சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

Subrabharathi Manian Notes on Tiruppur Book fair சீக்கிரம் பணக்காரராவது எப்படி..என்ற புத்தகம் 1 சீக்கிரம் பணக்காரராவது எப்படி..என்ற புத்தகம் புத்தகக்கண்காட்சியில் இருக்குமா என்று உள்ளூர் எழுத்தாளர் ஒருவர் கேட்டார். இலக்கிய நூல்கள் என்றால் கொஞ்சம் தெரியும். மற்ற நூல்கள் பற்றித் தெரியாது புத்தகக்கண்காட்சியில் வந்து தேடுங்கள் என்றேன். வந்தவர் பதட்டத்துடன் இருந்தார். புத்தகம் தேடவில்லை.மெல்ல பேசினார் “ ஒரு கோடி பணம் வரப்போகிறது. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சமூகக் காரியங்களுக்காக தருகிறது . ஆனால் இடையில் உள்ள புரோக்கர் 40 சதம் அதில் எடுத்துக் கொள்வாராம். இலக்கிய அமைப்பு பேரில் தான் தருவார்களாம்.பதட்டமாக உள்ளது “ என்றார் என் பதில் : ஒரு கோடி ரூபாய் பெரிய தொகை உங்கள் வங்கிக்கணக்கில் திடீரென வந்தவுடன் காவல்துறைக்கு தகவல் வங்கியிலிருந்து போய் விடும் . அது மதமாற்றத்திற்கு பயன்படப் போகிறாதா. கலவரம் செய்ய உபயோகப்படுத்தப் போகிறார்களா. எந்த மதத்துக்காரன் அதைத் தருகிறான். புரோக்கர் எந்த மதத்துக்காரர் என்பதை உடனே காவல்துறை உங்களைப்பிடித்து தெரிந்து கொள்வார்கள் “ என்றேன் பத்து நாட்களாகி விட்டது . பணம் வந்து காவல்துறைக்கண்காணிப்பில் அவர் இருக்கிறாரா . தெரியவில்லை. கவிஞர் கனவு என்னானது தெரியவில்லை. * சீக்கிரம் பணக்காரராவது எப்படி..என்ற புத்தகம் 2 கொஞ்சம் புரட்ட , வாசிக்க சில புதிய நூல்கள் கிடைப்பதால் நேரம் கிடைக்கும்போது 7 கி மீ தள்ளியிருக்கும் புத்தகக் கண்காட்சிக்குப் போகிறேன். உயர்நிலைப்பள்ளியில் ஆன்லைன் வகுப்பால் பாதி சம்பளமே கிட்டும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் ஓரிரு நாட்கள் வந்து வேடிக்கை பார்த்தார். சீக்கிரம் பணக்காரராவது எப்படி..என்ற புத்தகம் அவரும் கேட்டார். எதுவும் படிக்க பொறுமை இல்லை என்று பரபரப்பாகவே இருந்தார். தியானம் செய்யுங்கள் .அல்லது மன நல ஆலோசகரைப் பாருங்கள் என்றேன் . இங்கும் அது சம்பந்தமாக சில நூல்கள் உள்ளன என்றேன். காசு கொடுத்து வாங்கணுமே என்றார். பிறகு காணவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் ஆரம்பித்ததில் வேதனை அவருக்கு தினம் ஒரு புத்தகம் பள்ளி மறுதிறப்பு சுப்ரபாரதிமணியன் செங்கை புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகம். யுரேகா வெளியீடு. நூலாசிரியர் சுப்ரபாரதிமணியன் தொலைபேசித் துறையில் பணிபுரியும் திருப்பூர் வாசி. அந்நகரின் பிரச்சனைகளை தன் படைப்புகளின் வழியாக பதிவு செய்து வருபவர். இவருடைய நாவல் சாயத்திரை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பள்ளி மறு திறப்பு, பிறந்த தினம் ஆகிய இரண்டு கதைகளிலும் குழந்தைகளின் மன உலகை சிறப்பாக சொல்லியிருக்கிறார். கல்வி, அன்பு, கருணை இம்மூன்றும் குழந்தைப் பிராயத்தில் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நற்பேறுகள். அவற்றை