சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 12 ஏப்ரல், 2022
வடகிழக்கு இந்திய பயணம்
சுப்ரபாரதிமணியன்
அத்யாயம் மூன்று
ஒற்றைக்கொம்பன் காண்டா மிருகத்தைப்பார்
அஸ்ஸாம் செல்வதாகச் சொன்னபோது பறவை,விலங்கியல் சார்ந்த விசயங்களில் அக்கறை கொண்ட நண்பர் சின்னராஜ் அவர்கள் அஸ்ஸாமில் ஒற்றைக்கொம்பன் காண்டா மிருகத்தைப்பார்க்கச் சொன்னார். அப்புறம் பிரம்மபுத்திரா நதியையும் பாருங்கள் என்றார்.
அஸ்ஸாம்- கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில்.
நான் கொஞ்சம் எழுத்தாளர்களைச் சந்திக்க ஆசை. ஆனால் சுற்றுலாவில் பெரியக் குழுவில் இருப்பதால் தனிப்பட்ட ஆசைகள் , சந்திப்புகள் சாத்தியமா என்று தெரியவில்லை என்றேன்
இவ்வாண்டின் ஞானபீடம் பரிசு, தேசிய விருதுத்திரைப்படம் ஆகியவை அஸ்ஸாம் சார்ந்தவர்கள் பெற்றிருந்தார்கள் என்பது கவுகாத்தி விமானநிலையத்தில் இறங்கியபோது மனதில் வந்தது. முகப்பில் தென்பட்ட அழகான ஓவியங்கள், சிற்பங்கள் கவனத்திற்குரியதாக இருந்தன.உக்ரேனில் இருந்து வரும் இந்திய மாணவர்களை வரவேற்று விமான நிலையத்தில் வரவேற்புப் பதாகைகள் இருந்தன.
முதலில் ஒற்றைக்கொம்பன் காண்டா
அப்புறம் உக்ரேனுக்குப் போகலாம்.
இந்திய மூக்குக்கொம்பன், இந்திய காண்டாமிருகம், அல்லது ஒற்றைக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன. அவற்றில் செம்பாதிக்கும் மேலான 1,800 விலங்குகள் அசாம் மாநிலத்தில் வாழ்கின்றன. நேப்பாளத்தின் சித்வன் தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்வதாக 2008ல் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விலங்கு அசாமின் மாநிலவிலங்காகும்.
ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த மூக்குக்கொம்பன் இனம் இந்திய மூக்குக்கொம்பன் ஆகும்.
மூதாதைய மூக்குக்கொம்ன் முன் இயோசீன் காலத்தில் ஒற்றைப்படைக் குளம்பிகளிடம் இருந்து பிரிந்து படிவளர்ச்சி அடைந்தது. இழைமணிகளின் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடியின் மரபியல் கணக்குப்படி தற்கால காண்டாமிருகத்தின் மூதாதையர்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் குதிரைக் குடும்பத்தில் இருந்து பிரிந்துவந்துள்ளன என்று அறியப்பட்டுள்ளது. உலகில் தற்போதுள்ள காண்டாமிருகங்களின் குடும்பம் முதன்முதலில் யூரேசியாவில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகவும், மேலும் மூதாதைய காண்டாமிருகம் மயோசீன் காலத்தில் ஆசிய கண்டத்திலிருந்து அற்றுப்போய் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இந்திய மூக்குக்கொம்பனின் தொல்லியல் எச்சங்கள் நடு பிலிசுடோசின் காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பிலிசுடோசின் காலத்தில் காண்டமிருகப் பேரினம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவ்விலங்கின் தொல்லியல் எச்சம் இலங்கைத் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் நாட்டின் திருநெல்வேலியை அடுத்த சாத்தான்குளத்தில் காண்டமிருகத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கோலோசின் காலத்தில் இம் மூக்குகொம்பன்கள் தற்போதய இந்தியாவின் மேற்கு பகுதியான குசராத்திலும், பாக்கிசுத்தானிலும் 3200 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
முகலாயப் பேரரசரான அக்பரின் குறிப்புகளின்படி காண்டாமிருகங்கள் இன்றைய உத்திரப் பிரதேசத்தின் சாம்பல்பூரில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. மற்றொரு முகலாய மன்னரான சகாங்கீரின் குறிப்புகளின்படி இவ்விலங்குகள் உத்திரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
இந்தியா மற்றும் பாக்கிசுத்தான் பகுதிகளில் மூக்குக்கொம்பன்கள் வாழ்ந்ததற்கான தொல் எச்ச ஆதாரங்கள் கிடைத்த இடங்களையும் அதன் காலத்தையும் விளக்கும் சட்டம்:
