சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 18 டிசம்பர், 2023
சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
” திரை “ வெளியீடு
திரை நாவல் : யுவராஜ்சம்பத்
பொதுவா உங்க நாவல் எல்லாமே ஏதாவது ஒரு பொது பிரச்சனையே மையமாக வைத்து அதை சுற்றி பின்னப்பட்டிருக்கும்.. ஆனா இது கொஞ்சம் அப்படி இல்லையோ? எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது
கந்துவட்டி கொடுமை பொருந்தாக் காதல் இந்த இரண்டைப் பற்றியும் ஒரு சின்ன லீடு இருந்தது. நான் கூட அதை விவரித்து பின்னாடி நாவல் பயணிக்கும் அப்படீன்னு நினைச்சேன்
ஆனா நீங்க செய்யல. ஏன்? போதும் அப்படிங்கிற ஒரு மனநிலையா? எவ்வளவு சொன்னாலும் இந்த சமுதாயம் கேட்காது அப்படிங்கிற ஒரு வெறுப்புணர்வா??
.. உங்க நாவலை படிக்கிற எல்லாருக்கும் இந்த வித்தியாசம் கொஞ்சம் தூக்கலாகவே தெரியும் அப்படின்னு நினைக்கிறேன்...
கதை இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டு இடங்களில்.. திருவனந்தபுரத்திலும் கோவாவிலும்.
சாதாரண மனிதன் திரைப்பட திருவிழாக்களை எப்படிப் பார்க்கிறான் என்கிற ஒரு மாறுபட்ட பார்வை. திரைப்பட விழாக்களுக்கு தவறாமல் செல்கிற அறிவுஜீவிகளின் பார்வையில் இந்தியத் திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன ,சர்வதேச திரைப்படங்களை இந்திய திரைப்படங்களுடன் தரத்தில், கதையில், காட்சிகளில், ஒப்பு நோக்குதல் போன்றவை மிக சிறப்பாகவே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.
சினிமாத்துறையில் திருப்பூரைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு கடந்த 50 வருடங்களாக சிறப்பாகவே இருக்கிறது என்பதை உங்கள் நாவலைப் படித்து ,அதற்குப்பின்னால் தெரிந்துகொண்டேன்.
எனக்கெல்லாம் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது .நாமும் ஏதாவது ஒரு நாள் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்று அந்த விழாக்களை ஏன் அறிவு ஜீவிகள் பெரிதாக கொண்டாடுகிறார்கள், அப்படி அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆவல் இருந்தது . ஆனால் ஒரு பார்வையாளனாக அங்கு செல்லும்பொழுது எப்படியெல்லம் சிரமப்பட வேண்டும். பயணம் முதல் உணவு வரை 4,5 தியேட்டர்களுக்கு நடுவே ஓடுகிற ஓட்டம். இந்த திரைப்படத்தை பார்க்க முடியுமா முடியாதா என்கிற ஏக்கம் .அதை பார்ப்பதற்கு இரவு 12 மணிக்கு எழுந்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய அவலம். இதையெல்லாம் மீறி மொழி தெரியாத சக மனிதர்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கு போகத்தான் வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த நாவல் .
வெறுமனே திரைப்பட விழாக்களை மட்டும் முன்னிறுத்தாமல் அந்தப் பகுதி மக்களின் உணவு வகைகள்,, கலாச்சாரம் ,மொழி ,சிறப்பு போன்ற எல்லாவற்றையும் உங்களுடைய பாணியிலேயே மிக அழகாக, இயல்பாக, நாவலைப் படிக்க வாசகனின் மனதில் பதியும்படி எளிமையாக சொல்லியிருக்கிரீர்கள். இது உங்களுடைய வழமையான உத்தி என்றாலும்கூட, முழு நாவலையும் படித்து முடித்த பிறகு எத்தனையோ புது வித உணவுகளையும் ,அந்த மாநில மக்களின் கலை ,பண்பாடு போன்றவற்றயும், சினிமா சம்மந்தபட்ட தொழில்நுட்ப வார்த்தைகளையும் தெரிந்து கொண்டேன். அந்த விழாவிற்கு நானே சென்று வந்து அவதிப்பட்ட, பிரபுவாக என்னை உணர்ந்து கொண்டேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இது. உங்களின் மணிமகுடத்தில் மற்றொரு வைரக் கல்லாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வாசகனுக்கும் உலக சினிமா பற்றி பொது அறிவு கொடுத்து இருக்கிறீர்கள்.
*
தமிழ் நாவல் களத்தில் புதிது இது.நாவல்களின் வகைமைகளில், களங்களில் புதிது புதிதாக எடுத்துக் கொள்ளும் உங்களின் முயற்சியில் திரைப்படவிழாக்களின் கோலாகலம் இதில்
( Thirai novel..Subrabharathimanian .,Rs 300 Zero degree publication , Chennai)
0