சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

மஞ்சவாடி நாவல்; கனல் மைந்தன் சுப்ரபாரதிமணியன் சூழலியல் எண்ணங்களையும் சூழலியல் கருத்துக்களுக்கான பரப்பையும் கொண்ட நாவல் மஞ்சவாடி. இது சேர்வராயன் மலைப்பகுதி அருகில் உள்ள ஒரு இடம் இந்த கிராமத்தை மையமாக வைத்து எழுதி இருக்கும் கனல் மைந்தன் அவர்கள் சிறுவர்களின் பள்ளி கால அனுபவங்கள் முதல் உயர் கல்வி சார்ந்த உலகம் வரை இந்த நாவலில் பிரத்தியேகமாகத் தந்திருக்கிறார் அந்த காலகட்டங்களில் சாதி ரீதியான கொடுமைகள் பல்வேறு நிலைகளில் எப்படி செயல்படுகிறது என்பதை சொல்கிறார். திணை போன்றவற்றை பண்ட மாற்றம் செய்து வாழ்கிற மக்களை எளிமையான வாழ்க்கை, மான்கள் போன்றவை கூட பிரமிப்பினைத் தரும் அனுபவங்கள் சுற்றுச்சூழல் விஷயங்களில் எப்படி இயற்கை உயிர் சங்கிலி செயல்படுகிறது என்ற எண்ணங்கள், ஒற்றை விளக்காய் அந்த கிராமத்திற்கு வந்து சேரும் மின்சாரம் இவற்றில் ஆரம்பித்து பல்வேறு வகையான சுற்றுச்சூழல் சார்ந்த அனுபவங்களையும் எண்ணங்களையும் இந்த நாவல் சொல்கிறது. புலிகள் காப்பகம் வருகிறது காலி செய் என்று அந்த கிராம மக்களைத் துரத்துகிறார்கள் என்பது பற்றி வாதங்கள் இங்கே இருக்கின்றன இந்த சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை எல்லாம் மீறிக்கொண்டு அரசியல் சார்ந்த கருத்துக்களையும் நிறைய கூறுகிறார் .ஏழைகளின் ஏற்காடான மஞ்சவாடியில் சாதி ரீதியாக நடைபெறும் சிக்கல்களும் கொடுமைகளும் விளக்கப்படுகின்றன படிப்பு மட்டுமே சோறு போடும் என்று திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. அப்படி படித்து வருகிறவன் வேலை வாய்ப்புகளுக்காக போகிறபோது சாதிக்கேற்ற சம்பளம் என்ற விகிதம் பார்த்து அதிர்ந்து போகிறான். அவனின் அப்பா கொல்லப்படுகிறார். அம்மா குழந்தைகளை கஷ்டப்பட்டு வளக்கிறார் ஆனால் கிராமத்தில் இருக்கிற காரணத்திற்காக அவள் தலைக்கட்டு வரி தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறாள். பூ மிதி போன்ற திருவிழாக்களில் மக்களுடைய ஈடுபாடும் கிராமிய தொன்மங்களும் இந்த நாவலில் சில காணக்கிடக்கின்றன. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறார்களே ஆரியத்தால் பெற்ற நன்மைகள் என்ன இருக்கிறது என்று கதாபாத்திரங்கள் கருத்துக்கள் கூறுகிறார்கள வாழ்வுரிமை பொதுவாக இருக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் கெடுக்கப்படுகின்றன என்பதை பல சம்பவங்கள் மூலம் வழக்குகின்றன. பள்ளி காலத்தில் மாணவர்களும் அவர்களின் சார்ந்த சாதி சார்ந்த மக்களும் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பது விரிவாக சொல்லப்படுகிறது பள்ளியில் ஆசிரியர்களுடைய டிபன் பாக்சைக் கூட கழுவ வேண்டும் என்பது முதற்கொண்டு கீழ் சாதி மக்கள் குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது சாதிக்கொரு சம்பளம் என்று அது கடைசியில் கழுத்தை நெரிக்கிறது. ஓசியில் தொலைக்காட்சி பார்க்க போனதற்காக அடிபட்டுக் கொள்கிற குழந்தைகள் தான் அறியாமை, கல்வியின்மை இவற்றிற்கெல்லாம் காரணமாக இருப்பதை அறிந்து கொண்டு தங்கள் கைகளை உயர்த்துகிறார்கள் கல்யாணம் சுயசாதி போன்றவற்றில் இருக்கும் முரண்பாடுகள் மற்றும் மாடு சினை ஏற்றப்படும் போது வேறு இன மாடு கூட பயன்படுகிறது ஆனால் திருமணம் என்று வருகிற போதும் காதல் என்று வருகிற போதும் சாதிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை பற்றி புது விளக்கங்களை வாழ்வியல் அனுபவங்களோடு கொடுத்திருக்கிறார். மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் மத்தியில் சாதி எப்படி செயல்படுகிறது நீ என்னை அம்மணமாக்கி பார்க்க ஆசைப்படுகிறாய்.. என்னை நிர்வாணமாக பார்த்துக் கொள் என்று அதிர்ச்சி தரும் விஷயங்களோடு இந்த நாவல் முடிகிறது. என் சாதி என்னவென்று சோதிக்ற்காக என்னை நிர்வாணப்படுத்துகிறாய் நான் முழு நிர்வாணமாக இருந்து வாழ்ந்து காண்பிக்கிறேன் என்று எழும்பும் குரல்களை இந்த நாவல் கொண்டிருக்கிறது. கனல் மைந்தன் என்ற பெயரில் கோவையில் இருந்த பேராசிரியர் தோழர் தன் பெயரை அக்னிபுத்தரன் என்பதிலிருந்து கனல் மைந்தன் என்பதை மாற்றிக் கொண்டார். அதேபோல பழனியில் அக்னிபுத்திரன் என்ற பேராசிரியர் இருந்து மறைந்தார் இந்த கனல் மைந்தன் தன் படைப்புகளில் எரியும் கனலைக் கொண்டிருக்கிறார் 0 .( ரூபாய் 300 நீர்க்கோத்தி பதிப்பகம் திருச்சி ) 0