சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

25வது மதுரை ஆவணப்பட, குறும்பட விழா என்னும் சாதனைச் சிகரம் ஆவணப்பட இயக்குனர் அமுதன் அவர்களின் தொடர்ந்த முயற்சியின் சாதனையாய் 2023ல் நடைபெற்ற 25வது மதுரை ஆவணப்பட, குறும்பட விழா அமைந்திருந்தது. உலகம் முழுக்க இருந்து நூற்றுக்கணக்கான ஆவணப்பட குறும்படங்களின் திரையிடலும் சிறந்த படைப்புளுக்கான ஒரு லட்சம் ரூபாய் பரிசளிப்பும் என்று நிறைவுபெற்றது. வழக்கமாய் ஐந்து நாட்கள் மதுரை ஆவணப்பட, குறும்பட விழா நடைபெறும் . இம்முறை வெள்ளிவிழா என்பதால் அது பத்து நாள் விழாவாக சுமார் பத்து மையங்களில் படங்களின் திரையிடல், கருத்தரங்குகள் , கல்ந்துரையாடல் என்ற வகையில் அமைந்த்திருந்தது. அமரர் மதுரை யதார்த்தா ராஜன் பரிசு 25,000 ரூபாய் உடன் பெற்ற படம் சென்னையைச் சார்ந்த இளம் இளைஞர் பகவத் இயக்கிய “ தொலைந்த போன ஆட்டு மந்தை ”. இன்னொரு பரிசுபெற்ற படம் : தி ரோடு . ஆடுகள் மேய்க்கும் வயதான தகப்பன். குடிகாரன். கல்யாணமாகாத இளம் பெண் பெண்ணின் திருமணத்திற்கு அந்த ஆடுகளை விற்கும் திட்டமும் அவனுக்கு இருக்கிறது. ஆனால் அந்த பெண் அதை எதிர்க்கிறாள். ஒரு நாள் மாலையில் அந்த ஆடுகளை திரும்ப வீட்டுக்கு அழைத்து வர போக ஆட்டு மந்தை காணாமல் போய்விட்டது பற்றி கலக்கம் கொள்கிறான் குடிவெறியில் ஒருவர் மேல் சந்தேகம் வர அவனை சட்டையை பிடித்து உலுக்கி விடுகிறான். இந்த திருட்டுப் பழக்கத்தை உன் அப்பனிடமிருந்து பெற்றுக் கொண்டாயா என்று கேட்கிறான். அது அவனுக்கு எரிச்சலை கிளப்ப அவன் பின்னால் வீட்டிற்கு வந்து அவனை சுட்டுக் கொன்று விடுகிறான். அந்த ஆடுகள் காணாமல் போனது திருட்டு காரணமாக என்று அவன் நினைத்து அதை செய்கிறான். ஆனால் இந்த ஆடுகள் எங்காவது ஒளிந்திருக்கும் நாளை காலையில் கூட வரலாம் என்று சொல்கிறாள் மகள். அப்பனின் குடிகார குணம், கோபம் சட்டையை உலுக்க வைக்கிறது. அதே சமயத்தில் அவனை தட்டிக் கேட்டதற்காக கோபம் கொண்டவன் சுட்டு விடுவது என்பது கொடூரமாக இருக்கிறது. தி ரோடு என்ற படத்திற்கு இன்னொரு பரிசு கிடைத்தது. இந்த படம் நான்காண்டுகளுக்கு முன்னால் உத்தரகாண்ட் பகுதியில் சாலை போடப்பட்டது பற்றிய விமர்சனமாக இருக்கிறது போடப்பட்ட சாலையை திறக்கிறார்கள். பூஜையின் போது தேங்காயை போடப்பட்ட சாலையில் அடித்து உடைக்க சாலை சரியாக இல்லாமல் ஜல்லியும் மணலும் சிமெண்டும் சிதறுகின்றன. இதை பார்க்கிற மக்கள் அலுத்து போகிறார்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள் ஆனால், இதெல்லாம் அந்த வேலை செய்த ஒப்பந்ததாரருக்கு சாதாரணமாக இருக்கிறது. ஒரு சாதாரண சாணி மிதிப்பு அந்த ஒப்பந்தக்காரருக்கு சடங்கு சார்ந்த அபசகுணமாக இருக்கிறது. புனித நீரை தேடி அதை சரி செய்து கொள்கிறார். இந்த சாலையும் அதை ஒட்டிய பள்ளிக்கூடமும் இந்த படத்தில் பிரதானமாக இருக்கின்றன. அந்தப் பள்ளியின் மூன்று சிறுவர்கள் சாலையின் அமைப்பு