சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 17 மார்ச், 2023
ஒரு பேட்டியை நேரடியாகக் கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாமல் இப்படியும் ஆரம்பிக்கலாம்..
0
சுப்ரபாதி மணியின் பேட்டிகள் : தொகுப்பில்
சிங்கப்பூர் நகரம் மெல்ல இருட்ட துவங்குகிறது. தெருக்களில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டன. வாகனங்கள் விரைவாகச் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒழுங்கமைப்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த உணவு விடுதிக்கு வந்து விடுமாறு திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தகவல் தெரிவித்து இருந்தார். நண்பர் ரெ. பாண்டியன் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்ணில். ரெ.பாண்டியன் அவர்கள் என்னுடன் வர முடியாத சூழலில் இருந்தார். அவர் அந்த உணவு விடுதிக்கு செல்வதற்கான பேருந்து அடையாளத்தையும் வழியையும் சொல்லித் தந்தார் .வழியை விசாரித்து பக்கத்தில் இருந்த ஒரு மலர் கடையை பார்த்தபடி அந்த உணவு விடுதிக்கு வந்து சேர்ந்தேன். முதல் நாள் நா. முத்துசாமி அவர்களின் கூத்து பட்டறை நாடகம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கனிமொழி அவர்களும் அரவிந்தன் அவர்களும் வந்திருந்தார்கள் சிங்கப்பூரின் புகழ் பெற்ற நாடகவியலாளர் இளங்கோவன் அவர்களும் வந்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் தமிழ் முரசுக்கு பேட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
உணவு விடுதியில் வெளியில் போடப்பட்டிருந்த மேசைகளை பார்த்துக் கொண்டு அவற்றின் ஒழுங்கமைப்பை ரசித்துக்கொண்டு அந்த இடத்தின் உள்ளே நுழைகிறேன். உயரமான சுவர்கள், அதன் கூரை எல்லாவற்றையும் உட்கொண்டது போல் அமைதியாக இருந்தது. பச்சை நிற சட்டையும் நீல நிற பேண்டும் சிவப்பு நிற டையும் அணிந்த அந்த உணவு விடுதியின் பணியாளர்கள் என்னை வரவேற்றார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்து அங்கிருந்து நாற்காலி ஒன்றில் உட்கார ஆசைப்பட்டேன். அந்த நாற்காலி நல்ல அழுத்தமான மர வர்ணத்தை பூச்சாகக் கொண்டிருந்தது. அதிலிருந்த மூன்று சின்ன சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.
கனிமொழி அவர்கள் உள்பகுதியில் இருந்து வந்து என்னை வரவேற்றார். அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட போது மிகவும் சவுரியமாக உணர்ந்து அடுத்த பக்கம் இருக்கும் சாலையைப் பார்க்க சில வாகனங்கள் கண்களில் பட்டன. சிறு பொம்மை போல பல கார்கள் விரைந்து போனது. பல வாகனங்களின் இரைச்சலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது அதனால் வேறு இடத்திற்கு செல்லலாம் என்று இன்னொரு பகுதிக்கு சென்ற போது சாலை நடமாட்டம் எனச் செல்லும் வாகனங்கள் இல்லாமல் சவுரியமாக இருந்தது.
தமிழ் முரசு பத்திரிக்கை நிறுவனம் பற்றியும் தமிழ் முரசு பத்திரிக்கை சிங்கப்பூர் தமிழர்கள் வாழ்க்கையில் எப்படி முக்கியமான ஒரு பத்திரிக்கையாக, செய்தி ஊடகமாக இருக்கிறது என்பதையும் அவர் சொன்னார். அந்த பத்திரிகை பணி தனக்கு எப்படி பிடித்து இருக்கிறது என்று சொன்னார். வழங்கப்பட்ட தேநீருக்கு சர்க்கரை கட்டிகளை எடுத்து போட்டுக் கொண்டேன். ஆனால் இனிப்பு சுவை போதவில்லை அதே அளவு தான் கனிமொழி அவர்களும் சக்கரைக்கட்டிகளை போட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு அந்த இனிப்பு சரியாக இருந்திருக்க வேண்டும். நான் மீண்டும் ஒரு சக்கரைக்கட்டியைப் போட்டுக் கொண்டேன். அவர் அதை பார்த்து தேநீர் சுவையாக இருக்கிறது அல்லவா என்றார். நான் இப்போது இன்னொரு சக்கரைக்கட்டையை போட்டுக் கொண்டதால் சுவை வந்து விட்டதால் ஆம் என்றேன். ( முன்பொரு முறை திருப்பூர் காலச்சுவடு நிகழ்ச்சியொன்றுக்கு வந்த போது இரவு உணவை கட்சிக்காரர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் உணவை வெகு அளவோடு எடுத்துக் கொண்டதையும் தேநீருக்காக சர்க்கரையை வெகுக் குறைவாகப் பயன்படுத்தியதும் கூட நினைவில் இருந்தது )
எங்கள் நேர்காணல் தொடங்கியது