சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 18 டிசம்பர், 2023
எழுத்தாளர் கி ராஜநாராயணன் நூற்றாண்டு விழா நிறைவு
எழுத்தாளர் கி ராஜநாராயணன் நூற்றாண்டு நிறைவை ஒட்டி சிறப்பு கூட்டம் திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது .
மக்கள் மாமன்ற பொருளாளர் சு.சுந்தரேசன் தலைமை தாங்கினார் செயலாளர். சத்ருக்கன் முன்னிலை வகித்தார்.
ராக தீபம் ராஜா கூட்டத்தைத் துவக்கி வைத்து பேசினார் .
“ தமிழக அரசு இதுவரை எந்த தமிழ் எழுத்தாளருக்கும் நினைவு மண்டபம் அமைக்கவில்லை. ஆனால் கரிசல் காட்டு கதைகள் எழுதி சாகித்ய அகாதமி பரிசு பெற்று 99 வயதில் மறைந்த எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களுக்கு இவ்வாண்டு கோவில்பட்டியில் நினைவு மண்டபம் எழுப்பி கௌரவத்திருக்கிறது .. தமிழில் முதல் முதலாக அரசு சார்பில் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டு இருப்பது கி ராஜநாராயணன் அவர்ளுக்கு தான். அதற்காக தமிழக அரசைப் பாராட்ட வேண்டும்” என்று ராஜா குறிப்பிட்டார்
கவிஞர் நாதன்ரகு நாதன் கி . ராஜநாராயணனின் படைப்புகள், அவர் பெற்ற விருதுகள், அவர் சாகித்ய பரிசு பெற காரணமாக இருந்த கோபால கிராமம் நாவல் ஆகியவற்றைப் பற்றியும் மற்றும் கரிசல்காட்டு கதைகள் பற்றியும் விளக்கமாகப் பேசினார்.
” கி ரா நூறு ” என்ற இரண்டு தொகுதிகளை கொண்ட கட்டுரை நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கி ராஜநாராயணன் பற்றி 170 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. 1200 பக்கங்கள் கொண்ட இந்த நூலை வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். இதை கதை சொல்லி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இதில் திருப்பூர் சுப்ரபாரதிமணியன் கட்டுரைகள் உட்பட 170 எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.இந்த இருதொகுப்பு நூல்கள் பற்றிய அறிமுகம் கூட்டத்தில் நடைபெற்றது.
முன்னதாக திருப்பூர் குமரன் பிறந்த தினத்தை ஒட்டி அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரைப் பற்றி கவிஞர் ஆ.அருணாச்சலம் விரிவாகப் பேசினார்.
. திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ளது. அங்குள்ள நூலகம் செயல்பட வேண்டும் அதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்பாடுகள் செய்து திருப்பூர் குமரன் நூலகம் செயல்படும் விதமாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நூலகர் வின்சென்ட் ராஜ் நன்றி கூறினார்.
கி ராஜநாராயணன் நூற்றாண்டு நிறைவு விழாவும் குமரன் திருப்பூர் குமரன் பிறந்த தின விழாவும் சிறப்பாக நடந்தேறின
சிலுவை நாவல் Ra 1220
சிலுவை நாவல் ஒரு விதவையை மைய கதாபாத்திரமாக கொண்டு ஆரம்பிக்கிறது. அவள் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த குடும்பத்தினர். நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டு அவளின் கிறிஸ்துவ குடும்பம் விரிவடைகிறது. பின்னால் அந்த நெசவாளர் கிறிஸ்துவத்துக்கு மாறி விடுவதால் சுமூகமாக அவருடைய வாழ்க்கை நடக்கிறது. இந்த இடத்தில் ஒரு விதவைப் பெண்ணை கதாநாயகியாகக் கொண்டு இந்த நாவல் அமைந்திருப்பதை பாராட்ட வேண்டும்
அதேசமயம் பெண்களுடைய மனது விசித்திரமாக இருக்கிறது. அந்தப் பெண் விதவையாக இருந்தாலும் தன்னுடைய மகனுக்கு திருமணம் என்று வருகிற போது மகன் ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பும் சூழ்நிலையால், அவன் விரும்புகிற போது அந்த்த் தாய் அதை மறுத்து விடுகிறாள்.. . அது விசித்திரமானது பெண்ணுடைய மனது. விசித்திரமானது. அவளே விதவையாக இருந்து திருமணம் செய்து கொண்டவள் .ஆனால் அவள் தன் மகனுக்கு ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பது விசித்திரமாக இருக்கிறது.
இந்த விஷயத்தைப் போல பெண்களின் மனதை இந்த நாவலில் பல பெண்கள் கதாபாத்திரத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் வருகிற தொலைபேசி துறையைச் சார்ந்த ஒருவருடைய வாழ்க்கையில் துணைவியாக வருகிற பெண் அவன் தற்காலிக ஊழியர் ஆகவே இருக்கிறார் என்ற காரணத்தைக் காட்டி அவரிடம் இருந்து விலகி விடுகிறாள் .அதேபோல இதில் வருகிற ஒரு கிறிஸ்துவ இளைஞருடைய மனைவி அவள் விரும்புகிறதெல்லாம் கிடைக்கவில்லை என்று கணவனிடமிருந்து விலகி விடுகிறாள். மத்திய தர குடும்பத்தில் ஒரு கணவன் ஒரு பெண்ணின் விருப்பங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றப்பட முடியாது. பொருளாதார சிரமங்கள் உண்டு .ஆனால் அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் அந்த பெண் அவரிடம் இருந்து விலகி விடுகிறாள் .பின்னால் அவளுக்கு ஒரு சின்ன நோய் வருகிறது உடம்பில் வெள்ளைப்படுதல் என்ற நோய்.. வெள்ளையணுக்கள் குறைவாக இருப்பதால் உடம்பில் வரும் வெள்ளை தேமல்கள் போன்ற ஒரு வியாதி ..அந்த வியாதி வந்த பின்னால் அவள் இயேசு கிறிஸ்து அவளுக்கு தண்டனை தந்து விட்டதாக கருதி கணவரிடம் திரும்புகிறாள் இப்படி விசித்திரமான பல நுணுக்கமான கதாபாத்திரங்களை, பெண் கதாபாத்திரங்களை இந்த நாவலில் சந்திக்க முடிகிறது
( சே சோமசுந்தரம் தொலைபேசி உரையாடலில் )
நெல்லை அன்புடன் ஆனந்தி கவிதைகள்
இந்த உடம்பு என்பது நிலையாமை கொண்டது. அப்படியானால் நிலைத்தது எது என்ற கேள்வியும் வருகிறது. மனதில் எது நின்றுவிடுவது என்று சில விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களில் ஞாபகங்கள், நினைவுகள், அனுபவங்கள், சில மகிழ்ச்சியான தருணங்கள் என்று சிலவை வரிசை கட்டுகின்றன இந்த தருணங்கள் பற்றி கூர்மையாக பார்த்து அவற்றை கவிதை ஆக்கி இருக்கிறார் நெல்லை அன்புடன் ஆனந்தி .அவற்றில் கவிதை மிளிர்கிறது . அவரது பயிற்சியும் குறுகத் தரித்த வடிவமும் அவருடைய மொழி ஆளுமையும் பயன்படுகிறது அதில் அழகு மிளிர்கிறது. ஆசை துளிர்க்கிறது. இவற்றை கவிதையாகவோ உரைநடை சித்திரமாகவோ ஆனந்தி அவர்கள் இந்த வகையில் கொடுத்திருக்கிறார். நல்ல சிறு வடிவத்துடன் வெளிப்படுவதே சிறந்த கவிதைகள். உரைநடை என்பது விரிவாக சொல்வது. பாலை காய்ச்சுவது போல குறுகிய வடிவத்துடன் வார்த்தைச் சிக்கனத்துடன் செயல்படுவதே நல்ல கவிதையின் அடையாளங்கள் அந்த கவிதையின் அடையாளங்களை நாம் நெல்லை ஆனந்தி அவர்களின் கவிதை நூல்களில் காணலாம்
சுப்ர பாரதி மணியன்
பின் அட்டைக்குறிப்பு
ஏழு சகோதரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் வட மாநில பகுதி பற்றிய பூகோளம் மற்றும் கலாச்சார விஷயங்களை இந்த நூல் சொல்கிறது.. அணுக முடியாத நிலப்பரப்பு என்று சொன்னாலும் அணைத்துக் கொள்ளும் மக்களின் இயல்பும் அவர்களின் வாழ்வு முறையும் இந்த நூலில் பயண அனுபவத்தின் மூலம் சுப்ர பாரதி மணியன் தந்திருக்கிறார் 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்.. அவரது ஐந்து வெளி நாட்டுப் பயண அனுபவ நூல்கள வெளிவந்திருக்கின்றன. அவரின் உள்நாட்டு பயண அனுபவம் இது.. 25 நாவல்கள் உட்பட 100 நூல்களை எழுதி இருக்கிறார். இந்திய ஜனாதிபதி வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ் செம்மல் விருது உட்பட நிறைய இலக்கிய விருதுகளை பெற்றவ.ர் அவருடைய படைப்பிலக்கியத்தில் பயண நூல்களும் ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கிறது என்பதை இந்த நூலும் சொல்கிறது
பங்குடி நாவல் ; கா மூர்த்தி /
சுப்ரபாரதிமணியன்
கரிசல் படைப்புகளை தொடர்ந்து வாசித்ததன் மூலம் அந்த பகுதி வட்டார வாழ்க்கை வழக்கு, பேச்சு வழக்கு போன்றவற்றை இப்போதெல்லாம் சுலபமாக தான் புரிந்து கொள்ள முடிகிறது
க. மூர்த்தி அவர்கள் இந்த நாவலில் வரையும் பெரம்பலூர் வட்டார வழக்கு பேச்சு வழக்கு சார்ந்த விஷயங்கள் புதிதாக இருப்பதால் இறுக்கமாக தோன்றுகின்றது. பெரம்பலூர் பகுதியில் இருந்து எழுத்தாளர்கள் அதிகப்படியானவர்கள் வரவில்லை என்பதால் இந்த குறை .
பங்குடி என்ற வார்த்தையே புதிதாக இருந்தது. இடம்பெயர்ந்து வந்தவர்கள் இருக்க கூடிய இடம் என்றார்கள். அங்கு எல்லா சாதி மக்களும் இருக்கிறார்கள். வருத்த புளியங்கொட்டையை சாப்பிடும் மக்கள் அல்லது புளியங்கட்டையை அவித்து சாப்பிடும் மக்கள் வறுமையில் என்ற சித்திரங்கள் காணக் கிடைக்கின்றன விதைப்பட்டியை எடுத்து சோற்றுக்காக குத்தி போடு என்ற என்று சொல்கிற சோகமும் வருகிறது. ஒரு மலை இருக்கிறது அந்த மலையை உடைத்து துண்டு துண்டாக செய்து அதில் சில பொருட்களை உருவாக்குவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஆதாரங்களை அந்த பகுதி ஒட்டக்குடியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் “ சீலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்கு போனாங்க அவ ஈச்சம்பாயைக் கட்டிட்டு எதுத்தாப்புல வந்தாங்கற கதை “ போல்தான் அந்த பகுதி மக்களின் வாழ்க்கை இருந்து கொண்டிருக்கிறது. மலைப்பாறைகளை சிறு வடிவமாகி விற்பவர்கள் அவர்கள். அங்கு விளைந்த பாறைகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டுகளாக்கும் பொறுப்பு அவர்களுடையது அப்படித்தான் மூப்பனார் சிலை சிவப்பாக தொப்புள் கொடி கொப்பளித்து வருகிற வரை அந்த வேலையை செய்கிறவர்கள் அவர்கள். அங்கு வருகிற ஒரு புல்டோசர் வடக்கு பாரத பகுதியில் நிறுவப்பட இருக்கிற ஒரு கோயிலுக்காக பெரும் பாறைகளை கொண்டு செல்கிறது. அதற்காக அந்தப் பகுதியை சுத்தமாக்குகிறது பாறைகளை உடைத்து . பெரும் தேரைகள் போல் புல்டோசர்கள் அந்த பகுதியில் நடமாடுகிறது. வடநாட்டு கோயிலுக்கு இங்க இருக்கும் மலை அழிய பாறைகளை கொண்டு போகிறார்கள். அந்த மக்கள் கூட்டம் சோர்ந்து போகிறது. அங்கே பல சாதிப்பிரிவினைகள். மதப் பிரிவுகள் இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கை ஆழமாக தான் மூர்த்தி சொல்கிறார். பேரிங்கை என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை முக்கியமாக இதில் இடம் பெறுகிறது. அவளுக்கு இரண்டு பெண்கள் அமைகிறார்கள். கணவனாக அமைகிறவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பெண்களும் சிரமப்படுகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பாறைகளை நொறுக்கி எடுத்துச் செல்லும் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நசுங்கிப் போகிற மனிதர்கள் போல பேரிங்கின் வாழ்க்கையும் ஆகிறது. வேறு எங்கே போல பல பெண்கள் வாழ்க்கை இங்கே இப்படி சொல்லப்படுகிறது. இப்படி புல்டோசர் நடமாடிக் கொண்டிருப்பதால் அந்தப் பங்குடி ரத்த நிலமாக மாறிப் பொழிகிறது . இந்த ரத்த காயப்பட்ட இரண்டு பகுதிகள் என்னை பாதித்தனர். ஒன்று பள்ளிகூடம். பள்ளிக்கூடம் இடிந்து மாணவருடைய வாழ்க்கை தவிக்கும் விதமாய் மாறிவிடுகிறது இன்னொன்று மக்கள் பீக்காட்டை சகஜமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் பின்னால் அதற்காக கழிவறைக்காக அவர்கள் வேறு இடம் தேடி போக வேண்டி இருக்கிறது. சாதியின் அதிகாரத்தின் வடிவமாக மலக்கரசலை வாயில் ஊற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதேசமயம் எதிரிடையாக பெருமாள் சாமிக்கு பீவாடையை காட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். மக்கள், பன்னி மாடு திங்கிற மக்கள் என்ற வகையில் பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன மலைகள் பாறையில் இடிக்கப்பட்டு மண் குவியல் ஆகிறது .மலைக்காடு கைவிட்டு போறதிலிருந்து புத்தி பேதலித்து ஊரை விட்டு பலர் போகிறார்கள் பலர். அங்கேயே திரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர் குடித்தெருவும் பங்குடி தெருவும் பகைத்திருக்க இருந்து கொண்டிருக்கிறன. அங்கு ஒட்டக் குடிகளாக இருந்தவர்கள் கூலி வேலைக்கும் செல்கிறார்கள் .பலர் வெட்டியாய் திரிகிறார்கள் சிலருக்கு பண்ணை வேலை தூரத்தில் அமைகிறது. பழங்குடிகளின் ஆதாரமாக இருந்த மலை பெட்ரோல் ஆகிறது கல் அரவை மெஷின்களின் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது கல் அரவை மெஷின்கள் இருந்த இடம் பள்ளிக்கூடத்துக்கு என்று ஆகிறது .பேரிங்கையோடு உறவு கொண்டிருந்த காண்டீபன் செய்யும் ரகளையும் அதனால் கொலையும் நிகழ்கிறது ஆண்குறியை அறுத்து கொலை செய்யப்படுகிறான். அந்த பெண்ணுக்கு பின்னால் பித்தன் என்பவன் அலைகிறான் பனங்கறுக்கு நெஞ்சில் கீறுவது போல பல துயரங்கள் அந்த பெண்ணுக்கு நிகழ்கிறது. பாறைகள் இல்லாத போன காலத்தில் வெறும் குன்றுகள் ஆறுதல் தருவது போல அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய மகள்கள் ஆறுதல் தருகிறார்கள். புது வெள்ளத்தைக் கண்ட கெளுத்தி மாதிரி குதித்து விழும் வாழ்க்கை மின்னல்கள் எப்போது வரும் என்று அவள் காத்திருக்கிறாள்.. பல ஆண்களுடன் வாழ நினைக்கிற அந்த பெண்ணின் துயரம் நாவல் முழக்க இருக்கிறது. மலைகளை பாறைகளை துண்டாக்கிய புல்டோசர்கள் வேறு ஊர்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அக்காட்சிகளோடு நாவல் முடிகிறது. ஒட்டக்குடிகள் சார்ந்த மக்களின் வாழ்க்கையும் வடநாட்டு கோயிலுக்காக இங்கிருந்து பாறையில் கொண்டு செல்லப்படுவதற்காக சிதைக்கப்படும் மலைப் பகுதிகளும் இந்த நாவலில் மிக முக்கியமான இடங்களை அமைக்கின்றன. பெரம்பலூர் பகுதியை மக்களின் வாழ்க்கையை மிகவும் துல்லியமாக அவர்களின் மொழி மற்றவர்களுக்கு படிக்க சிரமம் ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை மீறி அப்படியே கொடுக்கப்பட்டிருப்பது மூர்த்தி அவர்கள் தொடர்ந்து அந்த மொழியில் இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் ( .ரூ 300 வெற்றி மொழி பதிப்பகம் திண்டுக்கல்)
நாவல் எழுதுவது / சுப்ரபாரதிமணியன்
நாவல் பற்றி நான் மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பயிற்சி எடுக்கிற போது ஒரு உதாரணத்தை திரும்பத் திரும்பச் சொல்வேன்.
. ஒரு நாவல் என்பது ஒரு வீட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பது. ஜன்னல் வழியை பார்க்கும் பார்வையில் வானமும் வாகனங்களும் மனிதர்களும் நிலப்பரப்பும் பல மனிதர்கள் வாழ்வும் என்று தென்படும் .அப்படி விரிவான பார்வையில் பார்க்கப்பட வேண்டியது நாவல். அதுவே சிறுகதையாக இருந்தால் அறையின் வெளியே இருந்து கொண்டு ஜன்னல் வழியாக உள்ளே நடப்பதை பார்ப்பது என்றும் சுலபமாக சொல்லி வைப்பேன். அப்படித்தான் நாவல் வடிவத்தை நாம் எளிமையாக புரிந்து கொள்ளலாம்
அல்லது ராஜாஜி அவர்கள் சொன்னது போல சிறுகதை என்பது வானத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் பனைமரத்தை போல. ஒரு மையத்தை நோக்கி செல்வது. நாவல் என்பது ஒரு புளிய மரத்தை போல பல கிளைகளும் பருமனும் என்று வித்தியாசப்படுவது.
என் அனுபவத்தில் நான் நாவல் எழுதுகிற அனுபவத்தை கனவாகத்தான் நினைத்திருந்தேன் ஆனால் நிறைய சிறுகதைகள் எழுதுகிற போது நாவல் எழுதுகிற எண்ணமும் வந்தது ஆனால் ஒரு நாவலுக்கான விரிந்த காலமும் பரந்த அனுபவம் இல்லாமல் இருந்தது .ஒரு எழுத்தாளர் தான் வாழ்ந்த அனுபவங்களை மட்டும் தான் எழுத வேண்டும். வசீகரித்த அனுபவங்களையும் எழுதலாம்.
அப்படித்தான் நான் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தபோது ஹைதராபாத்தில் இருந்தேன். அந்தப் பின்னணியில் ஒரு நாவல் எழுத வேண்டும் என்று தோன்றிய போது அங்கு வந்து குடியேறி இருந்த சின்னாளப்பட்டி சேர்ந்த ஒரு 50 குடும்பங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவர்களின் வாழ்க்கை முறையைக் கவனித்தேன் அதை ஒரு நாவலாக எழுத ஆரம்பித்தேன் ஹைதராபாத்தில் இருந்தபோது நான் எழுதிய மூன்று நாவல்கள் முதல் நாவல் “மற்றும் சிலர் “ .இரண்டாவது சுடுமணல் என்ற நாவல் நதிநீர் பிரச்சனையில் கர்நாடக போன்ற மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்படுவதை ஹைதராபாத் சூழ்நிலை வைத்து எழுதினேன். ஏனென்றால் எனக்கு கர்நாடக பெங்களூர் சூழல்கள் அந்நியமாக இருந்தது காரணம்.
பிறகு அங்கு நடைபெற்ற ஒரு அரசியல் சூழ்ச்சி காரணமான ஆட்சிக் கவிழ்ப்பும் அதை ஒட்டிய மக்களுடைய பலிகளும் பற்றி நகரம் 90 என்ற நாவலில் எழுதினேன்.
