சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 7 பிப்ரவரி, 2022
இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் பட்டறை .... கவிதைப்பட்டறை
கவிதைப்பட்டறை 2022
13/2/2022 ஞாயிறு அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் ( காலை 10 மணி முதல் )நடக்கவிருக்கும் கவிதைப்பட்டறையில் பங்கு பெற விரும்புகிறவர்களை வரவேற்கிறோம் . தமிழ்க்கவிதை வரலாறு, வகைகள், கவிதை எழுதும் அடிப்படைகள் உட்பட பலதலைப்புகளில் உரைகளும் கவிதை எழுதப் பயிற்சியும் இடம்பெறும். கட்டணம் எதுவுமில்லை
பயிற்சியாளர்கள்:
சுப்ரபாரதிமணியன், து சோ பிரபாகர், அழகுபாண்டி அரசப்பன்
கவிதைப்பட்டறை 2022 நடக்குமிடம் :
திருப்பூர் மக்கள் மாமன்றம், மங்கலம்சாலை, டைமண்ட் திரையரங்கு முன்புறம் .திருப்பூர் 641 604
தொடர்புக்கும் முன்பதிவுக்கும் :
சி. சுப்ரமணியம் 93457 20140
))
கவிதை2022/ ஏதாவது பொதுத்தலைப்பிலும்
கவிதை2022 தொகுப்புக்கு கவிதைகள் வரவேற்கப்படுகிறது
வணக்கம் . வருகிற சித்திரை முதல்நாள் (14-4-2022) திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழன்னைக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும். அவ்வமயம் ஒரு தமிழ்க் கவிதை நூல் கவிதை2022
வெளியிடப்படுகிறது.
தலைப்பு: "தமிழே! அமுதே! செம்மொழியே!" அல்லது ஏதாவது பொதுத்தலைப்பிலும் 24 வரிகள் , 2 நகல், ஒரு புகைப்படம், பங்குத் தொகை உரூபாய் 200/. பணமாக,காசோலை, அல்லது MO மூலம். கடைசிநாள் 3-3-2-22.படைப்பாளர்களுக்கு ஒரு புத்தகம் வழங்கப்படும். அரசியல் சாதி மதம் இனம் மொழி வேற்றுமை இல்லாத படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும். சிறந்த படைப்பாளர்கள் பாராட்டப்படுவார்கள்மற்ற விபரங்களுக்கு 9345720140 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருப்பூர் மக்கள் மாமன்றம்.
: முகவரி: திருப்பூர் மக்கள் மாமன்றம், டைமண்ட் (திரையரங்கம் அருகில்) மங்கலம் சாலை, திருப்பூர் 641604.
ReplyForward