சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 9 மே, 2023

முதல் மரியாதை 2 / சுப்ரபாரதிமணியன் என் “ கவுண்டர் கிளப் “ குறுநாவல் மூலக்கதை “ முதல் மரியாதை” படத்தில் பயன்படுத்தியது குறித்து அப்போது படம் வெளிவந்த போது பத்திரிக்கை செய்திகள் மற்றும் என் நீதிமன்ற வழக்கு ஆகிய குறித்து “ முதல் மரியாதை “ டிஜிட்டல் பிரிண்டில் வெளி வந்திருக்கும் இந்த சமயத்தில் கடந்த சில நாட்களாக முகநூலிலும் உள்பெட்டி செய்திகளிலும் நண்பர்கள் அவற்றை ஞாபகப்படுத்தி வருகிறார்கள். தீபம் பத்திரிகையில் வெளிவந்தது “ கவுண்டர் கிளப் . “.முதல் மரியாதை படம் வெளிவந்த போது நான் ஹைதராபாத்தில் தொலைத்தொடர்பு துறையில் பணியில் இருந்தேன். பல நண்பர்கள் தமிழ்நாட்டில் இருந்து கடிதங்கள், தொலைபேசிகள் மூலம் முதல் மரியாதை என் “ கவுண்டர் கிளப் மூலக்கதை அப்படியே பயன்படுத்தப்பட்டு இருப்பத பற்றி சொன்னார்கள் நானும் ஹைதராபாத்தில் இருந்து திருப்பூர் வருவது அப்போதெல்லாம் சில மாதங்களுக்கு ஒரு முறை என்று இருக்கும் .அதனால் கொஞ்சம் இடைவெளிக்கு பின்னால் வந்து பார்த்தபோது வெற்றிகரமாக அந்த படம் ஓடிக் கொண்டிருந்தது என் “ கவுண்டர் கிளப் மூலக்கதை பயன்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு கொண்டேன். சென்னையில் இருந்த பூவுலக நண்பர்கள் நெடுஞ்செழியன் அவர்கள் மூலமாக காந்தி என்ற வழக்கறிஞரை சந்தித்து செய்தி சொன்னபோது அவர் என்னுடைய கதை பிரதியையும் படித்துவிட்டு படத்தையும் பார்த்துவிட்டு அந்த படத்தின் கதாசிரியர் ஆர் செல்வராஜ் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோருக்கு இதைப் பற்றி விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார் ஆனால் முதல் கடிதம் அவர்கள் வாங்காமலே திருப்பி அனுப்பப்பட்டது. ஒரு மாத பின்னால் இரண்டாவது கடிதம் அனுப்பப்பட்ட போது பாரதிராஜாவுடன் இருந்து பதில் வந்தது அதில் “ இந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் ஆர் பி சுப்பிரமணியன் என்பவருக்கும் சுப்ரபாதி மணியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது” . நாந்தான் சுப்ரபாரதிமணியன் என்பதை நிரூப்பிக்க வேண்டும் ஆர் பி சுப்ரமணியன் என்பது என்ற இயற்பெயர். மத்திய அரசு பணிகளில் இருப்போர் எழுத்துப் பணியில் ஈடுபடும் போது தங்களின் படைப்பை ஹிந்தி மொழிபெயர்ப்பில் துறைக்கு தந்து அனுமதி பெற்று தான் பிரசுரிக்க வேண்டும் என்று அப்போது ஒரு விதி இருந்தது. ஆனால் இது எல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை. அப்படித்தான் நானும் இதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஆனால் இதை வழக்கு மன்றத்தில் செல்லும்போது அந்த விஷயம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படும். துறை சார்ந்த விளக்கங்கள் கேட்கப்படும் என்றார்கள் இந்த இந்த செய்தியை நான் அந்த குறுநாவல் “ கவுண்டர் கிளப்” வெளிவந்த தீபம் பத்திரிக்கை ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்களிடம் நேரில் தெரிவித்த போது அவர் வழக்குத் தொடரச் சொன்னார். தீபம் பத்திரிக்கையில் விரிவாக அதைப்பற்றி எழுதினார் . பாவைச்சந்திரன் குங்குமம், வண்ணத்திரையில் விரிவாகக் குறிபிட்டார், எழுத்தாளர் தமிழவன் நடத்திய இங்கே இன்று பத்திரிக்கையிலும் அதைப் பற்றிய செய்திகளெல்லாம் வந்தன. அப்போது உலகத் திரைப்படவிழாற்கு ஹைதராபாத் வந்த அசோகமித்திரன் அவர்கள் வல்லிக்கண்ணன் அவர்களை அணுகலாம் என்றார். ஏனெனில் கி ரா நாவல் பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது அவருக்குத் தெரியும் என்றார்.