சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

பங்குடி நாவல் ; கா மூர்த்தி / சுப்ரபாரதிமணியன் கரிசல் படைப்புகளை தொடர்ந்து வாசித்ததன் மூலம் அந்த பகுதி வட்டார வாழ்க்கை வழக்கு, பேச்சு வழக்கு போன்றவற்றை இப்போதெல்லாம் சுலபமாக தான் புரிந்து கொள்ள முடிகிறது க. மூர்த்தி அவர்கள் இந்த நாவலில் வரையும் பெரம்பலூர் வட்டார வழக்கு பேச்சு வழக்கு சார்ந்த விஷயங்கள் புதிதாக இருப்பதால் இறுக்கமாக தோன்றுகின்றது. பெரம்பலூர் பகுதியில் இருந்து எழுத்தாளர்கள் அதிகப்படியானவர்கள் வரவில்லை என்பதால் இந்த குறை . பங்குடி என்ற வார்த்தையே புதிதாக இருந்தது. இடம்பெயர்ந்து வந்தவர்கள் இருக்க கூடிய இடம் என்றார்கள். அங்கு எல்லா சாதி மக்களும் இருக்கிறார்கள். வருத்த புளியங்கொட்டையை சாப்பிடும் மக்கள் அல்லது புளியங்கட்டையை அவித்து சாப்பிடும் மக்கள் வறுமையில் என்ற சித்திரங்கள் காணக் கிடைக்கின்றன விதைப்பட்டியை எடுத்து சோற்றுக்காக குத்தி போடு என்ற என்று சொல்கிற சோகமும் வருகிறது. ஒரு மலை இருக்கிறது அந்த மலையை உடைத்து துண்டு துண்டாக செய்து அதில் சில பொருட்களை உருவாக்குவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஆதாரங்களை அந்த பகுதி ஒட்டக்குடியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் “ சீலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்கு போனாங்க அவ ஈச்சம்பாயைக் கட்டிட்டு எதுத்தாப்புல வந்தாங்கற கதை “ போல்தான் அந்த பகுதி மக்களின் வாழ்க்கை இருந்து கொண்டிருக்கிறது. மலைப்பாறைகளை சிறு வடிவமாகி விற்பவர்கள் அவர்கள். அங்கு விளைந்த பாறைகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டுகளாக்கும் பொறுப்பு அவர்களுடையது அப்படித்தான் மூப்பனார் சிலை சிவப்பாக தொப்புள் கொடி கொப்பளித்து வருகிற வரை அந்த வேலையை செய்கிறவர்கள் அவர்கள். அங்கு வருகிற ஒரு புல்டோசர் வடக்கு பாரத பகுதியில் நிறுவப்பட இருக்கிற ஒரு கோயிலுக்காக பெரும் பாறைகளை கொண்டு செல்கிறது. அதற்காக அந்தப் பகுதியை சுத்தமாக்குகிறது பாறைகளை உடைத்து . பெரும் தேரைகள் போல் புல்டோசர்கள் அந்த பகுதியில் நடமாடுகிறது. வடநாட்டு கோயிலுக்கு இங்க இருக்கும் மலை அழிய பாறைகளை கொண்டு போகிறார்கள். அந்த மக்கள் கூட்டம் சோர்ந்து போகிறது. அங்கே பல சாதிப்பிரிவினைகள். மதப் பிரிவுகள் இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கை ஆழமாக தான் மூர்த்தி சொல்கிறார். பேரிங்கை என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை முக்கியமாக இதில் இடம் பெறுகிறது. அவளுக்கு இரண்டு பெண்கள் அமைகிறார்கள். கணவனாக அமைகிறவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பெண்களும் சிரமப்படுகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பாறைகளை நொறுக்கி எடுத்துச் செல்லும் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நசுங்கிப் போகிற மனிதர்கள் போல பேரிங்கின் வாழ்க்கையும் ஆகிறது. வேறு எங்கே போல பல பெண்கள் வாழ்க்கை இங்கே இப்படி சொல்லப்படுகிறது. இப்படி