ஆகவே இந்த நாவல் அம்சங்களை நான் எங்கும் தேடிப் போகவில்லை. அது என்னை சுற்றியுள்ள நிகழ்வுகளாக இருந்தன. அப்படித்தான் சமகாலத்திய அனுபவங்களை இப்படி நாவலுக்குள் கடத்திக் கொண்டு போகலாம் என்பது விளங்கியது. அதற்காக நெடுகாலம் காத்திருப்பதோ, பெரும் ஆய்வில் செய்வதோ இயலாத நிலையில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை கவனித்து எழுதுவது ஒரு நாவலுக்கான சாதாரண இயல்பாகிவிட்டது. எனக்கு அப்படித்தான்
நான் திருப்பூர் வந்தபோது திருப்பூர் மக்களின் வாழ்க்கையை கவனித்து பத்துக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதினேன் அதில் திருப்பூர் மக்களுடைய வாழ்க்கை குறிப்பாக பனியன் தொழிலாளர்களும் பெண்களும் என்னுடைய கவனத்துக்கு வருபவராக இருந்தார்கள்
நான் தொலைபேசி தொடர்பு துறையில் பொறியாளராக இருந்தேன். அந்த கடுமையான வேலை மற்றும் நான் சார்ந்த உடைமை இயக்க சிந்தனைகள் போன்றவை பல ஆய்வுக்கு செல்லத் தடையாக இருந்தது. ஆகவே என்னை வந்து அடையும் அனுபவங்களை நாவலாக்கினேன். இதற்கான நான் வெளியில் எங்கும் அலையவில்லை ஆய்வு செய்ய முடியவில்லை. என்னை சுற்றியுள்ள மக்களெல்லாம் பார்த்து அனுபவங்களை கூர்ந்து கவனிப்பதன் மூலமாக அவற்றை எழுதினேன். இப்படி மலேசியா சார்ந்த நாவல் அனுபவங்களும் பயணம் சார்ந்த சில நாவல் அனுபவங்களும் என்று சொல்லிக் கொண்டே போகலாம்
ஆகவே இந்த நாவலுக்கான களம் என்பது நம்மை சுற்றியுள்ள வாழ்க்கையை கூர்ந்து கவனிப்பது மூலம் கிடைக்கிறது. நல்ல தரவுகளை சேகரிப்பது ஆய்வுகள் செய்வது தேவையாக இருந்தால் கூட என் வாழ்க்கை சூழலில் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.
எந்த பிரதேசம் சார்ந்த எழுதுகிறோமோ அந்த பிரதேசம் மொழி கதாபாத்திரங்களின் பேச்சு மூலமும் வழக்குகள் மூலமும் கொண்டுவரப்பட வேண்டும். பொது மொழியாக இல்லாமல் இப்படி பிரவேசம் சார்ந்த பிரத்யேக மொழியைக் கையாளுதல் முக்கியம். இன்றைய பிரச்சனைகள் நாளைய சரித்திர பதிவுகளாக மாறும். ஆகவே எழுத்தாளர் அவற்றை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படித்தான் நான் என்னை சுற்றியுள்ள மக்களுடைய வாழ்க்கையையும் குறிப்பாக திருப்பூர் மக்களின் வாழ்க்கையையும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளையும் நாவல்களுக்குள் கொண்டு வந்தேன்.
ஆகவே என்ன வகையான மையங்களை நாவலுக்குள் கொண்டு வருவது என்பதில் நம் வாசிப்பும் மற்றும் கூர்ந்து சமூகத்தை பார்க்கும் அனுபவமும் இணைந்து வழிகாட்டும். நாவல் வடிவத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று வருகிற போது நேர்கோட்டு தன்மையிலான கதை சொல்லும் விதி முதலில் ஆரம்பத்தில் எழுதறவங்களுக்கு கை கொடுக்கும். சிறுகதை பலவற்றை கோர்த்து நாவலாக்குவது போல நேர்கோட்டு தன்மையில் எதார்த்தமாக கதாபாத்திரங்களை கொண்டு அவற்றை உருவாக்கலாம். பின்னால் அந்த வடிவங்களை நான் பின்னநவீனத்துவம் முதற்கொண்டு பல்வேறு வகையான விஷயங்களைக் கொண்டு நாவல்களை எழுதி இருக்கிறேன் ஆகவே வடிவம் சார்ந்த விஷயங்களின் கூட கவனம் தேவையாக இருக்கிறது.
மொழியும் வடிவமும் வாழ்க்கை அனுபவங்களும் இப்படி நாவல்களை எழுதிக் கொண்டு போக உதவும். நீண்ட கால வாழ்க்கை, அதேபோல நீண்ட கால அனுபவங்கள் இவை எல்லாம் எல்லோருக்கும் வாய்க்காது, வாய்க்கும் அனுபவங்களை இப்படி நாவலாக்குவது என்பது சிறந்தது, அப்படி வாய்க்கும் அனுபவங்களை பதிவாக்குவதும் இன்னும் சிறந்தது பெரிய நாவல்கள் எழுத வேண்டும் என்ற ஆசை வந்த போது அதற்கான ஆய்வுகளும் பல மனிதர்களுடன் சந்திப்பும் தேவையாகிறது அப்படித்தான் ஆயிரம் பக்க நாவல் சிலுவையை நான் எழுதினேன் ஆகவே நாவல் என்ற வடிவத்தை நாம் கையாளர்கிறபோது வடிவம் சார்ந்தும் அதில் பயன்படுத்தும் மொழி சார்ந்தும் மக்களின் அனுபவம் சார்ந்தும் நம்முடைய அவதானிப்புகளை அங்கு பதிவு செய்யலாம். நாவல் போன்ற பெரிய வடிவத்தில் வாழ்க்கையை சொல்வதும் வாழ்க்கையை சார்ந்து அனுபவத்தை விரித்துக் கொண்டு போவதும் ஒரு மாபெரும் தரிசனமாகவே தோன்றுகிறது.
சிலுவை நாவல்
கொங்கு பகுதி எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களில் இவ்வளவு பெரிய நாவல் என்று பக்க அளவில் இதுவரை எதுவும் வெளிவந்தது இல்லை என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் கொங்கு பகுதியில் கவுண்டர்கள் சார்ந்த வாழ்வு அனுபவங்களை பல எழுதி இருக்கிறார்கள் பின்னால் பொதுவுடமை இயக்க எழுத்தாளர்கள் மக்களை பிரச்சனைகளை பல வடிவங்களில் கொடுத்திருக்கிறார்கள். திராவிடச் சிந்தனைகளும் பல்வேறு தத்துவார்த்தை பின்னணிகளும் கூட பல நண்பர்கள் நாவலில் இடம் அளித்திருக்கிறார்கள். ஆனால் ஏறத்தாழ ஆயிரம் பக்க நாவல் என்பது எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் சிலுவை நாவல் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது .
பெரிய நாவல்களுக்கான காலம் முடிந்து விட்டது போல் இருக்கிறது.. கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இது போன்ற பெரிய நாவல்கள் நிறைய வந்தன.. இப்போது பெரிய நாவல்களின் வருகை குறைந்து இருப்பது போல் தோன்றுகிறது ஆனால் பெரிய நாவல்களை வெளியிடுவதன் மூலமாக பதிப்பாளர்கள் கொஞ்சம் லாபம் பெறுகிறார்கள் என்பது தெரிகிறது. அந்த வகையில் பலர் பெரிய நாவல்களை எழுதினார்கள் ஆனால் கொரோனா காலத்திற்குப் பின்னால் புத்தகங்களுடைய விற்பனை சார்ந்து ஏற்பட்ட சுணக்கம் இப்படி பெரிய நாவல்களுக்கு வழி விடவில்லை என்று தோன்றுகிறது ஆனாலும் பெரிய நாவல்கள் எழுதப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் வாழ்க்கையை விசாலமாக சொல்ல முடியும் அந்த வகையில் சுப்ரபாரதிமணியன்
சிலுவை சுமார் 1000 பக்கங்களை கொண்டு வெளி வந்திருக்கிறது .
மகத்தான அனுபவங்களை இந்த கொங்கு பகுதி மக்கள் கொண்டிருக்கிறார்கள் அவற்றை மகா நாவல்கள் அனுபவமாக்கலாம் தான் சொல்ல முடியும். அவற்றை எழுதுவதற்கான காலமும் பொறுமையும் நேரமும் எழுத்தாளர்களுக்கு வாய்க்க வேண்டும் அது குறைந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
(கோ. சிவராமன் திருமங்கலம் )
சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
” திரை “ வெளியீடு
திரை நாவல் : யுவராஜ்சம்பத்
பொதுவா உங்க நாவல் எல்லாமே ஏதாவது ஒரு பொது பிரச்சனையே மையமாக வைத்து அதை சுற்றி பின்னப்பட்டிருக்கும்.. ஆனா இது கொஞ்சம் அப்படி இல்லையோ? எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது
கந்துவட்டி கொடுமை பொருந்தாக் காதல் இந்த இரண்டைப் பற்றியும் ஒரு சின்ன லீடு இருந்தது. நான் கூட அதை விவரித்து பின்னாடி நாவல் பயணிக்கும் அப்படீன்னு நினைச்சேன்
ஆனா நீங்க செய்யல. ஏன்? போதும் அப்படிங்கிற ஒரு மனநிலையா? எவ்வளவு சொன்னாலும் இந்த சமுதாயம் கேட்காது அப்படிங்கிற ஒரு வெறுப்புணர்வா??
.. உங்க நாவலை படிக்கிற எல்லாருக்கும் இந்த வித்தியாசம் கொஞ்சம் தூக்கலாகவே தெரியும் அப்படின்னு நினைக்கிறேன்...
கதை இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்கள் இரண்டு இடங்களில்.. திருவனந்தபுரத்திலும் கோவாவிலும்.
சாதாரண மனிதன் திரைப்பட திருவிழாக்களை எப்படிப் பார்க்கிறான் என்கிற ஒரு மாறுபட்ட பார்வை. திரைப்பட விழாக்களுக்கு தவறாமல் செல்கிற அறிவுஜீவிகளின் பார்வையில் இந்தியத் திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன ,சர்வதேச திரைப்படங்களை இந்திய திரைப்படங்களுடன் தரத்தில், கதையில், காட்சிகளில், ஒப்பு நோக்குதல் போன்றவை மிக சிறப்பாகவே படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.
சினிமாத்துறையில் திருப்பூரைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு கடந்த 50 வருடங்களாக சிறப்பாகவே இருக்கிறது என்பதை உங்கள் நாவலைப் படித்து ,அதற்குப்பின்னால் தெரிந்துகொண்டேன்.
எனக்கெல்லாம் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது .நாமும் ஏதாவது ஒரு நாள் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்று அந்த விழாக்களை ஏன் அறிவு ஜீவிகள் பெரிதாக கொண்டாடுகிறார்கள், அப்படி அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆவல் இருந்தது . ஆனால் ஒரு பார்வையாளனாக அங்கு செல்லும்பொழுது எப்படியெல்லம் சிரமப்பட வேண்டும். பயணம் முதல் உணவு வரை 4,5 தியேட்டர்களுக்கு நடுவே ஓடுகிற ஓட்டம். இந்த திரைப்படத்தை பார்க்க முடியுமா முடியாதா என்கிற ஏக்கம் .அதை பார்ப்பதற்கு இரவு 12 மணிக்கு எழுந்து ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய அவலம். இதையெல்லாம் மீறி மொழி தெரியாத சக மனிதர்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கு போகத்தான் வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த நாவல் .
வெறுமனே திரைப்பட விழாக்களை மட்டும் முன்னிறுத்தாமல் அந்தப் பகுதி மக்களின் உணவு வகைகள்,, கலாச்சாரம் ,மொழி ,சிறப்பு போன்ற எல்லாவற்றையும் உங்களுடைய பாணியிலேயே மிக அழகாக, இயல்பாக, நாவலைப் படிக்க வாசகனின் மனதில் பதியும்படி எளிமையாக சொல்லியிருக்கிரீர்கள். இது உங்களுடைய வழமையான உத்தி என்றாலும்கூட, முழு நாவலையும் படித்து முடித்த பிறகு எத்தனையோ புது வித உணவுகளையும் ,அந்த மாநில மக்களின் கலை ,பண்பாடு போன்றவற்றயும், சினிமா சம்மந்தபட்ட தொழில்நுட்ப வார்த்தைகளையும் தெரிந்து கொண்டேன். அந்த விழாவிற்கு நானே சென்று வந்து அவதிப்பட்ட, பிரபுவாக என்னை உணர்ந்து கொண்டேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இது. உங்களின் மணிமகுடத்தில் மற்றொரு வைரக் கல்லாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வாசகனுக்கும் உலக சினிமா பற்றி பொது அறிவு கொடுத்து இருக்கிறீர்கள்.
*
தமிழ் நாவல் களத்தில் புதிது இது.நாவல்களின் வகைமைகளில், களங்களில் புதிது புதிதாக எடுத்துக் கொள்ளும் உங்களின் முயற்சியில் திரைப்படவிழாக்களின் கோலாகலம் இதில்
( Thirai novel..Subrabharathimanian .,Rs 300 Zero degree publication , Chennai)
0
சிலுவை
சுப்ரபாரதிமணியன் நாவல் / அறிமுகம் சி. ஆர். ரவீந்திரன்
ரூ 1200, என் சி பிஎச் வெளியீடு
0
300 ஆண்டுகால கொங்கு பகுதியின் சரித்திரமாகவும் நாவல் அனுபவமாகவும் இந்த நாவல் விளங்குகிறது
0
நெசவுத்தொழிலின் ஒரு குறியீட்டுக்களமாக அமைந்த சுப்ரபாரதிமணியன் புதிய நாவல்
சி ஆர் ரவீந்திரன்
மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளாக இருப்பவை உணவு , உடை, உறைவிடம் . இவைகளின் பின்னணியில் மனித உழைப்பு தவிர்க்க முடியாத படி இருக்கிறது ..அதுதான் சமுதாயம் என்ற ஒரு அமைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது ..உழைப்பு சக்தியின் தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைந்து வரலாற்றை மனிதர்கள் வடிவமைக்கிறார்கள் .அந்த வரலாற்றின் உள்ளீடாக அமைந்துள்ள நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வாழ்க்கையில் வளர்ச்சியை புரிந்து கொண்டு அதை மதிப்பீடு செய்கிறோம்.
இந்த வகையான ஒரு புரிதலையும் அறிதலையும் உணவு பூர்வமாக உள்வாங்கிக் கொண்டு இந்த நாவலில் கொங்கு பகுதியை முன் நிறுத்தி சுப்ரபாதி மணியன் வடிவமைத்திருக்கிறார் .அதை வாசிப்பின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடியும்
நீர் வளமும் நிலவளமும் மனித வளமும் மிகுந்த இந்தியா அதன் இயல்பிலேயே பன்முகத்தன்மை உடைய ஒன்றாக நின்று நிலவி வந்தது கடந்த 300 வருட உலகின் வளர்ச்சி போக்கில் நீண்ட மாற்றங்களின் தாக்கங்கள் இந்தியாவையும் மாற்றி அமைத்தன. கடந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் தனி தன்மைகள் தொடர்ந்து புதிய தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டு வேகமாக வளர தொடங்கின .அந்த வரலாற்று மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தியாவின் வளர்ச்சியை இவர் மதிப்பீடு செய்கிறார் நாவல் அனுபவம் மூலம்.
ஐரோப்பியரின் வருகை தொடர்ந்து கிறிஸ்தவமும் முகமதிய மதமும் இந்திய மக்களிடையே படிப்படியாக பரவி வாழ்க்கையை மாற்றி அமைத்தன. குறிப்பாக அரேபியர் ,ஆங்கிலேயர்கள், புரட்சிக்காரர்கள் போர்ச்சுக்கீசியர் சீனர் போன்ற பிற நாட்டினர் நாட்டையே கைப்பற்றி தொடர்ந்து செயல்பட்டு ஆதிக்கம் செலுத்த முனைந்தனர் காலம் காலமாக அறியாமையிலும் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை குறித்து கிறிஸ்துவ முகமதிய மதங்களின் பரவர்களின் விளைவாக புதிய வாழ்க்கையை வடிவ வடிவமைத்து கொள்ளும் மக்களின் மன மாற்றங்களையும் புதிய உறவு நிலைகளையும் தொடர்ந்து அடையாளப்படுத்துகிறார் .. வரலாற்றின் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் கிடந்த பல வகையான மரபுப் பழக்கங்களை ப் பயன்படுத்தி ஒரு சில மனிதர்களின் வாயிலாக இனம் காட்டுகிறார் இந்த நாவலில் கொங்கு மனிதர்களின் அனுபவம் மூலம்
தொழில் வளர்ச்சியின் காரணமாக புதிய தொழில்களையும் வேலை வாய்ப்புகளையும் தேடி விரிந்த நிலப்பரப்பின் பல பகுதிகளுக்குள்ளும் புலம்பெயரும் உழைக்கும் மக்களின் மனப்போக்குகளையும் வாழ்க்கை மாற்றங்களையும் அன்னிய மற்றும் இந்திய மதங்களின் தாக்கங்களையும் தொழிற்சங்க தோற்றங்களையும், வளர்ச்சியையும் தொடர்ந்து பதிவு செய்கிறார்..
பல வகையான இந்திய மக்களின் வாழ்க்கை முறை களுக்குள் ஊடுருவும் கிறிஸ்து மதத்தின் பின் தங்கிய வறுமை மிகுந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் வறுமையை போக்க முனைவதோடு கல்வி மருத்துவம் புதிய கலாச்சார வாழ்க்கை முறைகளிலும் விரிவான பரவலான மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களுடைய வாழ்க்கை தரத்தில் அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வாய்ப்பளித்திருக்கிறார் கள்
கொங்கு மக்களின் 300 ஆண்டுகளின் வாழ்க்கை மாற்றங்களின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை தனிப்பட்ட அளவிலும் விரிவான அளவிலும் தகுந்த யதார்த்தமான இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளை முன்வைத்தும் மனதை நெகிழச் செய்யும் விதத்தில்இந்த நாவலை வடிவமைத்து இருக்கிறார் ... கிறிஸ்தவக் குடும்பம் ஒன்றின் பல் வேறு தலைமுறை வாழ்க்கையை நெசவாளர் பின்னணியில் ஆரம்பித்து பின்னலாடை தொட்டு வெவ்வேறு வேலை முறை வாழ்க்கையில் மாறுபடுவதை இந்த நாவல் காட்டுகிறது
நாவலை மூன்று பாகங்களாக பிரித்து தொழிலிலும் அதன் உற்பத்தி உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களையும் வழக்கு போக்குகளையும் தகுந்த தகவல்களையும் அடிப்படை ஆதாரங்களையும் முன்வைத்து எதிரும் புதிரமான மனப்போக்குகள் தெளிவாக தெரிந்துகொள் ளும் வகையில் புலப்படுத்துகிறார் .
கதை சொல்லும் மரபிலிருந்து மாறுபடும் கற்பனையாள னக் களங்களை தவிர்த்து, வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்னணியில் மாறிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை நம்பகத் தன்மையுடன் விளக்குகிறார் . . இதற்கு ஆரம்பத்தில் கிறிஸ்துவ வாழ்வின் ஆதாரங்கள் உதவுகின்றன.
வளர்ச்சி குறைந்த ஒரு காலகட்டத்தில் கைத்தொழில் அளவில் கைத்தறி நெசவு போன்ற வை வளர்ந்ததை துல்லியமாக சித்தரிக்கிறார்
அறிவியல் பொருளாதார வளர்ச்சியின் விளைவாக கைத்தொழிலை குறைத்து இயந்திரங்களில் உதவியால் உற்பத்தியில் அளவு மாற்றங்களையும் இரண்டாவது பாகத்தில் சித்தரிக்கிறார் ..மின்சக்தியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு நெசவுத் தொழிலை பெருமளவுக்கு நவீனப்படுத்திய செயல்முறைகளையும் மூன்றாம் பாகத்தில் அடையாளப்படுத்துகிறார் .
இதற்காக கோவை மாவட்டத்தின் சோமனூர் , செகனந்தாளி கிராமம், திருப்பூர் மற்றும் வேலூர்திருப்பத்தூர் ஆகிய ஊர்களை களனாகக் கொள்கிறார்
ஒவ்வொரு காலகட்டத்திலும் நெசவுத் தொழிலாளர்கள் , மில் தொழிலாளர்கள் போதிய அளவுக்கு வாழ்க்கை தேவைகளை நிறைவு செய்ய நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிகுந்த போராட்டங்களில் வாயிலாக உரிமைகளைப் பெற முயன்ற நிகழ்வுகளையும் இவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். இதில்
கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வாயிலாக விவரிப்புகளையும் குறைத்து எளிய உரைநடையின் வாயிலாக கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொள்ளும் புதிய உயர்த்தியை கையாண்டு உள்ளார் .
மத கருத்துக்களை கூட தர்க்கரீதியாகவும் உரையாடலின் வாயிலாகும் பரிமாறிக் கொள்ளும் முறையில் மாறுபட்ட ஒரு முறையை கையாண்டு உள்ளார் ..
வெவ்வேறு கால கட்டத்தில் மொழியின் மாறுபாடும் காட்டப்படுகிறது என்பதும் முக்கியமானது.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களையும் அவர்களின் தொழிற்சங்கப் போராட்டங்களையும் அதன் விளைவுகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகும் சித்தரித்துக் காட்டுகிறார்..அதில் நெசவு, பஞ்சாலை தொழில்கள் முதன்மை பெறுகின்றன. .அங்கங்கே மாறுபட்ட மனிதர்களின் சித்தரிப்பு வாயிலாக கதைத்தன்மையைக் கையாண்டாலும் வரலாற்று தன்மையையும் எதார்த்தத்தையும் தவிர்க்கவில்லை
300 ஆண்டு கால மனித வாழ்க்கையை நிகழ்ச்சிகளின் சித்தரிப்பு வாயிலாக்க் காட்டி மாறுபட்ட ஒரு வாழ்க்கை வரலாற்றை புதிய முறையில் அறிவுப்படுத்தும் வகையில் இந்த நாவல் வடிவமைப்பு பட்டிருக்கிறது. .
