சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 7 பிப்ரவரி, 2022

தேவானை நாவல் ; ஜவாஹர் பிரேமலதா சுப்ரபாரதிமணியன் 9486101003 நெசவாளர் சமூகம் பற்றிய நாவல்கள் தமிழில் தொ மு சி ரகுநாதன் அவர்களின் பஞ்சும் பசியும் முதற்கொண்டு என்னுடைய சப்பரம், தறிநாடா போன்ற நாவல்கள் வரை பல படைப்புகள் வந்திருக்கின்றன.. இவற்றில் பெரும்பான்மையானவை மூன்றாவது நபரின் அனுபவமாக எழுதப்பட்டவை.. அதுவும் பெண்களின் அனுபவம் சார்ந்தும், பெண்களை மையப்படுத்தியதாக இந்நாவல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நெசவாளர்கள் சம்பந்தமான முழுமையானஒரு நாவல் தேவானை வெளிவந்திருப்பது தமிழ்ச்சூழலில் கவனிக்கப்படவேண்டிய ஆகும் , இந்த நாவல் 1950 லிருந்து 75 வரைக்கும் சுமார் 25 ஆண்டுகளுகளுக்கான காலத்தை களனாகக் கொண்டிருக்கிறது. சேலம் பகுதிவாழ் நெசவாளர்கள் இந்த கதாபாத்திரஙகளாக இருக்கிறார்கள். .நெசவு தொழில் பெருமையும் பாரம்பரியமும் கொண்டது . அந்த தொழில் மெல்ல தன் சிறப்பை இழந்து நசிந்து போவதையும் விசைத்தறி வருகையும் அதன் பின்னான எதிர்வினைகளுமாக வெளிவந்திருக்கிறது ஒரு முக்கியமான காலகட்டத்தை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது .நெசவு நலிவடைகிற போது நெசவாளிகளில் சிலர் நாடக ஆர்வத்தினால் நாடகத் துறைக்கு செல்கிறார்கள். அங்கும் கஷ்டப்படுகிறார்கள் .சிலர் அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்கிறார்கள் .வேறு வேலைக்குப் போகிறவர்களும் இருக்கிறார்கள் .கொஞ்சம் படித்து வேலைக்காக முயற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து பெண்கள் அந்தத் தொழிலுக்கு உதவுகிறார்கள் ..ஆண்களின் சிரமங்களில் பங்கேற்கிறார்கள் .பெண்கள் வயதுக்கு வந்துவிட்டாலே அவர்களை வெளியே அனுப்புகிற பழக்கம் இல்லாமல் அவர்களை தறி குழிக்குள் போட்டு நெசவாளிகள் என ஆக்குகின்ற கட்டாய சூழல் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது . அப்போது ஆண்களும் பெண்களும் சமையல் வேலைக்கும் போகிறார்கள். நெசவு வேலையில் முக்கியமானது புட்டா போடுகிற, ,படம் போடுகிற வேலை. கலை நுணுக்கங்கள் கொண்டது . ஆனால் அந்த படம் போடும் வேலையில் அதிக நேரத்தையும் காலத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கும் போது கூட போதுமான அளவு கூலி தருவதில்லை என்பது ஒருவகை சுரண்டல் நெசவாளர்களை கூலியைக் குறைத்துக் கொடுப்பதும் பாவு தராமல் பல நாட்கள் இழுத்து அடிப்பதும் வேறு வகையான சுரண்டல். .குடும்பமே நெசவுத் தொழிலில் ஈடுபட வேண்டியிருக்கும். குடும்பமே பாவு போடுவதிலிருந்து புட்டா போடும் வேலை வரைக்கும் செய்ய வேண்டியிருக்கிறது .அதை முதலாளிகளின் இடத்தில் கொண்டு போய்சேர்க்கிற வரைக்கும் பலரும் உழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு குடும்பம் உழைத்து ஒரு வேட்டியும் சேலையும் நெய்யப்படுகிறது .ஆனால் அதைத் தாண்டி பருத்தியிலிருந்து ஒரு சேலை நெய்ய பட 1350 பேர் உழைப்பு தேவையாக இருக்கிறது என்ற விவரம் பலருக்கு அதிசயமாக படலாம் .ஆனால் அதுதான் உண்மை .சிறுமுகை காரப்பன் போன்றவர்கள் இது போன்ற விஷயங்களை பல கட்டுரைகள் மூலம் சொல்லி இருக்கிறார்கள் ஒரு சேலை நெய்ய இவ்வளவு பேரா என்ற ஆச்சர்யம் வரும். .