சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

ஹைதராபாத் நாவல்கள் சுப்ரபாரதி மணியன் ஹைதராபாத்தில் 8 ஆண்டுகள் வசித்தவர். .அவர் அந்த அனுபவங்களை அப்போது மூன்று நாவல்களாக வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த மூன்று நாவல்களும் ஒரே நூலாக வெளிவந்துள்ளது. அவரின் முதல் நாவல் “ மற்றும் சிலர் “ மதுரை சின்னாளபட்டியில் இருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த, திமுக ஆட்சி காலத்தில் இந்தி ஆசிரியர் பணியை இழந்த ஒருவரை பற்றியக் கதை. ஐதராபாத் வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் தெலுங்கானா போராட்ட பின்னணியையும் கொண்ட நாவல்..தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் இடம்பெற்றது. முன்பு நர்மதா, மருதா, டிஸ்கவரி ஆகிய பதிப்பகங்கள் இதை வெளியிட்டுள்ளன. “ நகரம் 90 “ என்ற நாவல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது அங்கு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிரிவுகள் செய்த குழப்பங்கள் அதன் மூலமாக அடிக்கடி முதலமைச்சர் மாறிக்கொண்டிருந்த சூழல்.. அப்படியான சூழலில் மத கலவரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை மாற்றிய மோசமான ஒரு காலம் இருந்தது., மதக்கலவரம் மூலமாக முதலமைச்சர் பதவியை கைப்பற்றி சாதாரண மக்களை பதவிக்காக பலி கொண்ட அரசியல் கலவரச் சூழலை பற்றிய நாவல் இது .. குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கிய போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுப்ரபாரதிமணியன் செல்லும் வாய்ப்பை தந்த நாவல். “ சுடுமணல் “ மூன்றாவது நாவல். தேசியம் என்பது மாயம் என்பதை நிரூபிக்கும் வகையில் தண்ணீர் பிரச்சனை வருகிற போதெல்லாம் தமிழர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் வேறு மாநிலச்சுழலில் அந்நியமாக்கப்படுவதும் பற்றிய அனுபவங்களை ஹைதராபாத் பின்னணியில் எழுதியிருந்தார்., இந்த நாவல் பதினாறு பதிப்புகள் வெளியாகி இருப்பதும் மலையாளம்,, ஆங்கிலத்தில் மொழியாகி இருப்பதும் சிறப்பாகும். இந்த மூன்று நாவல்கள் மூலமாக சுமார் 1960-95 ஆண்டுகால ஹைதராபாத் தமிழர்களின் வாழ்க்கையை இந்த நாவல்களில் சுப்ரபாரதிமணியன் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. வேற்று மாநிலச் சூழலில் தமிழர்களின் அந்நியமாதல் சூழலை விவரித்துள்ளது. அசோகமித்திரன் அவர்களின் சிறுகதைகளும் 18 ஆவது அட்சக்கோடு போன்ற நாவல்களும் ஹைதராபாத் தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில் அமைந்தவை.. அவற்றை சுப்ரபாரதிமணியனின் இந்த நாவல்களின் முன்னோடியாகக் கொள்ளலாம் ( ரூபாய் 480 காவ்யா பதிப்பகம் வெளியீடு சென்னை ) -பெரம்பலூர் காப்பியன் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ பெரம்பலூர் காப்பியன் என்ற பெரம்பலூர் முனைவர் சின்னச்சாமி சிறு பத்திரிகைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அரசு பள்ளியில் பணியாற்றுகிறார். சிறு பத்திரிகை சார்ந்து அவரின் செயல்பாடுகள் இருக்கின்றன. சிறு பத்திரிகைகள் கண்காட்சிகள், சிறு பத்திரிகை பற்றிய ஆய்வு நூல்கள் பற்றி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில் நடைபெற்ற வெயில் வாசகர் வட்டத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவில் அவர் ஹைதராபாத் நாவல்கள் நூல் பற்றி பேசினார்