சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 9 மே, 2023
இறக்கையற்ற சில பறவைகளுடன்.. சுப்ரபாதிமணியன்
ஆசித் முகமது அவர்களின் நாவல்
மயான பயணிகள் -மலையாளம்
தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன் அவர்கள்
முன்னாள் மாணவி ஒரு ஆசிரியரை நீண்ட காலம் கழித்து தேடி வரும் கதை இந்த நாவல், அவருடன் பழகிய கல்லூரி, நூலகம் முதல்வர் வளாகம் என்றும், அவரை தெரிந்து கொண்ட சில பேரையும் அந்தப் பெண் மர்வர் தேடுவதும் தான் இந்த நாவலாக வந்திருக்கிறது.
மர்வர். அஞ்சுவேளை தொழுகிற அந்தப் பெண் மத கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி வேறு மதத்தைச் சார்ந்த ராஜவர்ம ஆசிரியரின் கடைசி கடன்களை நிறைவேற்றுகிறாள் மாமனிதனான ராஜ வர்மாவின் அன்பை தோல்வியாக மதிப்பிட்ட மனைவி உட்பட பலரால் வாழ்க்கையில் முழுவதும் காயப்பட்டவர் அவர். தற்கொலை செய்து கொள்கிறார். அவரின் . அஸ்தியை கரைக்கிற பொறுப்பு மர்வர் என்ற பெண்ணுக்கு வந்து சேர்கிறது.. எதிரணியில் அந்தப் பெண்ணின் குடும்பம் சார்ந்த வாழ்க்கை அப்பா மற்றும் சகோதரர் சாவு, அம்மா கல்லை பூ மாதிரி எடுக்கும் பலசாலியான பெண், அவள் குடும்பத்தையும் நிர்வகிப்பது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது
ஈராக்கின் 1990 இல் குட்டி அரபு நாட்டை ஆக்கிரமித்து செய்த அதிகார வன்முறை பற்றி பல பக்கங்கள் பேசுகின்றன. அந்தப் பாலைவன நாட்களை மிகவும் அற்புதமாக இதில் சித்திருக்கிறார். வியாழன் ஒரு சந்தோஷமான நாளாக இருக்கிறது என்பது போலவே இஸ்லாம் மதச் சிந்தனைகள் எப்படி அவர்களுக்கு எல்லாம் ஆறுதல் தருகின்றன என்பதைச் சொல்கிறார். அந்த குவைத் தருணங்களும் மழைக்காலம் சார்ந்த அனுபவங்களும் இந்த நாவலில் மிக சிறப்பான முறையில் பிடிபட்டிருக்கின்றன..
அந்நிய மதத்தை சார்ந்த அந்தப் பெண் இறுதி சடங்காய் அஸ்தியை கடலில் கொண்டு கரைக்க வேண்டி இருக்கிறது. ராஜு வர்மா நம்பிக்கை கொண்டிருந்த மதத்தின் வழியாக அவருக்கு ஆத்ம சாந்தியை தேடித் தர வேண்டி இருக்கிறது. அதெல்லாம் சரிதான் ஆனால் ஏன் அந்த பெண் கடலில் அஸ்தியைக் கரைக்கிற நிகழ்ச்சியில் நீரில் மூழ்கிப் போகிறாள். அவள் நீரில் மறைந்து போகிற விதியை காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது.
வெவ்வேறு மாதங்கள் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் வாழ்வியல் அம்சங்களை இந்த நாவல் விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஆனால் அந்த கடலில் கரைந்து போகிற பெண் ஏன் அப்படி தன்னை கரைத்துக் கொண்டாள், தற்கொலை செய்து கொண்டாளா என்பது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதை மொழி பெயர்த்திருக்கிறார் சிதம்பரம் ரவிச்சந்திரன் அவர்கள்.. விழித்திறன் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தொடர்ந்து எழுதுகிறார்.. மலையாள மொழியில் இருந்து கதைகளையும் மொழி பெயர்த்திருக்கிறார் .கடந்த ஆண்டில் திருவனந்தபுரம் தமிழ் சங்கம் வழங்கிய சிறந்த மொழி மொழிபெயர்ப்புக்கான உள்ளூர் பரமேஸ்வரன் விருதை பெற்றிருக்கிறார். ஒரு பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
அவரின் எளிமையான மொழியால் இந்த நாவல் வலுப்பெற்று இருக்கிறது
சுப்ரபாதிமணியன் திருப்பூர்
ஆறாம் திணை
குரு அரவிந்தன் கட்டுரை நூல் / சுப்ரபாரதிமணியன்,
குரு அரவிந்தன் அவர்கள் கனடாவில் வசித்து வரும் இலங்கையை தாயமாகக் கொண்ட எழுத்தாளர்.
எல்லோருக்கும் பிறந்த மண், சொந்த நாடு பற்றிய நினைவுகளையும் பெருமிதங்களையும் சொல்வதில் எப்போதும் ஆர்வம் இருக்கும். அப்படித்தான் குரு அரவிந்தன் அவர்கள் இலங்கை பற்றிய பல்வேறு விஷயங்களை இந்த கட்டுரை தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு கட்டுரைக்கும் இடையில் இன்றைய இலங்கை நிலைமை பற்றிய விவரங்களையும் கொண்டு வந்து சேர்த்திருப்பதில் அவரின் தனித்தன்மை வழங்குகிறது. அவருடைய பார்வை கூர்மையாக, தங்கி நிற்கும் குட்டையைப் போல இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போல இருப்பதை அவருடைய தொடர்ந்து செயல்பாடுகள் இருக்கையில் இந்த தொகுப்பும் மெய்ப்பிக்கிறது .
அப்படித்தான் சின்ன வயசு அனுபவங்கள் படித்த கால அனுபவங்கள், வளர்ந்த காலத்தில் இலங்கை இருந்த நிலைமை போர்சூழல், இலங்கை ராணுவத்தின் இன்றைய நிலை என்று இலங்கையின் நீண்ட காலகட்டத்தில் அத்தாட்சிகளை இந்த கட்டுரைத் தொகுப்பில் நாம் பார்க்க முடியும். தொடர் வண்டியில் செல்லும் அனுபவமாகட்டும், கலங்கரை விளக்கம் தரும் வெளிச்சமாகட்டும், காவல் நிலையத்தில் சென்ற அனுபவமாகட்டும், கடி நாய் தந்த வேதனையாகட்டும், வேப்பமரம் போன்ற மரங்கள் வாழ்வில் இணைந்து இருப்பதாகட்டும் திருமண உட்பட விழாக்களின் கூர்மையான சடங்குகளும் சமுதாயங்களும் என சிறப்பாக பழைய காலத்தை நினைவுபடுத்தி எழுதியுள்ளார் குரு அரவிந்தன் அவர்கள்.
அந்த நினைவுகளில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது இப்படி எழுத்தின் மூலமாக வடிகட்டத் தயாராக வேண்டும். ஆனால் கந்தர் வீதி குளமும், குருவி ,கோயிலும் இடிந்து நாசமாகி இருப்பதை பற்றி படிக்கையில் கண்ணீர் வருகிறது. தமிழ் பாடசாலைகள் இன்று எப்படி இருக்கின்றன, பழைய நிலை காட்சிகளில் இப்போது பொது அரசியல் காட்சிகள் எப்படி அரங்கேறி இருக்கின்றன என்பது பற்றிய அத்தாட்சிகளை அவர் சொல்லுகிறார். உள்ளார்ந்த அனுபவங்களை கொண்ட சடங்குகள் பற்றிய விவரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. ராணுவ தளம் முகாம் பற்றி விவரங்களும், ராணுவ அத்துமீறல்களும் எப்போதுமே மனதை பதட்டப்பட வைப்பவை. அப்படித்தான் இந்த நூலில் பல விஷயங்களை நாம் சாதாரண வாசிப்புக்கு உட்படுத்த முடியாது. மனம் பதபதைக்கும் .அப்படி சில விஷயங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்த கடலை போலத்தான் நீதி நியாயம் எதுவும் இன்றி எங்களிடமிருந்து எங்கள் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லாமல் காலப்போக்கில் எல்லாமே கொள்ளை அடிக்கப்பட்டு விட்டது. அதை நினைக்கும் போது ஆற்றாமையால் உடம்புக்குறுகிப் போவது என்கிறார். ராணுவ தடை முகாம்களை கடந்து பாடசாலைக்கு போகும் ஒரு மாணவியின் மன நிலை எப்படி இருக்கும் என்பதைப் போலத்தான் இதில் உள்ள பல பக்கங்களை எல்லாம் கடந்து போகையில் நினைக்க வேண்டி இருக்கிறது.
சொந்த நிலத்தின் வனப்பும் அழகும் சிதைக்கப்பட்டு இருப்பதை சமூக நிலைமையில், பண்பாட்டு ரீதியாக மட்டும் இல்லாமல் கலாச்சார ரீதியாகவும் உணர்வுச் சந்தர்ப்பங்களாக இவை அமைந்திருக்கின்றன. தை பொங்கல் தான் தமிழனின் வருட பிறப்பு என்ற கொள்கையை கொண்டவர்களால் தை மாதம் தான் புது வருடம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பாடல் வரிகள் பொது வருடம் மாற்றம் காரணமாக காலத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை .ஆனாலும் இது போன்ற பாடல் வரிகள் காலத்தை காட்டியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை எழுத்து புலவர்கள், எழுத்துக் கவிஞர்கள் பலரின் ஆக்கங்கள் இன்று கவனிப்பாளர்கள் இன்றி, ஆவணப்படுத்தப்படாமல் எங்கள் மத்தியில் இருந்து மறைந்து கொண்டு இருக்கின்றன என்று அவரின் ஆதங்கங்களை நாம் சரியாகத்தான் புரிந்து கொள்கிறோம்.
இவ்வளவு சொல்லிக் கொள்கிற குரு அவர்கள் வாழ்க்கை என்ற பயணத்தில் ஒரு முடிவு இருக்கும். அந்த கடைசி பயணத்தை பற்றியும் சிந்திக்காமல் இல்லை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதன் 1969 ஆம் ஆண்டு சந்திரனில் கால் பதித்து விட்டான். இப்போது செவ்வாய் கிரகம் நோக்கி ரோபடை அனுப்பி இருக்கின்றான். வெகு விரைவில் செவ்வாய் கிரகத்திலும் கால் பதிக்க போகின்றான். அதைத் தொடர்ந்து எல்லையில்லாத வானத்தில் அடிப்படையாக மனிதன் ஒவ்வொரு கிரகங்களாக சென்று குடியேறலாம். விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் கடைசி பயணம் எங்கே எப்போது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம் இன்றுவரை புரியாத புதிர் என்பதையும் அவர் சொல்லாமல் இல்லை.
இலங்கை நிலத்தின் வெவ்வேறு திணைகள் சார்ந்த இடத்தையும் அவை சார்ந்த அவருடைய அனுபவ பதிவுகளையும் கொண்டிருக்கும் இந்த நூல் கடைசி அத்தியாயம் கனடா தமிழரின் வரலாறும் கனடா தமிழ்ச் சூழலும் என்பது அவர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கனடாவின் சூழலை பற்றி முழுக்கமான பல குறிப்புகளை வைத்திருக்கிறார். அதில் அந்த சூழலில் தன் கலாச்சார நடவடிக்கைகளை மறந்து விட்ட தமிழ் வாழ்க்கை பற்றியும் பழைய வாழ்க்கையைப் பற்றி இயங்கிக் கொண்டிருப்பது பற்றியும் சொல்லி இருக்கிறார் குரு அரவிந்தன். அவருடைய தொடர்ந்த செயல்பாட்டில் இது போன்ற கட்டுரை தொகுப்புகளும் ஒரு குறிப்பிட்ட சாதனையாகவே இருக்கின்றன. இனிய நந்தவன பதிப்பகம் திருச்சி இதை வெளியிட்டு இருக்கிறது
அநீதிக் கதைகள் 2 அருண் மோ / சுப்ரபாரதி மணியன்
அருண் மிகையான எதார்த்தத்தை முன் வைக்கிறாரா.... தீவிரமான பிரச்சனைகளை முன் வைக்கும்போது சிலருக்கு அப்படித் தோன்றும். ஆனால் அந்த வகையான எதார்த்தத்தில் சாத்தியம் உள்ளது. சாத்தியமாகி நடந்தது பற்றி தான் அவர் எழுதுகிறார்.அல்லது சாத்தியமாகும் விசயம் பற்றித்தான் எழுதுகிறார். அப்படித்தான் முதல் தொகுப்பிலும் இந்த தொகுப்பிலும் உள்ள விஷயங்கள் சொல்லப்பட்ட விதத்திலும் மையத்தின் தீவிரத்திலும் வெகுவாக அக்கறை கொண்டவை
எல்லா கதைகளும் சமூக நிகழ்வுகளை நாடகிய பண்புகளுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படத்தில் பெரும்பாலும் எதார்த்த போக்கை மீறி நாடக மயமான சித்தரிப்புகள் பார்வையாளருக்கு உணர்ச்சிவசப்பட வைப்பவை. கவர்பவை.
அப்படி திரைப்படத்துறை சார்ந்தவர் என்ற முறையில் சில கூறுகளும் அருண் அவர்களிடம் காணாமல் இல்லை. இ பாஸ்., தொற்று காலம் போன்ற கதைகளில் இந்த மிகையான எதார்த்தத்தை நாம் சுலபமாக கண்டு கொள்ளலாம். தொற்றுக்காலத்தில் வெளியே வரும் மனிதர்கள் இ பாஸ் பெற்று தொடர்வண்டி ஒன்றை முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிற அவலத்தை சொல்கிறார் இதே போல தொற்றுக்காலத்தில் பசி, வறுமை மேலோங்கி நிற்பதையும் தங்கள் குழந்தைகளை வறுமை சார்ந்து இருக்கிற கொடுமையும் சொல்லப்பட்டிருக்கிறது .” மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயிலே. இது மாறுவதைப்போ இது தீர்வது எப்போ “ என்று பட்டுக்கோட்டை எழுதினார். ஆனால் அப்படி சுரண்டப்பட்ட மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதை ஒரு மிகை எதார்த்தத்தில் சொல்லி இருக்கிறார். மனிதனை மனிதன் சாப்பிடும் அவல நிலை பற்றிய கற்பனை கொஞ்சம் பயப்படவே வைக்கிறது. ஆனால் அந்த கதை சொல்லப்பட்ட முறையிலும் கதையின் மையத்தை தீவிரமாக கொண்டு சென்ற முறையிலும் ஒரு முக்கியமான கதையாகவே இருக்கிறது. சாதி சார்ந்த படிநிலைகள் எப்படி இருக்கின்றன என்பதை எப்போதும் அக்கறை கொண்டு எழுதுபவர். அந்த வகையில்தான் கொல்லப்படுகிற பஞ்சமி நில மனிதர்கள் மற்றும் காதலுக்காக பலிகொள்ளப்படுகிற காதலர்கள் கருப்பு கூட்டம் கதைகளிலும்..
அருண் அவர்கள் திரைப்படத் துறையை சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால் அந்த சார்ந்த துறை சார்ந்த சிரமங்கள் இதில் இரண்டாம் கதையில் வெளிப்பட்டிருக்கிறது. வான்கோ காதுகளை அறுத்துக் கொண்டது போல இன்றைய கால சிரமங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரமும் அதிலிருந்து தப்பிப்பதற்காக காதுகளை அறுத்து ஒரு வழியில் நிவாரணம் அடைவதும் இன்னொரு கதையில் இருக்கிறது. நாமும் காதுகளை அறுத்து ஆறுதல் கொண்டது போல ஆகிவிடுகிறது பகுத்தறிவு சார்ந்த விஷயங்களை எடுத்துக் கொண்டு மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களை கட்டுடைக்கிற தன்மையும் இருக்கிறது. இந்த கட்டுடைத்தல் எல்லா கதைகளிலும் அமைந்திருக்கிறது. சமூக நிகழ்வுகளை கட்டுடைத்து வித்தைகள் காணும் ரூபம் இந்தக் கதைகளில் கவனிக்க முடிகிறது .
நுகர்வு முகத்தை சார்ந்து இயங்குகிற கதைகளின் அத்தாட்சிகளாக இபி மின்சாரம், கிரெடிட் கார்டு ஆகியவை உள்ளன, இபி மின்சாரம் கதையில் மின்சாரம் தடைபடலும் கட்டண உயர்வுகளும் ஒரு சாதாரண மனிதனை அலைக்கழிப்பதை சொல்கிறார். கிரெடிட் கார்டு என்று அம்சம் சாதாரண மக்களை வணிக்க் களவாணி கூட்டத்தில் மாட்டிக் கொள்ள வைத்து அலைக்கழிப்பதை பற்றி சொல்லப்படுகிறது. தொடர்ந்து சமூக அநீதிகள் நிகழ்வுகளை கதைகளால் சொல்லும் போது மிகை எதார்த்தமும் சற்று உயர்ந்த குரலும் கொண்டு வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத்தாகிறது. அப்படித்தான் இக்கதைகளும் தவிர்க்க முடியாத கொடுமைகளான சமூகம் சார்ந்த அநீதிகளை சுட்டிக்காட்டும் கதைகளாக அமைகிறது - சுப்ரபாரதி மணியன்
அக்கானி :. இலா வின்சென்ட் நாவல் -- சுப்ரபாரதிமணியன்
பனையேறி மக்களுடைய வாழ்க்கையை ஹெப்சிபா ஜேசுதாசன் ஜேக்கப் வாத்தியார் முதற்கொண்டு செல்வம் வரை பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் வின்சென்ட் அவர்களின் நாவலில் அவருடைய களமும், கோலமும் வேறுபட்டதாக இருக்கிறது. வின்சென்ட் அவர்கள் சேலத்திற்கு நாஞ்சில் நாட்டு கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் இந்த நாவலில் அவர் பயன்படுத்தி இருக்கும் பூட்டேற்றி கிராம மக்கள் சார்ந்த மொழியை அவர் பயன்படுத்தும் லாவகமும் மலையாளமும் தமிழும் கலந்த மணி பிரவாள பேச்சு நடையும் இந்த நாவலின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. அந்த பேச்சு மொழியோடு அவர்களுடைய உணவு வகைகள், அவர்களின் வசிப்படங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றை மிகவும் நுணுக்கமாக இதில் காட்டியிருக்கிறார். அந்த பனையேறி மக்கள் வேலையில்லாத போது நெசவு தொழிலைக் கைக்கொள்கிறார்கள் அல்லது கூலி வேலைக்குச் செல்கிறார்கள். பனையேறி தொழில் சார்ந்த தீவிரமான நுணுக்கமான விவரிப்புகள் போல நெசவாளர் சார்ந்த தகவல்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனால் கதை ஓட்டத்தோடு நெசவுத்தொழிலோடு அந்த மக்கள் எப்படி இயைந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சிறப்பாக சொல்கிறார். ஏழ்மையில் கிடக்கும் மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கைக்கு ஓடுபவர்கள். அவர்களுக்குப் பசியைத் தீர்க்க ஏதாவது உணவு கிடைத்தால் போதும். இதிலிருந்து மீட்சி என்பது பற்றி எல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. ஆனால் கல்வி என்பது அவர்களுக்கு எப்படி மீட்சியைத் தருகிறது. பொதுவுடமை இயக்கங்கள் எப்படி அவர்களை வலிமைப்படுத்தி எழுச்சி கொள்ள வைக்கிறது என்பதுதான் இந்த நாவலின் முக்கிய மையமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் படும் பாட்டை சொல்ல இயலாது. குடும்பத்தில் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். கணவன்களின் கொடுமையை சகித்துக் கொள்கிறார்கள். குடும்பப் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. பாலியல் ரீதியான பல்வேறு தொல்லைகளையும் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது இதெல்லாம் மீறி தன் குடும்பத்து உறுப்பினர்களை பெருமைப்படுத்த பல்வேறு செயல்களில் செயல்பட வேண்டி இருக்கிறது. அந்த வகையில் ஏழ்மையிலும் கல்வியைப் பெறுவது அதற்கான முயற்சியில் எடுப்பது என்பது பெண்களின் முக்கிய கடமையாகி விடுகிறது. இந்த பனை தொழிலாளர்கள் தங்களுடைய சிரமங்களை அப்படியே சொல்லிக் கொண்டிருக்காமல் தங்கள் உரிமைகளை சார்ந்து போராடவும் வழி வகுத்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்த நாவலில் முக்கிய அம்சமாக இருக்கிறது. அந்த போராடும் மக்களின் வாழ்க்கை முறையில் இருந்து, படித்த ஒருவர் அந்த இயக்க வேலைகளுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை சூசகமாக சொல்லி இந்த நாவல் முடிகிறது. அங்கு இருக்கிற பொதுவுடமை இயக்கம் சார்ந்த செயல்பாடுகளை பற்றி விரிவாக சொல்கிறபோது அப்பகுதியில் அந்த கட்சியின் தோற்றம், வளர்ச்சி அது தேர்தலில் தன்னை முன்னிறுத்த ஆசைப்படுவது, அது பற்றி விமர்சனங்கள் போன்றவையும் சொல்லப்படுகிறது கிறிஸ்துவத்தை பற்றியும், விடுதலை இறையியல் பற்றியும் பல்வேறு விவாதங்கள் இந்த நாவலில் இருக்கின்றன, அந்த விவாதங்களை அவர்கள் தங்களுடைய பேச்சுக்களாக, உரைகளாக மட்டும் கொள்ளாமல் நாடக வடிவில் சொல்லும் விதத்திலும் அந்த நாடகப் பிரதி என்று இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவுடமை இயக்கங்கள் இந்த மண்ணின், பனையேறி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவதை இந்த நாவல் பல்வேறு சித்திரங்கள் மூலம் சொல்கிறது. 70 களில் திருப்பூரில் நடந்த ஒரு நெசவாளர் போராட்டத்தை மையமாக வைத்து நான் ” தறி நாடா” என்ற நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலில் நெசவாளிகளின் போராட்ட சூழலும் அந்த நெசவாளர் குடும்பத்திலிருந்து படித்த இளைஞன் அந்தப் போராட்டம் தருகிற அறிமுக காரணமாக தன்னை பொதுவுடமை இயக்கத்தில் முழுமையான மாறுவதற்காக தயார் படுத்திக் கொள்வதை அந்த நாவலில் நான் எழுதி இருந்தேன். அந்த நாவலின் இரண்டாவது
பாகமாக அந்த இளைஞரின் பொதுவுடமை இயக்க அனுபவங்களும் இன்றைய கட்சி சார்ந்தவர்களின் சாதிய, தனி மனித குருரங்களும் சார்ந்து அது அவனை சிதைப்பதை இரண்டாவது பாகமாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாவது பாகம் ஒரு வகையில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த பலவீனங்களை பெரிதுபடுத்தி காட்டுவதாக அமைந்துவிடும் என்று நான் அந்த இரண்டாம் பாக நாவலை எழுதவில்லை.
