சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

பிடிமண்: ஜீவிதன் முதல் நாவல் / சுப்ரபாரதிமணியன் ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்றது. ஜீவிதன் சிறந்த கதை சொல்லியாக திருச்சி மணப்பாறை வட்டாரங்களில் அறியப்படுகிறார ஆனால் அவரின் கதை சொல்லும் அம்சங்களும் திறமையும் இன்னும் வெளியே பலருக்கும் தெரியாமல் இருக்கிறது அவரின் பல்வேறு முயற்சிகளின் மத்தியில் புது நாவலையும் கொண்டு வந்திருக்கிறார் அது அவருடைய முதல் நாவலாக இருக்கிறது. கவிஞராகவும் கட்டுரை ஆசிரியராகவும் நூல் விமர்சகராகவும் விளங்குகிறார் என்பது முக்கியம். இந்த செயல்களுக்கு மத்தியில் அவர்களின் முதலாவது நாவலில் அவரின் உள்ள கிடைக்க்ஐகளின் பலமும் நாவல் சார்ந்த வடிவங்களின் சில பலவீனங்களும் அமைந்திருக்கின்றன கிராம சூழலில் ஜாதி ஆதிக்கம் அதிலிருந்து விடுபட முடியாத மக்கள்.. ஜாதிய அடுக்குகள் மக்களை பிரிப்பது மற்றும் அவர்களை கூறுபோடுவதை விரிவாகவே சொல்கிறார். இந்த கூறுபோடும் அம்சத்தில் காதல் சிதைகிறது. தாய்மை கேள்விக்குறியாக்கப்படுகிறது அன்பு என்பதும் தூரப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த அந்நியமாதலை தரும் சாதியும் அது சார்ந்த அம்சங்களும் விரிவாக பல்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக ஜீவிதன் இந்த நாவலில் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் தான் வடிவாம் பாள், போதும் பொன்னு மாயாண்டி சங்கன், காளையன் போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் தென்படுகின்றன. சொந்த மண்ணில் அவள் கதாநாயகி உயிர் விட முடிவதில்லை ஆனால் உயிர் அல்லாடி கொண்டிருக்கிறது ஊருக்கு வெளியே. அவளுடைய உயிர் எப்படி பிரிந்தது அதற்காக ரத்த சொந்தங்களும் மற்றவர்களும் எப்படி உதவி செய்தார்கள் என்பது தான் நாவலின் ஆரம்ப கட்டமாக இருக்கிறது. இந்த பிடிமன் அவளுக்கு இறப்பதற்கு முன்பே கிடைத்த விடுகிறது. அதே சமயம் அவளின் இயல்பான வாழ்க்கையும் சாதாரண வாழ்க்கையும் எப்படி கிராம மனிதர்களுக்கு முன் இருக்கிறது என்பதை பல சம்பவங்கள் தெரிவிக்கின்றன. சொந்த மண் என்றாலும் அதை அவள் அனுபவிக்க முடியவில்லை. தூரம் போய் வேடிக்கை வாங்க வேண்டி இருக்கிறது. அந்த மனுஷியின் வாழ்க்கையை விரிவாக இடில் உள்ளது. காதல் செய்து பெற்றுக் கொண்ட பிள்ளை, அதை வளர்க்கும் சிரமங்கள் கடைசி காலத்தில் அந்த குழந்தையை நினைப்பில் அவர் உயிர் தள்ளாடுவது என்று பல விஷயங்கள் இந்த நாவல் வந்திருக்கின்றன. பல ஆசைகள் பல எண்ணங்கள் இவை எல்லாம் சாதி சார்ந்த இறுக்கங்களாக இந்த கதாபாத்திரங்கள் தலையில் விழும் அம்சங்களை பிடிமன் நாவலில் கிராமிய சூழல் நன்கு வெளிப்படுமாறு சொல்லுகிறா.ர் மதம் சார்ந்த நம்பிக்கைகள், ஜாதி சார்ந்த உணர்வுகள், கோயில் திருவிழாக்கள் இவற்றில் குறிப்பாக நாட்டுப்புற கலைகளின் வெளிப்பாடுகள் என்று கிராமிய சூழலை ஜீவிதன் நாவலில் கொண்டு வந்து விடுகிறார். நாவல் முழுக்க சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது. வழக்கமாக நாவல்களில் கதாநாயகன் கதாநாயகி இல்லாத அம்சங்கள் அந்த நாவலை இன்னும் வேறுபடுத்தும் .இந்த நாவலில் அவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எதிரான மனிதர்களும் இருக்கிறார்கள் அந்த மனிதர்களின் வாழ்க்கை மூலமாக கிராமிய சாதிய இறுக்கம் எப்படி அவர்கள் வாழ்க்கையை நிர்மூலமாக்குகிறது என்பதை இந்த நாவில் ஜீவிதன் சொல்லுகிறார். முதல் நாவல் முயற்சி என்பதே பெரிய பலமாகும். விலை ரூபாய் 290 எடுத்து பிரசுரம் சென்னை வெளியீடு