மாறுபட்ட பல்வேறு கதைகளின் தொகுப்பாகவும் அசலான நமது காலத்து வரலாறாகவும் அமைந்துள்ள ” சிலுவை ” நாவல் ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை அரசியல் சமூகம் ஆன்மீகம் தொழில்நுட்பம் கொண்ட்தான வாழ்க்கை நிகழ்ச்சிகள் கலாச்சார பண்பாட்டு தன்மைகளை கடந்த 300 ஆண்டுகளின் காலகட்டத்தில் உள்ளடக்கிய மாறுபட்ட ஒரு புதிய கண்ணோட்டத்தில் சிலுவை நாவலை படைத்திருக்கிறார் சுப்ரபாரதி மணியன். .கடந்த நூற்றாண்டுகளை கொங்கு பகுதி சார்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறாக சிலுவை நாவல் விளங்குகிறது
( ரூபாய் 1200 நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியீடு சென்னை )
- சி. ஆர். ரவீந்திரன் கோவை 90253 93354
-
அறியப்படாத உலகின் அரிய குரல்
-சுப்ரபாரதி மணியன்
(குற்றியலுகரம் நாவல் விலை ரூபாய் 250
எழுத்து பிரசுரம் சென்னை )
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றொலிக்கும் குரல் கூட இன்றைக்கு மெலிந்துவிட்டது. விவசாயம் மெல்ல அழிந்துகொண்டே இருக்கிறது.
இன்னொரு பக்கம் பல்வேறு தொழில்களும் நசிந்து விட்டன. கைத்தறி நெசவு
முதல் பின்னலாடை வரை இந்த நசிவு இருக்கிறது. இதன் காரணமாக
அவற்றைச் சார்ந்திருக்கிற சிறு தொழில்களையும் முடக்கிவிட்டது. சிறு தொழில் நசுக்கம் பற்றியும், அந்தத் தொழிலை முடக்கும் நுண்ணரசியல் பற்றியும் மையப்படுத்தி குற்றியலுகரம் நாவலை நெய்வேலி பாரதிக்குமார் எழுதி இருக்கிறார்.
பாபு - ஜெனிதா மற்றும் அறிவழகன்-மலர்விழி என்ற இரண்டு இளம்
தம்பதிகளையும், குருராஜன் என்னும் இன்னொரு தொழில் முனைபவரையும் முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் தமிழில் இதுவரை பேசப்படாத புதிய களத்தை கண்முன் விரிக்கிறது
குறுந்தொழில் உலகம் என்பது திறன் சார்ந்த தொழிலாளர்கள் என்றேனும்
ஒரு நாள் தாமும் ஒரு நிறுவனத்தை உருவாக்க முடியும் என்கிற கனவு காணும் மாய உலகம். அது எப்படி. தந்திரங்களால் சூழப்பட்ட உலகமானது என்பதை நாவல் நுட்பமாகச் சித்தரிக்கிறது.
இந்தத் தொழில் சார்ந்த குரலை ஒரு இடத்தில்
இவர் இப்படி பதிவு செய்கிறார் : ” நம்முடைய பாமரத்தனம் வந்து ஏமாத்திக்கோ, ஏமாத்திக்கோ அப்படின்னு கூப்பிடும். நம்ம தலை எழுத்து என்னன்னா, வேலை தெரிஞ்சவன் அழுக்குச் சட்டையோட எவனுக்கோ உழைச்சுக் கொட்டிட்டு இருப்பான் ஸ்பேனர் சைஸ் கூடத் தெரியாதவன் முதலாளியா கொழுத்துத் திரிஞ்சிட்டு இருப்பான். ஒரு தொழிலாளிதான் படிப்படியா வளர்ந்து ஒரு சமூகத்தில் முதலாளியா மாறனும். அப்பத்தான் தொழில் தரமும், புதுப்புது தொழில்நுட்பமும் வளரும். அதுதான் சமூகத்துக்கு நல்லது இங்க என்ன நடக்குது.. பணம் வச்சிருக்கறவன் முதலாளி. அதனால அவன் பணத்து மேலதான் குறியா
இருக்கான். தரம் இல்லாத பொருட்கள் சந்தைக்கு வருது” என்றொரு குரல்.
பரம்பரை முதலாளிகளுக்கு உள்ளுக்குள்ள ஒரு வெறி ஓடிக்கிட்டே
இருக்கும். அவங்களால திடீர் முதலாளியை ஏத்துக்கவே முடியாது. அதனால என்ன நினைக்கிறாங்கன்னா உதிரி பாகங்கள் உற்பத்தி பண்ற குறுந்தொழில் முனைவோர்களுக்கு இடையே எப்பவும் போட்டி இருக்கனும். இல்லன்னா உருவாக்கனும் அப்பதான் அடிமாட்டு விலைக்கு ஜாப் ஃபிக்ஸ் பண்ண முடியும் . அதுவுமில்லாம கீழே இருக்கறவன் இப்படி வளர்ந்துகிட்டே வந்தா ஒருநாள் அவங்களுக்கு சமமா உட்கார்ந்துடுவான்”. என்று முதலாளிகளுக்கும், சிறு தொழில் முனைவோருக்கும் இடையே உள்ள உளவியல் சவால்களைச் சொல்கிறது.
சிறு தொழில் நடத்துகிற பாபு பிறப்பால் இலங்கைக்காரன். சிறு குழந்தையாக இருக்கும்போதே, தான் யாரென்று தெரியாமல், சாதி, மத அடையாளங்கள் எதுவும் இல்லாமல் அகதி முகாமில் வளர்ந்தவன். இப்படி ஒரு கதாபாத்திரம் தமிழுக்கு மிகப்புதிது.
இந்த நாவலில் வருகிற அறிவழகன் முதலாளிகளுடைய துரோகச் செயல்களுக்கு எதிராக கழுத்தை பலரின் மத்தியில் கத்தியால் அறுத்துக் கொள்கிறான். அறிவழகன் குடும்பத்திற்கு கழுத்தறுப்புக்கு கை மேல் பலன் என்று அவர் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்கிற போது சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி கழுத்தறுப்பு நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கும் சிறு சிறு முதலாளிகளுக்கும் ஏற்படுகிறது. இதே போல மலர்விழியின் தொழில் சார்ந்த சிக்கல்களைப் பற்றியும், அவற்றிலிருந்து அவள் எப்படி மீண்டெழுகிறாள்
என்பதும் நாவலில் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
கதைக்குள் கதைகள் என்பது போல, இந்த நாவலில் கதையின்
ஓட்டத்தோடு நான்கு குறுங்கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஒன்று
வாசாப்பு நாடகம் என்னும் அதிகம் அறியப்படாதக் கலையின் வழியே இஸ்ரவேல் தேசத்தில் எலிசா என்ற தீர்க்கதரிசியைச் சந்திக்கச் செல்லும் நாகமானின் கதை. மலர்விழி தன்னுடைய குழந்தைக்குச் சொல்லும் நரியின் கதை, மனித நாவும் பற்களும் உரையாடும் இன்னொரு சுவாரசியமான கதை. . நான்காவதாக அகநானூற்றில் வரும் ‘தொல் புகழ் நிறைந்த பல்பூங்கழனி’ என்னும் பாடலின் வழியே சொல்லப்படும் குறுங்கதையில் துரோகம் செய்தவர்களின் தலையில் சாம்பலைக் கொட்டி, ஊர் மக்கள் யாவரும் தூற்றி வசை பாடும் தண்டனையை அறிவிக்கிறார்கள். இந்த வகையானக் கதைகளை
நாம் இதில் வருகிற முக்கியமான கதாபாத்திரங்களின் வாழ்க்கையோடு
வலிந்தோ, இயல்பாகவோ நாம் இந்த நாவலில் பொருத்திப் பார்க்கலாம்.
துரோகத்தின் பல்வேறு வகையான வடிவங்கள் பற்றியும், சிக்கல்களைப் பற்றியும் வெவ்வேறு மட்டங்களிலும் இந்த நாவல் வழியே வாசிக்கும்போது துரோகம் செய்பவர்கள் தலையில் சாம்பலை அல்ல, நெருப்பை அள்ளிக் கொட்ட வேண்டும் என்கிற கோபத்தை, இந்த நாவலை முடிக்கிற போது நாமும் உணர்கிறோம்.
சிறு தொழில் சார்ந்த ஒரு பெரும் உலகம் சார்ந்து இயங்கும் பல மனிதர்கள் பற்றிய முக்கியமான அனுபவங்களை நாவல் பதிவு செய்கிறது .குறுந்தொழில் முனைவோரின் முன்னால் நிற்கும் பிரச்சனைகளையும் சவால்களையும், அவற்றை எதிர்கொண்டு போராட வேண்டிய எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதையும் துல்லியமாக இந்த நாவல் சொல்கிறது.
. படைப்பாளிக்கு திறனும், உழைப்பும் மட்டுமே முதலீடு என்பதை திரும்பத்
திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் பாரதிக்குமாருடைய தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பதிவாக அவரின் இந்த முதல் நாவல் இருக்கிறது
( ரூபாய் 250 எழுத்து பிரசுரம் சென்னை )
திருப்பூர் மக்கள் மாமன்றம் : ஒரு வேடந்தாங்கல் என ஆக்கிய சிற்பி சி. எஸ். அவர்கள்..
நுகர்வு மயமாகிப் போன சூழலில் திரையரங்குகளும், திரைப்படங்களுமே மக்களின் வாழ்வியலாகப் போய் விட்ட தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு நூலகம் வாசகர்களுக்கு அடைக்கலமாக , ஒரு வேடந்தாங்கலாக 30 ஆண்டுகளாக விளங்கிறது இதுவரை சுமார் 5,00,000 வாசகர்கள் அங்கு வந்து நூல்களை, இதழ்களைப் படித்துப் பயன்பெற்றிருக்கிறார்கள்.
திருப்பூரின் பல அரசு நூலகங்களுக்கு இல்லாத பெருமை இந்தத் தனியார் நூலகத்திற்கு உண்டு.சாதாரண வாசகர்களின் அடைக்கலம் என்பதே அது . இலவச நூலகம்.
இதைத் 30 ஆண்டுகளுக்கு முன் துவக்கி வைத்த நஞ்சப்பா உயர்நிலைப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் சுப்ரமணியத்தைப் போலவே இங்கு வந்து சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்களின் பெயர்கள் அதன் மகத்துவம் சொல்லும்.. எந்த இலக்கிய அமைப்பும் வந்து கூட்டம் நடத்தலாம். இலவசம்தான். எந்த சாமான்ய மனிதனும் வந்து உதவிப்பெற்றுச் செல்ல்லாம் இலக்கிய, மருத்துவ, ஆன்மீக ஆலோசனை , உதவிகள் உட்பட. இதன் அமைப்புத்தலைவர் சி.சுப்ரமணியனும் அவ்வப்போது மாறும் வேறு நிர்வாகிகளும் அன்புடன் கைகொடுக்க தயாராக இருக்கிறார்கள்.ஏழை மாணவர்களுக்குச் சீருடை முதல் புத்தகங்கள் வரை, மருத்துவ ஆலோசனையில் சித்த முகாம் முதல் கண்சிகிச்சை முகாம்கள் வரை பல சாமானிய மக்களுக்கு அகதி முகாம் போலவே கடந்த காலங்களில் அடைக்கலம் கொடுத்திருக்கிறது. மக்கள் மாமன்றம் வெளியிட்டிருக்கும் திருப்பூர் இலக்கியச்சிற்பிகள் முதல் சுமார் பத்து நூல்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் எழுதியுள்ள 200 நூல்கள் பெரும் சாட்சியம் ( சுப்ரபாரதி மணியனே 100 நூல்கள் எழுதியுள்ளாரே ) அதன் இலக்கிய , கலாச்சார ஈடுபாட்டைச் சொல்லும். எத்தனையெத்தனையோ இலக்கியப் போட்டிகள், பரிசளிப்புகள். கவிரவிப்புகள். திருப்பூரில் திருவள்ளுவர், தமிழன்னை சிலைகளை நிறுவினார் சி எஸ்..
அடைக்கலம் தரும் வேடந்தாங்கல் மனநிலையை மக்கள் மாமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரவாழ்க்கையின் இயந்திரத்தனத்தில் ஈரம் நிறைந்த அம்சமாகும் என்பதை மக்கள் மாமன்றம் அமைப்பை நிறுவி திருப்பூரின் அடையாளங்களில் அதை ஒன்றாக்கியவர் அமரர் சி.எஸ் அவர்கள்.
–maanudam issue
சூழலியல் பாதுகாப்பு நுகர்வோருக்கென ஒரு வலை
சுப்ரபாரதிமணியன்
சூழலைப்பாதுகாக்கிற நுகர்வோராக நட்சத்திர அந்தஸ்துடன் இருப்பவர்களுக்கு வலை காத்திருக்கிறது.
அப்படியொரு அனுபவம் எனக்கு வாய்த்தது . சந்தை விரித்த வலைகளுள் அதுவும் ஒன்று
*
சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் இயற்கை வேளாண்மைப்பொருட்களுக்கு நுகர்வோர் மத்தியில் பெரும் வியாபாரச் சந்தை வேறு எந்த காலத்தையும் விட கொரானா பாதிப்பு காலத்தில் உருவாகியுள்ளது.
நுகர்வோர் விழிப்புணர்வு என்பது இதில் முத்திரையாகக் கொள்ளப்பட்டுள்ளது.
• நுகர்வோர் சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்களை வாங்குவது தாங்கள் ஆரோக்யமாக இருக்க உதவுகிறது தங்களின் ஆயுளைகூட்டுகிறது. மகிழ்ச்சியாக வாழ வழிவகைச் செய்கிறது என்ற ரீதியில் அவற்றை வாங்குவதில் அக்கறை கொள்கிறார்கள்.இவை விலை கூடுதலாக இருந்தாலோ அல்லது இன்னொருபுறம் அதிகமானதாக இருந்தாலோ கூட வாங்க நுகர்வோர் தயாரகிவிட்டனர் . இவர்களைப்பயன்படுத்தி பெருமளவில் விளம்பரங்கள் செய்து லாபம் சம்பாதிக்கிற முத்திரை குத்திக்கொண்ட நிறைய நிறுவனங்கள் சந்தையில் காணப்படுகின்றன
திருப்பூர் பனியன் உற்பத்தியில் இது போன்ற சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட “ எக்கோ பிரண்ட்லி “ பொருட்களுக்கு பல வெளிநாடுகள் முன்னுரிமை தருகின்றன. இந்த முன்னுரிமையை பலர் விளம்பரப்படுத்தி தங்களை மேன்மையானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். இந்த விளம்பரங்கள் உண்மையானதா என்ற கேள்வியும் தொடர்ந்து சந்தேகங்களாய் கிளம்பி வருவதுண்டு.
இது போன்று பல உணவுப்பொருட்களுக்கு விளம்பரங்கள் சாதாரணமாகிவிட்டன .இவை வாங்கும் நுகர்வோருக்கு மலைப்பிரதேசங்களில் தங்கி மகிழ்ச்சியாய் இருக்க இடம் வசதி போன்றவை காட்டப்பட்டு வலையில் விழ வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு தரம் ஒரு வலையில் மாட்டிக்கொண்ட அனுபவம் எனக்குமுண்டு.
தொடர்ந்து இயற்கை விளைபொருட்களை வாங்கினால் மூணாறில் மூன்று நாட்கள் தங்கும் வசதி இலவசம் என்ற அறிவிப்பும் எனக்கும் வந்தன. நான் ஒரு கடையில் வாங்கும் இவ்வகைப்பொருட்களுக்கான அங்கீகாரமாக நானும் எடுத்துக்கொண்டேன்.
இப்படி ஆறு மாத குறுஞ்செய்திகளுக்குப் பின் நான் தேர்வானதாகத் தகவல் வந்து நான் தங்க ஆசைப்படும் இடத்தின் முகவரி , கைபேசி எண் தரப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு நான் வாடிக்கையாளராக இருக்கிறேன் என்பதற்கான ஊக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
மூணாறு நகரத்திலிருந்து 20 கிமீ தள்ளி லோயர் கனால் என்ற பகுதி இருக்கும் அந்த விடுதிக்குச் செல்வதற்கு நான் 300 ரூபாய் செலவு செய்தேன்.திருப்பூரிலிருந்து மூணாறுக்கு செல்லவே பேருந்துக்கட்டணம் ரூ 170 தான் . அங்கு சென்ற பின் அறை மட்டும் இலவசம் என்றார்கள்.
மலைப்பகுதி.தாறுமாறாய் பெரும் பாறைகள். குன்றுகள் போன்றத் தோற்றங்கள் தூரத்துப்பார்வைக்கு அழகாகவே இருந்தன 200 அறைகள் கொண்ட பல கட்டிடங்கள் வெவ்வெறு இடங்களில் . அதில் இருவர் தங்கும் அறையில் எனக்கு இடம் தரப்பட்டது. உணவு விடுதியின் பட்டியல் விலையேடு தரப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. எல்லா உணவுப்பொருட்களும் மிக அதிக விலையில் குறிக்கப்பட்டிருந்தது. மூணாறு நகரில் நட்சத்திர விடுதியில் தங்கும் செலவு போல ஆகிவிட்டது. அங்கிருந்து யானை இறங்கும் பள்ளம் முதற்கொண்டு எங்கு செல்லவும் டாக்சிதான். மூன்று நாள் தங்கலில் பகல் நேரத்தில் அதிகத் தூக்கம், கொஞ்சம் உலாவல் என்று பொழுதைக்கழித்து விட்டு திரும்பினேன்.
அப்போதுதான் நான் தங்கியிருந்த அப்பகுதிக்கு அருகிலிருந்த பல முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் விடுதிகள் பற்றி அறிந்தேன். அங்கு வர அந்த நிறுவனங்கள் ஆசை காட்டி வரவழைத்து விடுகிறார்கள். உணவு விடுதிக்கும் நான் தங்கியிருக்கும் இடத்திற்கும் அரை கி மீ தூரம். செங்குத்தான பகுதி. உணவுக்காக ஏறி இறங்கும்போது மூச்சிரைப்பாகி உடம்பு செய்த சிரமம் சொல்லி மாளாது.
குறைந்த நபர்களே தங்கியிருந்ததால் ஒரு வகையில் பய உணர்விலேயே இருந்தேன். அறையிலிருந்த இன்னொருவர் தொடர்ந்து குடித்தபடியும் பின் நன்கு தூங்கப்பழகி இருந்தார். அவருக்கு எதுவுமே உறுத்தலாகப்படவில்லை. மலையாளி என்பதால்யாரையாவது அழைத்து ஏதாவது பேசுவதில் அவருக்குப் பொழுது கழிந்தது.
. மூன்று நாளைக்கான முன் பணத்தினைக் கட்டிவிட்டோம் என்பதால் மூன்று நாட்களுக்குப்பின்னாலேயே அங்கிருந்து கிள்ம்பினேன்
அங்கிருக்கும் போது உங்கள்கையால் ஒரு மரம் நடுஙகள் என்றார்கள். நட்டேன். என் பெயரைப்போட்டு ஒரு துண்டு சீட்டு ஒன்று அங்கு தொங்கியது. ஆண்டிற்கொருமுறை இங்கு வந்து இதன் வளர்ச்சியைக்கண்காணிக்க வேண்டும் என்றார்கள்.ஆண்டுதோறும் நான் வந்து செல்ல வேண்டுஎன்ற வகையில் கட்டாய அழைப்புகளாக அவற்றைப்பார்த்தேன்
அதன் பின்னால் அந்த விடுதி, மற்றும் அந்த நிறுவனங்களிலிருந்து குறுஞ்செய்திகள் வந்தன. இப்படி உதாரணத்திற்கு :
1.சூழலியல் பாதுகாப்புக்காக நீங்கள் முன்னெடுப்பாய் இறங்கியிருப்பது நல்லது. அதற்கான உறுப்பினர் அட்டை அனுப்பப்படும்
2. சூழலியல் பாதுகாப்பு சார்ந்த இவ்வாண்டின் திட்டங்கள் இவை. இவற்ரில் கலந்து கொள்ளுங்கள் என்று ஒரு ஆண்டிற்கானச் செயல் திட்டம் இருந்த்து.
3. அவர்கள் அனுப்பிய கடிதங்கள் , பின் இணைப்புகளிலிருந்த மலைகள், மரங்கள் இயற்கைக்காட்சிகள் அந்த இடங்களைத்தேடியும் அவர்களை தேடியும் அலையச்செய்யுமாறு கவர்ச்சியாக இருந்தது.
4. சுற்றுச்சூழலுக்கு இணக்கமாய் நீங்கள் தங்கியிருந்தீர்கள் உங்களின் கீழ்க்கண்ட் செயல்கள் அதற்கு ஆதாரமாக இருந்தன என்று ஒரு பட்டியல் இட்டிருந்தார்கள்.அதில் நான் மரம் நட்டிருந்தது ஒன்று
5. பின்னர் மறுசுழற்சி செய்தல் சம்பந்தமான ஒரு கருத்தரங்கிற்கு அழைக்கிறோம் என்று அதே மூணாறு இட வசதி பற்றி ஒரு கடிதமும் வந்தது.
6. அந்தக் கடிததத்தில் பலவேறு நிபந்தனைகள், நட்சத்திர குறியீடுகள் , மற்றும் அடைப்புக்குறிகளுக்குள் போடப்பட்டிருந்தன.அது ஏதோ பின்னல் வலை என்பதை யூகித்து நான் கையெழுத்திட்டு அனுப்பவில்லை
7. சூழலைப்பாதுகாக்கிற நுகர்வோராக பல நட்சத்திர அந்தஸ்துடன் நான் விளங்க பல ஆலோசனைகளைச்சொல்லியிருந்தார்கள்
விளம்பரங்களை, நிபந்தனைகளை நம்பி அவற்றைப்பின் தொடர எனக்கு விருப்பமில்லை
சூழலியல் கண்துடைப்பு சொற்றொடர் அவ்வப்போது மனதிலும் வந்து போனதால் அதிலிருந்து விலகிக்கொண்டேன் .
