சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 9 மே, 2023

குரு அரவிந்தன் அவர்களின் இரண்டு நாவல்கள் ” சொல்லடி உன் மனம் கல்லூரி உன்னருகே நானிருந்தால்.. ” ஆகியவற்றை முன்வைத்து.. / சுப்ரபாரதிமணியன் குரு அரவிந்தன் அவர்களுள்ள வாசக வட்டம் உலகளாவியது. பரவலானது. பரவலானது என்றாலே அந்த கதைகளை வாசிக்க கூடியவர்களே குடும்பக் கதைகளில் அக்கறை கொண்டவராக இருக்கிறார்கள். குடும்பக்கதைகளில் வருகிற கதாபாத்திரங்களை தங்களுடைய குடும்ப மாந்தர்களாக எண்ணி அவர்களுடன் வாசகர்கள் உரையாடுகிறார்கள். உணர்ச்சி கொள்கிறார்கள். அதனால் தான் குடும்ப கதைகளை படிக்கிற வாசகர்கள் உலகம் முழுக்க அதிகமாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.அப்படித்தான் குரு அரவிந்தன் கதைகளும் என்று நினைக்கிறேன். இந்த இரண்டு நாவல்களிலும் அவர் ஓரளவுக்கு குடும்பக் கதையை தான் சொல்லி இருக்கிறார் என்று தோன்றுகிறது. மற்ற இலக்கிய பிரதிகளில் வருவது போன்று சிக்கலான மனிதனுடைய மனப்பான்மையைச் சொல்லாமல் இயல்பான மனிதர்களின் கதையை சொல்லுகிற போக்கு பெரிதாக இருக்கிறது. அவர் இதுபோல இளம் எழுத்தாளர்களின் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டத்தை எடுத்து சொல்லும் புதினம் ” சொல்லடி உன் மனம் கல்லோடி “ . புலம்பெயர்ந்த மண்ணில் எழுத்தாளனுக்கும் கலை உலகுக்கும் இவர் மிகுந்த பயன்பாடு கொண்டவராக இருக்கிறார் என்றருகிறேன். பலரை வளர்த்தார் என்பது கூட முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதில் வருகிற கமலினிக்கு அமெரிக்கா செல்வது ஒரு கனவாக இருக்கிறது. அவளுக்கு இசை தெரியும். நாட்டியம் தெரியாது அவருடைய இன்னொரு நெருங்கிய மாலதி நாட்டியம் நன்கு தெரிந்தவள். கண்ணன் புலம்பெயர்ந்து வந்தவன். மிருதங்கத்தில் மிகுந்த ஆர்வம். கொண்டவன் அவனின் திருமண ஆசையும் இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. மாலதியும் கமலினியும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால் சில முரண்பாடுகள் உண்டு கமலினிக்கு ஆங்கில மோகம் மாலதிக்கும் தமிழ் தேச எண்ணம். உடை அலங்காரத்தில் மேலைநாட்டு உடைகளை கமலினி விரும்புவாள். மாலதி தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை பேணி காப்பதில் கவனம் கொள்வாள்.. வாழ்ந்தால் அமெரிக்காவில் தான் வாழ வேண்டும் என்ற கனவோடு கமலினி இருப்பாள். ஓலை குடிசை என்றாலும் குடும்பத்தோடு நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று மாலதியின் வாழ்க்கை முறையும் கண்ணனின் எண்ணங்களும் அநேகமாக ஒத்து போகக்கூடிய தன்மை இருக்கின்றன. அந்த வகையில் இந்த நாவலில் அந்நாட்டையும் பற்றியும் இசை பற்றியும் பல அருமையான உரையாடல்கள் உள்ளன. நாட்டியத்தில் நவரசம் என்றெல்லாம் சொல்லுவார்களே அது எது குறிக்கும் நவரசத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் தொல்காப்பியத்தில் வரும் பல விஷயங்களைப் படிக்க வேண்டும் பரதநாட்டியத்தில் இருக்கும் இரண்டு உட்புறவுகளான திருத்தம் திருத்தியம் ஆடல் என்று சொல்லில் இருந்துதான் அடைவு பிறந்து இருக்க வேண்டும். உடலின் அசைவுகளால் தான் நடனத்தில் இந்த அடைவுகள் தோன்றுகின்றன. அதனுடைய நன்றாக கற்றபிறகு ஆடல் உறுப்படிகள் அலாரிப்பு வண்ணம் பதம் தில்லானா போன்றவற்றையும் முறைப்படி கேட்க வேண்டும் என்பதில் கூட அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மாலதியின் கணவர் குடித்து செத்து விடுகிறார் .அவர் பெயர் ராஜன் என்பது. அவன் கொலையா என்பது கூட ஒரு சிக்கல் ஏற்படுகிறது. ஆண் குழந்தை என்று அவளுக்கு இருக்கிறது. குரு அரவிந்தன் அவர்களுடைய எழுத்து வாழ்க்கை 25 ஆண்டுகளை கடந்து இருக்கிறது என்ற முக்கியமான குறிப்பையும் இந்த சமயத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ” உன்னருகில் நானிருந்தால்” என்ற நாவலில் வரும் நந்தகுமார் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறான். இந்தியனாக இருக்கிறான். உல்லாச பயணியாகத்தான் அமெரிக்காவுக்கு வந்தேன். ஆறு மாதத்திற்கு மேல் இங்கே இருக்க முடியாது அதனால் எல்லையை கடந்து போய் கனடாவில் அது அகதி நிலை கோரப்போகிறேன் என்பதால் அவனின் ஆரம்பகால நிலையாக இருக்கிறது. அவன் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது ஒலிவியா அவனை கவனித்துக் கொள்கிறாள் அவள் ஒரு இத்தாலிக்காரி. கனடா வாழ்க்கை பற்றி பல முக்கியமான குறிப்புகள் இந்த நாவலில் உள்ளன. வைதேகி என்பவள் முக்கியமான கதாபாத்திரமாக வருகிறாள். லட்சுமி பாட்டி அவனுக்கு பல அறிவுரைகள் சொல்கிறாள். சுபாவிற்கு திருமண ஆசை இருக்கிறது. ஆனால் அவள் மனதில் இருப்பவன் வேறு ஒரு திருமணம் செய்து கொள்கிறான். இந்த சிக்கல்களில் உள்ள மனப்போராட்டங்களை இந்த நாவல் சொல்லிக் கொண்டு போகிறார். .