' - சின்னச்சின்ன காட்சிகள்
பாவண்ணன்
சுகந்தி சுப்ரமணியனுடைய கவிதைகள் சின்னச்சின்ன காட்சிகளால் நிறைந்தவை. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஒரு பெருமூச்சு வெளிப்படுகிறது. கதறல் கேட்கிறது. மெளனமான அழுகையின் கண்ணீர்த்தடம் படர்ந்து உலர்ந்திருக்கிறது. ஆற்றாமையும் இயலாமையும் மாறிமாறி வெளிப்பட்டபடி உள்ளன. அக்கவிதைகளைப் புனையத்தூண்டிய புள்ளிகள் இவையாகவே இருக்கக்கூடும். வாசிப்பின்பொழுது மீண்டும் கண்டடையப்படுகிற இப்புள்ளிகள் வழியாக விரிவிடைகிற அனுபவம் பல தளங்களைநோக்கி நம் எண்ணங்களைத் திருப்பிவிடுகின்றது. இதுவே சுகந்தியின் கவித்துவ வெற்றி. சிற்சில இடங்களில் காட்சிகளைத் தீட்டிக்காட்டுவதில் வெளிப்படும் அவசரமும் எழுதிய கவிதைகளுக்குத் தலைப்பிடக்கூட நேரமற்ற பதற்றமும் பலவீனங்கள்.
நதி போகும் இடத்தை அறியும் ஆவலை நெஞ்சம்முழுக்க நிறைத்திருக்கும் இளம்பெண்ணொருத்தியைச் சித்தரிக்கும் கவிதை வாசகனுடைய மனத்தில் உடனடியாக பதிந்துவிடக்கூடியது. நாற்புறச்சுவருக்குள்ளேயே குளியலை முடித்துக்கொள்கிற வயதில் இருப்பவள் பால்யகாலத்தில் பூப்பறிப்பு நோன்புக்காக தோழிகளுடன் சென்ற ஆற்றை நினைத்துக்கொள்கிறாள். பால்யம் முதலாகவே அவளைத் தவிக்கவைக்கிற கேள்வி தொடர்ந்து அவளை அறியாமையின் விளிம்பிலேயே நிறுத்திவைக்கிறது. திருமணத்துக்குப் பிறகு அதே கேள்வியை கணவனிடம் கேட்கிறாள். ஐம்பது மைல் தள்ளிப்போய் ஆறு போகுமிடத்தில் ஓர் அணையைக் காட்டி அதுவரைக்கும்தான் தனக்கும் தெரியும் என்கிறான். விடைகிட்டாத கேள்வி அவளிடமே தங்கிவிடுகிறது. ஆறும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஆறு எங்கே செல்கிறது என்னும் ஒற்றைக் கேள்வியை ஒட்டியே இக்கவிதை தொடங்கினாலும் கவிதை கொடுக்கிற அனுபவம் பெண்ணுலகின் ஆழ்மனத்தில் விடையற்றுத் துடித்துக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான கேள்விகளின் படிமமாக மாற்றிப் பார்க்கிறது மனம். வாழ்க்கை என்பது என்ன ? சமூகம் என்பது என்ன ? கவிதை என்பது என்ன ? எல்லாவற்றிலும் என் பங்கு எந்த அளவு ? எந்த எல்லைவரை எனக்கு அனுமதி உண்டு ? இப்படி ஏராளமான கேள்விகள். அரைநுாற்றாண்டுக்கு முன்னால் இப்படிப்பட்ட கேள்விக்கு 'எது எங்கே போனால் உனக்கென்ன, மூலையில் கிட ' என்பது பதிலாக இருந்திருக்கக்கூடும். சில நுாற்றாண்டுகளுக்குமுன்னால் ஒருவேளை இப்படி கேட்பதற்கு வாய்ப்பே அற்ற சூழலே இருந்திருக்கக்கூடும். இன்று அக்கேள்வியை மதித்து அணைக்கட்டுவரையாவது அழைத்துச்சென்று காட்டும் ஆண் கிடைத்திருக்கிறான். அவ்வளவுதான். இருபது நுாற்றாண்டுகளுக்குப் பிறகாவது பெண் மீது ஒரு சின்னக் கரிசனம் பிறந்திருக்கிறது. அவளுக்கு விடையளிக்கவேண்டியது தன் கடமை என்று எண்ணும் ஆண் பிறந்திருக்கிறான். 'எதுவரைதான் இந்த நதி போகும், வா இருவரும் சேர்ந்தே சென்று பார்க்கலாம் ' என்று சொல்லத்தக்க ஆண் உருவாவதற்கு இன்னும் பல ஆண்டுகள் கழியவேண்டும்போலும்.
இக்கேள்வி முன்வைக்கப்படுகிற முறை மிகமுக்கியமானதாகத் தோன்றுகிறது. முதலில் இக்கேள்வி அவள் மனத்துக்குள்தான் தோன்றுகிறது. பிறந்தவீட்டில் இருந்தவரைக்கும் யாரிடமும் சுதந்தரமாக இக்கேள்வியை அவள் கேட்டதாக குறிப்புகள் இல்லை. கேட்க இயலாத சூழலாகவோ அல்லது கேட்டும் பயன்விளையாத சூழலாகவோ அவள் பிறந்தவீடு இருந்திருக்கக்கூடும். திருமணத்துக்குப் பிறகுதான் அக்கேள்வியை அவள் தன் கணவனிடம் கேட்க முடிந்திருக்கிறது. ஒரு பெண் தன் கேள்விக்கான விடையை ஓர் ஆணை அணுகித்தான் அறியவேண்டியதுள்ளது என்னும் நிலை எத்தனை மோசமானது. தன் கேள்விக்கான விடையை தானே தேடி அறிவதற்கான கல்வி அல்லது வாய்ப்புகளை ஒரு சமூகம் மறுத்தே வந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் தருணமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஒரு சின்னக்கேள்வியை ஒட்டி உருவாகும் ஒரு கவிதை ஆண்-பெண் உறவையொட்டியும் பெண்-சமூகம் உறவையொட்டியும் எண்ணத்துாண்டும் அளவுக்கு வலிமை கொண்டதாக இருக்கிறது. கவிதையை இப்படி அசைபோடஅசைபோட பல எண்ணங்கள் எழுந்தபடி இருக்கின்றன.
தன் நினைவின்மையை நொந்துகொள்ளும் ஒரு பெண்ணின் மனப்பதிவாக வெளிப்படும் ஒரு கவிதையும் நல்ல வாசிப்பனுபவம் தரக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. பிரசவத்தின்போது தன் குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த முகம் நினைவில் இல்லை. முதல் கர்ப்பம் பற்றிய செய்தியை யாரிடம் முதன்முதலாகச் சொன்னோம் என்பதுவும் நினைவில் இல்லை. பள்ளியில் அரிச்சுவடி சொல்லித்தந்த முகம் நினைவில் இல்லை. விளையாடும் இடத்தில் ருதுவான கணத்தில் ஆறுதலாக கைப்பிடித்து அழைத்துவந்த முகமும் நினைவில் இல்லை. எல்லாத் தருணங்களுக்கும் அவற்றுக்கே உரிய முக்கியத்துவம் இருந்தும் எதுவும் நினைவில் இல்லை என்று கவிதை முடிகிறது.
வலிமிகுந்த ஆற்றாமையின் ரகசியக்குரல் நம் செவியில் விழுந்த கணத்தில் அந்த வேதனையை நாமும் உணர்கிறோம். ஒரு வெற்றுத் தாள்போல நினைவின்மைகளின் தொகுதியாக ஒரு பெண்ணின் மனம் அமைந்துபோயிருக்கும் விதம் அதிர்ச்சியாக இருக்கிறது. உடலின் இயக்கம் பிறர் விதிக்கும் கட்டுப்பாடுகள் சார்ந்ததாக உள்ளது. மனமோ எந்த இயக்கமுமற்று தரிசாகக் கிடக்கிறது. இயக்கமற்ற மனம் கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணத்துக்குச் சமம். அப்படியென்றால் பெண்ணின் வாழ்க்கை என்பது உடலளவில் உயிர்ப்புள்ளதாகவும் மனத்தளவில் உயிரற்றதாகவும் அமைந்த ஒன்றுதானா ? நித்தமும் நடமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பலரோடு பழகிக்கொண்டும்தான் இங்கே பெண்ணின் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்றே எடுத்துக்கொள்வோம். பல முக்கியமான தருணங்கள் அவள் வாழ்விலும் நிகழ்ந்தே வந்திருக்கின்றன என்றும் வைத்துக்கொள்வோம். ஆனாலும் எந்தத்தருணமும் அவள் மனத்தில் பதியாமல் போவதற்கான காரணம் எதுவாக இருக்கலாம் ? 'இதைஇதை மட்டுமே நீ நினைவில் வைத்துக்கொண்டால் போதும், மற்ற எதையும் மனத்தில் பாரமாக ஏற்றிச் சுமக்கவேண்டாம் ' என்றொரு குரல் புறத்திலிருந்து கட்டுப்படுத்தியபடி இருக்கக்கூடும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் . ஆணுக்குத் துணையாக நிழல்போல இருந்து காரியமாற்றும் பெண்ணுக்கென்று தனிப்பட்ட நினைவுகள் தேவையில்லை என்று எண்ணங்களால் மேலாண்மை செய்யப்படுவது மற்றொரு காரணமாக இருக்கலாம். 'தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு ' என்பது சுகந்தியின் இன்னொருகவிதையில் இடம்பெறும் வரி. தானியமற்ற வெற்றுக்குதிர்போல எந்த நினைவுமற்று இருப்பதாலேயே மனக்கதவுக்கு தாழின் அவசியம் இல்லாமல் போயிற்றா ? 'மனத்தைத் தொலைத்து பேயாய் அலைகிறேன் ' என்றொரு வரி மற்றொரு கவிதையில் இடம்பெறுகிறது. 'என்னைக்கொன்று இந்த மண்ணில் ஏற்கனவே புதைத்தாயிற்று ' என்னும் வரி சுகந்தியின் மற்றொரு கவிதையில் காணப்படுகிறது.
