சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

வடகிழக்கு இந்திய பயணமும் .. சுப்ரபாரதிமணியன் For my part I travel not to Go anywhere, But to go I travel for Travels sake The great affair Is to move - Robert Louis Stevenson ( 115 issue Feb 2022 ) ( Read during Chennai to Calcutta Indigo flight Indigo magazine ) வடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைகளும் ----1----சுப்ரபாரதிமணியன் “பூமியின் பாடல்கள்” என்ற தலைப்பில் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் கதைகளை நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் மொழிபெயர்ப்பு செய்திருந்தேன் அந்த பதினைந்து கதைகளைக் கொண்ட தொகுப்பை சாகித்திய அகாதமி வெளியிட்டிருந்தது ஏழு சகோதரி மாநிலங்கள் அல்லது வடகிழக்கு இந்தியா என்பது இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 8 சிறிய மாநிலங்களைக் குறிக்கும் அருணாச்சல பிரதேசம் அசாம் நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் மேகாலயா சிக்கிம் மற்றும் திரிபுரா இவையாகும் .பண்பாடு சமூக மற்றும் அரசியல் தளங்களில் இந்த பழம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது . என் பூமியின் பாடல்கள் தொகுப்பு வந்தபின் அப்போது மேகாலயாவில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஆளுநராக் இருந்ததால் அவரை கொண்டு அங்கு அந்த நூலை வெளியிடலாம் என்று சில நண்பர்கள் முயற்சி செய்தார்கள். அந்த மாநில ஆளுநர் தமிழகத்திற்கு வந்தபோது திருப்பூருக்கு வந்திருந்தார் அப்போது அந்த நூலை அவரை கொண்டு அறிமுகம் செய்ய வெளியிட நண்பர்கள் முயற்சி எடுத்துக் கொண்டனர் .ஆனால் அரசியல் சார்ந்த கருத்துக்களின் காரணமாகவும் நான் இடதுசாரி அரசியல் சார்ந்த எழுத்தாளர் என்ற முறையிலும் அங்கு ஏற்பட்ட பிணக்குகள் அந்த விழா ஏற்பாடு செய்ய முடியாமல் போய்வட்டது சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் அரசியல்வாதிகளும் புறாவும் என்ற மொழிபெயர்ப்பு கவிதைகள் நூலை கனவு பதிப்பகத்தில் வெளியிட்டு இருந்தேன் அதில் மணிப்பூரை சேர்ந்த ரகு லைசாங்கதம் மற்றும் தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி) போன்றோரின் கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்தி ருந்தேன் இதில் ரகு லைசாங்கதம் என்பவரை டெல்லியிலிருந்து சாகித்ய அகாதமி நிகழ்ச்சியிலிருந்துத் திரும்புகிற போது ரயில் பயணத்தில் சந்தித்தேன் அவர் தந்த ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூலில் இருந்து அவரின் கவிதையை மொழிபெயர்த்து தொடர்வண்டி பயணத்திலேயே அவரிடம் கொடுத்தேன் மகிழ்ச்சியடைந்தார். ஒருமுறை வடகிழக்கு இந்திய எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றிற்கு சாகித்ய அகாதமி அழைத்திருந்தார்கள் ஆனால் அந்த சமயத்தில் அசாமில் வெள்ளம் மற்றும் மேகாலயா போன்ற பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. என்னால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்ட வேறு தேதிகளில் ஒரு முக்கியமான குடும்ப காரியம் காரணமாக செல்ல முடியவில்லை அதனால் மேகாலயா குறிப்பாகச் சில்லாங் செல்வது என்பது என்னுடைய நீண்ட நாள் திட்டத்தில் ஒன்றாக இருந்தது அது மார்ச் மாதம் நண்பர்களுடன் வாய்ப்பு ஏற்பட்டது தொடரும்/.... வடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் கவிதைகளும் ----2----சுப்ரபாரதிமணியன் வடகிழக்கு மாநில மக்களின் குரல்களை வெளிப்படுத்தும் இந்தக்கவிதைகளை நான் பத்து ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்த்தேன் .