இந்த இரு கதைகளும் எளிய நடையில் பேசுகின்றன . விடுமுறை நாளில் வேலைக்குச் செல்லும் குழந்தை தொழிலாளியின் மன உணர்வை பிரதிபலிக்கும் கதை பள்ளி மறு திறப்பு. குழந்தைகள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளின் மன உணர்வை பிரதிபலிப்பது பிறந்தநாள் கதை. இத்தொகுப்பில் உள்ள இந்த இரண்டு கதைகளிலும் குழந்தைகளின் மன உலகில் ஆசிரியர் ஆழ்ந்து சஞ்சரித்து இருப்பதை கண்டு கொள்ள முடிகிறது. தோழமையுடன் சீனி.சந்திரசேகரன் ReplyForward இனிய நந்தவனம் இதழ் 25ம் ஆண்டு மலர் வெளியீடும் அறிமுகமும் 26/1/22 :மக்கள் மாமன்ற குடியரசு தின நிகழ்வில்.. - அறிமுகம் * ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சுப்ரபாரதிமணியனின் அந்நியர்கள் நாவல் அறிமுகம் - பாராட்டு * சார்ஜா புத்தகக் கண்காட்சியில் புக்கிஷ் விருது பெற்ற சுப்ரபாரதிமணியனுக்குப் பாராட்டுரை... பொன் சண்முக சுந்தரம் தலைமை. சி. சுப்ரமணியம் மற்றும் மாமன்ற மாத இதழ் வெளியீடு.. கவிதை கள்.. வாசிப்பு.. * இனிய நந்தவன்ம் இதழ் 25ம் ஆண்டு மலர் வெளியீடும் அறிமுகமும் வருக. மதியம் 3_6 மணி. மக்கள் மாமன்ற நூலகம்.. திருப்பூர் நலமா. நாய்களைப்பற்றி எழுத்தாத எழுத்தாளர் இல்லை. உங்கள் கதை சுவாரஸ்யம் கனவு இப்போதுதான் அச்சுக்கு போயுள்ளது அடுத்த இதழ் வர 3/4 மாதங்களாகும் அந்த சமய்த்தில் இதைப்பயன்படுத்தலாமா. அல்லது 3 மாதங்கள் கழித்து வாங்கிக்கொள்ளட்டுமா புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் : கணவன்களுடன் வரும் பெண்மணிகள் தரும் ”அலப்பறை” தாங்க முடியாது. வீட்லதா குப்பையாக் கெடக்குதே. மறுபடியும் குப்பை சேக்கணுமா. போலாம் என்று நச்சரிப்பார்கள். ஜவுளிக்கடைகளில் கணவன்மார்கள் காட்டும் பொறுமையையும் நிதானத்தையும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதேயில்லை புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் : குழந்தைகளுடன் வரும் பெண்மணிகள் பொறுப்பானவர்கள். குழந்தைகளின் சிபாரிசை சரியாக கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். நிதானமாய் எது வேண்டும் என்று கேட்டு வாங்கித்தருவார்கள். தாங்களும் ஏதாவது வாங்கி குழந்தைகளிடம் காட்டி பெருமைப் படுவார்கள். ( அவர்கள் வாங்குவது சமையல் குறிப்புகள், கோலப்புத்தகங்கள் என்றாலும் ) புத்தகக் கண்காட்சியில் வசதியானவர்.. கேளிக்கை பொருட்டு நிறைய செலவு செய்வார். இவரின் இலக்கிய ஆர்வம் அறிந்த சிறுபத்திரிக்கையாளர் ஒருவர் தன் இலக்கிய இதழுக்கு திருப்பூரில் களம் அமைத்துக் கொடுப்பார் என்று மாதம் 10 பிரதிகளை 3 ஆண்டுகள் தொடர்ந்து அனுப்பினார். வசதியானவர் இலவசப்பிரதிகளாகத் தந்தார். நான் கேட்டபோது கூட காலணா இதுவரை அப்பத்திரிக்கைக் தரவில்லை என்றார். புத்தகக் கண்காட்சியில் ஒரு ரவுண்ட் பார்த்து விட்டு வந்தவர் வெளிநாட்டு நூலகங்களில், புத்தகக்கண்காட்சிகளில் இலவசப்புத்தகங்கள் என்று ஒரு ரேக் இருக்கும், அதெல்லாம் இங்கில்லையா என்றார். அடுத்த ரவுண்ட் அடிக்க நேரமில்லை அவருக்கு.