சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 9 மே, 2023
பொருநை நாவல் சுந்தரபாண்டியன் / சுப்ரபாரதிமணியன்
காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் புனைவுகளை சுந்தரபாண்டியன் என்ற பெயரிலேயே வெளியிடுகிறார். அந்த வகையில் அவரின் ஐந்து நாவல்களில் ஆராரோ, அந்தி போன்றவை திருநெல்வேலி மாந்தர்களும், அவர்களது வாழ்வியலும் பற்றி சிறப்பானவை.அந்த பிரதேச மனிதஉணர்வுகளை சரியாகக் காட்டியவை. அவற்றை நல்ல திரைப்படங்களாக ஆக்கும் முயற்சுகள் பற்றி பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்கள் சிலாகித்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் “ பொருநை” என்ற தலைப்பில் வந்திருக்கும் நாவல் ஒரு வகையான சுயசரிதை தன்மையைக் கொண்டிருக்கிறது. நாவலை காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறார். இது ஒரு மாணவர், ஆறுமுகம் என்ற கதாபாத்திரம் பற்றியது .தாமிரபரணி கரையில் வசிக்கிறான். தமிழ் கற்கிறான். தமிழ் கற்கிற சூழலும் அவனை சுற்றியுள்ள சூழலும் அவனை வாழ்க்கை சார்ந்த பல புது ஆர்வம் கொண்டு வாழ்க்கையைச் செலுத்த செல்கிறது. பழைய பாளையங்கோட்டை, திருநெல்வேலி சார்ந்த விஷயங்கள். பாளையங்கோட்டை திருநெல்வேலி, வேணுவனம், கொற்கை என்று பல விஷயங்களை அவன் சுற்றுலாவுக்காக திரிந்து மனதில் ஏற்றுக் கொண்டாலும் அவை அவனுடைய அனுபவங்களில் சில அடுக்குகளாக மாறிப் போகின்றன.
இந்த நாவலில் ஆரம்பத்தில் உள்ள பேச்சு நடை சட்டென உரைநடையாக மாறுவது கூட நல்ல விஷயம் தான். பேச்சு நடை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனிமையாக இருக்கிற போது அதை எல்லோரும் விரும்பி படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் உரைநடையான ஒரு பொதுமொழி என்பது எல்லோருக்கும் இயல்பாகி விடுகிறது. சுலபமாக வாசிக்கவும் ஏதுவாக விடுகிறது .அப்படித்தான் பேச்சு நிலையில் ஒரு பகுதியாய் ஆரம்பிக்கின்ற நாவல் பின்னால் பொது மொழியாய் உரைநடைக்குள் வந்து விடுகிறது.
அந்த உரைநடையில் பல விஷயங்கள் கவனிக்கவும் கூர்மையான வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லவும் முடிகிறது ..தப்பு செய்தவர்கள் தப்பாவே முடியாது என்று சில கதாபாத்திரங்கள் வந்து போகிறார்கள். நாடகம் என்றால் இது மேடையில் பார்க்கிற விஷயமா இல்லை.. வாழ்க்கையில் பார்க்கிற பல விஷயங்களில் நாடகம் இருப்பது இந்த நாவலில் பல சம்பவங்களில் இனம் கண்டுகொள்ள முடிகிறது
காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் கிண்டலும் நக்கலும் அவரின் உரைநடையிலும் பேச்சிலும் பல சமயங்களில் தட்டுப்படும். அதைத்தான் தட்டுங்கள் திறக்கப்படும் என்று அறிய இயேசு வருவார் போன்ற விஷயங்களிலும் அஞ்சு குஞ்சு என்றாரே வள்ளுவர் என்ற சம்பவங்களிலும் சிறப்பாக வெளிப்படுகிறது. இது மாதிரி போகிற போக்கில் வாழ்க்கை சம்பவங்களை அடுக்குகின்ற போது இலக்கியம் பற்றிய ஆழமான புரிதலையும் தந்து விடுகிறார். இலக்கியம் இல்லாத அறிவியல் வீண் என்பது போல் அறிவியல் இல்லாத இலக்கியமும் வீண் என்பதை சொல்லிக் கொண்டு போகிறார்.
இந்த நாவலில் தமிழ் கல்வி படிக்கிற ஆறுமுகம் அவர்களின் கல்லூரி வாழ்க்கை மற்றும் சுற்றியுள்ளவருடைய அனுபவங்களால் நிரம்பி இருக்கிறது. இந்த அனுபவங்கள் மூலம் தமிழக வரலாறும், தமிழக அரசியல் கலை இலக்கிய சூழலும் பதிவாகி இருக்கிறது ஒரு காலகட்டத்தின் சரித்திர பதிவாக பல விஷயங்கள் நாவல் துணையோடு வந்து விடுகின்றன
பொருநை பொதிகையில் பிறந்தது. அகத்தியரின் தமிழ் தண்ணீராய் பாய்ந்தது, இதனை வால்மீகியாக இருக்கட்டும் வியாசராகட்டும் காளிதாசராக இருக்கட்டும் எல்லோரும் இதனை பாராட்டி பாடி இருக்கிறார்கள். தாமிரபரணி என்பது இன்னொரு பெயர் என்றொரு குறிப்பு வருகிறது. இந்த குறிப்புக்கான அம்சங்களை வாழ்வியல் அனுபவங்களோடு பல்வேறு இட பதிவுகள், மனிதர்கள் ஆர்வங்கள் மூலமாக இந்த நாவலில் திறப்பு இருக்கிறது. சுய சரிதை தன்மை கொண்ட இந்த நாவலில் சுந்தரபாண்டியன் அவர்களையும் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களையும் அவர்களோடு இருக்கிற நண்பர்களையும் அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்த அடையாளம் காணுதல் என்பதற்கு, மனிதர்களோடு இயைந்தவகையில் இந்த நாவலின் புனைவு உதவுகிறது என்பது முக்கியமானது
( -விலை ரூபாய் 150 காவ்யா பதிப்பகம் வெளியீடு )-