இன்றையச் சூழலில் இன்னும் அவை பொறுத்தமான அரசியல் குரல்களாகவே விலங்குகின்றன. அரசியல்வாதியும் புறாவும் ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும் அன்பாகவும் இருந்தனர் அடிக்கடி சண்டையிட்டும் கொண்டிருந்தனர் வானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது. அரசியல்வாதி சொன்னார்: “ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ அது என் அரசியல்” “ புறா மீண்டும் சொன்னது: “நான் என் இறக்கைகளை அடித்தபடி வானில் பறப்பேன்”” அரசியல்வாதி ஒரு துப்பாக்கியைக் காட்டினான். புறா பறக்க இயலாமல் மெளனமானது. இப்போது வெள்ளைப்புறா அரசியல்வாதியின் சட்டைப் பாக்கெட்டில் இருக்கிறது. - ரகு லைசாங்கதம் (மணிப்பூரி) * காந்தியும், ரோபோவும் நீண்ட காலத்திற்கு முன் நேருஜி ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு ரோபோவை வைத்திருந்தார் அதன் வாய் ஒரே நிமிடத்தில் ஆயிரம் முறை “ஹரே ராமா””வை உச்சரிக்கும் பிர்லாவிடமிருந்து கடன் பெற்ற காந்தியை வைத்திருந்தார் பத்து கண்டு நூலை ஒரு மணிநேரத்தில் நூற்கும் விக்ரம் சாராபாய் குடியரசு தினத்தில் அறிவித்தார்: ட்ராம் பேயில் விஞ்ஞானத்திற்காக புது புனித ஸ்தலத்தை சிருஷ்டிப்பேன் தில்லி செங்கோட்டையில் வெறும் வயிற்றோடும் வறண்ட தொண்டையோடும் கழுதைகள் கத்துகின்றன. வண்ணார்கள் “ ஹரிஜன”” தினசரியின் பழைய பிரதிகளை துண்டுதுண்டாக்கி தின்னக் கொடுக்கிறார்கள். இன்று சாதுக்கள் அறிவிக்கிறார்கள்: பொக்கரனில் கோவில் ஒன்றைக் கட்டுவோம், புது புத்தரை வைக்க. மகிழ்ச்சியுடன் கத்தினேன்: “வாழ்க பாரதம், வாழ்க”” - -தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி) இந்தியாவில் இயற்கை வளம் மிக்க மாநிலங்களில் குறிப்பிடத்தக்கவை வடகிழக்கு மாநிலங்கள். இந்த மாநிலங்களின் கலாச்சாரம் சமூக பொருளாதார அரசியல் குறித்த பல்வேறு அம்சங்களை நான் முன்பு மொழிபெயர்ப்பு ” பூமியின் பாடல்கள் “ என்ற நூலில் . கண்டேன் அந்த நூல் வெளிவந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை இந்திய சுற்றுப்பயணம் முடித்து திரும்புகிற போது அந்த கதைகளை நான் மீண்டும் படித்தேன .இப்போது அந்த கதைகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது சுலபமாக இருந்தது.அங்கு இருக்கிற சாதாரண மக்கள் அவர்கள் மத்தியில் திடமான நம்பிக்கைகள், மதம் சார்ந்த உணர்வுகள், தொன்மங்கள் சார்ந்த நம்பிக்கைகள், வறுமை சூழல் போன்றவை அந்த கதைகளில் முக்கிய அம்சங்களாக இருந்தன. இயற்கை வளமும் அழகும் கொண்ட இந்த பகுதி இன்றளவும் இந்தியாவின் பின்தங்கிய பகுதியாகவும் இருக்கிறது அங்க இருக்கிற தோட்டத்தொழிலாளர் பிரச்சனைகளில் பல கோணங்கள் இருந்தன.