சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 12 ஏப்ரல், 2022
வடகிழக்கு இந்தியப் பயணம் : 12 சுப்ரபாரதிமணியன்
உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று என்றும் ஆசியாவின் தூய்மையான நதி என்றும் மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி அல்லது ட்வ்கி நதி சொல்லப்படுகிறது. நொய்யல் முதல் கங்கை வரை சாயக்கழிவுகள், வீட்டுக்கழிவுகள் எனப் பார்த்து நொந்து போன மனதிற்கு ஆறுதல் தரும் செய்தி இது
மேகாலயாவில் உள்ள ஒரு ஆற்றின் நீர் மிகவும் சுத்தமாகவும், ஆற்றின் கீழே உள்ள பசுமை மற்றும் கற்பாறைகள் தெளிவாகத் தெரிகிறது. இதனால் படகு தண்ணீரில் மிதக்காமல் நடுவானில் பறப்பது போல் தெரியும் படத்தை ஜல் சக்தி அமைச்சகம் பகிர்ந்துள்ளது, இது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இந்த ட்வீட்டில், மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி இடம்பெற்றுள்ளது. தங்கள் நதிகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக மேகாலயா மாநில மக்களுக்கு அமைச்சகம் நன்றி தெரிவித்தது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இந்த உம்ங்கோட் நதி அமைந்துள்ளது. உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று என்று ஜல் சக்தி அமைச்சகம் கூடத் தெரிவித்துள்ளது.
மேற்பகுதியிலிருந்து 10 அடி ஆழத்திலும் தெரியும் பொருட்கள் தெளிவாக உள்ளன.
இதில் தண்ணீர் தெளிவாகவும், சுத்தமாகவும் இருப்பதால் படகு காற்றில் பறப்பது போல தெரிகிறது. அனைத்து நதிகளும் இது போன்று தூய்மையாக இருக்க வேண்டும். இந்த நதியை தூய்மையாக வைத்திருக்கும் மேகாலயா மக்களுக்கு ஹாட்ஸ் ஆப் என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.
வங்கதேச எல்லையின் ராணுவத்தினர் பார்வையில் பட இந்நதியின் படகுகளும் கண்ணில் படுகின்றன.
சுத்தமான நதிதான். சிறுவர்கள் உட்பட வெளிநாட்டினர் கூட பாறைகளின் மேலிருந்து டை அடித்து குளிக்கின்றனர் இந்த டவ்கி நதியில். ஆனால் சில இடங்களில் பலர் துணி துவைக்கிறார்கள். சுத்தமான நதியில் இது போன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
படகு சவாரியும் மீன் பிடிப்பும் இந்த நதியில் ஒரு கி மீ நீளத்திற்கு சுவாரஸ்யம் தருபவை. இரவுகளில் நதியின் மணல் மேட்டில் தங்கும் கூடார வசதிகளை பலர் அனுபவிக்கிறார்கள் .வங்கதேசத்தினரும் இந்நதி குறித்து மகிழ்ச்சி கொள்ளலாம். காரணம் எல்லையைத்தாண்டி டாக்காவிற்குச் சென்றால் திருப்பூர் போல் சாய்க்கழிவுகளும் வீட்ட்க்கழிவுகளும் ஓடும் நதிகளையே அங்கு பார்க்க முடியும், இரண்டு முறை டாக்கா சென்ற போது அவற்றைப்பார்த்திருக்கிறேன். நொந்து போயிருக்கிறேன்.
நதிகளைப்பார்ப்பது ஆசுவாசம் தருவது. அந்த வகையில் ஆசுவாசம் தரும் சில செய்திகள் நதிகள் பற்றியவை கீழே இணைய தள உபயத்துடன்..
அமேசான் கீழ் சுமார் 4 கிலோமீட்டர் ஆழத்தில் இது ஒரு நிலத்தடி ஆற்றின் இருப்புக்கு சான்றுகள் உள்ளன. நீளம், அது அமேசான் போன்றது - அதன் நீளம் 6,000 கிலோமீட்டர் ஆகும், ஆனால் அது பல நூறு மடங்கு பரந்ததாகும். நதி ஹம்சா (ரியோ ஹம்சா) என்று அழைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், தாய்லாந்தில் அமைந்துள்ள மீகோங் ஆற்றின் (மெக்கோங் நதி) மேற்பரப்பில் இருந்து உமிழும்தீப் பந்துகள் உயரும். இந்த பந்துகள் நாகா தீப்பந்துகளாக அறியப்படுகின்றன, சிலர் மீத்தேன் கிளஸ்டர்களின் விளைவாக இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். ஆயினும்கூட, இந்த பந்துகள் உள்ளூர் புராணங்களின் ஒரு பெரிய எண்ணிக்கையிலான ஒரு உத்வேகமாக ஆதாரமாக மாறிவிட்டன
அமெரிக்காவின் பழமையான நதி உண்மையில் ஒரு புதிய நதி (புதிய நதி) என்று அழைக்கப்படுகிறது. சில விஞ்ஞானிகள் இந்த ஒற்றை நதி, அதன் வயது ஆப்பிரிக்க நதி நைல் வயதை விட அதிகமாக உள்ளது என்று நம்புகிறார்கள்.