நிஜமாகவே சூழலியலைப்பாதுகாக்கும்பொருட்களை இனம் கொண்டு கொள்ள ஒரு சிறு அனுபவமாக அவை யெல்லாம் இருந்தன
நுகர்வோர் விழிப்புணர்வு என்று சொல்லப்படுகிற போது நுகர்வோர் உரிமை என்பதும் சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நுகர்வோர் உரிமை சார்ந்த கருத்துக்கள் அமெரிக்க அதிபராக இருந்த கென்னடியின் காலத்தில் வேரூன்றத்தொடங்கியது
கென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள் என்பதை சிலர் இப்படிக் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்கள்:
பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை -உயிருக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறல்.
• தெரிவு செய்து கொள்ளும் உரிமை - விரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள்,சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட, தரமான நம்பிக்கையான பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான a.
• தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை -
விளம்பரங்கள், வெளிப்புற தகவல் சீட்டுக்கள் மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள், விலை, நிறை போன்றவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்வதற்குமான உரிமை.
• கவனத்தை ஈர்க்கும் உரிமை -
ஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும், அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக்கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளும் உரிமை.என்று கொள்ளப்படுகிறது
இதையொட்டி சர்வதேச நுகர்வோர் என்போர் முத்திரையிடப்பட்டுள்ளார்கள் .
சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்]
• அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.
• நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
• சூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.
• சுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை.
நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம் கீழ்க்கண்டவற்றிலும் இனம் காணப்பட்டுள்ளது
1. நுகர்வோர் பொருட்கள் சேவைகளை விலையினூடாகவே நுகர்வு செய்கின்றார். இதனால் திருப்தியளித்தல் வேண்டும்.
2. நுகர்வோர் திட்டமிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல்.
3. போட்டியான சூழலில் நுகர்வோர் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
4. நுகர்வோரது உடல், உள நலம் பாதிப்படயாதவாறு திருப்தியளிக்கப்படல் வேண்டும்.
பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது. (கீழ்கண்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்பட வேண்டும்).
• நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)
• உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல்மேம்படஉதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)
• வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்படவேண்டும் (நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு).
• நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு கவனமாகவும் பொறுப்பாகவும் செயல்படவேண்டும் (பராமரிப்பு பற்றிய கோட்பாடு).
• களைகள் மட்டும் அல்லாது நுண்ணுயிர்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றில் ஆதிரப்பொட்டுக்கள் அடங்கும் (உதாரணம்: புழு பூச்சிகள், மிகச் சிறு பூச்சிகள்) மற்றும் நூற்புழுக்கள் ஆகியவை. பூசணங்களும், நுண் கிருமிகளையும்நோயை உண்டாக்கும்.
• தீமைபயக்கும் பூச்சிகள் பொதுவான ஒரு பிரச்சினையாகும். கரிம மற்றும் கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் ஆகிய இரண்டுமே, அவை சுற்றுப் புறச் சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதிப்புக்களால் சர்ச்சைக்குள்ளாகின்றன. இவற்றை சமாளிக்க ஒரு வழி, இந்தப் பூச்சிகளை அடியோடு புறக்கணித்து விட்டு தாவரத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். காரணம், தாவரங்கள் தமது வளர்ச்சி மிகுந்த அளவில் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, தமது இலைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளானாலும், அவற்றால் சமாளித்துக் கொள்ள முடியும்.
• பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைத் தவிர்ப்பதற்கு, இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். வேம்பு போன்ற கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பலவகை பூச்சிக் கொல்லிகளும், பச்சைப் பூச்சிக்கொல்லி என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக கரிம பூச்சிக் கொல்லிகள், செயற்கைப் பூச்சிக் கொல்லிகளை விட பாதுகாப்பானவை,
• நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும் அனைத்து சமயங்களிலும் பஞ்சகவ்யா திறனுள்ளதாகக் கூறப்படுகிறது. பூசணம் மற்றும் சில பூச்சிகள் ஆகியவற்றிற்கு எதிரான திறனை கந்தகம் (சல்ஃபர்) கொண்டுள்ளது. சுண்ணாம்பு கலந்த கந்தகமும் (லைம் சல்ஃபர்) கிடைக்கப் பெறுகிறது. ஆனால், இது தாவரங்களை சேதப்படுத்தி விடக் கூடும். பொட்டாஷியம் மற்றும் சோடியம் பைகார்பனேட் ஆகியவையும் பூசண காளான் எதிர்ப்புத் திறன் உடையவை. தாவரங்களின் நோயெதிர்ப்பு திறனை[10] அதிகரிக்கும் சில தாவர செயலூக்கிகள், அவற்றில் பெரும்பான்மையானவை இரசாயனமாக இருப்பினும், கரிமமாகக் கருதப்படுகின்றன ( notes wikipidia )
•
அவர்களின் கடிதங்கள் தந்த விதிகளை நினைத்துப் பார்த்தேன் .அந்த விதிகளின் படி சூழலியல் பாதுகாப்பு நுகர்வோராக நான் மாற வெகு காலம் பிடிக்கும் என்பதை மட்டுமுணர்ந்தேன்
வாசிப்பு
யாரப்பா நீங்க
துரை ஆனந்தகுமார் அவர்களின் சிறார் நாவலை முன்வைத்து ..
.. சுப்ரபாரதிமணியன்
ஆனந்தகுமார் அவர்கள் தொடர்ந்து சிறுவர் இலக்கியம் சார்ந்து நிறைய நூல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்திய அவர் பற்றிய குறிப்பு பார்த்தபோது அவர் இதுவரை 25 புத்தகங்கள் சிறுவர் இலக்கிய நூலாக கொண்டு வந்திருக்கிறார் என்பது ஆச்சரியம் அளித்தது .அவ்வப்போது எனக்கு வந்து சேர்க்கின்ற நூல்கள் தான் அவை. ஆனால் எண்ணிக்கை இப்போது கூடிவிட்டது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கு காரணம் சிறுவர் இலக்கிய நூல்களின் பங்களிப்பில் அவருடைய முக்கியத்துவம் நன்கு உணர தலைப்பட்ட காலம் இது.
தமிழில் சிறுவர் இலக்கியம் பல சிகரங்களை எல்லாம் தொட்டு விட்டது. படைப்புகளில் எடுத்துக்கொள்ளும் மையமாகட்டும் அதை பல்வேறு கோணங்களில் அலசுவதாகட்டும் எல்லாம் சிறப்பாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் ஆனந்தகுமார் எப்படி முக்கியத்துவம் பெறுகிறார் என்பதும் முக்கியம். அவர் தமிழக சூழலுக்கு வெளியே இருந்து கொண்டு, வெளிநாட்டில் இருந்து கொண்டு நேரத்தை இதற்கு ஒதுக்கி கொண்டு புத்தகங்களை கொண்டு வருகிறார் .
வயது சார்ந்து சிறுவர்களுக்கு நூல்கள் தமிழில் வெளியிடப்படுவது இல்லை. இது மேல்நாட்டு இலக்கிய வகைகளில் சிறுவர் இலக்கிய வகைகளில் முக்கியமாக இருக்கிறது. ஆகவே வயது சார்ந்து இவர்களுக்கான நூல் எது இந்த வயதிற்கான நூல் இது என்று அவர் வரையிட்டு ஒவ்வொரு புத்தகத்திலும் அதைக் குறிப்பிடுகிறார். பிறகு நமது சிறுவர்களுக்கு புத்தகங்களில் பெரும்பாலும் ஓவியங்கள் இடம் பெறுவதை தவிர்க்கிறார்கள் நம்மவர்கள். காரணம் பக்க அளவு அதிகமாகின்றது. செலவு அதிகமாக உள்ளது என்பதுதான் காரணம். அப்படி நல்ல ஓவியங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்ற குறைபாடும் இருக்கிறது. அதுவும் குழந்தைகளுக்காக குழந்தைகளுடைய மனதினைக் கொண்டு ஓவியம் வரையும் ஓவியர்கள் குறைவாக இருக்கிறார்கள். இன்றைய ஓய்வில்லாத ஓவியர்கள் மத்தியில் குழந்தைகளுக்காக நல்ல ஓய்வு மனநிலையுடன் வரைகிற ஓவியங்கர்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் துரை ஆனந்த குமாருடைய புத்தகங்களின் ஓவியங்கள் மிக முக்கியமான பங்களிக்கின்றன. பாதி பக்கங்களுக்கு மேல் அந்த வகையில் ஓவியங்கள் இடம் பெறுகின்றன. இந்த நூலில் சுமார் 120 பக்கங்களில் 60 பக்கங்களுக்கு மேலாக ஓவியங்கள் இடம் பெற்று இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டலாம். பிறகு இவர் தன்னுடைய நூலுக்காக எடுத்துக் கொள்ளும் புத்தக சைஸ்- அளவு என்பது முக்கியமாக இருக்கிறது குழந்தைகள் நன்கு உணர்ந்து படிக்கிற அளவில் பெரிய எழுத்துக்களும் பெரிய ஓவியங்களும் பெரியளவு புத்தக உருவங்களும் முக்கியமானவை.
இவை வெறும் தமிழ் சார்ந்த குழந்தைகள் மட்டும் படிப்பதற்கான நூலாக இல்லாமல் அவர் வாழ்கின்ற வெளிநாடுகளில் இருக்கின்ற வேறு மொழிக் குழந்தைகளும் படிக்க உபாயமாக ஆங்கிலத்தில் அந்தப் பிரதிகள் அச்சிடப்படுகின்றன. ஆங்கிலம் தமிழ் என்று ஒரே பக்கத்தில் அவை அச்சிடப்படுவது இன்னும் விசேஷம். தமிழர்கள் அல்லாத மற்றக் குழந்தைகள் மத்தியில் தமிழை கொண்டு செல்லவும் தமிழ் சார்ந்த நூலை கொண்டு செல்லவும் இது ஒரு நல்ல உபாயமாக எடுத்துக் கொள்ளலாம். அப்படித்தான் பல வகைகளில் ஆனந்தகுமார் அவர்களுடைய சிறுவர் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த யாருப்பா நீங்க என்ற இந்த சிறார் நாவலில் கூட அவர் புதுமையான கற்பனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். ஓவியங்கள் கதாபாத்திரங்களாக மாறுவதும் அவை உரையாடுவதும் அவை செயல் புரிவதும் என்று புதுமை இருக்கிறது. இந்த புதுமை நாம் முன்பே கூட சில இடங்களில் கண்டிருக்கலாம். ஆனால் ஓவியங்கள் கதாபாத்திரங்கள் ஆக உருவாகி அவை நடத்தும் உரையாடல்களும் செயல்களும் இந்த நாவலில் உள்ளன அப்படித்தான் தங்களின் வரைந்த பிரதான ஓவியரை காண வேண்டும் என்று கோரிக்கை வைத்து கவனத்தில் கொண்டு வர ஒரு வங்கிக்குள் ஓவியங்களின் கதாபாத்திரங்கள் நுழைகிறார்கள். அந்த பிரதான ஓவியரை பார்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய கோரிக்கையாக இருக்கிறது அதற்கு காவல்துறையும் ஒத்துழைக்கிறது. அவர்களின் தலைவராக இருந்த ஒரு பிரதான கதாபாத்திரத்தை கணினி குப்பை கூடைக்குள் போட்டு விட்டது. டஸ்ட் பின்னுக்குள்.. , அதை அந்த ஓவியர் தேடி எடுத்து மீட்டெடுத்துத் தருகிற போது அந்த ஓவிய கதாபாத்திரங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. இந்த மகிழ்ச்சி ஒவ்வொரு பக்கத்துக்கும் வெளிப்படுத்துகிறது.
இந்த கதை சொல்லலில் ஒருவித மேஜிக்கல் ரியலிசப் பாணியை கொண்டு வந்து விடுகிறார். அதன் மூலமாக பேண்டஸி அம்சங்களும் மேஜிக்கல் அம்சங்களும் கலந்து இந்த நாவலின் வாசிப்பை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்த சுவாரஸ்யத்தை இந்த நாவலில் மட்டுமல்ல அவர்களுடைய எல்லா நாவல்களிலும் கண்டு உணரலாம். குழந்தைகளுக்கான நாவல்களில் சுவாரஸ்யத்தை உண்டு பண்ணுவது என்பது அவர்களுக்கான சரியான தின்பண்டங்களை அவர்களிடம் கொடுத்து சுவைக்க சொல்லி தருவது போலத்தான். அப்படித்தான் தொடர்ந்து சிறுவர் நூல்களை அவர் கொண்டு வந்திருக்கிறார்.
25 சிறார் நூல்கள் என்ற எண்ணிக்கையை அடைகிற துரை ஆனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வோம்
( யாருப்பா நீங்க வம்சி வெளியீடு ரூபாய் 200 பக்கம்120 )
உயிர்மையில் வெளிவந்துள்ளது
சிறுகதை
போட்றா ஒரு போடு
சுப்ரபாரதி மணியன்
இப்படி ஒரு கொலை செய்வதை இன்னும் தாமதமாக ஆரம்பித்திருக்கலாம் அல்லது தன்னை கொலை செய்ய சொல்லி சீனு தாமதமாகத்தான் வேலை கொடுத்திருக்கிறார் என்பது சுரேஷுக்கு விளங்கியது.
வழக்கமாய் மிதிவண்டியில் வரும். சீனு அவரின் இரட்டை சக்கர வாகனத்தில் மது போதையில் இருந்த ஒருவரை கூட்டி வந்து வண்டியை நிறுத்தியபடி பின்னால் உட்கார்ந்து இருந்தவரை வலது கையால் எம்பி கீழே விழ வைத்தார். வந்தவர் முழு போதையில் இருப்பது நன்கு தெரிந்தது. விழுந்த வேகத்தில் எந்த வலியையும் அவர் முகம் காட்டாதபடி இறுகிப் போய்விட்டது கண்களை அவர் திறக்கப் முயன்று பின்பு மூடிக்கொண்டார் இவன் தலையில ஒரு அடி கொடுத்து சாகடித்துப் புதைத்திரு என்று சொன்னார். : போட்றா ஒரு போடு
அரைகுறையாக இருந்த ஒரு குழியை சரியாக ஒரு குழியை மூட வேண்டிய வேலை இருந்ததால் கையில் கடப்பாரையும் மம்பட்டியும் சுரேஷ் கையில் இருந்தது.
“ போடணும்னு சொல்றேனே போட்டுடு” சீனுவின் முகம் இன்னும் இறுக்கமாகத்தான் இருந்தது கண்கள் சிவந்து இருந்தன. நன்கு குடித்து இருக்கிறார் என்பது தான் தெரிந்தது. ஏதோ கோபப்பட்டு சொல்கிறார் என்று தான் சுரேஷ் நினைத்தான்.
. ” போடறேன்னு சொல்றனே போடு போட்றா ஒரு போடு “
. சுரேஷ் எதுவும் பேசாமல் தூரத்தில் இருந்த சிதைந்தக் கல்லறைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
” அடுத்த வாரம் தங்கச்சி கல்யாணம் இருக்கு இல்ல. அதுக்கு பணம் வேண்டாமா. போடு ஒரே போட்ல போட்டு தள்ளு .புதுக்குழி போட்டு அவனை மூடிவிடு “ சுரேஷுக்கு அவனின் தங்கை திருமணத்திற்கு பணம் தேவையாகத்தான் இருந்தது ஆனால் அவன் கொடுக்கிற வேலை அபாயகரமாகத் தோன்றியது இதுவரைக்கும் அப்படி வேறு மாதிரி எதுவும் வேலை தந்ததில்லை.
“ காசு வேணும்னா போடு நான் போட்டுடுவேன். ஆனா நீ போட்டுப் பாக்கணும். அதுக்காக தான். இங்கிருந்து ஆரம்பிக்கச் சொல்றேன் ”என்று சீனு சொன்னார். சுரேஷ் வேறு வழியில்லாமல் கையில் இருந்த மம்பட்டியால் கீழே போதையில் விழுந்து கிடந்தவனின் தலையில் ஓங்கி அடிக்க ரத்தம் பீறிட்டது.
” புதுக்குழி ஒன்னு தோண்டி உள்ள போட்டு. அவ்வளவுதான். ஒன்னும் நினைக்காதே. முதல் வேலைதான் சிரமமா இருக்கும் அப்புறம் போகப் போக இதுவே சுலபமாயிடும். உங்க தங்கச்சி கல்யாணம், அம்மாவுக்கு ஆபரேஷன், அப்பாவுக்கு வைத்திய செலவு எதுவேணும்னாலும் பார்த்துக்கிறேன். இங்கிருந்து நீ ஆரம்பிக்க வேண்டியிருக்கும்”
0
வேறு வழியில்லாமல் புதுக்குழியை அன்று சுரேஷ் தோண்ட வேண்டியிருந்தது. செத்துப் போனவனை அப்படியே காலால் உருட்டித் தள்ள வேண்டி இருந்தது. இதுவரை சீனு இது மாதிரியான வேலை அவனுக்கு கொடுத்ததில்லை. இதுதான் முதல் முறை.சீனு வந்த இரட்டைச் சக்கர வாகனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பலமுறை சீனுவின் மிதிவண்டியில் அவன் சென்றிருக்கிறான்.சுகமான பயணம் என்கிற வகையில்தான் இருந்திருக்கிறது
0
அவன் அந்த கல்லறை தோட்டத்திற்கு வந்தபோது கல்லறை குழி வெட்டுவனாக தான் வந்தான்
“ குழி வெட்ற வேலைதா இருக்கு வேற ஒன்னும் வேலை இல்லை “ என்றார்.
” செய்யறேங்க “
“ சரி பொணம் வரும்போது குழி வெட்டணும். அவ்வளவுதான் எதுத்த மாதிரி மின்மயானம் வரப்போகுதும். அது வர வரைக்கும் தான் நமக்கெல்லாம் வேலை இருக்கும். அதுவரைக்கும் தான் காசு எல்லாம் சேர்க்க முடியும். இந்த வேலையிலதா காசு பார்க்க முடியும்”
குழி வெட்டும், மற்றும் பிணங்களை அடக்கம் செய்யும் வேலையைத்தான் சுரேஷ் செய்து கொண்டு இருந்தான்.
ஒரு நாள் ரோஸ் நர்சரிக்கு கூட்டிக் கொண்டு போனார். ரோஸ் நர்சரி என்பது ஒரு ஆரம்ப பாடசாலை. ஆங்கில பாடசாலை. மாலையில் நான்கு மணிக்கு அந்த பள்ளி வகுப்புகள் முடிகிறபோது வெளியேறு வரும்போது ஒரு குழந்தையை பார்க்கச் சொன்னார் சீனு இரண்டு நாட்கள் அப்படித்தான் அந்த பெண் குழந்தையைப் பார்த்தான். அழகாகத்தான் இருந்தது.
“ அந்த குழந்தையை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு கூட்டிட்டு போயி ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்துட்டு எங்காச்சு ஒரு இடத்துல விட்டுட்டு வந்துரு. வேற ஒன்னும் பண்ணாதே”
“ நான் குழி வெட்ற வேலையைப் பண்ணுகிறேன். அது போதும்”
“ இதையும் பண்ணனும். இல்லைனா தங்கச்சி, அப்பா, அம்மா இவங்களையெல்லாம் யார் காப்பாற்றுவா. நான் கொடுக்கிற காசுதான் காப்பாற்றும்”
அந்த குழந்தையை அவன் அப்படித்தான் தினமும் கவனித்திருந்து விட்டு நான்காவது நாள் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூட்டிக்கொண்டு போய் கொண்டத்து காளியம்மன் பின்புறம் இருந்த முனியப்பன் சிலை அருகில் விட்டு விட்டு வந்து விட்டான். அதற்குள் மூன்று மணி நேரம் ஆகிவிட்டது குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்துக்கு போனார்கள். பல இடங்களுக்கும் செய்திகள் பரவின. கடைசியில் அழுது கொண்டிருந்த குழந்தையை சிலர் காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள்.
“ அந்த மூன்று மணி நேரம் அந்த குழந்தையை காணமுன்னு அந்த நாயி பதற்றப்பட்டு அலைஞ்சான் பாரு எனக்கு அது போதும். அதுதான் பழிவாங்க சரியானது”
“ அந்த நாய் என்னங்க அப்படி பண்ணினான்.”
“ அந்த நாய் .. அவ .. அவளை இந்தக் கல்லறைத் தோட்டத்துல ஒரு குழிதோண்டி புதைத்து இருக்கணும். ஆனா நான் விட்டுட்டேன். இப்போ சின்ன சாக்கா அவள பழிவாங்க இது பண்ணி இருக்கேன் .போதும். ஆரம்பம்தான் ”
“ அவளுக்காக அந்த குழந்தையை எதுக்குங்க கஷ்டப்படுத்தணும்”
“ அவளெ பழிவாங்க எங்க ஆச்சு ஆரம்பிக்கணும்ன்னு சரியா ஆரம்பிச்சிருக்கேன் .”
