சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 18 டிசம்பர், 2023
மந்திராலயம் சீரடி போன்ற ஊர்களில்
மந்திராலயம் சீரடி போன்ற ஊர்களில் பக்தர்களின் பரவசங்களை பார்த்தபோது ஆச்சரியமாகவே இருந்தது. இந்தியா முழுக்க இப்படி மதம் சார்ந்து இயங்குகிற பலகோடி மனிதர்களை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது அதற்காக அவர்கள் செலவு ஏற்படும் நேரங்களும் செலவும் இன்னும் ஆச்சரியப்படுத்துகிறது பல மணி நேரங்கள் கோயில் தரிசனங்களுக்காக வரிசையில் இருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை பயணத்திற்கும் மற்றும் பூஜைக்காரியங்களுக்கும் செலவு செய்கிறார்கள். இதெல்லாம் அதிகப்படியாகத்தான் எனக்குத் தோன்றியது. ஆனால் அவர்களுக்கு இவை எல்லாம் பரவசம் ஊட்டக்கூடியவை என்பத நான் உணர்ந்தேன்.
0
இலவசப் பிரதிகள்
சீரடியில் தனியிருந்த போது பல இடங்களில் சீரடி சாய்பாபா சம்பந்தமான சிறு சிறு புத்தகங்கள் இலவசப் பிரதிகளாக பல இடங்களில் கிடைப்பதை அறிந்து கண்டேன்.. நான் தங்கி இருந்த விடுதியில் இருந்து காலி செய்துவிட்டு கிளம்பும்போது என்னுடன் இருந்த தமிழ் நண்பர்கள் எல்லோருக்கும் சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாறு சார்ந்த நான் ஒரு 490 பக்க நூலை பரிசாக கொடுத்தார்கள். இலவச பொருளாக்க் கொடுத்தார்கள். அது மட்டுமல்லாமல் அப்போது அங்கு தங்கியிருந்த வேறு மொழிகள் சார்ந்த பக்தர்களுக்கும் அதே போல அந்தந்த மொழிகளில் சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாற்று நூல்கள் தரப்பட்டன அவ்வளவு பெரிய புத்தகத்தை இலவச பிரதிகளாக தரப்பட்டது அதிசயமாகப் பட்டது. நான் கைவசம் இருந்த கனவு 113 வது இதழி சிலருக்கு தரலாம் என்று வைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய புத்தகம் தரும் போது கருப்பு வெள்ளை அட்டையில் ஒரு சாதாரண இலக்கிய பத்திரிகை தருவது அதுவும் இலவசமாக தருவது கூச்சம் என்றாகிவிட்டது. தரவில்லை இப்படி சீரடி சாய்பாபா சார்ந்த அந்த வாழ்க்கை வரலாறு நூல்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பிரதிகள் பக்தர்களுக்காக அங்கே வருகை தருவதற்காக தரப்படுவதை கண்டேன் ஆச்சரியமாக இருந்தது அதற்காக பக்தர்கள் சார்ந்த கூட்டங்கள், அமைப்புகள் மற்றும் முதலாளிகள் பணத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பது சாதாரணமானதுதான். கல்யாண வீடுகளில் இதுபோல் கடவுள்களின் நாமங்களை ஜபிக்க உதவும் மந்திரங்களையும் சிறு குட்டி கதைகளையும் எல்லாம் சேர்த்து புத்தகங்களாக தருவதை பலர் செய்து வருகிறார்கள் முற்போக்காளர்களாக இருந்தால் முற்போக்கு பதிப்பகத்தின் சிறு வெளியீடுகளை மணமக்களுடைய பெயரோடு சேர்த்து அச்சிட்டு கொண்டு வந்து திருமண பரிசாக வழங்குகிறார்கள். இப்போதெல்லாம் இலக்கிய வாதிகள் சார்ந்து முதலாளிகள் கார்ப்பரேட்டுகள் எல்லாம் இயங்குகிறார்கள் என்பதால் அவர்களின் நூல்களை இலவசமாக தருவது என்பது நடந்து வருகிறது. தங்களின் கொள்கைகள், இலக்கிய நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்களை சிறு சிறு நூல்களாகவும் பெரிய நூல்களாகவும் இலவசமாக வெளியிடுகிறார்கள் எழுத்தாளர்களின் நூற்றாண்டுகளாக