மானுட குலத்தின் நினைவுத்தொகுதியே வரலாறு. எந்தச் சமூக வரலாற்று நூலிலும் மனிதர்களின் இதயத்துடிப்புகள் ஒலித்தபடியே உள்ளன. ஆண்களும் பெண்களும் இணைந்ததுதான் சமூகம் உருவாகிறது என்பது நம் நம்பிக்கை. ஆண்களின் மனஉலகம் ஏராளமான நினைவுத்தடங்களால் நிறைந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக, பெண்களின் மனஉலகிலோ ஒற்றை நினைவுகூட இல்லை. உலகவாழ்வில் சமபாதியாக வாழ்கிற பெண்குலத்தின் நினைவுச்சுவடுகளே வரலாற்றில் இல்லாமல் போகுமளவுக்கு புறக்கட்டுப்பாடுகள் அழுத்திக்கொண்டுள்ளன என்னும் சாரமே நம் அசைபோடல்களில் நாம் வந்து நிற்கிற புள்ளி. கசப்பு மிகுந்ததாகவே இப்புள்ளி தோன்றினாலும், இதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பது முக்கியமான கேள்வி.
'அமைதி ' என்ற தலைப்பிலமைந்த கவிதையும் நல்ல அனுபவத்தைத் தரக்கூடிய ஒன்று. இக்கவிதையின் இறுதிவரிகள் மிகமுக்கியமானவையாகத் தோன்றுகின்றன.
'வழியும் நிலவின் ஒளிவெள்ளத்தில்
தேங்கிக்கிடக்கும் குளம்
கேட்பாரற்ற அமைதியில் '
ஒளிபொழியும் நிலவு ஒருபுறம். தேங்கிக் கிடக்கும் குளம் மறுபுறம். ஒன்று அழகு. மற்றொன்று அழகற்றது. ஒன்று இயங்கும் தன்மை கொண்டது. மற்றொன்று எந்த இயக்கமுமற்றுத் தேங்கிக் கிடப்பது. ஒன்று வானில். மற்றொன்று மண்ணில். எது எங்கே எப்படி இருந்தபோதும் இரண்டுமே தன்னை அமைதியாக மட்டுமே வெளிப்படுத்திக்கொள்கிறது. அமைதியாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறவரைதான் அதற்கு இடமுண்டுபோலும். இப்படி இந்தப் படிமங்களைப் பிரிக்கப்பிரிக்க இவையனைத்தும் இருவேறு தன்மையுள்ள பெண்களின் சித்திரங்களோ என்னும் எண்ணம் எழுகிறது. எப்படிப்பட்ட தன்மை உள்ள பெண்ணானாலும் அமைதியை வெளிப்படுத்தும் பெண்ணுக்கு மட்டுமே வரவேற்பு இருக்கும்போலும். அமைதியை உடைக்கிற பெண்ணை என்ன செய்யும் என்னும் குறிப்பு கவிதையில் இல்லை. எண்ணங்களின் அணைக்கட்டை ஒரேவீச்சில் உடைத்தெறிந்துவிட்டு கவிதை முற்றுப்பெற்றுவிடுகிறது. கேள்விகளின் தடத்தையொட்டிச் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறோம் நாம்.
இப்படி எடுத்துச்சொல்ல சிறப்பான கவிதைகள் இத்தொகுதியில் பல உண்டு. கவிதை ததும்பும் மனநிலையில் பிறந்த ஒன்றிரண்டு வரிகளை இன்னும்இன்னும் மேலெடுத்துச் செல்லவியலாமல் தாழ்ந்து சரிந்துவிடும் சில கவிதைகளும் உண்டு. அவை முக்கியமல்ல என்றாலும், அத்தகு படிகளின் மீதேறி நின்றபடிதான் சுகந்தியின் சிறப்பான கவிதைகள் ஒளிர்கின்றன.
(மீண்டெழுதலின் ரகசியம்- சுகந்தி சுப்ரமணியன், யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86)
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 20 மார்ச், 2009
சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள்
மரணத்தின்
நுழைவாயிலுக்கு சென்று திரும்பிவிட்டேன் வந்த பின்னர் இன்னும் மரணத்தைப் பற்றின ஆசைதான் ஆனால் என் குழந்தைகளின் கண்ணீரில் மனது ஊஞ்சலாடுகிறது எனக்கும் சூரியனுக்கும் மரணம் பற்றின அச்சம் நீங்கிவிடுகிறது எல்லோரும் ரிஷிகளாகிறார்கள் மெüனம் எப்போதும் என்னைச் சிறையில் அடைக்கிறது. மரணம் ஒரு பெரிய விசயமல்ல. உயிரின் ஆசையில் மனத்திற்குள் சலசலப்பு பார்க்கிற ஒவ்வொரு நிமிசமும் கடிகாரத்தைப் போலவே மனமும் மரணமும் . . . பரிசுகளும் பாராட்டுகளும் ஆறுதல்படுத்திக்கொண்டே இருக்கின்றன ஆனால் நானும் என் உடலும் மெüனமாய்த் தொங்குகிறோம் - தூங்குகிறோம் மரணத்தை நீக்கிச் செல்லும் உதயசூரியன் வேதனையைத் தூண்டிவிடுகிறது. மூளை இறந்தபடி வாழ்கிறேன்

சுகந்தி சுப்பிரமணியம் - ஒர் அஞ்சலி
என்ன விதமான வாழ்க்கை வாழுகிறேன் என்று வெட்கமாக இருந்தது, சுகந்தி இறந்து போன செய்தி இன்றுதான் தெரிந்ததும். மு.கு ஜெகன்னாத ராஜா இறந்து போன செய்தியும் மிக மிக தாமதமாகவே தெரிந்தது. உண்மையில், அவர் இறந்து ஒன்றிரண்டு தினங்கள் ஆகியிருந்த போது, ராஜபாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். அவர் வீட்டின் தெரு முனையில் ஒரு பிரஸ் இருக்கும் அது எப்போதும் கண்ணில் படும். உடனேயே அவர் நினைவு வரும்.அன்று, கணப்பித்தம் க்ஷணப் பித்தம் மாதிரி ராஜாவைப் பார்த்து விட்டு வருவோமோ என்று தீவிரமாகத் தோன்றியது.வாயிலிருந்து கெட்ட வாசனை வீசி, வேண்டாண்டா என்று தடுத்து விட்டது.அன்று ஜகன்னாத ராஜா உயிருடேனேயே இல்லை என்கிற விஷயம் தெரிய வந்த போது, கணநேரம் இருள் கவ்வி ஒரு வகை பயப் பந்து வயிற்றில் சுழன்று மறைந்தது.அருமையான மனுஷர். பல நல்ல சாதனைகளைச் செய்திருக்கிறார்.அவருடன் 25 வருடங்களுக்கு முன் டில்லி சென்றது மறக்க முடியாத அனுபவம்.ஆதர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவில் அவரும் சிட்டியும்தான் என்னை உறுப்பினர்களாகச் சேர்த்தார்கள். அந்தப் பயணத்தின் போதுதான் சாரு எனக்கு அறிமுகமானார். அந்த சந்திப்பை வைத்து ஒரு கதை கூட கணையாழியில் எழுதி இருக்கிறார்.சுகந்தியின் கணையாழிக் கவிதைகளின் பிரியமான வாசகன் நான். ஜெய மோகன் அவரது வாழ்க்கை பற்றியும் சுப்ர பாரதி மணியன் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.அவர்களது நெருக்கத்தின் காரணமாக சற்று அதிகமாகவும் எழுதியிருக்கிற மாதிரி தோன்றுகிறது.நானும் மரணம் வரை சென்று வந்தவன் என்பதால்,மாத்திரைகளின் துணையோடு வாழ்பவனென்பதால் சுகந்தியை 95-ல் சந்தித்த போது ஒரு இனம் புரியாத ஒட்டுதல் ஏற்பட்டது. சுகந்தியும் என் மனைவி, குழந்தைகளும், திலகவதியும் அன்று ரொம்ப அந்நியோன்மாய் பேசிக் கொண்டு இருந்தார்கள்..நான் சுகந்தியுடன் நிறையப் பேச நினைத்தவன் அந்த நெருக்கத்தின் காரணமாக, பேசாமலிருந்தேன், என் மனைவி சற்றுப் பேச்சை நிறுத்திய சமயம் ஒரு திடீர் மௌனம் சூழ்ந்தது.சுகந்தி கேட்டார் சார் என்ன பேசவே மாட்டேங்கிறேங்க.நான் அப்போதும் பேசவில்லை.சிரிக்க மட்டும் செய்தேன். அவருடைய கவிதைகளில் பெண் வாழ்வு சரியாகவே பிரக்ஞை பூர்வமாகவே சொல்லப் பட்டிருக்கிறது.சிலர் சொல்கிற மாதிரி பிறழ்வு பூர்வமானதில்லை.அவருடைய கவிதைத் தலைப்புகள் முக்கியமானவை.(மீண்டெழுதலின் ரகசியம்)அவரைப் பற்றி தெரிந்திருந்தாலும், அவருடைய குழந்தைகளின் முகங்களிலிருந்து அவர்கள் வாழ்க்கையை உணர முடிந்தாலும்,(மணியன் முகத்திலிருந்து இதைக் கண்டுணர முடியாது, அவர் இன்னொரு அற்புதப் பிறவி.) அதன் பாதிப்பில் சுகந்தியின் மனோநிலை இருந்திருந்தாலும்,அவருடைய எழுத்து சரியான தளத்திற்கு வந்து விடுகிறது. எனக்கு அவர் கவிதை வரிகளில் ஞாபகத்தில் அதிகமாய் இருப்பது.’’தோல்விகள் தொடர்கையில் நான் என்னுடனேநட்புக் கொண்டேன்...”,இதன் சாத்தியம் எனக்கு என்றுமே வசப் பட்டதில்லை.என்றாலும் கூட இதில் ஒரு வசீகரமும், நம்பிக்கையும் தென்படுவது தற்செயலல்ல. அவருக்கு முந்திய பெண் கவிஞர்களான மீனாட்சி, திரிசடை, இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு 90 களின் பெண் கவிதைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் அமைந்தவை சுகந்தியின் கவிதைகள். சுகந்தியின் நீட்சியாக பல கவிதைகள் வெளிவந்துள்ளன.எனக்கு கானல் நீர் படத்தில் பானுமதி பாடுகிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்இதில் வளர்ந்தது சமுதாயம்-இங்குவந்ததின் பின்னே கேள்வியிலேயேவாழ்வதுதான் நியாயம்.
