோயர் கனால் என்ற பகுதி இருக்கும் அந்த விடுதிக்குச் செல்வதற்கு நான் 300 ரூபாய் செலவு செய்தேன்.திருப்பூரிலிருந்து மூணாறுக்கு செல்லவே பேருந்துக்கட்டணம் ரூ 170 தான் . அங்கு சென்ற பின் அறை மட்டும் இலவசம் என்றார்கள்.
மலைப்பகுதி.தாறுமாறாய் பெரும் பாறைகள். குன்றுகள் போன்றத் தோற்றங்கள் தூரத்துப்பார்வைக்கு அழகாகவே இருந்தன 200 அறைகள் கொண்ட பல கட்டிடங்கள் வெவ்வெறு இடங்களில் . அதில் இருவர் தங்கும் அறையில் எனக்கு இடம் தரப்பட்டது. உணவு விடுதியின் பட்டியல் விலையேடு தரப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. எல்லா உணவுப்பொருட்களும் மிக அதிக விலையில் குறிக்கப்பட்டிருந்தது. மூணாறு நகரில் நட்சத்திர விடுதியில் தங்கும் செலவு போல ஆகிவிட்டது. அங்கிருந்து யானை இறங்கும் பள்ளம் முதற்கொண்டு எங்கு செல்லவும் டாக்சிதான். மூன்று நாள் தங்கலில் பகல் நேரத்தில் அதிகத் தூக்கம், கொஞ்சம் உலாவல் என்று பொழுதைக்கழித்து விட்டு திரும்பினேன்.
அப்போதுதான் நான் தங்கியிருந்த அப்பகுதிக்கு அருகிலிருந்த பல முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் விடுதிகள் பற்றி அறிந்தேன். அங்கு வர அந்த நிறுவனங்கள் ஆசை காட்டி வரவழைத்து விடுகிறார்கள். உணவு விடுதிக்கும் நான் தங்கியிருக்கும் இடத்திற்கும் அரை கி மீ தூரம். செங்குத்தான பகுதி. உணவுக்காக ஏறி இறங்கும்போது மூச்சிரைப்பாகி உடம்பு செய்த சிரமம் சொல்லி மாளாது.
குறைந்த நபர்களே தங்கியிருந்ததால் ஒரு வகையில் பய உணர்விலேயே இருந்தேன். அறையிலிருந்த இன்னொருவர் தொடர்ந்து குடித்தபடியும் பின் நன்கு தூங்கப்பழகி இருந்தார். அவருக்கு எதுவுமே உறுத்தலாகப்படவில்லை. மலையாளி என்பதால்யாரையாவது அழைத்து ஏதாவது பேசுவதில் அவருக்குப் பொழுது கழிந்தது.
. மூன்று நாளைக்கான முன் பணத்தினைக் கட்டிவிட்டோம் என்பதால் மூன்று நாட்களுக்குப்பின்னாலேயே அங்கிருந்து கிள்ம்பினேன்
அங்கிருக்கும் போது உங்கள்கையால் ஒரு மரம் நடுஙகள் என்றார்கள். நட்டேன். என் பெயரைப்போட்டு ஒரு துண்டு சீட்டு ஒன்று அங்கு தொங்கியது. ஆண்டிற்கொருமுறை இங்கு வந்து இதன் வளர்ச்சியைக்கண்காணிக்க வேண்டும் என்றார்கள்.ஆண்டுதோறும் நான் வந்து செல்ல வேண்டுஎன்ற வகையில் கட்டாய அழைப்புகளாக அவற்றைப்பார்த்தேன்
அதன் பின்னால் அந்த விடுதி, மற்றும் அந்த நிறுவனங்களிலிருந்து குறுஞ்செய்திகள் வந்தன. இப்படி உதாரணத்திற்கு :
1.சூழலியல் பாதுகாப்புக்காக நீங்கள் முன்னெடுப்பாய் இறங்கியிருப்பது நல்லது. அதற்கான உறுப்பினர் அட்டை அனுப்பப்படும்
2. சூழலியல் பாதுகாப்பு சார்ந்த இவ்வாண்டின் திட்டங்கள் இவை. இவற்ரில் கலந்து கொள்ளுங்கள் என்று ஒரு ஆண்டிற்கானச் செயல் திட்டம் இருந்த்து.
3. அவர்கள் அனுப்பிய கடிதங்கள் , பின் இணைப்புகளிலிருந்த மலைகள், மரங்கள் இயற்கைக்காட்சிகள் அந்த இடங்களைத்தேடியும் அவர்களை தேடியும் அலையச்செய்யுமாறு கவர்ச்சியாக இருந்தது.
4. சுற்றுச்சூழலுக்கு இணக்கமாய் நீங்கள் தங்கியிருந்தீர்கள் உங்களின் கீழ்க்கண்ட் செயல்கள் அதற்கு ஆதாரமாக இருந்தன என்று ஒரு பட்டியல் இட்டிருந்தார்கள்.அதில் நான் மரம் நட்டிருந்தது ஒன்று
5. பின்னர் மறுசுழற்சி செய்தல் சம்பந்தமான ஒரு கருத்தரங்கிற்கு அழைக்கிறோம் என்று அதே மூணாறு இட வசதி பற்றி ஒரு கடிதமும் வந்தது.