அதான் உண்மை என்கிறார் வேலையில்லாமல் போகிற போதும் தறி அவர்களின் குலசாமி ஆக இருக்கிறது. எப்போதும் அது குல சாமிதான் .” உழுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளு ஊர்சுற்ற மாட்டுக்கும் ஒருபடி கொள்ளு “ என்ற ரீதியில்தான் நெசவாளர்களும் அதை சார்ந்த மற்றவருடைய வாழ்க்கையும் அமைந்து இருக்கிறது இதில் நிற்கதி ஆகிறவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்களை. காப்பாற்ற வேண்டியவர்கள் தெருவில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.. இந்த அவலம் இந்த நாவலில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது இந்த ஆசிரியர் நெசவுத் தொழிலோடு வெகுவாக சம்பந்தப்பட்டவர் என்பதால் நெசவுத் தொழில் குறித்த நுணுக்கமான விவரிப்புகள நாவல் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன தறி நெய்கிறவனுக்கு சரியாக தூங்கு இடம் என்று இல்லாமல் பல சமயங்களில் தறிக் குழி அல்லது தறிமேடு தான் படுக்கைகென ஆகிப் போகிறது தலைமுறை இடைவெளி என்பது இருந்து சிதைந்த போனபின் வருகிற விசைத்தறியில் கைத்தறி அழிகின்றது. அப்போது கைத்தறி நெசவாளர்கள் இன்னும் நிலை குலைந்து போகிறார்கள். .கைத்தறி மற்றும் விசைத்தறி ஓசை மாறுபாடாக இருக்கிறது விசைத்தறி ஓசை நாரசமாக இருக்கிறது பலருக்கு .நெசவு நசிந்து போகிற சூழலில் அரசாங்கம் ஏற்படுத்துகிற கூட்டுறவு சங்கங்கள் வருகின்றன ஆனாலும் அவற்றிலும் ஊழல்கள் இருக்கின்றன .தனியார் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்துகிற பாதிப்பு அந்த ஊழலை இன்னும் பெரிதாகிக் கொண்டே போகிறது விசைத்தறி வந்தபின் சாக்கடை ஓட்டமும் சாயநீரின் ஓட்டம் அதிகரித்து நீர்நிலைகள் எல்லாம் கெட்டு விடுகின்றன . எல்லா வகை ஜாதிகளும் செய்யக்கூடிய தொழில். அவர்கள் அப்படித்தான் பலரும் அந்த தொழிலில் இணைந்து வேலை செய்கிறார்கள் ஆனால் வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகிறபோது சிரமப்படுகிறார்கள் . வயதானவர்கள் மட்டும் நெசவு செய்கிறார் இளைய தலைமுறை அதை நிராகரித்து விடுகிறது விசைத்தறி சேலையை தொட்டுப் பார்க்கக் கூட விரும்பாத பழைய தலைமுறை தங்கள் வாழ்க்கை தொலைந்து போவதை எண்ணி பிறரை சபிக்கிறார்கள் கைத்தறி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப் படாமல் வறுமையும் அவர்களை வாட்டுகிறது. இதன் மத்தியில் சொந்தமாக தறி வைத்திராத கூலி நெசவாளர்களின் வாழ்க்கை சிரமமாக இருக்கிறது. சுய அடையாளம் இழந்து போகிறார்கள் இப்படி ஒரு பகுதி போகிறது. இன்னொரு பகுதி இயற்கை சார்ந்த விஷயங்கள் முக்கியமானவை.. இந்த மலைகளுக்கு செல்வது .,மலைக்குச் சென்று நீர் அருந்துவது மூலிகைகளைக் கொண்டு வருவது என்பதெல்லாம் கூட நெசவாளர்களின் பொழுதுபோக்காகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகவும் இருக்கிறது ஆனால் ஆங்கிலேயர்கள் வந்தபின்னர் ஏரிகள் தூர்ந்துபோய் பலரின் ஆக்கிரமிப்பில் அவை நீர்நிலைகள் என இல்லாமல் போகின்றன சாயப்பட்டறைகள் நீரை கெடுத்துவிடுகிறது. நீர் நிலைகளை காப்பது அந்த நீர் நிலைகளை உபயோகிக்கிற பொதுமக்களுடைய கடமையாக இருக்கிறது .அப்படித்தான் வண்ணார்கள் எனப்படும் மக்கள் எப்படி நீர் நிலைகளைக் காக்க கவனமாக இருக்கிறார்கள் என்பது பற்றிய குறிப்புகள் ஆச்சரியமாக இருக்கிறது .அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் நீர் நிலைகளை வணங்கியும் தொழுதும் பாதுகாக்கும் பொதுமக்கள் அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் ஆனால் காலப்போக்கில் இவை மறைந்து விடுவதும் சாயப்பட்டறைகள் வரும்போதும் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி விடுவதும் நீர் மாசுபாடு அடைவதும் சொல்லப்படுகிறது குமிழி போன்ற குளங்கள் மூடப்பட்டு விடுவதும் ஏரிகளின் வரலாறை ஞாபகத்தில் கொண்டு வருவதும் அவை காப்பாற்ற முடியாமல் போனதும் ஒரு முக்கிய செய்தியாக இடம் பெற்றிருக்கிறது .