சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 12 ஏப்ரல், 2022

வடகிழக்கு இந்தியப் பயணம் : 13 சுப்ரபாரதிமணியன் வடகிழக்கு இந்தியாப்பகுதிகளை சுற்றிப் பார்க்கிற போது பல மணிநேரங்கள் பயணம்... அதன் பின்னால் ஒரு அருவியை, ஒரு பெரிய குகையை, ஒரு பள்ளத்தாக்கினைப் பார்க்க நேரிடும். பல பேருக்கு இந்த நீண்ட பயணம்... .ஓர் இடம் என்பதெல்லாம் அலுப்பு தரக்கூடும் நான்கு மணி நேரம் பயணித்து விட்டோம் ஒரு அருவியை தூர இருந்து ரசித்து விட்டு வர வேண்டும் .அருவியில் குளிக்க வாய்ப்பு கூட இருக்காது இதற்கு ஒரு நான்கு மணி நேர பயணம் என்ற கேள்வி வரும். அருவியை பார்க்கிற அனுபவம் தாண்டி அந்த நான்கு மணிநரம் பேருந்திலோ வேறு வாகனத்திலோ பயணப்பட்டு மலைகளையும் குன்றுகளையும் பள்ளத்தாக்குகளிலும் தூரத்து காட்சிகளையும் பார்த்துக்கொண்டே செல்வது தான் ஒரு சிறந்த அனுபவம். முக்கியமான இடத்தை பார்க்கிற நல்ல அனுபவம் போலவே வாகனத்தில் செல்கிறபோது சுற்றிலும் இருக்கிற இயற்கை வளம் மிகுந்த இடங்களை பார்ப்பது கூட. இதை உணராமல் இவ்வளவு நேரம் பயணம் செய்து இதைத்தான் பார்க்க வந்திருக்கிறோம் என்று அலுத்துக் கொள்வார்கள் சிலர். பயணம் தான் முக்கியம் பயணத்தில் தென்படுகிற பெரும் மலைகளும் இயற்கை காட்சிகளும் பள்ளத்தாக்குகளும் சாலை விலங்குகளும் ,நடமாடக் கூடிய வெவ்வேறு மனிதர்களும் சிறுசிறு கிராமங்களும் முக்கியம்..கிராம சிறு உணவகங்களில் கிடைக்கும் பிரத்யேக உணவுகள் இன்னும் முக்கியம். இது சார்ந்து பயணத்தின் குழு தலைவர் கிறிஸ்டோபர் ஒரு சம்பவத்தை சொன்னார்.அவருக்கு அப்போது உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது கோவையிலிருந்து ஊட்டிக்கு எட்டு ரூபாய் கட்டணம் அவருடைய சகோதரர் அவருக்கு இருபது ரூபாய் பணம் கொடுத்து நீ ஊட்டி போயிட்டு வா என்று சொல்லி இருக்கிறார் ஊட்டியில் படகு சவாரி செய்யும் இடமும் பொட்டானிக்கல் கார்டன் மட்டுமே முக்கியமான இடங்கள் அல்ல. நீ செல்கிறபோது இருக்கிற எல்லா இடங்களும் முக்கியமானவை. அழகான மலைகள் குன்றுகள் பள்ளத்தாக்குகள் இயற்கை காட்சிகள், மரங்கள் கடந்து செல்லும் மனிதர்கள் எல்லாம் முக்கியம். இவை எல்லாம் கடந்து படகு இல்லம், கார்டன் ஒரு செல்ல வேண்டும். அவற்றை எல்லாம் விட போகும் இடங்களில் இயற்கை காட்சிகள் மிக முக்கியம் அதை பார்த்துக் கொண்டே செல் என்று சொல்லியிருக்கிறார் .ஊட்டிக்கு போகிறபோது டிக்கெட்டுக்கான பணத்தை நடத்துனரிடம் தந்திருக்கிறார் அவர் ஒரு ரூபாய் மிச்சம் தர வேண்டி இருந்திருக்கிறது நடத்துனர் அந்தப்பக்கம் வருகிற போதெல்லாம் பணம் தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவர் வருவதை போவதையே கவனித்திருக்கிறார் .