மேற்கு உலகிற்கு முதன்முதலில் அறிமுகமாகிய காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். போர்த்துகிய முதலாம் மானுவேல் பத்தாம் போப் லீயோவுக்காக ஒரு காண்டாமிருகத்தை கப்பலில் அனுப்பி வைத்தான், ஆனால் எதிர்பாராவிதமாக அக்கப்பல் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. அக்கப்பலில் இருந்த ஒரு ஓவியர் காண்டமிருகத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தார். அப்படத்தை அடிப்படையாக வைத்து ஆல்பிரெஃக்ட் டியுரே காண்டாமிருகத்தின் மர அச்சு ஒன்றை செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ் விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்தாகும்.
தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும். தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். இவ்விலங்கு நீர் குட்டைகளில் இருப்பதால் உடலில் பெரும்பாலான பகுதி சேற்றுப்பூச்சைக்கொண்டிருக்கும்.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும். ஆண் கொம்பன்களுக்கு கழுத்தின் அருகில் தோலினால் ஆன மடிப்புகள் தோன்றும்.
நன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. கொம்பு ஆணிலும் பெண்ணிலும் காணப்படினும் பிறந்த குட்டிகளில் காணப்படுவதில்லை. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் அல்லது கொம்புறை அல்லது நகமஞ்சளம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். இதன் கொம்புகள் மனிதரின் நகங்களைப் போன்ற பொருளால் ஆனது. கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.. அதிகபட்சமாக சில விலங்குகளில் 57.2 செ.மீ கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கொம்புகள் கறுப்பு நிறத்தை கொண்டவையாகும். உயிரினக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு காட்டில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இணையாக கொம்புகள் வளருவதில்லை..
இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள்.
அட்டை, தொள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும்.
இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும்.
இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும். ( வி பீடியா )
கடிக்கும் கொம்பனை விட்டு விட்டு இலக்கியம் பக்கம் போகலாமே
இவ்வாண்டு அசாமிய கவிஞர் நில்மணி பூகன் ஜூனியர் 56வது ஞானபீட வென்றார்.
நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீடமானது "இலக்கியத்திற்கான அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக" எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
"
90 வயதான பூகன், சாகித்ய அகாடமி மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர். கவுகாத்தியைச் சேர்ந்த அவர் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சூரிய ஹேனு நமி அஹே எய் நொடியேடி , குலாபி ஜமுர் லக்னா மற்றும் கோபிதா ஆகியவற்றை எழுதியுள்ளார் .
ஆனால் உரைநடை எழுதுவார். அவர் அஸ்ஸாமின் முன்னோடி கலை விமர்சகர்களில் ஒருவராக இருந்தார், மேலும் நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புற கலைகளில்
பணியாற்றினார்.
பூகன் ஞானபீடத்தைப் பெற்ற மூன்றாவது அஸ்ஸாமி எழுத்தாளர் ஆவார். இதற்கு முன் 1979 இல் பிரேந்திர குமார் பட்டாச்சார்யா மற்றும் 2000 இல் மாமோனி ரைசோம் கோஸ்வாமி ஆகியோர் விருது பெற்றவர்கள்.
contd
வடகிழக்கு இந்திய பயணம்
சுப்ரபாரதிமணியன்
அத்யாயம் நான்கு
தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது அது கவுகாத்தியில் காமக்யா கோவில். எங்கள் சுற்றுலாக்குழுவில் இருந்த ஒரு மூத்தப் பெண்மணி சக்திஅம்மனின் ஒவ்வொரு உடல் பாகங்களும் ஒவ்வொரு ஊரில் வீசப்பட்டதாயும் அதில் அவரின் உதடு இங்கு வந்து வீழ்ந்து இந்தக்கோயில் உருவாகியிருப்பதாயும் சொன்னார்.
