சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 18 டிசம்பர், 2023
வாசிப்பு
யாரப்பா நீங்க
துரை ஆனந்தகுமார் அவர்களின் சிறார் நாவலை முன்வைத்து ..
.. சுப்ரபாரதிமணியன்
ஆனந்தகுமார் அவர்கள் தொடர்ந்து சிறுவர் இலக்கியம் சார்ந்து நிறைய நூல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்திய அவர் பற்றிய குறிப்பு பார்த்தபோது அவர் இதுவரை 25 புத்தகங்கள் சிறுவர் இலக்கிய நூலாக கொண்டு வந்திருக்கிறார் என்பது ஆச்சரியம் அளித்தது .அவ்வப்போது எனக்கு வந்து சேர்க்கின்ற நூல்கள் தான் அவை. ஆனால் எண்ணிக்கை இப்போது கூடிவிட்டது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கு காரணம் சிறுவர் இலக்கிய நூல்களின் பங்களிப்பில் அவருடைய முக்கியத்துவம் நன்கு உணர தலைப்பட்ட காலம் இது.
தமிழில் சிறுவர் இலக்கியம் பல சிகரங்களை எல்லாம் தொட்டு விட்டது. படைப்புகளில் எடுத்துக்கொள்ளும் மையமாகட்டும் அதை பல்வேறு கோணங்களில் அலசுவதாகட்டும் எல்லாம் சிறப்பாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் ஆனந்தகுமார் எப்படி முக்கியத்துவம் பெறுகிறார் என்பதும் முக்கியம். அவர் தமிழக சூழலுக்கு வெளியே இருந்து கொண்டு, வெளிநாட்டில் இருந்து கொண்டு நேரத்தை இதற்கு ஒதுக்கி கொண்டு புத்தகங்களை கொண்டு வருகிறார் .
வயது சார்ந்து சிறுவர்களுக்கு நூல்கள் தமிழில் வெளியிடப்படுவது இல்லை. இது மேல்நாட்டு இலக்கிய வகைகளில் சிறுவர் இலக்கிய வகைகளில் முக்கியமாக இருக்கிறது. ஆகவே வயது சார்ந்து இவர்களுக்கான நூல் எது இந்த வயதிற்கான நூல் இது என்று அவர் வரையிட்டு ஒவ்வொரு புத்தகத்திலும் அதைக் குறிப்பிடுகிறார். பிறகு நமது சிறுவர்களுக்கு புத்தகங்களில் பெரும்பாலும் ஓவியங்கள் இடம் பெறுவதை தவிர்க்கிறார்கள் நம்மவர்கள். காரணம் பக்க அளவு அதிகமாகின்றது. செலவு அதிகமாக உள்ளது என்பதுதான் காரணம். அப்படி நல்ல ஓவியங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்ற குறைபாடும் இருக்கிறது. அதுவும் குழந்தைகளுக்காக குழந்தைகளுடைய மனதினைக் கொண்டு ஓவியம் வரையும் ஓவியர்கள் குறைவாக இருக்கிறார்கள். இன்றைய ஓய்வில்லாத ஓவியர்கள் மத்தியில் குழந்தைகளுக்காக நல்ல ஓய்வு மனநிலையுடன் வரைகிற ஓவியங்கர்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் துரை ஆனந்த குமாருடைய புத்தகங்களின் ஓவியங்கள் மிக முக்கியமான பங்களிக்கின்றன. பாதி பக்கங்களுக்கு மேல் அந்த வகையில் ஓவியங்கள் இடம் பெறுகின்றன. இந்த நூலில் சுமார் 120 பக்கங்களில் 60 பக்கங்களுக்கு மேலாக ஓவியங்கள் இடம் பெற்று இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டலாம். பிறகு இவர் தன்னுடைய நூலுக்காக எடுத்துக் கொள்ளும் புத்தக சைஸ்- அளவு என்பது முக்கியமாக இருக்கிறது குழந்தைகள் நன்கு உணர்ந்து படிக்கிற அளவில் பெரிய எழுத்துக்களும் பெரிய ஓவியங்களும் பெரியளவு புத்தக உருவங்களும் முக்கியமானவை.