அதுதான் சுரேஷ் செய்த முதல் குற்ற காரியம்..சவக்குழி வெட்டும் வேலையை தவிர சீனு சொன்ன பிற வேலைகளில் முதலாவது அது. . அதன் பிறகு சில கொலைகளை செய்யச் சொன்னார். எல்லாம் சுலபமாக முடிந்தது. ஆனால் இதெல்லாம் எங்க போய் மாட்டும் என்று தான் அவனுக்கு பயம் இருந்து கொண்டே இருந்தது. அவனுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் ஏதாவது இப்படி செய்யச் சொல்வர் சீனு.
” அம்மாவெ நல்லாப் பார்க்க வேண்டாமா அப்பாவைப் பார்க்க வேண்டாமா இல்ல அவங்களுக்கு இந்த கல்லறைத் தோட்டத்துல குழியை வெட்டி பொதைச்சிடுவியா அதன்பின் குழி வெட்ற வேலையினால உனக்கு எல்லாம் ஃப்ரீயா வந்துடுமா “
இப்படி கொலை செய்வதை விட திருட்டு எவ்வளவோ மேல் என்று தான் அவனுக்கு தோன்றியது. திருட்டு பட்டத்திற்குள் போய் விடக்கூடாது என்று தான் அவன் நேர்மையாக வேலை செய்ய ஆசைப்பட்டு இந்தத் தோட்டத்திற்கு சவக்குழி வெட்டும் வேலைக்கு வந்தான்.
குழந்தையைக் கடத்திக் கொண்டு போன மாதிரி அப்படி சின்ன சின்னதாய் பல விஷயங்கள் செய்ய வேண்டி இருந்தது. யாரையாவது மிரட்ட வேண்டி இருந்தது. கொஞ்சம் நாலு தட்டு தட்ட வேண்டி இருந்தது.
ஆனால் திரும்பத் திரும்ப கொலை செய்ய சீனு தூண்டவில்லை என்பது தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. .ஆனால் சுரேஷ் செய்த காரியங்களில் பலவை குற்ற காரியங்கள் என்று பட்டியலிடும் வகையில் தான் இருந்தது. அது சீனுவுக்கும் தெரிந்தது. இது எல்லாம் விட்டுவிட்டு வேறு வேலைக்கு போய் விடலாமா பக்கத்தில் புதுசா புதிதாய் ஏதோ மில்லொன்று வந்திருந்தது. தற்காலிகமாகத் தொழிலாளர்களை எடுக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதற்குப் போய் விடலாமே என்று கூட நினைத்தான்.
“ அப்படியெல்லாம் உட்டு விட மாட்டேன். நீ பண்ண காரியம் எல்லாம் என்கிட்ட இருக்கு. அதை வைத்து நான் உன்னை மிரட்டிடுவேன் எனக்கு துணையா நான் சொல்ற காரியத்தை பண்ணிட்டு தங்கச்சி அப்பா அம்மா குடும்பம் அப்புறம் இனி வரப்போற பொண்டாட்டி இவங்களையெல்லாம் நல்லா வச்சுக்க நீ என்னோடு இருக்கிறதா சரியா இருக்கும்.”
வேறு வழி இல்லாமல் சுரேஷுக்கு அது கூட சௌரியமாகத்தான் தோன்றியது. ஆனால் சீனு என்ன சொல்லப் போகிறார், குழி வெட்டுவதைத் தவிர என்ன வேலை தரப் போகிறார் என்பது தான் அவனுக்குள் பயத்தை கிளப்பிக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் சவக்குழி வெட்டும் வேலையைத்தான் அவர் சொன்னார் என்பது ஆறுதலாக இருந்தது ..அந்த வேலையை செய்வதற்கு அந்த கல்லறை தோட்டத்தில் வேறு ஆட்கள் இல்லை. ஒரு ஆள் போதும் என்று சொல்லிவிட்டார் சீனு. .அவ்வப்போது வந்து சுத்தம் செய்துவிட்டு போகிற ஒரு முதியவள் சுரேஷ்சை ஏறிட்டும் பார்த்ததில்லை காரணம் அவன் முகத்தில் தெரிகிற. கொலைக் களையை அவள் கண்டுபிடித்து இருப்பாளா என்று சுரேஷிற்கு சந்தேகம் இருந்தது. கிறிஸ்துவர்களைப் புதைப்பதில்லை . ஆனால் கல்லறைத்தோட்டம் என்ற பெயர் எப்படி வந்தது என்பது அவனுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.
சீனு கொலையாளி தான் என்ற சந்தேகம் சுரேஷுக்கு அவன் வேலைக்கு வந்த இரண்டாவது நாளில் தெரிந்துவிட்டது கல்லறை தோட்டத்தில் ஒரு பழைய வீடு இருந்தது. வீட்டு முன்புறத்தில் இருந்த அடைக்கப்பட்ட அறையில் தட்டு முட்டு சாமான்களும் பழைய மரச் சாமான்களும் கிடந்தன அதில் ஒரு மூட்டை ஒன்று கட்டப்பட்டு கிடந்தது. அதை ஆவலுடன் ஒரு நாள் அவன் பிரித்துப் பார்த்தான். கடப்பாரை கத்தி போன்றவை அந்த மூட்டையில் இருந்தன. எல்லாவற்றிலும் சிவப்பு சாயம்.. இது ரத்த கறையா அல்லது சிவப்பு சாயமா என்று சுரேஷுக்கு சந்தேகமாக இருந்தது. ரத்தக்கறை என்றால் ஏதாவது காவல்துறை நாய் கூட இந்த மூட்டையை வந்து முகர்ந்து பார்த்து அவரைக் காட்டி கொடுத்திருக்கும் ஆனால் ரத்த கறையாகத் தெரியவில்லை
ஒருநாள் அந்த மூட்டையை அவிழ்த்து எச்சிலை தொட்டு அந்த சிவப்பு வர்ணத்தை கொஞ்சம் அழுக்காக்கிப் பார்த்தான். அப்போதுதான் அது ரத்தம் அல்ல சிவப்பு வர்ணம் பூசப்பட்ட கத்தி கபடாக்கள் என்பது தெரிந்தது. அந்த சாக்கு முட்டையைத் திறந்ததை சீனு தெரிந்து கொண்டார்.
“ அதுல ரத்த கரைய இருக்குனு பாத்தியா இல்ல. சிவப்பு கலர் பெயிண்ட்தான். உனக்கு பயத்தை கொடுக்கணும் இந்த விஷயத்துல எல்லாம் சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு தான் நான் சிவப்பு கறை பண்ணி அங்க வச்சிருந்தேன்.. நீ அதை திறக்கணும். பாக்கணும் அப்படி நினைச்சேன்.. ரத்த கலர், ஆயுதம் இதெல்லாம் பாக்குறப்போ உன் மனசுக்குள்ள ஏதோ பயம் தோணும் அப்படி தோணி நீ ரத்தக்கறை, கொலை சாவு இதையெல்லாம் சுலபமா புரிஞ்சுக்கணும். அதுக்குதான் நான் இந்த ஏற்பாட்டை பண்ணனன் ” என்று சொன்னார். அவர் தன்னை இந்த படுகுழிக்குள் தள்ளுவதற்காக இப்படி ஒரு விஷயத்தை வைத்து இருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் ஏதோ பயம் காட்டுவதற்காகத்தான் இதை செய்கிறார். பரவாயில்லை என்றுதான் முதலில் நினைத்தான். அதன் பின் சீனு சொல்கிற காரியங்களைச் செய்வது, பிறகு சமாதானப்படுத்திக் கொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது. சுரேஷ்க்கு குடும்பம் சுலபமாகத்தான் நடந்து கொண்டிருந்தது. சீனு சொல்கிற மாதிரி ஒரு பொண்டாட்டியை தேட வேண்டிய அவசியமும் இருந்து கொண்டிருந்தது. ஒரு தன்னைத் தேடி வருபவளை இங்கேயே கொண்டு வந்து வைத்து விடலாமா அல்லது வேறு இடத்தில் குடி வைக்கலாமா? கல்லறைத் தோட்டம் என்றால் அந்த பெண்ணுக்கு பிடிக்காமல் போகும். கல்லறை தோட்டம் நகரத்தில் இருந்து தள்ளித் தான் இருந்தது. எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு தான். ஆனாலும் தனியாக வீடு இருப்பது என்பது சௌரியமாகத் தான் இருக்கும் என்று நினைத்தான். திருமணம் ஆகும்போது அதை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்
அப்போது அவனுக்கு சித்தி வீட்டு கல்யாணம் காரியங்களுக்காக பணம் தர வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது. சீனு அலட்சியமாகத் தான் இருந்தார். அதனால் அவரிடம் கடுமையாக பேசி பணம் வாங்க முடியவில்லை. கடுமையாக அவரிடம் பேச முடியாது . அரசாங்க கட்டுப்பாட்டுக் கல்லறை என்பதால் யாராவது ஏதாவது சீனுவுக்கு சங்கடங்கள் தந்து கொண்டிருந்தார்கள் என்பது ஞாபகம் வந்து ஆறுதல் அடைந்தான் . தி மு க, அரசாங்கத்தைக் கலைத்திருந்தார்கள் . அந்தக் கவலை அவரை ஆட்கொண்டு விட்ட்தா என்ற சந்தேகம் இருந்தது.
அந்த அரசாங்க அலுவலகத்தில் அன்றைக்கு சம்பள பட்டு வாடா என்பதை அவன் அறிந்திருந்தான். யாரிடமிருந்தாவது பணப்பையை பிடுங்கி விட்டால் போதும் சித்தி வீட்டு கல்யாணத்திற்கு சரியாகிவிடும் என்பது அவனுடையத் தீர்மானமாக மாறி இருந்தது. அப்படித்தான் சம்பளம் வாங்கிக் கொண்டு காலி சோத்து பொட்டலத்தை சேர்த்து கக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தவனை ஒதுக்குப்புறமான இடத்தில் தலையில் அடித்து விழவைத்தான் சுரேஷ், அவன் கீழே விழுந்த பின்னால் அவன் கக்கத்தில் வைத்திருந்ததில் காலி சோற்றுப் பொட்டலப் பையை தூக்கி எறிந்து விட்டு நகர்ந்து விட்டான்.
இரண்டு நாள் கழித்து அடிபட்டவன் செத்துப் போனது தினசரி செய்தித்தாளின் ஒரு பகுதியாக செய்தி இருந்தது. அந்த செய்தியில் செத்துப்போனவனுடைய வாழ்விடம் பற்றிய சின்ன குறிப்பு இருந்தது அதைத் தேடிப் போய் செத்துப் போனவன் யார் என்று தெரிந்து கொண்டான் சுரேஷ்
0
அவன் பக்கத்தில் வந்து நின்ற மிதிவண்டியை கவனித்தான் பதினைந்து வயது இருக்கும் ஒரு சிறுவன் அந்த வண்டியை ஓட்டி வந்திருந்தான். டபுள்ஸ் உக்காரலாமே என்றான்
” எதுக்கு “
“ என்ன ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கீங்க. அதனாலே நானும் டபுள்ஸ் கூட்டிட்டு போலாம்னு.. .சைக்கிள்ல ஜாக்கிரதையா ஓட்டுவேன்”
முகத்தில் பூத்திருந்த வியர்வையை சட்டை நுனியால் துடைத்துக் கொண்டான் சுரேஷ்.சுராசின் சட்டையில் பூக்கள் பூத்திருந்தன பல வர்ணங்களில்.
மிதிவண்டியில் ஏறி சவுகரியமாகத் தான் உட்கார்ந்தான் சுரேஷ் நீ யாருன்னு எனக்கு தெரியும் என்றான் அந்த பையன்
“ யாரு நான் . “
“ எங்க அப்பாவை கொன்னவன்”
“ அப்படி சொல்றியா.. ஆமா அப்புறம் ஏன் போலீஸில் சொல்லல வண்டியே நிறுத்தறையா.”
“ எங்க அம்மா தான் காரணம்”
“ அப்படியா எங்க அம்மா உன்னுடைய சின்ன வயசு காதலி அப்படிங்கிறது எனக்கு தெரியும் ”
“ஓ அது தெரிஞ்சிருச்சா... செத்துப் போனது யாருன்னு இடத்தை தேடி பார்த்தப்போ உங்க அம்மாவை பல வருஷங்கள் கழித்து பார்த்தேன். அப்பதான் எனக்கு ரொம்ப வயசாயிருச்சுன்னு தெரிஞ்சது. உங்க அம்மாவுக்கு உன்னை மாதிரி ஒரு பையன் இருக்கிறது தெரிஞ்சது..அது நீதானா. ஆனா நான் எதிர்பார்க்கலை செத்துப் போனவன் என்னுடைய காதலியோட புருஷனா இருக்கணும்னு நான் எதிர்பார்க்கல. எதிர்பார்க்காத மாதிரி வாழ்க்கையில் நிறைய நடக்குது.”
“ இந்த சைக்கிளை வாங்கி கொடுக்க எங்க அப்பா கஷ்டப்பட்டார் அதெல்லாம் நெனச்சா கண்ணீர் வருது”
“ நான் என்ன சொல்றதுன்னு தெரியல. எல்லாமே எதிர்பாராமல் நடந்துருச்சு. சரி நான் தான் கொலைகாரன்னு தெரிஞ்சு நீ ஏன் போலீசுக்கு சொல்லல. கண்டு பிடிக்காமெ அலையறாங்க . உங்க அம்மாவுக்கு தெரியுமா “
“ எனக்கு தெரியும். எங்க அம்மாவுக்கு தெரியுமான்னு தெரியாது போலீஸ்ல சொன்னா எங்க அம்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு நடக்க வேண்டி இருக்கும். உனக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் இதனால யாருக்கு என்ன பிரயோஜனம்னு ஒரு நினைப்பு வந்தது ஆனால் அது சரியா..”
“ அது சரியான்னு கேக்குற ஆள் நீ இல்லயா . தெரியுது சரி நான் இறங்கிக்கிறேன் “
“ ஏன் இறங்கறே “
“ கொஞ்சம் பயமா இருக்கு நான் கொன்னு போட்டவனுடைய பையன் என்ன கூட்டிட்டு போறான் அப்படிங்கறது.... பையனுடைய அம்மா என்னுடைய காதலியா ஒரு காலத்துல இருந்தாங்க.”
“ அது சரி. தப்பிச்சு போறியா”
“ இனிமேல் தப்பிக்க முடியும்ன்னு தோணவில்லை. சரி என்ன பண்ணனும்”
“ ஒன்னும் பண்ண வேண்டாம் எங்க அம்மாவ கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பழைய காதலி தானே.. தாராளமா பண்ணிக்கோ. எங்க அம்மா வறுமையில, ஒரு விபச்சாரியாக ஆகாமெ இருக்க அது உதவும் .அப்புறம் நானும் என்னுடைய வாழ்க்கையை சுலபமாக ஓட்ட உதவும். இல்லைன்னா குடும்பத்தில் இருக்கிற பிரச்சனைகள் எல்லாம் பெரிசாயிட்டே இருக்கும். எங்க அம்மா பெரிய பிரச்சனையா விதவையா வாழ வேண்டி இருக்கும். அதனால தான் அப்படி சொல்கிறேன்”
அந்தப் பையனின் மிதிவண்டி கொஞ்சம் நகர்ந்து போய் நின்றதை முன்பே இறங்கிய சுரேஷ் கவனித்தான்
“ நீ சொல்றதெல்லா நல்லாத்தா இருக்கு. போலீஸ் நாய் சீக்கிரம் மோப்பம் புடிச்சிரும்ன்னு மனசு சொல்லிட்டிருக்கு”
அக்கானி :. இலா வின்சென்ட் நாவல் -- சுப்ரபாரதிமணியன்
பனையேறி மக்களுடைய வாழ்க்கையை ஹெப்சிபா ஜேசுதாசன் ஜேக்கப் வாத்தியார் முதற்கொண்டு செல்வம் வரை பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் வின்சென்ட் அவர்களின் நாவலில் அவருடைய களமும், கோலமும் வேறுபட்டதாக இருக்கிறது. வின்சென்ட் அவர்கள் சேலத்திற்கு நாஞ்சில் நாட்டு கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் இந்த நாவலில் அவர் பயன்படுத்தி இருக்கும் நாஞ்சில் நாட்டு பூட்டேற்றி கிராம மக்கள் சார்ந்த மொழியை அவர் பயன்படுத்தும் லாவகமும் மலையாளமும் தமிழும் கலந்த மணி பிரவாள பேச்சு நடையும் இந்த நாவலின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. அந்த பேச்சு மொழியோடு அவர்களுடைய உணவு வகைகள், அவர்களின் வசிப்படங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றை மிகவும் நுணுக்கமாக இதில் காட்டியிருக்கிறார். அந்த பனையேறி மக்கள் வேலையில்லாத போது நெசவு தொழிலைக் கைக்கொள்கிறார்கள் அல்லது கூலி வேலைக்குச் செல்கிறார்கள். பனையேறி தொழில் சார்ந்த தீவிரமான நுணுக்கமான விவரிப்புகள் போல நெசவாளர் சார்ந்த தகவல்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனால் கதை ஓட்டத்தோடு நெசவுத்தொழிலோடு அந்த மக்கள் எப்படி இயைந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சிறப்பாக சொல்கிறார். ஏழ்மையில் கிடக்கும் மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கைக்கு ஓடுபவர்கள். அவர்களுக்குப் பசியைத் தீர்க்க ஏதாவது உணவு கிடைத்தால் போதும். இதிலிருந்து மீட்சி என்பது பற்றி எல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. ஆனால் கல்வி என்பது அவர்களுக்கு எப்படி மீட்சியைத் தருகிறது. பொதுவுடமை இயக்கங்கள் எப்படி அவர்களை வலிமைப்படுத்தி எழுச்சி கொள்ள வைக்கிறது என்பதுதான் இந்த நாவலின் முக்கிய மையமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் படும் பாட்டை சொல்ல இயலாது. குடும்பத்தில் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். கணவன்களின் கொடுமையை சகித்துக் கொள்கிறார்கள். குடும்பப் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. பாலியல் ரீதியான பல்வேறு தொல்லைகளையும் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது இதெல்லாம் மீறி தன் குடும்பத்து உறுப்பினர்களை பெருமைப்படுத்த பல்வேறு செயல்களில் செயல்பட வேண்டி இருக்கிறது. அந்த வகையில் ஏழ்மையிலும் கல்வியைப் பெறுவது அதற்கான முயற்சியில் எடுப்பது என்பது பெண்களின் முக்கிய கடமையாகி விடுகிறது. இந்த பனை தொழிலாளர்கள் தங்களுடைய சிரமங்களை அப்படியே சொல்லிக் கொண்டிருக்காமல் தங்கள் உரிமைகளை சார்ந்து போராடவும் வழி வகுத்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்த நாவலில் முக்கிய அம்சமாக இருக்கிறது. அந்த போராடும் மக்களின் வாழ்க்கை முறையில் இருந்து, படித்த ஒருவர் அந்த இயக்க வேலைகளுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை சூசகமாக சொல்லி இந்த நாவல் முடிகிறது. அங்கு இருக்கிற பொதுவுடமை இயக்கம் சார்ந்த செயல்பாடுகளை பற்றி விரிவாக சொல்கிறபோது அப்பகுதியில் அந்த கட்சியின் தோற்றம், வளர்ச்சி அது தேர்தலில் தன்னை முன்னிறுத்த ஆசைப்படுவது, அது பற்றி விமர்சனங்கள் போன்றவையும் சொல்லப்படுகிறது கிறிஸ்துவத்தை பற்றியும், விடுதலை இறையியல் பற்றியும் பல்வேறு விவாதங்கள் இந்த நாவலில் இருக்கின்றன, அந்த விவாதங்களை அவர்கள் தங்களுடைய பேச்சுக்களாக, உரைகளாக மட்டும் கொள்ளாமல் நாடக வடிவில் சொல்லும் விதத்திலும் அந்த நாடகப் பிரதி என்று இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவுடமை இயக்கங்கள் இந்த மண்ணின், பனையேறி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவதை இந்த நாவல் பல்வேறு சித்திரங்கள் மூலம் சொல்கிறது. 70 களில் திருப்பூரில் நடந்த ஒரு நெசவாளர் போராட்டத்தை மையமாக வைத்து நான் ” தறி நாடா” என்ற நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலில் நெசவாளிகளின் போராட்ட சூழலும் அந்த நெசவாளர் குடும்பத்திலிருந்து படித்த இளைஞன் அந்தப் போராட்டம் தருகிற அறிமுக காரணமாக தன்னை பொதுவுடமை இயக்கத்தில் முழுமையான மாறுவதற்காக தயார் படுத்திக் கொள்வதை அந்த நாவலில் நான் எழுதி இருந்தேன். அந்த நாவலின் இரண்டாவது
பாகமாக அந்த இளைஞரின் பொதுவுடமை இயக்க அனுபவங்களும் இன்றைய கட்சி சார்ந்தவர்களின் சாதிய, தனி மனித குருரங்களும் சார்ந்து அது அவனை சிதைப்பதை இரண்டாவது பாகமாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாவது பாகம் ஒரு வகையில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த பலவீனங்களை பெரிதுபடுத்தி காட்டுவதாக அமைந்துவிடும் என்று நான் அந்த இரண்டாம் பாக நாவலை எழுதவில்லை.