- கலாப்ரியா
வெள்ளி, 6 மார்ச், 2009
பாவண்ணன்
சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு
------------------------------------------------------------
பாவண்ணன்
----------------
என் நண்பரும் எழுத்தாளருமான "சுப்ரபாரதிமணியன்" எண்பதுகளில் ஐதராபாத்தில் வசித்துவந்த சமயம் நான் கர்நாடகத்தில் வசித்துவந்தேன். அவருடைய திருமணத்துக்கு என்னால் செல்ல இயலவில்லை. துணைவியாரை அழைத்துக்கொண்டு அவர் ஐதராபாத்துக்குத் திரும்பிய பிறகு ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். தன் மனைவியை தொலைபேசியிலேயே அறிமுகப்படுத்திவைத்தார் சுப்ரபாரதிமணியன். "சுகந்தி கவிதையெல்லாம் எழுதுவாங்க..." என்றார். ஒரு சில நிமிடங்கள்மட்டுமே அவரோடு நான் பேசினேன். சற்றே கீச்சுக்குரல். பத்துப்பதினைந்து வாக்கியம் பேசியதும் கரகரத்து உடைந்து இயல்பாக வெளிப்பட்டது.
அடுத்து ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அவருடைய கவிதைகள் "புதையுண்ட வாழ்க்கை" என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்தன. தலைப்பின் படிமத்தன்மை என்னை ஆழமாகப் பாதித்தது. வாழ்க்கையை நாம் ஒரு கொண்டாட்டம் என்கிறோம். மனிதப்பிறவிக்கே கிடைத்த அபூர்வமான வரம் என்கிறோம். அன்பை வழங்குவதற்கும் அன்பில் திளைப்பதற்குமான மாபெரும் வாய்ப்பாக வாழ்க்கையை நினைக்கிறோம். அந்த நிலையில் வாழ்க்கையை ஒருவர் புதையுண்ட நகரத்தைப்போல, புதையுண்ட தெய்வச்சிலையைப்போல புதைந்துபோனதாக முன்வைப்பதை நினைத்து ஒருகணம் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும் அந்தத் தலைப்பின் வசீகரம் என் மனத்தைவிட்டு அகலவே இல்லை. மீண்டும்மீண்டும் அசைபோட்டுக்கொண்டே இருந்தேன். இயற்கையின் சீற்றத்தால் சூறாவளியோ ஆழிப்பேரலையோ நிலநடுக்கமோ உருவாகி வாழ்கிற ஒரு நகரத்தையே விழுங்கி உள்ளiழுத்துக்கொள்வதைத்தான் புதையுண்டதாகச் சொல்கிறோம். மாமல்லபுரத்தின் கடற்கரைக் கோயில்கள் கடலுக்கடியில் புதைந்துகிடக்கின்றன. வாழ்க்கையும் துயரம், கவலை, தனிமை, கண்ணீர் என்ற உணர்வுகளுக்கடியில் புதைந்துகிடக்கிறது. புராண காலத்திலிருந்து நவீன காலம் வரையிலான முக்கால் பகுதிக்கும் மேலான இந்தியப் பெண்களின் பொதுப்படிமமாகவே அத்தலைப்பை நான் உணர்ந்தேன். அக்கணம் சுகந்தியின்மீது நான் கொண்டிருந்த மதிப்பு இன்னும் அதிகமானது. பெண்கவிஞர்கள் அவ்வளவாக உருவாகி வராத காலம் அது. கவிதைகளைப் படித்தபிறகு என் வாழ்த்துகளைச் சொன்னேன்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு சந்திப்பை உதகை பகுதியில் ஈரோடு ஜீவா ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சந்திப்புக்கு சுகந்தியும் சுப்ரபாரதிமணியனும் குழந்தைகளும் வந்திருந்தார்கள். அப்போதுதான் சுகந்தியை நேரிடையாகச் சந்தித்தேன். சங்கச் செய்யுள்களை வாசிப்பதுதொடர்பாக அன்று அவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. அவற்றைப்பற்றி என்னிடமும் சந்திப்புக்கு வந்திருந்த பல கவிஞர்களிடமும் நிறைய கேள்விகள் கேட்டார். எளிய தோற்றத்துடன் கண்களiல் ஆவல் மின்ன அவர் உரையாடிய காட்சி என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது.
நினைவிலிருந்து பிசகிவிட்ட பல முகங்களைப்பற்றிய குறிப்புகளை முன்வைத்தபடி தன் ஞாபகமறதியை நினைத்து மனவேதனைக்கு ஆளாகும் ஒரு கவிதை சுகந்தி எழுதிய கவிதைகளில் மிக முக்கியமானது. ஒரு பெண்ணுக்கு தன் பிரசவத்தின்போது தன் குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த முகம் மறந்துபோகிறது. முதன்முதலாக தான் கருவுற்ற செய்தியை யாரிடம் சொல்லிப் பகிர்ந்துகொண்டோம் என்பதும் மறந்துபோகிறது. பள்ளியில் எழுத்தறிவித்த ஆசிரியரின் முகமும் மறந்துபோகிறது. விளையாடச் சென்ற இடத்தில் தற்செயலாக ருதுவான கணத்தில் அச்சத்துடன் கண்ணீர் பெருகிய சமயத்தில் ஆறுதலாக கையைப்பற்றி அழைத்துவந்து கனிவான சொற்களைச் சொன்ன முகம்கூட நினைவிலிருந்து விலகிவிட்டது. கவிதையில் சுகந்தி விவரிக்கிற வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு முக்கியமான தருணங்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தாமாகவே நினைவில் அழுத்தமாகப் பதிந்துவிடத்தக்க தருணங்கள். இருந்தபோதிலும் எதுவுமே நினைவில்லாதபடி எப்படி நிகழ்ந்தது? கவிதையைப் படித்துமுடித்ததும் மனம் கனத்துவிட்டது. நினைவின்மையின் தொகுதியாக ஒரு வெள்ளைத்திரைபோல பெண்ணின் மனம் அமைந்துபோயிருக்கும் விதம் அதிர்ச்சியாக இருந்தது.
"எங்களூர் நதி எங்கே போய்க்கொண்டிருக்கிறது..." என்று தொடங்கும் கவிதையும் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. ஓர் இளம்பெண் இக்கவிதையில் இடம்பெறுகிறாள். வழக்கமாக தாழிடப்பட்ட குயலறைக்குள் குளியலை முடித்துக்கொள்கிறவள் அவள். எதிர்பாராத விதமாக பால்யகாலத்தில் பூப்பறிப்பு நோன்புக்காக தோழிகளுடன் சென்ற ஆற்றை நினைத்துக்கொள்கிறாள். நதி எங்கே போகிறது என்னும் கேள்வி அப்போதுதான் அவள் மனத்தில் எழுகிறது. ஆனால் விடை தெரியவில்லை. மறுபடியும் அவள் ஆற்றைப் பார்ப்பது திருமணத்துக்குப் பிறகுதான். அப்போதும் அவள் மனத்தில் அதே கேள்வி தோன்றுகிறது. அத்தருணத்திலும் அவளுக்கு விடை தெரியவில்லை. அழைத்துச் செல்கிற கணவனுக்கும் விடை தெரியவில்லை. ஐம்பது மைல் தள்ளiப்போய் ஆறு செல்லுமிடத்தில் ஓர் அணையைக் காட்டி அதுவரைக்கும்தான் தனக்கும் தெரியும் என்கிறான் கணவன். விடைதெரியாத கேள்வி அவள் மனத்தில் அப்படியே எஞ்சிவிடுகிறது. ஆறும் தொடர்ந்து ஓடியபடி இருக்கிறது. இக்கவிதையின் தொடக்கத்தில் இக்கேள்வியை இளம்பெண் யாரிடமும் கேட்டதாக குறிப்பில்லை. திருமணத்துக்குப் பிறகு தன் கணவனிடம்தான் முதன்முதலில் வாய்திறந்து கேட்கிறாள். ஒரு விடைக்கான நீண்டகாலக் காத்திருப்பு அவலமும் துயரமும் மிகுந்தது.
சுகந்தியின் கற்பனைவளம் உற்சாகத்தை ஊட்டுவது. முதல் வரி கவிதையில் இறங்கியதுமே வேகவேகமாக சொற்கள் கூடிப் பெருகுகின்றன. தரையில் தண்ணீர் பரவி ஈரத்தடம் படர்வதுபோல அச்சொற்களில் அபூர்வமான ஓர் ஓவியத்தை வரைந்துகாட்டுகிறார் சுகந்தி. காற்று என்னும் கவிதை அப்படி வரையப்பட்ட ஓர் அபூர்வ ஓவியம். காற்றை சிறகிலாப் பறவை என்று அடையாளப்படுத்துகிறார். அக்கவிதையில் சந்தனமும் குங்குமமும் துலங்க தாம்பூலம் சிவக்க சந்தோஷமாக பூவைத்துக் காத்திருக்கிறாள் ஒரு பெண். கொலுசொலிக்க நடந்துவருகிற ஒரு தோழிபோல அருகில் வருகிறது காற்று. இருவரும் விளையாடிக்கொள்கிறார்கள். பெண்ணின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி சின்னக்குழந்தை என்று கொஞ்சிவிட்டு நகர்கிறது காற்று. கண்கள் சிவக்க அழும்போது உறங்கவைக்க முயற்சி செய்கிறது. கண்களை மூடிவிட்டால் காற்று நகர்ந்துவிடுமோ என வாட்டமுறுகிறாள் அவள். ஆனாலும் காற்றின் தாலாட்டில் உறங்காமல் இருக்கவும் இயலவில்லை. கவலையில் தோய்ந்த சிரிப்பையே காவலுக்கு நிறுத்திவிட்டு கண்களை மூடுகிறாள். தன்னிலை மறந்த உறக்கத்தில் அவள் ஆழ்ந்த பிறகு, செல்லச் சிரிப்போடு காவலுக்கு நின்ற கவலையில் தோய்ந்த சிரிப்பை அழைத்துச் சென்றுவிடுகிறது. ஒரு நாடகக்காட்சியைப்போலத் தோற்றம் தரும் இக்கவிதை துணையற்ற பெண்ணின் தனிமையையும் துணையாக நிற்கும் காற்றின் ஆதரவையும் ஒருங்கே முன்வைக்கின்து.
புதையுண்ட வாழ்க்கை தொகுப்பைத் தொடர்ந்து 2003ல் தமிழினியின் முயற்சியால் அவருடைய விரிவான தொகுப்பொன்று வெவந்தது. நான் விரும்பிப் படித்த தொகுதிகளில் அதுவும் ஒன்று. தற்செயலாக ஒரு கவிதையில் படிக்க நேர்ந்த "தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு" என்னும் வரி என்னை உலுக்கியெடுத்தது. மனம் என்பது ஓர் அறையல்ல, வீடுமல்ல. கதவு பொருத்தி தாழிட்டும் பூட்டியும் வைக்க. அது ஒரு நதிபோல, கடல்போல, வானம்போல விரிவானது. எல்லையல்லாதது. எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான் இது. ஆனாலும் மனம் முரண்விழைவு உந்தித்தள்ள தனக்கென ஒரு கதவை நாடுகிறது. கதவு பொருத்தியபிறகு தாழும் தேவையாகிறது. தாழிட முடியாதபோது தவிப்பை தானே ஏற்படுத்திக்கொள்கிறது. ஆற்றாமையையும் இயலாமையையும் முன்வைக்கும் சுகந்தியின் கவிதைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. இருபத்தைந்து ஆண்டுகளில் மிகச்சில ஆண்டுகளiல்மட்டுமே அவருடைய கவிதைகள் வெளிவந்தன.
பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்தில் ஒரு பயிற்சிக்காக சென்னை சென்றிருந்தேன். என் வருகையைப் பதிந்துவிட்டு எனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் திறவுகோலோடு திரும்பியபோது தற்செயலாக சுப்ரபாரதிமணியானப் பார்த்தேன். அதே நிலையத்தில் அதே பயிற்சிக்கு அவரும் வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தேன். பயிற்சி நேரம் போக மற்ற நேரங்களில் பேசிக்கொண்டிருந்தோம். குடும்ப நலன்களைப்பற்றி ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொண்டோம். பயிற்சி வகுப்பில் அவர் மூன்றாம் வரிசையிலும் நான் ஐந்தாம் வரிசையிலும் உட்கார்ந்திருந்தோம். மூன்றாவது நாள் பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் வேகமாக இருக்கையைவிட்டு எழுந்து ஒரு நொடி ஆசிரியரிடம் மெதுவாக ஏதோ சொல்லிவிட்டுச் செல்வதைக் கவனித்தேன். அவசரமாக கழிப்பறைக்குச் சென்றிருக்கக்கூடும் என்றுதான் முதலில் நினைத்தேன். அரைமணிநேரத்துக்குப் பிறகும் வராதபோது எங்காவது தொலைபேசி செய்யச் சென்றிருப்பாரோ என்று தோன்றியது. உணவு இடைவேளை வரைக்கும் வராதபோது அதிர்ச்சியாக இருந்தது. அவர் இல்லாமலேயே அறைக்குத் திரும்பினேன். அறையில் மேசைமீது அவர் கையெழுத்தில் ஒரு சீட்டு எழுதி வைக்கப்பட்டிருந்தது. பதறும் மனத்துடன் எடுத்துப் படித்தேன். ஒரே வரிதான். சுகந்திக்கு உடல்நலம் சரியில்லை. ஊருக்குச் சென்று சேர்ந்த பிறகு பேசுகிறேன் என்று மட்டுமே எழுதியிருந்தது. எனக்கு மனம் தாங்கவில்லை. உடனே கைப்பேசியில் அவரை அழைத்துக் கேட்டேன். பேருந்து இரைச்சலில் பேச்சு சரியாக காதில் விழவில்லை. காகிதக் குறிப்பில் இருந்ததையே மற்றொரு முறை சொன்னதுமட்டுமே புரிந்தது. அடுத்த நாள் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலைவரை அழைப்பு வரவில்லை. வகுப்புக்குச் செல்வதற்கு முன்னால் ஒருமுறை பேசிவிடலாம் என்று கைப்பேசியை எடுத்த அதே கணத்தில் மறுமுனையிலிருந்து சுகந்தியின் மரணச் செய்தியைத் தாங்கிக்கொண்டு அவர் அனுப்பிய குறுஞ்செய்தி வந்துவிட்டது. ஆழ்ந்த மௌனத்தில் சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். என்ன என்ன என்று கேட்ட அறைநண்பருக்கு விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லிக்கொண்டே பெருமூச்சோடு எழுந்த தருணத்தில் "தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு" என்னும் வரியை என்னையறியாமல் இரண்டுமூன்று முறைகள் மீண்டும்மீண்டும் சொல்லிக்கொண்டேன். மனம் கனத்தது.
paavannan@hotmail.comCopyright:thinnai.காம்

சுகந்தி சுப்பிரமணியன் அவர்கள் மறைவு !
புதையுண்ட வாழ்க்கையிலிருந்து மீண்டெழுதலின் ரகசியம்.'
-----------------------------------------------------------------------------------
சொல்லத் தெரியாத பறவைதன்
சந்தோஷத்தைபறந்து பறந்து நிரப்புகிறது
வெளியில்'என்ன ஒருவித மனதின்
மகிழ்ச்சியின் வெளிப்பாடு இது.
மனம் முழுக்க சந்தோஷத்தை அள்ளித்தெளிக்கும் வரிகள்.
இதே கவிதை மனதால்தான்'முக்கியமாய் எதுவமில்லை என்னிடம் தனிமை தவிர' எனவும் எழுத முடிந்தது.சுகந்தி சுப்ரமணியனை நேரில் சந்திக்க வேண்டுமென நினைத்திருந்தேன். நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவே இல்லை. அவருடைய அஞ்சலி கூட்டத்தில் புகைப்படத்தின் முன்னே மலர்களை இடும்போது உள்ளம் பனிக்க கைகள் நடுங்க மலர்களை வைத்தேன். சொல்லவொண்ணா ஏதோ ஒரு உணார்வு ஆட்கொண்டதை உணர முடிந்தது. வெளியே கூட்டத்தில் இருக்கிறோம் சரியாகு எனக் கட்டளையிட்டு மனதை சரி செய்யவேண்டியதாகிவிட்டது.அண்மையில் மறைந்த கிருத்திகா, சுகந்தி சுப்ரமணியன் அவர்களின் அஞ்சலி கூட்டம் 'அணங்கு' சார்பில் 28.02.09 அன்று 1.எலியட்ஸ் சாலை பெசண்ட் நகரில், ஸ்பேசஸ் கல்சுரல் சென்ட்டரில் நடைபெற்றது. இன்பா சுப்ரமணியம் அழைப்பு விடுத்திருந்தார். அஞ்சலி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். '
தோல்விகள் தொடர்கையில்
என்னுடனே நான் நட்புக் கொண்டேன்'
என்ற சுகந்தி மரணத்துடனும் நட்புகொண்டு பயணித்துவிட்டார்.
சுகந்தியின் இன்னும் சில வரிகள்..............................................................
எதுவும் தேவையில்லை என உதறித்தள்ள நானென்ன ஜடமா... வீட்டிலிருக்கும் ஜடப்பொருளுக்கு போட்டியாய் கிடந்து தவிக்கிறேன். எதுவாகவும் நானில்லை. *.
நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். அது;
நானாக இருக்க முடியாதுபோன
வருத்தம்தான்.
*வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?
நான் கேட்டேன் அந்தப் பெண்களை.
இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி.
எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்
வாழ்கிறேன் என்றாள் மற்றவள்.
ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி.
வெள்ளிக் கிழமையும், வியாழனும்
விரதமிருக்கிறேன் அம்மனுக்கு;
தீரும் என் கவலைகள் என்றாள்
மற்றுமொருத்தி. *
கிருத்திகாவின் அஞ்சலிக் கூட்டம் சந்திரலேகாவின் வீட்டில் நடந்தது என்ன ஒரு விசித்திரமான பொருத்தமாயிருக்க முடியும். வாசல் உள்ளே நுழைகையிலேயே வெளியே கடற்கரையின் ஆரவாரம், மக்களின், வாகனங்களின் இரைச்சல் கடந்து ஒருவித அமைதியை உணர முடிந்தது. அந்தக்கூடம் கிருத்திகா, சுகந்தி சுப்ரமணியன் படங்களுக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி பூக்கள் வைத்திருந்தனர். வெளி ரெங்கராஜனும் நானும் உள்ளே செல்லும்போது இளம்பிறை தனது உரையை முடித்துவிட்டுக் கிளம்பினார். அடுத்து மாலதி மைத்ரி அழைக்க அசோகமித்திரன் பேச வந்தார். ஹைதராபாதில் சுகந்தி சுப்ரமணியன் குடும்பத்தினருடன் தங்கியிருந்ததை நினைவு கூர்ந்தார். நல்ல பெண்மணி. அழகிய பெண்மணி. அழகிய மனமுடையவர். இரு பெண் குழந்தைகள். இந்த மரணம் அவரின் வலிகளிலிருந்து விடுதலையாக இருந்திருக்க வேண்டும் என்ரார். லதா ராமகிருஷ்ணன் சுகந்தியுடன் மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொண்டதை நினைவுகூர்ந்தார். கிருத்திகாவின் நாவல்கள் நேரடி நாவலாக வராமல் பத்திரிகைகள் மூலமாக வந்திருந்தால் இன்னும் இலக்கிய உலகில் கவனம் பெற்றிருப்பார் என்றார்.பிரசன்னா ராமசாமி அழுதுதான் அவர்களுக்கு அஞ்சலி செய்யவேண்டுமென்பதில்லை என்றார். நடிகை ரோகிணி இன்னும் இருவருடனான 17 நிமிட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அ. மங்கை தனது உரையில் கிருத்திகா, அவரின் மகள் மீனா சுவாமிநாதன் குறித்து பேசியவிதம் பெண் இருப்பியல் சார்ந்த பல கேள்விகளை முன்வைத்தது. தாய், மகள் என்னும் உறவின் இனிமை, புனிதம் கடந்து சொல்லவியலா, வர்த்தைகளில் எழுதவியலா சின்ன உரசலின் ஆத்மார்த்த உணர்வுச் சிக்கலை எந்த குறைசொல்தலோ, உதாசீன உணர்வோ இன்றி தெளிந்த உரையில் எடுத்துரைத்தார். கிருத்திகாவின் நூல்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றார். பன்னீர்செல்வம் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் நாவல் குறித்து பேசுகையில் வேறு எந்த பிற ஜாதியினரின் ஒரு கதாபாத்திரம்கூட அந்த நாவலில் இல்லை என்று எடுத்துக்கூறினார். இதுகுறித்து கிருத்திகாவிடம் கேட்க நேர்ந்தபோது 'எனக்குத் தெரிந்ததைதானே எழுத முடியுமெ'ன அவர் நேர்மையாக ஒத்துக்கொண்டதையும் கூறினார்.அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்த இன்பா வந்தவருக்கு நன்றியுரைக்க கனக்கும் மனதுடன் நிகழ்ச்சி முடிந்தது. நிகழ்ச்சிக்கு நடிகை ரேவதி, வெளி ரெங்கராஜன், கவிஞர்கள் அய்யப்பமாதவன், நரன்,தமிழ்நதி, நங்கை, உமாசக்தி, வித்யா என பலர் வந்து கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். படைப்பாளிகள் இருக்கும்போது சிறப்பு செய்யாமல் அவர்கள் மறைந்தபிறகு சிறப்பு செய்கிறோமே, இது என்னவொரு நியாயத்தில் சேர்த்தி. அவர்கள் இருக்கும்போது படைப்பினைப் பாராட்டியிருந்தால் மகிழ்ந்திருப்பார்களே என்று வருத்தமாகவும் இருந்தது. அதே சமயம் மறைவுக்குப் பிறகும் கண்டுகொள்ளப்படாமல் ஒரே ஒரு நாளேனும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியமைக்கு கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.புதையுண்ட வாழ்க்கையிலிருந்து மீண்டெழுந்துதன் சந்தோஷத்தை சொல்லத் தெரியாத பறவை ஒன்றுபறந்து பறந்து நிரப்புகிறது வெளியை
.அன்புடன் மதுமிதா

திங்கள், 9 பிப்ரவரி, 2009
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009
சனி, 31 ஜனவரி, 2009
சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா?
