சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

சுப்ர பாரதி மணியன் : 25/10/1955 . / 68 வெளியாகி உள்ள நூல்கள் : 110 நூல்கள் / 25 நாவல்கள் / 19 சிறுகதை தொகுப்புகள் / 3 குறுநாவல்கள் தொகுப்புகள் / 25 கட்டுரைத் தொகுப்புகள்/, வெளிநாட்டு பயண அனுபவம் நூல்கள் மற்றும் திரைப்பட நூல்கள்.( 100வது நூல் : சிலுவை நாவல் 1000 பக்கங்கள். ரூ1200 ) பரிசுகள் : 0 சிறந்த சிறுகதைக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு 0 ”சாயத்திரை “ நாவலுக்காக தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு 1998 0 தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 2016 0 தமிழக அரசின் மொழி பெயர்ப்பாளர் விருது 2022 0 குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம் 0 எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவல் விருது ஒரு லட்சம் ரூபாய் 2021 0 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது 2021 0 கோவை கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான பரிசு ” பிணங்களின் முகங்கள்” நாவலுக்காக 0 ஜெயந்தன் நினைவு பரிசு சிறந்த நாவலுக்காக நீர் துளிகள் 0 சின்னப்ப பாரதி இலக்கிய விருது 0 திசையட்டும் நல்லி மொழிபெயர்ப்பு விருது எஸ் ஆர் வி திருச்சி மற்றும் பாவை ராசிபுரம் நிறுவனங்களின் இலக்கிய விருதுகள் 2022., 2023 0 பொறுப்பு: 0 சாகித்ய அகடமி ஆலோசனைக் குழு உறுப்பினர் 2008 - 12 0 தென்னிந்திய திரைப்படசங்கங்களின் கூட்டமைப்ப்பு பிராந்திய குழு உறுப்பினர் மொழிபெயர்ப்பு: 0 ” சாயத்திரை “ நாவல் ஆங்கிலத்திலும், ஹிந்தியில் மலையாளம் கன்னடம் வங்காளத்திலும் மொழி பெயர்ப்பு உள்ளது 0 ஹிந்தியில் ஐந்து நாவல்களும் மலையாளத்தில் ஐந்து நாவல்களும் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன ஆங்கிலத்தில் 20 நூல்கள் வெளியாகி இருக்கின்றன மொழிபெயர்ப்பில் பல இந்திய மொழிகளிலும். 0 படைப்புகள் பல பல்கலைக்கிடங்களில் பாடநூல் உள்ளன 0 மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மற்றும் இந்திய மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன சுற்றுச்சூழல் நூல்கள் : நாவல்கள் : 0 சாயத் திரை, நீர்த்ர்த்துளி, புத்துமண் 0 கட்டுரைத் தொகுப்புகள் : தண்ணீர் யுத்தம், சூழல் அறம், நீர்ப்பாலை, மேக வெடிப்பு, சிவப்புப்பட்டியல், மறைந்து வரும் மரங்கள் , மூன்றாம் உலகப்போர் , பூமிக்கு மனிதன் தலைவனா, பூமிக்குத் தீ வைத்தோம், பசுமை அரசியல் உட்பட 12 கட்டுரைத் தொகுப்புகள் இதழியல் : 0 கனவு இலக்கியக் காலாண்டு இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 0 கனவு திரைப்பட இயக்கம்,, 0 தாய் தமிழ் பள்ளி பாண்டியன் நகர் திருப்பூர் உடன் இணைந்து செயல்பாடு 25 ஆண்டுகளாய். திரைநாவல்கள் : 0 திரைக்கதை நூல்கள் 7 வெளியிட்டுள்ளார் . அவற்றில் 65 திரைக்கதைகள் உள்ளன. திரைநாவல் என்ற புதிய நாவல் முயற்சிகளில் 10 நாவல்களை எழுதியுள்ளார். குறும்படங்கள்: 0 சுப்ரபாரதி மணியன் இயக்கிய குறும்படம் ” நாணல் “( அவரின் பாதுகாப்பு என்ற ஆனந்தவிகடன் சிறுகதை ) இவரின் கதைகள் திருவிழா , சோத்துப்பொட்டலம், சுமங்கலி மாற்றம் உட்பட 10 குறும்படங்களாக வெளியாகி இருக்கிறன.. ” இன்று நேற்று நாளை “, அயலான் “ இயக்குனர் ஆர். இரவிக்குமர்ர் இயக்கிய சுமங்கலி உட்பட பல இயக்குனர்களின் இயக்கத்தில் குறும்படங்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு பயணங்கள்: 0 : இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, துபாய் சார்ஜா , இஸ்ரேல் பாலஸ்தீனம், ஜோர்டான், வியட்நாம், இலங்கை, ,எகிப்து