இந்த நாவலில் வின்சென்ட் அவர்கள் அப்படி ஒரு இளமையான, துடிப்பான இளைஞனைத் தான் முன்வைக்கிறார். சுயநலத்தோடு வாழ்க்கையை நடத்துவதை விட பொதுநலத்தோடு அணுகுவது என்பது அந்த இளைஞனுக்கு உவப்பாக இருக்கிறது. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சிகள் சாதாரண தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியத் தாக்கங்களை இன்னொரு கோணத்தில் சொல்லும் நாவலாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் பனையேரி மக்களுடைய வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்தவை. அவர்களிடம் மொழியும் அந்த வகையில் பின்னிப்பிணைந்தவை. ரத்தமும் சதையுமாக அந்த மனிதர்களை முன் வைப்பதில் இல வின்சென்ட் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய 15க்கும் மேற்பட்ட நூல்களில் அவருடைய முதல் நாவலாக இதைக் கொள்ளலாம். பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டு நூல்களும் எழுதி இருந்தாலும் முதல் நாவல் என்ற வகையிலேயே ஒரு சிறந்த நாவலை அவர் தந்திருக்கிறார் என்பது கூடுதல் பலம் தருகிறது.
பாரதி புத்தகாலயம் சென்னை வெளியீடு - ரூபாய் 330
திருப்பூர் சுற்றுச்சூழல் பற்றிய ” சாயத்திரை” நாவல் 25வது ஆண்டு நிகழ்வு
திருப்பூர் சுற்றுச்சூழல் பற்றிய சுப்ரபாரதிமணியனின்
” சாயத்திரை “ நாவல் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் ” சாயத்திரை” நாவலின் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்திருக்கிற பிரதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன
56வது தேசிய நூலக வார விழாவில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தலைமை நூலகர்கள் தர்மராஜ், கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட நூலக வாசகர்வட்டத் தலைவர் புருஷோத்தமன், வாசகர் வட்ட நிர்வாகிகள் தங்கவேலு, மோகன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்
தங்கவேல் அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் ரங்கசாமி அவர்கள் வாசிப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.. நூலகர்கள் பொன்மணி, பாக்யலட்சுமி, நடராஜன் ஆகொயோர் விருது பெற்றவர்களைப் பாராட்டிப் பேசினார்கள்.தமிழக அரசின் சிறந்த நூலகர் விருது பெற்ற தர்மராஜ் மற்றும் கலைச்செல்வன் ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் சார்ந்த நூலகர்கள், எழுத்தாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி எல்லா நூலகங்களிலும் வாசிப்பு இயக்கம் நடத்துவது மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு சுற்றுலா செல்வது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
புத்தகம் பேசுது இதழின் நவம்பர் மாத இதழ் அறிமுகம் திருப்பூரில் 56வது தேசிய நூலக வார விழாவில் இடம் பெற்றது
புத்தகம் பேசுது இதழ் சென்னையில் இருந்து கடந்த 30 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழாகும் புத்தக அறிமுகங்கள், விமர்சனம் கட்டுரைகள் என்று புத்தங்களுக்காக பிரத்தியேகமாக வடிவைக்கப்பட்டு வெளிவரும் இதழாகும்
இந்த மாத இதழில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நீண்ட பேட்டியும் இடம் பெற்று இருக்கிறது. இந்த இதழின் அறிமுகம் திருப்பூர் மத்திய நூலகத்தில் நடைபெற்றது.
56வது தேசிய நூலக வார விழாவில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தலைமை நூலகர்கள் தர்மராஜ், கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட நூலக வாசகர்வட்ட்த் தலைவர் புருஷோத்தமன், வாசகர் வட்ட நிர்வாகிகள் தங்கவேலு, மோகன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்
தங்கவேல் அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் ரங்கசாமி அவர்கள் வாசிப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். தமிழக அரசின் சிறந்த நூலகர் விருது பெற்ற தர்மராஜ் மற்றும் கலைச்செல்வன் ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் சார்ந்த நூலகர்கள், எழுத்தாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி எல்லா நூலகங்களிலும் வாசிப்பு இயக்கம் நடத்துவது மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு சுற்றுலா செல்வது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அரசின் நமக்கு நாமே திட்டம் நியாயமானதா - சுப்ரபாரதிமணியன்
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் நான் வசிக்கும் வீதி மண் வீதியாகவே இருக்கிறது சாலை போடப்படவே இல்லை
பலமுறை இங்கு ஊராட்சியில் மற்றும் நகராட்சிகளில் போட்டியிடுபவர்கள் எங்கள் வீதி சாலையை ஒழுங்காக்குவோம் ” ரோடு போடுவோம் “ என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு வாக்குகளை வாங்குகிறார்கள் ஆனால் பதவிக்கு வந்த பின்னால் அதில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை இப்படித்தான் நான் வசிக்கும் வீதி “ மண் ரோடாக ” மேடு பள்ளமாக சாக்கடை ஓடும் இடமாக இத்தனை ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது பக்கத்து வீதிகளில் ஓரளவுக்கு சாலை வசதி வந்து விட்டது இப்போதுதான் சில மாதங்களுக்கு முன்னால் எங்கள் வீதியில் சாலை போடுகிறோம் என்று ஒழுங்கு செய்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்னால் இருந்த செடிகள் கொடிகள் சிறு மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்தார்கள்.. ரோடு வேணும்னா இதெல்லாம் விட்டு தான் ஆகணும் என்று உள்ளூர் நகராட்சி நிர்வாகம் சார்ந்தவர்கள் கேலி செய்தார்கள். இது நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் சாலை போடுவதற்காக எந்த ஆயத்தமும் இல்லை. நகராட்சி உறுப்பினர் வசம் இருந்து நமக்கு நாமே திட்டத்தில் அந்த வீதியில் குடியிருப்போர் பணம் தர வேண்டும் என்றார்கள். மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கும் கடிதம் அனுப்பினேன் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இருந்து சாலை போட ஒப்பந்தம் இருக்கிறது. .ஆனால் கழிவுநீர் ஓடுவதற்கான வேலை செய்ய ஒப்பந்தம் எதுவும் இல்லை. ஆகவே அந்த வீதியில் குடியிருப்பவர் தான் அதற்கான பணத்தைக் கட்ட வேண்டும் என்றார்கள். நகராட்சி உறுப்பினர் பக்கம் இருந்தும் இதையேச் சொன்னார்கள் அதன்படி கழிவுநீர் ஓடுவதற்கான பாதை அமைக்க அந்த தெருவில் வசிப்போர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணம் போட வேண்டும் என்கிறார்கள். வீட்டு முகப்பில் அதை கட்டுவதற்காக ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வரை கட்ட வேண்டும் என்கிறார்கள். அப்படி என்றால் என் வீட்டுக்கு முகப்பிற்கு அதை செய்ய நான் சுமார் 40 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.. என் வீதியில் 50 வீடுகள் உள்ளன இதில் ஒவ்வொருவரும் குறைந்தது 30 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை கட்ட வேண்டி இருக்கிறது.. பிறகு இந்த கழிவுநீர் பிரதான சாலைக்கு சென்று சேர்க்கிற இடத்திற்கு கால்வாய் கட்டவும் அதற்கான செலவையும் தெருவாசிகள் தான் ஏற்க வேண்டும் அது ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வரும் என்கிறார்கள். இதுதான் நமக்கு நாமே திட்டம். .சாலை போடுவதற்காக ஒப்பந்தம் இருக்கிற போது கழிவுநீர் பாதை அமைக்க ஏன் ஒப்பந்தம் இல்லை என்பது பற்றிய விளக்கங்கள் யாரும் தருவதில்லை.
எங்கள் பகுதி கட்சிகாரர்களின் அணுகினால் ஆமாம் என்கிறார்கள். ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பவர்கள் கூட்டணி தர்மத்தால் மௌனமாக இருக்கிறார்கள். ஆமாம் ஆமாம் என்கிறார்கள்
நமக்கு நாமே திட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை தருவதற்கு எங்கள் வீதியில் உள்ள 50 வீட்டுக்காரர்கள் தயாராக இல்லை. காரணம் திருப்பூரில் உள்ள இன்றைக்கு மோசமான பனியன் கம்பனி சூழல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் நலிந்து போயிருக்கிறார்கள். அவர்களால் அவ்வளவு பெரிய தொகையைத் தர முடியாது.
75 ஆண்டுகளுக்குப் பிறகும் எங்களால் எங்கள் வீதியில் தார் சாலையை பார்க்க முடிகிற கனவு, பகல் கனவாகவே இருக்கிறது இந்த நமக்கு நாமே திட்டம் எல்லா ஊர்களிலும் இருக்கிறதா என்று தெரியவில்லை, கேட்டால் பக்கத்து வீதிகளில் அப்படித்தான் வாங்கி இருக்கிறோம் நீங்களும் கொடுங்கள் என்று எங்கள் வீதியில் இருப்பவர்களை கேட்கிறார்கள், அதன் படி நான் 40,000 ரூ தரவேண்டும். இது குறைவானது, பிற வீட்டார்களைக் ஒப்பிடும்போது.
இந்த நமக்கு நாமே திட்டம் திருப்பூரில் மட்டும்தான் இருக்கிறதா மற்ற ஊர்களிலும் இப்படித்தான் செயல்படுகிறார்களா? முன்பு தார் சாலைகளும் கழிவுநீர் பாதைகளும் அமைக்கப்பட்ட வீதிகளில் இப்படியெல்லாம் பெரிய வசூல் நடந்ததாக தெரியவில்லை. சாதாரண மக்கள் வசிக்கும் எங்கள் வீதியில் பெரும்பான்மையுடன் பனியன் தொழிலாளர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் இதற்காக செலவு செய்ய முடியுமா. யாரிடத்திலும் பதில் இல்லை அரசு நிர்வாகம் இதுதான் நிலைமை என்கிறது.
இது உண்மையான நிலைமையா என்பது புரியவில்லை விளக்கங்களுக்கும் தெளிவில்லை. யாராவது விளக்குங்கள் தெரிந்தவர் சொல்லலாம்
அன்புடன்
சுப்ரபாரதி மணியன் எழுத்தாளர்
SUBRABHARATHIMANIAN
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003
பிடிமண்: ஜீவிதன் முதல் நாவல் / சுப்ரபாரதிமணியன்
ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்றது. ஜீவிதன் சிறந்த கதை சொல்லியாக திருச்சி மணப்பாறை வட்டாரங்களில் அறியப்படுகிறார ஆனால் அவரின் கதை சொல்லும் அம்சங்களும் திறமையும் இன்னும் வெளியே பலருக்கும் தெரியாமல் இருக்கிறது அவரின் பல்வேறு முயற்சிகளின் மத்தியில் புது நாவலையும் கொண்டு வந்திருக்கிறார் அது அவருடைய முதல் நாவலாக இருக்கிறது. கவிஞராகவும் கட்டுரை ஆசிரியராகவும் நூல் விமர்சகராகவும் விளங்குகிறார் என்பது முக்கியம்.
இந்த செயல்களுக்கு மத்தியில் அவர்களின் முதலாவது நாவலில் அவரின் உள்ள கிடைக்க்ஐகளின் பலமும் நாவல் சார்ந்த வடிவங்களின் சில பலவீனங்களும் அமைந்திருக்கின்றன கிராம சூழலில் ஜாதி ஆதிக்கம் அதிலிருந்து விடுபட முடியாத மக்கள்.. ஜாதிய அடுக்குகள் மக்களை பிரிப்பது மற்றும் அவர்களை கூறுபோடுவதை விரிவாகவே சொல்கிறார். இந்த கூறுபோடும் அம்சத்தில் காதல் சிதைகிறது. தாய்மை கேள்விக்குறியாக்கப்படுகிறது அன்பு என்பதும் தூரப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த அந்நியமாதலை தரும் சாதியும் அது சார்ந்த அம்சங்களும் விரிவாக பல்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக ஜீவிதன் இந்த நாவலில் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் தான் வடிவாம் பாள், போதும் பொன்னு மாயாண்டி சங்கன், காளையன் போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் தென்படுகின்றன.
சொந்த மண்ணில் அவள் கதாநாயகி உயிர் விட முடிவதில்லை ஆனால் உயிர் அல்லாடி கொண்டிருக்கிறது ஊருக்கு வெளியே. அவளுடைய உயிர் எப்படி பிரிந்தது அதற்காக ரத்த சொந்தங்களும் மற்றவர்களும் எப்படி உதவி செய்தார்கள் என்பது தான் நாவலின் ஆரம்ப கட்டமாக இருக்கிறது. இந்த பிடிமன் அவளுக்கு இறப்பதற்கு முன்பே கிடைத்த விடுகிறது. அதே சமயம் அவளின் இயல்பான வாழ்க்கையும் சாதாரண வாழ்க்கையும் எப்படி கிராம மனிதர்களுக்கு முன் இருக்கிறது என்பதை பல சம்பவங்கள் தெரிவிக்கின்றன. சொந்த மண் என்றாலும் அதை அவள் அனுபவிக்க முடியவில்லை. தூரம் போய் வேடிக்கை வாங்க வேண்டி இருக்கிறது. அந்த மனுஷியின் வாழ்க்கையை விரிவாக இடில் உள்ளது. காதல் செய்து பெற்றுக் கொண்ட பிள்ளை, அதை வளர்க்கும் சிரமங்கள் கடைசி காலத்தில் அந்த குழந்தையை நினைப்பில் அவர் உயிர் தள்ளாடுவது என்று பல விஷயங்கள் இந்த நாவல் வந்திருக்கின்றன. பல ஆசைகள் பல எண்ணங்கள் இவை எல்லாம் சாதி சார்ந்த இறுக்கங்களாக இந்த கதாபாத்திரங்கள் தலையில் விழும் அம்சங்களை பிடிமன் நாவலில் கிராமிய சூழல் நன்கு வெளிப்படுமாறு சொல்லுகிறா.ர் மதம் சார்ந்த நம்பிக்கைகள், ஜாதி சார்ந்த உணர்வுகள், கோயில் திருவிழாக்கள் இவற்றில் குறிப்பாக நாட்டுப்புற கலைகளின் வெளிப்பாடுகள் என்று கிராமிய சூழலை ஜீவிதன் நாவலில் கொண்டு வந்து விடுகிறார். நாவல் முழுக்க சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது. வழக்கமாக நாவல்களில் கதாநாயகன் கதாநாயகி இல்லாத அம்சங்கள் அந்த நாவலை இன்னும் வேறுபடுத்தும் .இந்த நாவலில் அவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எதிரான மனிதர்களும் இருக்கிறார்கள் அந்த மனிதர்களின் வாழ்க்கை மூலமாக கிராமிய சாதிய இறுக்கம் எப்படி அவர்கள் வாழ்க்கையை நிர்மூலமாக்குகிறது என்பதை இந்த நாவில் ஜீவிதன் சொல்லுகிறார். முதல் நாவல் முயற்சி என்பதே பெரிய பலமாகும்.
விலை ரூபாய் 290 எடுத்து பிரசுரம் சென்னை வெளியீடு
சுப்ரபாரதிமணியனின் “ சிலுவை “ நாவல் Rs 1200/ NCBH
300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.
சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது.
அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..
“ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது : NCBHRs 1200
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003/
subrabharathi@gmail.com/ fb lkanavusubrbharathimanian tiruppru
மந்திராலயம் சீரடி போன்ற ஊர்களில்
மந்திராலயம் சீரடி போன்ற ஊர்களில் பக்தர்களின் பரவசங்களை பார்த்தபோது ஆச்சரியமாகவே இருந்தது. இந்தியா முழுக்க இப்படி மதம் சார்ந்து இயங்குகிற பலகோடி மனிதர்களை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது அதற்காக அவர்கள் செலவு ஏற்படும் நேரங்களும் செலவும் இன்னும் ஆச்சரியப்படுத்துகிறது பல மணி நேரங்கள் கோயில் தரிசனங்களுக்காக வரிசையில் இருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை பயணத்திற்கும் மற்றும் பூஜைக்காரியங்களுக்கும் செலவு செய்கிறார்கள். இதெல்லாம் அதிகப்படியாகத்தான் எனக்குத் தோன்றியது. ஆனால் அவர்களுக்கு இவை எல்லாம் பரவசம் ஊட்டக்கூடியவை என்பத நான் உணர்ந்தேன்.
