சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 9 மே, 2023
“ கோவையில் தியாகு நூலகம் மூடப்படுகிறது. திருப்பூர் மக்கள் நூலகத்திற்கு உதவுங்கள் “
திருப்பூரில் ஒரு நூலகம்: திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகம் 30 ஆண்டுகளாய்..
0
நுகர்வு மயமாகிப் போன சூழலில் திரையரங்குகளும் திரைப்படங்களுமே மக்களின் வாழ்வியலாகப் போய் விட்ட தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு நூலகம் வாசகர்களுக்கு அடைக்கலமாக , ஒரு வேடந்தாங்கலாக 30 ஆண்டுகளாக விளங்குவதை ஆச்சர்யத்தோடே பார்த்து வருகிறேன் திருப்பூர் மக்கள் மாமன்றம் நூலகத்தை. ஒரு திரையரங்கின் வாசலில் 30 ஆண்டுகளாய் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறது –ஒரு கோவில், ஒரு தீயணைப்பு நிலையம், நெரிசலானத் தெருவில் ஒரு திரையரங்க முகப்பில் சற்றே ஓரமாய் மக்கள் மாமன்றம் பாசமுள்ள அம்மாவுடன் நின்றிருக்கும் குழந்தையைப் போல ..
இதுவரை சுமார் 5,00,000 வாசகர்கள் அங்கு வந்து நூல்களை, இதழ்களைப் படித்துப் பயன்பெற்றிருக்கிறார்கள்.
திருப்பூரின் பல அரசு நூலகங்களுக்கு இல்லாத பெருமை இந்தத் தனியார் நூலகத்திற்கு உண்டு.சாதாரண வாசகர்களின் அடைக்கலம் என்பதே அது . இலவச நூலகம். இதன் ஸ்தாபகர் சி.சுப்ரமணீயன் எழுதிய திருப்பூரைச்செதுக்கிய சிற்பிகள் நூல் குறிப்பிடத்தக்கது. திருப்பூரின் வரலாறை அஜிதன் குப்புசாமி, சிவதாசன் போன்றோர் எழுதியுள்ளனர். விரிவான வரலாறுகள் வர வேண்டும்.
0
இந்த நூலகத்தை இலக்கியக்கூட்டங்களுக்கு கட்டணமின்றி தருகிறார்கள். இதில் உள்ள உறுப்பினர்கள் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 190 ( சுப்ரபாரதிமணியன் இதன் உறுப்பினர். அவர் 97 நூல்கள் வெளீயிட்டிருக்கிறார் )
இத நிறுவனத்தலைவர் சி.சுப்ரமணியன் 85 வயது. கைக்காசு செலவு செய்து நிர்வகிக்கிறார். சொற்ப நன்கொடையும் கிடைக்கிறது
0
அப்புறம் திருப்பூரில் திருவள்ளுவர் சிலை உள்ள பொது இடம் இந்த நூலகம்தான்.
தமிழன்னைக்கு தமிழகத்தில் 3ம் சிலை இங்கு உள்ளது.
0
வள்ளல் பெருமக்கள் கண்டு கொள்ளாத நூலகம் இது..
SOS –save our soul appeal : Donate to this library
-சுப்ரபாரதிமணியன் குறிப்பு
தொடர்புக்கு” மக்கள் மாமன்ற நூலகம், மங்கலம் சாலை, டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் 641 604 (95008 17499 / 93457 20140 )