சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

அரசின் நமக்கு நாமே திட்டம் நியாயமானதா - சுப்ரபாரதிமணியன் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் நான் வசிக்கும் வீதி மண் வீதியாகவே இருக்கிறது சாலை போடப்படவே இல்லை பலமுறை இங்கு ஊராட்சியில் மற்றும் நகராட்சிகளில் போட்டியிடுபவர்கள் எங்கள் வீதி சாலையை ஒழுங்காக்குவோம் ” ரோடு போடுவோம் “ என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு வாக்குகளை வாங்குகிறார்கள் ஆனால் பதவிக்கு வந்த பின்னால் அதில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை இப்படித்தான் நான் வசிக்கும் வீதி “ மண் ரோடாக ” மேடு பள்ளமாக சாக்கடை ஓடும் இடமாக இத்தனை ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது பக்கத்து வீதிகளில் ஓரளவுக்கு சாலை வசதி வந்து விட்டது இப்போதுதான் சில மாதங்களுக்கு முன்னால் எங்கள் வீதியில் சாலை போடுகிறோம் என்று ஒழுங்கு செய்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்னால் இருந்த செடிகள் கொடிகள் சிறு மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்தார்கள்.. ரோடு வேணும்னா இதெல்லாம் விட்டு தான் ஆகணும் என்று உள்ளூர் நகராட்சி நிர்வாகம் சார்ந்தவர்கள் கேலி செய்தார்கள். இது நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் சாலை போடுவதற்காக எந்த ஆயத்தமும் இல்லை. நகராட்சி உறுப்பினர் வசம் இருந்து நமக்கு நாமே திட்டத்தில் அந்த வீதியில் குடியிருப்போர் பணம் தர வேண்டும் என்றார்கள். மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கும் கடிதம் அனுப்பினேன் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இருந்து சாலை போட ஒப்பந்தம் இருக்கிறது. .ஆனால் கழிவுநீர் ஓடுவதற்கான வேலை செய்ய ஒப்பந்தம் எதுவும் இல்லை. ஆகவே அந்த வீதியில் குடியிருப்பவர் தான் அதற்கான பணத்தைக் கட்ட வேண்டும் என்றார்கள். நகராட்சி உறுப்பினர் பக்கம் இருந்தும் இதையேச் சொன்னார்கள் அதன்படி கழிவுநீர் ஓடுவதற்கான பாதை அமைக்க அந்த தெருவில் வசிப்போர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணம் போட வேண்டும் என்கிறார்கள். வீட்டு முகப்பில் அதை கட்டுவதற்காக ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வரை கட்ட வேண்டும் என்கிறார்கள். அப்படி என்றால் என் வீட்டுக்கு முகப்பிற்கு அதை செய்ய நான் சுமார் 40 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.. என் வீதியில் 50 வீடுகள் உள்ளன இதில் ஒவ்வொருவரும் குறைந்தது 30 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை கட்ட வேண்டி இருக்கிறது.. பிறகு இந்த கழிவுநீர் பிரதான சாலைக்கு சென்று சேர்க்கிற இடத்திற்கு கால்வாய் கட்டவும் அதற்கான செலவையும் தெருவாசிகள் தான் ஏற்க வேண்டும் அது ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வரும் என்கிறார்கள். இதுதான் நமக்கு நாமே திட்டம். .சாலை போடுவதற்காக ஒப்பந்தம் இருக்கிற போது கழிவுநீர் பாதை அமைக்க ஏன் ஒப்பந்தம் இல்லை என்பது பற்றிய விளக்கங்கள் யாரும் தருவதில்லை. எங்கள் பகுதி கட்சிகாரர்களின் அணுகினால் ஆமாம் என்கிறார்கள். ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பவர்கள் கூட்டணி தர்மத்தால் மௌனமாக இருக்கிறார்கள். ஆமாம் ஆமாம் என்கிறார்கள் நமக்கு நாமே திட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை தருவதற்கு எங்கள் வீதியில் உள்ள 50 வீட்டுக்காரர்கள் தயாராக இல்லை. காரணம் திருப்பூரில் உள்ள இன்றைக்கு மோசமான பனியன் கம்பனி சூழல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் நலிந்து போயிருக்கிறார்கள். அவர்களால் அவ்வளவு பெரிய தொகையைத் தர முடியாது. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் எங்களால் எங்கள் வீதியில் தார் சாலையை பார்க்க முடிகிற கனவு, பகல் கனவாகவே இருக்கிறது இந்த நமக்கு நாமே திட்டம் எல்லா ஊர்களிலும் இருக்கிறதா என்று தெரியவில்லை, கேட்டால் பக்கத்து வீதிகளில் அப்படித்தான் வாங்கி இருக்கிறோம் நீங்களும் கொடுங்கள் என்று எங்கள் வீதியில் இருப்பவர்களை கேட்கிறார்கள், அதன் படி நான் 40,000 ரூ தரவேண்டும். இது குறைவானது, பிற வீட்டார்களைக் ஒப்பிடும்போது. இந்த நமக்கு நாமே திட்டம் திருப்பூரில் மட்டும்தான் இருக்கிறதா மற்ற ஊர்களிலும் இப்படித்தான் செயல்படுகிறார்களா? முன்பு தார் சாலைகளும் கழிவுநீர் பாதைகளும் அமைக்கப்பட்ட வீதிகளில் இப்படியெல்லாம் பெரிய வசூல் நடந்ததாக தெரியவில்லை. சாதாரண மக்கள் வசிக்கும் எங்கள் வீதியில் பெரும்பான்மையுடன் பனியன் தொழிலாளர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் இதற்காக செலவு செய்ய முடியுமா. யாரிடத்திலும் பதில் இல்லை அரசு நிர்வாகம் இதுதான் நிலைமை என்கிறது. இது உண்மையான நிலைமையா என்பது புரியவில்லை விளக்கங்களுக்கும் தெளிவில்லை. யாராவது விளக்குங்கள் தெரிந்தவர் சொல்லலாம் அன்புடன் சுப்ரபாரதி மணியன் எழுத்தாளர் SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003