சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

நெடுஞ்செழியன் / சுப்ரபாரதிமணியன், / திருப்பூர் பூவுலகில் நண்பர்கள் நெடுஞ்செழியன் :/ சுப்ரபாரதிமணியன், திருப்பூர் உலக அளவில் ஒரு விருது பசுமைச் செயல்பாடுகளுக்காக எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு தரப்பட்டபோது வெகுளித்தனமாக என்னுடைய மகிழ்ச்சியை நெடுஞ்செழியன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.. அப்போது எம் எஸ் சுவாமிநாதன் பசுமைப் புரட்சி என்ற பெயரில் நிலங்களை பாழடித்தையும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்கியதையும் விமர்சனக் கண்ணோட்டம் கொண்டு என்னுடன் விரிவாக பேசினார். . எம் எஸ் சுவாமிநாதன் பற்றிய ஒரு முக்கியமான பார்வையாக அந்த கருத்துக்கள் இருந்தன வெளிப்படையாக பொது புத்தியில் பசுமை புரட்சியோ இயற்கை வேளாண்மையோ சார்ந்து வரும் கருத்துக்களையோ விமர்சன ரீதியாக எதிர் கொள்வதை அவர் வெளியிட்ட கருத்துக்கள் எனக்கு வெளிப்படுத்தின, 80களில் ஆரம்பத்தில் நான் தொலைத்தொடர்புத் துறையின் பயிற்சி ஒன்றுக்காக நீண்ட காலம் சென்னையில் இருந்தேன் அப்போது அடிக்கடி அவரை சென்னை அண்ணா சாலை அப்பொழுது மவுண்ட் ரோடு -வங்கியில் சந்திக்கிற வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதெல்லாம் அவர் அதற்கு முன்னால் பணிபுரிந்து வந்த தபால் துறை சார்ந்த பணி அனுபவங்களை எல்லாம் நிறைய பகிர்ந்து கொள்வார். சுற்றுச்சூழல் சார்ந்த உலக பார்வையைக் கொண்டிருந்த அவர் என்னுடன் அவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவை சார்ந்த தகவலுக்காக நண்பர்களுடன் நிறைய அலைந்திருக்கிறார். உதாரணத்திற்கு கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கம் விரிவாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த சாலை விரிவாக்கத்தினால் பாதிக்கப்படுகிற மீனவர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் பற்றிய கருத்துக்களை திரட்டி அந்த தரவுகளை எல்லாம் வெளிக் கொண்டு வர அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார் நண்பர்களுடன்.. அப்போது ஒரு முறை கிழக்குக கடற்கரைச் சாலையில் ஆய்வுக்காக சென்ற போது அந்த கடற்கரை சாலையின் விரிவாக்க பணியில் ஈடுபட்டிருந்த பெரும் முதலாளிகளின் ஆட்கள் அவர்களை எல்லாம் துரத்தி வாழ்க்கையை சாவு விளிம்புக்குச் கொண்டு சென்றதையும் அவர்களுடைய மிரட்டலையும் பற்றி அவர் ஒரு முறை சொன்னார். அந்த மிரட்டல் அனுபவம் அவருக்கு அதற்கு முந்தைய நாள் தான் நிகழ்ந்திருக்கிறது. அதை சொல்கிற போது அந்த பெரும் கொடுமையில் இருந்து அவர் தப்பித்ததை சொன்ன போது அவர் முகமும் அவர் உடம்பும் பட்ட அவஸ்தைகளை இப்போதும் நிலைத்து பார்க்கிறேன். அதுபோல் பல்வேறு வகையான சிரமங்களையும் அவர் வாழ்க்கையில் பசுமை இயக்க செயல்பாடுகள் சார்ந்து எதிர் கொண்டிருக்கிறார். அதை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அந்த அனுபவங்களையும் சிறுசிறு வெளியீடுகளாக பூவுலகின் நண்பர்கள் மூலம் கொண்டு வந்திருக்கிறார். உலக அளவில் சுற்றுச்சூழல் சார்ந்த படைப்பாளிகளின் அனுபவங்களை அப்படித்தான் சிறு சிறு வெளியீடுகளாக கொண்டு வந்திருக்கிறார். நான் கனவு என்ற சிற்றிதழை கொண்டு வருவதற்கு அது போன்ற சிறு வெளியீடுகள் காரணமாக இருந்தது என்று சொல்லலாம். புத்தகம் என்றால் பெரிதாக பக்களவில் இருக்க வேண்டும் என்பது இல்லை .சிறு வெளியீடுகளாக கொண்டு வந்து மக்களிடம் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணலாம். என்று அவர் தொடர்ந்து நண்பர்களுடன் செய்ல்பட்டுக் கொண்டிருந்தார். அந்த பாதிப்பில் தான் நான் ஹைதராபாத்திற்கு பணியில் சென்ற போது கனவு என்ற சிற்றிதழை ஆரம்பித்தேன். கனவு இதழ்களில் ஆரம்ப காலத்தில் சுற்றுசூழல் சார்ந்த விஷயங்கள் வெளியிடப்படடதற்கு செழியன் அவர்களுடைய செயல்பாடுகளும் அவருடைய உரையாடல்களும் காரணம் என்று நிச்சயம் சொல்வேன்.. பல சுற்றுச்சூழல் சார்ந்த உலகளவிய நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்படி எனக்கு அறிமுகமான நூல்தான் ” மவுன வசந்தம்” . அது தந்த பாதிப்புகள் நான் ” சாயத்திரை “ நாவல் எழுத ஆதர்சமாக இருந்திருக்கிறது. சாயத்திரை வெளிவந்த போது அது காலத்தின் கட்டாயமான படைப்பு என்கிற ரீதியில் அதைப் பற்றி பல நண்பர்களிடம் பேசியிருக்கிறார். அது வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது பற்றியும் சொன்னார். அது பின்னால் ஆங்கிலம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், வங்காள மொழிகளில் வந்தது.அவர் வார்த்தைகளின் அர்ர்தத்தை அந்த மொழியாக்க நூல்கள் வெலிவந்தபோது உணர்ந்தேன். அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் சனிக்கிழமைகளில் சிறந்த பரிசு பெற்ற இந்திய திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். சனிக்கிழமை மாலையில் அவர் வீட்டில் தொலைக்காட்சியில் அவற்றைப் பார்க்க அழைத்துச் சென்று அந்த படங்களையெல்லாம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். நல்ல திரைப்படங்கள், ஓவிய கண்காட்சிகள் நடக்கிறபோது அவை பற்றிய தகவல் எனக்கு தந்து அவற்றை உதவி செய்திருக்கிறார், சோவியத் கலாச்சார மையம், ஜெர்மன் இன்ஸ்டியூட், ஆல்லயன்ஸ் பிரான்கைஸ் போன்றவற்றில் நடக்கிற பல்வேறு விதமான நிகழ்வுகளுக்கு அவர் எனக்கு முன்னதாகவே தகவல் தந்திருக்கிறார் அதன் மூலமாக என் உலகம் விரிந்து இருக்கிறது. செயல்பாட்டில் பூவுலகில் நண்பர்கள் இயக்கமும் வளர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு இயக்கங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. அந்த வகையில் நெடுஞ்செழியிலும் பல விதங்களில் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்று நிச்சயமாக நான் சொல்வேன் சுப்ரபாரதி மணியன் திருப்பூர் ReplyForward Add reaction