சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 9 மே, 2023
சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
1.
சூழலுக்காக உயிர் கொடுத்த ஒருவரின் கதைதான் என் “ புத்து மண் “ நாவல்.அதன் கதாநாயகன் மணியன் சுற்றுச்சூழல் விசயங்களைப் பேசி தன்னை மாய்த்துக் கொள்கிறான்.,மணியனைப் பற்றி தேனி விசாகன் சில வார்த்தைகளில் இப்படி சொல்கிறார் :
0
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்” ஆக, பின் கேள்விகள் ஏதுமின்றி மக்களுக்கு நலம்பல தந்துகொண்டிருந்த இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால் வந்துவிட்ட பெரும்பாதிப்பிலிருந்து விடுபட குறுக்கு வழியில் விடை தேடும் பணிக்கு பன்னாட்டுப் பெரும் நிதி ஒதுக்கி, தற்போது இயற்கையிடம் தீர்க்கமுடியாக் கடன்பட்டுக் கிடக்கின்றான்.
படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய் குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின் அத்துமீறல், அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம் அத்தகைய படைப்பாளியான சுப்ரபாரதிமணியின் காதுகளில் ஊடுறுவியதை அரியதொரு எழுத்தாக்கி, தனக்கே உரியதான நடையில், புதிய பாணியில் சுட்டிக்காட்டி இடித்துரைத்திருக்கின்றார் இந்த “புத்துமண்” என்ற அழகிய சிறு நாவல் வாயிலாக.
மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள் அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி. மலை வளம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை. “புத்துமண்” அந்த அவசரத்தை மிக நேர்த்தியாகவும், “நறுக்” என்றும் கோடிட்டுக் காட்டுகின்றது. சுற்றுச்சூழல் குறித்து பல கட்டுரைகள், கதைகள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில் தனது “புத்துமண்” நாவலில் சற்று வித்தியாத்தையும், கற்றுக்கொடுத்தல் தன்மையையும், பூமியின்பாலான தனது ஏக்கத்தையும் குழைத்தளித்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
நாவலெங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பல விவரணைகளை மிகத் தெளிவாகவும், பொருத்தமாகவும் மாத்திரமல்ல, சிலேடையுடனும் வைத்திருப்பது பாராட்டுக்குரியது. மணியனின் மனைவி சிவரஞ்சனியின் மனநிலையை ஒத்துதான் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதே நேரத்தில் முன்பு மணியன்களாக இருந்த பலபேர், நாளடைவிலோ அல்லது வெகு விரைவாகவோ “MONEYயன்” களாக மாறிவிடுவதுதான் காலக்கொடுமை. உண்மையில் இன்று மணியன்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு பெருமிதத்தையும், MONEYயன்” களாக மாறி உலா வந்துகொண்டிருப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் இந்த “புத்துமண்” இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
“நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில் இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள் கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும்” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக் காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவல் படிக்கும்போது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
பல நாவல்கள் படிக்கின்றோம், பாதிப்படைகின்றோம், சிலாகிக்கின்றோம், பரவசடைகின்றோம். ஆனால் உள்ளபடியே மனதளவிலும் உடலளவிலும் பதற்றப்பட வைக்கின்ற நாவல்களும் இருக்கின்றன. அத்தகைய பதற்றத்தை இந்தச் சிறு நாவல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் சுப்ரபாரதிமணியனின் வெற்றி, மகத்தான வெற்றி.
“எல்லாம் என் ஆசிரியர்
அனைவரும் என் குருநாதர்
பாரில் உள்ளதெல்லாம் எனக்குப்
பாடம் சொல்கிறதே…”
“புத்துமண்” நாவலும் பாடம் சொல்கிறது. இந்த மண் ஊர்தோறும் கொண்டு செல்லப்பட வேண்டிய சத்து மண்.உயிர்மை பதிப்பக வெளியீடு இது
2.
சூழலுக்காக உயிர் கொடுத்தோர் என உலகெங்கும் பல பலிகள் ஆண்டுதோறும் நிகழ்வதை சிதம்பரம் ரவிச்சந்திரன் இப்படிக் குறிப்பிடுகிறார்:
கடந்த பத்தாண்டுகளில் 1700க்கும் மேற்பட்ட சூழல் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு போராளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வாடகைக் கொலையாளிகள், குற்றக்குழுக்கள் மற்றும் சொந்த அரசுகளால் 2012 முதல் 2021 வரை 1733 நிலப் பாதுகாவலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளி நாடு
குளோபல் விட்னஸ் (Global Witness) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த கொலைகள் பிரேசில், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ மற்றும் ஹாண்டுரஸ் நாடுகளில் மற்ற உலக நாடுகளை விட அதிகமாக நடந்துள்ளது. 2012 முதல் இந்த தன்னார்வ அமைப்பு சூழலிற்காக உயிர் கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுகிறது.சட் வாடி கொலை
2012ல் இந்த அமைப்பின் தலைமை செயல் அலுவலர் மைக் டேவிஸுடன் கம்போடியாவில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது போராளி சட் வாடி (Chut Wutty) கொல்லப்பட்டார். அதில் இருந்து இந்த அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றது.
செயலற்ற உலகம் - செயல்வேகம் பெற்ற கொலைகள்
2020ல் கொரோனா தொற்றினால் உலகம் செயலற்று முடங்கிக் கிடந்தபோதும் சூழலிற்காக பாடுபடுபவர்களின் கொலைகள் உலகம் முழுவதும் தொடர்ந்தன. அந்த ஆண்டில் மட்டும் சாதனையளவாக 227 பேர் கொல்லப்பட்டனர்.