இன்னொரு சாமியாரிடம் கேட்டபோது அவர் போதை போல் இருந்த கணத்தில் அது உதடல்ல, உதடல்ல.. உதடு போல் இருந்த இன்னொரு உறுப்பு யூகியுங்கள் என்றார்.
நான் பதில் தெரியாத நான்காம் வகுப்பு மாணவனைப் போல் திருதிருவென் விழிக்க உதடு போல் இருக்கும் பெண்ணின் யோனி என்றார்.
கவுகாத்தியில் காமக்யா கோவில் பிரசித்தி பெற்றது. பல சுற்றாய் பாதைகளைக்கடந்து போனால் கொரானா தடுப்பூசி போட்டதற்கு அத்தாட்சி காட்டி கோயில் நிர்வாகத்திடம் அனுமதி சீட்டு பெற்றுதான் செல்ல வேண்டும் என்றக் கட்டாயம் அந்த ஈஸ்வரனைச் சந்திக்கவிடாமல் செய்யும் சிரமங்கள் என்று குழுவில் இருந்த பல பெண்களின் கண்களில் கண்ணீர் சுரந்தது. ஐந்து மணி நேர வரிசை அல்லது 500 ரூபாய் பணச்சீட்டுடன் 1 மணி நேர வரிசை என்று இரண்டு வகை இருந்தது.சுழன்று சுழன்று போய் பாதாளத்தில் நீர்க்கசிவில் இருந்த ஈஸ்வரனைச் சந்தித்து கண்கள் கசிந்தவர்கள் பலர்...இவ்வளவு கஷ்டப்படுத்துகிற கடவுளைப் பார்க்கணுமா என்று நான் லேசாகக் கிண்டல் அடித்ததில் பலர் கவுகாத்தியின் கொடும் வெயிலில் முகத்தைக் கருக்கிக் கொண்டவர்கள் போல் முகத்தைக் காட்டினர்
காமாக்கியா கோவில் . இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன.
அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.
காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் சிலை இல்லை. இங்கே ஒரு யோனி வடிவத்தில் உருவான ஒரு தட்டையான பாறை மட்டுமே வணங்கப்படுகிறது, அதனால்தான் காமக்கியா தேவியும் இரத்தப்போக்கு தேவி என்று போற்றப்படுகிறார். இந்த கோவிலில் சென்று வழி பட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்வார்கள் , குழந்தை பாக்கியம் கிடைக்கும் , நிண்ட நாள் வயதுக்கு வராதா பிள்ளைகள் பூபு அடைவாரகள்....[6]
இங்கு பாண்டவர்கள் தேவியை வழிபட்டதாக மஹாபாரதத்தின் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வம் கூறுகிறது. மகாபாரதத்தின் விராட பர்வம் (6) மற்றும் பீஷ்ம பர்வம் (23) ஆகியவற்றில் காமாக்யாவை அர்ஜுனனும் யுதிஷ்ட்ரரும் பிரார்த்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தந்திர சூடாமணி போன்ற பல தந்திர நூல்களும் இக்கோவிலை சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாகச் சொல்கின்றன. மேலும் காளிகா புராணம் கூறும் மிக முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.
இக்கோவில் பற்றிய தகவல்கள் வேத வியாசரின் தேவி பாகவத புராணத்திலும் உள்ளது.
அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரம் தேவிக்கு 18 மகா சக்தி பீடங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அதிலும் காமாக்யா கோவில் இடம் பெறுகிறது.
அஸ்ஸாம்- கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில்
அஸ்ஸாம் பற்றி சில செய்திகள்.