புல்டோசர் நடமாடிக் கொண்டிருப்பதால் அந்தப் பங்குடி ரத்த நிலமாக மாறிப் பொழிகிறது . இந்த ரத்த காயப்பட்ட இரண்டு பகுதிகள் என்னை பாதித்தனர். ஒன்று பள்ளிகூடம். பள்ளிக்கூடம் இடிந்து மாணவருடைய வாழ்க்கை தவிக்கும் விதமாய் மாறிவிடுகிறது இன்னொன்று மக்கள் பீக்காட்டை சகஜமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் பின்னால் அதற்காக கழிவறைக்காக அவர்கள் வேறு இடம் தேடி போக வேண்டி இருக்கிறது. சாதியின் அதிகாரத்தின் வடிவமாக மலக்கரசலை வாயில் ஊற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதேசமயம் எதிரிடையாக பெருமாள் சாமிக்கு பீவாடையை காட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். மக்கள், பன்னி மாடு திங்கிற மக்கள் என்ற வகையில் பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன மலைகள் பாறையில் இடிக்கப்பட்டு மண் குவியல் ஆகிறது .மலைக்காடு கைவிட்டு போறதிலிருந்து புத்தி பேதலித்து ஊரை விட்டு பலர் போகிறார்கள் பலர். அங்கேயே திரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர் குடித்தெருவும் பங்குடி தெருவும் பகைத்திருக்க இருந்து கொண்டிருக்கிறன. அங்கு ஒட்டக் குடிகளாக இருந்தவர்கள் கூலி வேலைக்கும் செல்கிறார்கள் .பலர் வெட்டியாய் திரிகிறார்கள் சிலருக்கு பண்ணை வேலை தூரத்தில் அமைகிறது. பழங்குடிகளின் ஆதாரமாக இருந்த மலை பெட்ரோல் ஆகிறது கல் அரவை மெஷின்களின் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது கல் அரவை மெஷின்கள் இருந்த இடம் பள்ளிக்கூடத்துக்கு என்று ஆகிறது .பேரிங்கையோடு உறவு கொண்டிருந்த காண்டீபன் செய்யும் ரகளையும் அதனால் கொலையும் நிகழ்கிறது ஆண்குறியை அறுத்து கொலை செய்யப்படுகிறான். அந்த பெண்ணுக்கு பின்னால் பித்தன் என்பவன் அலைகிறான் பனங்கறுக்கு நெஞ்சில் கீறுவது போல பல துயரங்கள் அந்த பெண்ணுக்கு நிகழ்கிறது. பாறைகள் இல்லாத போன காலத்தில் வெறும் குன்றுகள் ஆறுதல் தருவது போல அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய மகள்கள் ஆறுதல் தருகிறார்கள். புது வெள்ளத்தைக் கண்ட கெளுத்தி மாதிரி குதித்து விழும் வாழ்க்கை மின்னல்கள் எப்போது வரும் என்று அவள் காத்திருக்கிறாள்.. பல ஆண்களுடன் வாழ நினைக்கிற அந்த பெண்ணின் துயரம் நாவல் முழக்க இருக்கிறது. மலைகளை பாறைகளை துண்டாக்கிய புல்டோசர்கள் வேறு ஊர்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அக்காட்சிகளோடு நாவல் முடிகிறது. ஒட்டக்குடிகள் சார்ந்த மக்களின் வாழ்க்கையும் வடநாட்டு கோயிலுக்காக இங்கிருந்து பாறையில் கொண்டு செல்லப்படுவதற்காக சிதைக்கப்படும் மலைப் பகுதிகளும் இந்த நாவலில் மிக முக்கியமான இடங்களை அமைக்கின்றன. பெரம்பலூர் பகுதியை மக்களின் வாழ்க்கையை மிகவும் துல்லியமாக அவர்களின் மொழி மற்றவர்களுக்கு படிக்க சிரமம் ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை மீறி அப்படியே கொடுக்கப்பட்டிருப்பது மூர்த்தி அவர்கள் தொடர்ந்து அந்த மொழியில் இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் ( .ரூ 300 வெற்றி மொழி பதிப்பகம் திண்டுக்கல்)