சுந்தர் அர்னவா (பக்ருதீன் அலி அகமது)
------------------------------------------- -----------
கமண்டலத்தில் நதி (நன்றி : கலாப்ரியா கவிதை)
-------------------------------------------------
சுப்ரபாரதி மணியனின் ஓடும் நதி பற்றி ஜெயந்தி சங்கரின் கட்டுரை சென்ற இதழில் வெளியாகியிருந்தது. அது சில யோசிப்புகளுக்குக் கொண்டு சென்றது.
துயரம் என்பது எப்படி வரும். உடலால், மனதால், சூழ்நிலையால் இன்னும் எப்படி எல்லாம் வருமோ? அப்படியெல்லாம் வருகிறது செல்லம்மிணிக்கு. செல்லமணியின் துயர நதி - அவள் அனுபவம் ஓடும் நதியாக மாற்றம் அடைந்துள்ளது. நதி என்ற குறியீடு பெண்ணையும், அவள் அனுபவ எண்ணங்களையும் குறிப்பதாகவே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
செல்லம்மிணியின் தற்கொலை எண்ணத்தில் ஆரம்பமான நாவல் அவள் நொண்டி புருஷ னோடு வாழ்வதாக முடிகிறது. நிறைய முரண்பாடுகள் நிறைந்தது இந்த நாவல். செல்லம்மிணியின் பல மாத அனுபவங்கள் நீண்ட அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது. அவளோடு சில கண அனுபவங் கள்கூட நாவல் முழுவதும் வருகிறது. பல வருட வாழ்க்கை சில பாராக்களில் முடிகிறது. இப்படித் தான் வாழ்வு அமைகிறது. சொக்கன் என்ற தலித் பாத்திரம் வில்லனாக ஏன் சித்தரிக்கப்பட வேண்டும்? சொக்கன் செல்லம்மிணியை விட்டுச் செல்லக் காரணம் என்ன என்பது நாவலில் இல்லை. செல்லம்மிணியோடு இருக்கும் துயரத்தோடு அவன் செல்கிறான். நாவலை விட்டு வெளியேறுகிறான். சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராகவே அந்த அத்தியாயங்கள் நீள்கிறது. ஆனால் பின் அத்தியாயங்களில் கவுண்டர்களின் சாதி ஆதிக்கம் குறித்தும், தண்ணீர் பிரச்சனையில் ஆதிக்க வெறியோடு தலித்களுக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலும் விவரிக்கிறது. அதில் கம்யூனிஸ்ட்டுகளும் சாதி பின்னணியோடு இருப்பதாக குற்றச்சாட்டை, விமர்சனத்தை முன் வைக்கிறார். இது சிறுபான்மையினருக்கு எதிரான குரலாக அமைந்துவிடும் அபாயத்தை தருகிறது.
நாவலில் செல்லம்மிணி அனுபவத்தைவிட நம்மை வியக்க வைப்பது என நாகாலாந்து கடிதங்களைச் சொல்லலாம். அது தனித்து நாவலாக வந்திருக்க வேண்டியது. செல்லம்மிணி வாழ்வோடு - எந்த வகையிலும் ஒட்டாதது. நவீன எழுத்தும் உத்தியும் புதிய அனுபவத்தோடும் ஆதி பொதுவுடைமை மக்களின் தொடர்ச்சியாகவும், கடிதங்கள் நன்றாக வந்துள்ளன. அப்புறம் மேரி, பக்ருதீன் உறவு வித்தியாசமாக அமைந்து உள்ளது. வயதானவர்களின் காமம், இளம் பெண் களின் தேவை என்ற உறவு நிலை - மிகச் சரியாக சித்தரிக்கப்படுகிறது. வக்கீல், செல்லம்மிணி உறவு கூட அப்படித்தான். ரமேஷ்குமார் அவள் வாழ்வில் வருவதை - அந்த வன்புணர்ச்சி நிகழ்வை விவரிப்பது - இன்னும் துயரம் மிக்க அவள் உடல் வலியையும், மனவலியையும் - இன்றும் பதிவு செய்ய வேண்டியது.
செகந்திராபாத் ஜுலியின் வாழ்வுகூட நமக்கு புது அனுபவமே. இன்னும் வடிவ நேர்த்தி கொண்டு நல்ல பெண்ணிய நாவலாக வரவேண்டியது அவரின் ஆண் பார்வை நாவலில் மிகுந்தே வருவதும்... நவீன கதை சொல்லல் முறையும் - வாசகன் அவரின் மற்ற நாவல்களில் கண்டடைந்ததே. என்றாலும் குறிப்பிடத்தக்க நாவல் ஓடும் நதி.
ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்
- பால்கி மாநில செயலாளர் SNEA - BSNL அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு
சென்னை அம்ருதா பதிப்பகத்தால் வெளிவந்திருக்கும் சற்று பெரிய நாவலான ஓடும் நதி வாசிப்பு சில பல தொழிற்சங்க தொடர் நடவடிக்கைகளால் தடைபட்டாலும், சுவாரசியமாய் வாசிக் கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அற்புத நாவல் என்பதை படித்து அறிந்தேன். சென்ற திண் ணை இதழில் சுந்தர் அர்னவா குறிப்பிட்டிருக்கு:ம தலித் பாத்திரம் வெளியேற்றப்பட்டிருப்பது, பொதுவுடைமைவாதிகள் மீதான சாதீய விமர்சனம் போன்றவற்றை மீறி மனதில் கொள்ளப்பட வேண்டிய விசயங்கள் இந்த நாவலில் உள்ளன.
நதியின் இரு மருங்கிலும் உள்ள கரைகள் பலரால், பல நோக்கங்களுக்கு பயன்பட்டிருப்பதைப் போல இந்த நாவலில் ஆசிரியரால் கொண்டுவரப்பட்டிருக்கும் பாத்திரங்களான செல்லம்மிணி, மேரி, நீலியக்கா, ராஜேஷ்குமார், இப்ராகிம், செல்வம், சொக்கன் இப்படி ஏராளமானவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். ஆறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதற்பிரிவில் செல்லம்மிணி மனது, செல்வம் இவர்களுக்கிடையேயான கடித உறவுகள் அதில் தங்களுடைய பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்கிற லாவகம் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கிறது. இயல்பாகவே ஆசிரியரின் பல நூல்களில் அவர் காட்டும் சுற்றுப்புறச்சூழல் அக்கறை பல சமயங்களில் வாசக ருக்கு உணர்த்தும் வகையில், காற்றில் கலந்த விஷம் - இரசாயன நெடி - தொழிற்சாலையின் பிரசவத்தால் ஏற்பட்டுள்ளது என்று எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. திருப்பூர் நெரிசலில் மூக்கினைச் சொறிபவர்கள் யாராக இருந்தாலும் - இந்த எழுத்துக்கள் நினைவுக்கு வரும் வகையில் இது அமைந்துள்ளது. நாகாலாந்தினைப் பார்க்காதவர்கள், நகரத்தின் நாசத்தில் வாழ்பவர்கள், இரைச்சலில் இரையாகும் நபர்கள் மட்டுமல்ல அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக நாகாலாந்து வாழ்கின்ற பகுதி இருந்துள்ளது என உணர முடிகிறது.
செகந்திராபாத் பகுதியில் சொக்கனுடன் சென்றதும், சொந்தக் காரணத்தில் சொக்கன் திரும்பிவிட்டாலும் அங்குள்ள நபர்களுடன் இருந்த நாட்கள் செல்லம்மிணியின் நிலை எப்படி இருந்தது என்பதை அற்புதமாக எழுதியுள்ளார் ஆசிரியர். படிப்பறிவில்லாத சூழலில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண் தனது ஆசையின் தொடர்ச்சியாக ஏற்படும் அதிர்வுகளாக நிகழ்ச்சிகள் அமைகின்றன. மொழி தெரியாத இடத்தில் வாழும் பெண்களின் மனநிலை, சந்தடி சத்தங்கள் அதிக மாக இருக்கும் இடத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் நிலைகள் அவற்றுடனே எழுதப் பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகள் இதனுடன் ஒத்துப்போகும் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறாள் பெண் என்பதை இந்நாவலின் மையப்பாத்திரத்தின் வழியாக சொல்வதில் ஆசிரியர் அடைந்திருக்கும் வெற்றி பாராட்டுக்குரியது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பணக்கார கணவான்களை ஆலயத்தில் அறிமுகமாக்கும் எழுத் துக்களில் தன் மனசாட்சியை பேச வைத்து சமூகத்தின் மீதான அக்கறையை ஆசிரியர் ஜெயபால் வக்கீல் மூலம் கொண்டுவந்துள்ளது புதுமையானது மட்டுமல்ல சமூக விரிவாக்கம் என்ற பெயரில் லாப கொள்ளையை உறுதிப்படுத்தும் ஆட்களுக்கு எதிராக போராடுவதற்கு உதவியானதும் கூட.
நாவலில் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் சுற்றியுள்ள பல இடங்கள் புழங்கப்பட்டிருப் பினும் அமைதி, கலவரம், மாசுபடும் நகரம் என்ற வகைகளுக்குள் அவை அடங்குகின்றன. நதி யின் நீர் எல்லா இடங்களிலும் புதியதானதாகும் என்ற விதிக்கு ஏற்ப நாவலின் மையக்கருவான செல்லம்மிணி தான் சந்தித்த ஆட்கள் அனைவருக்கும் உதவும் வகையில் வாழ்வினை அமைத்தி ருப்பது லாவகமாகவும் சற்றே பெண்களின் அவலத்தை உணரும் வகையிலும் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்வின் மிச்சங்களில் நதியின் மகத்துவத்தை உணருகிறோமோ இல்லையோ நாவலின் மூலம் ஓடும் நதியின் இயல்லை உணர்ந்திருக்கிறோம்.