தரம், லஞ்சம் இவர்களை இவர்களைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள் ஒப்பந்தக்காரரின் கார் செல்கிற பாதையில் ஆணிகளை வைத்து பயணத்தை நிறுத்துகிறார்கள். பயணத்தை சரி செய்ய டயர் ஒழுங்கமைப்பு செய்யும் ஓட்டுனருக்கு பணம் தராமல் கோயில் பிரசாதத்தை தந்து இதுதான் சம்பளம் என்கிறான். குழந்தைகள் எரிச்சலாகி மீண்டும் அந்த கார் டயர் பஞ்சராக வைக்கிறார்கள் இது அந்த ஒப்பந்ததாரருக்கும் அவனை சார்ந்து உள்ளவர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி ஏற்படுகிறது. குழந்தைகளின் மனதளவில் அவர்கள் இந்த ஊழல் சார்ந்த விஷயங்களுக்கு சிறு எதிர்ப்பு தெரிவிப்பதை இந்த படம் சொன்னது இந்த விழாவில் ஆவண்ப்பட இயக்குனர் ஆர் பி அமுதனுடைய உழைப்பு பாராட்டுக்குரியது. 25 ஆண்டுகள் தொடர்ந்த செயல்பாடு என்ற பெரிய இலக்கை எட்டி இருக்கிறார். தொடர்ந்து குறும்படங்கள் ஆவண படங்கள் சார்ந்து இயங்குகிறார். மதுரை விழாவில் குயிர் குழு தியேட்டர்ஸ் சார்ந்த சென்னை கல்யாண் ( இவரின் விக்டிம் ) சென்ற நாடகம் குறிப்பிடத்தக்கது. மற்றும் டிராஸ்கி அரசியல் குழு செயல்பாட்டில் அக்கறை கொண்ட யுவன் போன்றோர்கள் அவர்களுடைய இணைந்து செயல்பட்டார்கள். பல்வேறு இலக்கிய மற்றும் தன்னார்வ அமைப்புகளும் இந்த விழாவில் இணைந்து அவர்களுக்கு கை கொடுத்தார்கள் மற்றொரு முக்கியமான படம் பற்றி பாஸ்கர் : குறும்பட விழாவில் என்னை மிகவும் கவர்ந்த இந்திய ஆவணப்படம் பி பார் பியாஸ் (வெங்காயம்), பி ஃபார் பைசா (பணம்), & பி பார் பானி (தண்ணீர்). எஸ் பி எஸ் கம்யூனிட்டி மீடியா எனும் அமைப்பினர் தயாரித்த ஆவணப்படம் இது. பூனா திரைப்படக்கலை கல்லூரியில் பயின்ற இரு மாணவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இந்த அமைப்பை தொடங்கி கிராமத்தில் இருக்கும் பொது மக்களுக்கு திரைப்படக் கலையை கற்றுக் கொடுத்தார்கள். அந்த மக்களே தங்கள் வலிகளை வாழ்வியலில் இருக்கும் சிக்கல்களை குறும்படம் மற்றும் ஆவணப்படம் உருவாக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தார்கள். கட்டைவிரல் கேட்கும் குருகுல கல்வி பயின்றவர்கள் அல்ல இந்த மாணவர்கள். தூய்மையான இடதுசாரி சிந்தனை உடைய பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இவர்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பூனா திரைப்பட கல்லூரி இந்திய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சராக இருந்த ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது. அவருக்குப் பின்னால் ஆட்சியில் அமர்ந்த இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இதற்கு மேலும் மேலும் வசதிகள் செய்து தரப்பட்டது. ஆனால் இங்கு பணிபுரிந்த கல்லூரி முதல்வர் முதல் பேராசிரியர்கள் அனைவரும் பொதுவுடமை சித்தாந்தவாதிகள். காங்கிரஸ் அரசுக்கு எதிராக படம் எடுக்கும் படைப்பாளிகளைத்தான் அவர்கள் உருவாக்கினார்கள். ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஒன்றிய அரசின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் இது பற்றி கவலைப்படவில்லை. இதனை தன்னாட்சி கொண்ட அமைப்பாக கருதி பூரண சுதந்திரம் கொடுத்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததும் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பிட்டு படம் எடுக்கும் துட்டு படைத்த கோமாளியை கல்லூரி முதல்வர் ஆக்கினார்கள். கோமியம் குடிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இப்போது அனுமதி கொடுக்கிறார்கள். இனி இங்கிருந்து விவேக் அக்னிஹோத்ரி (காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் எடுத்தவன்), ராஜமவுலி (பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர்) ரிஷப் செட்டி (காந்தாரா) போன்ற விஷத்தை விதைக்கும் வித்தகர்கள் வருவார்கள். இந்த மூவருமே திரைப்பட மொழி தெரிந்த வித்தகர்கள். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் சமூக நீதி சமூக நல்லிணக்கம் இவற்றுக்கு எதிராக படம் எடுக்கும் பாம்புகள். ( தமிழிலும் இதுபோன்று வித்தை உடைத்த விஷ பாம்புகள் உள்ளது) இந்த ஆவணப்படம் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் வலியை சொல்லியது. விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்காக அவர்கள் படும் பாட்டை அரும்பாடு பட்டு சொல்லியது. விவசாயிகளுக்கு மழை ஒரு வரம். அதே மழை வரக்கூடாத நேரத்தில் வந்தால் அது கோரம். அதுவும் ஆலங்கட்டி மழை வந்தால் விவசாயி கதை முடிந்துவிடும். ஆலங்கட்டி மழை வராமல் இருப்பதற்காக பாரம்பரியமாக கிராமங்களில் கடைப்பிடிக்கும் மூடநம்பிக்கை வழிமுறைகளை செய்வார்கள்.( கழுதைக்கு திருமணம் செய்து வைத்தால் மழை வரும் என்பது போல) ஒரு கட்டத்தில் மூடநம்பிக்கையை கைவிட்டு விஞ்ஞானம் கற்றுக் கொடுத்த பகுத்தறிவு மூலமாக ஆலங்கட்டி மழையிலிருந்து பயிரை காப்பது எப்படி? என்பதை கற்றுக்கொண்டு பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவார்கள் விவசாயிகள். அரும்பாடு பட்டு உழைத்து, உரம் இட்டு, பூச்சி மருந்திட்டு, மேற்கண்ட செலவுகளுக்காக வட்டிக்கு பணம் வாங்கி வெங்காயத்தை அறுவடை செய்துவிட்டால் கிலோ இரண்டு ரூபாய் கிடைக்கிறது என்று சிரித்துக் கொண்டு சொல்வார் ஒரு விவசாயி. சென்னை குறும்பட விழாவில் இந்தப் படத்திற்கு சுப்ரதீப் சக்கரவர்த்தி என்ற ஆவணப்பட இயக்குனர் பெயரால் விருது வழங்கப்படுகிறது. மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதன் முதலில் தடை செய்தது இவரது ஆவணப்படத்தை தான். எனவேதான் ஆண்டுதோறும் இவரது பெயரால் சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழாவில் சிறந்த இந்திய ஆவணப்படத்திற்கு விருது வழங்கப்படுகிறது. பொருத்தமான விருது பொருத்தமான படத்திற்கு போய் சேர்ந்தது. என்கிறார் இயக்குநர் உலக சினிமா பாஸ்கரன். 0