லண்டனின் தெருக்களில், கிட்டத்தட்ட 20 மறைக்கப்பட்ட ஆறுகள் ஓடுகின்றன.
மிகவும் மாசுபட்ட நதி ஆஸ்திரேலியாவின் நவீன மாநிலத்தின் பிரதேசத்தின் மூலம் ராயல் நதி ஆகும். இது சுரங்கத் தொழில்துறையிலிருந்து இரசாயன கழிவுகளுடன் மாசுபட்டது. 1995 ஆம் ஆண்டு முதல், 1.5 மில்லியனுக்கும் அதிகமான சல்பைட்ஸ் ராயல் நதிக்கு விழும்.
ரஷ்யா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பிரதேசங்களில்தூய்மையான நதி வொன்ச்சா நதி, இது மாரி எல் குடியரசில் பாய்கிறது. இதன் நீளம் 33 கிலோமீட்டர் (அதன் ஆதாரங்கள் உட்பட), அதன் அகலம் 2-3 மீட்டர், அதன் ஆழம் 1.5 மீட்டருக்கு மிகாமல் உள்ளது. நதி படுக்கையின் முக்கிய பகுதி மாநில தேசிய பூங்கா மற்றும் ரிசர்வ் "மாரி சோத்ரா" வழியாக செல்கிறது. வோஞ்சா அதன் நீரை படிக தெளிவான நீரோடைகள் மற்றும் ஸ்ப்ரூஸ் மற்றும் பைன் காடுகளில் பாயும் நீரூற்றுகளில் இருந்து நிரப்புகிறது,
கொரோனா வைரசின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயிரக் கணக்கான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்களும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே உள்ள வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. 7 புனித நகரங்களுள் ஒன்றான வாரணாசி (காசி) யில் கங்கை நதி உள்ளது. காசி புண்ணிய ஸ்தலம் என்பதால் பலரும் கங்கையில் நீராடி செல்லுவர். மேலும் இறந்தவர்களின் உடல்களையும் கங்கையில் வீசுவதையும் காணமுடிகிறது. அதுமட்டுமின்றி பல தொழிற்சாலைகளின் கழிவுகள் , குப்பைகள் மற்றும் , பூஜை பொருட்கள், மனிதர்களின் அசுத்தமுறை போன்றவற்றால் கங்கை நதியின் தூய்மை மாசடைந்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசும் மாநில அரசும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதனால் தற்போது ஊரடங்கு காலங்களில் கங்கை நீர் சுத்தமாக உள்ளது. கங்கை நதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீரின் தரத்தை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், சோதனை செய்தது.கங்கை கழிவுகள் குறைந்ஹ்டு சுத்தமாகியிருப்பதை பரிசோதனிகள் சொல்கின்றன. ஆனால் இது நீடிக்க வேண்டுமே .
ரெங்கையா முருகன் வி.ஹரிசரவணன் எழுதிய அனுபவங்களின் நிழல் பாதை என்ற வம்சி பதிப்பக வெளியீடு நூல் 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விருது பெற்றது. இந்த நூலின் ஒரு பகுதி உலக ஆறு தின கொண்டாட்ட சிறப்புக் கட்டுரையாக வெளியிடப்பட்டிருக்கிறது.
புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் பின்வருமாறு:
பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் தான் ஜீவன் உருவாகிறது. ஆனாலும் தண்ணீரை மட்டுமே “ஜீவன்” என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மழை நீரை எதிர்பாராமல் ஆற்று நீர் பாய்ந்து பலன் அளிக்கும் பூமியை “நதிமாத்ருக்” என்ரு அழைப்பதுண்டு. நதியை அன்னை என்றதன் பேரில் நதியப் புனிதமாகப் பாவித்துத் தரிசிக்கச் செல்வதும், அக்காலத்தில் சமணத் துறவிகள் ஆற்றுப்படுகைகளின் போக்கிலே சென்று யாத்திரை மேற்கொண்டதால் தீர்த்தங்கரர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
நதிகளை மையமாகக் கொண்டு பொருளாதார கலாச்சாரப் பரிவர்த்தனை நிகழ்கிறது. ஒவ்வொரு நதியும் தனக்கென்று சிறந்த பண்பாட்டு அடையாளத்துடன் பிரவாகமாகத் திகழ்கிறது. ஓடுகின்ற ஆற்று நீரில் குளிப்பது உத்தமம் என்றும், நிலைத்து உள்ள ஏரி, குளம், கிணற்றில் குளிப்பது மத்திமம் என்றும், பாத்திரங்களில் ஊற்றிக் குளிப்பதால் உடல் நிலைக்கு உகந்ததல்ல என்றும் ஸ்நான விதி கூறுகிறது. ஒருமுறை ஓடுகின்ற அதே நீரில் மறுமுறை குளிக்க முடியாது என்று உலக உயிர் வாழ்க்கை நிலையை ஒப்புமைப்படுத்திக் கூறுவர். எல்லா நதிகளும் கடலின் மனைவிகள் என்று கூறுவதுண்டு. எல்லா ஆறுகளும் தத்தம் புனிதமான நீரைக் கடலுக்கு அர்ப்பணிப்பதால் கடலின் நீர் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
எனது களப்பணி ஆய்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றுப்படுகைகளை ஒட்டிய பழங்குடிகளிடையே பயணிக்க நேர்ந்தது. அந்த வகையில் கோதாவரி, இந்திராவதி, நர்மதா, ஜோன்க், டேல், பிரம்மபுத்ரா ஆகிய நதிப்படுகைகளிடையே பயணித்துள்ளேன். அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பயணிக்கும் சமயங்களில் பிரம்மபுத்ராவின் பிரவாகத்தைக் காணாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
பழங்குடிகளின் பண்பாட்டில் மலை, நதிகளுடன் உள்ள தொடர்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதிவாசிகளைப் பொறுத்தமட்டில் நதி என்பது அவர்களுடைய வாழ்வின் சின்னம், பண்பாடு, நதிகளுடனான பழமரபுக்கதை, வாய்மொழி வரலாறு, பல்வேறு நாட்டுப்புறக் கதை என வெவ்வேறு வடிவங்களில் நதிகளுடன் தங்களுக்கான உறவை அர்த்தப்படுத்துவர்.
