சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 7 பிப்ரவரி, 2022

தனிமனிதன் : சிந்து சீனு கதைகள் இது சிந்து சீனுவின் ஐந்தாம் சிறுகதைத் தொகுப்பு. குறுகிய காலத்தில் ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், இரண்டு கவிதைத்தொகுப்புகள் என வெளியிட்டிருக்கிற வேகத்திற்கும் படைப்பு மன நிலைக்கும் வாழ்த்துக்கள் சிந்து சீனுவின் கதைகள் வெகு எளிமையான வார்த்தைகளில், வெகு எளிமையான மனிதர்களின் வாழ்க்கையைப்பற்றிச் சொல்பவை . இந்த எளிமை பல சமயங்களில் ஏமாற்றக்கூடியது. உதாரணமாய் அசோகமித்திரனின் கதைகள் வெகு எளிமையாக இருந்தாலும் சுலபமாகக் கடந்து போய் விடமுடியாதவை எளிமையான மனிதர்களைப்பற்றியச் சித்திரங்கள் என்பது நவீன கதைகளில் புறம் தள்ளும் விசயமாக பல சமயங்களில் நின்று விடுகிறது. எழுத்து வசீகரம், மொழி லாவகம், அறிவு ஜீவித்தனம் என்ற வகையில் கட்டமைக்கப்படும் சித்திரங்கள் பல சமயங்களில் சீட்டுக்கட்டுகோபுரம் போல் நொறுங்கிவிடக்கூடியவை. சிந்து சீனு எளிய வார்த்தைகளில் கட்டமைக்கும் மனித வாழ்வியல் சார்ந்த எண்ணங்கள் பெரும்பாலும் அறம் சார்ந்து கேள்வி கேட்பவை. நியாயம் கோருபவை. துப்புரவு தொழிலாளிகளின் துயர வாழ்க்கையைச் சொல்லும் போது அவர்களின் மரபு தொடர்கிற அவலம் ஒரு பெண் வாயிலாகச் செல்கிறது. சமையல் சிலிண்டர் சுமக்கும் தொழிலாளிகளைப்பற்றிச் சொல்லும் போது முதலாளித்துவ உலகில் வேலை பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பில்லாமல் தலைகளை வெட்டக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருதலைமுறையையேக் காண்கிறோம். வீட்டு விலங்குகள் மீது மனிதர்கள் கொண்டிருக்கும் பாசமும் பிணைப்பும் வெள்ளையன் போன்ற கதைகளில் வெளிப்படுகிறது . வெற்று மூட நம்பிக்கையும் சடங்குகளும் இவரின் பார்வையில்விமர்சனத்திற்குரியவை என்பதை பல கதைகளில் தொடர்ந்து காட்டுகிறார். பரிகாரம் கதையில் அன்ன தானம் செய்பவனின் நேர்மையற்றத்தனம் காட்டப்படுகிறது .. தாதாவாக மிரட்டிக்கொண்டிருப்பவர்களுக்கான பதிலடி பிரியாணி கதையில் கிரிக்கெட் தளத்துடன் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. மூடர் நம்பிக்கை கதையில் அப்பா தரும் நம்பிக்கையும் சுதந்திரமும் ஒரு பெண்ணிற்கு பெரும் பேறாகிறது . புதிய தலைமுறையின் நம்பிக்கைக்கீற்றாக இளைஞர்களும் பெண்களும் பல கதைகளில் வருகிறார்கள். இந்த நம்பிக்கையை சிந்து சீனுவின் படைப்புலகமும் அவரின் அறிவியல் இயக்க செயல்பாடுகளும் மனிதர்களுடனான நேசமும் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது -சுப்ரபாரதிமணியன் (ரூ110 , லாவண்யா பதிப்பகம், வேலூர் / 6380154198 )