6. அந்தக் கடிததத்தில் பலவேறு நிபந்தனைகள், நட்சத்திர குறியீடுகள் , மற்றும் அடைப்புக்குறிகளுக்குள் போடப்பட்டிருந்தன.அது ஏதோ பின்னல் வலை என்பதை யூகித்து நான் கையெழுத்திட்டு அனுப்பவில்லை
7. சூழலைப்பாதுகாக்கிற நுகர்வோராக பல நட்சத்திர அந்தஸ்துடன் நான் விளங்க பல ஆலோசனைகளைச்சொல்லியிருந்தார்கள்
விளம்பரங்களை, நிபந்தனைகளை நம்பி அவற்றைப்பின் தொடர எனக்கு விருப்பமில்லை
சூழலியல் கண்துடைப்பு சொற்றொடர் அவ்வப்போது மனதிலும் வந்து போனதால் அதிலிருந்து விலகிக்கொண்டேன் .
நிஜமாகவே சூழலியலைப்பாதுகாக்கும்பொருட்களை இனம் கொண்டு கொள்ள ஒரு சிறு அனுபவமாக அவை யெல்லாம் இருந்தன
நுகர்வோர் விழிப்புணர்வு என்று சொல்லப்படுகிற போது நுகர்வோர் உரிமை என்பதும் சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நுகர்வோர் உரிமை சார்ந்த கருத்துக்கள் அமெரிக்க அதிபராக இருந்த கென்னடியின் காலத்தில் வேரூன்றத்தொடங்கியது
கென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள் என்பதை சிலர் இப்படிக் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்கள்:
பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை -உயிருக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறல்.
• தெரிவு செய்து கொள்ளும் உரிமை - விரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள்,சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட, தரமான நம்பிக்கையான பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான a.
• தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை -
விளம்பரங்கள், வெளிப்புற தகவல் சீட்டுக்கள் மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள், விலை, நிறை போன்றவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்வதற்குமான உரிமை.
• கவனத்தை ஈர்க்கும் உரிமை -
ஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும், அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளும் உரிமை.என்று கொள்ளப்படுகிறது
இதையொட்டி சர்வதேச நுகர்வோர் என்போர் முத்திரையிடப்பட்டுள்ளார்கள் .
சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்]
• அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.
• நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
• சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
• சுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை.
நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம் கீழ்க்கண்டவற்றிலும் இனம் காணப்பட்டுள்ளது
1. நுகர்வோர் பொருட்கள் சேவைகளை விலையினூடாகவே நுகர்வு செய்கின்றார். இதனால் திருப்தியளித்தல் வேண்டும்.
2. நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல்.
3. போட்டியான சூழலில் நுகர்வோர் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
4. நுகர்வோரது உடல், உள நலம் பாதிப்படயாதவாறு திருப்தியளிக்கப்படல் வேண்டும்.
பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது. (கீழ்கண்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்பட வேண்டும்).
• நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)
• உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல்மேம்படஉதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)
• வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்படவேண்டும் (நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு).
• நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு கவனமாகவும் பொறுப்பாகவும் செயல்படவேண்டும் (பராமரிப்பு பற்றிய கோட்பாடு).
• களைகள் மட்டும் அல்லாது நுண்ணுயிர்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றில் ஆதிரப்பொட்டுக்கள் அடங்கும் (உதாரணம்: புழு பூச்சிகள், மிகச் சிறு பூச்சிகள்) மற்றும் நூற்புழுக்கள் ஆகியவை. பூசணங்களும், நுண் கிருமிகளையும்நோயை உண்டாக்கும்.
• தீமைபயக்கும் பூச்சிகள் பொதுவான ஒரு பிரச்சினையாகும். கரிம மற்றும் கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் ஆகிய இரண்டுமே, அவை சுற்றுப் புறச் சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதிப்புக்களால் சர்ச்சைக்குள்ளாகின்றன. இவற்றை சமாளிக்க ஒரு வழி, இந்தப் பூச்சிகளை அடியோடு புறக்கணித்து விட்டு தாவரத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். காரணம், தாவரங்கள் தமது வளர்ச்சி மிகுந்த அளவில் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, தமது இலைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளானாலும், அவற்றால் சமாளித்துக் கொள்ள முடியும்.
• பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைத் தவிர்ப்பதற்கு, இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். வேம்பு போன்ற கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பலவகை பூச்சிக் கொல்லிகளும், பச்சைப் பூச்சிக்கொல்லி என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக கரிம பூச்சிக் கொல்லிகள், செயற்கைப் பூச்சிக் கொல்லிகளை விட பாதுகாப்பானவை,
• நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும் அனைத்து சமயங்களிலும் பஞ்சகவ்யா திறனுள்ளதாகக் கூறப்படுகிறது. பூசணம் மற்றும் சில பூச்சிகள் ஆகியவற்றிற்கு எதிரான திறனை கந்தகம் (சல்ஃபர்) கொண்டுள்ளது. சுண்ணாம்பு கலந்த கந்தகமும் (லைம் சல்ஃபர்) கிடைக்கப் பெறுகிறது. ஆனால், இது தாவரங்களை சேதப்படுத்தி விடக் கூடும். பொட்டாஷியம் மற்றும் சோடியம் பைகார்பனேட் ஆகியவையும் பூசண காளான் எதிர்ப்புத் திறன் உடையவை. தாவரங்களின் நோயெதிர்ப்பு திறனை[10] அதிகரிக்கும் சில தாவர செயலூக்கிகள், அவற்றில் பெரும்பான்மையானவை இரசாயனமாக இருப்பினும், கரிமமாகக் கருதப்படுகின்றன ( notes wikipidia )
•
அவர்களின் கடிதங்கள் தந்த விதிகளை நினைத்துப் பார்த்தேன் .அந்த விதிகளின் படி சூழலியல் பாதுகாப்பு நுகர்வோராக நான் மாற வெகு காலம் பிடிக்கும் என்பதை மட்டுமுணர்ந்தேன்