பிரம்மபுத்ரா நதியினையொட்டி அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் மின்யோங்ஙாதி, பாதாம் ஆதி, பான்கி, டோரி, காலாங், மிஸிங், கச்சாரி, ராபா, காசி, ஜைண்டியா, ஹாஸோங், கர்பி, போடா, குக்கி, மான் போன்ற பல்வேறு பழங்குடிகள் தங்களது வாழ்வியலை ஆற்றுப்பகுதிகளோடு இணைத்துக் கொண்டுள்ளனர். இப்பழங்குடியினரிடையே பிரம்மபுத்ரா நதியினைக் குறித்து பல்வேறு தொன்மக் கதைகள், பல்வேறு வழிபாட்டுச் சடங்குகள், நதியினைச் சார்ந்த வாழ்க்கைப் பண்பாடு முதலியன காணப்படுகின்றன. ஒவ்வொரு பழங்குடியினரும் தனக்கென்று தனித்துவமான பண்பாட்டை பிரம்மபுத்ரா நதியினோடு பிணைத்துள்ளனர்.
கிழக்கு இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு ஷியாங் மாவட்டத் தலைநகரான பாஸிகாட்டில் (Pasighat) இருந்து பான்கின், ரியூ, போலங், கெல்லிங், ட்யூட்டிங் ஆகிய வளமான மலைப்பகுதியிடையே “சியாங்” (Siang) என்ற பெயருடன் பாய்ந்தோடும் பிரம்மபுத்ரா நதிப் படுகையினிடையே எங்களது பிரயாணப் பாதை அமைந்தது.
நான் மேற்கொண்ட பல்வேறு பிரயாணங்களில் மிகவும் உற்சாகமாக அமைந்த பயணம் கிழக்கு இமயமலைத் தொடர்ப் பயணம். குறுகிய ஒருவழிப் பாதையில் ஒருபுறம் அதல பாதாளத்தில் சியாங் நதி சந்தடியின்றி அமைதியுடனும் அதே நேரத்தில் பெரும் ஆர்ப்பரிப்புடன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உள்ள அகலப்பாதையில் நீல நிறத்தில் சுத்தமான தண்ணீர் தொடர்ந்து கொண்டே இருந்தது. பயணிக்கும் வழிப்பாதையின் மறுபுறம் வானை முட்டும் அளவுக்குப் பச்சைப் பசேலென்ற வளம் மிக்க அடர்த்தியான மரங்கள். சியாங் நதியின் எல்லையற்ற வண்டல் படிந்த பச்சைக்கல் மரகதத்தையொத்த மணற்திட்டுகள் உண்மையிலேயே ஆள் அரவமற்ற பூமிப்பரப்பில் சிறு சிறு பறவைகளின் ஒலியுடன் எங்களது மனஓட்டம் எப்படி இருந்தது என்பதை வர்ணிக்க முடியவில்லை.
வாழ்க்கையின் மாய நர்த்தனத்துடன் லயிக்கப்பட்டு, இயற்கைத் தேவியின் மகாசக்தியைக் கணநேரப் பரவசத்துடன் அதிசயங்கள் நிறைந்த ஒவ்வொரு கணமும் அணு அணுவாக சியாங் நதியின் அழகை ரசித்தேன். பொதிகையிலிருந்து கிளம்பும் தென்றல் காற்று போல, செவியினிடையே மரங்கள் அசையும்போது உருவாகும் சில்லென்ற இளங்காற்று ஒருபுறம் வீசிக் கொண்டிருக்க, மேக மூட்டத்துடனான மதிய வேளை மஞ்சள் இளவெயில் ஒருபுறம் மனதை வருடிக் கொண்டிருந்தது. சியாங் நதியின் அழகை அப்படியே வருணிக்க எந்தக் கவிஞனாலும் முடியாது என்று அறுதியிட்டுக் கூற முடியும். ஏனெனில் அந்த இடத்தில் மன ஓட்டநிலை தியான நிலையின் இறுதியான ஆல்பா நிலைக்குச் (எவ்விதச் சலனமற்ற நிலை) சென்றுவிடுகிறது. கிட்டத்தட்ட அக்கணத்தில் உள்ள நிலையை மட்டுமே ரசிக்கும் மனநிலை உருவாகிறது.