நாலாவது தலைமுறையாக இருந்தாலும் சகோதர சகோதரி முறை என்று தெரிந்தால் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது போல் பல விஷயங்கள் சொல்லப்படுகிறது முதலாவது தலைமுறை அதாவது ஒரே பெற்றோருக்கு பிள்ளைகளாக பிறந்த அண்ணன் தங்கை இவர்கள் திருமணம் செய்வதென்பது பண்பாட்டு சமாச்சாரங்களுக்கு பொருந்தாது அருவருப்பானது என்று அபிப்பிராயம் சொல்லப்படுகிறது. லட்சுமி பாட்டி வாக்கு கொடுத்தாலும் அது வேறு கவரப்பட்ட விசயம், அந்த விருப்பம் அதிகரித்தாலும் நிச்சயமாக வைதேகியின் திருமணத்தை செய்து பார்க்கலாம் .பகுத்தறிவுப்படி பார்த்தால் நாலாவது தலைமுறை ஞாபகம் வைத்திருப்பது கஷ்டம். நாலாவது தலைமுறை என்பதால் மருத்துவ ரீதியாக அதிகம் தாக்கம் இருக்காது ஆகவே அவர்கள் திருமணம் செய்து கொள்ள பற்றி சர்ச்சைகள் உண்டு என்ற உணர்வு இல்லாதவர்கள் என்று இந்த கதை பற்றி சொல்லியிருக்கிறார்கள்.. ஒரு குடும்பத்தில் உள்ளேயோ அல்லது குறுகிய சமயத்தில் உள்ளேயோ தலைமுறையினராக மாறி கல்யாணங்கள் செய்து வருகிற போது பரம்பரை வியாதிகள் வருவதும் சாதாரணமாகவே உள்ளது. அவை பற்றி விவாதங்கள் இங்கே உள்ளன. அதே சமயம் தூய்மையான அன்பால் படைக்கப்பட்டுள்ள இரண்டு உள்ளங்களை போலியான சம்பிரதாயங்களை காட்டிப் பிரித்து வைப்பது சரியாகுமா என்பதை பற்றிய விவாதம் இந்த நாவலில் இருக்கிறது. ஆனால் இந்த சர்ச்சை குறித்து முடிவு விஷயத்தை வாசகர்கள் முடிவு சொல்லட்டும் என்று அவர் விட்டுவிடுகிறார்.. வைதேகி திருமணம் சமூக வழக்குகளால் அங்கீகரிக்கப்பட முடியாது. தனிப்பட்ட விருப்புகளை அடிப்படையில் நடத்தலாம் என்பது போன்ற கருத்துக்கள் புலம்பெயர்ந்த மக்களின் சமகால வாழ்க்கையோடு சொல்லப்படுகின்றன. சுபாவை போன்ற பெண்மணிகள் அந்த மண்ணில் கையில் குழந்தையோடு ஆதரவு இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார். மனித குல வரலாறு எத்தனையோ மாற்றங்களை கண்டது அவற்றில் இது போன்ற திருமண உறவுகளும் ஒன்று. பழையது என்பதாலேயே அனைத்தையும் கழித்து கட்டுவது புதுமை என்பதாலே அப்படியே ஏற்றுக் கொள்வது நன்மை பயக்காது பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னும் நன்னூல் வழக்குக்கு ஏற்ப நீக்கி ஏற்க வேண்டியதை ஏற்று வாழ்க்கை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற அபிப்பிரங்கள் விவாதங்கள் மூலமாக இந்த நாவலில் முன் வைக்கப்படுகின்றன . காலம் ஒரு நதியைப் போல உருண்டோடி கொண்டிருக்கிறது காலத்திற்கு திரும்பிச் செல்லும் விஷயம் நம் ஞாபகப்படுத்திக் கொள்வதன் மூலமாக நடக்கும். காலத்தை திருப்பி எட்டிப் பிடிக்க முடியாது காலத்தின் பயணத்தில் பல மாற்றங்கள் நடக்கும். அந்த மாற்றங்கள் பின்னால் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் நாளை என்பதில் மாற்றம் வரலாம். எழுதி எழுதி அழித்து செல்ல வல்லது காலம். காலம் அப்படித்தான் வாழ்க்கையின் பல விஷயங்களை அழித்து புதிதாக எழுதித் தொடர்கிறது. இந்த காலத்தின் கோலத்தை இரண்டு நாவல்களிலும் குரு அரவிந்தன் வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்ப நாவல் சார்ந்த கதாபாத்திரங்கள் என்பதால் பரவலான வாசகர்களும் எளிமையான நாவல் நபர்களின் போக்கும் பலருக்கு பிடித்திருக்கிறது. அவருடைய பணி தொடர்ந்து செல்ல வேண்டும். புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் சார்ந்த அவரின் சித்திரங்களும் அவரின் நாவல்களில் காணக்கிடைப்பது பொக்கிசமாக உள்ளது. அவற்றை அவரின் கட்டுரைகளில் காண்பதில் நிஜமானப் புதையல்கள் கிட்டியிருப்பதை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.