இந்த நாவலில் வின்சென்ட் அவர்கள் அப்படி ஒரு இளமையான, துடிப்பான இளைஞனைத் தான் முன்வைக்கிறார். சுயநலத்தோடு வாழ்க்கையை நடத்துவதை விட பொதுநலத்தோடு அணுகுவது என்பது அந்த இளைஞனுக்கு உவப்பாக இருக்கிறது. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சிகள் சாதாரண தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியத் தாக்கங்களை இன்னொரு கோணத்தில் சொல்லும் நாவலாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் பனையேரி மக்களுடைய வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்தவை. அவர்களிடம் மொழியும் அந்த வகையில் பின்னிப்பிணைந்தவை. ரத்தமும் சதையுமாக அந்த மனிதர்களை முன் வைப்பதில் இல வின்சென்ட் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய 15க்கும் மேற்பட்ட நூல்களில் அவருடைய முதல் நாவலாக இதைக் கொள்ளலாம். பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டு நூல்களும் எழுதி இருந்தாலும் முதல் நாவல் என்ற வகையிலேயே ஒரு சிறந்த நாவலை அவர் தந்திருக்கிறார் என்பது கூடுதல் பலம் தருகிறது.
பாரதி புத்தகாலயம் சென்னை வெளியீடு - ரூபாய் 330
ReplyForward
என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் : சுப்ரபாரதிமணியன்
“ மொழிபெயர்ப்பது என்பது
ஒரு வகையில் கூடுவிட்டு கூடு பாய்வது தான்
ஒரு மீன் தண்ணீரில் தாவி நீந்துவது போல்
ஒரு மொழிபெயர்ப்பாளனும் மனங்களுக்குள் நீந்துகிறான். ஒவ்வொரு சொல்லின் கரையிலும்
நிரம்பி இருக்கும் மணலில் மண்டியிடுகிறான்.
ஒவ்வொரு சிற்பியின் வண்ணத்தையும் உற்றுநோக்குகிறான். ஒவ்வொரு சங்கையும் ஊதி பார்க்கிறான்
மொழிபெயர்ப்பு என்பது
விக்கிரமாதியன் கதைகளில் வரும்
தலைகளை இடம் மாற்றி வைக்கும் வேலைதான். மொழிபெயர்ப்பாளன் இன்னொரு கவிஞனின் தலையை
தன் முண்டத்தின் மீது பொருத்தி வைக்கிறவன் தான்.
மொழிபெயர்ப்பின் வழியில் வருகிறவர்களே
உங்கள் காலணிகளை கழற்றி விடுங்கள் கரையில்..
உங்கள் உடைகளைக் களைந்தும் விடுங்கள்
நிர்வாணமாகப் பதுங்கி செல்லுங்கள்.”
( மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தன்)
0
இந்தியா என்பது ஒற்றை கலாச்சாரத்தால் அமைக்கப்பட்டது என்பது போல சில சமயம் தோற்றமளித்தாலும், அப்படி சிலரால் கட்டமைக்கப்பட்டாலும் இந்தியா என்பது அப்படியல்ல, பல்வேறு கலாச்சார கூறுகளை உள்ளடக்கிய பல மடிப்புகளை கொண்டது. இந்த எண்ணங்கள் இந்தியாவின் பல்வேறு மொழி படைப்பாளிகளின் படைப்புகளை ஆங்கிலம் மூலம் மொழிபெயர்க்க போது நான் உணர்ந்தேன்
சாகித்ய அகாடமியின் ஆலோசனை குழு உறுப்பினராக 2008 முதல் 2012 வரை கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையிலான குழுவில் பணியாற்றினேன். அப்போது சாகித்ய அகாடமிக்காக இரண்டு நூல்களை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிராந்திய செயலாளராக இருந்த இளங்கோவன் அவர்கள் என்னை மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ளச் சொன்னார். ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் பல்வேறு படைப்பாளிகளுக்கு மொழிபெயர்ப்புக்காக படைப்புகளை ஒதுக்கீடு செய்யும் பணியின் போது என்னையும் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடச் சொன்னார்
அப்படி நான் சாகித்ய அகாடமிற்காக எடுத்துக் கொள்ள முதல் நூல் ஒடிய எழுத்தாளரான ஜே பி தாஸ் என்பவரின் “ உயில் மற்றும் பிற கதைகள் “ .ஜே பிதாஸ் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். டெல்லியில் அப்போது இருந்து கொண்டிருந்தார். அவரின் ஒடியக் கதைகள் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதையும் ஒடிய கலாச்சார அம்சங்களும், தொன்மங்களும், மக்களின் நம்பிக்கைகளும் அவை மூட நம்பிக்கையாக இருந்தாலும் சரி தனித்து விளங்குவதை கண்டேன். எனவே அந்தக் கதைகளை மொழி பெயர்க்கிற போது அந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பது என்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. கடவுள் நம்பிக்கையோ, மூடநம்பிக்கையோ மக்கள் சார்ந்த தொன்மக்கதைகளோ என பல பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கதைகளாக அவை இருந்தால் கூட பல சமயங்களில் அவை ஒவ்வொன்றுக்குமான தனித்தன்மை இருப்பதை அந்த ஒடிய கதைகளை மொழிபெயர்க்கும் போது அறிந்து கொண்டேன். அதற்கு பின்னால் நான் மொழி பெயர்த்தது ” பூமியின் பாடல்கள்” என்ற சாகித்ய அகடமி வெளியிட்ட நூல், வடகிழக்கு இந்திய எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு . வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களுடைய கதைகளினுடைய அம்சங்களை கவனிக்கிற போது அவை பல சமயங்களில் இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டதைப் போல தென்படும். மலைப்பகுதிகளும் இயற்கை வளங்களும் கொண்ட வடகிழக்கு இந்திய பகுதி சார்ந்த கதைகள் அவர்களின் பிரத்தியேக வாழ்க்கையை சொல்வதை கனிம வளங்களும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை சம்பந்தமான இடங்களும் என்று உள் வாங்கினேன். அதனோடு மக்களுடைய வாழ்க்கையையும் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடக்கூடாது என்ற அக்கறையில் அவற்றை பாதுகாக்கும் ஆதிவாசிகளும், பழங்குடி மக்களும் போராளி குழுக்களும் அவர்களுடைய பிரிவினைகளும் ஒற்றுமையும் பல சமயங்களில் ஆச்சரியப்படுத்தியது. பின்னால் வடகிழக்கு இந்திய பகுதிகளுக்கு நான் சென்றிருந்தபோது நான் மொழி பெயர்த்த அந்த கதைகள் சார்ந்த மனிதர்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தக் கதைகளை நான் இன்னும் ஒரு முறை திரும்ப வாசித்த போது அவற்றின் தீவிர தன்மையும் உண்மை தன்மையும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த இரண்டு நூல்கள் மொழிபெயர்ப்பிலும் நான் மூலப்படைப்பைப் போல பல சிக்கல்களை எதிர்கொண்டேன். ஆனாலும் எழுதி முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
எங்கள் திருப்பூர் என்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி தரும் நகரமாக இருக்கிறது. பின்னலாடை துறை மூலமாக இந்த 50,000 கோடி ரூபாய் அன்னிய செலவாணி கிடைக்கிறது. இந்த துறை சார்ந்து பல்வேறு ஆய்வுகள் உலகம் முழுக்க இருந்து வரும் கல்வித்துறை சார்ந்தவர்களாலும் ஜவுளித்துறை சார்ந்தவர்களாலும் செய்யப்படுகின்றன. அப்படி செய்யப்பட்ட ஒரு நூல் நெதர்லாந்து சார்ந்த சில ஆய்வாளர்கள் நடத்திய பின்னலாடை துறை சார்ந்த ஆய்வு ” நிட்டட் டுகெதர்” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதை நான் ” பின்னலின் பின்னல்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தேன். சுமார் 400 பக்கம் கொண்ட அந்த ஆய்வில் திருப்பூர் சார்ந்த தொழிலார்களின் நிலைமை, பெண்களுடைய வேலை அமைப்பு, சாயப்பட்டறை தொழில் மாசுபடுத்தி இருப்பது உட்பட பல விஷயங்களைப் பற்றிய புள்ளி விவரங்களை நான் கண்டுகொண்டேன். அப்போதுதான் திருப்பூர் சார்ந்து இயங்கும் தன்னார்வ குழுக்கள் மற்றும் திருப்பூர் மக்களின் வாழ்க்கையை போராட்டங்களில் மூலம் பதிவு செய்யும் தொழிற்சங்கங்கள் இவற்றினுடைய போக்குகளும் நடவடிக்கைகளும் சரியாக அறிந்து கொள்ள முடிந்தது.
விஜயவாடாவில் நடக்கும் கவிதை திருவிழாக்களில் பல ஆண்டுகள் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவற்றை முன் நின்று நடத்தியவர் திருமதி பத்மாஜா ஐயங்கார் என்பவர்.தமிழர். பாடி என்று அவரை செல்லமாக அழைப்பார்கள். அந்த பெயரில் தான் அவரும் ஆங்கிலத்தில் எழுதுவார் .அவர் விஜயவாடாவில் அந்த கவிதை திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துவார். உலகம் முழுக்க இருந்து கவிஞர்கள் கலந்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து 500 பக்கங்களுக்கு மேலாக ஆண்டுதோறும் புத்தகமாக வெளியிடுவார். அந்த புத்தகத்தில் அவரவர் மொழி சார்ந்தப் பிரதிகள் மட்டுமல்லாமல் ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு பிரதிகளையும் அதே நூலில் வைத்திருப்பார்கள். பெரிய முயற்சியாக பல ஆண்டுகள் அந்த திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. ஓர் ஆண்டில் அப்போதைய ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அவர்கள் கலந்து கொண்டு தமிழ் தெலுங்கு கவிதை உலகம் பற்றியும் இந்திய கவிதையை பற்றியும் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. பல வெளிநாட்டுக் கவிஞர்களின் அரிய உரைகளையும் கேட்டிருக்கிறேன். அந்த கவிதை திருவிழாவில் நான் ஆண்டுதோறும் ஒடிய கவிஞர் சுப்ன பெஹரா என்பவரை சந்திக்கிற வழக்கம். அப்படித்தான் ஓராண்டில் அவரின் ஒரு கவிதை தொகுப்பை பெற்றிருந்தேன். அதை ” அகதி முகாமில் ஓர் இரவு” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தேன். அதேபோல இன்னொரு ஆண்டு அதே ஓடிய பிரதேசத்தைச் சார்ந்த சங்கரா ஜெனே என்பவருடைய ” கான்சிபூரின் நிலவு “ என்ற நூலை தமிழுக்கு மொழி பெயர்த்து இருந்தேன். ஒரு இரண்டுமே நல்ல அனுபவங்கள். அந்த விஜயவாடா கவிதைத் திருவிழா ஆகட்டும், சாகித்திய அகடாமி நிகழ்ச்சிக்காக வெவ்வேறு ஊர்களுக்கு நான் செல்கிற போதும் அங்கு சந்திக்கிற கவிஞர்களின் படைப்புகளுடன் உறவாடுகிற போது அவற்றில் மூழ்கி இருக்கிற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு பின்னால் பன்னாட்டு கவிதைகள் 2016/ 2017 என்ற தலைப்புகளில் மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்திருக்கிறேன்
என்னுடைய படைப்புகளில் சுமார் 20 படைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்தவை. சுற்றுச்சூழல் சார்ந்த என் படைப்புகளில் என் மூன்று நாவல்களும், 12 கட்டுரை நூல்களும் அடங்கும். ஆகவே தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த என் மனம் அது சார்ந்த பல பிரச்சனைகளைக் கொண்ட கட்டுரைகளையும் மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறது. அப்படித்தான் இன்றைக்கு உலகை ஆட்டிக் கொண்டிருக்கும் உலக வெப்பமயமாதல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் சார்ந்து நான் மொழிபெயடுத்த கட்டுரைகள் ” போப் சூழலில் மற்றும் பிற கட்டுரைகள்”
என்ற தலைப்பில் நான் ஒரு நூலாக கொண்டு வந்தேன்
சார்ஜா புத்தக கண்காட்சிக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறை சென்ற போது அங்கு லாபியா அஞ்சும் என்ற ஒரு இளம் கல்லூரி மாணவி மற்றும் பெண் கவிஞரை சந்திக்க நேர்ந்தது அவருடைய ஒரு கவிதை தொகுப்பை நான் மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் அறையில் தங்கியிருந்த போது தினந்தோறும் ஒரு கவிதை என்ற வகையில் மொழிபெயர்க்க ஆரம்பித்து சார்ஜா புத்தகக் கண்காட்சி முடிகிற சமயத்தில் ஒரு தொகுப்பை முடித்து வைத்திருந்தேன். அதுதான் பின்னால் ” பேசாத.. “ என்ற தலைப்பில் திருப்பூர் கவிநிலா பதிப்பகம் ஒரு புத்தகமாக கொண்டு வந்தது. சென்றாண்டு 2021 இல் மீண்டும் சார்ஜா புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அப்போது துபாயில் தங்கி இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மெலடி என்பவர் ஒரு ஆங்கில கவிதை தொகுப்பை எனக்கு பரிசளித்தார் .அவர் ஒரு மலையாள கவிஞர் பத்திரிகையாளர். தினமும் கிடைத்த ஓய்வில் துபாய் கவிஞரின் அந்த கவிதைகளை மொழிபெயர்த்து முடித்தேன் “ புலம்பெயர் மணல் துகள்கள்” என்ற தலைப்பில் அந்த நூல் பின்னால் வெளிவந்தது. அந்த நூலில் இடம் பெயர்ந்து வாழும் இந்திய மக்களுடைய பிரச்சினைகள் பற்றியும் அவர்களுடைய உணர்வுகள் பற்றியும் கவிதைகளின் அனுபவங்களை மொழிபெயர்த்து இருந்தேன் .
சாகித்ய அகாடமின் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் எனக்கு மிகுந்த உற்சாகம் தரக்கூடியவை. அப்போதெல்லாம் அங்கு சந்திக்கிற கவிஞர்களின் கவிதைகளை பெற்று உடனே மொழிபெயர்க்கிற ஒரு வேலை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தேன். அந்த கவிதைகளை நான் “ அரசியல்வாதியும் புறாவும்” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன் பல்வேறு அரசியல் கருத்துக்கள் சார்ந்த விஷயங்கள் நம் இந்திய சமூகத்தை பாதிப்பதை அந்த தொகுப்பில் நான் அடையாளம் கண்டு கொண்டேன்.
பெண்கள் உரிமைகள் சார்ந்தும், பாலின வேற்றுமை சார்ந்தும் பல்வேறு கருத்தரங்குகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் இந்தியாவில் நடைபெற்ற அந்த வகை கருத்தரங்குகளில் மட்டுமல்லாமல் பாலின வேறுபாடு சார்ந்த இரண்டு சர்வதேச கருத்துகளில் வங்காள தேசத்தின் டாக்காவில் நடைபெற்றவையில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த அனுபவங்களை பல்வேறு கட்டுரைகளாக எழுதி இருந்தால் கூட நான் பெண்கள் உரிமை சார்ந்த ஒரு நூலை மொழிபெயர்க்கிற வாய்ப்பை ஒரு தன்னார்வ குழு அமைப்பாளர் திலகா அவர்கள் ஒருமுறை அளித்தார். அது சர்வதேச தொழிலாளர் ஆணையம் வெளியிட்ட பெண் உரிமைகள் சம்பந்தமான ஒரு நூலாகும். அந்த நூலை ” பெண்களும் தொழிற்சங்கங்களும்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டு இருக்கிறேன் அந்த நூலில் பாலின வேறுபாடு காரணமாக சுரண்டப்படும் பெண்களும் அவர்களுக்கான நிலையும் உலக அளவில் எப்படி இருக்கிறது வெளிநாட்டுத் துறைகளில் எப்படி இருக்கிறது என்பதை சார்ந்த பல எண்ணங்களின் பிரதிபலிப்பாக அந்த நூல் வெளி வந்திருக்கிறது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகக் கலந்து கொள்கிற வாய்ப்பின் போது அங்கு வாங்கும்பல நூல்களின் கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்
சமீபத்தில் வெளிவந்த என்னுடைய மொழிபெயர்ப்பு நூல் ” பெயிண்டிங் பிரஸ் நம்பர் 000 “. பாலக்காட்டைச் சேர்ந்த அஞ்சு சஜித் அவர்கள் ஒரு பிரபலமான பதிப்பகத்தின் முக்கிய நிர்வாகியாக பணிபுரிகிறவர் அவர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறவர். அவர் ஆங்கிலத்தில் எழுதின பல படைப்புகளை படித்து இருக்கிறேன் ஒருமுறை நானும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ப.கா. பொன்னுசாமியும் பாலக்காட்டிற்கு சென்றிருந்தோம். பாலக்காட்டில் பிரபல எழுத்தாளர் அமரர் ஓ வி விஜயன் அவர்களுடைய நினைவு இல்லத்திற்கு சென்று விட்டு அவருடைய படைப்புகள் பற்றி பல்வேறு பரிமாணங்னைகளை உள்வாங்கிக் கொண்டு திரும்பிய போது பாலக்காட்டில் அஞ்சு சஜித் அவர்களைச் சந்தித்தேன். அவர் கொடுத்த அந்த நாவலின் ஆங்கில பதிப்பை பாலக்காட்டில் இருந்து நான் திருப்பூர் வருவதற்குள் படித்து முடித்து விட்டேன். அதை உடனே மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. ஓவியர் ஒருவரின் உலகத்தை பற்றி அந்த நாவல் சொன்னது. நரபலிகள் மற்றும் மூடநம்பிக்கை சார்ந்து இயங்குகிற ஒரு சமூகத்தில் அதை தன்னுடைய படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகிற ஒரு ஓவியனுக்கு ஏற்படுகிற சிரமங்களும் அனுபவங்களும் பின்னால் அவர் காணாமல் போவதும் அவரைத் தேடி அவருடைய மகன் சென்னையில் அவர் வசித்த பகுதிகளில் சென்று அலைவதுமான அனுபவங்களை அந்த நாவல் கொண்டிருந்தது.
என் மொழிபெயர்ப்பு பணியில் என் படைப்பிலக்கியத்தின் அம்சங்கள் அவற்றை மொழி பெயர்க்க எனக்கு உதவி இருக்கின்றன. ஒரு படைப்பை உருவாக்குவது போலவே மொழிபெயர்ப்பையும் உருவாக்கும் தன்மையை நான் உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்திய மற்றும் சர்வதேச கலாச்சார அம்சங்களை உள்வாங்கிக் கொள்கிற ஒரு பணியாக மற்றும் ஆங்கில வழியில் அந்த மொழி சார்ந்த நுணுக்கங்களை பிரதிபலிக்கும் தன்மையை இந்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு படைப்புகளின் மொழியாக்கமும் என்னை தொடர்ந்து இந்த துறையில் இயங்கச் செய்து கொண்டிருக்கிறது
குரு அரவிந்தன் அவர்களின் இரண்டு நாவல்கள்
” சொல்லடி உன் மனம்
கல்லூரி உன்னருகே நானிருந்தால்.. ”
ஆகியவற்றை முன்வைத்து.. / சுப்ரபாரதிமணியன்
குரு அரவிந்தன் அவர்களுள்ள வாசக வட்டம் உலகளாவியது. பரவலானது. பரவலானது என்றாலே அந்த கதைகளை வாசிக்க கூடியவர்களே குடும்பக் கதைகளில் அக்கறை கொண்டவராக இருக்கிறார்கள். குடும்பக்கதைகளில் வருகிற கதாபாத்திரங்களை தங்களுடைய குடும்ப மாந்தர்களாக எண்ணி அவர்களுடன் வாசகர்கள் உரையாடுகிறார்கள். உணர்ச்சி கொள்கிறார்கள். அதனால் தான் குடும்ப கதைகளை படிக்கிற வாசகர்கள் உலகம் முழுக்க அதிகமாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.அப்படித்தான் குரு அரவிந்தன் கதைகளும் என்று நினைக்கிறேன்.