முன்வைத்து அதுபோல பல நூல்கள் வெளியிடப்படுகின்றன என்பதையும் அறிய முடிகிறது ஆனால் என் அனுபவத்தில் 37 ஆண்டுகளாக கனவு இலகிய இதழைக் கொண்டு வருவதில் உள்ள சிரமங்களும் பொருளாதார கஷ்டங்களும் சொல்லி மாளாது.. அதற்கெல்லாம் தனிப்பட்ட சேமிப்பிலிருந்து தான் செலவு பண்ண வேண்டி இருக்கிறது இப்படி இலவச நூல்களை வழங்கும் அமைப்புகளோ எழுத்தாளர் களோ அவர்கள் சார்ந்த கொள்கைக்கு ஏற்புடையதாக செயல்படுகிறார்கள். அது அவர்களின் விருப்பம் சார்ந்த விஷயம் தான் இப்படி நல்ல எழுத்தாளர்கள் நூல்களை கொண்டு வருவதற்காக உதவி செய்வது முடிந்தால், இலவசப் பிரதிகளை கொண்டு வைப்பது போன்றவற்றில் அக்கறை கொண்டவர்களை தேடுவது தீவிரமான இலக்கிய அக்கறை கொண்ட எழுத்தாளர்களுக்கு தங்கப் புதையல் வேட்டை தான் அதெல்லாம் எல்லோருக்கும் அமையாது
பொதுமக்களுக்கு வழங்கப்படுகிற இலவச பொருட்கள் மற்றும் மானியங்கள் மூலமாக மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதற்கான பல ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன தங்களை சோம்பேறி மனதளவில் அவர்களைள் இழுத்துக் கொள்கிறார்கள் இலவசத்தை நிராகரிக்கிற போக்கு வருவதில்லை இதனால் அரசன் இலவச பொருட்கள் காரணமாக பல குடும்பங்களில் ஆண்கள் வேலைக்கு போகாமல் அந்த இலவச பொருட்களை நம்பி வாழ்கிறார்கள் அல்லது வேலைக்கு போய் சம்பாதிக்கிற காசை குடித்துவிட்டு தங்களை இலவசமான உரிமை மனிதர்களாக காட்டிக் கொள்கிறார்கள். இலவசம் என்பது உரிமை அல்ல என்றாக வேண்டும். அந்த சலுகை பெறுவதற்கு கொஞ்சம் அவமானங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைத் தாண்டி இலவசங்களை பெறுவது என்பது மனிதனின் சுயமரியாதைக்கு கேள்வியாக விஷயம் என்பதை இன்றைக்கு குடிமக்கள் கவனிக்க தவறி இருக்கிறார்கள். இலவசங்கள் வாழட்டும் ஆனால் இலவசங்களைப் பெறும் மனநிலை ஒழியட்டும்
0
எல்லோரா குகைகள் சிதைவுக்கு காரணம் அவர் முஸ்லிம் படையெடுப்புகள் என்று சக பயணிகள் சிலர் அந்த எல்லோரா குகை ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது பொதுவாக சொல்லிக் கொண்டே இருந்தார்கள் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை ஆனால் இந்து அரசர்கள் மத்தியிலான போட்டி பொறாமை தான் அவர்களை போர் மற்றும் சிதைவுகளை எப்படி நினைவுக்கு கொண்டு சென்றது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது
0
சீரடியில் நான் தங்கி இருந்த பிம்பிலி பகுதியில் சிவனேசன் என்ற தமிழர் சாய்பாபா பக்தர் சமாதியான இடம் ஆசிரமமாக உள்ளதாக கோபியைச் சார்ந்த தமிழ் பேராசிரியர் மரகதமணி சொன்னார் அவரைப் பற்றி சில ஆங்கில நூல்கள் வந்துள்ளதாம் சீரடியில் எனக்கு தரப்பட்ட இலவசப் பிரதியான 490 பக்க நூலில் சாய்பாபா சீடர்கள், பக்தர்கள் பலர் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் உள்ளன. ஆனால் சிவனேசன் பற்றி எந்த குறிப்புகளும் இல்லை அவர் தமிழர் என்பதால் புறக்கணிக்கப்பட்டாரா என்ற கேள்வி மனதில் வந்தது
எல்லோராவில் சிதைந்த வடிவங்களில் சிலைகளைப் பார்க்கையில் கண்ணீர் வருவது இயற்கை நல்ல வேளை பக்கத்தில் இருக்கும் அஜந்தா கோயில்கள் யார் கண்ணுக்கும் படவில்லை என்று தங்கள் ஜனனேசன் கூட சொன்னார்