(ஓடும் நதி அமிர்தா, சென்னை ரூ. 150)

கண்காணிப்பு அரசியல்
சுப்ரபாரதிமணியன்
--------------------
அதிகாரத்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன் பீடம் தகர்ந்து போகாமல் இருக்கவும் தன் கீழ் உள்ள மக்களைக் கண்காணிப்பதும் அதிகா ரத்தைக் கட்டமைத்து அழுத்துவதும் சாதாரணமாக நடந்து வருவதாகும். இந்தக் கண்காணிப்பின் கீழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் சுலபமாக ஆட் பட்டுவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து கிளம்பும் எந்த சிறு பொறியையும் அதிகாரத்துவம் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இவ்வகை கண்காணிப்பின் அரசியலில் சிக்கிக் கொள்ளும் ஒரு எழுத்தாளனைச் சுற்றிய உலகைச் சித்தரிக்கும் " The lives of others" என்ற ஜெர்மானியப்படம் இவ்வாண்டின் ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கும் படங்களில் ஒன்றாகும்.
அரசாங்கமும், நிறுவனங்களும், கட்சிகளும் தங்களுக்கென்று கட்டமைக்கப் பட்டவை தவிர மற்றவற்றையெல்லாம் தங்கள் கட்டமைப்பை சீர்குலைக்கச் செய்யும் நடவடிக்கைகளாகக் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். எந்தக் கலைவடிவத்தின் மையமும் கவனமாகக் கண்காணிக்கப்படுகிறது. இந்தக் கண்காணிப்பின் தீவிரத்தை அடக்குமுறை தனமாக எடுத்துக் கொள்கிறார்கள். உளவாளிகளும், கண்காணிப்பும் பொதுமக்களை ஊடுருவிக் கொண்டே இருக்கின்றன. எல்லா வகை சூதாட்டங்களுக் குள்ளும் பகடைகளாக்கப்படுகிறார்கள்.
ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் ரகசிய போலீஸ் துறையின் கண்காணிப்பு அரசியலைப் பற்றி இப்படம் பேசுகிறது. கிழக்கு ஜெர்மனியின் அரசு கண்காணிப்புப் பிரிவு ஸ்டஸி ஒரு லட்சம் ஊழியர்களும், இரண்டு லட்சம் ஒற்றர்களையும் கொண்டிருக்கிறது. தங்கள் குடிமக்களின் நடவடிக்கைகளை வெவ்வேறு தளங்களில் கவனிக்கிறது. எல்லாவற்றையும் முழுமையாக அறிந்து கொள்வது அதன் நோக்கமாக இருக்கிறது. கட்சிக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் தேவைப்படுகிறார்கள். அதேபோல் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இன்னும் இன்னும் கட்சிக்காகவே தேவைப்படுகிறார்கள். அவர்கள் ஆன்மாவைச் செம்மைப்படுத்தும் பொறியாளர்கள் அல்லவா? என்கிறார் இப்படத்தின் ஆரம்பக் காட்சியன்றில் முக்ய மந்திரியாக இருக்கும் கட்சியைச் சார்ந்த ஒருவர். சோசலிசத்தின் எதிரிகளை அடையாளம் காட்டுவது இவர்களின் பணி என்றும் சொல்கிறார். கட்சி அவர்களுக்கான கேடயமாகவும், வாளாகவும் இருக்கும் என்கிறார்.
இப்படத்தின் ஆரம்ப காட்சியில் மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓட முயன்ற ஒருவருக்கு உதவிய கிழக்கு ஜெர்மானியர் ஒருவர் விசாரணைப்படுத்தப்படுவதை விவரிக்கிறது. விசாரணையே சித்ரவதையாகவும் அமைந்துவிடுகிறது. வீஸ்லர் என்ற விசாரணை அதிகாரி உண்மை சொல்பவன் எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருப்பான். விசாரணையில் பொய் சொல்பவன் அதனை மனனம் செய்து வைத்து அப்படியே ஒப்பிப்பான். அதிலிருந்து தப்பிப்பதற்காக அழுவான் என்கிறான். வீஸ்லருக்கு டிரைமேன் என்ற நாடக ஆசிரியரை கண்காணிக்கும் வேலை தரப்படுகிறது. டிரைமேனின் வீட்டில் ரகசிய ஒட்டுக் கேட்புக் கருவிகள் பொருத்தப்பட்டு ஒட்டுக் கேட்கப்படுகிறது. டிரைமேனின் பெண் சிநேகிதியான டிரிஸ்டா மரியா ஒரு நாடக நடிகை. அவள் மேல் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், அமைச்சருமான ஒருவருக்கு கண். டிரைமேன் கைது செய்யப்பட்டால் மரியா தனக்கானவள் ஆவாள் என எதிர்பார்த்து டிரைமேனை முடக்க கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது. வீஸ்லர் இந்த காரணத்தை அறிகிற போது கண்காணிப்பை அவர் அலட்சியமாகவே எடுத்துக் கொள்கிறார்.
டிரைமேன் கலகக்காரர் இல்லையென்றாலும், கட்சியை விமர்சிப்பவர்கள் கையாளப்படும் விதம் பற்றி மாற்று கருத்து கொண்டவர். அதை வெளிப்படுத்தி விடுபவர் கூட. ஜெர்ஸ்கா எனும் இயக்குனர் ஒருவர் கண்காணிப்பு பட்டியலில் இருப்பதை அறிந்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கிறார். டிரைமேனின் பிறந்த நாளுக்கு வந்து பரிசளிக்கும் ஜெர்ஸ்கா பின்னொரு நாளில் தற்கொலை செய்து கொள்கிறார். மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையில் டிரைமேன் 1970க்குப் பின்னால் கிழக்கு ஜெர்மனியில் தற்கொலை விகிதம் அதிகரித்திருப்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவது கண்காணிக்கப்படுகிறது. (இப்படம் 1984க்கு பிறகு தளம் கொண்டிருக்கிறது) அதை எழுதியவனின் டைப்ரைட்டரின்மூலம் எது என அலசப்படுகிறது. டிரைமேன் பயன்படுத்தும் டைப்ரைட்டரை அவர் வீட்டில் ஒளித்து வைத்து பாதுகாக்கிறார்.
வீஸ்லர் கிறிஸ்டா மரியா நாடகக் கலையில் சிறந்து விளங்குபவள், கட்சி மந்திரிக்கு பலியாகி அவள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியமல்லை என்பதும் டிரைமேன் மீதுள்ள அபிமானமும் ஒட்டுக் கேட்பு விஷயத்தில் கட்சிக்கு சாதகமாக இருக்கும் வரையில் கண்காணிப்பு அறிக்கை தருவதில்லை. ஆனால் மரியாவின் மீது எரிச்சலடையும் மந்திரி அவளை போதைப் பொருள் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்து டிரைமேனின் நடவடிக்கைகள் குறித்து சித்ரவதை செய்கிறார். அவர் பயன்படுத்தும் டைப்ரைட்டர் எங்குள்ளது எனத் தெரிவித்து விடுகிறார். வீஸ்லர் அந்த டைப்ரட்டரை எடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் தேடும்போது இல்லாததாக்கி விடுகிறார். இது மரியாவை உறுத்த அவள் வாகனம் ஒன்றின் மீது விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். வீஸ்லரின் மீது சந்தேகம் வந்து பதவியிறக்கம் செய்யப்படுகிறார். சோவியத்தின் புதிய செயலாளராக கார்பசேவ் நியமிக்கப்படுகிற நாளில் இது நடக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெர்லீன் சுவர் தகர்ப்படுவது இன்னொரு செய்தியாகிறது.
ஸ்டஸி ஆய்வக அலுவலகத்தில் டிரைமேன் தன் மீது கண்காணிப்பு நிகழ்த்தப்பட்ட விபரங்களை அறிந்து கொண்டு வீஸ்லர் டைப்ரைட்டரை மறைத்தும், கண்காணிப்பு விடயங்கள் சரியாக கட்சிக்குத் தராமல் தன்னைக் காப்பாற்றியிருப்பதை உணர்கிறார். வீஸ்லரை தேடுகிறார். இரண்டாண்டுகள் கழித்து டிரைமேன் "செனட்டா பார் ஏ குட் மேன்" எனும் நாவலை வீஸ்லருக்கு சமர்பித்து வெளியிடுகிறார். அதை வீஸ்லர் பார்க்க நேரிடுகிறது.
வீஸ்லர் எழுத்தாளர்கள் கலைஞர்களை கண்காணித்ததில் அவருள் ஏற்படும் மாற்றமோ, எதிர் உணர்வோ வெளிப்படாமல் இருந்தாலும் அவர்களுக்கு எதிரானவராக உருவாவதில்லை. இந்த தார்மீக ஆதரவு எல்லா காலங்களிலும் எல்லா தரப்பு களிலிருந்தும் எழுத்தாளர்கள் பெற்றிருக்கிறார்கள். சமீபத்திய ரோமன் பொலன்ஸ்கியின் "பியானிஸ்ட்" படத்தில் போலீஷ் யூத இசைக்கலைஞன் ஒருவன் மீதான ஜெர்மானிய அதிகாரியின் பரிவை இப்படித்தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.
இப்படத்தின் காட்சியன்றில் டிரைமேன் பித்தோவானின் இசையைப்பற்றிச் சொல்கிறான்: "பித்தோவனின் இந்த இசையை முழுக்கக் கேட்டுக் கொண்டிருந்தால் நான் புரட்சியை நடத்தி முடிக்க மாட்டேன் என்று லெனின் சொல்லியிருக்கிறார்" இந்த இசையின் தாக்கம் வீஸ்லரை பெருமளவில் பாதித்திருக்க வேண்டும். எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக ஆன்மாவின் அடித்தளங்கள் என்பதையும் புரிந்திருக்க வேண்டும். வீஸ்லரிடம் ஒரு சிறு பையன் லிப்ட்டின் ஒரு நிமிட பயணத்தில் கேட்கும் கேள்வியும் அவரை வெகுவாக சிந்தனைகளுக்குள் செலுத்தியிருக்க வேண்டும்: "நீங்கள் ஸ்டஸி ஆளா. ஸ்டஸி ஆட்கள் சாதாரனவர்களை சித்ரவதை செய்வார்களா.." வீஸ்லர் பதில் சொல்ல இயலவில்லை. அந்த பதிலைத் தான் மரியாவின் மீதுள்ள இரக்கமாக்குகிறார்.