பஞ்சாங்கங்களில், காலண்டரில் இடம்பெறும் மழை என்பது வெறும் செய்தியாக பல சமயங்களில் நின்று விடுகிறது மணிமுத்தாறு நதியில் விளைவிக்கப்பட்ட முத்து கோட்டை மாரியம்மனின் அலங்காரத்தில் அவளின் மூக்கில் அணிகலனாய் பிரகாசித்த காலங்கள் உண்டு. ஆனால் அந்த மணிமுத்தாறு சாக்கடையாக, சாயக் கழிவுகள் ஓடக்கூடிய இடமாக மாறிவிடும் அவலத்தை இந்த நாவல் சொல்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்திற்கு வருவதும் வானொலி வந்து மக்களை கவரப்படுவதும் இந்த நாவலில் இன்னும் சில முக்கிய பகுதியானவையெனக் கொள்ளலாம் . நெசவின் நலிவு காரணமாக வேலையை இழந்த சிலர் நாடகத்திலிருந்து திரைப்படத்திற்குப் போகிறார்கள் நாடகத்தில் கோமாளி வேசம் போடும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என்கிறார்கள் ஆனால் அவர்களே திரைப்படங்களுக்கு போய் கொஞ்சம் காசு சம்பாதிக்கிற போது மரியாதை வேறு வகையில் கிடைக்கிறது .இந்த வகையில் எல்லா பாரங்களையும் பெண்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள் அப்படித்தான் இதில் வருகிற சாமிநாதன் என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் மனைவி தேவானைம் அமைந்து விடுகிறாள் .அவள் ஆரம்பத்தில் ஒரு குழந்தையை காப்பாற்றுகிற செயலின் மூலம் நாவலில்அறிமுகப்படுத்தப் படுகிறார் .ஆனால் தொடர்ந்து அவள் அந்த குடும்பத்தை காப்பாற்றுகிறார் .பெரிய பாரமும் அவளுக்குள் அமிழ்ந்து விடுகிறது இன்னொரு கதாபாத்திரமான பூபதி தறி நெசவு விஷயத்தில் திறமையானவன். நாடகங்களில் கோமாளி வேஷம் போட்டு வந்தான் .ஆனால் அவருடைய மனைவி அடைகிற கஷ்டங்கள் தொழில் சார்ந்த கஷ்டங்களாக ள் ஆகவே அமைந்துவிடுகின்றன புவனா என்ற கதாபாத்திரம் தற்கொலைக்கு முயன்றது. ஆனால் அதில் இருந்து மீண்டு படிக்கிறாள். ஆனால் அவர் தொடர்ந்து படிப்பதும் பெரிய அரசாங்க அதிகாரியாக வருவதும் அதன் மூலமாக நெசவாளர் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு வருவதுமக இந்த நாவல் முடிவடைகிறது மாடன் தியேட்டர்ஸ், சினிமா தொழில் சார்ந்த அறிமுகங்கள், திராவிட இயக்கங்களின் வளர்ச்சி அதிலும் குறிப்பாக திமுகழக சார்ந்த இயக்க வளர்ச்சி சேலம் இரும்பு தொழிற்சாலை சார்ந்த வாய்ப்புகள் என்று இந்த நாவல் பல்வேறு பரிமாணங்களை கொண்டு இருக்கிறது ,சிறுசிறு சங்குகள், சம்பிரதாய்ங்கள், குடுமப்க்காரியங்கள் என்று நுணுக்கமாக பலவை இடம் பெற்றுள்ளன. புவனா , தேவானை போன்ற கதாபாத்திரங்கள் மூலம் பெண்களுடைய வாழ்க்கை சித்தரிக்கப்பட்டு அவர்கள் நெசவாளர் சமூகத்தின் முக்கிய தூண்களாகவும் எப்படி மாறுகிறார்கள் என்பதை காட்டுவதன் மூலம் இந்த நாவல் பெண்மைய சிந்தனையின் முக்கிய கூறுகளை கொண்டு பெண்ணை சீரழிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நெசவாளர் சார்ந்த வாழ்க்கையோடே நீர்நிலைகள் சார்ந்தும் நீர்மேலாண்மை சார்ந்தும் பல விஷயங்கள் இந்த நாவலில் பேசப்படுகின்றன. ஏரிகளும் குளங்களும் சாதாரண பொதுமக்களின் உபயோகத்திற்கும் அவர்கள் பாதுகாத்து வளர்ப்பதற்கும் இருப்பதும் பின்னால் ஆக்கிரமிப்பும் சுற்றுச்சூழல் கேடும் அவற்றையெல்லாம் இல்லாமல் போகும் இயற்கைக்கு மாறாக நடக்கும் செயல்கள் எல்லாம் இன்றைக்கு கொரானா காலம் வரை விரோதமாக வநது முடிந்திருக்கிறது இந்த பெரும் தொற்று காலம் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை சொல்கிறது. இந்த நாவலில் வரும்மழை ஏற்றமும் மலை சார்ந்த சிறு தெய்வங்களின் வழிபாடும் நீர்நிலைகளை காக்க வேண்டிய அவசியமும் சொல்லப்படுகிற போது மனிதன் தொடர்ந்து இயற்கையைத்துன்புறுத்தி வருவதற்கு எதிராக ஒரு முக்கிய குரலாகும் இந்த நாவல் அமைந்திருக்கிறது ( பிரேமா புக்ஸ் , ரூ 400 சேலம் 94884 17411 )