எளிதில் அணுக முடியாத மலைப்பகுதிகளில் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய நிர்வாகம் செய்து வருவதை கண்டு கொள்ள முடிந்தது காசி போன்ற பகுதிகளில் தாய்வழிச் சமூகத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும் தாய்வழிச் சமூகத்தின் கூறுகளை அவர்கள் பின்பற்றுவதும் தெரிந்தது அங்கு வங்க தேச மக்களின் குடியேற்றம் பல சமயங்களில் நிகழ்ந்தது. கிறிஸ்தவர்கள் பழங்குடிகள் மத்தியில் கல்வி போதித்தனர் மத மாற்றங்களும ஏற்பட்டன விடுதலைக்குப் பின்னர் இந்த போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய படி வெடித்தன இன்று வரை இது நீடிக்கும் சூழல்கள் இன மோதல்கள் அதனோடு தொடர்புடைய ஆயுதப் போராட்டங்கள், புதிதாக ஒப்பந்தமாகும் சில விஷயங்கள் வழிவிட்டுக் கொண்டே இருக்கின்றன மற்றும் குடியேறிகளுக்கும் மரபான ,புராதான மக்களுக்கும் இடையில் கூடிய மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இந்த அம்சங்களை நான் அங்கிருக்கும் மக்களுடன் பேசுகிறபோது அறிந்துகொண்டேன் இந்த “ பூமியின் பாடல்கள் “ நூலின் கூட அந்த அம்சங்கள் இருப்பதை நான் மறுவாசிப்பு செய்கிறபோது அறிந்துகண்டேன் பிரம்மபுத்திரா நதியின் விகாச்த் தன்மையும் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோரங்களில் வெள்ளப் பெருக்கெடுத்து அந்த பகுதியில் நாசமாவதையும் கூட அறிந்து கொள்ள முடிந்தது எல்லை பிரச்சனை என்பது காலப்போக்கில் எல்லை நிர்ணயம் என்பது கொண்டிருக்கிறது தனி மாநிலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தின் விளைவு இந்திய அரசு அசாம் மாநில அரசு மத்தியில் பதட்டமான நிலையே பல ஆண்டுகள் கொண்டிருந்தது. அவ்வப்போது பக்கத்திலிருந்து குடியேறும் மக்களுடைய பிரச்சனைகளும் கிழக்குப் பாகிஸ்தான் கலவரங்களால் வங்காளிகள் அகதிகளாக குடியேறி வரும் சார்ந்த பல்வேறு அம்சங்களை அதனுடைய கதைகள் சொல்லியிருக்கின்றன. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் வெறும் மலைக் குன்றுகளையும் நிகழ்ச்சிகளையும் குகைகளையும் இயற்கை சார்ந்த பல்வேறு அம்சங்களையும் இந்த வடகிழக்கு இந்தியாவின் பயணத்தில் நான் அறிந்துகொள்ள முடிந்தது . இயற்கை பிரம்மாண்டமானது அது அதனோடு மனிதன் இணைந்து வாழ்வது தான் மனிதனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.அப்படி இல்லாதபோது துயரங்கள் தான் அதிகமாகின்றன. இயற்கையை வெற்றி கொள்ள மனிதன் முடியாது என்பதை இந்த பயணத்தில் நான் தெரிந்து கொண்டேன். வளைந்து வளைந்து செல்லும் சாலைகளில், ஒரு மலையில் ஏறி இறங்கி அடுத்த மலைக்கு வரவேண்டியது ஒரு அருவியை பார்க்க வேண்டுமெனறால் தூரம் இருந்துதான் ரசிக்க வேண்டும்,கனகத்துள்தான் அவை அடங்கிப்போயிருக்கும் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள்,ஒரு மலையில் ஏறி அடுத்த மலையில் இறங்கவேண்டும் சாலை போடுவது பராமரிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருப்பதால் பயணங்கள் மிகுந்த தாமதமாகத்தான் ஆகின்றன .ஆனால் அந்த இயற்கையின் பேரழகை ரசிப்பதற்கு எதுவுமே தடை இல்லை என்பதை இந்த வடகிழக்கு இந்திய பயணம் உணர்த்தியது. அசாமில் சில நாட்களும் சில்லாங்கில் சில நாட்களும் சிரபுஞ்சியில் சில நாட்களுமாக வடகிழக்கு இந்திய பயணம் அமைந்திருந்தது .இன்னும் மணிப்பூர் நாகாலாந்து உட்பட சில மாநிலங்களில் பயணப்பட வேண்டி இருக்கிறது அடுத்த பயணம் அதற்கான ஆயத்தங்களையும் வழிமுறைகளையும் சொல்லும் என்று நினைக்கிறேன் நான் மொழிபெயர்த்த இரண்டு மணிபூரி கவிதைகளை உங்கள் பார்வைக்கு மேலேத் தந்திருக்கிறேன் ( தொகுப்பு : அரசியல்வாதியும் புறாவும் மொழிபெயர்ப்புக்கவிதைகள்/ சுப்ரபாரதிமணியன் வெளியீடு : கனவு பதிப்பகம், திருப்பூர்) இந்த அரசியல் குரல்களின் யதார்த்த நிலையை பின்னால அலசிக்கொள்ளலாம் Contd..