அவள் தனது மேம்பட்டக் கலையைக் காப்பாற்றிக் கொள்ள கட்சிக்காரர் ஒருவருக்கு பலியாகத் தேவையில்லை என்பதும் இப்படித்தான் இருக்க வேண்டும். டிரைமேனைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. டிரைமேனின் ஒரு நாவல் அவருக்கு சமர்ப்பிக்கப்படும் அளவு அவர் தன்னை உயர்த்திக் கொள்வது கட்சி, உத்யோகம், தனிமனித இழப்பு இவற்றையெல்லாம் மீறி நிகழ்வது தான். இதை எதிர்பார்த்து அவர் செய்ததில்லை. ஒடுக்கப்படும் நிலைகளில் சுதந்திரத்தை நாடும் தனிமனிதர்களின் விருப்பங்களின் குறியீடாக வீஸ்லர் தென்படுகிறார். தார்மீக ஊழலும் கறைபடிதலும் மீறி சிலர் நிற்க முடிகிறது. ஸ்பீல்பர்க்கின் "ஸ்சிண்ட்டலர்ஸ் லிஸ்ட்"டில் இடம் பெறும் மனிதனும் இவ்வகைச் சார்ந்தவன் தான். இவர்கள் கண்காணிப்பு அரசியலுக்கு எதிரானக் கலகக்காரர்களாகிறார்கள்.

சனி, 24 ஜனவரி, 2009
ஈரம் : சிறுகதை : சுப்ரபாரதிமணியன்
திண்ணை
ஈரம்
------
சுப்ரபாரதிமணியன்
----------------
கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்ட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து இன்னும் முன்னதாகவே என்றாகிவிட்டது. கதவை அடைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை சிவக்கண்னனும் உணரந்திருந்தான்.
செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன் கதவைத்திறக்கிற ஒவ்வொரு நாளும் கத்துவது இப்படித்தான் இருக்கும். : " முந்தியே வந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்ற உசிரெ வாங்கறே"
அணையிலிருந்து வரும் பூச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகக் கதவை அடைக்க வேண்டியிருக்கும். அணையைச் சுற்றியிருக்கிற எல்லா வீடுகளிலும் இப்படித்தான். முன்பெல்லாம் கொசுவை அடிப்பது போலத்தான் நினைத்து உடம்பில் ரத்தக்கறைகளைக் கொண்டிருந்தான். கொசுக்கள் ரொம்பவும்தான் கொழுத்துத் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவை கொசுக்களல்ல என்று தெரிந்தற்கே பல மாதங்களாகி விட்டன. அவை ஏதோவகைப் பூச்சிகள் , ரசாயனப்பூச்சிகள்ள்.
அணையில் தேங்கி நிற்கும் ரசாயனக் கழிவுகளைத் தின்று பெருத்து விட்டன. ரசாயனக்கழிவுகளின் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். இந்தப்பூச்சிகளும் விழுந்து எழுகிற போது ராட்சதையாக மாறி விடும். இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு žக்கிரம் கொழுக்கும். விவசாயத்திற்கென்று கட்டப்பட்ட அணை. சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தோடி வந்து நிற்கிற இடமாகி விட்டது.
. அணை நிரம்பி விட்டது . வெடிக்கவிருக்கும் வெடிகுண்டைப்போல தகதகத்து நிற்கிறது. மதகுக் கதவுகள் இற்றுப் போய் விட்டன. அணைக்கதவுகளித் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நீர் மெல்ல மெல்ல வழிய ஆரம்பிக்கும். அணை நிரம்பிய பின்பு திறந்து விடாமல் இருக்க முடியாது. சமீபமாய் பெருத்த மழை பெய்து விட்டது. திறந்து விட வேண்டாம் என்று கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாயிகள் கதறுகிறார்கள். சாயக்கழிவு தண்ர்ரோடு கலந்து இருபது மைல்களுக்குப் பரவ எல்லாம் சாயமாகி விடுகின்றன என்று தூரத்து ஊர்காரர்களெல்லாம் அலறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவக்கண்ணனுக்கு எல்லாம் மூழ்கிப்போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சாயங்களை அடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக மனிதர்களை கும்பல்கும்பலாக அடித்துக் கொண்டு போகட்டும் என்றிருக்கும்.
கதவை அடைத்து விட்டால் இருக்கும் அசௌகரியங்களில் ஒன்று தண்ர் லாரிகளின் பிரத்யேக ஓசையும் தட தடப்பும் சரியாகக் கேட்க முடியாமல் போவதுதான். அ€ணைக்கட்டும், சுற்றியுல்ள நிலமும் சாயம் பூத்து விட்டன.குடிப்பதற்கு லாயக்கற்று போய்விட்ட போது நாற்பது கி மீ க்கு அப்பாலிருந்து தடதடத்து தண்ர் லாரிகள் வந்து போகின்றன. குடிக்கிற தண்ரை ஏற்றி வரும் தண்ர் லாரிகள். கதவை அடைத்து விட்டால் கதவுகளுக்குப் பின்னாலும் ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரம் கேட்டு விடுவதால் தண்ர் லாரிகளின் ஹாரன் சப்தங்கள் சில சமயங்களில் கேட்காமல் போய் விடுவதுண்டு. யாராவது கதவைத் தட்டி சொல்லி விட்டுப் போங்களேன் என்று சிவக்கண்னன அலறியிருக்கிறான். ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லா கதறல்களும் அடக்கம் என்பது போலாகிவிட்டது.
ரசாயனப்பூச்சிகளை விரட்டுவதற்காக ஆளுக்கொரு உபாயம் வைத்திருக்கிறார்கள். சிவக்கண்ணனுக்கு எல்லாமே வினேதமாகத்தான் தெரிந்தன. கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டி பயமுண்டாக்கி துரத்திவிடலாம் என்றுதான் முன்னம் நினைத்திருந்தான். ஆனால் தேனடையை மேய்க்கும் தேனீக்கள் மாதிரி கொசகொசவென்று உடம்பை மொய்ப்பது சாதரணமாகிவிட்டது. சிவக்கண்ணனுக்குத் தெரிந்த ஒரே வித்தை வேப்பிலை புகை போடுவதுதான். முன்பெல்லாம் கொழுந்தை விட்டு விட்டு முற்றின இலைகளய்க் கொண்டு வந்து போட்டு புகையெழுப்புவான். கமறலுடன் அறைகள் முழுக்கப் பரவும். இப்போதெல்லாம் எவ்வளவு அடர்த்தியாய் புகை கிளம்பினாலும் கமறல் வருவதில்லை. முத்துசாமி செய்யும் வித்தையும் செலவும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. டுயூப்பிலிருந்து பற்பசை மாதிரி எதையோ பிதுக்கிக் -காள்வான். உள்ளங்கையில் வைத்து நசுக்கிக் கொண்டு முகர்ந்து பார்ப்பான். சரசரவென்று கைகள் மற்றும் கால்களில் பரவலாகத் தேய்த்துக் கொள்வான்.
" பறக்கிற டைனோசர் இருக்கா'
" இருந்திருக்கும் .இல்லீனன்ன நாலெட்டு வச்சு ஒரு தெருவையேன் அடச்சிக்குற டைனசரை சினிமாவிலெ காமிப்பாங்களா "'. அவன் டுயூப் பிதுக்கலுக்கென்று செலவு செய்யும் தொகை செல்வியின் ஒரு வாரச் சம்பளத்திற்கு ஏக தேசம் வந்திருந்தது. லாரித்தண்ரை நம்பாமல் மினரல் வாட்டர் கேனை ஊருக்குள் கொண்டு வந்தவன் முத்துசாமி என்ற பெயரும் பெருமையும் ஊருக்குண்டு. சிறுவாணித்தண்ரின் சுவையை விட மினரல் கேன் தண்ரின் சுவை அவனை திணறடித்தது என்பது சமீப சாதனை. இன்னொரு சாதனைச் செய்தி சமீபமாய் பதிந்தது என்னவென்றால் ஆயுத பூஜையின் போது செல்வி அவள் வேலை செய்யும் பனியன் கம்பனியிலிருந்து வழக்கமாய் கொண்டு வரும் பத்து படி பொட்டலத்துடன் ஒரு
டி சட்டையையும் கொண்டு வந்தது. கிடைத்த டி சட்டையைப் போடப்போகிற கற்பனை அவனைச் சுத்தமான அணை நீருக்குள் நீச்சடிக்க இறக்கி விட்ட மாதிரி இருந்தது. டி சர்டின் நீலமும் பச்சையும் சிவப்பும் கலந்த வர்ணக் கல€வை அவனுக்குப் பிடித்திருந்தது. " நம்ம ஊரு அணையில உங்களை முக்கி எடுத்த மாதிரி இருக்கீங்களோ" ரசாயனப் பூச்சியென்று அவனை அவள் சொல்லாதது ஆறுதலாகத்தான் இருந்தது.
தண்ணிர் லாரி நேற்றுதான் வந்திருந்தது.இன்றைக்கு வராது என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கதவைச் சாத்திவிட்டுப் புகை போடலாம்.. ஆரம்ப நிலையிலானக் கமறலைத் தவிர்த்து விட்டால் மூச்சு முட்டுவது கூடத் தெரியாது. கமறல் இல்போதெல்லாம் அபூர்வமாகத்தான் வருகிறது.
வேப்பிலைகளை மூலையில் சேர்த்திருந்தான். நேற்று நல்லூர் போனபோது வேப்பிலைலளைப் பறித்து பிளாஸ்டிக் பை ஒன்றில் நிரப்புவதற்கென்று ரொம்பதூரம்தான் போக வேண்டியிருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மொட்டையாகி விட்டன. நல்லூர்ப்பக்கம் போகிற போது வெளுத்ததாய் சில தென்படும் விளக்கெண்ணெயைக் கண்களில் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கும். வேப்பங்குச்சிகளையும் கொஞ்சம் ஒடித்துப் போட்டுக் கொள்வான். பற்கள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. கிருஸ்ணமூர்ர்த்தி பிரஸ் போட வேண்டாம். கைகளில் விளக்கவும். பற்பசை வேண்டாம் .ஆயுர்வேதப் பல்பொடி போதும். வேப்பங்குச்சி குறைந்தது நான்கு நாட்களுக்காகும். ஒரு முனையை ஒரு நாள் என்று ஆரம்பித்து நான்கு நாளில் பிடி அளவிற்கு வரும் வரையில் உபயோகப்படுத்துவதில் தன்னைத் தேர்ச்சியுள்ளவனாக்கிக் கொண்டான்.