கிழக்கு இமயமலைத் தொடர்ப் பகுதியிடையே சுமார் 300 கி.மீ. பயணம் மேற்கொண்டோம். சியாங் நதி பல கோணங்களில் பல சாயைகளைக் கொண்டதாக இருந்தது. ஒரு இடத்தில் நதி காட்டுப் பிரதேசத்தினூடே பாயும். அதே நதி வேறு சில இடங்களில் பாறைகளிடையே துளைத்துக் கொண்டு பாய்கிறது. நதியின் வர்ணமும் அடிக்கடி மாறித் தோன்றுகிறது. “சியாங்” என்ற சொல் ஆதிமொழி (Adi Language). சியாங் என்பது அசியாங் என்பதிலிருந்து மருவி “அசி” (Asi) என்றால் “தண்ணீர்”, “யாங்” என்றால் “இதயம்” என்ற பொருள்படக்கூடிய இச்சொல் இதயத்தைக் குளிர்விக்கும் என்ற பொருளுடையதாகிறது.
பிரம்மபுத்ரா நதியைக் குறித்துப் பல்வேறு பிரயாணக் குறிப்புகள் வெளிவந்துள்ளன. முக்கியமாக “திபெத்தில் மூன்று வருடங்கள்” என்ற புகழ்பெற்ற பிரயாண நூலை எழுதிய புத்தமதத் துறவி இகாய் சுவாஹுச்சி (Ekai Kawaguchi) என்பவர் பிரம்மபுத்ராவின் அழகை அந்த நூலில் குறிப்பிடப்படுவதாவது:
“பனி முகடுகளின் விரிவில் படர்ந்த தொலைதூர முகில்கள் பொழிகின்ற பிரம்மாண்ட பிரம்மபுத்ரா நதியே அப்பாலுக்கப்பாலான ஆகாயங்களுக்குள் பாயும் வெகு தூரத்து நிலங்களின் அடிவானங்களைச் சந்திக்கும் பிரம்மபுத்ரா நதி தன்னுடைய கம்பீரத்திலும் பெருமிதத்திலுமாய்க் காட்சி அளிக்கும். இந்த வீர்யக் காட்சி அலையும் புத்தர் சிலையாய் வைரோசனா என்ற பெயரைத் தாங்கியிருக்கும் அனைத்து இயற்கையின் அதிரூபக் கடவுள் என்று பிரம்மபுத்ராவின் அழகை அப்படியே வர்ணித்துக் கூற முடியவில்லை. முயன்றும் தோற்றுவிட்டேன்” என்று குறிப்பிடுகிறார்.
பிரம்மபுத்ரா நதி உற்பத்தியாகும் இடம் குறித்துப் பல நூற்றாண்டுகளாக அவிழ்க்க முடியாத புரியாத புதிராக இன்னும் கூட நிலவி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். திபெத்திய மக்களுக்கு மானசரோவரிலிருந்து உற்பத்தியாகும் “ஷாங்போ” (Tsangpo) நதி குறித்துத் தெரியும். அவர்களைப் பொறுத்தமட்டில் அதிகபட்சமாக நதி கிழக்கு நோக்கிச் சென்று காட்டில் மறைந்துவிடுகிறது என்று மட்டும்தான் தெரிகிறது.
இந்தியப் பகுதியில் பிரம்மபுத்ராவின் உற்பத்தி ஸ்தானத்தைத் தேடிக்கொண்டு அதே காட்டின் மறு முனை வரை சென்று தேடியும் மூலப்பகுதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஐரோப்பியர்கள் தகுந்த சூழ்நிலை இல்லாதபோதும் காடுகளைக் கடந்து திபெத் பகுதியிலுள்ள “ஷாங்போ” ஆறுதான் இந்தியப் பகுதிகளில் பாயும் பிரம்மபுத்ரா என்று கண்டுபிடித்தனர்.
கி.பி. 1762ஆம் ஆண்டு சைனா நில ஆய்வாளர் “ஷு சௌகென்” என்பவர் முதலில் பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் இடத்தை ஆராய்ந்து வரைபடம் வரைந்தார். இவரது கூற்றுப்படி “ஷாங்போ” இமயமலையின் ஒரு பகுதியாகிய கைலாச பர்வதத்தின் தென்கிழக்குப் பிரிவில் லாங்சென்ஹபாப் என்ற இடத்தில் “டிஜிமாகௌங்கிராங்” ஏரியில் உள்ள பனிமலையே மூலம் என்று முன்னதாக வரையறுக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறுபட்ட நில ஆய்வாளர்கள் தொடர்ந்து பிரம்மபுத்ராவின் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய பயணம் மேற்கொண்டார்கள். குறிப்பாக நைன்சிங், தாமஸ்வெப்பர், ராவ்லிங், ரைடர், வாடெல் போன்றோர் திபெத் பக்குதியில் பாய்ந்தோடும் ஷாங்போ குறித்து ஏராளமான பயணக் குறிப்புகள் எழுதியுள்ளனர்.