அவர் பணம் தருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் அவரையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு ஊட்டி சேரிங் கிராஸ் வந்தபோது அந்த நடத்துனர் நீங்கள் இங்கு தானே இருக்கவேண்டும் இறங்குங்கள் என்று சொல்லி அந்த மீதி பணத்தை கொடுத்திருக்கிறார். மீதி பணம் கைக்கு வரும் வராதா என்ற நினைப்பிலேயே அவரையே பார்த்துக் கொண்டிருப்பது, அவர் இருக்கை அருகில் வருகிறபோது பணம் தருவார் என்று எதிர்பார்ப்பது, அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது இப்படியே கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்கிற பயண நேரத்தை அவர் கழித்திருக்கிறார் அவர் பயணத்தின் போது என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என்று அவருடைய சகோதரர் சொன்னதை தவற விட்டதால் முதல்தரம் ஊட்டிக்கு போனபோது ஊட்டியின் அழகை பயணத்தில் ரசிக்கிற வாய்ப்பை இழந்திருக்கிறார். சரி திரும்பி வருகிறபோது பார்க்கலாம் என்று எண்ணி இருக்கிறார் மதியம் நல்ல சாப்பாடு அவருக்குக் கிடைத்திருக்கிறது வயிறு முழுக்க சாப்பிட்டு இருக்கிறார். பேருந்தில் ஏறி உட்கார்ந்தால் கொஞ்ச நேரம் தூக்கம் .பிறகு அதிகமாக சாப்பிட்டதால் வளைவுகளில் பேருந்து செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் வாந்தி எடுக்க வேண்டியிருக்கிறது வாந்தி எடுத்த பின்னால் மனநிலையும் உடல் நிலையும் மாறி இருக்கிறது ஆகவே உடல் சோர்வில் கண்களை மூடிக்கொண்டு கிடக்க வேண்டியது இருக்கிறது. அதனால் ஊட்டியிலிருந்து திரும்புகிற போது அவர் சகோதரர் சொன்னமாதிரி இயற்கை காட்சிகளை ரசிக்க முடியவில்லை. போகும் போதும், சரி வரும் போதும் சரி இந்த அனுபவம்தான் . அதனால் ஓர் இடத்திற்குப் போகும் போது அந்த இடம் இரண்டாம்பட்சம்தான் போகிற வழியில் இருக்கிற இயற்கை காட்சிகளும் மற்றவையும் தான் முக்கியம் என்பதை கிறிஸ்டோபர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். பல மணி நேரம் பயணம் செய்து ஒரு இடத்தை அடைந்து அங்கு ஒரு பத்து நிமிடங்கள், அல்லது அரை மணி நேரம் கழிப்பது என்பது பலருக்கு முகம் சுளிக்கும் விசயமாக தான் இருந்திருக்கிறது. ஆனால்வேடிக்கை பார்ப்பதை சென்னை நண்பர்கள் கண்ணய்யா, செந்தமிழ்தாசன் ஆகியோரும் அனுபவித்தனர் .சில சிரமங்கள் இருக்கும். ஆட்டு வாலை வெட்டி விட்டு கன்றுக்குட்டியென விற்கிறத்திறமை இது போன்ற பயண ஏற்பாட்டாளர்களிடம் எப்போதும் உண்டு என்பார் கோவை முத்துசாமி. . எங்கே போனாலும் இந்த சாலை, விரிவாக்கம் செய்வதைக் காண முடிகிறது. பஞ்சாப் போனாலும் இதே கதிதான் என்பார் மூர்த்தி. உடல் உபாதைகள் இருந்தாலும் தாங்கிக்கொள்ள பழகுவதும் பொறுமையும் பயணங்களில் சாதாரணம். வலது கடவாய்பல்லொன்று ஆடிக்கொண்டேயிருந்தது. வலுக்கட்டாயமாக்கி விழுந்து விடச்செய்ய வேண்டும் என்று பேருந்துப் பயணங்கள் போது முயன்றேன். முடியவில்லை. கோவா திரைப்பட விழாவுக்குச் சென்ற போது இடது கடவாய்ப்பல்லொன்று