0
இலவசப் பிரதிகள்
சீரடியில் தனியிருந்த போது பல இடங்களில் சீரடி சாய்பாபா சம்பந்தமான சிறு சிறு புத்தகங்கள் இலவசப் பிரதிகளாக பல இடங்களில் கிடைப்பதை அறிந்து கண்டேன்.. நான் தங்கி இருந்த விடுதியில் இருந்து காலி செய்துவிட்டு கிளம்பும்போது என்னுடன் இருந்த தமிழ் நண்பர்கள் எல்லோருக்கும் சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாறு சார்ந்த நான் ஒரு 490 பக்க நூலை பரிசாக கொடுத்தார்கள். இலவச பொருளாக்க் கொடுத்தார்கள். அது மட்டுமல்லாமல் அப்போது அங்கு தங்கியிருந்த வேறு மொழிகள் சார்ந்த பக்தர்களுக்கும் அதே போல அந்தந்த மொழிகளில் சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாற்று நூல்கள் தரப்பட்டன அவ்வளவு பெரிய புத்தகத்தை இலவச பிரதிகளாக தரப்பட்டது அதிசயமாகப் பட்டது. நான் கைவசம் இருந்த கனவு 113 வது இதழி சிலருக்கு தரலாம் என்று வைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய புத்தகம் தரும் போது கருப்பு வெள்ளை அட்டையில் ஒரு சாதாரண இலக்கிய பத்திரிகை தருவது அதுவும் இலவசமாக தருவது கூச்சம் என்றாகிவிட்டது. தரவில்லை இப்படி சீரடி சாய்பாபா சார்ந்த அந்த வாழ்க்கை வரலாறு நூல்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பிரதிகள் பக்தர்களுக்காக அங்கே வருகை தருவதற்காக தரப்படுவதை கண்டேன் ஆச்சரியமாக இருந்தது அதற்காக பக்தர்கள் சார்ந்த கூட்டங்கள், அமைப்புகள் மற்றும் முதலாளிகள் பணத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பது சாதாரணமானதுதான். கல்யாண வீடுகளில் இதுபோல் கடவுள்களின் நாமங்களை ஜபிக்க உதவும் மந்திரங்களையும் சிறு குட்டி கதைகளையும் எல்லாம் சேர்த்து புத்தகங்களாக தருவதை பலர் செய்து வருகிறார்கள் முற்போக்காளர்களாக இருந்தால் முற்போக்கு பதிப்பகத்தின் சிறு வெளியீடுகளை மணமக்களுடைய பெயரோடு சேர்த்து அச்சிட்டு கொண்டு வந்து திருமண பரிசாக வழங்குகிறார்கள். இப்போதெல்லாம் இலக்கிய வாதிகள் சார்ந்து முதலாளிகள் கார்ப்பரேட்டுகள் எல்லாம் இயங்குகிறார்கள் என்பதால் அவர்களின் நூல்களை இலவசமாக தருவது என்பது நடந்து வருகிறது. தங்களின் கொள்கைகள், இலக்கிய நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்களை சிறு சிறு நூல்களாகவும் பெரிய நூல்களாகவும் இலவசமாக வெளியிடுகிறார்கள் எழுத்தாளர்களின் நூற்றாண்டுகளாக முன்வைத்து அதுபோல பல நூல்கள் வெளியிடப்படுகின்றன என்பதையும் அறிய முடிகிறது ஆனால் என் அனுபவத்தில் 37 ஆண்டுகளாக கனவு இலகிய இதழைக் கொண்டு வருவதில் உள்ள சிரமங்களும் பொருளாதார கஷ்டங்களும் சொல்லி மாளாது.. அதற்கெல்லாம் தனிப்பட்ட சேமிப்பிலிருந்து தான் செலவு பண்ண வேண்டி இருக்கிறது இப்படி இலவச நூல்களை வழங்கும் அமைப்புகளோ எழுத்தாளர் களோ அவர்கள் சார்ந்த கொள்கைக்கு ஏற்புடையதாக செயல்படுகிறார்கள். அது அவர்களின் விருப்பம் சார்ந்த விஷயம் தான் இப்படி நல்ல எழுத்தாளர்கள் நூல்களை கொண்டு வருவதற்காக உதவி செய்வது முடிந்தால், இலவசப் பிரதிகளை கொண்டு வைப்பது போன்றவற்றில் அக்கறை கொண்டவர்களை தேடுவது தீவிரமான இலக்கிய அக்கறை கொண்ட எழுத்தாளர்களுக்கு தங்கப் புதையல் வேட்டை தான் அதெல்லாம் எல்லோருக்கும் அமையாது
பொதுமக்களுக்கு வழங்கப்படுகிற இலவச பொருட்கள் மற்றும் மானியங்கள் மூலமாக மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதற்கான பல ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன தங்களை சோம்பேறி மனதளவில் அவர்களைள் இழுத்துக் கொள்கிறார்கள் இலவசத்தை நிராகரிக்கிற போக்கு வருவதில்லை இதனால் அரசன் இலவச பொருட்கள் காரணமாக பல குடும்பங்களில் ஆண்கள் வேலைக்கு போகாமல் அந்த இலவச பொருட்களை நம்பி வாழ்கிறார்கள் அல்லது வேலைக்கு போய் சம்பாதிக்கிற காசை குடித்துவிட்டு தங்களை இலவசமான உரிமை மனிதர்களாக காட்டிக் கொள்கிறார்கள். இலவசம் என்பது உரிமை அல்ல என்றாக வேண்டும். அந்த சலுகை பெறுவதற்கு கொஞ்சம் அவமானங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைத் தாண்டி இலவசங்களை பெறுவது என்பது மனிதனின் சுயமரியாதைக்கு கேள்வியாக விஷயம் என்பதை இன்றைக்கு குடிமக்கள் கவனிக்க தவறி இருக்கிறார்கள். இலவசங்கள் வாழட்டும் ஆனால் இலவசங்களைப் பெறும் மனநிலை ஒழியட்டும்
0
எல்லோரா குகைகள் சிதைவுக்கு காரணம் அவர் முஸ்லிம் படையெடுப்புகள் என்று சக பயணிகள் சிலர் அந்த எல்லோரா குகை ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது பொதுவாக சொல்லிக் கொண்டே இருந்தார்கள் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை ஆனால் இந்து அரசர்கள் மத்தியிலான போட்டி பொறாமை தான் அவர்களை போர் மற்றும் சிதைவுகளை எப்படி நினைவுக்கு கொண்டு சென்றது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது
0
சீரடியில் நான் தங்கி இருந்த பிம்பிலி பகுதியில் சிவனேசன் என்ற தமிழர் சாய்பாபா பக்தர் சமாதியான இடம் ஆசிரமமாக உள்ளதாக கோபியைச் சார்ந்த தமிழ் பேராசிரியர் மரகதமணி சொன்னார் அவரைப் பற்றி சில ஆங்கில நூல்கள் வந்துள்ளதாம் சீரடியில் எனக்கு தரப்பட்ட இலவசப் பிரதியான 490 பக்க நூலில் சாய்பாபா சீடர்கள், பக்தர்கள் பலர் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் உள்ளன. ஆனால் சிவனேசன் பற்றி எந்த குறிப்புகளும் இல்லை அவர் தமிழர் என்பதால் புறக்கணிக்கப்பட்டாரா என்ற கேள்வி மனதில் வந்தது
எல்லோராவில் சிதைந்த வடிவங்களில் சிலைகளைப் பார்க்கையில் கண்ணீர் வருவது இயற்கை நல்ல வேளை பக்கத்தில் இருக்கும் அஜந்தா கோயில்கள் யார் கண்ணுக்கும் படவில்லை என்று தங்கள் ஜனனேசன் கூட சொன்னார்
மஞ்சவாடி நாவல்; கனல் மைந்தன்
சுப்ரபாரதிமணியன்
சூழலியல் எண்ணங்களையும் சூழலியல் கருத்துக்களுக்கான பரப்பையும் கொண்ட நாவல் மஞ்சவாடி. இது சேர்வராயன் மலைப்பகுதி அருகில் உள்ள ஒரு இடம் இந்த கிராமத்தை மையமாக வைத்து எழுதி இருக்கும் கனல் மைந்தன் அவர்கள் சிறுவர்களின் பள்ளி கால அனுபவங்கள் முதல் உயர் கல்வி சார்ந்த உலகம் வரை இந்த நாவலில் பிரத்தியேகமாகத் தந்திருக்கிறார் அந்த காலகட்டங்களில் சாதி ரீதியான கொடுமைகள் பல்வேறு நிலைகளில் எப்படி செயல்படுகிறது என்பதை சொல்கிறார். திணை போன்றவற்றை பண்ட மாற்றம் செய்து வாழ்கிற மக்களை எளிமையான வாழ்க்கை, மான்கள் போன்றவை கூட பிரமிப்பினைத் தரும் அனுபவங்கள் சுற்றுச்சூழல் விஷயங்களில் எப்படி இயற்கை உயிர் சங்கிலி செயல்படுகிறது என்ற எண்ணங்கள், ஒற்றை விளக்காய் அந்த கிராமத்திற்கு வந்து சேரும் மின்சாரம் இவற்றில் ஆரம்பித்து பல்வேறு வகையான சுற்றுச்சூழல் சார்ந்த அனுபவங்களையும் எண்ணங்களையும் இந்த நாவல் சொல்கிறது. புலிகள் காப்பகம் வருகிறது காலி செய் என்று அந்த கிராம மக்களைத் துரத்துகிறார்கள் என்பது பற்றி வாதங்கள் இங்கே இருக்கின்றன இந்த சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை எல்லாம் மீறிக்கொண்டு அரசியல் சார்ந்த கருத்துக்களையும் நிறைய கூறுகிறார் .ஏழைகளின் ஏற்காடான மஞ்சவாடியில் சாதி ரீதியாக நடைபெறும் சிக்கல்களும் கொடுமைகளும் விளக்கப்படுகின்றன படிப்பு மட்டுமே சோறு போடும் என்று திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. அப்படி படித்து வருகிறவன் வேலை வாய்ப்புகளுக்காக போகிறபோது சாதிக்கேற்ற சம்பளம் என்ற விகிதம் பார்த்து அதிர்ந்து போகிறான். அவனின் அப்பா கொல்லப்படுகிறார். அம்மா குழந்தைகளை கஷ்டப்பட்டு வளக்கிறார் ஆனால் கிராமத்தில் இருக்கிற காரணத்திற்காக அவள் தலைக்கட்டு வரி தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறாள். பூ மிதி போன்ற திருவிழாக்களில் மக்களுடைய ஈடுபாடும் கிராமிய தொன்மங்களும் இந்த நாவலில் சில காணக்கிடக்கின்றன. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறார்களே ஆரியத்தால் பெற்ற நன்மைகள் என்ன இருக்கிறது என்று கதாபாத்திரங்கள் கருத்துக்கள் கூறுகிறார்கள வாழ்வுரிமை பொதுவாக இருக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் கெடுக்கப்படுகின்றன என்பதை பல சம்பவங்கள் மூலம் வழக்குகின்றன. பள்ளி காலத்தில் மாணவர்களும் அவர்களின் சார்ந்த சாதி சார்ந்த மக்களும் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பது விரிவாக சொல்லப்படுகிறது பள்ளியில் ஆசிரியர்களுடைய டிபன் பாக்சைக் கூட கழுவ வேண்டும் என்பது முதற்கொண்டு கீழ் சாதி மக்கள் குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது சாதிக்கொரு சம்பளம் என்று அது கடைசியில் கழுத்தை நெரிக்கிறது. ஓசியில் தொலைக்காட்சி பார்க்க போனதற்காக அடிபட்டுக் கொள்கிற குழந்தைகள் தான் அறியாமை, கல்வியின்மை இவற்றிற்கெல்லாம் காரணமாக இருப்பதை அறிந்து கொண்டு தங்கள் கைகளை உயர்த்துகிறார்கள் கல்யாணம் சுயசாதி போன்றவற்றில் இருக்கும் முரண்பாடுகள் மற்றும் மாடு சினை ஏற்றப்படும் போது வேறு இன மாடு கூட பயன்படுகிறது ஆனால் திருமணம் என்று வருகிற போதும் காதல் என்று வருகிற போதும் சாதிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை பற்றி புது விளக்கங்களை வாழ்வியல் அனுபவங்களோடு கொடுத்திருக்கிறார். மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் மத்தியில் சாதி எப்படி செயல்படுகிறது நீ என்னை அம்மணமாக்கி பார்க்க ஆசைப்படுகிறாய்.. என்னை நிர்வாணமாக பார்த்துக் கொள் என்று அதிர்ச்சி தரும் விஷயங்களோடு இந்த நாவல் முடிகிறது. என் சாதி என்னவென்று சோதிக்ற்காக என்னை நிர்வாணப்படுத்துகிறாய் நான் முழு நிர்வாணமாக இருந்து வாழ்ந்து காண்பிக்கிறேன் என்று எழும்பும் குரல்களை இந்த நாவல் கொண்டிருக்கிறது.
கனல் மைந்தன் என்ற பெயரில் கோவையில் இருந்த பேராசிரியர் தோழர் தன் பெயரை அக்னிபுத்தரன் என்பதிலிருந்து கனல் மைந்தன் என்பதை மாற்றிக் கொண்டார். அதேபோல பழனியில் அக்னிபுத்திரன் என்ற பேராசிரியர் இருந்து மறைந்தார் இந்த கனல் மைந்தன் தன் படைப்புகளில் எரியும் கனலைக் கொண்டிருக்கிறார்
0 .( ரூபாய் 300 நீர்க்கோத்தி பதிப்பகம் திருச்சி )
0
சுப்ர பாரதி மணியின் ஹைதராபாத் அனுபவங்கள் சார்ந்த கட்டுரைகள் ஆங்கிலத்தில் “ Oh Hyderabad “ என்ற தலைப்பில் புஷ்தகா பெங்களூர் புத்தக நிறுவனம் நூலாக வெளியிட்டிருக்கிறது. அதன் வெளியீட்டு விழா மக்கள் மாமன்றத்தில ஞாயிறு காலை நடைபெற்றது. விழாவில் சாம கோடாங்கி, ரவி ரகுநாதன், வின்சென்ட் ராஜ், மாரிமுத்து ஆலம் முத்து பாரதி உட்பட கலந்து கொண்டார்கள்
Oh Hyderabad in tamil
” ஓ.. செகந்திராபாத் : சுப்ரபாரதிமணியன் நூல்
--------------------------------------------------------------------------------------
தனக்கேயான முகம் பெருங்குன்றூர் கிழார், ஹைதராபாத்
மனிதன்பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உன்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள் காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது.புறா,கொக்கு,நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும்.சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர்.திருப்பூரில் பிறந்து குன்னூர் , ஹைதராபாத் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம்.எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை.
சுப்ரபாரதிமணியனின் தொலைநோக்குப்பார்வை இந்த நூலில் தெளிவாய்த் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைப் பயணத்தில் உடன் நடக்கும் மனிதர்களோடு தனக்கேயான உறவை அளவிட்டு வைத்துக் கொள்வார்கள்.தனக்கும் தன் நண்பர்களுக்குமான உறவைத் தன் தனித்தன்மையான எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பதில் அவர் வெற்றியடைந்திருக்கிறார் என்பது இந்நூலை படிக்கும்போது தெறிகிறது.அவர்களை நினைவு கூர்ந்து கொள்கிறார்,
ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது..சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது கிடைத்த அனுபவங்களைத் தந்திருக்கிறார்.
அனைவருக்கும் அனுபவம் இருக்கிறது. ,தன் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவரும் திறமை சுப்ரபாரதிமணியனுக்கு இருக்கிறது என்பதற்கு இந்நூல் உதாரணம். தன் எண்ணங்களை இவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்தும் ராசி சிமெண்ட் அமிர்தனோ,ராமாநாயுடுஸ்டுடியோ மணியோ,நா.கதிர்வேலனோ,அவர்களின் குணங்களை பட்டியலிட்டிருக்கிறார் நாளை அவர்களை நேரில் சந்திக்கும் போதும்எதிர்கொள்ளும் துணிவு இவர் எழுத்தில் திடமாய்த் தெரிகிறது.அதி லேசாக எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று படுகிறது.
"ரங்கண்ணாவை எங்கே ஆளையேகாணோம் என்று கேட்டுவிட்டால்போதும் எப்போதும் ஒரெ பதிலாக இருக்கும் மோண்டா மார்க்கெட்டில் எருமையோட ஒன்னா இருப்பேன் மார்க்கெட் எருமையில் ஒன்னு கொறஞ்ச"போச்சுன்னா ரங்கண்ணா இல்லேன்னு அர்த்தம்"
இந்த ஒரு பத்தியில் அவர் எழுத்தின் ஆளுமை தெரிிகிறது. மோண்டா மார்கெட் என்பது செகந்திராபாத்தின் ஒரு காய்கறி மார்கெட்.முக்கிய இடம்.
செகதராபாத் கீஸ்ஹைஸ்கூலில் புத்தக கண்காட்சி நடத்தியதிலிருந்து,கனவு இதழ் வெளிவரக்காரணமாக இருந்த எல்லோரையும் நினைவு கூறும் அவர் மூளைத்திறன் வியக்க வைக்கிறது. கனவு இன்னும் முப்பது ஆண்டுகளாயும் வெளிவந்து கொண்டிருப்பது நல்ல விசயம்.
சிலக்கூர் பாலாஜி பாஸ்போர்ட் கடவுள் என்று ஒரு நிகழ்வை எழுதி இருக்கிறார் இதேஅனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது. இதை படிக்கும் போது இருவருக்கும் ஒரே நிகழ்வு எப்படி என்ற கேள்வி எழுந்தது . பல நிகழ்வுகள், பல நினைவுகள் ஒரே மாதிரித் தெரியும் போது ஆச்சர்யமாக உள்ளது.
என் டி ஆர் மூன்று் முழுக்கோழி அதிகாலையில் தின்பார் என்பது வியப்பான தகவல்
எனக்கும் சுப்ரபாரதிமணியனுக்கும் உள்ள நட்பின் இருக்கும்
பலப்பல ஆண்டுகள் கடந்தது.எத்தனையோ ஞாயிறு பகல் பொழுதுகளில் அவர் குடும்பத்தாருடன் கழித்தற்கு மிக்க நன்றி. இத்தொகுப்பு அந்த நினைவுகளையெல்லாம் வெகுவாகத் தூண்டி விட்டது. ஓ..செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள் என்பது சரியான தலைப்பே ஆகும்.
செகந்திராபாத் அசோகமித்திரனின் சொந்த ஊர் என்பதால் அவர் செகந்திராபாத்தை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநாவல்கள் ( 18வது அட்சக்கோடு உட்பட ) எழுதியிருகிறார். சுப்ரபாரதிமணீயனும் செகந்திராபாத்தை வைத்து சுமார் அய்ம்பது சிறுகதைகள், இருநாவல்கள் ( மற்றும் சிலர் , சுடுமணல் ) எழுதியிருகிறார்.
இருவரும் ஒரே அலை வரிசைக்காரர்கள். அசோகமித்திரன் மரணமடைந்து விட்ட தற்போதையச் சூழலில் இந்நூலில் சுப்ரபாரதிமணியனின் செகந்திராபாத் அனுபவங்கள் இலக்கிய மதிப்பீட்டில் உயர்ந்து நிற்கிறது.
(ஓ..செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள் ரூ 100 : என்சிபிஎச், சென்னை )
0
Oh Hyderabad
The Unique Face
Writer Subrabharathi Manian had resided in Secunderabad, one of the
twin cities, for eight years. He was employed in the telecom office in Hyderabad. This
book speaks about his experiences during his stay In Secunderabad.
Man is a talking animal, it is said. Going from one place to another, yet to
another and so on is called migration in English. Crows don’t go far away from their
nests. On the other hand, doves, cranes and storks go away for kilometres and then
return. Subrabharathi Manian is a migratory bird. He was born in Tirupur and from
there he had gone to Conoor, Hyderabad, Pollachi, Udumalpet and to other places.
Each man has his own unique face. Still, everyone has many faces behind the one
face that is seen by others.
Subrabharathi Manian’s foresight is clearly visible in this book. Everyman has a
limited relationship with others who are his fellow travellers in his life. Subrabharathi
Manian has succeeded in bringing out lively the uniqueness of his relationship with
others. This could be felt as one reads his book.
Oh Secunderabad! Is a collection of 24 essays. These provide a live
commentary on his experiences during his stay in Secunderabad.
Everyone has his own unique experiences. But Subrabharathi Mania has the
skill to sketch them out in writing. This book is a good example. He knows that
Amirthan of Rasi Cements, Mani of Rama Naidu Studio and Na. Kathirvelan would
read his views about them. He has the rare courage to meet them in person even
after describing their character including their shortcomings. It seems that he has
taken things in a lighter vein.
When someone raises the question, “Where has Ranganna gone? He could not
be seen for days!”, the reply is always, “I am amidst the buffaloes in the Monda
market. If it is found that one of the Monda market buffaloes is missing, then it
means that Ranganna is not there!”
This paragraph alone bears testimony to Subrabharathi Manian’s skill in
sketching out characters. Monda market is a popular and important vegetable market
in Secunderabad.
The power of his memory, recalling every incident and every person, from
conducting book exhibitions to running the literary magazine, Kanavu is astonishing.
Even after thirty years, Kanavu is still alive!
He talks about Chilkur Balaji temple, the visa Balaji temple! I also have a similar
experience. When I read about Subrabharathi Manian’s experience I just wondered
how the same type of experience could have happened to both of us!
It’s a surprising piece of information that N.T.R. would eat three full chickens in
the early morning!
The dense longevity of my friendship with Subrabharathi Manian has crossed many
years!
3
I still recall the pleasant Sundays I’d spent with his family. I’m very much grateful to
him for those pleasant times. This collection has strongly stimulated those memories!
The title Oh! Secunderabad (Reminiscences) is apt!
As writer Ashokamitran belonged to Secunderabad, he has written hundreds of
short stories, two novels including The Eighteenth Parallel focussing on its life.
Subrabharathi Manian has also written more than fifty short stories and two novels
(Matrum Silar and Sudumanal) making it their central stage. Both of them vibrate in
the same frequency. As Ashokamitran is now dead, Subrabharathi Manian’s
Reminiscences about Secunderabad commands a unique literary respect!
- Perungkunroor, Hyderabad
Oh Hyderabad....Prof S. Vincent
My memories of Secunderabad go back to the early eighties where I had stayed for a fortnight twice.
When time permitted between my academic works in libraries we visited historical monuments like
Charminar and Golconda Fort and Salar Jung museum. Otherwise I was confined to the libraries of
Central Institute of English and Foreign Languages (now EFLU) and The American Study and Research
Centre. The vast campuses of CIEFL and the Osmania University which lay on our way to ASRC were
very impressive. I also recall our visit to a house in a ‘dusty’ street in the thickly populated Old
Hyderabad where we were treated to Hyderabadi biriyani.
But none of these do you find mentioned in Oh, Secunderabad of Subrabharatimanian. It revolves
round parks where literary meetings were held; it portrays the squalor and poverty the common
man endures; it delineates characters the author encountered in minute details. The pen pictures of
these men and women stir up varied reactions in you when they are accompanied by a brief sketch
of their background. There are prominently literary giants like Na. Pa. and Asokamitran casually
mentioned as if they were part of the author’s daily life.
Do you get any picture of the author? Yes, of course. His passion for the mission of taking
contemporary literature to the few Tamil readers present in the twin cities, his persistent efforts to
conduct book festi0vals against all odds and the emotional reactions arising out of domestic quarrels
are expressed in a lively, sometimes touching, manner.
One wonders how the author had remained in that dusty place for so long. The word ‘dusty’ occurs
often in the narratives but used with a sense of humour. The Fever Hospital area where his office
was situated, the place where he resided, the parks where his meetings were held are vividly
portrayed. His adventurous attempts to enter the vineyard of an important political leader from
Tamil Nadu (you know who) are hilariously narrated.
The pen pictures of his friends like Velayutham, the Fan Club companions and the pavement book
seller, Prakash of Osmania General Hospital are unforgettable.
Oh, Secunderabad invites you to a feast of a variety of narratives and you can never miss the
personality of Subrabaratimanian unobtrusively peeping over your shoulders.
