சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

புலன் கடவுள் ..மீனா சுந்தர் சிறுகதைகள் / சுப்ரபாரதி மணியன் தொடர்ந்த செயல்பாட்டில் பல கட்டுரைத் தொகுப்புகள், பல சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன அவரின் கூறிய பார்வையும் சூழல் விவரிப்பு நாவலுக்கான சரியான இடமாக இருக்கிறது. ஆகவே அடுத்த முயற்சியாக அவர் நாவலை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அவருடைய நூல்களின் தொகுப்பில் தலைப்புகள் வசீகரமாக இருக்கின்றன. பல சங்க கால கவிதைகளும், நவீன வாழ்க்கை சார்ந்த படிமங்களும் அந்த தலைப்புகளுக்குள் வந்து விடுகின்றன. அப்படித்தான் இந்த புலன் கடவுள் தலைப்பு.. வாழ்க்கையில் உணவு ரசனை என்பது மிக முக்கியமானது. அது உடலுக்கு மட்டுமில்லை மனரீதியாகவும் ஆறுதல் தரக்கூடியது. பல்வேறு விதமான உணவுப் பொருட்கள் நமக்கு உணவு ரசனையைத் தருபவை. அவை பற்றியக் குறிப்புகளை அவருடைய பல கதைகளில் நாம் பார்க்க முடிகிறது, தேநீர் குடிக்கிற அனுபவத்தை, ஒரு நல்ல தேநீரின் அனுபவத்தை சொல்லுகிற ஒரு கதை தான் புலன் கடவுள். தேனீர் அருந்துவதை ஒரு ஜென் அனுபவமாக பலர் சொல்வார்கள். அப்படித்தான் அதை குடிப்பது பற்றி ஒரு ரசனையோடு அந்த கதை சொல்கிறது. இந்த ரசனையை அவர் உணவு மட்டும் இல்லாமல் அவருடைய சொந்த பகுதியான மன்னார்குடியின் நிலம் சார்ந்த விவரிப்புகளிலும் நான் கண்டுகொண்டேன். மன்னார்குடிக்கு ஒரு முறை சென்ற போது அந்த வீதிகளில் அலைந்தேன். அப்போதுதான் கரிச்சான் குஞ்சு போன்ற எழுத்தாளர்கள் அங்குள்ள ஒரு பள்ளியில் நீண்ட காலம் பணிபுரிந்ததை தெரிந்து கொண்டேன் .அப்போதுதான் அங்குள்ள ஒரு பள்ளி ஒன்றில் மீனா சுந்தர் அவர்கள் பணிபுரிந்ததையும் கேட்டறிந்தேன்.எனவே மன்னார்குடி சார்ந்த நிலவியல் சித்திரங்களும் அந்த மனிதர்களும் வாழ்க்கையும் இதற்கு முந்திய தொகுப்பு கதைகளில் கண்டிருக்கிறேன். அந்த கதைகளை எல்லாம் தாண்டி விதவிதமான கதாபாத்திரங்களும் அவர்களின் வாழ்வினை பற்றி இந்த தொகுப்பின் கதைகள் பேசுகின்றன. இதில் வருகின்ற பவுனரசி, பெருமாள் சாமி, கோகிலா உட்பட பலர் செத்துப் போகிறார்கள் என்பதை மையமாக வைத்து ஒரு நண்பர் இவையெல்லாம் பெரும்பாலும் சாவை பற்றி தான் சொல்கின்றன என்ற ஒரு கருத்தை முன் வைத்தார், சில கதைகள் வாழ்வு சார்ந்த வெறுமையை சொல்லி முடிக்கிறபோது இந்த வகைச் சாவுக்கு சென்று விடுகின்றன, பவுனராசு ஊழல் வாதியாக இருக்கிறார். அரசு பதவியை தவறாக பயன்படுத்துகிறா.ர் ஆனால் அவருக்கு தரப்படுகிறது தண்டனை ஏற்று படுகிறது தான். .குளத்து மீன்களை வளர்ப்புக்காக குளத்தை அசுத்தம் செய்பவர்கள் பலர் .இவர்களை எதிர்த்து கேட்கிற பெருமாள் சாமி போன்றவர்கள் பிணமாகத்தான் கிடக்கிறார்கள். என்னதான் இது போன்ற கதைகளின் சாவு பற்றி பேசினாலும் அவருக்குள் இருக்கிற மனிதாபிமானம் பல கதைகளை வழிநட்த்துகிறது. ஆடு போன்ற சிறு பிராணிகள் மீதான அன்பை சில கதைகளில் சொல்கிறார். பெரும்பாலும் மனிதர்கள் மீதான அன்பு தான் இந்த கதைகளில் ஆதாரமாக இருக்கிறது. இந்த கதைகள் மூலமாக மீனா சுந்தர் வைக்கும் சமூக விமர்சனங்கள் ஒரு வகையில் அரசியல் பார்வை கொண்டவை அந்த அரசியல் பார்வையை எழுத்தாளர்கள் கைக்கொள்ள வேண்டும் என்ற ஒரு புரிதலையும் இந்த தொகுப்பில் மூலம் நான் புரிந்து கொள்கிறேன் சுப்ரபாரதி மணியன் ( - புலன் கடவுள் டிஸ்கவரி புக் பேலஸ் சென்னை வெளியீடு ரூபாய் 210 )