இப்படித்தான் சிரமம் தந்தது. சேரே பஞ்சாபி ஓட்டல் ஒன்றில் உலக சினிமா பாஸ்கரனுடன் உட்காந்து மட்டன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது , கடக் என்று வினோத சப்தம். மட்டன் எலும்பு கடிபடுகிற சத்தமா என்றிருந்தது. கடவாய் பல்தான் கழன்று விட்டது. ஆகா எவ்வளவு பாக்யம் என்றிருந்தது. அதேபோல் இந்த ஷில்லாங் பயணத்தில் வலது கடவாய்ப் பல்லுக்கு நேர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன் . மதமாற்றம் அதிகமாக ஒரு காலத்தில் இங்கு இருந்திருக்கிறது. ஞாயிறில் மக்கள் சாரைசாரையாக தேவாலயத்திற்குச் செல்வதைப் பார்க்க முடிந்தது.இந்து கோவில்கள் கண்ணில்படவில்லை.பல பயணங்களில் கூட இருக்கும் பி எஸ் என் எல் மூர்த்தி ஷில்லாங்கின் எட்டு டிகிரி குளிரிலும் வெறும் காலோடு அறையில் உலாவுவார்.பனி படர்ந்த நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்வார். கழுத்தில் மாட்டியிருந்த ருத்ராட்சி தீட்சைபெற்றதால் கட்டியதல்ல. பிடித்திருந்தது. கட்டிக்கொண்டேன் என்றார். கோவில் போவது , சடங்குகளில் அதிக விருப்பம் இல்லை என்றார் பல சமயங்களில் இது போன்ற பயணங்கள் தனியாக அமைந்து விட்டால் தமிழில் பேச மாட்டோமா , தமிழைக்கேட்க மாட்டோமா என்றிருக்கும். நெல்லூரில் வசிக்கும் கிறிஸ்டோபர் பேரன் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தான் மழலை மொழியில். “ இங்க தமிழ் பேச ஆளில்லெ “ என்று அவரிடம் எப்போதும் தொலைபேசியில் சொல்வானாம். பயணம் என்பதில் சக மனிதர்களை சந்தித்தலும், இயற்கையை உள்வாங்கி கொள்வதும் தான் முக்கியமான அம்சங்களாக இருக்கிறது என்பதை வடகிழக்கு இந்திய பயணத்தில் வாகனங்களில் செல்லும்போது கண்டுணர்ந்த காட்சிகள் திரும்பத் திரும்ப என் மனதுள் என்னுள் வந்து கொண்டிருந்தன அது மகத்தான அனுபவம். 000 30/3/22 வடகிழக்கு இந்தியப் பயணம் :15 சுப்ரபாரதிமணியன் சென்றாண்டில் இலக்கியத்திற்கான ஞானபீடம் பரிசு, சிறந்தத் திரைப் படத்திற்கான தேசிய விருது ( ரொனுவா- சரணடையாதவன் )ஆகியவை அஸ்ஸாம் மொழிக்குக் கிடைத்துள்ளன. என் ” திரை வெளி “ திரைப்படக்கட்டுரைகள் நூலில் ( முதல் பதிப்பு அமிர்தா பதிப்பகம், இரண்டாம் பதிப்பு நிவேதிதா பதிப்பகம் 2022) எனக்குப் பிடித்த அஸ்ஸாம் திரைப்படங்கள் பற்றியக்கட்டுரைகள் உள்ளன அசாமியத் திரைப்படத்துறை அல்லது ஜாலிவுட் என்பது இந்தியாவில் அசாம் மாநிலத்தில் அசாமிய மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். அசாமியத் திரைப்படம் 1935 ஆம் ஆண்டில் ஜோதி பிரசாத் அகர்வாலா என்பவர் இயக்கிய ஜயமதி என்ற திரைப்படம் ஆகும். அதை தொடர்ந்து ஜானு பருவா மற்றும் பபேந்திர நாத் சய்கியா இயக்கிய திரைப்படங்கள் மூலம் அசாமியத் திரைப்படத்துறை மெதுவாக வளர்சியடைந்தது ஜாலிவுட்[ என்று பெயர் அகர்வாலாவின் ஜோதி சித்ராபன் பிலிம் நிறுவனத்தால் வழங்கப்பட்டது 