S. Vincent
ஜனவரி வெளியீட்டில் என் இரு நூல்கள்
பூமிக்குத் தீ வைத்தோம்
இனியும் தாமதப்படுத்த முடியாது என்கிற ரீதியில் தான் கால நிலைமாற்ற சூழல் இன்றைக்கு மனித குலத்தை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையை சமீப நிகழ்வுகள் மூலமாக சுப்ரபாரதிமணியன் இந்த தொகுப்பில் நினைவூட்டுகிறார். இதுவரை சுற்றுச்சூழல் சார்ந்து 15 நூல்கள் வெளியிட்டிருக்கும் அவரின் புதிய நூல். இது சுற்றுச்சூழல் சார்ந்து அவருடைய செயல்பாட்டில் இன்னொரு அங்கம் இந்த சுற்றுச்சூழல் கட்டுரைகள்
பெயர்கள் இல்லாத வீடு
திரைப்படங்களும் அவை சார்ந்த அம்சங்களும் தமிழர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் மாற்று திரைப்படங்களையும் தீவிரமான திரைப்படங்களையும் அவர்கள் பார்வை படாமல் கொஞ்சம் ஒதுங்கி இருக்கிற சூழல் இருக்கிறது.. அந்த வகையான படங்களை பற்றி இந்த நூல் பேசுகிறது தொடர்ந்து திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் சுப்ரபாரதி மணியன் இந்த நூலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கலந்து கொண்ட திரைப்பட விழாக்கள் பற்றிய அனுபவங்களையும் திரைப்பட ரசனையையும் இந்த நூலில் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார். முன்னம் 7 திரைப்பட நூல்களும் வெளிவந்திருக்கின்றன.. கதைகளை திரைக்கதையாக்கும் முயற்சியில் ஆறு திரைக்கதை நூல்கள் வெளிவந்து சுமார் 55 திரைக்கதைகள் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன
இங்கிலாந்தில் பசுமைக் கட்சிகள்
என்பது பற்றி இங்கிலாந்து சேர்ந்த பேராசிரியரை டேவிட் இவன் அவர்களை நேற்று சந்தித்தபோது கேட்டேன். 30 ஆண்டுகளுக்கு முன்னால் நான் லண்டன் சென்றபோது பசுமைக் கட்சி சார்ந்த சிலரை சந்தித்தேன் அவர்கள் இந்தியாவைப் போல எங்களுடைய இயக்க வேலைகள் சாதாரண அடிப்படை சுகாதாரம் போன்றவை கணக்கில் இல்லை அணுசக்தி கழிவுகள் முதல் சூரிய கோள் சார்ந்த பல விஷயங்கள் எங்கள் கவனத்தில் இருப்பது என்று சொன்னார்கள் நேற்று சந்தித்த இங்கிலாந்து பேராசிரியரிடம் பசுமைக் கட்சிகள் பற்றி கேட்டேன். இப்போதும் அவை ஒரு சதவீதம் வாக்குகள் பெற்று சில இடங்களை பாராளுமன்றத்தில் பிடிக்கிறார்கள் அவர்களுடைய செயல்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் போது வாக்களிக்கிறார்கள். இப்போது எல்லாம் அணுசக்தி சார்ந்த அவர்களின் நோக்கங்களும் விவாதங்களும் இல்லை. திசை மாறிவிட்டன ஏனென்றால் எங்களைப் போன்ற நாடுகளில் முக்கியமான பல விஷயங்கள் அணுசக்தி சார்ந்த செயல்பாடுகளாக இருக்கின்றன என்று சொன்னார்
திருப்பூர் ஒரத்துப்பாளையம் அணை விவசாய பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது. ஆனால் பின்னால் சாயக்கழிவுகள் தேய்க்கும் இடமாக மாறி இருந்தது பல ஆண்டுகள் சர்ச்சைக்குரிய இடமாக அந்த அனை இருந்து வருகிறது . சமீப ஆண்டுகளில் அந்த பக்கம் செல்லவில்லை இங்கிலாந்தில் இருந்து வந்த பேராசிரியர் குழுக்களும் கோவை பேராசிரியர் முத்துக்குமார் தலைமையிலான மாணவர்களும் சமீபத்தில் நேற்று அங்கு சென்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டபோது இப்போது சாயக்கழிவுகள் குறைந்துவிட்டன. நீரில் அடித்துக் கொண்டு போகப்பட்டு விட்டன. அந்தப் பகுதியில் விவசாயம் நடக்கிறது ஆனால் உப்பினுடைய தன்மை ஒவ்வொரு பகுதிக்கும் மாறிக்கொண்டே இருக்கிறது. உப்பின் தன்மை வெகுவாக குறைய வேண்டும். இன்னும் விவசாயம அதிகம் நடைபெற வேண்டும். நாங்கள் ஒரு தோட்டத்தில் இளநீர் குடித்தோம் அந்த வகையில் திருப்தியாக இருக்கிறது என்றார்கள். நேரில் சென்று பார்க்க வேண்டும்
அசோகமித்திரன் / கோவை ஞானி ....
சமீபத்தில் ரெண்டு சிறு வெளியீடுகள் படித்தேன சிறப்பான வெளியீடுகள். நீண்ட கட்டுரைகளை கொண்ட வெளியீடுகள் ஆனால் அவற்றுக்குள் அந்த படைப்பாளி பற்றிய முழு பார்வையும் கொண்டு வர முடிந்தது. இதே போல முன்பு அறிஞர் அண்ணா உடைய படைப்புகள் பற்றிய சிறு வெளியீடுகள் படித்தேன்.. இந்த இரண்டு அறிஞர்கள் பற்றிய இந்த நூல்களில் முழுமையான பார்வை இருந்தது
0
அசோகமித்திரன்/ கோவை ஞானி - வெளியீடுகள்
அவர்களின் எழுத்தில் எனக்கு எப்போதும் ஈடுபாடு இருந்தது. காரணம் அவர் 20 வயது வரை வாழ்ந்த செகந்தராபாத் நகரத்தில் நானும் 8 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன் நான் வாழ்ந்த சமயங்களில் பலமுறை அசோகமித்ரன் அவர்கள் செகந்தராபாத் வந்திருக்கிறார் அங்கு அவருடன் பல இடங்களுக்கு சென்று இருக்கிறேன். அவருடைய பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவர் இறுதி காலம் வரைக்கும் ஹைதராபாத் சார்ந்த கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார் என்பது தான் மிக முக்கியமாக எனக்குப் பட்டது.
கனவில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் அசோகமித்ரன் சிறப்பிதழ் வெளியிட்டு இருக்கிறேன். அதில் டிரஸ்க்கி மருதுவினுடைய அட்டைப்படம். உள்ளே ஜெயமோகன், திலிப் குமார், அரவிந்தன் ஜெகதீஷ் உட்பட பலரின் கட்டுரைகள் மற்றும் அசோகமித்திரன் அவர்களுடைய பிரசுரமாகாத சில படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.
பின்னால் அவருக்கு 77 ஆம் வயது நிறைவேற்றபோது இன்னும் சில கட்டுரைகளை சேர்த்து அசோகமித்திரன் 77 என்று அந்த புத்தகத்தை கொண்டு வந்தேன். அதை திலகவதி அவர்களின் அமிருதா பதிப்பகம் வெளியிட்டிருந்தது இப்போது கூட அதை மறுபடியும் கொண்டு வர வேண்டும் என்று இரண்டு பதிப்பகங்ளுக்கு அனுப்பிபேன். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. அசோகத்தினுடைய படைப்புகள் சார்ந்து ஒரு தீவிரமான அக்கறை கடந்த 20 ஆண்டுகளில் உருவாகி இருப்பது மகிழ்ச்சி தருகிறது
-
அசோகமித்திரன் படைப்புகளில் வாழ்வியல் எதார்த்தங்களை குறிப்பாக அவலங்களை இன்னும் குறிப்பாக பாச உணர்வுகளின் புறக்கணிப்பு சார் இன்னல்களை விவரித்துச் செல்ல காட்சிப்படுத்த வகைப்பாடு அமைந்த கதை சொல் முறையை பொருத்தமாக அமைந்துள்ளது கதை மாந்தரோடு நெருங்கி நின்று கதை நிகழ்வுகளை உயிர் உடன் விவரிப்பதுடன் தீர்வு காண முடியாத நிலையில் தீர்வு இன்றி கதையை முடிக்கவும் இதை இந்த கதை சொல் முறை பெரிதும் அசோகமித்திரன் அவர்களுக்கு கை கொடுத்திருக்கிறது என்கிறார்
0
கோவை ஞானி ஐயா அவர்கள் கோவை மாவட்டம் என்ற சோமனூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். அந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள செகடந்தாளி என்ற கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் அவரோடு பாசத்துடன் பழகி இருக்கிறேன். அவருடைய பல கட்டுரைகள் கனவு இதழில் வெளிவந்திருக்கின்றன.. அவர் பக்கத்தில் கோவையில் அவர் இருந்த காரணத்தினால் அவருடன் பேசி விவாதம் செய்து பல விஷயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஆளுமைகள் என்ற என்னுடைய நூலில் கூட எனக்கு பிடித்த சில ஆளுமைகளை பற்றி சொல்கிறபோது கோவை ஞானி அவர்களை அந்த நூலில் முதலில் சொல்லி இருக்கிறேன் அந்த நூலில் முதல் கட்டுரையாக அவரைப் பற்றிதான் இடம்பெற்றிருக்கிறது .ஞானி அவருடைய விமர்சனப்பார்வை பற்றிய பல விஷயங்கள் இந்த சிறு நூலில் இடம் பெற்று இருக்கின்றன.
-
ஞானி அவருடைய படைப்புகளை பற்றிய சரியான அணுகுமுறை இந்த நூலில் காணப்பட்டது அந்நியமாக்கப்பட்ட மனிதருக்கு கடவுள் தேவைப்படுகிறார். அந்நியமாதல்தான் தான் கடவுளை படைக்கிறது என்ற ஞானியின் விளக்கங்களில் கடவுள் என்று சொல் தன் பழம் பெறும் படிவத்தை இழந்து புது படிவத்தை கட்டமைத்துக் கொள்வதைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. சமூகம் கட்டமைக்கும் அறம் பெரும்பாலும் ஆதிக்க சக்திகளை அதிகார மையங்களை தாங்கி பிடிப்பதாக உள்ளது என்ற ஞானி உடன்பாடு உடையவர் தான் ஆனால் ஆதிக்கத்தை ஏற்காமல் காலம்தோறும் எழுப்பப்படும் வகையில் வரும் கழக குரலில் அறம் இல்லையா என்று அவர் எழுப்பு வினாவும் நாம் ஏன் அந்த அறத்தில் அக்கறை காட்டவில்லை என்று சுட்டிக்காட்டு குற்றச்சாட்டும் ஏனைய ஒரு இடமிருந்து ஞானியை பிறரிடமிருந்து பிரித்துக் காட்டுகின்றன இந்த பின்புலத்தில் ஞானியின் படைப்புகளில் இடம்பெற வேண்டும் என சுட்டும் அறம் எத்தகையது என்பதை தெளிவாகிக் கொள்ளலாம் என்கிறார். மேலும் திராவிடனாக இருப்பதாயே அவன் தொழிலாளியாக இருக்கிறான். பார்ப்பனராய் இருப்பதா இல்லையே அவன் முதலாளியாக இருக்கிறான் என்கிறார் அதாவது முதலாளி தொழிலாளி சாதிய வேறுபாட்டில் இருந்து இனம் கண்டு விளக்குகிறார் பெரியார். பெரியார் கருத்துக்களை மேற்கோளாக காட்டும் ஞானி அவற்றை சரியான விமர்சனத்திற்கும் உள்ளாக்குகிறார் என்று அறவேந்தன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
இரு நூல்களின் சுருக்கம் காரமானது. தீவிரமானது/ என் டி பி எச் வெளியீடுகள் / இரண்டும் ரூ35 தனித்தனியே
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன்
25வது மதுரை ஆவணப்பட, குறும்பட விழா என்னும் சாதனைச் சிகரம்
ஆவணப்பட இயக்குனர் அமுதன் அவர்களின் தொடர்ந்த முயற்சியின் சாதனையாய் 2023ல் நடைபெற்ற 25வது மதுரை ஆவணப்பட, குறும்பட விழா அமைந்திருந்தது.
உலகம் முழுக்க இருந்து நூற்றுக்கணக்கான ஆவணப்பட குறும்படங்களின் திரையிடலும் சிறந்த படைப்புளுக்கான ஒரு லட்சம் ரூபாய் பரிசளிப்பும் என்று நிறைவுபெற்றது.
வழக்கமாய் ஐந்து நாட்கள் மதுரை ஆவணப்பட, குறும்பட விழா நடைபெறும் . இம்முறை வெள்ளிவிழா என்பதால் அது பத்து நாள் விழாவாக சுமார் பத்து மையங்களில் படங்களின் திரையிடல், கருத்தரங்குகள் , கல்ந்துரையாடல் என்ற வகையில் அமைந்த்திருந்தது.
அமரர் மதுரை யதார்த்தா ராஜன் பரிசு 25,000 ரூபாய் உடன் பெற்ற படம் சென்னையைச் சார்ந்த இளம் இளைஞர் பகவத் இயக்கிய “ தொலைந்த போன ஆட்டு மந்தை ”.
இன்னொரு பரிசுபெற்ற படம் : தி ரோடு .
ஆடுகள் மேய்க்கும் வயதான தகப்பன். குடிகாரன். கல்யாணமாகாத இளம் பெண் பெண்ணின் திருமணத்திற்கு அந்த ஆடுகளை விற்கும் திட்டமும் அவனுக்கு இருக்கிறது. ஆனால் அந்த பெண் அதை எதிர்க்கிறாள். ஒரு நாள் மாலையில் அந்த ஆடுகளை திரும்ப வீட்டுக்கு அழைத்து வர போக ஆட்டு மந்தை காணாமல் போய்விட்டது பற்றி கலக்கம் கொள்கிறான் குடிவெறியில் ஒருவர் மேல் சந்தேகம் வர அவனை சட்டையை பிடித்து உலுக்கி விடுகிறான். இந்த திருட்டுப் பழக்கத்தை உன் அப்பனிடமிருந்து பெற்றுக் கொண்டாயா என்று கேட்கிறான். அது அவனுக்கு எரிச்சலை கிளப்ப அவன் பின்னால் வீட்டிற்கு வந்து அவனை சுட்டுக் கொன்று விடுகிறான். அந்த ஆடுகள் காணாமல் போனது திருட்டு காரணமாக என்று அவன் நினைத்து அதை செய்கிறான். ஆனால் இந்த ஆடுகள் எங்காவது ஒளிந்திருக்கும் நாளை காலையில் கூட வரலாம் என்று சொல்கிறாள் மகள். அப்பனின் குடிகார குணம், கோபம் சட்டையை உலுக்க வைக்கிறது. அதே சமயத்தில் அவனை தட்டிக் கேட்டதற்காக கோபம் கொண்டவன் சுட்டு விடுவது என்பது கொடூரமாக இருக்கிறது.
தி ரோடு என்ற படத்திற்கு இன்னொரு பரிசு கிடைத்தது. இந்த படம் நான்காண்டுகளுக்கு முன்னால் உத்தரகாண்ட் பகுதியில் சாலை போடப்பட்டது பற்றிய விமர்சனமாக இருக்கிறது போடப்பட்ட சாலையை திறக்கிறார்கள். பூஜையின் போது தேங்காயை போடப்பட்ட சாலையில் அடித்து உடைக்க சாலை சரியாக இல்லாமல் ஜல்லியும் மணலும் சிமெண்டும் சிதறுகின்றன. இதை பார்க்கிற மக்கள் அலுத்து போகிறார்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள் ஆனால், இதெல்லாம் அந்த வேலை செய்த ஒப்பந்ததாரருக்கு சாதாரணமாக இருக்கிறது. ஒரு சாதாரண சாணி மிதிப்பு அந்த ஒப்பந்தக்காரருக்கு சடங்கு சார்ந்த அபசகுணமாக இருக்கிறது. புனித நீரை தேடி அதை சரி செய்து கொள்கிறார். இந்த சாலையும் அதை ஒட்டிய பள்ளிக்கூடமும் இந்த படத்தில் பிரதானமாக இருக்கின்றன. அந்தப் பள்ளியின் மூன்று சிறுவர்கள் சாலையின் அமைப்பு தரம், லஞ்சம் இவர்களை இவர்களைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள் ஒப்பந்தக்காரரின் கார் செல்கிற பாதையில் ஆணிகளை வைத்து பயணத்தை நிறுத்துகிறார்கள். பயணத்தை சரி செய்ய டயர் ஒழுங்கமைப்பு செய்யும் ஓட்டுனருக்கு பணம் தராமல் கோயில் பிரசாதத்தை தந்து இதுதான் சம்பளம் என்கிறான். குழந்தைகள் எரிச்சலாகி மீண்டும் அந்த கார் டயர் பஞ்சராக வைக்கிறார்கள் இது அந்த ஒப்பந்ததாரருக்கும் அவனை சார்ந்து உள்ளவர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி ஏற்படுகிறது. குழந்தைகளின் மனதளவில் அவர்கள் இந்த ஊழல் சார்ந்த விஷயங்களுக்கு சிறு எதிர்ப்பு தெரிவிப்பதை இந்த படம் சொன்னது
இந்த விழாவில் ஆவண்ப்பட இயக்குனர் ஆர் பி அமுதனுடைய உழைப்பு பாராட்டுக்குரியது. 25 ஆண்டுகள் தொடர்ந்த செயல்பாடு என்ற பெரிய இலக்கை எட்டி இருக்கிறார். தொடர்ந்து குறும்படங்கள் ஆவண படங்கள் சார்ந்து இயங்குகிறார். மதுரை விழாவில் குயிர் குழு தியேட்டர்ஸ் சார்ந்த சென்னை கல்யாண் ( இவரின் விக்டிம் ) சென்ற நாடகம் குறிப்பிடத்தக்கது. மற்றும் டிராஸ்கி அரசியல் குழு செயல்பாட்டில் அக்கறை கொண்ட யுவன் போன்றோர்கள் அவர்களுடைய இணைந்து செயல்பட்டார்கள். பல்வேறு இலக்கிய மற்றும் தன்னார்வ அமைப்புகளும் இந்த விழாவில் இணைந்து அவர்களுக்கு கை கொடுத்தார்கள்
மற்றொரு முக்கியமான படம் பற்றி பாஸ்கர் :
குறும்பட விழாவில் என்னை மிகவும் கவர்ந்த இந்திய ஆவணப்படம் பி பார் பியாஸ் (வெங்காயம்), பி ஃபார் பைசா (பணம்), & பி பார் பானி (தண்ணீர்).
எஸ் பி எஸ் கம்யூனிட்டி மீடியா எனும் அமைப்பினர் தயாரித்த ஆவணப்படம் இது.
பூனா திரைப்படக்கலை கல்லூரியில் பயின்ற இரு மாணவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இந்த அமைப்பை தொடங்கி கிராமத்தில் இருக்கும் பொது மக்களுக்கு திரைப்படக் கலையை கற்றுக் கொடுத்தார்கள்.
அந்த மக்களே தங்கள் வலிகளை வாழ்வியலில் இருக்கும் சிக்கல்களை குறும்படம் மற்றும் ஆவணப்படம் உருவாக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தார்கள்.
கட்டைவிரல் கேட்கும் குருகுல கல்வி பயின்றவர்கள் அல்ல இந்த மாணவர்கள்.
தூய்மையான இடதுசாரி சிந்தனை உடைய பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இவர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பூனா திரைப்பட கல்லூரி இந்திய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சராக இருந்த ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது.
அவருக்குப் பின்னால் ஆட்சியில் அமர்ந்த இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இதற்கு மேலும் மேலும் வசதிகள் செய்து தரப்பட்டது.
ஆனால் இங்கு பணிபுரிந்த கல்லூரி முதல்வர் முதல் பேராசிரியர்கள் அனைவரும் பொதுவுடமை சித்தாந்தவாதிகள்.
காங்கிரஸ் அரசுக்கு எதிராக படம் எடுக்கும் படைப்பாளிகளைத்தான் அவர்கள் உருவாக்கினார்கள்.
ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஒன்றிய அரசின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் இது பற்றி கவலைப்படவில்லை.
இதனை தன்னாட்சி கொண்ட அமைப்பாக கருதி பூரண சுதந்திரம் கொடுத்தார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்ததும் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
பிட்டு படம் எடுக்கும் துட்டு படைத்த கோமாளியை கல்லூரி முதல்வர் ஆக்கினார்கள்.
கோமியம் குடிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இப்போது அனுமதி கொடுக்கிறார்கள்.
இனி இங்கிருந்து விவேக் அக்னிஹோத்ரி (காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் எடுத்தவன்), ராஜமவுலி (பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர்) ரிஷப் செட்டி (காந்தாரா) போன்ற விஷத்தை விதைக்கும் வித்தகர்கள் வருவார்கள்.
இந்த மூவருமே திரைப்பட மொழி தெரிந்த வித்தகர்கள்.
அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
ஆனால் சமூக நீதி சமூக நல்லிணக்கம் இவற்றுக்கு எதிராக படம் எடுக்கும் பாம்புகள்.
( தமிழிலும் இதுபோன்று வித்தை உடைத்த விஷ பாம்புகள் உள்ளது)
இந்த ஆவணப்படம் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் வலியை சொல்லியது.
விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்காக அவர்கள் படும் பாட்டை அரும்பாடு பட்டு சொல்லியது.
விவசாயிகளுக்கு மழை ஒரு வரம்.
அதே மழை வரக்கூடாத நேரத்தில் வந்தால் அது கோரம்.
அதுவும் ஆலங்கட்டி மழை வந்தால் விவசாயி கதை முடிந்துவிடும்.
ஆலங்கட்டி மழை வராமல் இருப்பதற்காக
பாரம்பரியமாக கிராமங்களில் கடைப்பிடிக்கும் மூடநம்பிக்கை வழிமுறைகளை செய்வார்கள்.( கழுதைக்கு திருமணம் செய்து வைத்தால் மழை வரும் என்பது போல)
ஒரு கட்டத்தில் மூடநம்பிக்கையை கைவிட்டு விஞ்ஞானம் கற்றுக் கொடுத்த பகுத்தறிவு மூலமாக ஆலங்கட்டி மழையிலிருந்து பயிரை காப்பது எப்படி? என்பதை கற்றுக்கொண்டு பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவார்கள் விவசாயிகள்.
அரும்பாடு பட்டு உழைத்து, உரம் இட்டு, பூச்சி மருந்திட்டு, மேற்கண்ட செலவுகளுக்காக வட்டிக்கு பணம் வாங்கி வெங்காயத்தை அறுவடை செய்துவிட்டால் கிலோ இரண்டு ரூபாய் கிடைக்கிறது என்று சிரித்துக் கொண்டு சொல்வார் ஒரு விவசாயி.
சென்னை குறும்பட விழாவில் இந்தப் படத்திற்கு சுப்ரதீப் சக்கரவர்த்தி என்ற ஆவணப்பட இயக்குனர் பெயரால் விருது வழங்கப்படுகிறது.
மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதன் முதலில் தடை செய்தது இவரது ஆவணப்படத்தை தான்.
எனவேதான் ஆண்டுதோறும் இவரது பெயரால் சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழாவில் சிறந்த இந்திய ஆவணப்படத்திற்கு விருது வழங்கப்படுகிறது.
பொருத்தமான விருது பொருத்தமான படத்திற்கு போய் சேர்ந்தது.
என்கிறார் இயக்குநர் உலக சினிமா பாஸ்கரன்.
0
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)