இவை வெறும் தமிழ் சார்ந்த குழந்தைகள் மட்டும் படிப்பதற்கான நூலாக இல்லாமல் அவர் வாழ்கின்ற வெளிநாடுகளில் இருக்கின்ற வேறு மொழிக் குழந்தைகளும் படிக்க உபாயமாக ஆங்கிலத்தில் அந்தப் பிரதிகள் அச்சிடப்படுகின்றன. ஆங்கிலம் தமிழ் என்று ஒரே பக்கத்தில் அவை அச்சிடப்படுவது இன்னும் விசேஷம். தமிழர்கள் அல்லாத மற்றக் குழந்தைகள் மத்தியில் தமிழை கொண்டு செல்லவும் தமிழ் சார்ந்த நூலை கொண்டு செல்லவும் இது ஒரு நல்ல உபாயமாக எடுத்துக் கொள்ளலாம். அப்படித்தான் பல வகைகளில் ஆனந்தகுமார் அவர்களுடைய சிறுவர் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த யாருப்பா நீங்க என்ற இந்த சிறார் நாவலில் கூட அவர் புதுமையான கற்பனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். ஓவியங்கள் கதாபாத்திரங்களாக மாறுவதும் அவை உரையாடுவதும் அவை செயல் புரிவதும் என்று புதுமை இருக்கிறது. இந்த புதுமை நாம் முன்பே கூட சில இடங்களில் கண்டிருக்கலாம். ஆனால் ஓவியங்கள் கதாபாத்திரங்கள் ஆக உருவாகி அவை நடத்தும் உரையாடல்களும் செயல்களும் இந்த நாவலில் உள்ளன அப்படித்தான் தங்களின் வரைந்த பிரதான ஓவியரை காண வேண்டும் என்று கோரிக்கை வைத்து கவனத்தில் கொண்டு வர ஒரு வங்கிக்குள் ஓவியங்களின் கதாபாத்திரங்கள் நுழைகிறார்கள். அந்த பிரதான ஓவியரை பார்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய கோரிக்கையாக இருக்கிறது அதற்கு காவல்துறையும் ஒத்துழைக்கிறது. அவர்களின் தலைவராக இருந்த ஒரு பிரதான கதாபாத்திரத்தை கணினி குப்பை கூடைக்குள் போட்டு விட்டது. டஸ்ட் பின்னுக்குள்.. , அதை அந்த ஓவியர் தேடி எடுத்து மீட்டெடுத்துத் தருகிற போது அந்த ஓவிய கதாபாத்திரங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. இந்த மகிழ்ச்சி ஒவ்வொரு பக்கத்துக்கும் வெளிப்படுத்துகிறது.
இந்த கதை சொல்லலில் ஒருவித மேஜிக்கல் ரியலிசப் பாணியை கொண்டு வந்து விடுகிறார். அதன் மூலமாக பேண்டஸி அம்சங்களும் மேஜிக்கல் அம்சங்களும் கலந்து இந்த நாவலின் வாசிப்பை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்த சுவாரஸ்யத்தை இந்த நாவலில் மட்டுமல்ல அவர்களுடைய எல்லா நாவல்களிலும் கண்டு உணரலாம். குழந்தைகளுக்கான நாவல்களில் சுவாரஸ்யத்தை உண்டு பண்ணுவது என்பது அவர்களுக்கான சரியான தின்பண்டங்களை அவர்களிடம் கொடுத்து சுவைக்க சொல்லி தருவது போலத்தான். அப்படித்தான் தொடர்ந்து சிறுவர் நூல்களை அவர் கொண்டு வந்திருக்கிறார்.
25 சிறார் நூல்கள் என்ற எண்ணிக்கையை அடைகிற துரை ஆனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வோம்
( யாருப்பா நீங்க வம்சி வெளியீடு ரூபாய் 200 பக்கம்120 )