0 அஸ்ஸாம் மொழியில் தயாரித்து வெளியிடப்பட்ட “வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ்” (Village Rockstars) திரைப்படம் சிறந்த படமாக மனதில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கோவா திரைப்பட விழாவில் பார்த்தது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 10 வயது துனு தனது சொந்த ராக் இசைக்குழுவை அமைக்க வேண்டும் என்று கனவு காண்கிறாள். பெண்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் கிராமம். கிராமஉலகில் துடிப்பான எண்ணங்கள் , கற்பனை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை தனித்து நிற்கின்றன. அவரது நண்பர்கள். , சிறு பையன்கள் மற்றும் விதவை தாயின் ஆதரவுடன், துனு தனது அன்றாட வாழ்க்கையின் போராட்டங்களை எதிர்கொள்கிறார், மேலும் அவர் இறுதியாக ஒரு உண்மையான கிதாரினை வாங்க முடியும் அதில் வாசித்து விளையாட முடியும் என்று நம்புகிறார் அப்படியே நிகழ்கிறது. கிராமியச் சூழல் , வறுமை சார்ந்த சித்திரங்கள் வெளிப்படுத்தப்பட்ட விதம் அற்புதம் .கிராமத்தை நிலைகுலையச் செய்து போகிற வெள்ளச் சூழல்களிலிருந்து அவர்கள் மீள்வது இன்னும் சிறப்பு பிரம்மபுதிராவின் சீற்றமும் அழகும் சிறப்பாகக் காட்டப்பட்டடுள்ளன பரூவா அல்லது போரா என்ற பெயர்கள் இலக்கிய உலகிலும் திரைப்பட உலகிலும் அடிக்கடி தென்படும் பெயர்களாகும் அப்படித்தான் பருவாக்கள் அஸ்ஸாம் திரைப்படங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் அப்படித்தான் ஹிரன் போரா என்ற பெயர் பசுந்தரா படத்தின் மூலம் என் மனதில் அப்பிக்கொண்டதுஅது தேசிய விருது பெற்றப் படமும் கூட காடுகளில் இருக்கிற யானைகள் கிராமப் பகுதிகளுக்கு வந்து அங்குள்ள மக்களுக்கு சிரமங்கள் தருகிறது .வசுந்தரா என்ற ஒரு இளம் தன்னார்வ குழு பெண் அந்த கிராம மக்களின் மனதைப் புரிந்துகொள்வதற்கும் யானைகளை பாதுகாக்கவும் அந்த ஊருக்கு வருகிறார் ஆனால் அவரின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் கிராமத்தில் அவரை சிறைபடுத்துகின்றனர் .அலட்சியப் படுத்துகின்றனர். அர்ஜுன் என்ற உள்ளூர் பத்திரிக்கை செய்தி சேகரிப்பாளர் அவருக்கு அறிமுகமாகிறான் காற்றிலிருந்து யானைத் தந்தங்களும் மூங்கிலும் கடத்தப்படுவதற்கு அந்த கிராமம் எப்படி ஏதுவாக இருக்கிறது என்பதை அவர் சொல்கிறார். அதை தவிர கல்லுடைக்கும் பெரிய முதலாளிகள் அந்த பகுதியை ஆக்கிரமித்து இருப்பது தெரியவருகிறது. கிராம அதிகாரிகளும் காட்டிலாகா அதிகாரிகளும் லஞ்சத்தில் அக்கறை கொண்ட ஊழியராக இருக்கிறார்கள். எல்லாம் வசுந்தராவுக்கு கவனத்தில் கொண்டு வரப்படுகிறது அந்த மக்களின் நம்பிக்கையை பெற பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளார் வசுந்தரா. இந்த சமயத்தில் அர்ஜுன் அந்த பகுதியில் உள்ள பிரச்சனைகளை பற்றி பத்திரிகையில் எழுதி