இந்த இரண்டு நாவல்களிலும் அவர் ஓரளவுக்கு குடும்பக் கதையை தான் சொல்லி இருக்கிறார் என்று தோன்றுகிறது. மற்ற இலக்கிய பிரதிகளில் வருவது போன்று சிக்கலான மனிதனுடைய மனப்பான்மையைச் சொல்லாமல் இயல்பான மனிதர்களின் கதையை சொல்லுகிற போக்கு பெரிதாக இருக்கிறது. அவர் இதுபோல இளம் எழுத்தாளர்களின் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டத்தை எடுத்து சொல்லும் புதினம் ” சொல்லடி உன் மனம் கல்லோடி “ .
புலம்பெயர்ந்த மண்ணில் எழுத்தாளனுக்கும் கலை உலகுக்கும் இவர் மிகுந்த பயன்பாடு கொண்டவராக இருக்கிறார் என்றருகிறேன். பலரை வளர்த்தார் என்பது கூட முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதில் வருகிற கமலினிக்கு அமெரிக்கா செல்வது ஒரு கனவாக இருக்கிறது. அவளுக்கு இசை தெரியும். நாட்டியம் தெரியாது அவருடைய இன்னொரு நெருங்கிய மாலதி நாட்டியம் நன்கு தெரிந்தவள். கண்ணன் புலம்பெயர்ந்து வந்தவன். மிருதங்கத்தில் மிகுந்த ஆர்வம். கொண்டவன் அவனின் திருமண ஆசையும் இந்த நாவலில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. மாலதியும் கமலினியும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால் சில முரண்பாடுகள் உண்டு கமலினிக்கு ஆங்கில மோகம் மாலதிக்கும் தமிழ் தேச எண்ணம். உடை அலங்காரத்தில் மேலைநாட்டு உடைகளை கமலினி விரும்புவாள். மாலதி தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை பேணி காப்பதில் கவனம் கொள்வாள்.. வாழ்ந்தால் அமெரிக்காவில் தான் வாழ வேண்டும் என்ற கனவோடு கமலினி இருப்பாள். ஓலை குடிசை என்றாலும் குடும்பத்தோடு நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று மாலதியின் வாழ்க்கை முறையும் கண்ணனின் எண்ணங்களும் அநேகமாக ஒத்து போகக்கூடிய தன்மை இருக்கின்றன. அந்த வகையில் இந்த நாவலில் அந்நாட்டையும் பற்றியும் இசை பற்றியும் பல அருமையான உரையாடல்கள் உள்ளன. நாட்டியத்தில் நவரசம் என்றெல்லாம் சொல்லுவார்களே அது எது குறிக்கும் நவரசத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் தொல்காப்பியத்தில் வரும் பல விஷயங்களைப் படிக்க வேண்டும் பரதநாட்டியத்தில் இருக்கும் இரண்டு உட்புறவுகளான திருத்தம் திருத்தியம் ஆடல் என்று சொல்லில் இருந்துதான் அடைவு பிறந்து இருக்க வேண்டும். உடலின் அசைவுகளால் தான் நடனத்தில் இந்த அடைவுகள் தோன்றுகின்றன. அதனுடைய நன்றாக கற்றபிறகு ஆடல் உறுப்படிகள் அலாரிப்பு வண்ணம் பதம் தில்லானா போன்றவற்றையும் முறைப்படி கேட்க வேண்டும் என்பதில் கூட அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மாலதியின் கணவர் குடித்து செத்து விடுகிறார் .அவர் பெயர் ராஜன் என்பது. அவன் கொலையா என்பது கூட ஒரு சிக்கல் ஏற்படுகிறது. ஆண் குழந்தை என்று அவளுக்கு இருக்கிறது.
குரு அரவிந்தன் அவர்களுடைய எழுத்து வாழ்க்கை 25 ஆண்டுகளை கடந்து இருக்கிறது என்ற முக்கியமான குறிப்பையும் இந்த சமயத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
” உன்னருகில் நானிருந்தால்” என்ற நாவலில் வரும் நந்தகுமார் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறான். இந்தியனாக இருக்கிறான். உல்லாச பயணியாகத்தான் அமெரிக்காவுக்கு வந்தேன். ஆறு மாதத்திற்கு மேல் இங்கே இருக்க முடியாது அதனால் எல்லையை கடந்து போய் கனடாவில் அது அகதி நிலை கோரப்போகிறேன் என்பதால் அவனின் ஆரம்பகால நிலையாக இருக்கிறது. அவன் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது ஒலிவியா அவனை கவனித்துக் கொள்கிறாள் அவள் ஒரு இத்தாலிக்காரி. கனடா வாழ்க்கை பற்றி பல முக்கியமான குறிப்புகள் இந்த நாவலில் உள்ளன. வைதேகி என்பவள் முக்கியமான கதாபாத்திரமாக வருகிறாள். லட்சுமி பாட்டி அவனுக்கு பல அறிவுரைகள் சொல்கிறாள். சுபாவிற்கு திருமண ஆசை இருக்கிறது. ஆனால் அவள் மனதில் இருப்பவன் வேறு ஒரு திருமணம் செய்து கொள்கிறான். இந்த சிக்கல்களில் உள்ள மனப்போராட்டங்களை இந்த நாவல் சொல்லிக் கொண்டு போகிறார். .நாலாவது தலைமுறையாக இருந்தாலும் சகோதர சகோதரி முறை என்று தெரிந்தால் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது போல் பல விஷயங்கள் சொல்லப்படுகிறது முதலாவது தலைமுறை அதாவது ஒரே பெற்றோருக்கு பிள்ளைகளாக பிறந்த அண்ணன் தங்கை இவர்கள் திருமணம் செய்வதென்பது பண்பாட்டு சமாச்சாரங்களுக்கு பொருந்தாது அருவருப்பானது என்று அபிப்பிராயம் சொல்லப்படுகிறது. லட்சுமி பாட்டி வாக்கு கொடுத்தாலும் அது வேறு கவரப்பட்ட விசயம், அந்த விருப்பம் அதிகரித்தாலும் நிச்சயமாக வைதேகியின் திருமணத்தை செய்து பார்க்கலாம் .பகுத்தறிவுப்படி பார்த்தால் நாலாவது தலைமுறை ஞாபகம் வைத்திருப்பது கஷ்டம். நாலாவது தலைமுறை என்பதால் மருத்துவ ரீதியாக அதிகம் தாக்கம் இருக்காது ஆகவே அவர்கள் திருமணம் செய்து கொள்ள பற்றி சர்ச்சைகள் உண்டு என்ற உணர்வு இல்லாதவர்கள் என்று இந்த கதை பற்றி சொல்லியிருக்கிறார்கள்.. ஒரு குடும்பத்தில் உள்ளேயோ அல்லது குறுகிய சமயத்தில் உள்ளேயோ தலைமுறையினராக மாறி கல்யாணங்கள் செய்து வருகிற போது பரம்பரை வியாதிகள் வருவதும் சாதாரணமாகவே உள்ளது. அவை பற்றி விவாதங்கள் இங்கே உள்ளன. அதே சமயம் தூய்மையான அன்பால் படைக்கப்பட்டுள்ள இரண்டு உள்ளங்களை போலியான சம்பிரதாயங்களை காட்டிப் பிரித்து வைப்பது சரியாகுமா என்பதை பற்றிய விவாதம் இந்த நாவலில் இருக்கிறது. ஆனால் இந்த சர்ச்சை குறித்து முடிவு விஷயத்தை வாசகர்கள் முடிவு சொல்லட்டும் என்று அவர் விட்டுவிடுகிறார்.. வைதேகி திருமணம் சமூக வழக்குகளால் அங்கீகரிக்கப்பட முடியாது. தனிப்பட்ட விருப்புகளை அடிப்படையில் நடத்தலாம் என்பது போன்ற கருத்துக்கள் புலம்பெயர்ந்த மக்களின் சமகால வாழ்க்கையோடு சொல்லப்படுகின்றன. சுபாவை போன்ற பெண்மணிகள் அந்த மண்ணில் கையில் குழந்தையோடு ஆதரவு இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார்.
மனித குல வரலாறு எத்தனையோ மாற்றங்களை கண்டது அவற்றில் இது போன்ற திருமண உறவுகளும் ஒன்று. பழையது என்பதாலேயே அனைத்தையும் கழித்து கட்டுவது புதுமை என்பதாலே அப்படியே ஏற்றுக் கொள்வது நன்மை பயக்காது பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னும் நன்னூல் வழக்குக்கு ஏற்ப நீக்கி ஏற்க வேண்டியதை ஏற்று வாழ்க்கை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற அபிப்பிரங்கள் விவாதங்கள் மூலமாக இந்த நாவலில் முன் வைக்கப்படுகின்றன .
காலம் ஒரு நதியைப் போல உருண்டோடி கொண்டிருக்கிறது காலத்திற்கு திரும்பிச் செல்லும் விஷயம் நம் ஞாபகப்படுத்திக் கொள்வதன் மூலமாக நடக்கும். காலத்தை திருப்பி எட்டிப் பிடிக்க முடியாது காலத்தின் பயணத்தில் பல மாற்றங்கள் நடக்கும். அந்த மாற்றங்கள் பின்னால் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் நாளை என்பதில் மாற்றம் வரலாம். எழுதி எழுதி அழித்து செல்ல வல்லது காலம். காலம் அப்படித்தான் வாழ்க்கையின் பல விஷயங்களை அழித்து புதிதாக எழுதித் தொடர்கிறது.
இந்த காலத்தின் கோலத்தை இரண்டு நாவல்களிலும் குரு அரவிந்தன் வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்ப நாவல் சார்ந்த கதாபாத்திரங்கள் என்பதால் பரவலான வாசகர்களும் எளிமையான நாவல் நபர்களின் போக்கும் பலருக்கு பிடித்திருக்கிறது. அவருடைய பணி தொடர்ந்து செல்ல வேண்டும். புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் சார்ந்த அவரின் சித்திரங்களும் அவரின் நாவல்களில் காணக்கிடைப்பது பொக்கிசமாக உள்ளது. அவற்றை அவரின் கட்டுரைகளில் காண்பதில் நிஜமானப் புதையல்கள் கிட்டியிருப்பதை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.
நாவல் சாட்சரதா
-----------------------------------------
(கா. சு வேலாயுதன் எழுதிய சாட்சரதா நாவல் குறித்து சுப்ரபாரதிமணியன் )
காசு வேலாயுதன்பத்திரிக்கையாளர் என்ற முறையில் பலம் வாய்ந்தவர். பத்திரிகையாளர் என்பவர் படைப்பிலக்கியம் பொறுத்த அளவில் பலவீனமானவர்.
பத்திரிகை பாணியும் எழுத்துமுறையும் படைப்பிலக்கியத்தில் மரியாதை பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் பத்திரிகையாளர் என்ற முறையில் தான் பெற்ற அனுபவங்களை ஒரு அருமையான நாவலாக கொடுத்த வகையில் அவர் ஒரு பலமான பத்திரிக்கையாளராக விளங்கியதை இந்த நாவல் நிருபித்திருக்கிறது.
“ பொழுது கால் மின்னல்” என்ற ஒரு கொங்கு நாட்டு பாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு நாவலை எழுதி சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னால் அவர் இந்த இரண்டாவது நாவலினை வெளியிட்டு இருக்கிறார். இடையில் சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் சார்ந்த மில் தொழிலாளருடைய வாழ்க்கையை அழுத்தமாக முகநூலில் எழுதி இருக்கிறார். அது இன்னும் நாவல் வடிவம் பெறவில்லை.
இந்த நாவலை பொறுத்த அளவில் எனக்கு ” மற்றும் சிலர்” என்ற வார்த்தை தான் ஞாபகம் வருகிறது. மற்றும் சிலர் என்றால் .தமிழகத்தில் உள்ள தமிழர்களை தவிர வேறு இடங்களில் வசிக்கிற தமிழர்கள் எனக்கு ஞாபகம் வருவார்கள்.
என்னுடைய முதல் நாவல் ” மற்றும் சிலர்” ( 1987 ) கூட ஹைதராபாத்தில் வசிக்கிற தமிழ் குடும்பங்களை மையமாகக் கொண்டு இருந்தது. அப்படித்தான் ஆதவன் முதல் ஆ மாதவன் வரை பலர் தாங்கள் வாழ்ந்த பகுதியை, வாழ்ந்த வேற்று மாநிலச் சூழலை படைப்புகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு வேற்று மாநில சூழலில், வேறு இடங்களில் வாழும் தமிழர்களைப் பற்றிய படைப்புகளில் இந்த காசு வேலாயுதம் அவர்கள் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
சமீபத்தில் மலையாளத்தில் ஒரு படம் வந்திருக்கிறது ” அதர்ஸ் ”என்று பெயர். அவர்கள் ஆண், பெண்களைத் தவிர திருநங்கைகள் ஆகியவரை அதர்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படித்தான் நானும் தமிழ்நாடு அல்லாமல் வேறு இடங்களில் வசிக்கிறவர்களை ” மற்றும் சிலர்” என்று குறிப்பிடுகிறேன்.
இந்த வேற்று சூழல் பற்றி தமிழ்நாட்டில் இருந்து எழுதிய எழுத்துக்கள் நிறைவே தென்படும். உடனடி யோசிப்பில் அகிலன் அவர்களுடைய ” பால்மரக் காட்டினிலே “ நாவல் ஞாபகம் வருகிறது.
அது மலேசியா பின்னணியில் அங்கு தமிழர்களுடைய வாழ்க்கையை சொன்னது. இதுபோல நாவல்களை அ.முத்துலிங்கம் அவர்கள் கூட எழுதியிருக்கிறார். நானும் பலமுறை மலேசியா நாட்டிற்குச் சென்ற காரணத்தினால் அந்த பாதிப்பில் அங்குள்ள தமிழர்களின் வாழ்வியலை கூர்ந்து பார்த்து கடவுச்சீட்டு, மாலு ( உயிர்மை பதிப்பகம், பொன்னுலகம் பதிப்பகம் ) என்ற நாவல்களை எழுதி இருக்கிறேன்.
பத்திரிகையாளராக பல ஆண்டுகள் அட்டப்பாடி பகுதியில் உள்ள தமிழர்கள் மற்றும் மலையாளிகள் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான நாவல் இது.
அட்டப்பாடி என்றதும் நமக்கு அது அட்டப்பாடி பகுதி பழங்குடியினர் மீதான காவல்துறையினர் அத்துமீறல் என்பது தான் ஞாபகம் வரும முன்னூறு ஏக்கர் பரப்பில் அடர்ந்த காடு. ஒரு சதுர கிலோ மீட்டரில் 2000 நுண்ணுயிர்கள் வாழக்கூடிய பகுதி.
அந்த பகுதியில் 70 களில் ஒரு நீர் மின்நிலையம் கட்ட ஆரம்பிக்கப்பட்டபோது அதன் காரணமாக அமைதி பள்ளத்தாக்கு அழிந்துவிடும் என்று சுகுத குமாரி போன்ற எழுத்தாளர்கள் முன்னின்று போராட்டம் நடத்தி அந்த அணைக்கட்டும் திட்டத்தை கைவிடச் செய்தனர்.
இன்றைக்கு சமீபத்தில் நான் அங்கு சென்று இருந்த போது உலகம் வெப்பமாய் கொண்டிருக்கிற சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியாக அதன் ஒரு பகுதி வறட்சியாக மாறி இருந்தது. மரங்களும், அபூர்வமான தாவரங்களும் கருகி மறைந்து போய் கிடக்கின்றன.
அந்த பகுதியை பற்றி பல மலையாளச் சித்திரங்கள் ( நாவல்கள்., திரைப்படங்கள் ) இருந்தாலும் காசு வேலாயுதம் தன் நாவலில் குறிப்பிடுபவதை தனித்தன்மை வாய்ந்தவை.
அட்டப்பாடி பகுதி சார்ந்து வாழும் பழங்குடி மக்களுடைய வாழ்வியலை பிரதிபலிக்கும் அவர்களுடைய மொழியிலேயே சொல்லப்பட்ட கவிதைகளை ” ஆதிவாசிகள் கவிதைகள் “ என்ற தலைப்பில் சுதேசமித்திரனை ஆசிரியர் கொண்ட ” அகநாழிகை” மின்னிதழ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அதை நிர்மால்யா மணி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிடுகிறார். அட்டபாடி சார்ந்து ஒரு முழு நாவலை காசு வேலாயுதம் இதன் மூலம் தந்திருக்கிறார்.
சமீபத்தில் ” பாராக்குருவி” என்ற ஒரு படம் மலையாளத்தில் அட்டப்பாடி மையமாக வைத்து வெளி வந்திருக்கிறது. அது இருளர் மொழியில் எடுக்கப்பட்ட படம். இருளர் மொழியில் மொழி வந்திருக்கிற முதல் படம் அது என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதில் சாராயம் காய்ச்சும் ஒரு தமிழ் பெண்மணி தான் கதாநாயகி..
கணவன் கைவிட்டு போய்விட்டான். மகள் ஒருத்தி இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் அவளை சுற்றியுள்ள தமிழருடைய வாழ்க்கையும் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கையும்தான் அந்த திரைப்படம் சொன்னது.
”பாராக்குருவி என்பது தந்தையில்லாதக் குருவியாம். அதுபோல் அந்த இளம்பெண் கர்ர்பமாகிவிடுகிறாள். தந்தையில்லாதக் குழந்தையாக அதனை வளர்க்க விரும்பவில்லை . கல்வி என்பது பெண்ணுடைய வாழ்வில் மிக முக்கியமாக இருக்கிறது
திருமணம் என்பதைத் தாண்டி அவள் வெளிவர கல்வி முக்கிய பாதையாக இருக்கிறது என்பதை அந்த படம் சொன்னது. இந்த அம்சத்தை தான் சாராயம் மற்றும் கல்வி சார்ந்த முக்கிய கூறுகளைக் கொண்ட நாவலாக காசு வேலாயுதம் நாவல் அமைந்திருக்கிறது. இதையும் ஒரு சிறந்த படமாக்க முடியும்.
கா.சு வேலாயுதன் நாவலில் வருகிற இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள். மதுவும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களுக்கான கல்வியை மீட்போம் என்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. தமிழர்கள் சாராயம் காய்ச்சுகிறார்கள்
அந்த பகுதியில் மதுவிலக்கு அமலில் உள்ள போது கூட தமிழகத்தினுடைய எல்லையில் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளால் அந்த கேரளப் பகுதி மக்கள் நாசமாகிறார்கள்.
அந்த ஆண்கள் மீது அந்தப் பகுதி பெண்களுக்கு பெரும் வெறுப்பு இருக்கிறது .மதுவைக் குடித்துச் சாகிறார்கள். அவர்கள் இருந்து என்ன பயன்.. சாகட்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள் ஆண்கள் இல்லாமல் விதவையாகவே வாழ அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் அதிலிருந்து மீள்வதற்காக தங்களை பல அமைப்பு மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதிலொன்று சாட்சரதா.
சமூக அநீதிகளை சொல்லிக் கொள்கிறார்கள் .தங்கள் குழந்தைகள் அதிலிருந்து மீட்க கல்விதான் முக்கியம் என்று உணர்கிறார்கள்.
அப்படித்தான் அந்த இயக்கம் அங்கு ஒளிர் விடுகிறது, பெண்கள் மீதான பாலியல், வன்முறை ஆண்களின் அதிகாரம், காவல்துறை அதிகாரம், கூட்டு களவாணித்தனங்களால் இவர்களின் போக்குகள் நிறைந்திருப்பது இவற்றையெல்லாம் நாவல் சொல்கிறது.
கல்வி சார்ந்த இயக்கம் வெற்றி பெறுகிற போது அப்போதைய குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் அது சார்ந்த ஒரு கூட்டத்திற்கு வருவது என்பது ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. அதில் போராடிய பெண்களை முன்னிலைப்படுத்துகிறார்.
அவர்கள் கண்ணகி, மாதவி என்ற இலக்கிய கதாபாத்திரங்கள்- காவியத்தன்மை கொண்டவை அதேபோல இந்த நாவலில் வருகின்ற அந்த இரண்டு மாதிரி என்ற பாத்திரங்களும் அப்படித்தான். ஒரு காவியத்தன்மையில் நிலை பெற்றவர்கள்.
அவர்களை அப்துல் கலாம் அவர்கள் அங்கீகரிக்கிறார். ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் அவரின் வருகையை விவரிக்கிற விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
சமீபத்தில் வெற்றி பெற்ற அட்டப்பாடியை மையமாக வைத்த மலையாள படம் ” கோசியும் ஐயப்பனும் ” அதில் காவல் துறை அதிகாரிகள் சாராய உலகத்தில் இருப்பவர்களோடு எப்படி இறங்கி இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்,
அவர்களுடைய வன்முறை உலகம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி சொல்வது. அந்த படத்தில் வருகிற நஞ்சம்மாவின் ஆதிவாசிப் பாடல் மனதை உருக்கும் பாடலாகும். அப்படி சாராயம் பண உலகமும் கொண்ட தளத்தில் காவல்துறை அதிகாரிகளும் எந்தளவில் இருக்கிறார்கள் என்பதை இன்னொரு பார்வையாய் காசு வேலாயுதன் இந்த நாவலில் சொல்கிறார்.
கல்வி இல்லாமல் வளரும் ஒரு சமூகம், .ஆண்களின் பாதுகாப்பு இல்லாமல் வளரும் சமூகம், . இவர்கள் மத்தியில் பெண்களுடைய நிலையை உயர்த்தும் போக்கு என்பது மிக முக்கியமாக இருக்கிறது.
இந்த தற்போதைய சமூக உலகத்தில் இருந்து இன்னொரு நல்ல சமூகம் வர வேண்டும் என்ற கனவு வேலாயிதத்திடம் இருக்கிறது.
இந்த கனவும் இந்த லட்சியமும் இந்த நாவலில் மட்டுமல்ல அவருடைய எல்லா படைப்புகளிலும் அடிநாதமாக இருக்கிறது அதை அவருடைய சிறுகதைகளிலும் முகநூல் கோப பதிவுகளிலும் நாம் காணலாம்.
அவருடைய முதல் நாவல் “ பொழுதுக்கால் மின்னல்” . மின்னல் என்றால் வெளிச்சம், ஒளி ,அப்படித்தான் இலக்கியங்கள் என்பது ஒளி தரும் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதில் வருகிற மது சார்ந்த விஷயங்களை ஒட்டி சோம பானம் பற்றிய ஒவ்வொரு அத்தியாயத்தின் குறிப்புகளும் சுவாரஸ்யமாக உள்ளன. அந்த சோம பானத்திற்கு எதிராக மக்கள் ஊர்வலமாக செல்வது, போராடுவது என்பது இந்த நாவலின் முதல் அத்தியாயமாக இருக்கிறது .
அவர்களில் தங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டு ஒரு ஊர்வலமாக செல்கிறார்கள் என்பதை விவரிக்கும் அந்த காட்சியில் பல சிற்றாறுகள் சேர்ந்து கலந்து போவது போல் பேராறு எனக் கடந்து செல்லும் விவரிப்பு மிக அற்புதமானவாகும்.
அதேபோல இந்த பகுதி குழந்தைகள் விளையாட்டு அம்சங்களில் இருக்கிற பாடல்களை அவர்களின் மொழியிலேயே அவர் சொல்கிறார். அந்த இருளர் மொழி என்பது தனியாக இல்லை
ஆனால் அவர்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் அந்த மொழியில் உள்ள பாடல்களை இந்த நாவலில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். பழங்குடி மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பண்டிகை நடவடிக்கைகள், அங்குள்ள விலங்குகள், அந்த மக்களை அச்சுறுத்துவது, குறிப்பாக காட்டு யானை போன்றவற்றின் அச்சுறுத்தல்கள் போன்றவையெல்லாம் விலா வாரியாகச் சொல்லப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் உள்ள ஊர் பெயர்கள், இருளருடைய பாத்திரங்களின் பெயர்கள் இவையெல்லாம் ஆச்சரியப்படுத்துபவை.
அமைதி பள்ளத்தாக்கு இந்த நாவலில் ஒரு பகுதியாக அங்கங்கே வந்து போகிறது பவானி நதியின் ஓட்டமும் அதனோடு இணைந்து போகிறது.
ஒரு காடு பாதுகாப்பாக இருக்கிறது, மக்களை பாதுகாக்கிறது ஆனால் அந்த காட்டை சுரண்டி வாழும் சில மக்கள் எப்படி அவர்களை எல்லாம் வெளியேற்றுகிற வேலையில் இருக்கிறார்கள் என்பதை தொடர்ச்சியாக சொல்லுகிறார்.
அதுவும் காவல்துறைக்கும் சாராய கும்பலுக்கும் இடையில் உள்ள பிணைப்பைச் சொல்கின்ற போது அந்த பணப்பரிமாற்றங்களை வெளிப்படையாகவே ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் தைரியத்துடன் காசு வேலாயுதன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
அதுவும் சிறுவர்கள் சிறுமிகள் சார்ந்த பாலியல் தொல்லைகள் எப்படி வடிவெடுக்கின்றன என்பதை சொல்கிறார். தமிழர்கள் சாராயம் காச்சி அந்த பழங்குடி மக்களை வீழ்த்துகிறார்கள் என்பதில் தமிழர் மீது பழி கூட இருக்கிறது.
ஆனால் அது உண்மையான விஷயமாக இருக்கிறது. ஹாஜி மஸ்தான் போன்றவருடைய பிணைப்பு, அதிலிருந்து மீள்வதற்காக ஒரு காவல்துறை அதிகாரி தருகிற நம்பிக்கைகளோ சிதறிக்கப்பட்டு இருக்கிறது.
மூன்று மாநில காவல் துறையினர் அங்கு செயல்படுவதும் அவர்களின் போக்கும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது .
பெண்கள் இந்த மதுவையும் போலீஸ் அராஜகத்தை எதிர்த்து உயிர் விட தயாராக இருக்கிறார்கள். பழங்குடிகளின் கல்வியாகட்டும் தங்களுடைய கல்வியாகட்டும் தமிழர்களுடைய கல்வியாகட்டும் அவருடைய வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நாவலில் அவர் சொல்லி இருக்கிறார் .அப்துல்கலாம் அவர்கள் முன்னிலையில் மக்கள் எடுத்துக் கொள்ளும் சபதம் மதுவை ஒழிப்பது குறித்ததாக இருக்கிறது.
ஆனால் இந்த நாவல் எழுதப்பட்ட காலம் என்று இப்போது ஆக இருந்தாலும் அதில் வருகிற சம்பவங்களும் நிகழ்வுகளும் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. 25 ஆண்டுகள் கழித்தும் அந்த மக்களின் வாழ்வு இன்னும் பெரிதாக மேம்பட வில்லை என்று கருதுகிறேன்.
ஆகவே அறம் சார்ந்து பல கேள்விகளை இந்த எழுப்பும் இந்த நாவலின் அந்த மக்கள் வாழ்வு மேம்பட அக்கறை குரல் ஒன்றையும் வேலாயுதம் அவர்கள் எழுப்புகிறார்.
தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து யானைகளை ஒட்டி அவர் எழுதிய யானைகள் வருகை தொடர் புத்தகங்களும், அவருடைய நொய்யல் இன்று புத்தகமும் இந்த நாவலை வருகிற அட்டப்பாடி சார்ந்த காட்டுப் பகுதிகளுடைய நுணுக்கமான விவரிப்பும் மக்களின் வாழ்க்கையும் சூழலியல் இலக்கியம் சார்ந்த இலக்கியத்தில் காசு வேலாயுதத்தின் பங்களிப்பை சிறப்பாகவே காட்டுகின்றன.
எழுத்துப் பிரசுரத்தின் இந்த ஆண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றாக பாராட்டைப் பெற்றது இந்த நாவல்.
விலை ரூ. 310 /- ஜீரோ டிகிரி பதிப்பகம், சென்னை வெளியீடு செல்பேசி: 8925061999
Published in Uyirmmeei April issue 2023
Short story
குற்றமும், தண்டனையும்/ சுப்ரபாரதிமணியன்
“ கருப்புக் கண் “ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார் .அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை .நன்கு சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் நீல பூக்கள் இருந்தன .அவரின் தலை கேசம் காவல் துறை சார்ந்த மனிதரின் அலங்காரமாக இல்லாமல் புதிதாக இருந்தது. இன்றைய கல்லூரி மாணவர்கள் போட்டுக்கொள்ளும் தலைக்கேச வேஷம் போல் இருந்தது. அந்த அறைக்கு வந்து செல்பவர்களில் பாதிப்பேர் இப்படித்தான் காவல்துறை உடுப்பு இல்லாமல் இருந்தார்கள். பலர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். அவனை அடித்தவர்கள் யாரென்று அடையாளம் காண முடியாதபடி பலர் வந்து போகிறார்கள். போனார்கள்
” கருப்புக் கண் தெரியுமா ”.
” தெரியாதுங்க ஒரு கண்ணாடியில் பார்த்தால் உனக்கு தெரிஞ்சுடும் ” .
” கண்ணாடி இருந்தாக் குடுங்க “
” ஓ அது வேறயா ..அதுவேற கொடுக்கணுமா உன் மூஞ்சி லட்சணம் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா “
.தியாகராஜனின் கண்களைச் சுற்றி கருப்பாய் வீக்கம் வந்திருந்தது. எலும்பு முறிந்த இடம் என்றில்லாமல் வேறு இடத்தில் வீக்கம் வந்து விட்டது போலிருந்தது ” .கண்டியூசன் அடினா என்னனு தெரியுமா .அந்த அடி தான் நீ இன்னைக்கு வாங்க போறே”.
” வேண்டாங்க. வாங்குனது போதும் உடம்பெல்லாம் வலி .எதெத் தாங்கறது “
” கண்டியூசனடினா என்னனு இன்னைக்கு நான் உனக்கு தெரிய வைக்கனும்”.
கை கூப்பியபடி சுவற்றோடு சேர்ந்து உட்கார்ந்திருந்த தியாகராஜனின் கைகள் தளர்ந்து விழுந்தபோது அவனின் கண்களில் கண்ணீர் கசிந்தது. தியாகராஜனின் கைகளிலும் கால்களிலும் பல இடங்களில் வட்ட வடிவில் வீக்கம் வந்திருந்தது .மூடின கையை ஒன்று சேர்த்து அடித்த இடங்களில் இப்படி வட்டவடிவில் வீக்கம் வந்து விட்டது. சொல்லி குத்தி விட்டது போல இருந்தது .தொடைக்கு கீழ் ஒவ்வொரு இடமும் இன்னும் வலித்தது அவனின் மூளையில் அபாய சிக்னல்களைத் தந்து கொண்டிருந்தன. விரைக்கொட்டை பெரிய வீக்கத்தைக் கொண்டு வந்துவிட்டது மிகவும் அடிபட்ட பல பகுதிகளில் வீக்கம் வேறு இடங்களில் பரவுவது போல இருந்தது .எங்கு எலும்பு முறிந்து இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் வேறு இடத்தில் வீக்கம் வந்து விட்டது போல இருந்தது .அவன் அருகில் ஏதாவது கயிறு இருக்கிறதா என்று தேடினார்கள் முன்பே அவன் இடுப்பில் கட்டியிருந்த அருணாக் கயிற்றைக் பிடுங்கி இருந்தார்கள் .
”ஏதாவது கயிறு இங்கே கிடந்ததா”
”அதெல்லாம் ஒன்னும் இல்லை ”
” இல்ல உனக்கு முன்னால் இங்கு ஒருத்தன் இருந்தான் அவன் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி இருக்கான்”
” அய்யய்யோ “
” என்னய்யா ஆகும். கழுத்தை இறுக்கி இருக்கான் மூச்சுத்திணறல் வந்துடுச்சு அந்த கயிறு ஏதாச்சும் துண்டு கிடைக்குதான்னு “
” ஒன்னும் காணங்க”.
தியாகராஜனுக்குக் கூட அப்படி ஒரு கயிறு கிடைத்து கழுத்தை இறுக்கி மூச்சுத்திணறல் வந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.உடம்பின் எல்லா பாகங்களும் வலித்தன.மெல்ல எழ முயன்று சுவற்றோடு உடம்பை சேர்த்துக் கொண்டு இன்னும் அழுத்தம் கொடுத்து எம்பியதில் அவனின் வட்டவடிவ வீக்கங்கள் பெரிதாகியது போல இருந்தது .
கருப்புக் கண் வந்தாயிற்று. அடுத்து கண்டியூசனடினா என்னனு காட்டறேன் என்கிறார். இதெல்லாம் எங்கு போய் முடியும் தன் உடம்பை என்னவாகி வைக்கும் என்பது தியாகராஜனுக்கு பயம் அதிகரித்து அவன் உடம்பில் வியர்வை பெருக்கெடுத்தது .வெளியில் ஓரளவு வெயில் இருக்கும் அந்த வெயிலின் வெப்பம் அறைக்குள் வந்து இன்னும் வியர்வையைப் பெருக்கெடுத்து ஓட விட்டது போல இருந்தது .
எதுக்கு இப்படி அடிக்கிறீங்க என்று கேட்ட போது ” அப்புறம் குண்டர் சட்டத்தில் போட்டவங்களை சும்மா விடுவாங்களா” என்றான் ஒருவன் ” . குண்டர் சட்டமா. ஆமாம் அதுதான் உள்ள வச்சிருக்காங்க உன் மாதிரி ஆளுக இனிமேல இந்த மாதிரி நடவடிக்கைகளை வெச்சுக்கக் கூடாதுன்னு. அப்புறம் உன்னை மனசுல வெச்சுட்டு எவனும் இது மாதிரி பண்ணக் கூடாது.. அதுக்கு தான் ...பொம்பளெ கேசு இப்போ இடம் மாறிடுச்சு இப்பிடி “
”அதுக்கு இப்படியா அடிப்பாங்க “.
” அண்ணன் தம்பி உதவற மாதிரி இந்த அடி உதவும் நல்ல அடி. நல்ல பாடமாக இருக்கும் ”.
அந்த காவலாளி அறையை விட்டு வெளியே செல்லும்போது சப்தமாக்கி கேட்டை பூட்டிவிட்டுச் சென்றான். மெல்ல உடம்பை நகர்த்தி ஒரு அடி சுவரோடு சேர்ந்து நகர்ந்து மெல்ல எழுவதற்கு முயன்றான் தியாகராஜன்.வலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.ஆனால் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலித்தது.ஒவ்வொரு அணு என்று சொல்வார்களே அதன் பூரணத் தன்மையை இப்போதுதான் அவன் அறிந்து கொண்டான். ஒவ்வொரு அணுவில் இருந்து கிளம்பும் வலி மெல்ல மெல்ல அவன் உடம்பையே தீயில் போட்டு வாட்டி எடுத்த மாதிரி இருந்தது . அருகில் கசங்கிக் கிடந்த அந்தத் தாளை அவன் எடுத்தான். எண்ணெய் பிசுக்குடன் அந்த தினசரித் தாளின் கையளவுப் பகுதி இருந்தது .இவர்கள் ஏதாவது எண்ணைப் பலகாரம் தின்றதன் மிச்சமாய் அது தன் அறைக்கு வந்து வேடம் காட்டுகிறது என்று நினைத்தான். மெல்ல அதை எடுத்து முகர்ந்து போது அந்தத் தாளில் இன்னும் எண்ணை வாசம் மிச்சம் இருப்பது தெரிந்தது. அப்படி என்றால் இப்போது தான் அந்த தாள் இங்கே இடம் பெயர்ந்திருக்க வேண்டும். இப்போதுதான் ஏதாவது சாப்பிட்டுவிட்டு அவர்கள் இங்கே கடாசி வீசியிருக்க வேண்டும் இந்த போண்டா, பஜ்ஜி எண்ணையின் பிசுபிசுப்பு வாசனை எத்தனை நாளைக்குப் பிறகு உணரப் போகிறோம் என்ற கற்பனை அவனுக்கு வந்தது. இதையெல்லாம் சாப்பிடுகிற வாய்ப்புக் கூட இல்லாமல் செய்து விட்டார்களே என்று இருந்தது தியாகராஜனுக்கு. அந்தத் தாளில் கிழி பட்ட பகுதியை அவன் பார்க்க ஆரம்பித்தான். செய்தித்தாள் படித்தும் பல நாட்கள் ஆகிவிட்டன .படிக்கிற பழக்கத்தில் செய்தித்தாள் மட்டும் அவனின் அட்டவணையில் இருந்தது. கையிலிருந்த எண்ணெய் பிசுக்கால் தாளின் வரிகள் ஒருவகை மினுமினுப்புடன் அவனின் கண்களில் தெரிந்தன. மனிதனின் வாழ்வில் ஒரு செயலும் இல்லை. நல்லதானாலும் சரி கேட்டதானாலும் சரி.. ஒவ்வொரு செயலுக்கும் பலனுண்டு. அணுவளவு நன்மையோ அல்லது தீமையோ அதற்கும் பலன் உண்டு. மனிதன் பரிசோதனைக்காகப் படைக்கப்பட்டான். இந்த வாழ்வு ஒரு பரிசுக்காக இந்த உலகம் ஒரு பரிசோதனைக் கூடம். உங்களின் ஒவ்வொரு செயலும் பதிவு செய்யப்படுகிறது இதில் தேர்ச்சிபெறவே மனிதன் போராட வேண்டும் இதைத்தான் வேதங்களை அளித்து உணர்த்துகிறான் இறைவன். அவனின் வாழ்வு அவனுக்கு தரப்பட்ட சந்தர்ப்பம். அதை மிகச் சரியாக உபயோகிக்க வேண்டும். இந்த வாழ்வு மகத்துவம் மிக்கது .மீண்டும் இந்த சந்தர்ப்பம் கிடைக்காது. இறந்துவிட்டால் இந்த நாட்கள் கிடைக்காது என்று இருந்த அந்தப் பத்தியின் ஓரத்தில் வேதங்களில் ஒளியில் இறைவன் என்று இருந்தது .அது புத்தகத்தின் பெயராக இருக்கக் கூடுமா. இப்போதெல்லாம் புத்தகங்களை யார் படிக்கிறார்கள் புத்தகங்களை இப்படி போண்டா பஜ்ஜி மடக்குவதற்குத் தான் பயன்படுத்த வேண்டும் போல இருக்கிறது. இது இஸ்லாமிய நூலாக இருக்குமா கிறிஸ்துவ நூலாக இருக்குமா. நிச்சயம் இந்து நூலாக இருக்காது .அனேகமாக இஸ்லாமிய நூல் ஆகத்தான் இருக்கும் என்று நம்பத் தொடங்கினான் தியாகராஜன். நவாஸ் ஹமீத் என்றொரு நண்பன் அவனுக்கு உண்டு. அவனுக்கு இருக்கிற பழக்கங்களில் மோசமான பழக்கங்களில் ஒன்று வாயில் எப்போதும் சிகரெட்டை வைத்துக் கொண்டிருப்பது தான் .சமீபமாய் இ-சிகரெட் என்று ஏதோ வந்திருக்கிறது என்று அவனிடம் நீட்டினான் .புகை வராது ஆனால் புகை படிக்கிற அனுபவமும் ருசியும் இருக்கும் என்று சொன்னான் .இதெல்லாம் எனக்கு எதற்கு என்று தியாகராஜன் வேண்டாம் என்று சொல்லியிருந்தான். அவனுக்கு இறை நம்பிக்கையும் தானம் செய்வதில் அக்கறையும் இருந்தது அவனிடம் இப்படி ஒரு புத்தகப் பத்தியை மனப்பாடமாகச் சொன்னால் அவன் நிச்சயம் மகிழ்ச்சி அடைவான். இந்த குறுகிய அறைக்குள் வேறு எதையும் சிந்திக்க முடியாது. இந்தத் தாளில் ஒரு பகுதியை மனப்பாடம் செய்து கொள்ளலாம் .அவனிடம் இந்த வார்த்தைகளைச் சரியாகச் சொன்னால் அவன் மகிழ்ச்சி அடைவான். தியாகராஜன் திரும்ப அந்த தாளின் முனையில் உள்ள பத்தியைப் பார்க்க ஆரம்பித்தான். அந்த எழுத்துக்கள் எண்ணைப்பூச்சுடன் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தன
00
கை விரல்கள் பரபரத்துக் கொண்டிருந்தன தியாகராஜனுக்கு .எப்போதும் கைகளில் இருக்கும் கைபேசியை எந்த வகையிலாவது உபயோகப்படுத்திக் கொள்வது என்பது சாதாரணமாகி விட்டது அவனை. முகநூல் , வாட்ஸ்அப் , குறுஞ்செய்தி என்று ஏதாவது அலைக்கழித்துக் கொண்டே இருக்கும் அதுவும் முகநூலில் வருகிற வீடியோக்களில் பெண்கள் சம்பந்தமான விசயங்களை விரும்பிப் பார்ப்பான் ,கொஞ்சம் கைவிரல்கள் பிசகி விட்டது போல எதையாவது அழுத்திவிட்டால் பெண்கள், பாலியல் சம்பந்தமாக நிறைய வீடியோக்கள் வந்து குவிந்து விடும். அந்த வகை வீடியோக்களைப் பார்ப்பதில் அவனுக்கும் ஆர்வம் இருந்தது. இப்போது கைபேசி இல்லாமல் கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடப்பது அவனுக்கு சிரமமாகத்தான் இருந்தது.
எவ்வளவு கைபேசிகளை காவல்துறையினர் அபகரித்துக் கொண்டார்கள் என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .நோக்கியா சாம்சங் சைனா மாடல் மைக்ரோமேக்ஸ் லெனோவா சோனி எரிக்சன் சாம்சங் என்று அப்போது அறையில் அங்கிருந்த அவர்களிடம் இருந்த கைபேசிகளை எல்லாம் சுருட்டிக் கொண்டார்கள். பணமும் அதுபோல் மேசையின் மேலும் மேசையின் இழுப்பறையிலும் இருந்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் .இந்த கைபேசிகளை எல்லாம் என்ன செய்திருப்பார்கள் என்று பல சமயங்களில் அவன் யோசித்திருக்கிறான். கைப்பற்றப் பொருட்களை பார்ம் 95ல் பதிவிட்டு நீதிபதியிடம் ஒப்படைத்து விடுவார்கள் பிறகு அவையெல்லாம் அப்படியே கிடக்கும். ஒரு நாளைக்கு அவை அடித்து நொறுக்கப்பட்டு குப்பை ஆகிவிடும் .இந்த கைபேசிகளை காவல்துறையினர் ஏதாவது எடுத்து பயன்படுத்துவார்களா என்ற சந்தேகம் தியாகராஜனுக்கு எழுந்திருக்கிறது .இந்த கைபேசி களிலிருந்து சிம்களைப் எடுத்துவிட்டு வேறு சிம்களை போட்டு பயன்படுத்தலாம் அப்படி செய்வதற்கு சாத்தியங்கள் இருக்கிறதா என்று யோசித்திருக்கிறான். ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் அலைவரிசை கைபேசி சம்பந்தமான தயாரிப்பு எண்கள் எங்காவது பதிவாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள் இடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் என்ற எண்ணம் வந்துவிடும் என்று அதை பெரும்பாலும் தவிர்ப்பதாக சொல்லிக்கொண்டான். இது போல் ஆயிரக்கணக்கான கைபேசிகள் அவர்களிடம் இருக்கும். ஊரில் உள்ள வீடியோ பார்லர்களில் கைப்பற்றப்பட்ட குறுந்தகடுகளை அப்படித்தான் காவல் துறை அலுவலகங்களில், பீரோக்களில் கிடப்பதையும் அல்லது சாக்கு மூட்டையாகக் கிடப்பதையும் தியாகராஜன் பார்த்திருக்கிறான் .அவனுக்கு தெரிந்த ஒரு நண்பர் காவல்துறை கைப்பற்றிய குறுந்தகடுகளை வாங்கி வந்து பார்த்துவிட்டு திருப்பித் தந்ததாக கூடச் சொன்னார். அந்த கைப்பற்றப்பட்ட குறுந்தகடுகளில் பாலியல் சம்பந்தமான விஷயங்கள் இருந்தன .ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றைப் பெற்று பார்த்து அனுபவித்து திருப்பித் தந்ததாக ஒரு நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது அதற்கெல்லாம் அவசியம் இல்லை எல்லாப் படங்களும் கைபேசியில் இருக்கின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுத்து வாங்கிய இந்த கைபேசிகள் இப்படி முடங்கிப்போய் கிடப்பதோ அல்லது இறுதியில் நொறுக்கப்பட்டு குப்பை ஆக்கப்படுவதோ அவனுக்கு நினைக்கையில் சங்கடம் அளித்தது .முகநூல் , வாட்ஸ்அப் என்று வந்தபின் தொடர்புகொள்வது சுலபமாகத்தான் ஆகிவிட்டது . ஆனால் அதுவே காவல்துறையினருக்கு வழக்குகளை விசாரிக்க போதுமானதாக இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள் .கைபற்றப்பட்ட கைபேசிகளில் அதிகபட்சமாய் 8000 ரூபாய் உள்ள கைபேசி இருந்தது. அதே போல 300 ரூபாய் உள்ள சைனா கைபேசிகளும் இருந்தன கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பட்டியலிடும் போது ஒவ்வொன்றிற்கும் எண் குறித்தார்கள் அப்போது காண்டம் ,கருத்தடை ஆணுறை விலை குறிக்காமல் மதிப்பிடப்பட்ட விலை என்ற பகுதியில் 0 என்று குறிப்பிட்டார்கள். அது அப்படி விலை அற்றதா அல்லது விலை மதிப்பு இல்லாததா.. அதை எவ்வளவு ஜாக்கிரதையாக கையாள வேண்டும் .அதை எவ்வளவு நுணுக்கமாக பயன்படுத்த வேண்டும் என்னென்ன அத்தியாவசியமான விஷயங்களுக்குத் தேவையாக இருக்கிறது என்றில்லாமல் மதிப்பிட்டவர்கள் கீழே விரிக்கப்பட்டிருந்த நீலக்கலர் பிளாஸ்டிக் பாய் 200 ரூபாய் என்று போட்டு இருந்தார்கள் .அதனுடைய விலை மட்டும் சரியாகக் குறித்து இருந்தார்கள். மற்றபடி மற்ற கைபேசிகளுக்கு விலை என்று குறிப்பிட்ட தொகை பாதியாக தான் இருந்தது. அவையெல்லாம் சரியான பயன்பாட்டில் தான் இருந்தவை .ஆனால் இவ்வளவு குறைவாக மதிப்பிட்டு இருக்கிறார்கள் என்று அவன் கூட முணுமுணுத்துக் கொண்டான். குற்ற அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களில் கடவுச்சீட்டு எண் என்று ஒன்று இருப்பதை அவன் எட்டிப் பார்த்தபோது அந்த விண்ணப்பத்தில் இருப்பது தெரிந்தது.
தியாகராஜன் மலேசியா சிங்கப்பூர் போக வேண்டுமென்று கடவுச்சீட்டு எடுக்க ஆசைப்பட்டு இருந்தான். ஆனால் சமீபகாலங்களில் விசா பெறுவதற்கு அங்கிருந்து யாராவது கடிதம் அனுப்ப வேண்டும், உத்தரவாதம் தரவேண்டும் என்று வந்துவிட்ட விதிமுறைகளால் தாமதித்துக்கொண்டிருந்தது. .இல்லை என்றால் கொஞ்சம் காசு அதிகம் செலவழித்து அங்கு அறைகள் பதிவு செய்துகொண்டு அதை விசாவிற்கு காண்பித்தால் சுலபமாகிவிடும். அது கொஞ்சம் செலவு அதிகம் என்று அவன் தவிர்த்திருந்தான். கடவுச்சீட்டு வாங்குகிற எண்ணம் அப்படியே தவிர்த்து விட்டது .
அவன் ஒரு முறை அங்கு வருகிற நெருக்கமான பெண்களிடம் மலேசியா சிங்கப்பூர் போலாமா என்று கூட கேட்டு வைத்தான். அவர்கள்கூட உற்சாகமாய் போகலாம் என்று சொல்லியிருந்தார்கள் அதற்காக திட்டமிடல் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருந்தான் .குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரப்பட்டியல் இருந்த கடவுசீட்டு எண் என்பது வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் அல்ல. சிறைக்கு அனுப்புவதற்கு அவர்களுக்கான ஒரு எண் என்பது அவனுக்கு பின்னால் தெரிய வந்தது .அந்த விவரம் பிணையத்தில் எடுக்கும்போது பூர்த்தி செய்யப்பட வேண்டிய குறிப்பாக இருந்தது .ஆனால் பிணையம் தனக்கு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார்கள் .அவனையும் ஜான்சிராணி அடையாளம் காட்டினாள். அவளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தியதாய் அவள் சொன்ன எட்டு பேர்களை குண்டர் சட்டத்தில் தான் போட்டிருந்தார்கள், ஆனால் குண்டர் சட்டத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை அவர்களின் வழக்கறிஞர்களிடம் அவனும் சொல்லி இருந்தான். அப்படி குண்டர் சட்டத்தில் போட்டால் பிணையும் கிடைக்காது .ஓராண்டுக்கு வெளியில் வரமுடியாது அவர்கள் மேல் போடப்பட்டிருக்கும் வழக்குகளை குண்டர் சட்டத்திலிருந்து வேறு பிரிவுகளுக்கு மாற்றினால் பிணையம் கிடைக்கும், வெளியே வர ஏதுவாகும் என்பது கூட முக்கியமான விஷயமாக இருந்தது ,அதற்காக வழக்கறிஞரிடம் அவனும் சொல்லிக்கொண்டிருந்தான் ,ஆனால் காவல் துறையில் உள்ளவர்களால் தான் அடிபட்டு மிதிபட்டு நடமாடச் சிரமப்பட்டு பிணையில் வெளியே போய் நிம்மதியாக இருக்க முடியுமா என்ற கேள்வி வந்தது .
இனி மனைவி அவனைச் சரியாக பார்ப்பாளா. மரியாதை தருவாளா .இனி அவளை எப்படி எதிர்கொள்வது. எதற்கெடுத்தாலும் முறைத்துக்கொண்டு அவள் பெற்றோர் வீட்டுக்கு செல்பவள் இந்த வழக்கு காரணமாக அவள் நிரந்தரமாகக் கூட தன்னைவிட்டு விலகக் கூடும் என்பது அவனுக்கு பயம் அளித்தது. பல பேர் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருந்தான். தன்னுடன் கைதுசெய்யப்பட்ட அழகிகளையெல்லாம் சிறையில் போடுவார்களா அல்லது பாதுகாப்பில்லத்தில் வைப்பார்களா என்பது அவனுடைய கற்பனைக்கே எட்டவில்லை. வழக்குகள் என்பது பல பிரிவுகளாக இருந்தன. சில வழக்குகள் விடுதலை வரை பல வழக்குகள் தண்டனையாக அபராதத் தொகை கட்டும் வரை. சில வழக்குகள் சிறைக்குச் சென்று தள்ளி விடும் வரை. சில வழக்குகள் தண்டனை முடியும்வரை என்று வகைவகையாக இருந்தன. இவற்றில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இப்படி வகை வகையான தண்டனைகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது தனக்கு கிடைக்கும் தண்டனை எதுவாக இருக்கும் இந்தப் பட்டியலில் ஏதாவது ஒன்று அவனுக்கு கிடைக்கும். ஆனால் அது எதுவாக இருக்கும் என்பது அவனின் யோசிப்பிற்கு உடனே வரவில்லை. பெயில் வரை இருக்கும் வழக்குக்கு மேலாக சிறை மேலும் இருக்கும் என்பது அவனுடைய மனதில் இருந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பவர்கள் பல பேர் அவனுக்கு அவ்வப்போது அறிமுகமாகி இருந்தார்கள். ஆனால் அவர்கள் தன்னை சுற்றிவளைத்த காவல்துறையுடன் இருப்பது அவனுக்கு ஆச்சரியம் தந்தது .சாதாரண சமூகப் பணியாளர்கள் ஆலோசனை சொல்பவர்கள்,கவுன்சிலர்கள் போன்றவர்களெல்லாம் அந்தப் பட்டியலில் வந்துவிட்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது , குழந்தைகள் நலக்குழு வைச் சார்ந்த சிலரும் அவனிடம் கேள்விகள் கேட்டார்கள் ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் எல்லாம் யார் .திடீரென்று இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள் .இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா .ஏதோ கொஞ்சம் பணம் ,கொஞ்சம் எலும்புத் துண்டு போட்டால் இவர்கள் எல்லாம் ஓடி விடுவார்கள் என்றுதான் தியாகராஜன் நினைத்திருந்தான். ஆனால் அவர்களின் செல்வாக்கு என்ன என்பதை அவர்கள் கேட்ட கேள்விகளில் இருந்து அவன் அறிந்து கொண்டான் .குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் என்று சுமார் 30 பேராவது அந்த பட்டியலில் இருப்பார்கள் என்று தோன்றியது .இவர்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒரே வழக்கறிஞரை வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை அல்லது ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நியமித்து தான் வாதாட வேண்டுமா என்பது அவனின் குழப்பங்களில் ஒன்றாக இருந்தது .ஆனால் குண்டர் சட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வேறு வழக்கு பிரிவுகளின்கீழ் தாங்கள் வந்துவிட்டால் ஓரளவு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தான் .தான் அடி பட்டது போல் மற்றவர்களும் அடிவாங்கி இருப்பார்களா அல்லது பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல்தொழில் செய்ய தூண்டியதாக உள்ள சிலருக்கு இன்னும் கடுமையான அடி உதைகள் கிடைத்திருக்குமா.. பாலியல் தொழில் மூலம் சம்பாத்தியம் ஈட்டி பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் தொழில் செய்யத் தூண்டியதாக யார் மீதெல்லாம் வழக்குகள் போட்டிருப்பார்கள் அவனுக்கு யூகிக்க முடியவில்லை. ஆனாலும் குண்டர், போக்சோ சட்டப் பிரிவில் இருந்து வேறு சட்டப் பிரிவுக்கு மாற்றம் செய்து விட்டார்கள் என்றால் அது ஒருவகை ஆறுதலாக இருக்கும் என்பது அவனின் விருப்பமாக இருந்தது .
விரல்களின் நாட்டியத்தை இப்போது கைபேசி எதுவுமில்லாமல் விரல்களை அசைத்து பாவனை செய்து கொண்டான் ஆனால் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலியை உற்பத்தி செய்வது போல விரல் நுனிகளில் வலியின் தீவிரம் வந்து நின்றது. ஐயோ என்று லேசாக முணுமுணுத்துக் கொண்டான் .அம்மா என்று எதேச்சையாக வார்த்தைகள் அவனின் வாயில் இருந்து வந்தன. அம்மாவை இன்னும் கொஞ்சம் கௌரவப்படுத்தி சாக விட்டிருக்கலாம். கடைசி காலத்தில் காலில் அடிபட்டு கிடந்தவளை ஒரு பிச்சைக்காரியைப் போல தானும் சேர்ந்து நடத்தி விட்டது ஞாபகம் வந்தது .அம்மா கால்களைத் தூக்கிவைக்க முடியாமல் ஏதோ இரும்பு குண்டுகளைக் கட்டி விட்டது போல இருப்பதாகச் சொல்லி அழுவாள் .அதேபோலத்தான் பெரிய இரும்புக் குண்டுகளை கயிற்றில் மாட்டி தன் உடம்போடு இணைத்து பெரும்பாரம் ஆகிவிட்டதை அவனின் கண்களில் இருந்து கசிந்த கண்ணீர் வெளிப்படுத்தியது.
” நான் செத்துருவன் போலிருக்கு “
” நீ சாக மாட்டே. ரொம்ப நாள் இருப்பே . தப்பு பண்ணும் போது தெரியலையா தப்புன்னு “
“ தப்புன்னு தெரியலே. கொஞ்சம் காசு வந்துச்சு. பல பெரிய புள்ளிக கைக்கிவந்துட்ட மாதிரி இருந்துச்சு . “
“ தப்புன்னு தெரியலே. ஆனா தண்டனை மட்டும் இப்போ தெரியறதாக்கும் “
“ ஆமாங்க “
வவ்வால் பூ சிரிக்கும் வனாந்திரம்.
14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ர பாரதி மணியன்
யாழ் எஸ் ராகவன்
தேடலின் தீவிரத்தில் பலர் இங்கே சுயத்தை தொலைக்க நினைப்பதுண்டு ஆனாலும் சுயம் அகம் புறம் என்ற பேதம் இன்றி எல்லா இடங்களிலும் வெளிப்பட்டே தீரும். குறைவான பாத்திரங்களைக் கொண்டு ஒரு நாவலை கட்டமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தத்துவ விசாரணமும் ஆழ்ந்த அனுபவமும் உளவியல் சார்ந்த நிலைப்பாடுகளும் தெரிந்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு நாவலை எழுதி விட முடியும் என்று தோன்றுகிறது.நேரடி கதை சொல்லும் முறை என்பது வேறு சற்று ஆழ்ந்து படித்து புரிந்து கொண்டு ரசிப்பது என்பது வேறு.
வாசகனின் மனநிலையை வாசகனின் வாசிப்பு ஆற்றலை உரசி பார்க்கும் விதமாக எழுதுகின்ற இருண்மை தன்மையில் நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது.
சீர பாகம். திராக்ஷாபாகம். நாளிகரபாகம். என்று ஒரு பிரதியை புரிந்து கொள்ளும் விதத்தை வடமொழியாளர்கள் மூன்று விதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள் சீரம் என்றால் பால் பாலை பருகுகின்ற போது எவ்விதமான சிரமமும் தேவையில்லை. திராட்ச பாகம் என்பது திராட்சை பழத்தை சாப்பிடும் போது அதில் இருக்கும் விதைகளை துப்பி விட்டு அருந்த வேண்டும்.
நாளிகரம் என்றால் தேங்காய் தேங்காய் பால் வேண்டுமென்றால் தேங்காய் உடைத்து துருவி அது வெந்நீரில் போட்டு பிழிந்து அதன் பிறகு தான் நாம்தேங்காய் பாலை அருந்த முடியும்அந்த வகையில் எனக்கு இந்த கதை நாளிதர பாகமாகவே தெரிகிறது. 14/40 கொண்டை ஊசி வளைவு என்ற நாவல் தமிழில் மிகச் சிறந்த படைப்பாளி சுப்ர பாரதி மணியன் அவர்களால் எழுதப்பட்டது.
வாழ்வில் பொருள் சம்பாதிக்க வேண்டும் பணம் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓடி ஓடி உழைத்த ஒருவன்.ஓய்விற்காக உடல் மட்டும் மன செம்மைப்படுத்தும் பயிற்சிக்காக ஆனைகட்டி அருகில் உள்ள ஒரு பயிற்சியில் தங்குகிறான்.அங்கே வாழ்வில் பல துன்பங்களை சிக்கல்களை சந்தித்து உடலாலும் மனதாலும் சுரண்டப்பட்டு துன்பத்தில் உழண்ட பெண்ணான நயன்தாரா என்ற கதாபாத்திரத்தை சந்திக்க நேர்கிறது.
ஆறுதல் தேடி அலையும் அவள்.உடலை மட்டுமே சுரண்டிய சுரண்டும் உன்மத்தர் கூட்டத்திற்கு மத்தியில் யாரேனும் உள்ளத்தை ஆசைகளை புரிந்து கொள்வார்களா என்று ஏங்கும் ஒரு பெண்ணின் மனம்.குடும்பச் சிறையில் பாசக்கயிற்றில் பணம் எண்ணும் அரக்கனின் கொடூர கோர பசியில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞனின் ஆசைகளும் அபிலாசைகளும் ஊடும் பாவுமாக கதையின் மைய நீரோட்டமாக அமைகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் ஆழியார் அணை ஆனைகட்டி பகுதியில் இருந்து கதை அற்புதமாக தொடங்குகிறது மெதுவாக நகர்ந்து நகர்ந்து. காதலும் காமமும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து சித்த தத்துவம் ஜென் தத்துவம் சைவ சித்தாந்த தத்துவம் அத்தனையும் அலசி ஆராய்ந்து கதை வேகம் எடுக்கிறது.
இயல்பாக ஒரு ஆணுக்கு பெண் மீது ஏற்படும் ஈர்ப்பும் காமமும் ஒரு பெண்ணுக்கு ஆண் மீது ஏற்படும் காதலும் கவித்துவமாக கதையில் வருணிக்கப்பட்டு வந்திருக்கிறது. மனவளக்கலை பயிற்சி மையம் அங்கே இடம் அமைப்பு உணவு அமைப்பு அறை அமைப்பு அத்தனையும் விரிவாக விளக்கப்பட்டு வந்திருக்கிறதுகாதல் என்ற ஒழுங்கு உள்ளே வந்து விட்டது என்றால் உலகமே ஒழுங்கின்மையாக தெரியும்.
திருமணமான ராஜகுமாரன் ஒரு விடுதியில் தன் கற்பை பறிகொடுத்து பொதுமகளிர் ஆக்கப்பட்ட நயன்தாராவும் சந்திக்கின்ற இடம் அபாரம்.
அவள் பெயர் வள்ளி எதுவானாலும் இருக்கலாம் ஆனாலும் நம் கற்பனையை மெருகட்டுவதற்கு நயன்தாரா என்ற பெயர் சுவையாக தான் இருக்கிறது.
கதையின் முதல் பகுதியில் காசியில் நடக்கும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களை கட்டு உடைத்து எதார்த்தத்தின் மைய நீரோட்டத்தை அலசி பார்க்கும் தத்துவ விசாரணமாகவே கதை அமைகிறதுபயிற்சிக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி அவர்கள் காதல் புரியும் அழகு இடையிடையே ராஜகுமாரனுக்கு தன் மனைவி பேசுகின்ற செயல் அரசன் என்ற கதாபாத்திரம் வயதுக்கு மீது வழியும் காட்சி அங்கு இருக்கும் வாட்ச்மேன் உடைய அறிவுரை.
இன்னும் அந்த பயிற்சிக்கு வந்திருக்க கூடிய பல்வேறு மக்களைப் பற்றி விவரிக்கிறார் நண்பர்கள் இலங்கை அகதியாக வந்தவர் பல்வேறு இயக்கத்தில் இருந்து வெளிவந்தவர்கள் தொழில் சார்ந்தவர்கள் வாழ்க்கை இழந்தவர்கள் என்று பலரின் வர்ணனைகள் குறைவான கதாபாத்திரங்களில் நம் மனதில் நிறைவாக நிற்கின்றன
வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்து அதை தீர்ப்பதற்காக பயிற்சிக்கு வந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட காதலை எவ்வளவு சுவையுடன் அவர் பகிர்ந்து இருக்கிறார் அந்த ஆணனை
நம்பி இவள் சந்தேகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வெளியே இருவரும் தனியாக செல்கிறார்கள் அவர்கள் செல்லுகிற இடம்தான் 14.40 கொண்டை ஊசி வளைவு.
அங்கே ஒரு சித்தர் போலிகளையும் மாயைகளையும் கட்டுடைத்து பேசுகிறார்.இவன் கூட நாம் இருப்பது சரியா என்று யோசிக்க முன்னே அந்தப் பெண் அவனை விட்டுவிட்டு வெளியே சென்று விடுகிறார். இயல்பை மீறி நடக்கும் எதுவும் துன்பம் தருவதாகவும் தொல்லையை மேலும் அதிகப்படுத்துவதாகவே இருக்கும்.ஏற்றுக்கொண்ட அமைப்பில் இருந்து விலகுவதும் ஏற்றுக்கொண்ட புரிதல் இருந்து மாறுவதும் எப்பொழுதும் நமக்கு சங்கடங்களை தரும் என்பதை மிக அழகாக சொல்லப்பட்ட நாவல் 102 பக்கங்கள்
(உயிர்மை பதிப்பக வெளியீடு அற்புதமான பதிப்பு )
நீங்கள் ஒரு முறை அந்த வளைவுக்குள் சென்று வாருங்கள் வவ்வால் பூ பூக்கும் வனாந்தரம் உங்களையும் வசீகரிக்கும்
யாழ் எஸ் ராகவன் உத்தமபாளையம் வட்டம்
தேனி மாவட்டம்
இந்த ஈர நிலங்களானது பல்வகையான பல்லுயிர்களுக்கு பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. நாம் பெரிதும் கவனித்திடாத நத்தைகள், வண்டுகள், சிறு பூச்சிகள், புழுக்கள் என ஆயிரக்கணக்கான பல்லுயிர்கள் இந்த ஈர நிலத்தில் பிறந்து வாழ்ந்து அந்த சூழலின் உணவுச் சங்கிலியில் ஓர் பங்கு வகித்து வருகிறது.
சற்று ஆழமில்லாமல் நமது குதிங்கால் வரை நீர் தேங்கி சில காலம்வரை நிற்கும் ஈரநிலங்களில் பல பறவைகள் நின்று அந்த நீரினுள் உள்ள மண்ணை கொத்தி கிளரிக் கொண்டிருப்பதை நம்மில் பலர் கண்டிருப்போம்.
வாருங்கள் வவ்வால் பூ பூக்கும் வனாந்தரம் உங்களையும் வசீகரிக்கும்
( யாழ் எஸ் ராகவன் உத்தமபாளையம் வட்டம்
தேனி மாவட்டம் )
0
கோட்டயம் 2023 - சுப்ர பாரதி மணியன்
சார்ஜா புத்தக கண்காட்சிகளில் டி. சி.புத்தகப் பதிப்பகம், கேரளா அமைக்கும் நூற்றுக்கணக்கான அரங்குகளை கண்டிருக்கிறேன் 2018. & , 2021 சார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகங்கள் ஒரு அரங்கம் இருந்தது. அந்த அரங்கம் கூட டிசி புக்ஸ் என்ற குடையின் கீழ் தான் இருந்தது, அரங்கத்தினுடைய பெயர் அப்படித்தான் இருந்தது. சின்ன இடத்தில் தமிழ் புத்தகங்கள் என்ற ஒரு சின்ன அட்டை இருந்தது. பல தமிழ்ப் பதிப்பகங்கள் ஒன்று சேர்ந்து அந்த ஒரு அரங்கை நிர்வகித்து இருந்தார்கள்.
ஆனால் மலையாளத்தில் சுமார் 150 அரங்குகள் இருந்தன. அதில் பெரும்பாலும், நூற்றுக்கு மேற்பட்ட அரங்குகள் பி சி புக்ஸ் அமைத்து இருந்தார்கள். மற்ற பதிப்பாளர்கள் மீதி உள்ளவற்றை பரிந்து கொண்டார்கள்
சார்ஜா, துபாய், அபுதாபி போன்ற நாடுகளில் சுமார் 30 லட்சம் மலையாளிகள் வசிக்கிறார்கள்.. இலக்கிய உணர்வு கொண்டவர்கள் அவர்கள். அங்குள்ள பள்ளிகளில் மலையாளம் பயிற்சி தரப்படுகிறது . என்ற தகவல்கள் அந்த அரங்குகளில் விற்கப்படும் நூல்களின் உடைய தரம், தீவிரம் பற்றிச் சொல்லின ஆனால் சுமார் 10 லட்சம் தமிழர்கள் வசிக்கக்கூடிய அந்த பகுதியில் பள்ளிகளில் தமிழ் கல்வி இல்லை, நல்ல ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் அமைப்புகள் இல்லை இந்த சூழலில் ஒரு அரங்கோடு தமிழ் நின்று விட்டது, அப்போது சி டி புக் சார்ந்த ஊழியர்கள் ஒரே விதமான உடை அணிந்து கொண்டு இருப்பதையும் ஒரே இடத்தில் தங்குவதையும் அவர்களுக்கான உணவு விநியோகம் போன்றவற்றையும் கேள்விப்பட்டிருந்தேன் அப்போதுதான் டிசி புக்ஸ் என்ற ஒரு வலிமையான புத்தகம் நிறுவனம் கேரளாவில் நடைபெறுவது பற்றி சரியாக அறிந்து கொள்ள முடிந்தது
அந்த ஆண்டில் பெருமாள் முருகன் அவர்களை புத்தக கண்காட்சியில் பேச அழைப்பு அழைத்து இருந்தார்கள் காரணம் டி . சி புக்சில் அவருடைய புத்தகங்கள் பல மலையாள மொழிபெயர்ப்புகளில் வெளியாகி இருப்பது காரணம் என்றார்கள் அந்த டி டி சி புக்ஸ் பல தமிழ் பதிப்பாளர்களுடைய நூல்களை அங்கே கொண்டு செல்வது போல முயற்சி கொண்டிருக்கிறார்கள்.
இந்த முறை கோட்டயத்திற்கு சென்றிருந்தபோது டிசி புக்ஸ் தலைமையகத்துக்குச் சென்றேன். புத்தக விற்பனை அரங்குகளும் அலுவலகம் இவை எல்லாம் ஆச்சரியம் தந்தன. தமிழ்நாட்டின் எந்த பதிப்பாளருக்கும் இப்படி பெரிய கட்டிடம் இருந்ததில்லை என்று நினைக்க வைத்தது.தமிழ்நாட்டில் என் சி பி எச் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே இவ்வளவு பெரிய கட்டிடங்களையும் அமைப்புகளையும் கொண்டு இருக்கிறார்கள் என்று தோன்றியது. அப்போதான் கே ஆர் மீரா அவர்களின் ஆரச்சார் நாவல் டி.சி புக்சால் வெளியிடப்பட்டு 46 பதிப்புகள் வந்திருப்பதைக் கண்டேன். அந்த நாவல் தமிழில் செந்தில் குமார் அவர்களது மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. அதைப் படித்திருந்தேன் .. தமிழில் அதோட விலை அதிகமாகத்தான் இருந்தது. மலையாள பதிப்பில் விலை குறைவாகவே இருந்ததை கண்டு கொண்டேன். அதேபோல சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது ( மரம். ). பொள்ளாச்சி எதிர்ப்பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இன்னும் ஒரு நாவலை செந்தில் குமார் மொழிபெயர்ப்பில் எதிர் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது சமீப காலத்தில் தமிழ் சூழலில் அதிர்வுகளை உண்டாக்கிய நாவல்கள் என்ற வகையில் கே ஆர் மீரா அவர்களின் படைப்புகளைச் சொல்லலாம். கே ஆர் மீரா அவர்கள் கோட்யத்தைச் சார்ந்தவர் என்று அறிந்தேன். அவரைச் சந்திக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டேன். ஆனால் முயற்சிகள் கைகூடவில்லை
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கோட்டையம் சென்ற போது அப்படித்தான் அருந்ததிராய் அவர்களை சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அவரின் சொந்த ஊர் கோட்டயம். அவர் அம்மா இங்கே இருக்கிறார்கள் பள்ளிக்கூடம் என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஒரு கிறிஸ்தவர் அன்பரின் திருமணத்திற்கு சென்ற போது நேரம் ஒதுக்கி பள்ளிக்கூடத்தை தேடிச் சென்றேன் அங்கு நோய்வாய் பட்டு இருந்த அருந்ததி ராயின் அம்மா அவருடைய சந்தித்தேன் . அந்த சந்திப்பு மற்றும் நான் அந்த வீட்டை தேடி அலைந்தது பற்றி ” அருந்ததிராயின் வீட்டுக்கு சென்றிருந்தேன் “ என்றொரு சிறுகதையை உயிர் எழுத்து இதழில் எழுதி இருந்தேன். அது என்னுடைய சிறுகதை தொகுப்புகளில் இடம் பெறாமல் போய்விட்டது என்று தான் நினைக்கிறேன். இந்த முறையை அப்படித்தான் கே ஆர் மீரா அவர்களை சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது
கோட்டையம் செல்கிறபோதெல்லாம் குமரகம் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன். அங்குள்ள பல படத்துறைகள், ஏரிகள் போன்றவை எப்போதும் ஈர்ப்பு ஏற்படுத்தும் இந்த முறையும் இருந்தது. அப்படித் தான் குமரகம் பகுதியில் இருந்து மகாமக என்ற கடல் பகுதிக்கு பயணம் இருந்தது. சுமார் 40 நிமிடம் கடலில் பயணம் வெறும் 16 ரூபாய் தான் கட்டணம் வசூலித்தார்கள் அரசு படகில். ஆனால் அதுவே தனியார் படகில் 25 மடங்கு அதிகமாக இருந்ததை கண்டு கொண்டேன். அரசு பஃடகில் இருந்த சில நூலகம் ஒன்று ஆச்சரியப்படுத்தியது. அதிலிருந்து சில புத்தகங்களை புரட்டிக்கொண்டு இயற்கை காட்சிகள் ரசித்துக் கொண்டும் சென்றது . நீர்க்காக்கைகள் உட்பட பல பறவைகளை ரசிக்க முடிந்தது. ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பறவைகளின் கத்தல்கள் அவை நீரோடு கொள்ளும் அனுபவம், தூரத்தில் தென்படும் மரங்கள், நீர் நிலைகள், எல்லாம் கடந்து அந்த பயணம் இருந்தது. ரசித்து அனுபவித்த ஒரு பயணம் அது.
அருந்ததிராயின் நாவல் “ சின்ன விஷயங்களின் கடவுள் “ காட் ஆப் ஸ்மால் திங்ன்ஸ் நாவல் அப்படி ஒரு நீர் நிலங்களை கொண்ட அப்பகுதியின் ஒரு கிராமத்தை தான் மையமாகக் கொண்டிருந்தது . ஏரிகளும் குளங்களும் நிரம்பிய பகுதியை நிலப் பகுதியை மையமாக வைத்து அவர் எழுதியிருந்தார் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதும் வெவ்வேறு வகையான நீர்நிலைகளும் அந்தப் பகுதியை இயற்கை வளம் உள்ள காட்சிகளாக நிறைவேற்றி இருப்பதை அருந்த்திராய் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார். வேம்பனாடு ஏரியினுடைய அழகை ரசிப்பதற்கு பல நாட்கள் வேண்டும். தெற்காசியாவில் நல்ல நீர் ஏரி என்ற அளவில் இரண்டாவது இடத்தை பெற்றது வேம்பநாட்டின் பழமையான படகுகளையும் பலவகையான படகோட்டிகளையும் அந்த வேம்பநாடு ஏரியில் காணலாம். 100 கிலோ மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. அந்த வேம்பநாடு ஏரி அதுவும் ஓண்ம் சமயங்களில் அங்கு நடைபெறுகிற பாம்பு படகுப் போட்டிகள் மிகவும் முக்கியமானவை. அங்கிருந்து கொஞ்ச தூரம் நகர்ந்து போனால் பறவைகள் சரணாலயம் தென்படும். பல வெளிநாட்டு பறவைகள் சிரமமாக அங்கு அது தென்படும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அந்தப் பறவைகள் முட்டையிடும் காலமாகவும் இருந்து சைபீரியன்ஸ் ஸ்டோர்க், டாக்டர் ஒயிட் பீஸ் எக் ரேட் போன்ற பறவைகள் உடைய நடமாட்டத்தை சொல்லும் காட்டுப்பகுதியாகும்,. நவம்பரும் மே மாதமும் வெளிநாட்டு பறவைகள் டக் பார்ட்டி பில் டாக் மார்ச் ஆரியர் சிரிப்பில் போன்றவை வந்து செல்லும் என்றார்கள், .அந்த பகுதியில் படகு பயணங்களில் மீன் பிடிக்கும் பல வகையான மீனவர்களுடைய போக்குகளும் அவருடைய தொழில் முறைகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம். இன்னும் ஒரு கரையில் இருக்கிற ஆட்டமங்கலம் தேவாலயத்தில் ராஜா ரவிவர்மாவின் பெரும்பலா திருமேனி சார்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. அவை முக்கியமானவைகளாக இருக்கின்றன
இல வீளா பூஞ்சிரி என்ற ஒரு மலைப்பகுதி இப்போது பரவலாக பேசப்படுவதின் காரணம் அந்த பெயரில் வந்திருக்கிறது ஒரு திரைப்பட.ம். இலைகள் வீழாத இடம் என்று அதற்கு பெயர் அங்கு பலத்த மரங்கள் இல்லை.. ஆனால் அங்குள்ள இயற்கை சூழல் மக்களை தன் பால் ஈர்த்து உள்வாங்கிக் கொண்டு சாசகம் செய்யும் இடமாக இருக்கிறது. அந்த தலைப்பிலான திரைப்படம் வந்த பின்னால் பிற மாநில மக்களும் வெளிநாட்டுப் பயணிகளும் அந்தப் பகுதிக்கு செல்வது அதிகமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.. அதேபோல இளிக்கால்கள் என்ற ஒரு மலைப்பகுதி நாலாயிரம் அடிகளுக்கு மேல் தன்னுடைய உயரத்தை கொண்டிருக்கிறது. ஒரு மலை. விரிந்த காளான் போன்ற உருவத்தைக் கொண்டிருக்கிறது. கையூரில் அமைந்திருக்கிற இயற்கை காட்சிகள் நல்ல அனுபவத்தை தருபவை அங்குள்ள ஒரு கோயில் மகாபாரதத்தில் பாண்டவர் சகோதரர்கள் அங்கு இருந்ததாக சொல்லி அமைக்கப்பட்டு இருக்கிறது.. அங்கிருந்து சபரிமலைக்கு சுலபமாக சொல்ல முடியும். அந்த மகாபாரத கோவிலில் நெய் விளக்குகள் முக்கியம், பெண்கள் சபரிமலையில் கடவுளை தரிசிக்கு செல்வது தடை செய்யப்பட்ட விஷயமாகு.ம். தடை என்றால் பக்தர்களின் தடை அரசு நீதிமன்றமோ தடை விதிப்பதில்லை அதன் மீறி சென்ற பெண்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பல அனுபவங்கள் நிறைந்திருக்கின்றன.. டிப்பாரா என்ற இடம் ஒரு மலைப்பகுதி கொண்டது கண்ணாடியில் பிரதிபலிப்பது போல காலை சூரியன் உதயமாவது எங்கிருந்து பார்ப்பது நிச்சயமாக நிச்சயமாக இருக்கிறது அதேபோல அந்தப் பகுதியில் இருக்கிற ஐயப்பனார் மலை என்பது மிக முக்கியமானதாகும். அதுவும் பாண்டவர் சகோதரர்களோடு சம்பந்தப்பட்டது. 2000 அடி கடல் மட்டத்திற்கு மேலே உள்ள இந்த பகுதியில் பாண்டவர்களை நினைவு கொள்ளும் பல விஷயங்கள் உள்ளன. அஞ்சு பாரா என்று அழைக்கப்படுகிறது 5 பாறைகள் அந்தப் பகுதியில் உள்ள மணிமாலா ஆறும் மத்திய திருவாரூ பகுதியின் மிக முக்கியமான நீரோட்டமாக கருதப்படுகிறது. பம்பா ஆறுடன் இது சேர்கிறது கோட்டயத்தில் இருந்து மிக அருகில் உள்ள மீனாட்சி ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்கிறார்கள். இந்தியாவின் பழமையான நதிகளில் ஒன்று சொல்கிறார்கள் அங்குள்ள ஒரு மசூதியும் கூட முக்கியமானதாக கருதப்படுகிறது.