ஏனெனில் அடுத்த ரவுண்ட் மது பானத்திற்கானது. அதற்கு நேரமாகி விட்டது அவருக்கு புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் :2 முஸ்லீம் பெண் ஒருவர் இலக்கியம், பொது நூல்கள் என்று 3000 ரூபாய்க்கு புத்தகம் எடுத்தார்.பைப்பையிலிருந்து பணம் தேடி எடுத்தார். பக்கமிருந்த 15 வயது மகனிடம் மேல் பாக்கெட்டிலிருந்து இருக்கும்பணத்தைத் தேடி எடுத்து 50 ரூபாயை பாக்கெட்டில் வைத்து விட்டு 3000 ரூ சேகரித்துச் செலுத்தினார் . என் நைரா நாவல் உடப்ட என் சிலபுத்தகங்களும் வாங்கினார். நைரா முஸ்லீம் பெயரல்ல. நைஜீரியன் கரன்சி என்றேன்.சிரித்தார் பக்கமிருந்த நண்பர் முஸ்லீம்கள் படிக்கமாட்டார்கள் என்று பொதுப்புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது என்றார். நான் சமீபத்தில் சார்ஜா புத்தகக் கண்காட்சியில் கண்ட முஸ்லீம்சமூக மக்கள் புத்தகங்களை அள்ளிக்கொண்டு போனதைச் சொன்னேன் புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் :3 மத்திய வயதுப்பெண் மலர்வைத்யம், சமையல் குறிப்புகள் என்று இரு நூல்கள் வாங்கினார். இதிலே இருக்கற மலர்களெ தேடிப்புடிபீங்களா அதெல்லாம் இல்லெ. படிச்சுப்பாக்க சமையல் குறிப்பு புத்தகம் பயன்படும். வீட்லே எல்லா சமையல் பொருட்களும் இருக்கும். இருக்கும். பனியன் கம்பனி வேலை. சமைக்கக் கூட நேரமில்லெ. இதுவும் படிச்சுப்பாக்கத்தான் புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் :6 மகிழ்வுந்து.. . நாயை உள்ளேயே விட்டு பூட்டி விட்டு வந்த குட்டைப்பாவாடை இளம்பெண்மணி ” ஏன் இந்த ஓர வஞ்சனை. தமிழுக்கு இவ்வளவு பெரிய இடம். ஆங்கிலநூல்களுக்கு சிறு பகுதியா” என்றார். நாயுடன் கூடிய மங்கை அல்லது மங்கையுடன் கூடிய நாய் என்றமொழிபெயர்ப்பு ஞாபகம் வருதா என்றார் நண்பர் . அதுதான் A lady witha a dog புத்தகக் கண்காட்சியில் பெண்மணிகள் :5 என் சுற்றுச்சூழல் படைப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்யும் பெண்மணி 3 ஆண்டுகளைக்கடந்தும் இன்னும் ஆய்வை நிறைவு செய்யவில்லை. என் சுற்றுச்சூழல் நாவல்கள் ஒவ்வொன்றின் கதை சுருக்கம் தனித்தனியாகத் தேவை . எழுதித்தாருங்கள் என்றார். ஓடி வந்து விட்டேன் புத்தகக் கண்காட்சியில் சுவருக்குள் சித்திரங்கள், சுவரில்லா சித்திரங்கள் ..தியாகு எழுதின இதெல்லாம் இருக்கா. அவர் எழுத்து உங்களுக்கு எப்பிடிப் பிடிக்கும் அவரும் என்னை மாதிரிதா அரசியலா. தமிழ் தேச அரசியலா இல்லெ.. முன்னாள் கைதி.. மக்கள் மாமன்ற இதழுக்கு .. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு.... . சென்னையில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு இந்தப்பரிசு அளிக்கப்பட்டது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் . . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார். ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது