சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

Kolusu issue april 2022 மகன் / சுப்ரபாரதிமணியன் மூலத்துறை ஆற்று நீரின் சலசலப்பு ரொம்ப தூரத்திற்கு கேட்டது அந்த ஓசையை கேட்டபடியே அவன் நகர்ந்து கொண்டிருந்தான் நஞ்சராயன் குளத்திற்கு ஒருதரம் சென்றிருந்தபோது பறவைகளின் வெவ்வேறு ஒலிகளை கேட்டு ரசிக்க முடிந்தது. கூட வந்திருந்த சின்னராஜ் கொஞ்ச நேரம் கண்களை மூடி இந்த ஓசையை கவனியுங்கள் என்றார். அதற்கு முன்னால் தட்டான், சிட்டுக்குருவி போன்றவைகளை காட்டி அவற்றின் ஒலி பற்றிச்சொன்னார் இப்போது கண்ணை மூடிக்கொண்டு இந்த பறவைகளின் ஓசைகளை கேளுங்கள் என்றார். கண்களை மூடிக்கொண்டு கேட்டபோது பல பறவைகளில் வினோதமான ஒலிகள் கேட்டன. ஒவ்வொன்றையும் பிரித்தறிய முடிந்தது ஆச்சரியமாக இருந்தது. காது இவ்வளவு துல்லியமாக வேலை செய்கிறதா என்றிருந்தது அவனுக்கு. இப்போது அவன் மூலதுறைக்கு வந்து இருந்தான் படகுத்துறைக்கு கொஞ்சம் படகுகள் வந்து கொண்டிருந்தன தூரமாய் ஆற்றின் கரையில் உட்கார்ந்து கொண்டு தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் தட்டுப்பட்டார்கள் . கொரானா காலத்தில் பள்ளிகள் சரியாக இயங்குவதில்லை அதனால் அவர்கள் இப்படி ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும் பல சமயம் வருமானம் தருவதாக இருக்கும். திருப்பூரில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் பாதிக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பகுதி நேர வேலைகளை பின்னலாடை நிறுவனங்களில் செய்கிறவர்கள் என்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. பின்னலாடைத் தொழில் போல் மீன் பிடித்தல் ஒரு தொழிலாகிவிடுமா இவர்களுக்கு என்ற எண்ணம் மனதில் வந்தது. ஆற்றின் சலசலப்பை மனதில் வைத்துக் கொண்டு சென்றபோது புங்க மரத்தடியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று கண்ணில் பட்டது. அதில் சின்னான் என்று எழுதப்பட்டிருந்தது யோசிக்கையில் அவனுக்கு ஞாபகம் இருந்தது சின்னான் முகம். அந்த சின்னானை சில வருடங்களுக்கு முன்னால் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவனை சந்தித்தது ஞாபகம் வந்தது. இப்போது அவனுக்கும் வயதாகிவிட்டது. சின்னானுக்கும் வயதாகி இருக்கும். இந்த முறை கூட ஏதாவது நல்லதாய் மீன் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் ஆனால் சுத்தம் செய்து ஒரு நல்ல நெகிழிப் பையில் அதை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் இல்லாவிட்டால் மனைவியிடம் திட்டு வாங்க வேண்டும். சுத்தமாக கொண்டு சென்றால் அவள் சமைத்து தர வாய்ப்பிருக்கிறது நல்லவேளையாக அவன் இரட்டை சக்கர வாகனத்தில் வந்திருந்தான் பேருந்தில் செல்வதென்றால் பலரின் பார்வையில் மீன் பை தட்டுப்படும். யாராவது கேள்வி கேட்கக் கூடும் சிலருக்கு பிடிக்காமல் போய் மூக்கை நோண்டக்கூடும். இரட்டை சக்கர வாகன பயணம் என்பதால் இதெல்லாம் சிக்கல் இல்லை வெளியே இருக்கிற பெட்டியில் போட்டு விட்டால் போதும். அது பாட்டுக்குக் கிடக்கும். .ஆனால் தேனீர் சாப்பிட, சிறுநீர் கழிக்க என்று வண்டியை நிறுத்துகிற நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாயோ பூனையோ அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது. அவற்றைத்துரத்தும் தைரியத்தையும் மந்தில் கொள்ளவேண்டும். தடிமனான வேப்பமரத்தின் கீழ் ஒரு சிமெண்ட் பெஞ்ச் இருந்தது. உட்கார்ந்தான். அப்போதுதான் அவனை கடந்து சென்ற அந்த மனிதனை சந்தித்த்து ஞாபகம். மீண்டும் மீண்டும் அவனின் பின்புறத்தைப் பார்த்தான். ஏனோ சின்னான் ஞாபகம் வந்தது வலது கையில் படகை உயர்த்தி தூக்கி தலைக்கு மேலாக வைத்துக்கொண்டு குடை பிடிப்பது போல அவர் சென்று கொண்டிருந்தார் அவன் நெருங்கி நீங்க சின்னானா என்று கேட்டான் ” ஆமாங்க அடையாளம் தெரியுதுங்களா ” ”ஆமா பத்து வருஷம் முன்னால வந்து பார்த்து இருக்கேன் பேசியிருக்கன். டக்குனு ஞாபகம் வந்தது” “ ஆமா” சின்னானின் கூடவே ஒரு நாய் பரபரவென்று நாக்கை தொங்கவிட்டபடி நகர்ந்துகொண்டிருந்தது “அப்புறம் எங்க போற ” “வழக்கமாக மீன் பிடிக்கிறதுக்குத்தான்” “ இந்த நாய் எதுக்கு” “ இதெல்லாம் சொல்லாதீங்க... நாய்ன்னு சொல்லாதீங்க” “ சரி இது எதுக்கு ..மீன் பிடித்தால் அதை கவ்வும். வாயில வச்சுக்கும் சிரமம்தான்.” “ அதெல்லாம் பண்ணாதுங்க .என் பையன் இது “ பையன் என்று நினைத்துதான் சின்னான் அதை வளர்த்து வந்தார். வீட்டில் அவன் முற்றத்துக்கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடக்கையில் பக்கத்தில் படுக்கும். அவர் எங்கு சென்றாலும் நிழல் போல் கூடவே இருக்கும். அது வீட்டுக்குள் சாதாரணமாக நடமாடுவது சின்னானின் மனைவிக்குப் பிடிக்காது. அவன் ஏதாவது பூஜை என்று படையல் போடும்போது கூட பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும். அவன் மனைவிக்கு அதெல்லாம் பிடிக்காமல் படையல் போடறப்போ இதெல்லாம் இருக்கக் கூடாது. என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டாள். சின்னானுடன் முயல் வேட்டைக்குப் போனாலும் மீன் பிடிக்கப் போனாலும் கூடவே இருக்கும். அநாவசியமாக எதிலும் வாய் வைக்காது. “ வேட்டைக்கைக்கு வருது . கூடவே இருக்கு, இங்க இருந்தா என்ன ” “ அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே வெச்சுக்க “ அதன் பின் அந்த நாயும் எல்லாம் புரிந்து கொண்டது போல்வீட்டிற்கு வெளியே இருக்க ஆரம்பித்தது “ என் பையனா நினைக்கறண்டி “ ” நினச்சுக்கோ. வீட்டுக்குள்ள வேண்டாம் ‘ அதன் பின் இரண்டு மாதங்கள் தான் அவள் உயிரோடு இருந்தாள். படுக்கையில் கிடந்து செத்துப் போனாள். “ பையனா பாத்துக்கிறீங்க“ “பையன்... ஆமாங்க என் பையன் தான் எனக்கு குழந்தைகள் இல்லை இதைத்தான் பையனா வளர்த்துட்டு இருக்கேன் என்ன சொன்னாலும் கேட்பான். நல்ல பையன்” 00