போக மர்மமான முறையில் இறந்து போகிறார். வசுந்தராவும் அவரின் குழுவினரும் மிரட்டப்படுகிறார்கள் வசுந்தரா அங்கிருந்து வெளியேறி விடுவது என்று முடிவு செய்கிறாள். ஆனால் தற்செயலாக காட்டிலாகா அதிகாரி மாற்றப்படுவதும், நேர்மையான அதிகாரி வருவதும் அந்த சூழல் மாறுவதும் அவருக்கு நம்பிக்கைத் தருகிறது இந்தப் படம் என் மனதில் ரொம்ப நாளாக இருந்து கொண்டிருந்தது அசாம் மற்றும் வடகிழக்கு இந்திய திரைப்பட உலகம் பற்றி நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது இங்கு படங்கள் எடுப்பதற்கு முதலீடு செய்வதை விட வில் அம்பு போட்டி நடத்த முதலீடு செய்வது நல்லது என்றார் பத்திரிக்கையில் லாட்டரி சீட்டு குழுக்கள் பற்றிய செய்திகள் ஒரு புறம் இன்னொரு புறம் டிர் ரிசல்ட் என்று ஏகப்பட்ட செய்திகள். இதற்கு பலர் முதலீடு செய்கிறார்கள். பல சாதாரண மக்கள் இந்த விளையாட்டில் பணம் கட்டுகிறார்கள் லாட்டரி சீட்டு போன்றதுதான் இது. ஒரு சூதாட்டம் தான். ஒரே சமயத்தில் 50 வில் வித்தையாளர்கள் ஐந்து நிமிடத்தில் அம்பு விடுகிறார்கள். இரண்டு நிமிடங்களில் இதெல்லாம் நடந்து விடவேண்டும் இந்த விளையாட்டுக்கு என்று ஷில்லாங்கில் போலோ கிரவுண்டு முக்கியமாக இருக்கிறது. இந்த டிக்கட்டுகளை விறக 55 ஆயிரம் டிக்கெட் கவுண்டர்கள் மெகாலய 11 மாவட்டங்களில் இருக்கின்றன தினசரி காலை 10 மணியிலிருந்து இவற்றில் மக்கள் சூழ்ந்து காணப்படுகின்றனர். பாரம்பரிய விளையாட்டுகளோடு இந்த அம்பு வில் வித்தையும் கலந்திருக்கின்றன.அதன் மேல் நம்பிக்கை கொண்டு பணத்தைக் கட்டுகிறார்கள் எப்படி பணம் கட்ட போகிறோம். அப்படி ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் என்ன இருக்கிறது என்பது வாஸ்து முறை , எண் கணித முறை போல யார் மேல் கட்டுவது என்று சிலதை நம்பும் சூழ்நில உண்டு இதில் ஈடுபடும் வில்வித்தை வீரர்களுக்கு தினசரி 300 ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது. 50 மீட்டருக்கு அப்பால் இருந்து கொண்டு இந்த வீரர்கள் வில்லை எரிகிறார்கள் உடனே அந்த முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன டிக்கெட் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை உள்ளன .அதில் வெற்றி பெறுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது ஒரே சமயத்தில் 10 ஆயிரம் பேர் கூடுகிற போரட்டக் களமாக இருக்கிறது. இப்படி சூதாட்டத்தில் பணத்தை போட்டால் கூட முதலீடு செய்த பணத்தை எடுத்து விடலாம் ஆனால் அசாம் மற்றும் வடகிழக்கு இந்திய பகுதியில் திரைப்படங்கள் எடுப்பது என்பது பெருத்த நஷ்டத்தை உண்டு செய்யும் என்று திரைப்பட முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். ஆனாலும்குறைந்த முதலீட்டில் நல்ல படங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன என்பது ஆறுதல்தான் . 000