சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

நாவல் எழுதுவது / சுப்ரபாரதிமணியன் நாவல் பற்றி நான் மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பயிற்சி எடுக்கிற போது ஒரு உதாரணத்தை திரும்பத் திரும்பச் சொல்வேன். . ஒரு நாவல் என்பது ஒரு வீட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பது. ஜன்னல் வழியை பார்க்கும் பார்வையில் வானமும் வாகனங்களும் மனிதர்களும் நிலப்பரப்பும் பல மனிதர்கள் வாழ்வும் என்று தென்படும் .அப்படி விரிவான பார்வையில் பார்க்கப்பட வேண்டியது நாவல். அதுவே சிறுகதையாக இருந்தால் அறையின் வெளியே இருந்து கொண்டு ஜன்னல் வழியாக உள்ளே நடப்பதை பார்ப்பது என்றும் சுலபமாக சொல்லி வைப்பேன். அப்படித்தான் நாவல் வடிவத்தை நாம் எளிமையாக புரிந்து கொள்ளலாம் அல்லது ராஜாஜி அவர்கள் சொன்னது போல சிறுகதை என்பது வானத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் பனைமரத்தை போல. ஒரு மையத்தை நோக்கி செல்வது. நாவல் என்பது ஒரு புளிய மரத்தை போல பல கிளைகளும் பருமனும் என்று வித்தியாசப்படுவது. என் அனுபவத்தில் நான் நாவல் எழுதுகிற அனுபவத்தை கனவாகத்தான் நினைத்திருந்தேன் ஆனால் நிறைய சிறுகதைகள் எழுதுகிற போது நாவல் எழுதுகிற எண்ணமும் வந்தது ஆனால் ஒரு நாவலுக்கான விரிந்த காலமும் பரந்த அனுபவம் இல்லாமல் இருந்தது .ஒரு எழுத்தாளர் தான் வாழ்ந்த அனுபவங்களை மட்டும் தான் எழுத வேண்டும். வசீகரித்த அனுபவங்களையும் எழுதலாம். அப்படித்தான் நான் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தபோது ஹைதராபாத்தில் இருந்தேன். அந்தப் பின்னணியில் ஒரு நாவல் எழுத வேண்டும் என்று தோன்றிய போது அங்கு வந்து குடியேறி இருந்த சின்னாளப்பட்டி சேர்ந்த ஒரு 50 குடும்பங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவர்களின் வாழ்க்கை முறையைக் கவனித்தேன் அதை ஒரு நாவலாக எழுத ஆரம்பித்தேன் ஹைதராபாத்தில் இருந்தபோது நான் எழுதிய மூன்று நாவல்கள் முதல் நாவல் “மற்றும் சிலர் “ .இரண்டாவது சுடுமணல் என்ற நாவல் நதிநீர் பிரச்சனையில் கர்நாடக போன்ற மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்படுவதை ஹைதராபாத் சூழ்நிலை வைத்து எழுதினேன். ஏனென்றால் எனக்கு கர்நாடக பெங்களூர் சூழல்கள் அந்நியமாக இருந்தது காரணம். பிறகு அங்கு நடைபெற்ற ஒரு அரசியல் சூழ்ச்சி காரணமான ஆட்சிக் கவிழ்ப்பும் அதை ஒட்டிய மக்களுடைய பலிகளும் பற்றி நகரம் 90 என்ற நாவலில் எழுதினேன். ஆகவே இந்த நாவல் அம்சங்களை நான் எங்கும் தேடிப் போகவில்லை. அது என்னை சுற்றியுள்ள நிகழ்வுகளாக இருந்தன. அப்படித்தான் சமகாலத்திய அனுபவங்களை இப்படி நாவலுக்குள் கடத்திக் கொண்டு போகலாம் என்பது விளங்கியது. அதற்காக நெடுகாலம் காத்திருப்பதோ, பெரும் ஆய்வில் செய்வதோ இயலாத நிலையில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை கவனித்து எழுதுவது ஒரு நாவலுக்கான சாதாரண இயல்பாகிவிட்டது. எனக்கு அப்படித்தான் நான் திருப்பூர் வந்தபோது திருப்பூர் மக்களின் வாழ்க்கையை கவனித்து பத்துக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதினேன் அதில் திருப்பூர் மக்களுடைய வாழ்க்கை குறிப்பாக பனியன் தொழிலாளர்களும் பெண்களும் என்னுடைய கவனத்துக்கு வருபவராக இருந்தார்கள் நான் தொலைபேசி தொடர்பு துறையில் பொறியாளராக இருந்தேன். அந்த கடுமையான வேலை மற்றும் நான் சார்ந்த உடைமை இயக்க சிந்தனைகள் போன்றவை பல ஆய்வுக்கு செல்லத் தடையாக இருந்தது. ஆகவே என்னை வந்து அடையும் அனுபவங்களை நாவலாக்கினேன். இதற்கான நான் வெளியில் எங்கும் அலையவில்லை ஆய்வு செய்ய முடியவில்லை. என்னை சுற்றியுள்ள மக்களெல்லாம் பார்த்து அனுபவங்களை கூர்ந்து கவனிப்பதன் மூலமாக அவற்றை எழுதினேன். இப்படி மலேசியா சார்ந்த நாவல் அனுபவங்களும் பயணம் சார்ந்த சில நாவல் அனுபவங்களும் என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஆகவே இந்த நாவலுக்கான களம் என்பது நம்மை சுற்றியுள்ள வாழ்க்கையை கூர்ந்து கவனிப்பது மூலம் கிடைக்கிறது. நல்ல தரவுகளை சேகரிப்பது ஆய்வுகள் செய்வது தேவையாக இருந்தால் கூட என் வாழ்க்கை சூழலில் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. எந்த பிரதேசம் சார்ந்த எழுதுகிறோமோ அந்த பிரதேசம் மொழி கதாபாத்திரங்களின் பேச்சு மூலமும் வழக்குகள் மூலமும் கொண்டுவரப்பட வேண்டும். பொது மொழியாக இல்லாமல் இப்படி பிரவேசம் சார்ந்த பிரத்யேக மொழியைக் கையாளுதல் முக்கியம். இன்றைய பிரச்சனைகள் நாளைய சரித்திர பதிவுகளாக மாறும். ஆகவே எழுத்தாளர் அவற்றை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படித்தான் நான் என்னை சுற்றியுள்ள மக்களுடைய வாழ்க்கையையும் குறிப்பாக திருப்பூர் மக்களின் வாழ்க்கையையும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளையும் நாவல்களுக்குள் கொண்டு வந்தேன். ஆகவே என்ன வகையான மையங்களை நாவலுக்குள் கொண்டு வருவது என்பதில் நம் வாசிப்பும் மற்றும் கூர்ந்து சமூகத்தை பார்க்கும் அனுபவமும் இணைந்து வழிகாட்டும். நாவல் வடிவத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று வருகிற போது நேர்கோட்டு தன்மையிலான கதை சொல்லும் விதி முதலில் ஆரம்பத்தில் எழுதறவங்களுக்கு கை கொடுக்கும். சிறுகதை பலவற்றை கோர்த்து நாவலாக்குவது போல நேர்கோட்டு தன்மையில் எதார்த்தமாக கதாபாத்திரங்களை கொண்டு அவற்றை உருவாக்கலாம். பின்னால் அந்த வடிவங்களை நான் பின்னநவீனத்துவம் முதற்கொண்டு பல்வேறு வகையான விஷயங்களைக் கொண்டு நாவல்களை எழுதி இருக்கிறேன் ஆகவே வடிவம் சார்ந்த விஷயங்களின் கூட கவனம் தேவையாக இருக்கிறது. மொழியும் வடிவமும் வாழ்க்கை அனுபவங்களும் இப்படி நாவல்களை எழுதிக் கொண்டு போக உதவும். நீண்ட கால