சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 9 மே, 2023

ஆறாம் திணை குரு அரவிந்தன் கட்டுரை நூல் / சுப்ரபாரதிமணியன், குரு அரவிந்தன் அவர்கள் கனடாவில் வசித்து வரும் இலங்கையை தாயமாகக் கொண்ட எழுத்தாளர். எல்லோருக்கும் பிறந்த மண், சொந்த நாடு பற்றிய நினைவுகளையும் பெருமிதங்களையும் சொல்வதில் எப்போதும் ஆர்வம் இருக்கும். அப்படித்தான் குரு அரவிந்தன் அவர்கள் இலங்கை பற்றிய பல்வேறு விஷயங்களை இந்த கட்டுரை தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரைக்கும் இடையில் இன்றைய இலங்கை நிலைமை பற்றிய விவரங்களையும் கொண்டு வந்து சேர்த்திருப்பதில் அவரின் தனித்தன்மை வழங்குகிறது. அவருடைய பார்வை கூர்மையாக, தங்கி நிற்கும் குட்டையைப் போல இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போல இருப்பதை அவருடைய தொடர்ந்து செயல்பாடுகள் இருக்கையில் இந்த தொகுப்பும் மெய்ப்பிக்கிறது . அப்படித்தான் சின்ன வயசு அனுபவங்கள் படித்த கால அனுபவங்கள், வளர்ந்த காலத்தில் இலங்கை இருந்த நிலைமை போர்சூழல், இலங்கை ராணுவத்தின் இன்றைய நிலை என்று இலங்கையின் நீண்ட காலகட்டத்தில் அத்தாட்சிகளை இந்த கட்டுரைத் தொகுப்பில் நாம் பார்க்க முடியும். தொடர் வண்டியில் செல்லும் அனுபவமாகட்டும், கலங்கரை விளக்கம் தரும் வெளிச்சமாகட்டும், காவல் நிலையத்தில் சென்ற அனுபவமாகட்டும், கடி நாய் தந்த வேதனையாகட்டும், வேப்பமரம் போன்ற மரங்கள் வாழ்வில் இணைந்து இருப்பதாகட்டும் திருமண உட்பட விழாக்களின் கூர்மையான சடங்குகளும் சமுதாயங்களும் என சிறப்பாக பழைய காலத்தை நினைவுபடுத்தி எழுதியுள்ளார் குரு அரவிந்தன் அவர்கள். அந்த நினைவுகளில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது இப்படி எழுத்தின் மூலமாக வடிகட்டத் தயாராக வேண்டும். ஆனால் கந்தர் வீதி குளமும், குருவி ,கோயிலும் இடிந்து நாசமாகி இருப்பதை பற்றி படிக்கையில் கண்ணீர் வருகிறது. தமிழ் பாடசாலைகள் இன்று எப்படி இருக்கின்றன, பழைய நிலை காட்சிகளில் இப்போது பொது அரசியல் காட்சிகள் எப்படி அரங்கேறி இருக்கின்றன என்பது பற்றிய அத்தாட்சிகளை அவர் சொல்லுகிறார். உள்ளார்ந்த அனுபவங்களை கொண்ட சடங்குகள் பற்றிய விவரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. ராணுவ தளம் முகாம் பற்றி விவரங்களும், ராணுவ அத்துமீறல்களும் எப்போதுமே மனதை பதட்டப்பட வைப்பவை. அப்படித்தான் இந்த நூலில் பல விஷயங்களை நாம் சாதாரண வாசிப்புக்கு உட்படுத்த முடியாது. மனம் பதபதைக்கும் .அப்படி சில விஷயங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த கடலை போலத்தான் நீதி நியாயம் எதுவும் இன்றி எங்களிடமிருந்து எங்கள் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லாமல் காலப்போக்கில் எல்லாமே கொள்ளை அடிக்கப்பட்டு விட்டது. அதை நினைக்கும் போது ஆற்றாமையால் உடம்புக்குறுகிப் போவது என்கிறார். ராணுவ தடை முகாம்களை கடந்து பாடசாலைக்கு போகும் ஒரு மாணவியின் மன நிலை எப்படி இருக்கும் என்பதைப் போலத்தான் இதில் உள்ள பல பக்கங்களை எல்லாம் கடந்து போகையில் நினைக்க வேண்டி இருக்கிறது. சொந்த நிலத்தின் வனப்பும் அழகும் சிதைக்கப்பட்டு இருப்பதை சமூக நிலைமையில், பண்பாட்டு ரீதியாக மட்டும் இல்லாமல் கலாச்சார ரீதியாகவும் உணர்வுச் சந்தர்ப்பங்களாக இவை அமைந்திருக்கின்றன. தை பொங்கல் தான் தமிழனின் வருட பிறப்பு என்ற கொள்கையை கொண்டவர்களால் தை மாதம் தான் புது வருடம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பாடல் வரிகள் பொது வருடம் மாற்றம் காரணமாக காலத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை .ஆனாலும் இது போன்ற பாடல் வரிகள் காலத்தை காட்டியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை எழுத்து புலவர்கள், எழுத்துக் கவிஞர்கள் பலரின் ஆக்கங்கள் இன்று கவனிப்பாளர்கள் இன்றி, ஆவணப்படுத்தப்படாமல் எங்கள் மத்தியில் இருந்து மறைந்து கொண்டு இருக்கின்றன என்று அவரின் ஆதங்கங்களை நாம் சரியாகத்தான் புரிந்து கொள்கிறோம். இவ்வளவு சொல்லிக் கொள்கிற குரு அவர்கள் வாழ்க்கை என்ற பயணத்தில் ஒரு முடிவு இருக்கும். அந்த கடைசி பயணத்தை பற்றியும் சிந்திக்காமல் இல்லை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதன் 1969 ஆம் ஆண்டு சந்திரனில் கால் பதித்து விட்டான். இப்போது செவ்வாய் கிரகம் நோக்கி ரோபடை அனுப்பி இருக்கின்றான். வெகு விரைவில் செவ்வாய் கிரகத்திலும் கால் பதிக்க போகின்றான். அதைத் தொடர்ந்து எல்லையில்லாத வானத்தில் அடிப்படையாக மனிதன் ஒவ்வொரு கிரகங்களாக சென்று குடியேறலாம். விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் கடைசி பயணம் எங்கே எப்போது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம் இன்றுவரை புரியாத புதிர் என்பதையும் அவர் சொல்லாமல் இல்லை. இலங்கை நிலத்தின் வெவ்வேறு திணைகள் சார்ந்த இடத்தையும் அவை சார்ந்த அவருடைய அனுபவ பதிவுகளையும் கொண்டிருக்கும் இந்த நூல் கடைசி அத்தியாயம் கனடா தமிழரின் வரலாறும் கனடா தமிழ்ச் சூழலும் என்பது அவர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கனடாவின் சூழலை பற்றி முழுக்கமான பல குறிப்புகளை வைத்திருக்கிறார். அதில் அந்த சூழலில் தன் கலாச்சார நடவடிக்கைகளை மறந்து விட்ட தமிழ் வாழ்க்கை பற்றியும் பழைய வாழ்க்கையைப் பற்றி இயங்கிக் கொண்டிருப்பது பற்றியும் சொல்லி இருக்கிறார் குரு அரவிந்தன். அவருடைய தொடர்ந்த செயல்பாட்டில் இது போன்ற கட்டுரை தொகுப்புகளும் ஒரு குறிப்பிட்ட சாதனையாகவே இருக்கின்றன. இனிய நந்தவன பதிப்பகம் திருச்சி இதை வெளியிட்டு இருக்கிறது