தற்கால வடகிழக்கு இந்தியவை ஆண்ட அகோம் பேரரசு மற்றும் மணிப்பூர் இராச்சியங்களை, 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பர்மியர்கள் கைப்பற்றினர். பின்னர் 1824 – 1826ல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள் பர்மியர்களை வென்று, வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரித்தானிய இந்தியாவில் இணைத்தனர். வடகிழக்கு இந்தியப் பகுதிகள் 1826 முதல் 1905 முடிய வங்காள மாகாணத்திலும், 1905ல் வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905 முதல் 1912 முடிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்திலும் இருந்தது. பின்னர் 1912 முதல் புதிய அசாம் மாகாண நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கு இந்தியப் பிரதேசங்கள் வந்தன.[1]
1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவான இந்திய ஒன்றியத்தின் அசாம் மாகாணத்தில், மணிப்பூர் இராச்சியம் மற்றும் திரிபுரா இராச்சியம் போன்ற சுதேச சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டது.
அசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது.[2] மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது.
தனி நாடாக இருந்த சிக்கிம் பாதுகாப்பு காரணங்களால் 1975ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. 2002ல் வடகிழக்கு குழுவில் சிக்கிம் எட்டாவது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.[3]
பிரித்தானிய இந்திய அரசில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. பின் சில்லாங் நகரம் 1972ல் மேகாலயா மாநிலத்தின் தலைநகரானாது.[4] அசாம் மாநிலத்தின் தலைநகராக குவகாத்தி நகர்புறத்தில் அமைந்த திஸ்பூர் தலைநகரானது. ( w p )
இது பழைய கதைதான்.பழைய சரித்திரம்தான்
இன்றைய சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை அங்கு பல முறை பயணம் செய்தவரும் கல்கத்தாவில் 25 ஆண்டுகள் வாழ்ந்தவருமான பத்திரிக்கையாளரின் வி பா கணேசன் அவர்களின் வார்த்தைகளில் அப்படியே கீழே தந்திருக்கிறேன்:
வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றின் 98 சதவீத எல்லைகள் சீனா, பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), பூட்டான் ஆகிய அண்டைநாடுகளைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலுமுள்ள நீர்மின் உற்பத்திக்கான திறன் 145 ஜிகாவாட்ஸ் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் 45% (57.6 ஜிகாவாட்ஸ்) வடகிழக்கில் உள்ளது. அதிலும் 46.9 ஜிகாவாட்ஸ் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் (காரணம், பிரம்மபுத்ரா). இருந்தபோதிலும் இயற்கை அழகும் வளமும் நிறைந்த இப்பகுதி இன்றளவும் இந்தியாவின் ‘சவலைப் பிள்ளை’யாகவே இருக்கிறது.
முதல் பர்மா போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு 1826-ல் அசாம் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது. அப்போது அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகியவை நிர்வாகப் பிரிவுகளாக இருந்தன. மணிப்பூர், திரிபுரா மன்னராட்சியின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் ‘திறை’ செலுத்திவந்தன. இவற்றின் அரச வம்சத்தினரும் பழங்குடிப் பிரிவினரே. அசாமின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டுமே பிரிட்டிஷ் நிர்வாகம் இருந்தது.
எளிதில் அணுக முடியாத மலைப் பகுதிகளில் பழங்குடிகள் தங்கள் இனக்குழுத் தலைவர்களின் பாரம்பரிய முறையிலான நிர்வாகத்தின்கீழ் வாழ்ந்தனர். அசாம் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலை ஆங்கிலேயர் அறிமுகம் செய்தபோது, பழங்குடிகள் கூலி வேலைகளில் ஈடுபட மறுத்தனர். அவர்களுக்குப் பதிலாக, பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நலிவடைந்த மக்களையும் அன்றைய வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயத் தொழிலாளர்களையும் இப்பகுதியில் தொழிலாளர்களாக ஆங்கிலேயர் குடியேற்றினார்கள். மேலும் அன்றைய சூழலில் ‘அதிகம் படித்த’வர்களான வங்காளிகளை நிர்வாக ஊழியர்களாக நியமித்தனர்.