வாழ்க்கை, அதேபோல நீண்ட கால அனுபவங்கள் இவை எல்லாம் எல்லோருக்கும் வாய்க்காது, வாய்க்கும் அனுபவங்களை இப்படி நாவலாக்குவது என்பது சிறந்தது, அப்படி வாய்க்கும் அனுபவங்களை பதிவாக்குவதும் இன்னும் சிறந்தது பெரிய நாவல்கள் எழுத வேண்டும் என்ற ஆசை வந்த போது அதற்கான ஆய்வுகளும் பல மனிதர்களுடன் சந்திப்பும் தேவையாகிறது அப்படித்தான் ஆயிரம் பக்க நாவல் சிலுவையை நான் எழுதினேன் ஆகவே நாவல் என்ற வடிவத்தை நாம் கையாளர்கிறபோது வடிவம் சார்ந்தும் அதில் பயன்படுத்தும் மொழி சார்ந்தும் மக்களின் அனுபவம் சார்ந்தும் நம்முடைய அவதானிப்புகளை அங்கு பதிவு செய்யலாம். நாவல் போன்ற பெரிய வடிவத்தில் வாழ்க்கையை சொல்வதும் வாழ்க்கையை சார்ந்து அனுபவத்தை விரித்துக் கொண்டு போவதும் ஒரு மாபெரும் தரிசனமாகவே தோன்றுகிறது. சிலுவை நாவல் கொங்கு பகுதி எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களில் இவ்வளவு பெரிய நாவல் என்று பக்க அளவில் இதுவரை எதுவும் வெளிவந்தது இல்லை என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் கொங்கு பகுதியில் கவுண்டர்கள் சார்ந்த வாழ்வு அனுபவங்களை பல எழுதி இருக்கிறார்கள் பின்னால் பொதுவுடமை இயக்க எழுத்தாளர்கள் மக்களை பிரச்சனைகளை பல வடிவங்களில் கொடுத்திருக்கிறார்கள். திராவிடச் சிந்தனைகளும் பல்வேறு தத்துவார்த்தை பின்னணிகளும் கூட பல நண்பர்கள் நாவலில் இடம் அளித்திருக்கிறார்கள். ஆனால் ஏறத்தாழ ஆயிரம் பக்க நாவல் என்பது எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் சிலுவை நாவல் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது . பெரிய நாவல்களுக்கான காலம் முடிந்து விட்டது போல் இருக்கிறது.. கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இது போன்ற பெரிய நாவல்கள் நிறைய வந்தன.. இப்போது பெரிய நாவல்களின் வருகை குறைந்து இருப்பது போல் தோன்றுகிறது ஆனால் பெரிய நாவல்களை வெளியிடுவதன் மூலமாக பதிப்பாளர்கள் கொஞ்சம் லாபம் பெறுகிறார்கள் என்பது தெரிகிறது. அந்த வகையில் பலர் பெரிய நாவல்களை எழுதினார்கள் ஆனால் கொரோனா காலத்திற்குப் பின்னால் புத்தகங்களுடைய விற்பனை சார்ந்து ஏற்பட்ட சுணக்கம் இப்படி பெரிய நாவல்களுக்கு வழி விடவில்லை என்று தோன்றுகிறது ஆனாலும் பெரிய நாவல்கள் எழுதப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் வாழ்க்கையை விசாலமாக சொல்ல முடியும் அந்த வகையில் சுப்ரபாரதிமணியன் சிலுவை சுமார் 1000 பக்கங்களை கொண்டு வெளி வந்திருக்கிறது . மகத்தான அனுபவங்களை இந்த கொங்கு பகுதி மக்கள் கொண்டிருக்கிறார்கள் அவற்றை மகா நாவல்கள் அனுபவமாக்கலாம் தான் சொல்ல முடியும். அவற்றை எழுதுவதற்கான காலமும் பொறுமையும் நேரமும் எழுத்தாளர்களுக்கு வாய்க்க வேண்டும் அது குறைந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. (கோ. சிவராமன் திருமங்கலம் )