இறுதியாக ஸ்வென்ஹெடின் (Dr.Sven Hedin) என்பவர் தான் 1907-08 வாக்கில் பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் அதே இடத்தில் சட்லெஜ் (Sutlej), சிந்து (Indus) மற்றும் கர்னாலி (Karnali) ஆகிய மூன்று பெரிய நதிகளும் உருவாகிறது என்று நீண்டகாலப் புரியாத புதிருக்கு விடை கண்டார். ஸ்வென்ஹெடின் ஆய்வுக்குப் பிறகு இவரது பயணப்பாதையை ஒட்டியே மானசரோவரில் உருவாகும் பிரம்மபுத்ரா உற்பத்தி குறித்து அப்பகுதிகளிடையே வாழும் பல்வேறு பழங்குடி மக்களிடையே நிலவி வரும் மழமரபுக் கதைகளை ஒட்டியும் பிரம்மபுத்ரா பாயும் பகுதிகள் குறித்துத் தெளிவான முடிவுக்கு வருவதற்கு உபாயமாக இருந்தது என்று கூறலாம்.
இந்தியாவில் பிரம்மபுத்திரா ஓடி செழுமைப்படுத்தும் பல பகுதிகளை வடகிழக்கு மாநிலங்கள் கொண்டிருக்கிறன
“கான்க்ரி கார்சோக்” (Kangri Karchok) எனப்படும் திபெத் கைலாச புரானில் சட்லெஜ், சிந்து, பிரம்மபுத்ரா, கர்னாலி ஆகிய நதிகளின் உற்பத்தி மூலத்தைக் குறித்து விரிவாகப் பேசுகிறது. லாங்சென் ஹம்பாப் என்றழைப்படும் யானை வாய்ப்பகுதி கொண்ட சட்லெஜ் நதி மேற்கு நோக்கியும் சென்கே ஹம்பாப் (Senge Khambab) என்ற சிங்கவாய் கொண்ட சிந்து நதி வடக்கு நோக்கியும், தம்சோக் ஹம்பாப் (Tamchok Khambab) என்ற குதிரைக் காதுடைய பிரம்மபுத்ரா கிழக்குப் பகுதி நோக்கியும், மப்சுஹம்பாப் என்ற மயில் வாயுடைய கர்னாலி நதி தெற்கு நோக்கியும் மானசரோவர் அருகில் உள்ள பனிச்சறுக்கு ஏரியிலிருந்து உற்பத்தியாகிறது.
இதில் “தம்சோக் ஹம்பாப்” பற்றி ஸ்வென் ஹெடின் குறிப்பிடுவதாவது, திபெத்திய மொழியில் “தா” (Ta) என்றால் குதிரை, “அம்சோக்” (amchok) என்றால் “காது”, ஹம்பாப் (Khambab) என்றால் “வாய்” என்று பொருள்படுகிறது. அதாவது மானசரோவர் பகுதியில் செம்யுன்டங் (Chemayundung) பனிச்சறுக்கு ஏரிப் பகுதியில் பிரம்மபுத்ரா உருவாகிறது. உற்பத்தியாகுமிடம் ஒன்றாக இருந்தாலும் நான்கு நதிகளின் நீரின் தன்மையில் மாறுபாடு காணப்படுகிறது. சட்லெஜ் நதி குளிர்ந்த நிலையிலும், சிந்து நதி கூடுதல் வெப்பமாகவும், பிரம்மபுத்ரா ஐஸ் போன்று மிகக் குளிர்ந்த நிலையிலும், கர்னாலி நதி வெதுவெதுப்பு உடையதாகவும் இருக்கிறது. சட்லெஜ் பாயும் பகுதிகளில் தங்க நிறத்தில் மணற் பகுதியும் (Gold Sands), சிந்து நதி பாயும் பகுதிகளில் வைரத்தையொத்த மணற்பகுதியும் பிரம்மபுத்ரா பாயும் பகுதிகளில் மரகதத்தையொத்த மணல் பகுதியும், கர்னாலி நதி பாயும் இடங்களில் வெள்ளியையொத்த மணல் பகுதியும் காணப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5300 மீட்டர் உயரமுடைய மலைப்பகுதியில் உருவாகும் “ஷாங்போ” என்ற பெயருடன் பிரம்மபுத்ரா சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி திபெத் உட்பட 1,625கி.மீ. பயணம் செய்கிறது. பின்பு ஷாங்போ யார்லுங்சூ, தார்லுங்சூ என்ற உபநதிகளாகப் பிரிகிறது. பின்பு இந்தியப் பகுதியில் அருணாசலப்பிரதேசத்தின் கடைசி எல்லைப் பகுதியாக விளங்கக்கூடிய ஸெலாஸாங் (Tsela Dzong) வழியாக நுழைந்து பே (Pe) மற்றும் நம்ச பர்வா (Namcha Barwa) ஆகிய பகுதிகளில் பாய்ந்து மின்யோங் மற்றும் பாதாம் ஆதிப்பழங்குடிகள் வாழ்கின்ற கிழக்கு ஷியாங் மாவட்டம் முழுவது “ஷியாங்” என்ற பெயரில் பிரம்மபுத்ரா ஆர்ப்பரிப்புடன் பயணம் செய்கிறது.