அதிகார அமைப்புகளுடன் முரண்பட்டு சூழல் காக்க கேள்வி கேட்பவர்கள் உலகம் முழுவதும் கொல்லப்படுகின்றனர். உலக மக்கட்சமுதாயம் இந்த நிலையை மாற்ற விழித்துக் கொள்ள வேண்டும் என்று மைக் டேவிஸ் கூறுகிறார். இந்த கொலைகளால் குறைந்த வருமானம் உடைய சமூகங்கள், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் உலக மக்கட்தொகையில் 5% மட்டுமே. கொல்லப்பட்ட பிரிவுகளில் இவர்கள் 39%.
காரணங்கள்
சுரங்கத் தொழில், பெருமளவில் மரம் வெட்டும் தொழில் மற்றும் விவசாய விரிவாக்கத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை அதிகம் செய்கின்றன. இதற்கான காரணங்கள் பற்றி உலகம் நன்கறிந்ததே. இயற்கையைப் பாதுகாக்க போராடும் சூழல் மண்டலங்களில் இந்த உயிரிழப்புகள் அதிகம் நடைபெறுவதால் இவை வேறு காரணங்கள் சொல்லி மூடி மறைக்கப்படுகின்றன.
மறைந்த சாட் வாடி, இத்தகைய கொலைகள் பற்றிய உண்மையான விவரங்கள் உலகிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும், இவற்றைத் தடுக்க வழி காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புள்ளிவிவரங்கள்
2021ல் காங்கோ மக்கள் குடியரசில் விரங்கா (Virunga) தேசியப் பூங்கா காவலர்களில் எட்டு பேர் உட்பட 200 பேர் கொல்லப்பட்டனர். சுரங்கத் தொழிலும், எண்ணெய் எடுக்கும் வேலையும் அதிகமாக நடப்பதால் சமீப ஆண்டுகளில் இத்தகைய அநீதிகள் இங்கு அதிகமாகி வருகின்றன. கென்யாவில் சூழலியளாளர் ஜோஆனா ஸ்டச்பரி (Joannah Stutchbury) 2021ல் அவருடைய வீட்டிற்கு முன்னால் வைத்துக் கொல்லப்பட்டார்.
பிரேசிலில் நடப்பதென்ன?
கொலம்பியாவின் சூழல் செயல்பாட்டாளர் ஏஞ்சல் மைரோ காட்டஜினா (Angel Miro Cartagena) சூழல் காக்கும் பணியில் 2021ல் கொல்லப்பட்டார். 2022 ஜூனில் செய்தியாளர் டாம் பிலிப்ஸ் (Dom Phillips) மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புகழ்பெற்ற கார்டியன் மற்றும் அஃப்சர்வர் இதழ்களுக்காக சூழல் அநீதிகள் குறித்து மிகத் தீவிரமாக எழுதி வந்தவர் இவர்.
இவருடன் சேர்ந்து, பழங்குடியினர் குறித்த ஆய்வாளர் புருனோ பெராரா (Bruno Pereira) பிரேசில் அமேசான் காடுகளில் ஜவாரி (Javari) பள்ளத்தாக்கில் கடத்திச் சென்று கொல்லப்பட்டார். பிலிப்ஸ் “அமேசானைக் காப்பாற்றுவது எப்படி?” என்ற தலைப்பில் நீடித்த நிலையான வளர்ச்சி பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். புருனோ நேர்முகங்கள் காணுவதில் அவருக்கு உதவியாக இருந்தார்.
சில வெற்றிகள்
தென்னாப்பிரிக்கா கிழக்கு கேப் பகுதியில் திமிங்கலங்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியை அழித்து ஷெல் நிறுவனம் எண்ணெய் சுரங்கம் நிறுவுவதை அப்பகுதி பழங்குடியினர் செப்டம்பர் 2022ல் நீதிமன்ற வழக்கு மூலம் தடுத்து நிறுத்தினர். இந்தோனேஷியா சாங்ஹி (Sanghie) தீவுப்பகுதியில் 2022 மே மாதத்தில் மக்கள் ஒன்றுகூடி கனடாவைச் சேர்ந்த நிறுவனம் அவர்களின் வாழிடத்தில் தங்கச் சுரங்கம் தோண்டும் முயற்சியை நீதிமன்றத் தீர்ப்பு மூலம் தடுத்தனர்.
பணக்கார பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கிடைத்த இத்தகைய வெற்றிகளே ஆய்வறிக்கையை தயாரிக்க தன்னைத் தூண்டியது என்று இதன் ஆசிரியர் அலி ஹைன்ஸ் (Ali Hines) கூறுகிறார்.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பிரேசிலில் 342, கொலம்பியாவில் 322, மெக்சிகோவில் 154, ஹாண்டுரஸில் 170, பிலிப்பைன்ஸில் 217 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமூக அநீதி, ஊழல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள். ஊழல் அதிகாரிகள், பணம் வாங்கிக் கொண்டு அநீதியை தீர்ப்பாக மாற்றிச் சொல்லும் நீதிபதிகள் போன்றோர் அதிகமாக இருப்பதால், தப்பித் தவறி விசாரணை நடந்தாலும் அது நீதியின் வழியில் செல்வதில்லை என்றும், சூழல் செயல்பாட்டாளர்களுக்கு உரிய அடிப்படை பாதுகாப்பை உலக அரசுகள் வழங்க வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது. அநீதி செய்யும் நிறுவனங்கள் சட்டரீதியாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும். (- சிதம்பரம் இரவிச்சந்திரன் – கீற்று இணையதளக்குறிப்புகள்)