வைக்கயம் நகரில் உள்ள சிவன் கோவில் முக்கியமானது கோட்டையத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊராகும். பரசுராமின் கதையோடு சம்பந்தப்பட்ட ஒரு கோயில் இது .காசி போன்ற பழமையும் பெருமையும் கொண்டதாக சொல்கிறார்க.ள். இங்கு தான் தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்தில் நுழைய வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்திய போது தமிழகத்தின் பெரியார் ஈவேரா ராமசாமி அவர்கள் கலந்து கொண்டார் என்பது முக்கிய செய்தியாகும். அந்த கோயிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் பெரியார் நினைவு மண்டபம் இருக்கிறது.. அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை வைத்து இருக்கிறார்கள் எம்ஜிஆர் அந்த நினைவு மட்டத்திற்கு அடிக்கல் நாட்ட ஜெயலலிதாவை திறந்து வைத்திருக்கிறார்.. பெரியாருடைய வாழ்க்கை சார்ந்த பல்வேறு புகைப்படங்களும் விளக்கங்களும் அங்கே இருக்கின்றன .அந்த நினைவு மண்டபத்தை தமிழ்நாடு அரசாங்கம் தான் பராமரித்து வருவதாக அங்கிருந்த பாதுகாவலர் ராமச்சந்திரன் என்பவர் சொன்னார்.. அந்த நினைவு மணடபத்துக்கு எதிராக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களும் இன்னொரு முதலமைச்சர் ஜானகி அவர்களும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் சிலை இருக்கிறது. அந்த சிலைக்கு பின்னால் இருக்கும் வீட்டில் தான் ஜானகி அவர்கள் இருந்திருக்கிறார். இப்போது அங்கு அவருடைய உறவினர்கள் சிலர் குடியிருப்பதாக சொன்னார்கள்
கோட்டையும் பகுதியில் திருநாவுக்கர மகாதேவன் கோயில் அருகில் தான் தங்கி இருந்தேன். மார்ச் மாதத்தில் அந்த நாட்களில் அங்கு போய் விசேஷம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது நாட்டுப்புறக் கலைகளும் யானைகளின் அணிவகுப்பும் மக்களின் கூட்டமும் ஆச்சரியப்படுத்தின. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது அந்த கோயில் தெற்கு மகாராஜா அதை கட்டி இருக்கிறார் .கேரளத்துடைய கலை அம்சங்களை கொண்ட சுவர்களும் ஒவ்வொரு மூலையும் முக்கியமானவை.. கூட்டம், கூத்தம்பலம் என்ற பல நிகழ்ச்சிகள் நடக்கும் இடம் எங்கே முக்கியமாக இருக்கிறது அந்த கோயில் விசேஷங்களை அந்த சமயத்தில் பக்கம் இருந்து வேடிக்கை பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது.. வேங்கமான் மலை பகுதிக்கு ஒருநாள் சென்றிருந்தோம் அழகான பகுதி நீர் நிலைகளும் தேயிலைத் தோட்டங்களும் விரிந்திருந்த பகுதி எங்கு பார்த்தாலும் வாழை மரங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் தோப்புகளிலும் நிறைந்திருக்கும். ஆனால் வாங்கைமான் பகுதில் உள்ள உணவு விடுதிகளில் சாப்பிடும் போது வாழை இலைத் தாளைப் பயன்படுத்தினார்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட தாள்.. வாழை இலைகள் எங்கும் விளைந்திருக்கிற இடத்தில் கூட சாப்பாட்டிற்காக அவற்றை பயன்படுத்தாமல் வாழை செயற்கைத் தாள் பயன்படுத்தினார்கள். இதேபோல வாழையிலே பாணியில் வடிவக்கப்பட்ட பீங்கான் தட்டுகளை பல உணவு விடுதிகளில் பார்க்க நேர்ந்தது. ” வீட்டில் உணவு-- வீட்டிலே ஊணு “ என்ற பெயரில் பல இடங்களில் விளம்பரங்கள் காணப்பட்டன. அவை வசீகரமான விளம்பரங்கங்களாக அமைந்திருந்தது. அவற்றிலும் கூட வாழை இலை கிடைக்காமல் போகுமா என்ற கற்பனை எனக்கு வந்தது. நல்ல சுவையான மீன்களை அதிக விலை கொடுத்து தான் வாங்கி சாப்பிட வேண்டியிருந்தது. பல வகையான உயிர் மீன்கள் கண்ணில் பட்டு அதிசயம் தந்தன. கேரளா செல்கிறபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் கோட்டயம் செல்லும் வாய்ப்பு அமைவது சிறப்பானதாகத் தோன்றும். டி சி புக்ஸ்முகப்பில் காணப்படும் அச்சு இயந்திரங்கள் கோட்டயம் அச்சாக்க்கம், பதிப்புத்துறை இவற்றில் முன்னோடியாக இருந்த்தைச் சொல்லின. அப்படித்தான் கோட்டையம் பகுதிக்கு இம்முறை சென்றிருந்தது புது அனுபவமாக மாறி இருந்தது
கனவு மெய் நிகர் சந்திப்பில்.( தூரிகை சின்னராஜ் அவர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பு )
0
தமிழ் சமூகம் ஓவியர்களை பெயிண்டர்களாக பார்க்கிறது அப்படித்தான் கொரோனா காலத்தில் பல ஓவியர்களை சுவற்றில் பெயிண்ட் அடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர்களை ரைட்டர் என்றால் காவல்துறை போலீஸ் ஸ்டேஷன் எழுத்தர்களை ஞாபகப்படுத்துவது போல ஓவியர்கள் என்றால் பெயிண்டர்களாக சுவற்றுக்கு பெயிண்ட் அடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள், .வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்
சமூகம் தமிழ் சமூகம டிஜே டிஜிட்டல் ரீதியான செயல்பாடுகள் என்பது ஒரு ஓவியருக்கு பலவீனம் அல்ல அது எந்த தரும் குறைந்தது இல்லை அதற்கு வியாபார நுணுக்கமும் தன்மை இருக்கிறது என்பது கூட முக்கியமாக உள்ளது அடிப்படை கோடுகளை புரிந்து கொள்ளும் கல்வி பாடம் இல்லாமல் இருக்கிறது சாதாரண மனிதன் நவீன ஓவியங்களை ரசிக்கக்கூடிய வாய்ப்பு இல்லாமல் ஓவியக் கல்வி அவனுக்கு மோசமாக இருக்கிறது ஓவிய இயக்கம் ஏன் தமிழ்நாட்டில் சரியாக வரவில்லை வானம்பாடி காலம் போல மணிக்கொடி காலம் போல கோவையை இயக்கங்கள் ஏன் வரவில்லை படிக்கறதுக்கு முன் பின் என்று நவீன யோகி வா கேள்வி வரையறுக்கலாம் நவீன ஓவியப் போக்கு படிக்க காலத்தில் தான் ஆரம்பித்தது என்று சொல்லலாம் ஆகவே மக்களிடம் ஓவியத்தை கொண்டு செல்ல வகுப்பறையில் இருந்து ஓவியத்தை தொடங்க வேண்டும் கேரளாவில் இருக்கிற ஓவிய முயற்சிகள் பாராட்ட படி உள்ளன கோட்டயத்தில் இந்த வாரம் நான் சென்றிருந்தபோது லலித்கள் அகாடமி ஓவியங்கள் சென்று இருந்தேன் மிகச்சிறந்த ஓவியங்கள் அங்கு இருந்தன அதை மாநில அளவிலான எழுத்தில் அகாடமி அலுவலகம் என்றார்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரனில் கலா கடவுள் நிறுவனம் திருச்சூரில் தலைமை இடமாகக் கொண்டிருப்பதாக சொன்னார்கள்
ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு அபார்ட்மெண்ட் இருக்க வேண்டும் அந்த வகையில் ஓவியர் பொருளாதார நிலையில் நிலை பட்டிருக்க வேண்டும் என்று நடிகர் சிவகுமார் குறிப்பிடுவார் அப்படித்தான் எழுத்தாளருக்கும் நிலை இருக்க வேண்டும் .என்று ஆசைப்படுகிறோம்
0
கவிதையே நவீனமாக இருக்கிறது சரியாக புரிவதில்லை. அந்த கவிதைக்கு வரையப்படுகிற ஓவியம் இன்னும் நவீனமாக இருப்பதால் மக்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. இன்னும் சிக்கலாக இருக்கிறது என்ற கேள்விகளை பலர் எழுப்பினார்கள்
. பெண் ஓவியர்கள் ஏன் இன்று இல்லை பெண்கள் முயற்சிகளுக்கு ஏன் வரவேற்பு இல்லை என்ற சின்னராஜ் அவர்கள் என்ற தலைப்பில் மார்ச் மாதம் கொங்கு பகுதியில் உள்ள பெண் ஓவியர்களை திருப்பூரில் கண்காட்சியாக நடத்தியிருந்தார் அதை கோவிட் பட ஏற்ற இடங்களில் கண்காட்சியாக வைத்திருந்தார் விட்டிருக்கும் என்ற தலைப்பில் அந்த கண்காட்சியை கொண்டு செல்லும் முயற்சி அவர் செய்திருந்தார்
0
பிறந்த குழந்தைக்கு பிரியாணி தருவது போல் இன்றைய ஆங்கில கல்விமுறையில் அழுத்தங்கள் உள்ளன. அதைத் தாண்டி ஓவியம் என்பது பள்ளிக் கல்வியில் ஆரம்பிக்க வேண்டும். ஒருங்கிணைந்த கல்வியில் ஓவியம் என்பது மிக முக்கியமாக இருக்கிறது .அப்படித்தான் திரைப்படம். அப்படி திரைப்படங்களை மாணவர்கள் பார்க்க வேண்டும் என்று தமிழக அரசை இப்போது நடவடிக்கை எடுத்திருப்பது நல்ல விஷயம்
0
புத்தகசகரிப்பு போல ஓவிய சேகரிப்பு என்பதும் ஒரு முறையாக வர வேண்டும்.
நல்ல விலையுயர்ந்த பேனா நல்ல கவிதை தராது. ஆனால் நல்ல அனுபவம் சாதாரண பேனாவிலிருந்து கூட நல்ல கவிதை தரும்
ஓவியத்தை புராடக்ட் ஆக தரும் போக்கில் ஓவியம் எல்லோருக்கும் கொண்டு சேர்ர்கலாம்.. பரிசுப் பொருட்களில், பைகளில், பெட்டிகளில் என்று ஓவியத்தை தருகிற போது அவை மக்களுடைய பார்வைக்குச் செல்லும்
அதேபோல ஓவிய விமர்சனங்களும் அதிகமாக வர வேண்டும்
முதல் மரியாதை 2 / சுப்ரபாரதிமணியன்
என் “ கவுண்டர் கிளப் “ குறுநாவல் மூலக்கதை “ முதல் மரியாதை” படத்தில் பயன்படுத்தியது குறித்து அப்போது படம் வெளிவந்த போது பத்திரிக்கை செய்திகள் மற்றும் என் நீதிமன்ற வழக்கு ஆகிய குறித்து “ முதல் மரியாதை “ டிஜிட்டல் பிரிண்டில் வெளி வந்திருக்கும் இந்த சமயத்தில் கடந்த சில நாட்களாக முகநூலிலும் உள்பெட்டி செய்திகளிலும் நண்பர்கள் அவற்றை ஞாபகப்படுத்தி வருகிறார்கள்.
தீபம் பத்திரிகையில் வெளிவந்தது “ கவுண்டர் கிளப் . “.முதல் மரியாதை படம் வெளிவந்த போது நான் ஹைதராபாத்தில் தொலைத்தொடர்பு துறையில் பணியில் இருந்தேன். பல நண்பர்கள் தமிழ்நாட்டில் இருந்து கடிதங்கள், தொலைபேசிகள் மூலம் முதல் மரியாதை என் “ கவுண்டர் கிளப் மூலக்கதை அப்படியே பயன்படுத்தப்பட்டு இருப்பத பற்றி சொன்னார்கள் நானும் ஹைதராபாத்தில் இருந்து திருப்பூர் வருவது அப்போதெல்லாம் சில மாதங்களுக்கு ஒரு முறை என்று இருக்கும் .அதனால் கொஞ்சம் இடைவெளிக்கு பின்னால் வந்து பார்த்தபோது வெற்றிகரமாக அந்த படம் ஓடிக் கொண்டிருந்தது என் “ கவுண்டர் கிளப் மூலக்கதை பயன்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு கொண்டேன்.
சென்னையில் இருந்த பூவுலக நண்பர்கள் நெடுஞ்செழியன் அவர்கள் மூலமாக காந்தி என்ற வழக்கறிஞரை சந்தித்து செய்தி சொன்னபோது அவர் என்னுடைய கதை பிரதியையும் படித்துவிட்டு படத்தையும் பார்த்துவிட்டு அந்த படத்தின் கதாசிரியர் ஆர் செல்வராஜ் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோருக்கு இதைப் பற்றி விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார் ஆனால் முதல் கடிதம் அவர்கள் வாங்காமலே திருப்பி அனுப்பப்பட்டது. ஒரு மாத பின்னால் இரண்டாவது கடிதம் அனுப்பப்பட்ட போது பாரதிராஜாவுடன் இருந்து பதில் வந்தது அதில் “ இந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் ஆர் பி சுப்பிரமணியன் என்பவருக்கும் சுப்ரபாதி மணியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது” .
நாந்தான் சுப்ரபாரதிமணியன் என்பதை நிரூப்பிக்க வேண்டும்
ஆர் பி சுப்ரமணியன் என்பது என்ற இயற்பெயர். மத்திய அரசு பணிகளில் இருப்போர் எழுத்துப் பணியில் ஈடுபடும் போது தங்களின் படைப்பை ஹிந்தி மொழிபெயர்ப்பில் துறைக்கு தந்து அனுமதி பெற்று தான் பிரசுரிக்க வேண்டும் என்று அப்போது ஒரு விதி இருந்தது. ஆனால் இது எல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை. அப்படித்தான் நானும் இதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஆனால் இதை வழக்கு மன்றத்தில் செல்லும்போது அந்த விஷயம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படும். துறை சார்ந்த விளக்கங்கள் கேட்கப்படும் என்றார்கள்
இந்த இந்த செய்தியை நான் அந்த குறுநாவல் “ கவுண்டர் கிளப்” வெளிவந்த தீபம் பத்திரிக்கை ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்களிடம் நேரில் தெரிவித்த போது அவர் வழக்குத் தொடரச் சொன்னார். தீபம் பத்திரிக்கையில் விரிவாக அதைப்பற்றி எழுதினார் . பாவைச்சந்திரன் குங்குமம், வண்ணத்திரையில் விரிவாகக் குறிபிட்டார், எழுத்தாளர் தமிழவன் நடத்திய இங்கே இன்று பத்திரிக்கையிலும் அதைப் பற்றிய செய்திகளெல்லாம் வந்தன. அப்போது உலகத் திரைப்படவிழாற்கு ஹைதராபாத் வந்த அசோகமித்திரன் அவர்கள் வல்லிக்கண்ணன் அவர்களை அணுகலாம் என்றார். ஏனெனில் கி ரா நாவல் பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது அவருக்குத் தெரியும் என்றார்.இதுபோல பல பத்திரிகைகளில் இந்த செய்திகள் இடம் பெற்றிருந்தன.
இந்த இடைவெளியில் நான் எழுத்தாளர் என் ஆர். தாசன் அவர்களை தீபம் அலுவலகத்தில் சந்தித்தேன் அவரின் ” வெறும் மண் “ என்ற சிறு நாடகம் கண்ணதாசன் இதழில் வந்தது திருடப்பட்டு பாலச்சந்தரால் ” அபூர்வ ராகங்கள் “ என்ற திரைப்படமானது. அதை தன் கதை என்று கோரி தாசன் வழக்கு கொடுத்திருந்தார். 7 ஆண்டுகள் அந்த வழக்கு நடந்திருக்கிறது முதல் நான்கு ஆண்டுகள் வாய்தா, ஒத்திவைப்பு என்று கழிந்திருக்கிறது .மூன்று ஆண்டுகள் விசாரணை. ஏழு ஆண்டுகள் முடித்த பின்னால் தீர்ப்பு .ஆமாம் கதையில் ஒற்றுமை இருக்கிறது. இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு . அவரின் வழக்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மிக முக்கிய நிர்வாகியான செந்தில்நாதன் அவர்கள் வழக்கறிஞராக இருந்து நடத்தினார் அவர் நண்பர். அதனால் ஏழு ஆண்டுகள் அந்த வழக்கை அவர் நடத்த முடிந்தது. நீங்கள் ஹைதராபாத்தில் இருந்து கொண்டு இங்கு வந்தது இதை எல்லாம் பார்க்க இயலுமா என்ற கேள்வி எழுப்பினார். எனவே நான் என்னுடைய வழக்கு சார்ந்த விஷயங்களை மனதில் இருந்து விலக்கிக் கொண்டேன்
இந்த படத்தில் கி ராஜநாராயணன் அவர்களின் ” கோபல்ல கிராமம் “ நாவலில் இருந்து ஒரு பகுதியை எடுத்து சிவாஜி கணேசன் மருமகன் கதாபாத்திரத்தை விரிவுடுத்தி இருப்பார்கள் அந்த படம் எடுத்த முடிந்த பின்னால் ஒரு உதவி இயக்குனர் அமர்ர் வல்லிக்கண்ணனைச் சந்தித்து கி ராஜநாராயணன் முகவரி பெற்று கோவில்பட்டிக்கு சென்று இருக்கிறார். அவர் படம் முடிந்து விட்டதையும் இந்த பகுதியை பயன்படுத்தி இருப்பதையும் சொல்லி அவர் ஒத்துக் கொண்டால் அவரின் பெயர் படத்தில் இடம்பெறும் என்று சொல்லி 3000 ரூபாய் கொடுத்திருக்கிறார் இதை கிராவுக்கு வேறு வழியில்லை ஒத்துக் கொண்டிருக்கிறார். இந்த செய்தியை வல்லிக்கண்ணன் அவர்களும் கி ராஜராஜன் அவர்களும் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்
இதுபோல பல விஷயங்கள் என்னுடைய திரைப்பட அனுபவத்தில் நடந்திருக்கின்றன என்னுடைய சப்பரம் நாவல் காஞ்சிபுரம் ஆனது பற்றி விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன் ஜானகி விஸ்வநாதன் அவர்கள் ஓம் ஒபாமா என்ற முழு திரைக் கதையை எழுதி கொடுக்க சொல்லி பின்னால் அவர்கள் அதை கூட தரப்படம் ஆக்கினார். வெளிவரவில்லை. அதற்கு எந்தவித சன்மானமும் கிடைக்கவில்லை. இதை தவிர என்னுடைய நாவலின் சிலவற்றை வெவ்வேறு வடிவங்களாக திரைப்படங்களை கண்டிருக்கிறேன். இதனால் தான் சமீபத்தில் என் நாவல்களை திரைக்கதைகள் ஆக்கி தமிழ் உலகில் அறிமுகப்படுத்தலாம் என்று இரண்டு தொகுப்புகளை கொண்டு வந்திருக்கிறேன்
பொருநை நாவல் சுந்தரபாண்டியன் / சுப்ரபாரதிமணியன்
காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் புனைவுகளை சுந்தரபாண்டியன் என்ற பெயரிலேயே வெளியிடுகிறார். அந்த வகையில் அவரின் ஐந்து நாவல்களில் ஆராரோ, அந்தி போன்றவை திருநெல்வேலி மாந்தர்களும், அவர்களது வாழ்வியலும் பற்றி சிறப்பானவை.அந்த பிரதேச மனிதஉணர்வுகளை சரியாகக் காட்டியவை. அவற்றை நல்ல திரைப்படங்களாக ஆக்கும் முயற்சுகள் பற்றி பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்கள் சிலாகித்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் “ பொருநை” என்ற தலைப்பில் வந்திருக்கும் நாவல் ஒரு வகையான சுயசரிதை தன்மையைக் கொண்டிருக்கிறது. நாவலை காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறார். இது ஒரு மாணவர், ஆறுமுகம் என்ற கதாபாத்திரம் பற்றியது .தாமிரபரணி கரையில் வசிக்கிறான். தமிழ் கற்கிறான். தமிழ் கற்கிற சூழலும் அவனை சுற்றியுள்ள சூழலும் அவனை வாழ்க்கை சார்ந்த பல புது ஆர்வம் கொண்டு வாழ்க்கையைச் செலுத்த செல்கிறது. பழைய பாளையங்கோட்டை, திருநெல்வேலி சார்ந்த விஷயங்கள். பாளையங்கோட்டை திருநெல்வேலி, வேணுவனம், கொற்கை என்று பல விஷயங்களை அவன் சுற்றுலாவுக்காக திரிந்து மனதில் ஏற்றுக் கொண்டாலும் அவை அவனுடைய அனுபவங்களில் சில அடுக்குகளாக மாறிப் போகின்றன.
இந்த நாவலில் ஆரம்பத்தில் உள்ள பேச்சு நடை சட்டென உரைநடையாக மாறுவது கூட நல்ல விஷயம் தான். பேச்சு நடை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனிமையாக இருக்கிற போது அதை எல்லோரும் விரும்பி படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் உரைநடையான ஒரு பொதுமொழி என்பது எல்லோருக்கும் இயல்பாகி விடுகிறது. சுலபமாக வாசிக்கவும் ஏதுவாக விடுகிறது .அப்படித்தான் பேச்சு நிலையில் ஒரு பகுதியாய் ஆரம்பிக்கின்ற நாவல் பின்னால் பொது மொழியாய் உரைநடைக்குள் வந்து விடுகிறது.
அந்த உரைநடையில் பல விஷயங்கள் கவனிக்கவும் கூர்மையான வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லவும் முடிகிறது ..தப்பு செய்தவர்கள் தப்பாவே முடியாது என்று சில கதாபாத்திரங்கள் வந்து போகிறார்கள். நாடகம் என்றால் இது மேடையில் பார்க்கிற விஷயமா இல்லை.. வாழ்க்கையில் பார்க்கிற பல விஷயங்களில் நாடகம் இருப்பது இந்த நாவலில் பல சம்பவங்களில் இனம் கண்டுகொள்ள முடிகிறது
காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் கிண்டலும் நக்கலும் அவரின் உரைநடையிலும் பேச்சிலும் பல சமயங்களில் தட்டுப்படும். அதைத்தான் தட்டுங்கள் திறக்கப்படும் என்று அறிய இயேசு வருவார் போன்ற விஷயங்களிலும் அஞ்சு குஞ்சு என்றாரே வள்ளுவர் என்ற சம்பவங்களிலும் சிறப்பாக வெளிப்படுகிறது. இது மாதிரி போகிற போக்கில் வாழ்க்கை சம்பவங்களை அடுக்குகின்ற போது இலக்கியம் பற்றிய ஆழமான புரிதலையும் தந்து விடுகிறார். இலக்கியம் இல்லாத அறிவியல் வீண் என்பது போல் அறிவியல் இல்லாத இலக்கியமும் வீண் என்பதை சொல்லிக் கொண்டு போகிறார்.
இந்த நாவலில் தமிழ் கல்வி படிக்கிற ஆறுமுகம் அவர்களின் கல்லூரி வாழ்க்கை மற்றும் சுற்றியுள்ளவருடைய அனுபவங்களால் நிரம்பி இருக்கிறது. இந்த அனுபவங்கள் மூலம் தமிழக வரலாறும், தமிழக அரசியல் கலை இலக்கிய சூழலும் பதிவாகி இருக்கிறது ஒரு காலகட்டத்தின் சரித்திர பதிவாக பல விஷயங்கள் நாவல் துணையோடு வந்து விடுகின்றன
பொருநை பொதிகையில் பிறந்தது. அகத்தியரின் தமிழ் தண்ணீராய் பாய்ந்தது, இதனை வால்மீகியாக இருக்கட்டும் வியாசராகட்டும் காளிதாசராக இருக்கட்டும் எல்லோரும் இதனை பாராட்டி பாடி இருக்கிறார்கள். தாமிரபரணி என்பது இன்னொரு பெயர் என்றொரு குறிப்பு வருகிறது. இந்த குறிப்புக்கான அம்சங்களை வாழ்வியல் அனுபவங்களோடு பல்வேறு இட பதிவுகள், மனிதர்கள் ஆர்வங்கள் மூலமாக இந்த நாவலில் திறப்பு இருக்கிறது. சுய சரிதை தன்மை கொண்ட இந்த நாவலில் சுந்தரபாண்டியன் அவர்களையும் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களையும் அவர்களோடு இருக்கிற நண்பர்களையும் அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்த அடையாளம் காணுதல் என்பதற்கு, மனிதர்களோடு இயைந்தவகையில் இந்த நாவலின் புனைவு உதவுகிறது என்பது முக்கியமானது
( -விலை ரூபாய் 150 காவ்யா பதிப்பகம் வெளியீடு )-
கனவு மெய் நிகர் சந்திப்பு :
கனவு மெய் நிகர் சந்திப்பு தூரிகை சின்னராஜ் அவர்கள் பேசுகிற போது செயற்கை நுண்ணறிவு என்பது இன்று கைபேசி .கணினி போன்றவற்றில் வளர்ந்து வரும் பயன்பாடு பற்றியும் அது படைப்பாளுமையை பாதிக்கும் விஷயங்கள் பற்றியும்
அருமையானஉரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மிக
அருமையானதொகுப்பை செய்து வழங்கினார் அவருடைய முயற்சிகள் சிறப்பானவை
0
கனவு மெய் நிகர்சந்திப்பில் பேராசிரியர் ஹரிஹரசுதன் பேசும் போது கூத்து. மேடை. கொரில்லா தியேட்டர் முதல் பிரதிபலிப்பு அரங்கும் வரை உள்ள நிலைகள் பற்றி சொன்னார் .நானும் பாதல் சர்க்காரின் தமிழக வருகைக்கு பின்னால் திருப்பூரில் நடந்த முயற்சிகள் பற்றி சில குறிப்புகளை எடுத்து வைத்தேன்
திருப்பூரில் நாடக முயற்சிகள் -சுப்ரபாரதிமணியன்
எண்பதுகளில் எங்கள் அனுபவம் இப்படி இருந்தது.பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது ..
அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள் நடத்தப்பட்டன.
இவற்றை ஆரம்பத்தில் நானும், பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் .
இவற்றில் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை
என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும் “ மணல் வீடு “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “ பசுமை எனும் தாய்மை “ என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும் பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன.
இவற்றில் ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின் “ வயிறு “ , , , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் ,
அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
எண்பதுகளின் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன,
ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றன.
பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன.
0
கனவு மெய் நிகர்சந்திப்பில் பேராசிரியர் ஹரிஹரசுதன் பேசும் போது கூத்து. மேடை. கொரில்லா தியேட்டர் முதல் பிரதிபலிப்பு அரங்கும் வரை உள்ள நிலைகள் பற்றி சொன்னார் .நானும் பாதல்சர்க்காரின் தமிழக வருகைக்கு பின்னால் திருப்பூரில் நடந்த முயற்சிகள் பற்றி சில குறிப்புகளை எடுத்து வைத்தேன்
00
கனவு மெய் நிகர் சந்திப்பு சிற்றிதழ் சங்கத் தலைவர் புஆரவீந்திரன் அவர்கள் பேசும்போது இன்றைய ஆகம தமிழில் உள்ள வேறுபாடுகள். ஆகமத்தமிழை வெறுக்கும்..எதிர்க்கும் சக்திகள் இன்றைய தமிழ் சூழலில் வளர்ந்த வரும் அபாய போக்கு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். நல்ல உரை
0
கனவு மெய் நிகர் சந்திப்பு ஏடகத் தமிழ் என்ற தலைப்பில் பேசிய பொன் சண்முகசுந்தரம் அவர்கள் தமிழாசிரியராக இருந்து கொண்டு ஏடுகளில் வழங்கப்படும் தமிழ் பழைய காலத்திலிருந்து இன்றைய நவீன ம் வரைக்கும் எப்படி வளர்திருக்கிறது. வாழ்ந்திருக்கிறது .இன்றுஇந்த இளைய சமுதாயம் புத்தக வாசிப்பைஎப்படி நிராகரிக்கிறது என்பதுபற்றி விரிவாக பேசினார் நல்ல உரை .இந்த நிகழ்ச்சியை தூரிகை சினாராஜ் அவர்கள்
அருமையாக
தொகுத்து வழங்கினார் .
வாழ்த்துக்கள்
0
கனவு மெய் நிகர் சந்திப்பு. பேராசிரியர் ஹரிஹரன் சுதன் அவர்கள் நாடகத் தமிழ் என்ற தலைப்பில் பேசும்போது மூன்றாம் பாலின அரங்கம்..பிரதிபலிப்பு அரங்கம். கட் புகலாகாத அரங்கம் போன்றவற்றைப் பற்றி விரிவாக பேசினார் ..
அருமையானஉரை
“ கோவையில் தியாகு நூலகம் மூடப்படுகிறது. திருப்பூர் மக்கள் நூலகத்திற்கு உதவுங்கள் “
திருப்பூரில் ஒரு நூலகம்: திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகம் 30 ஆண்டுகளாய்..
0
நுகர்வு மயமாகிப் போன சூழலில் திரையரங்குகளும் திரைப்படங்களுமே மக்களின் வாழ்வியலாகப் போய் விட்ட தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு நூலகம் வாசகர்களுக்கு அடைக்கலமாக , ஒரு வேடந்தாங்கலாக 30 ஆண்டுகளாக விளங்குவதை ஆச்சர்யத்தோடே பார்த்து வருகிறேன் திருப்பூர் மக்கள் மாமன்றம் நூலகத்தை. ஒரு திரையரங்கின் வாசலில் 30 ஆண்டுகளாய் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறது –ஒரு கோவில், ஒரு தீயணைப்பு நிலையம், நெரிசலானத் தெருவில் ஒரு திரையரங்க முகப்பில் சற்றே ஓரமாய் மக்கள் மாமன்றம் பாசமுள்ள அம்மாவுடன் நின்றிருக்கும் குழந்தையைப் போல ..
இதுவரை சுமார் 5,00,000 வாசகர்கள் அங்கு வந்து நூல்களை, இதழ்களைப் படித்துப் பயன்பெற்றிருக்கிறார்கள்.
திருப்பூரின் பல அரசு நூலகங்களுக்கு இல்லாத பெருமை இந்தத் தனியார் நூலகத்திற்கு உண்டு.சாதாரண வாசகர்களின் அடைக்கலம் என்பதே அது . இலவச நூலகம். இதன் ஸ்தாபகர் சி.சுப்ரமணீயன் எழுதிய திருப்பூரைச்செதுக்கிய சிற்பிகள் நூல் குறிப்பிடத்தக்கது. திருப்பூரின் வரலாறை அஜிதன் குப்புசாமி, சிவதாசன் போன்றோர் எழுதியுள்ளனர். விரிவான வரலாறுகள் வர வேண்டும்.
0
இந்த நூலகத்தை இலக்கியக்கூட்டங்களுக்கு கட்டணமின்றி தருகிறார்கள். இதில் உள்ள உறுப்பினர்கள் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 190 ( சுப்ரபாரதிமணியன் இதன் உறுப்பினர். அவர் 97 நூல்கள் வெளீயிட்டிருக்கிறார் )
இத நிறுவனத்தலைவர் சி.சுப்ரமணியன் 85 வயது. கைக்காசு செலவு செய்து நிர்வகிக்கிறார். சொற்ப நன்கொடையும் கிடைக்கிறது
0
அப்புறம் திருப்பூரில் திருவள்ளுவர் சிலை உள்ள பொது இடம் இந்த நூலகம்தான்.
தமிழன்னைக்கு தமிழகத்தில் 3ம் சிலை இங்கு உள்ளது.
0
வள்ளல் பெருமக்கள் கண்டு கொள்ளாத நூலகம் இது..
SOS –save our soul appeal : Donate to this library
-சுப்ரபாரதிமணியன் குறிப்பு
தொடர்புக்கு” மக்கள் மாமன்ற நூலகம், மங்கலம் சாலை, டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் 641 604 (95008 17499 / 93457 20140 )
தமிழில் ஓட்டிடி தளம்
தமிழில் ஓட்டிடி தளம் என்பது முன்பு எதிர்பார்த்தது போல திருப்திகரமாக இல்லை. பெரிய இயக்குனர்கள் பெரிய நட்சத்திரங்களுக்கு ஆன படங்களுக்காக தளங்கள் அவை. ஆகவே தமிழில் ஓட்டிடித்தளங்கள் மாறிவிட்டன
ஆனால் மலையாளம் போன்ற மொழிகளில் இந்த நிலைமை இல்லை அவர்கள் நல்ல இலக்கியப் படைப்புகளை .நல்ல கதைகளை சுலபமாக எடுத்து வெளியிடுகிறார்கள் .இன்றை இளைஞர்களிடம் நுகர்வுத் தன்மை தான் அதிகமாக இருக்கிறது. திரைப்படங்களையும் நுகர் தன்மையோடு தான் பார்க்கிறார்கள் கலை அம்சங்களோடு பார்க்கிற தன்மையை அவர்களுக்கு என்ற இன்றைய கல்வி கற்றுத் தரவில்லை என்பது வருத்தமானது பழையகாலத்து நினைவுகளை கூட்டிப் பார்க்கிற போது இந்த இளைய சமுதாயம் திரைப்படமாகட்டும் மற்ற கலைகளாகட்டும் அவற்றிலிருந்து பெறும் விஷயங்கள் குறைவு தான் .திரைப்பட சங்கங்களின் பணியும் முக்கியமானது.
- திரைப்பட விநியோக சங்கத் தலைவர்களில் ஒருவரான திருப்பூர் சக்தி திரையரங்குகளின்உரிமையாளர் சுப்பிரமணியம் அவர்களை சந்தித்தபோது உரையாடியவை
சுப்ரபாரதிமணியன், facebook
சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
1.
சூழலுக்காக உயிர் கொடுத்த ஒருவரின் கதைதான் என் “ புத்து மண் “ நாவல்.அதன் கதாநாயகன் மணியன் சுற்றுச்சூழல் விசயங்களைப் பேசி தன்னை மாய்த்துக் கொள்கிறான்.,மணியனைப் பற்றி தேனி விசாகன் சில வார்த்தைகளில் இப்படி சொல்கிறார் :
0
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்” ஆக, பின் கேள்விகள் ஏதுமின்றி மக்களுக்கு நலம்பல தந்துகொண்டிருந்த இயற்கையை இவன்பாட்டுக்கு கண்மண் தெரியாமல் அழித்துவிட்டு, அதனால் வந்துவிட்ட பெரும்பாதிப்பிலிருந்து விடுபட குறுக்கு வழியில் விடை தேடும் பணிக்கு பன்னாட்டுப் பெரும் நிதி ஒதுக்கி, தற்போது இயற்கையிடம் தீர்க்கமுடியாக் கடன்பட்டுக் கிடக்கின்றான்.
படைப்பாளியின் ஏக்கம் பரந்துபட்டது. விரிந்துகொண்டிருக்கின்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முடிவற்ற தன்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஈவு இரக்கமின்றி ரம்பமாய் குறுக்குவெட்டில் சர் சர் என வெட்டுகின்ற அடாவடி தொழிற்சாலைகளின் மூர்க்கம், ஆத்திக மூட நம்பிக்கைகள், அரசு, அதிகாரிகளின் அத்துமீறல், அடாவடி, விட்டேத்தி, கையறு என்ற பன்முக நிலைகள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்ற செயல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விரும்பத்தகாத நிலைகள், இன்னபிற இழிசெயல்கள் போன்றவற்றின்பால் தாக்குண்டு தாளாது, இந்த இனிய தேசமானது வெளியேற்றுகின்ற ஈன சத்தம் அத்தகைய படைப்பாளியான சுப்ரபாரதிமணியின் காதுகளில் ஊடுறுவியதை அரியதொரு எழுத்தாக்கி, தனக்கே உரியதான நடையில், புதிய பாணியில் சுட்டிக்காட்டி இடித்துரைத்திருக்கின்றார் இந்த “புத்துமண்” என்ற அழகிய சிறு நாவல் வாயிலாக.
மலை வளம் எத்தனை அரிதானது, எத்தனை அத்தியாவசியமானது என்பது தெரிந்தும் அரசு இயந்திரங்கள் அற்ப பணம் பெறும் பொருட்டு அதனைச் சூரையாட பகாசுர நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்ப்பவர்களின் நிலை கேள்விக்குறி. மலை வளம் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கை வளமே பாதுகாக்கப்பட்டு, அது தன்னைத்தானே மீண்டும் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் இந்த விநாடித் தேவை. “புத்துமண்” அந்த அவசரத்தை மிக நேர்த்தியாகவும், “நறுக்” என்றும் கோடிட்டுக் காட்டுகின்றது. சுற்றுச்சூழல் குறித்து பல கட்டுரைகள், கதைகள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில் தனது “புத்துமண்” நாவலில் சற்று வித்தியாத்தையும், கற்றுக்கொடுத்தல் தன்மையையும், பூமியின்பாலான தனது ஏக்கத்தையும் குழைத்தளித்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
நாவலெங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பல விவரணைகளை மிகத் தெளிவாகவும், பொருத்தமாகவும் மாத்திரமல்ல, சிலேடையுடனும் வைத்திருப்பது பாராட்டுக்குரியது. மணியனின் மனைவி சிவரஞ்சனியின் மனநிலையை ஒத்துதான் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அதே நேரத்தில் முன்பு மணியன்களாக இருந்த பலபேர், நாளடைவிலோ அல்லது வெகு விரைவாகவோ “MONEYயன்” களாக மாறிவிடுவதுதான் காலக்கொடுமை. உண்மையில் இன்று மணியன்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு பெருமிதத்தையும், MONEYயன்” களாக மாறி உலா வந்துகொண்டிருப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் இந்த “புத்துமண்” இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
“நம்பிக்கையோடும், விளைவு என்னவாகும் என்ற பயம் இன்றியும் ஒரு காரியத்தில் இறங்குவதுதான் துணிவு. கோழைத்தனம் இருக்குமிடத்தில் துணிவு இருக்காது. நமது மக்கள் கோழைகளாக இருக்கிறார்கள். இந்தக் கோழைத்தனத்துடன் வெற்றியைப் பற்றிப் பேசுவது முரண்பாடான செயல். துணிச்சலான உள்ளமும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். போர்க்களத்தில் வேறு வழியின்றி அபாயத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் நமது போராட்டத்தில் விரும்பியே அபாயங்களைச் சந்திக்க வேண்டும்” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உள்வாங்கி இன்றைய தலைமுறைகள், பகாசுர நிறுவனங்களிடமிருந்து நமது இயற்கையின் சூழலைக் காக்கப் புறப்பட வேண்டும் என்ற உந்துதலை இந்த நாவல் படிக்கும்போது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
பல நாவல்கள் படிக்கின்றோம், பாதிப்படைகின்றோம், சிலாகிக்கின்றோம், பரவசடைகின்றோம். ஆனால் உள்ளபடியே மனதளவிலும் உடலளவிலும் பதற்றப்பட வைக்கின்ற நாவல்களும் இருக்கின்றன. அத்தகைய பதற்றத்தை இந்தச் சிறு நாவல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் சுப்ரபாரதிமணியனின் வெற்றி, மகத்தான வெற்றி.
“எல்லாம் என் ஆசிரியர்
அனைவரும் என் குருநாதர்
பாரில் உள்ளதெல்லாம் எனக்குப்
பாடம் சொல்கிறதே…”
“புத்துமண்” நாவலும் பாடம் சொல்கிறது. இந்த மண் ஊர்தோறும் கொண்டு செல்லப்பட வேண்டிய சத்து மண்.உயிர்மை பதிப்பக வெளியீடு இது
2.
சூழலுக்காக உயிர் கொடுத்தோர் என உலகெங்கும் பல பலிகள் ஆண்டுதோறும் நிகழ்வதை சிதம்பரம் ரவிச்சந்திரன் இப்படிக் குறிப்பிடுகிறார்:
கடந்த பத்தாண்டுகளில் 1700க்கும் மேற்பட்ட சூழல் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு போராளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வாடகைக் கொலையாளிகள், குற்றக்குழுக்கள் மற்றும் சொந்த அரசுகளால் 2012 முதல் 2021 வரை 1733 நிலப் பாதுகாவலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளி நாடு
குளோபல் விட்னஸ் (Global Witness) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த கொலைகள் பிரேசில், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ மற்றும் ஹாண்டுரஸ் நாடுகளில் மற்ற உலக நாடுகளை விட அதிகமாக நடந்துள்ளது. 2012 முதல் இந்த தன்னார்வ அமைப்பு சூழலிற்காக உயிர் கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுகிறது.சட் வாடி கொலை
2012ல் இந்த அமைப்பின் தலைமை செயல் அலுவலர் மைக் டேவிஸுடன் கம்போடியாவில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது போராளி சட் வாடி (Chut Wutty) கொல்லப்பட்டார். அதில் இருந்து இந்த அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றது.
செயலற்ற உலகம் - செயல்வேகம் பெற்ற கொலைகள்
2020ல் கொரோனா தொற்றினால் உலகம் செயலற்று முடங்கிக் கிடந்தபோதும் சூழலிற்காக பாடுபடுபவர்களின் கொலைகள் உலகம் முழுவதும் தொடர்ந்தன. அந்த ஆண்டில் மட்டும் சாதனையளவாக 227 பேர் கொல்லப்பட்டனர்.
அதிகார அமைப்புகளுடன் முரண்பட்டு சூழல் காக்க கேள்வி கேட்பவர்கள் உலகம் முழுவதும் கொல்லப்படுகின்றனர். உலக மக்கட்சமுதாயம் இந்த நிலையை மாற்ற விழித்துக் கொள்ள வேண்டும் என்று மைக் டேவிஸ் கூறுகிறார். இந்த கொலைகளால் குறைந்த வருமானம் உடைய சமூகங்கள், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் உலக மக்கட்தொகையில் 5% மட்டுமே. கொல்லப்பட்ட பிரிவுகளில் இவர்கள் 39%.
காரணங்கள்
சுரங்கத் தொழில், பெருமளவில் மரம் வெட்டும் தொழில் மற்றும் விவசாய விரிவாக்கத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை அதிகம் செய்கின்றன. இதற்கான காரணங்கள் பற்றி உலகம் நன்கறிந்ததே. இயற்கையைப் பாதுகாக்க போராடும் சூழல் மண்டலங்களில் இந்த உயிரிழப்புகள் அதிகம் நடைபெறுவதால் இவை வேறு காரணங்கள் சொல்லி மூடி மறைக்கப்படுகின்றன.
மறைந்த சாட் வாடி, இத்தகைய கொலைகள் பற்றிய உண்மையான விவரங்கள் உலகிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும், இவற்றைத் தடுக்க வழி காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புள்ளிவிவரங்கள்
2021ல் காங்கோ மக்கள் குடியரசில் விரங்கா (Virunga) தேசியப் பூங்கா காவலர்களில் எட்டு பேர் உட்பட 200 பேர் கொல்லப்பட்டனர். சுரங்கத் தொழிலும், எண்ணெய் எடுக்கும் வேலையும் அதிகமாக நடப்பதால் சமீப ஆண்டுகளில் இத்தகைய அநீதிகள் இங்கு அதிகமாகி வருகின்றன. கென்யாவில் சூழலியளாளர் ஜோஆனா ஸ்டச்பரி (Joannah Stutchbury) 2021ல் அவருடைய வீட்டிற்கு முன்னால் வைத்துக் கொல்லப்பட்டார்.
பிரேசிலில் நடப்பதென்ன?
கொலம்பியாவின் சூழல் செயல்பாட்டாளர் ஏஞ்சல் மைரோ காட்டஜினா (Angel Miro Cartagena) சூழல் காக்கும் பணியில் 2021ல் கொல்லப்பட்டார். 2022 ஜூனில் செய்தியாளர் டாம் பிலிப்ஸ் (Dom Phillips) மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புகழ்பெற்ற கார்டியன் மற்றும் அஃப்சர்வர் இதழ்களுக்காக சூழல் அநீதிகள் குறித்து மிகத் தீவிரமாக எழுதி வந்தவர் இவர்.
இவருடன் சேர்ந்து, பழங்குடியினர் குறித்த ஆய்வாளர் புருனோ பெராரா (Bruno Pereira) பிரேசில் அமேசான் காடுகளில் ஜவாரி (Javari) பள்ளத்தாக்கில் கடத்திச் சென்று கொல்லப்பட்டார். பிலிப்ஸ் “அமேசானைக் காப்பாற்றுவது எப்படி?” என்ற தலைப்பில் நீடித்த நிலையான வளர்ச்சி பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். புருனோ நேர்முகங்கள் காணுவதில் அவருக்கு உதவியாக இருந்தார்.
சில வெற்றிகள்
தென்னாப்பிரிக்கா கிழக்கு கேப் பகுதியில் திமிங்கலங்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியை அழித்து ஷெல் நிறுவனம் எண்ணெய் சுரங்கம் நிறுவுவதை அப்பகுதி பழங்குடியினர் செப்டம்பர் 2022ல் நீதிமன்ற வழக்கு மூலம் தடுத்து நிறுத்தினர். இந்தோனேஷியா சாங்ஹி (Sanghie) தீவுப்பகுதியில் 2022 மே மாதத்தில் மக்கள் ஒன்றுகூடி கனடாவைச் சேர்ந்த நிறுவனம் அவர்களின் வாழிடத்தில் தங்கச் சுரங்கம் தோண்டும் முயற்சியை நீதிமன்றத் தீர்ப்பு மூலம் தடுத்தனர்.
பணக்கார பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கிடைத்த இத்தகைய வெற்றிகளே ஆய்வறிக்கையை தயாரிக்க தன்னைத் தூண்டியது என்று இதன் ஆசிரியர் அலி ஹைன்ஸ் (Ali Hines) கூறுகிறார்.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பிரேசிலில் 342, கொலம்பியாவில் 322, மெக்சிகோவில் 154, ஹாண்டுரஸில் 170, பிலிப்பைன்ஸில் 217 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமூக அநீதி, ஊழல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள். ஊழல் அதிகாரிகள், பணம் வாங்கிக் கொண்டு அநீதியை தீர்ப்பாக மாற்றிச் சொல்லும் நீதிபதிகள் போன்றோர் அதிகமாக இருப்பதால், தப்பித் தவறி விசாரணை நடந்தாலும் அது நீதியின் வழியில் செல்வதில்லை என்றும், சூழல் செயல்பாட்டாளர்களுக்கு உரிய அடிப்படை பாதுகாப்பை உலக அரசுகள் வழங்க வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது. அநீதி செய்யும் நிறுவனங்கள் சட்டரீதியாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும். (- சிதம்பரம் இரவிச்சந்திரன் – கீற்று இணையதளக்குறிப்புகள்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)