இதுபோல பல பத்திரிகைகளில் இந்த செய்திகள் இடம் பெற்றிருந்தன. இந்த இடைவெளியில் நான் எழுத்தாளர் என் ஆர். தாசன் அவர்களை தீபம் அலுவலகத்தில் சந்தித்தேன் அவரின் ” வெறும் மண் “ என்ற சிறு நாடகம் கண்ணதாசன் இதழில் வந்தது திருடப்பட்டு பாலச்சந்தரால் ” அபூர்வ ராகங்கள் “ என்ற திரைப்படமானது. அதை தன் கதை என்று கோரி தாசன் வழக்கு கொடுத்திருந்தார். 7 ஆண்டுகள் அந்த வழக்கு நடந்திருக்கிறது முதல் நான்கு ஆண்டுகள் வாய்தா, ஒத்திவைப்பு என்று கழிந்திருக்கிறது .மூன்று ஆண்டுகள் விசாரணை. ஏழு ஆண்டுகள் முடித்த பின்னால் தீர்ப்பு .ஆமாம் கதையில் ஒற்றுமை இருக்கிறது. இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு . அவரின் வழக்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மிக முக்கிய நிர்வாகியான செந்தில்நாதன் அவர்கள் வழக்கறிஞராக இருந்து நடத்தினார் அவர் நண்பர். அதனால் ஏழு ஆண்டுகள் அந்த வழக்கை அவர் நடத்த முடிந்தது. நீங்கள் ஹைதராபாத்தில் இருந்து கொண்டு இங்கு வந்தது இதை எல்லாம் பார்க்க இயலுமா என்ற கேள்வி எழுப்பினார். எனவே நான் என்னுடைய வழக்கு சார்ந்த விஷயங்களை மனதில் இருந்து விலக்கிக் கொண்டேன் இந்த படத்தில் கி ராஜநாராயணன் அவர்களின் ” கோபல்ல கிராமம் “ நாவலில் இருந்து ஒரு பகுதியை எடுத்து சிவாஜி கணேசன் மருமகன் கதாபாத்திரத்தை விரிவுடுத்தி இருப்பார்கள் அந்த படம் எடுத்த முடிந்த பின்னால் ஒரு உதவி இயக்குனர் அமர்ர் வல்லிக்கண்ணனைச் சந்தித்து கி ராஜநாராயணன் முகவரி பெற்று கோவில்பட்டிக்கு சென்று இருக்கிறார். அவர் படம் முடிந்து விட்டதையும் இந்த பகுதியை பயன்படுத்தி இருப்பதையும் சொல்லி அவர் ஒத்துக் கொண்டால் அவரின் பெயர் படத்தில் இடம்பெறும் என்று சொல்லி 3000 ரூபாய் கொடுத்திருக்கிறார் இதை கிராவுக்கு வேறு வழியில்லை ஒத்துக் கொண்டிருக்கிறார். இந்த செய்தியை வல்லிக்கண்ணன் அவர்களும் கி ராஜராஜன் அவர்களும் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள் இதுபோல பல விஷயங்கள் என்னுடைய திரைப்பட அனுபவத்தில் நடந்திருக்கின்றன என்னுடைய சப்பரம் நாவல் காஞ்சிபுரம் ஆனது பற்றி விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன் ஜானகி விஸ்வநாதன் அவர்கள் ஓம் ஒபாமா என்ற முழு திரைக் கதையை எழுதி கொடுக்க சொல்லி பின்னால் அவர்கள் அதை கூட தரப்படம் ஆக்கினார். வெளிவரவில்லை. அதற்கு எந்தவித சன்மானமும் கிடைக்கவில்லை. இதை தவிர என்னுடைய நாவலின் சிலவற்றை வெவ்வேறு வடிவங்களாக திரைப்படங்களை கண்டிருக்கிறேன். இதனால் தான் சமீபத்தில் என் நாவல்களை திரைக்கதைகள் ஆக்கி தமிழ் உலகில் அறிமுகப்படுத்தலாம் என்று இரண்டு தொகுப்புகளை கொண்டு வந்திருக்கிறேன்