சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 7 பிப்ரவரி, 2022
மலர்க ஹைக்கூ ... மு முருகேஷின் ஹைக்கூ கவிதைகள்
படைப்பாளிக்கு பிற மொழிகளில் தன் படைப்பு வெளிவருவது மகிழ்ச்சி தரக்கூடியதே.
ஹைக்கூ போன்ற எளிமையான படைப்புகள் ( அளவில் சிறியவை என்பதாலும் ) எளிதில் வேற்று மொழிகளுக்குச் சென்று வாசகர்களைச் சென்றடையும். அவற்றுக்கான வாசிப்பாளர்கள் எல்லா மொழிகளிலும் உள்ளார்கள்.
மு முருகேஷின் ஹைக்கூ கவிதைகள் மூன்று மொழிகளில் இவ்வடிவம் பெற்றுள்ளன. இது வித்யாசமான முயற்சி .தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைக்கூ கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இந்த மூன்று மொழிகளிலும் மூவர் இக்கவிதைகள் பற்றி எழுதியிருப்பது சிறப்பு. திருவாளர்கள் ஈரோடு தமிழன்பன், அமரன், நாணற்காடன் என அவர்களின் கட்டுரைகள் மூன்று மொழிகளிலும் வெளியாகியுள்ளன. இதில் இடம் பெற்றிருக்கும் ஓவியங்கள் பெரிய பலம்.. கவிதைச்சூழலைச் சரியாகக் கொண்டு வந்துள்ளன
இத்தொகுப்பின் பல கவிதைகள் இய்றகையோடிணைந்த வாழ்க்கையைச் சொல்லுபவை.எல்லோருக்குமியற்கை பொருத்தமிக்கதாகவே விளங்கிகுறது.
“இயற்கையோடு சேர்ந்து வாழப் பழகிவிட்டால் சுற்றுச்சூழல் ஆரோக்யமானதாகவே இருக்கும். இயற்கையின் ஆரோக்யமான வெளிப்பாடே நம் சுற்றுச்சூழல். அது உயிருள்ளதும், உயிரற்றதுமான எல்லாவற்றின் தொகுப்புமாக இருக்கிறது. மகிழ்ச்சிகரமான ஆரோக்யமான வாழ்விற்கு இந்தப் பாதுகாப்பான சுற்றுச்சூழல் தேவையாக உள்ளது. அதில் கலாச்சாரம், கலை இவற்றின் பங்கும் உள்ளது” என்பதை முருகேஷ் அவர்களும் தன் படைப்புகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அதை இதில் உள்ள பல கவிதைகள் வலியுறுத்துகின்றன.அதில் இரண்டு உதாரணத்திற்கு..
மழை எச்சரிக்கை
எப்படியாவது சொல்ல வருவான்
என் தும்பி நண்பன்
*
மழையில் தலை சாயந்த பயிர்கள்
தோள் தொட்டு எழுப்பும்
சூரியக்கதிர்கள்
*
குழந்தைகளோடு எப்போதும் இயைந்து வாழ்ந்து வருபவர் .அவரின் எல்லா வகைப்படைப்புகளிலும் குழந்தைகளின் உலகமும் கல்வி சார்ந்த சிந்தனைகளும் இடம்பெற்றிருக்கும். அபூர்வமாகவே சிறுகதைகள் எழுதினாலும் அவற்றிலும் இந்த அக்கறை இருக்கும் . வெகுளியான குழந்தைகளின் உலகம் ஒருபுறம், கல்வி எனு வன்முறைத் தரும் சீண்டல்கள் என்று மறுபுறத்தையும் காட்டுபவர்.
தூங்கும் குழந்தை
அனிச்சையாய் அசையும் விரல்கள்
எழுதாத வீட்டுப் பாடம்
*
எல்லாமிருந்த வீட்டில்
எதுவுமேயில்லை இப்போது
ஊருக்குப் போய் விட்ட குழந்தைகள்
*
மேலே கண்ட்து போல் குழந்தைகளின் உலகத்தை காட்டும் பல கவிதைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன
சமூக உறவுகளின் பல்வேறு பரிமாணங்களையும் அவை சுட்டிக்காட்டி தனித்துவமாய் நிற்கின்றன
மு முருகேஷின் புதிய முயற்சி. பல மொழிகளில் ஒரே புத்தகத்தில் சில படைப்புகள் ...இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. அவருக்கு வாழ்த்துக்கள்
ரூ80 , அகநி வெளியீடு வந்தவாசி..
= சுப்ரபாரதிமணியன்