பின்பு பாஸிகாட்டிலிருந்து இறங்குமுகமாக அஸ்ஸாம் சமவெளிப் பகுதிகளில் “லோகித்” (Lohit) மற்றும் லூட் (Luit) என்ற பெயருடன் 918 கி.மீ. பயணிக்கிறது. அஸ்ஸாமின் மேற்குப் பகுதியில் கடைசி எல்லைப் பகுதியான துப்ரி (Dhubri) நகரில் நுழைந்து பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் பிரம்மபுத்ரா என்ற பெயருடன் 337 கி.மீ. பாய்ந்து “கோ அலுந்தோ”வுக்கு அருகில் கங்கையுடன் பிரம்மபுத்ரா ஒன்றாகி பத்மா என்ற பெயருடன் சிறிது தூரம் பாய்ந்து மேக்னா என்ற பெயருடன் வங்காள விரிகுடாவில் சங்கமித்து விடுகிறது. ஆக மொத்தம் பிரம்மபுத்ரா ஆறு பயணிக்கும் தொலைவு 2,280கி.மீ பிரம்மபுத்ரா 25க்கும் மேற்பட்ட பல உப நதிகளான சபவான்சரி, டிபாங், ஜியா, பராலி, பீசாம், டிகாரி, ஹாரிடிக்ராய், கங்காநர், மஞ்சரி போன்ற நதிகளை உள்ளடக்கியதாய்ப் பாய்ந்தோடுகிறது.
பிரம்மபுத்ரா நதி தோன்றிய கதை குறித்த பலவேறு நாட்டுப்புறக் கதைகளும் நிலவி வருகிறது. குறிப்பாகத் திபெத் பகுதியில் ஷாங்போ என்ற பெயர், கிட்டத்தட்ட சமஸ்கிருதத்தில் விளங்கக்கூடிய பிரம்மபுத்ரா என்ற சொல்லுடன் நேரிடையான பொருள் கொண்டதாகக் கூறுகிறார்கள். திபெத் பகுதியில் வழங்குகிற பழமரபுக் கதைகளில் ஏழாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்து வந்த “தி - ஷ்ராங் - டென் – ஷான்” என்பவருடைய மகன் “ஷாங்போ” நதியில் மூழ்கி இறந்தான். இவன் மூழ்கிய அந்த இடத்தில் தினமும் கசையடியால் தண்ணீரைத் தண்டிக்கும்படி ஆணையிட்டானாம். கசையடி தண்டனை தொடர்ந்து நீடித்து வருகையில் சில நாள் கழித்து நதியின் ஆத்மா அரசன் முன்பு தோன்றி, ‘தங்களது மகன் மூழ்கிய அந்த இடத்தின் தண்ணீர் எப்போதோ கடந்து சென்றுவிட்டது. ஆனால், செய்யாத பாவத்திற்காகத் தற்பொழுதுவரை எங்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?’ என்று கேட்டது. ஷ்ராங் – ஷான் – ஹாம் – போ ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு அரசாண்ட மன்னன். ஏழாம் நூற்றாண்டிற்கு முன்புவரை பிரம்மா என்ற வார்த்தை திபெத்திய லாமாக்களுக்கு அறிமுகம் இல்லை. திபெத்திய லாமாக்கள் இந்திய பிராமணர்களோடு ஒத்தவர்கள். ஆகையால் இந்தியப் பழம்பெரும் நதிகளின் புராணப் பெயர்களை நேரிடையாக திபெத்தில் ஓடுகின்ற நதிகளுக்கும் வைத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது என்று மேஜர் எல்.ஏ.வாடெல் குறிப்பிடுகிறார். ஷ்ராங் –ஷான் – காம் – போ (Srong – tsan-gam-po) என்ற அரசனின் சுருக்கப் பெயரான “ஷாங்போ” என்ற திபெத் வார்த்தை பிரம்மா என்ற வார்த்தையுடன் நேரிடையான விளக்கம் தருகிறது. மேலும், “ஷாங்போ” என்றால் “தூய்மையான”, “மிகப்பிரமாண்டமான” என்ற பொருளுடையதாகிறது.
உயரமான இடத்திலிருந்து சிறிது சிறிதாக ஊற்றேடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி மிக பிரமாண்டமாக வளர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் பச்சை பசேலென வளங்களை அள்ளி கொடுத்து கடைசியில் கடலில் கலக்கக்கூடிய ஆறுகள் உலகின் வளங்களை அதிகரிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஓடிவரும் ஆற்றின் நீர் அளவை கொண்டு அவை வற்றும் ஆறுகள் மற்றும் வற்றாத ஆறுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
எல்லா ஆறுகளிலும் மழைக்காலத்தில் நீரோட்டம் அதிக அளவில் இருக்கும். கோடையில் நீரோட்டம் குறைவாக காணப்படும். சில ஆறுகள் கோடையில் முற்றிலுமாக வறண்டுவிடும். ஆறுகள் பெரும்பாலும் நல்ல சுத்தமான தண்ணீரை கொண்டது. இதனால் ஆற்றுநீர் ஏராளமான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
உலகில் உள்ள மிக நீளமான ஆறு நைல் ஆறு இது 6,650 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனுடைய நீர்வளம் பதினோரு நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இரண்டாவது நீளமான ஆறு அமேசான் ஆறு இது 6400 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. உலகில் உள்ள மொத்தமுள்ள நதி நீரில் ஐந்தில் ஒரு பங்கு தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான் நதியில் உள்ளது.
அமேசான் நதிக்கு அடியில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு நிலத்தடி நதி இருப்பதாக சொல்லப்படுகிறது. அது அமேசான் நதியின் நீளத்தை 100 மடங்குக்கும் அதிகமாக பரந்து காணப்படலாம் என சொல்லப்படுகிறது. கடலில் வந்து சேரக்கூடிய நன்னீர் 20% அமேசான் நதியில் இருந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள நீளமான ஆறு கங்கை ஆறு. இது 2525 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கங்கையாற்றில் 12 சிறிய ஆறுகள் சேர்ந்து மிகப்பெரும் கங்கை நதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
நம்முடைய தமிழகத்தில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 60 ஆறுகள் உள்ளது. இதில் மிகவும் முக்கியமான ஆறுகள் காவேரி ஆறு, பாலாறு, தாமிரபரணி ஆறு, வைகை ஆறு, பவானி ஆறு, அமராவதி ஆறு, நொய்யல் ஆறு போன்றவை.
ஏராளமான விலங்குகளுக்கு ஆறுகளே முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. விலங்குகள் மட்டுமல்லாமல் ஏராளமான மீன் வகைகள் நீரில் வாழக்கூடிய உயிரினங்கள் ஆற்றில் அதிக அளவில் காணப்படுகிறது. உலகில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகள் கடலை விட 600 மடங்கு குறைவான நீரைக் கொண்டிருந்தாலும் கடலில் இருப்பதை விட அதிக அளவிலான மீனினங்கள் ஆறு மற்றும் ஏரிகளில் தான் காணப்படுகிறது.
சுமார் 550 மில்லியன் மக்கள் நன்னீரில் வாழக்கூடிய மீன்களை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள். உலகில் தற்பொழுது வரை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான நன்னீர் உயிர்வாழ் இனங்கள் அழிந்துள்ளன. தொடர்ந்து ஆபத்தில் இருந்து வருகிறது. இதில் உலகில் உள்ள நன்னீர் மீன் இனங்களில் 37 சதவிகிதம் அழிந்துள்ளது. தொடர்ந்து ஆபத்தில் இருந்து வருகிறது.
உலக நதிகள் தினம் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு வருடமும் 60 நாடுகள் கலந்து கொள்கிறது. உலகெங்கிலும் உள்ள நதிகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நதிகள் மாசுபடுத்தப்படாமல் இருப்பதற்கும் இந்த நாளில் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் ஓடும் காங்கோ நதி முன்பு ஜைர் நதி என அழைக்கப்பட்டது. இந்த நதி உலகின் மிக ஆழமான நதி என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனுடைய ஆழமான பகுதி 220 மீட்டருக்கும் மேல் என அளவிடப்பட்டுள்ளது. அதாவது 720 அடிகள். இதனுடைய நீளம் 4700 கிலோ மீட்டர்கள்.
அமேசான் ஆற்றின் துணை ஆறான ரியோ நீக்ரோ ஆறு உலகின் மிகப் பெரிய கறுப்பு நீர் நதி என அழைக்கப்படுகிறது. இதனுடைய நீர் முற்றிலும் கருப்பு நிறமாக இருக்காது. அடர்ந்த தேநீரின் நிறத்தோடு காணப்படும். இதை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது கருப்பு நிறமாக தெரிகிறது. இது இப்படி இருண்ட கருப்பு நிறமாக வருவதற்கு காரணம் இந்த ஆற்றின் தண்ணீரில் இருக்கக்கூடிய ஹியூமிக் அமிலத்தின் காரணமாக.
உலகில் உள்ள பல முக்கியமான நகரங்கள் நதிக்கரைகளில் தான் அமைந்துள்ளது. வியட்நாமின் ஹனோயி நகரம் சிவப்பு நதியின் கரையில் இருக்கிறது. தாய்லாந்தின் பாங்காக் நகரம் சாவோப்ராயா நதிக்கரையில் அமைந்துள்ளது. ஈராக்கின் பாக்தாத் நகரம் டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரம் மற்றும் கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.
ஹாங்காங் நகரம் பேல் நதிக்கரையில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரம் மோஸ்கவா நதிக்கரையில் அமைந்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் பராதா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் கிலிவுங் நதிக்கரையில் அமைந்துள்ளது. லண்டன் நகரம் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரம் மான்ஸநாரஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. அயர்லாந்தின் டப்ளின் நகரம் லிபி நதிக்கரையில் அமைந்துள்ளது. பாரிஸ் நகரம் ஸீன் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் யாரா நதிக்கரையில் அமைந்துள்ளது.
உலகில் பல வர்ணங்களாக காணப்படக்கூடிய மிக அழகான நதிகளில் ஒன்று கானோ கிறிஸ்டெல்ஸ். இது கொலம்பியாவில் காணப்படுகிறது. இது ரிவர் ஆப் பைவ் கலர்ஸ் அதாவது ஐந்து வர்ணங்களின் நதி எனவும் லிக்யூட் ரெயின்போ அதாவது திரவ வானவில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நதி ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, சிவப்பு இப்படி பல வர்ணங்களில் காட்சியளிக்கிறது. இந்த வர்ணங்கள் ஆற்றின் அடிப்பகுதியில் வளரக்கூடிய மகரேனியா கிளாவிஜெரா எனப்படும் நீர்வாழ் தாவரத்தால் உருவாகிறது.
உலகில் ஒரு நதி கூட இல்லாமல் சவுதி அரேபியா உட்பட 18 நாடுகள் உள்ளது.
700க்கும் மேற்பட்ட நதிகளை கொண்ட நதிகளின் நிலம் என அழைக்கப்படுகிறது பங்களாதேஷ்.
உலகில் அதிக அளவு நதிகளை கொண்ட நாடு ரஷ்யா. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜெர்மனியிலுள்ள எல்பே ஆற்றின் குறுக்கே தண்ணீர் செல்லும் ஒரு பாலம் உள்ளது. இந்தப் பாலம் சரக்கு கப்பல்கள் செல்வதற்காக கட்டப்பட்டுள்ளது. இதனுடைய நீளம் ஒரு கிலோ மீட்டர் அகலம் 34 மீட்டர்கள்.
தென்கொரியாவில் உள்ள இம்ஜின் நதிக்கு ரிவர் ஆப் த டெட் அதாவது இறந்தவர்களின் நதியென பெயர் சூட்டப்பட்டுள்ளது. எதனால் இந்த பெயர் வந்துள்ளது என்றால் வட கொரியர்கள் ஏராளமான பேர் உடல்கள் இந்த ஆற்றில் மிதந்து சென்றுள்ளதாம்.
ஸ்லோவேனியாவை சேர்ந்த மார்ட்டின் ஸ்ட்ரெல் என்பவர் ஐரோப்பாவை சேர்ந்த டானூப் நதி, அமெரிக்காவை சேர்ந்த மிசிசிப்பி நதி, சீனாவை சேர்ந்த யாங்சே நதி, தென் அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நதி ஆகிய இந்த நதிகளை முழுமையாக நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஒரு ஆற்றின் புகைப்படம் 4.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ரைன் II என பெயரிடப்பட்ட இந்த மிகவும் விலையுயர்ந்த புகைப்படம் ரைன் ஆற்றில் எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டிருந்தாலும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மழை பெய்யும் பொழுது அல்லது மழை வரும் நேரங்களில் நம்முடைய ஊர்களில் இடி மின்னல் தாக்குதல் ஏற்படும். ஆனால் ஒரு நதியின் அருகில் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து மின்னல் தாக்கி வருகிறது. வெனிசுலாவில் உள்ள கட்டடம்போ ஆற்றில் ஒரு மணி நேரத்திற்கு 280 மின்னல்கள் தாக்குகிறது. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வீதம் ஆண்டுக்கு 120 நாட்கள் வரை இது தொடர்ந்து நடைபெறுகிறது. பல நூற்றாண்டுகளாக இப்படி இந்த ஆற்றின் அருகில் மின்னல் தாக்கி கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 16 லிருந்து 40 தடவை மின்னல் தாக்குகிறது.
பொதுவாக எல்லா ஆறுகளும் கடைசியில் கடலில் போய் கலக்கிறது. உலகிலுள்ள அனைத்து நதிகளிலும் கிட்டத்தட்ட பாதி அளவு அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
மிக சுத்தமாக அழகாக ஓடிக்கொண்டிருந்த ஆறுகள் தற்பொழுது ரசாயனங்கள், கழிவுநீர், வீடுகளிலிருந்து வரக்கூடிய கழிவுகள் இவைகளால் தொடர்ந்து மாசுபட்டு கொண்டே வருகிறது. இது விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் கடுமையான தீங்கு விளைவித்தாலும் தொடர்ந்து மனிதர்கள் ஆற்றை மாசுபடுத்தி கொண்டே வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 300 லிருந்து 400 மில்லியன் டன் கழிவுகள் ஆறுகளை மாசுபடுத்தி கொண்டே வருகிறது. உலகில் உள்ள ஆறுகள் ஆண்டுதோறும் சுமார் 16 பில்லியன் டன் பாறைகள் மற்றும் குப்பைகளை கடல்களுக்கு எடுத்துச்செல்கிறது.
பூமியில் ஓடக்கூடிய மிகவும் தூய்மையான நதி ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் சீனா வழியாக ஓடும் இர்டிஷ்(Irtysh) நதி என சொல்லப்படுகிறது. ஆசியாவின் தூய்மையான நதியைக்கண்டு களித்த மகிழ்ச்சி மனதில் இருக்கிறது
By
உலக நதிகள் தினம் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது என்பதும் மனதிற்கு மகிழ்ச்சி