புகை போடும் மண் சட்டிகள் அடிக்கடி உடைந்து போகின்றன.. சூடான நிலையில் அவற்றை கையில் தொடுவதும் , நகர்துவதும் சிரமமாக இருந்தது. பழைய ஒடுக்கு விழுந்த அலுமினியச் சட்டியை சமீபமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். செத்த எலியைத் தூக்குவது மாதிரி அலுமினியச் சட்டியைப் பயன்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது..
வேப்பிலை பழுப்பு நிறத்துடன் துவண்டு போய் விட்டது. பிளாஸ்டிக் பையிலிருந்து கொட்டும் போது காய்ந்த இலைகளுக்கான சரசரப்பு வந்து விட்டது. காகிதங்களைப் போட்டு தீ மூட்டினான். சோம்பலுடன் எரிய ஆரம்பித்தது. ஒரு சொட்டு விளக்கெண்ணை அல்லது பெற்றோல் இருந்தால் சுலபமாகப் பற்றிக் கொள்ளும். குனிந்து ஊத சாம்பல் துணுக்குகள் முகத்தில் தெறித்தன.
மெல்ல புகை பரவ ஆரம்பித்ததும் முன் பக்க அறையின் இடது மூலையில் வைத்தான். உள் அறைக்குள் மெல்ல புகை பரவும் . தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொண்டு கிடக்கல்லாம். ரசாயனப் பூச்சிகள் எங்காவது மூலைகளில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அவனே அவனைப் பாராட்டிக்கொள்வதைப் போல் வலது கையின் மேற்பகுதியைக் கொசுவை அதட்டுவது போலத் த்ட்டிக் கொண்டான். மெல்ல புகை ஆரம்பித்தது. லேசான கமறல் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையினுள் மூழ்க ஆரம்பித்தான். இடது கையில் வந்து தைரியமாக உட்கார்ந்தது ஒரு ரசாயனப் பூச்சி. புகையை விழுங்கி அது சிவக்கண்ணனின் பாதி உடம்பிற்கு வந்தது. வாயைத் திறந்த போது புகை வெளிவந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டு அது வாயைத் திறந்தது.
* பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக சிவக்கண்ணனை உட்கார வைத்திருந்தார்கள். பத்திரிக்கையாளார் சங்கத்தின் பெயர் அவன் தலைக்குப் பின்புறம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அடைபட்டிருந்தன. ஏகதேசம் நாற்காலிகளில் அடைபட்டிருந்தவர்களின் கைகளில் இருந்த கேமிராக்கள் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து நின்றன. வந்து சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் வந்த காரணத்தால் அவர்கள் கேட்டது ஒரே மாதிரியான கேள்விகள் சிவக்கண்ணனுக்கு அலுப்பைத் தந்திருந்தது.
சிவக்கண்ணனுக்கு கால்களில் ஒரு வலி ஆரம்பித்திருந்தது. வலது காலை எடுத்து இடது காலின் மேல் போட்டுக் கொண்டான். ஒருவகை ஆசுவாசமாய் பெருமூச்சு வந்தது.. பெரும்பான்மையோர் கேட்ட கேள்வி; :"ரசாயனப் பூச்சியை இந்த வெற்றிப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நீங்கள் எப்படி அதன் மொழியை புரிந்து கொண்டு கட்டளையிட ஆரம்பிதீர்கள் "
ரரசாயனப் பூச்சியைப் பார்த்தான், தனது இடுப்பு உயரத்திற்கு இருந்தது. முப்பது நாற்பது கிலோ எடையாவது இருக்கும். சற்று சிரமப்பட்டுதான் இடுப்பில் அதை வைத்து இடுக்கிக் கொண்டு ஸ்டுடியோவிற்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றிருந்தான். அதன் கண்களில் ஒளிர்ந்த ஒளியில் இருட்டான பகுதி வெளிச்சமாகி இருந்தது. ஏதாவது சிரமம் வருகிற போது ராட்சத பூச்சியின் நகங்களச் சுலபமாக தற்காப்பிற்கென்று பயன்படுத்திக் கொள்ளலம். அவ்வளவு சௌகரியமான நீளத்தில் இருந்தது.
" படத்தில் ராட்சத மனிதர்களியெல்லாம் செத்த எலிகளத் தூக்கிப் போடுவது போல போடுகிறாயே ரசாயனப் பூச்சியே, உனது அன்பு முகத்தை தடவலாமா." பெண் நிருபர் ஒருத்தி கேட்டாள். அவளின் கண்களில் ஒரு வகை பயம் இருந்தது. கேள்விகளைக் கேட்டு விட்டு நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். " என்ன எதிர்பார்க்கிறிர்கள். எனது ராட்சத பூச்சி உங்களை நெருங்கி முத்தமிட வேண்டுமா அல்லது பலத்காரம் செய்ய வேண்டுமா " சிவக்கண்ணன் ஆங்கிலத்தில் கேட்டபடி முறுவலித்தான். பெண் நிருபரும் சிரித்தாள். லேசான லிப்ஸ்டிக் அவளின் உதட்டை வžகரமாக்கியிருந்த்து. அவள் போட்டிருந்த காலர் சட்டையில் பறந்து கொண்டிருந்தது ஒர் பட்சி. ரசாயனப் பூச்சி காலர் சாட்டையில் இருந்த பட்சியஈப் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பை அசைத்துக் கொண்டிருந்தாலும் பட்சி சற்றே பறப்பது போலக் க'ட்சியளித்தது.
" நீ துவம்சம் செய்ய யார் யாரோ இருக்கிறார்கள். தீயது தோற்கும்." என்ற தர்மத்தை நீயும் வெற்றி பெற்றுச் சொல்லிக்கொண்டிருக்கிறாய் இப்படத்தில். ஆனால் நீ ரசாயனப் பூச்சியாக இல்லாமல், கிருஸ்ணப்பருந்தைப் போலவோ, ராட்சதப் புறாவைப் போலவோ இருந்திருந்தால் உனக்கு கோவில் கட்டலாம். "கிழ நிருபரின் தாடி ஏக தேசம் வெளுத்திருந்தது மீசைக்கு மட்டும் டை அடித்து அழுத்தமான கறுப்பாக்கியிருந்தார். அவர் போட்டிருந்த முரட்டுக் கதர் சட்டையின் அழுக்குச் சட்டைக்குப் புது நிறத்தைக் கொண்டு வந்திருந்தது.
" சினிமாவில் நடிக்கிற எல்லோருக்கும் கோவில் கட்டி விடுவீர்கள் போலிருக்கிறது. கதாநாயகர்கள், நாயகிகள் மூலஸ்தானத்தில் இருக்கும் போது இது போன்ற பட்சிகளும் ராட்சதபறவைகளும் மூல ஸ்தானத்தைப் பிடிக்க முடியாதே " சொல்லி வைத்த மாதிரி எல்லா காமிராக்களும் மிளிர்ந்து மறைந்தன. வீடியோ காமிராக்களின் பிரேமிற்குள் ரசாயனப்பூச்சியின் ஒளிரும் கண்களை அடைத்தார்கள். எல்லோரும் வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் போல அவசர கதியில் எழுந்தார்கள்..
" ராட்சத மனிதர்களையெல்லாம் அலாக்காகத் தூக்கிப் போடும் இப்பூச்சி ரசாயன அணைக்கட்டை வாரியெடுத்து எங்காவது கொண்டு போய் விடலாம் ". பூச்சியை நெருங்கியவர் சிவக்கண்ணனைப் பார்த்தபடி சொன்னார். திகைப்பில் பூச்ச்சியின் கண்கள் மிளிர்ந்தன.
" தற்கொலை செய்து கொண்ட நடிகையின் அம்மா பேட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. நட்சத்திர ஓட்டலில் நடிகையின் தற்கொலை பற்றின கிசுகிசுக்களுக்கு முறையான பதில் கிடைக்கலாம். நடிகையின் குடிப்பழக்கமும், மூன்றாவது காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள தாமதப்படுத்தியது பற்றி நிறைய ஹேஸ்யங்கள் கிடைக்கும். " கலைந்து போவதில் žரான வேகம் இருந்த்து. பெண் நிருபர் ரசாயனப் பூச்சியின் அருகில் வந்தாள். அவளின் காலர் சட்டையில் இருந்த பட்சி மெல்லப் பறந்து கொண்டிருந்தது. ராசாயனப்பூச்சியின் சொரசொராக் கன்னத்தைத் தடவினாள். பூச்சிகிறங்கிப்போனது போல கண்களை மூடியிருந்தது. கண்களைத்திறக்காதபடி இறுக்கியிருந்த்து. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடிமறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடி மறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியபடியே இருந்தது. " சினிமாவில் நடித்த ராட்சச பூச்சி ஆயிற்றே.. ஞாபகமாக இருக்கட்டுமே " . இன்னொரு நிருபர் சற்றே முதிர்ந்த இறக்கையினைப் பிய்த்தெடுத்தார். ஒருவகை வரிசை அமைந்து விட்டது. வருகிற ஒவ்வொருவரும் ராட்சதப்பூச்சியின்யைத் தொட்டு அவர்களின் கைவிரல்களின் வலிமைக்கேற்ப அதன் உடம்பிலிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். " பெர்லின் போயிருந்த போது கிழக்கு செர்மனிக்கும், மேற்கு செர்மனிக்கும் இடையிலான பெர்லின் சுவரின் இழந்த இடிந்த துண்டை எடிடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். இதுவும் இருக்கட்டுமே" ராட்சதப்பூச்சி அதன் இறகுகளை மெல்ல இழந்து முழு நிவாணமாகிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒளி வலுவிழந்திருந்தது. ஒரு வாகை சோம்பல் தன்மையுடன் கண்களைத் திறந்து மூடியது. கண் புருவத்திற்கு மேலிருந்த மயிர்களும் உதிர்ந்திருந்தன. சமையலுக்கென்று சுத்தம் செய்யப்பட்ட கோழி போல் பூச்சியின் உடம்பு நிர்வாணமாகிச் சிறுத்தது. ஓங்கித் தட்டினால் கொசுவைப் போலச் சிறுத்துவிடும் என்றபடி வலது கையினை முழுபலத்தையும் பிரயோகித்து கீழிறக்கினான்.
வேப்பிலை புகை முழுசாகக் குறைந்து போயிருந்தது. கண்களைத்திறக்காதபடி எரிச்சல் அப்பியிருந்ந்தது. வலது கையை உயர்த்தித் தாழ்த்தியபோது சற்றே ஈரம் தென்பட்டது. கொசு ஒன்றின் ரத்தக் கசிவு பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தது.
சுப்ரபாரதிமணியன் . subrabharathi@gmail.com

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)