19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 1947 வரை (இந்து-முஸ்லிம்) வங்காளிகளின் குடியேற்றம் இப்பகுதியில், குறிப்பாக அசாம், திரிபுராவில், தொடர்ந்து நிகழ்ந்தன. கல்வி, மருத்துவம், அரசு நிர்வாகம், நீதித் துறை எனச் சமூகத்தின் முக்கியப் பொறுப்புகளை அவர்கள் வகித்தனர். மறுபுறம் கிறித்துவ பாதிரிமார்கள் எட்டாத மலைப் பகுதிகளுக்குச் சென்று பழங்குடிகள் மத்தியில் கல்வி போதித்தனர். இதனால் இதர இனத்தவரின் (குறிப்பாக அஹோம், வங்காளி) ஆதிக்கத்தை எதிர்க்கும் கருத்துகள் உருவாகத் தொடங்கின. இதற்கு உரமூட்டும் வகையில் முதல், இரண்டாம் உலகப் போர்களில் பாரம்பரியமாகவே சண்டைக் கலையில் தேர்ச்சி பெற்ற நாகா, மிசோ இனத்தவர் பெருமளவில் பிரிட்டிஷ் படைகளில் இணைந்தனர்.
இந்தியா விடுதலை பெறவிருந்த நேரத்தில் பழங்குடி இனத்தவர், குறிப்பாக நாகா, மிசோ இனத்தவர் தங்கள் தனித்தன்மை கருதி இந்தியாவுடன் இணைய மறுத்தனர். பொதுவாகவே மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள், இனவாரியாக, அதற்குள் அடங்கியிருந்த குழுவாரியாக, தங்களுக்குள் சண்டையிடுவதும், தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பதும் அடிமைப்படுத்துவதும் தொடர்கிறது. இதில் தனிநாடு கோரும் நாகா, மிசோ இனத்தவருக்குப் போட்டியாக, போடோ, குக்கி, சக்மா போன்ற இனங்களும் களத்தில் இறங்கின. மறுபுறம் மணிப்பூர், திரிபுரா அரச வம்சத்தினர் தங்கள் இனக்குழுக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்தில் இந்தியாவுடன் இணைந்துகொண்டனர்.
விடுதலைக்குப் பின்னர் இந்தப் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய வடிவில் நீடித்ததைத் தொடர்ந்தே பல்வேறு கட்டங்களில் அசாம் பகுதியானது அசாம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் என ஐந்து மாநிலங்களாயின. இவற்றோடு மணிப்பூர், திரிபுரா இணைந்து ஏழு சகோதரிகளாக இப்பகுதி உருமாறியது. பின்னர் 1980-களில் வடகிழக்கு வளர்ச்சிக்கான கவுன்சில் உருவானபோது சிக்கிம் மாநிலமும் (புவி அமைப்பில் நேரடித் தொடர்பில்லாமல் இருந்தபோதிலும்) நிர்வாக வசதிக்காகச் சேர்க்கப்பட்டு ‘அஷ்டலட்சுமி’யாக உருமாற்றம் பெற்றது.
இன்றுவரை இங்கு நீடிக்கும் இன மோதல்கள், அதனோடு தொடர்புடைய ஆயுதப் போராட்டங்கள், புதிதுபுதிதாக உருவாகும் ஒப்பந்தங்கள் இந்தியாவின் இதர பகுதிகளைச் செய்திகளாக மட்டுமே வந்தடைகின்றன. இன்றளவும் மத்திய அரசின் கையை எதிர்பார்க்கும் ‘சவலைப் பிள்ளை’களாக நீடிக்கும் இப்பகுதிக்கு இந்திய அரசு அளித்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டதன் விளைவாகவே, மக்களின் தேவைகள் நிறைவேறாத நிலையில், பயங்கரவாதக் குழுக்களின் களமாக, AFSPA என்ற கருப்புச் சட்டம் (விதிவிலக்காக திரிபுராவைத் தவிர) நடைமுறையில் உள்ள பகுதியாக நீடிக்கிறது என்கிறார் வீ பா கணேசன். அவர் விரிவாய் எப்போதாவது எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் ,.
over